வாய்ப்பை நழுவவிடாதீர்கள்… இந




job

மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய தர கவுன்சிலில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 553 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

1. பயோ டெக்னாலஜி – 50
2. பயோ கெமிஸ்ட்ரி – 20
3. உணவு தொழில்நுட்பம் – 15
4. வேதியியல் – 56
5. பாலிமர் சயின்ஸ் – 9
6. பயோ மெடிக்கல் – 53
7. எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் – 108
8. எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் – 29
9. கம்ப்யூட்டர் மற்றும் ஐ.டி – 69
10. இயற்பியல் – 30
11. சிவில்- 9
12. மெக்கானிக்கல் – 99
13. உலோகவியல் – 4
14. டெக்ஸ்டைல் – 8

இதற்கும் விண்ணப்பிக்கலாம் | எல்லை பாதுகாப்புப் படையில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்?

தகுதி: காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள துறையில்  பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 4.8.2023 தேதியின்படி 21 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை:  www.qcin.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:  ரூ.1000. எஸ்சி, எஸ்டி, பெண்கள் பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 4.8.2023

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 
 







நன்றி Dinamani

(Visited 1007 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 8 =