தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் பொறியியல் பாடப்பிரிவுகளில் டிப்ளமோ/ பி.இ., முடித்தவர்களுக்கு ஒரு வருட அப்ரண்டிஸ் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
பயிற்சி விவரம்:
1. Graduate Apprentices: மொத்த காலியிடங்கள்- 355
அ. Civil Engineering- 315 இடங்கள்
ஆ. Electrical and Electronics Engineering- 25 இடங்கள்
இ. Architecture- 15 இடங்கள்
தகுதி: பி.இ.,/பி.டெக்.,
பயிற்சியின் போது உதவித் தொகையாக ₹9 ஆயிரம் வழங்கப்படும்.
2. Technician (Diploma) Apprentices: மொத்த காலியிடங்கள்- 145
அ. Civil Engineering- 115 இடங்கள்
ஆ. Electrical and Electronics Engineering- 25 இடங்கள்
இ. Architecture- 5 இடங்கள்
தகுதி: சம்பந்தப்பட்ட பாடத்தில் டிப்ளமோ இன்ஜினியரிங்.
2020, 2021, 2022ம் கல்வியாண்டுகளில் படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். டிப்ளமோ அல்லது பி.இ.,/பி.டெக் படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுபவர்களின் விவரம் ஏப்.10ம் தேதி அன்று இணையதளத்தில் வெளியிடப்படும். நேர்முகத் தேர்வு ஏப்.19ம் தேதி முதல் ஏப். 21ம் தேதி வரை நடைபெறும். www.mhrdnats.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் கல்வித்தகுதி மற்றும் இதர விவரங்களை முன்பதிவு செய்து கொள்ளவும். இந்த இணையதளத்தில் வழங்கப்படும் Unique Enrollment Number ஐ பயன்படுத்தி அதே இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.03.2023.