பணியிடங்கள் விவரம்:1. Senior Personal Assistant: 60 இடங்கள் (பொது-11, பொருளாதார பிற்பட்டோர்-10, ஒபிசி-23, எஸ்சி-9, எஸ்டி-7). இவற்றில் 8 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 110 வார்த்தைகளுக்கு குறையாமல் எழுதும் திறனும், ஆங்கில டைப்பிங்கில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் கம்ப்யூட்டரில் டைப்பிங் செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.2. Personal Assistant: 67 இடங்கள் (பொது-29, பொருளாதார பிற்பட்டோர்-6, ஒபிசி-17, எஸ்சி-10, எஸ்டி-5). இவற்றில் 6 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் ஆங்கில சுருக்கெழுத்தில் 100 வார்த்தைகளுக்கு குறையாமல் எழுதும் திறனும், ஆங்கில டைப்பிங்கில் நிமிடத்திற்கும் 40 வார்த்தைகள் கம்ப்யூட்டரில் டைப் அடிக்கும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.03.2023.