மகாராஷ்டிரா மாநிலம், மும்பையிலுள்ள ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 60 டெக்னீசியன்கள் பணியிடங்களுக்கு டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
1. Assistant Process Technician: 30 இடங்கள். தகுதி: Chemistry/Polymer Chemistry/Industrial Chemistry ஆகிய பாடங்களில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி அல்லது Chemical Engineering/Petrochemical Engineering/Chemical Engineering (Fertilizer), Chemical Engineering (Plastic & Polymer)/ Sugar Technology/Refinery & Petrochemical Engineering/ Oil Technology/ Polymer Technology ஆகிய பாடங்கள் ஏதாவது ஒன்றில் 60% மதிப்பெண்களுடன் டிப்ளமோ.
2. Assistant Boiler Technician: 7 இடங்கள். தகுதி: 60% மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்று பாய்லர் அட்டெண்டென்ட் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
3. Assistant Fire & Safety Officer: 18 இடங்கள். தகுதி: அறிவியல் பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் ‘பயர் பைட்டிங்’ பயிற்சியில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
4. Assistant Maintenance Technician (Electrician): 5 இடங்கள். தகுதி: எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்கில் 60% மதிப்பெண்களுடன் டிப்ளமோ தேர்ச்சி.
அனைத்து பணிகளுக்கான சம்பளம் : ரூ.27,500-1,00,000.
வயது: 18 லிருந்து 25க்குள். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். சிபிடி தேர்வு, திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
http://www.ncbc.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.2.2023.