இந்தியன் ஆயில் கழகத்தில் காலியாக உள்ள 106 எக்சிக்யூட்டிவ் பணியிடங்களுக்கு பி.இ., படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணியிடங்கள் விவரம்:1. Executive Level L 1: 96 இடங்கள் (பொது- 41, எஸ்சி-15, எஸ்டி-7, ஒபிசி-24, பொருளாதார பிற்பட்டோர்-9). சம்பளம்: ஆண்டுக்கு ரூ.12 லட்சம். வயது: 35க்குள்.2. Executive Level L 2: 10 இடங்கள் (பொது- 6, எஸ்சி-1, ஒபிசி-2, பொருளாதார பிற்பட்டோர்-1). சம்பளம்: ஆண்டுக்கு ரூ.16 லட்சம். வயது: 45க்குள்.2 பணிகளுக்குமான தகுதி: Mechanical Engineering/Electrical Engineering/Civil Engineering/ Instrumentation Engineering பிரிவில் பி.இ.,/பி.டெக்., தேர்ச்சி அல்லது Mechanical/Electrical/Civil Engineering பிரிவில் 3 வருட டிப்ளமோ தேர்ச்சி.நேர்முகத்தேர்வு, உடற்தகுதி தேர்வு நடத்தப்படடு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.கட்டணம்: ரூ. 300/-. இதை ஸ்டேட் பாங்க் மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும்.www.iocl.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.03.2023.