ஒன்றிய அரசு துறைகளில் 11,409 பணி


பணி விவரம்:1.     Multi Tasking Staff (MTS) (Non-Technical): மொத்த இடங்கள்: 10,880. சம்பளம்: 7வது ஊதியக் குழு விதிமுறைப்படி வழங்கப்படும். வயது: 18 முதல் 25க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி.2.     Havaldar (CBIC & CBN): 529 இடங்கள். சம்பளம்: 7வது ஊதியக் குழு விதிமுறைப்படி வழங்கப்படும். வயது: 18 முதல் 27க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி.உடற்தகுதி: ஆண்கள்- குறைந்த பட்சம் 157.5 செ.மீ உயரம் இருக்க வேண்டும். மார்பளவு சாதாரண நிலையில் 76 செ.மீட்டரும், விரிவடைந்த நிலையில் 81 செ.மீட்டரும் இருக்க வேண்டும்.பெண்கள் குறைந்த பட்சம் 152 செ.மீட்டர் உயரம், 48 கிலோ எடையும் இருக்க வேண்டும்.உடற்திறன் தகுதிகள்: 1.ஆண்கள்- 1600 மீட்டர் தூரத்தை 15 நிமிடங்களில் நடந்து முடிக்க வேண்டும். பெண்கள்- ஒரு கி.மீ., தூரத்தை 20 நிமிடங்களில் நடந்து முடிக்க வேண்டும்.ஆண்கள் 30 நிமிடங்களில் 8 கி.மீ., சைக்கிள் ஓட்டும் திறனும், பெண்கள் 25 நிமிடங்களில் 3 கி.மீ., சைக்கிள் ஓட்டும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.விண்ணப்ப கட்டணம்: ரூ.100/- இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். பெண்கள்/எஸ்சி/எஸ்டியினர்/மாற்றுத்திறனாளிகள்/முன்னாள் ராணுவத்தினர்களுக்கு கட்டணம் கிடையாது.வயது வரம்பு 1.1.2023 தேதிப்படி கணக்கிடப்படும். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 வருடங்களும் தளர்வு அளிக்கப்படும்.ஸ்டாப் செலக்‌ஷன் கமிஷனால் நடத்தப்படும் ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, உடற்திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். www.ssc.nic.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 17.2.2023.



நன்றி Amarujala

(Visited 10027 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =