வருமான வரித்துறையில் 71 இடங்க




கர்நாடகா, கோவா மாநிலங்களின் வருமானவரித் துறையின் அலுவலகங்களில் 71 இடங்கள் காலியாக உள்ளன. விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் விவரம்:

அ. Income Tax Inspector: 10 இடங்கள் சம்பளம்: ரூ. 44,900-1,42,500. வயது: 18 முதல் 30க்குள். தகுதி: ஏதாவதொரு இளநிலைப் பட்டம்.
ஆ. Tax Assistant: 32 இடங்கள். சம்பளம்: ரூ. 25,500-81,100. வயது: 18 முதல் 27க்குள். தகுதி: ஏதாவதொரு பட்டப்படிப்புடன் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
இ. Multi Tasking Staff: 29 இடங்கள். சம்பளம்: ரூ. 18,000- 56,900. வயது: 18 முதல் 27க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி.

விளையாட்டுத் தகுதி: Athletics/ Badminton/ Basket Ball/ Chess/Cricket/ Foot ball/ Gymnastics/Hockey/Kabadi/Swimming/ Table Tennis/ Tennis/Volley Ball/Yogasana/ Para Sports ஆகிய விளையாட்டுக்களில் ஏதேனும் ஒன்றில் தேசிய/ மாநில/பல்கலைக்கழக அளவில் விளையாடி குறைந்தது 3வது இடம் பெற்றிருக்க வேண்டும்.

கட்டணம்: ரூ. 100/- இதை ‘ZAO, CBDT’ என்ற பெயரில் பெங்களூரில் மாற்றத்தக்க வகையில் டிடி அல்லது இந்தியன் போஸ்டல் ஆர்டராக எடுக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகள்/ பெண்களுக்கு கட்டணம் கிடையாது.

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.incometax.gov.in/sportsquota/application என்ற இணையதளத்தை பார்க்கவும்.





நன்றி Amarujala

(Visited 10039 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =