மத்திய அரசின் அறிவியியல் மற்றும் தொழிற்நுட்பத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் Centtral Electronics Engineering Research Institute-இல் காலியாக உள்ள விஞ்ஞானி (Scientist) பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் இதர விவரங்கள்:
பணி: விஞ்ஞானி (Scientist)
காலியிடங்கள்: 20
சம்பளம்: மாதம் ரூ.67,700 – 2,08,700
தகுதி: Instrumentation, control system, Electronics, Electrical, software Technology, Electronics & communication, Embedded system, Microwave Electronics, Mechatronics போன்ற ஏதாவதொரு பாடப்பிரிவில் எம்.இ, எம்.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30.6.2023 தேதியின்படி கணக்கிடப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகதேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.ceeri.res.in/recruitment என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தகுதி, வயது, சாதி போன்ற சான்றிதழ்களின் நகல்களை இணைத்து தபால் மூலம் அனுபவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களளை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Director, CSIR-Centtral Electronics, Engineering Research Institute, Pilani, Jhunjhunu-333 031.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 30.6.2023