கர்நாடகா, பெங்களூரிலுள்ள இந்தியன் வான் இயற்பியல் ஆய்வகத்தில் இன்ஜினியர், டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி விவரம்:1. Engineer ‘B’ (Optics): 1 இடம் (ஒபிசி). வயது: 35க்குள். சம்பளம்: ரூ.56,100-1,77,500. தகுதி: மெக்கானிக்கல்/இன்ஸ்ட்ருமென்டேசன்/இன்ஜினியரிங் இயற்பியல்/ அப்ளைடு ஆப்டிக்ஸ் பாடங்களில் 60% மதிப்பெண்களுடன் பி.இ.,/பி.டெக்.,2. Mechanic ‘A’ (Carpentry): 2 இடங்கள் (ஒபிசி). வயது: 30க்குள். சம்பளம்: ₹19,900-63,200. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் கார்பென்டர் பிரிவில் 60% மதிப்பெண்களுடன் ஐடிஐ.3. Electrician ‘A’: 1 இடம் (பொது). வயது: 30க்குள். சம்பளம்: ரூ.19,900-63,200. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரீசியன் பிரிவில் 60% மதிப்பெண்களுடன் ஐடிஐ.4. Junior Technical Assistant (Electronics): 1 இடம் (பொது). வயது: 30க்குள். சம்பளம்: ரூ.25,500- 81,100. தகுதி: Electronics Engineering/Electronics & Communication Engineering பிரிவில் 60% மதிப்பெண்களுடன் டிப்ளமோ அல்லது பி.இ.,/பி.டெக்.,5. Junior Research Assistant (Observations): 5 இடங்கள். (பொது-3, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-1). வயது: 30க்குள். சம்பளம்: ரூ.25,500-81,100. தகுதி: இயற்பியல்/ கணிதம்/வேதியியல்/தகவல் தொழில்நுட்பம்/ எலக்ட்ரானிக்ஸ்/ கம்ப்யூட்டர் அப்ளிகேசன் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி.6. Junior Technical Assistant (Optics): 1 இடம் (ஒபிசி). வயது: 30க்குள். சம்பளம்: ரூ.25,500-81,100. தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங்/ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங்/இன்ஸ்ட்ருமென்டேஷன்/ டூல் அண்ட் டை மேக்கிங் பிரிவில் 3 வருட டிப்ளமோ தேர்ச்சி அல்லது இன்ஜினியரிங் இயற்பியல்/அப்ளைடு ஆப்டிக்ஸ்/மெக்கானிக்கல்/ இன்ஸ்ட்ருமென்டேஷன் பாடங்களில் பி.இ., அல்லது பி.டெக்., அல்லது பிட்டர்/டர்னர்/ டூல்ஸ் மற்றும் டை மேக்கிங் பிரிவில் ஐடிஐ தேர்ச்சியுடன் ஒரு வருட அப்ரன்டிஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.7. Junior Technical Assistant (Computer and IT): 2 இடங்கள் (எஸ்சி-1, எஸ்டி-1). வயது: 30க்குள். சம்பளம்: ரூ.25,500-81,100. தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ்/ஐடி யில் டிப்ளமோ தேர்ச்சி அல்லது கம்ப்யூட்டர் அப்ளிகேசனில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி.8. Junior Technical Assistant: (Electrical) 1 இடம் (பொது). வயது: 30க்குள். சம்பளம்: ரூ.25,500-81,100. தகுதி: எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்கில் 60% மதிப்பெண்களுடன் 3 வருட டிப்ளமோ.9. Horticulture Assistant: 1 இடம் (எஸ்சி). வயது: 30க்குள். சம்பளம்: ரூ.25,500-81,100. தகுதி: தோட்டக்கலை பாடத்தில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி.
டெக்னிக்கல் அசிஸ்டென்ட் காலி பணியிடங்கள்
(Visited 10027 times, 31 visits today)