உ.பி., மீரட் ராணுவ நல வாரியத்தில் காலியாக உள்ள 28 இடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் விவரம்:
1. Draftsman: 1 இடம் (பொது) வயது: 21 முதல் 30க்குள். சம்பளம்: ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400.
2. Tracer: 1 இடம் (பொது) வயது: 21 முதல் 30க்குள். சம்பளம்: ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1900.
3. Lighting Supervisor: 1 இடம் (பொது). வயது: 21 முதல் 30க்குள். சம்பளம்: ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1900.
4. Lady RMO: 1 இடம் (பொது). வயது: 23 முதல் 35க்குள். சம்பளம்: ரூ.15,600-47,100 மற்றும் தர ஊதியம் ரூ.5,400.
5. Mid-Wife: 1 இடம் (பொது). வயது: 21 முதல் 30க்குள். சம்பளம்: ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2000.
6. Junior Assistant: 6 இடங்கள் (பொது-3, ஒபிசி-2, எஸ்சி-1). வயது: பொதுப் பிரிவினருக்கு 21 முதல் 30க்குள். ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும். சம்பளம்: ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2000.
7. Carpenter: 1 இடம் (பொது). வயது: 21 முதல் 30க்குள். சம்பளம்: ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,900.
8. Lineman: 1 இடம் (பொது). வயது: 21 முதல் 30க்குள். சம்பளம்: ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,900.
9. Sanitary Inspector: 1 இடம் (பொது). வயது: 21 முதல் 30க்குள். சம்பளம்: ₹9,300-34,800 மற்றும் தர ஊதியம் ₹4,200.
10. Motor Pump Attendant: 3 இடங்கள் (பொது-2, ஒபிசி-1). வயது: 21 முதல் 30க்குள். ஒபிசியினருக்கு 3 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும். சம்பளம்: ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,900
11. Nurse: 1 இடம் (பொது). வயது: 21 முதல் 30க்குள். சம்பளம்: ரூ.9,300-34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.
12. Compounder: 1 இடம் (பொது). வயது: 21 முதல் 30க்குள். சம்பளம்: ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400.
13.Assistant Teacher: 6 இடங்கள் (பொது-3, எஸ்சி-1, ஒபிசி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). பாட வாரியாக இடங்கள்: இந்தி-1, ஆங்கிலம்-1, கணிதம்-1, அறிவியல்-1, சமூக அறிவியல்-1, வணிகவியல்-1. வயது: பொது மற்றும் பொருளாதார பிற்பட்டோருக்கு 21 முதல் 30க்குள். ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சியினருக்கு 5 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
14. Assistant Teacher (Primary): 3 இடங்கள் (பொது-2, ஒபிசி-1). வயது: 21 முதல் 30க்குள். ஒபிசியினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் 3 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும். சம்பளம்: ரூ.9,300-34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200. வயது வரம்பு 30.01.2023ன்படி கணக்கிடப்படும்.
கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.1000/- எஸ்சி/எஸ்டி/ பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.500/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். கல்வித்தகுதி, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு https://mcb.onlineregistrationforms.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.01.2023.