11,409 காலி இடங்களை நிரப்ப எஸ்எஸ்சி தேர்வு

மத்திய அரசுப் பணிகளில் உள்ள 11,409
காலியிடங்களை நிரப்புவதற்கான எஸ்எஸ்சி
தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால
அவகாசம் பிப்ரவரி 24-ம் தேதி வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசுத் துறைகளில் காலியாக
உள்ள 11,409 காலிப் பணியிடங்களுக்கான
தேர்வு அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர்
தேர்வாணையம் (எஸ்எஸ்சி) கடந்த மாதம்
வெளியிட்டது. அதன்படி மேற்கண்ட
பணிகளுக்கான தேர்வு கணினி வழியில் ஏப்ரல்
மாதம் 2 கட்டங்களாக நடத்தப்படும். முதல்கட்டத்
தேர்வில் 40 வினாக்களும், 2-ம் கட்டத் தேர்வில்
50 வினாக்களும் என மொத்தம் 90 வினாக்கள்
கேட்கப்பட்டு, ஒவ்வொரு வினாவுக்கும்
அதிகபட்சம் 3 மதிப்பெண் வழங்கப்படும்.
இதற்கு தகுதியானவர்கள் https://ssc.
nic.in என்ற இணையதளம் வாயிலாக
பிப்ரவரி 17-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க
வேண்டுமென அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இறுதி நாளில் இணையதளம்
முடங்கியதால் தேர்வர்கள் விண்ணப்பிக்க
முடியாமல் சிரமத்துக்குள்ளாகினர். இதனால்
விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் பிப்ரவரி
24-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுசார்ந்த கூடுதல் விவரங்களுக்கு https://
ssc.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து
கொள்ளலாம். இதற்கிடையே இனிவரும்
எஸ்எஸ்சி போட்டித் தேர்வுகள் தமிழ், இந்தி,
ஆங்கிலம் உட்பட 13 மொழிகளில் நடத்தப்பட
உள்ளது குறிப்பிடத்தக்கது.

(Visited 10025 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 3 =