சென்னை ஐகோர்ட்டின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் புதுச்சேரி யூனியன் பிரதேச கோர்ட்களில் சிவில் நீதிபதி பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி: சிவில் நீதிபதி. மொத்த இடங்கள்: 19 (பொது-6, ஒபிசி-6, பொருளாதார பிற்பட்டோர்-2, எஸ்சி-4, எஸ்டி-1)சம்பளம்: ரூ.27,700-44,770. வயது: 22 முதல் 27க்குள். தகுதி: குறைந்தது 50% மதிப்பெண்களுடன் சட்டப் பாடத்தில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்திய பார் கவுன்சிலில் படிப்பை பதிவு செய்திருக்க வேண்டும். வழக்கறிஞர் பணி அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம். முறையான கல்வித் திட்டத்தின் கீழ் பட்டப்படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.ஆப்ஜக்டிவ் டைப்பில் எழுத்துத் தேர்வு, விரிவாக விடையளிக்கும் வகையிலான கேள்விகளைக் கொண்ட 2ம் கட்ட எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.முதல்நிலை எழுத்துத்தேர்வு ஜூன் 3ம் தேதியும், பிரதான எழுத்துத் தேர்வு ஆகஸ்ட் 5ம் தேதியும், நேர்முகத்தேர்வு அக்.9ம் தேதியும் நடைபெறும்.கட்டணம்: ரூ.2 ஆயிரம். இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டியினர், பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.www.mhc.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 01.04.2023.