நிலக்கரி நிறுவனத்தில் 405 சூப்பர்வைசர் மற்றும் சர்வேயர் பணி


தென்கிழக்கு நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள 405 சூப்பர்வைசர் மற்றும் சர்வேயர் பணியிடங்களுக்கு டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி விவரம்:1.     Mining Sirdar (Technical & Supervisor Grade-C): 350 இடங்கள் (எஸ்சி-48, எஸ்டி-97, ஓபிசி-42, பொருளாதார பிற்பட்டோர்-32, பொது-131). சம்பளம்: ரூ.31,852/-. வயது: 18 முதல் 30க்குள். தகுதி: Mining/Mining Engineering பாடத்தில் டிப்ளமோ. மேலும் முதலுதவி சான்றிதழ், டிஜிஎம்எஸ்-ஆல் அங்கீகரிக்கப்பட்ட overman சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்2.     Surveyor (Mining) (Technical & Supervisory Grade-C): 55 இடங்கள் (பொது-22, பொருளாதார பிற்பட்டோர்-5, ஓபிசி-7, எஸ்சி-7, எஸ்டி-14). சம்பளம்: ரூ.31,852/-. வயது: 18 முதல் 30க்குள். தகுதி: Mining/Mining Engineering பாடத்தில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும் அல்லது சர்வேயர் பணிக்கான என்டிசி சான்றிதழ் அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சர்வேயர் பணிக்கான டிஜிஎம்எஸ்-ஆல் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.எழுத்துத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.கட்டணம்: ரூ.1000/- இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளி/ முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு கட்டணம் கிடையாது.www.secl.cil.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.02.23.

(Visited 10029 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × two =