நெல்லை மாவட்டம், பணகுடி அருகே மகேந்திரகிரியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் கீழ் இயங்கும் திரவ உந்தும எரிசக்தி மையத்தில் காலியாக உள்ள 100 அப்ரன்டிஸ்கள் பணிக்கு பி.இ மற்றும் பிஏ., பிஎஸ்சி., பிகாம் படித்தவர்கள் வருகிற 11ம் தேதி நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுகின்றனர்.
அ. Graduate Apprentices: மொத்தம்- 41 இடங்கள். (மெக்கானிக்கல்- 10, எலக்ட்ரானிக்ஸ்-10, எலக்ட்ரிக்கல்-5, சிவில்-4, இன்ஸ்ட்ருமென்டேசன்-2, கெமிக்கல்-2, கம்ப்யூட்டர் சயின்ஸ்-5, நூலக அறிவியல்-3). தகுதி: 60% மதிப்பெண்களுடன் சம்பந்தப்பட்ட பொறியியல் பாடத்தில் பி.இ., தேர்ச்சி. நூலக அறிவியல் பாடத்திற்கு கலை/அறிவியல்/ வணிகவியல் பாடங்கள் ஏதேனும் ஒன்றில் 60% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு நூலக அறிவியல் அல்லது நூலகம் மற்றும் தகவல் அறிவியல் பாடத்தில் 60% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு தேர்ச்சி. பயிற்சி காலத்தில் மாத உதவித் தொகையாக ₹9 ஆயிரம் வழங்கப்படும்.
ஆ. Technician Apprentice: 44 இடங்கள். ( மெக்கானிக்கல்-15, எலக்ட்ரானிக்ஸ்- 10, எலக்ட்ரிக்கல்-10, சிவில்-5, கெமிக்கல்-4). தகுதி: சம்பந்தப்பட்ட பாடத்தில் 60% தேர்ச்சியுடன் இன்ஜினியரிங் டிப்ளமோ. பயிற்சி காலத்தில் மாத உதவித் தொகையாக ₹8,000 வழங்கப்படும்.
இ. Graduate Apprentices (Non- Engineering): 15 இடங்கள். தகுதி: கலை/அறிவியல்/வணிகவியல் பாடங்களில் 60% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு தேர்ச்சி.
பயிற்சியின் போது கல்வி உதவித் தொகையாக ₹9000 வழங்கப்படும்.
மேற்குறிப்பிட்ட கல்வித்தகுதியை 2020, 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் www.iprc.gov.in என்ற இணையதளத்தில் மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, விவரங்களை பூர்த்தி செய்து சான்றிதழ்களுடன் பிப்.11ம் தேதி மகேந்திரகிரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 11.02.2023.