தேசிய தகவல் தொழில் நுட்ப மையத




ஒன்றிய அரசின் மின்னணு தகவல் தொழில் நுட்பத் துறையின் கீழ் செயல்படும் தேசிய தகவல் தொழில் நுட்ப மையத்தில் (National Informatics Centre) சயின்டிஸ்ட் உள்ளிட்ட 594 காலியிடங்கள் உள்ளன. பி.இ.,/எம்.எஸ்சி.,/ எம்சிஏ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

1.     Scientist- ‘B’: 71 இடங்கள் (பொது-30, எஸ்சி-10, எஸ்டி-5, ஒபிசி-19, பொருளாதார பிற்பட்டோர்-7). சம்பளம்: ரூ.56,100- 1,77,500. வயது: 30க்குள். தகுதி: Electronics/IT/Electronics & Instrumentation ஆகிய பாடப்பிரிவுகளில் பி.இ.,/பி.டெக்., அல்லது எம்.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ்/எம்சிஏ/ எம்.எஸ்சி., எலக்ட்ரானிக்ஸ் ஆகியே ஏதாவது ஒரு படிப்பை முடித்திருக்க வேண்டும்.

2.     Scientific Officer/Engineer- SB: 196 இடங்கள் (பொது-81, எஸ்சி-29, எஸ்டி-14, ஒபிசி-52, பொருளாதார பிற்பட்டோர்-20). சம்பளம்: ரூ.44,900-1,42,400.

வயது: 30க்குள். தகுதி: Electronics/Electronics & Communication/Computer Science/ Net Working/Software Systems/IT/Informatics ஆகிய பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் B.E.,/B.Tech.,/M.Sc.,/MCA/MS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
3.     Scientific Technical Assistant-‘A’: 327 இடங்கள் (பொது-134, எஸ்சி-49, எஸ்டி-24, ஒபிசி-88, பொருளாதார பிற்பட்டோர்-32). சம்பளம்: ரூ.35,400-1,12,400. வயது: 30க்குள். தகுதி: Electronics/Electronics and Communication/Electronics & Telecommunication/Computer Science/Software System/IT/Informatics ஆகிய ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பி.இ.,/பி.டெக்.,/எம்.எஸ்சி.,/எம்சிஏ பட்டம்.

வயது: 04.04.2023 தேதியின்படி நிர்ணயிக்கப்படும். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்களும் தளர்வு அளிக்கப்படும்.

ஆன்லைனில் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

கட்டணம்: ரூ.800/- இதை ஆன்லனில் செலுத்தவும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/ பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

www.calicut.nielit.in/nic23 என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 04.04.2023.





நன்றி Amarujala

(Visited 10029 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × five =