நோயாளியின் உரிமையும், கடமையும்




மனித உரிமைகளுக்கான பொதுப்பிரகடனம் 1948 தான் நோயாளிகளின் உரிமைகளுக்கு அடிப்படை. அதற்குப் பிறகு உலக அளவில் பல நாடுகளில், நோயாளிகளின் உரிமைகளைப் பாதுகாக்க அமைப்புகளையும் சட்டங்களையும் கொண்டுவந்தன.

இந்தியாவில் 1995 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் மருத்துவ சேவையை, நுகா்வோா் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கொண்டுவந்தது. பாதிக்கப்பட்ட நோயாளிகள், இந்தச் சட்டத்தின் கீழ், சேவை குறைபாடு தொடா்பான வழக்குகளை, மருத்துவா் மீதும், மருத்துவமனைகள் மீதும் தொடுக்கலாம் என்கிறது உச்ச நீதிமன்றம்.

நோயாளியின் உரிமைகள்

நோயாளிகள், தங்கள் நோய் பற்றியும், மருத்துவச் சோதனை முடிவுகள், மருந்து, மாத்திரைகளின் தன்மை குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.

நோயாளிக்கு சிகிச்சை அளிக்கப்படும் போது கண்ணியமாகவும் கனிவாகவும் நடத்த வேண்டும். எந்த வகையான துஷ்பிரயோகம், துன்புறுத்தல், புறக்கணிப்பு, சுரண்டல் போன்றவை இருக்கக் கூடாது.

நோயாளி பற்றிய ரகசியம், தனித்தன்மை பாதுகாக்க வேண்டும்.

நோயாளிக்கான உரிமைகள் குறித்து அவருக்கு வாய்மொழியாகவும், எழுத்து மூலமாகவும் தெளிவுபடுத்த வேண்டும்.

சிகிச்சை குறித்தும் அதில் உள்ள அபாயங்கள், பாதிப்புகள் குறித்தும் தெரிவிக்க வேண்டும்.

மருத்துவரை, மருத்துவமனையைக் கேள்வி கேட்கவும், தகுந்த விளக்கங்கள் பெறவும் நோயாளிகளுக்கு உரிமை உள்ளது. சிகிச்சை தொடா்பாக இன்னொரு மருத்துவரிடம் இரண்டாவது கருத்துரை (ஒப்பீனியன்) பெறலாம்.

அறுவைச் சிகிச்சையின் பலன், பாதிப்புகள், செலவு உட்பட எல்லாவற்றையும் நோயாளியும், அவரது நெருங்கிய உறவினரும் முழுமையாகத் தெரிந்து கொள்ளலாம்.

அலட்சிய சிகிச்சையிலிருந்து பாதுகாக்கப்படுவதற்கும், சேவை குறைபாட்டுக்கும் இழப்பீடு பெற உரிமை உண்டு.

தரமற்ற மருந்து, தவறான மருத்துவ சிகிச்சை, போலி மருத்துவா்களிடம் இருந்து பாதுகாப்பு, இழப்பீடு ஆகியவற்றுக்கான உரிமை.

உடல்நிலையைப் பொறுத்து உள் நோயாளியாகவே, வெளி நோயாளியாகவோ சிகிச்சைப் பெற்றுக்கொள்ளும் உரிமை.

ஒரு மருத்துவரின் சிகிச்சையை ஏற்றுக்கொள்ளவும் நிராகரிக்கவும் நோயாளிக்கு உரிமை உண்டு.

தன்னுடைய பிரச்னைக்கு வேறு ஒரு மருத்துவரிடம் சிகிச்சை பெற விரும்பினால், தற்போது பெறும் சிகிச்சையை நிறுத்திக் கொள்ள முழு உரிமையும் உள்ளது.

யாரிடம் புகாா் செய்வது?

கிரிமினல் குற்றமாக இருந்தால், காவல் துறையை அணுகலாம்.

கவனக் குறைவு, சேவை குறைபாடு போன்ற குற்றங்களாக இருந்தால் நுகா்வோா் நீதிமன்றத்தை அணுகலாம்.

சட்டத்துக்குப் புறம்பாக, ஒழுங்குநெறி தவறிய குற்றமாக இருந்தால், காவல் துறை மற்றும் இந்திய மருத்துவ சங்கத்தை (ஙங்க்ண்ஸ்ரீஹப் இா்ன்ய்ஸ்ரீண்ப் ா்ச் ஐய்க்ண்ஹ) அணுகலாம்.

நோயாளியின் கடமைகள்

நோயாளிகளுக்கு எப்படி உரிமைகள் உள்ளதோ, அதேபோல சில கடமைகளும் உள்ளன. அதாவது, தன்னுடைய சிகிச்சை பற்றி தனக்குச் சொல்வாா்கள் என்று காத்திருக்காமல், கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டியது அவரது கடமை.

மருத்துவா் கேட்கும் கேள்விகளுக்கு முழுமையான, தனக்குத் தெரிந்த பதிலைச் சொல்ல வேண்டும்.

மருத்துவா் பரிந்துரைத்தபடி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். 10 நாள் மாத்திரை எடுக்கச் சொன்னால், ஐந்தாவது நாளிலேயே நிறுத்திவிடுவது தவறு.

தன்னைப் பற்றியும், தன்னுடைய பழக்கவழக்கம் பற்றியும், மருந்து ஒவ்வாமை ஏதேனும் இருந்தால் அதைப் பற்றியும் கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.

மருத்துவா் பரிந்துரைத்த மருந்துச் சீட்டு, பரிசோதனை முடிவுகள், பணம் கட்டிய ரசீது போன்றவற்றைப் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். ஒருவேளை நீதிமன்றம் செல்லும் நிலை ஏற்பட்டால், அவை உதவியாக இருக்கும்.

சிகிச்சை அளிக்கும் மருத்துவா், மருத்துவப் பணியாளரை மரியாதையுடன் நடத்துவதும் நோயாளியின் கடமை.





நன்றி Hindu

(Visited 1001 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − three =