இந்துமத அற்புதங்கள் 52: நோய் தீர்த்த மெய்தீர்த்தம்




ஒற்றைக் கண்ணில் பார்வை பெற்று சில நாள்கள் காஞ்சிபுரத்தில் தங்கியிருந்தார் சுந்தரர். திருவாரூர் செல்ல வேண்டிய ஆசையால், தன் பயணத்தைத் தொடர்ந்தார்.
கண் பார்வை குறையோடு உடலிலும் தோலிலும் நோய் கண்டிருந்தது. பயணத்தாலும் களைப்பாலும் நோய் அதிகப்பட்டிருந்தது.

திருவாவடுதுறையில் வணங்கி வழிபட்டுவிட்டுத் திருத்துருத்தி என்னும் தலத்தை அடைந்தார். தன் உடலின் மீதுள்ள நோய் நீங்க வேண்டுமென்று வேண்டினார்.

இறைவன் – உத்தரவேதீஸ்வரர்
இறைவி – மிருதுமுகிழாம்பிகை

சிவபெருமான் சுந்தரரை நோக்கி, "நம்பி! இந்தக் கோயிலின் வடக்குப் பக்கத்தில் ஒரு தீர்த்தம் உள்ளது. அதில் மூழ்கு. உன் உடல் நோய் தீரும்” என்று திருவாக்கு அருளினார்.

சுந்தரரும் அக்குளத்தில் மூழ்கி எழுந்தார். அவரின் உடல்நோய் நீங்கியிருந்தது. மேனி, பொன்னாய்ப் பிரகாசித்தது. உடனே திருக்கோயிலுக்குள் சென்று தன் நன்றியைக் காட்டப் பதிகம் பாடினார்.

திருத்துருத்தியில் உடல்பிணி நீங்கப் பெற்ற சுந்தரர் பாடிய பதிகம்

"மின்னுமா மேகங்கள் பொழிந்திழிந்து அருவி
வெடிபடக் கரையொடும் திரைகொணர்ந்து எற்றும்
அன்னமாங் காவிரி அகன்கரை உறைவார்
அடியிணை தொழுதெழும் அன்பராம் அடியார்
சொன்னவாறு அறிவார் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
என்னைநான் மறக்குமாறு எம்பெரு மானை
என்னுடம்பு அடும்பிணி இடர்கெடுத் தானை”

திருத்துருத்தி தலத்தினைச் சென்றடையும் வழி:
குத்தாலத்திற்குப் பக்கத்தில் உள்ளது. மயிலாடுதுறை – மகாராஜபுரம் சாலையில் உள்ளது.





நன்றி Hindu

(Visited 1002 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 13 =