திருப்பாவையில் முப்பது பாசுரங்கள் இருப்பது போலன்றி, திருவெம்பாவையில் இருபது பாடல்களே உள்ளன. மீதமுள்ள நாள்களுக்குத் திருப்பள்ளியெழுச்சியின் பத்துப் பாடல்களை ஓதுவது வழக்கம். இது மட்டுமல்லாது, மார்கழிப் பெüர்ணமி, அதாவது திருவாதிரைத் திருநாளுக்கு அடுத்த நாளிலே இருந்து, சிவன் கோயில்களில் திருப்பள்ளியெழுச்சியே ஓதப்பெறும். சந்திர நகர்வுகளின் அடிப்படையில், பூர்ணிமைக்கு அடுத்த நாள், புதிய மாதம் பிறந்து விடுவதாகக் கணக்கு. ஆக, இரவு (பிரம்ம முகூர்த்தக் கருக்கல்) முடிந்து, பகல் (தை விடியல்) தொடங்கிவிடுகிறது. எனவே, திருப்பள்ளியெழுச்சி. இறைவன் உறங்குவதில்லை. அது அறிதுயில். ஆகவே, பள்ளியெழுச்சி என்பதை இருவிதமாகக் காணலாம்.
(Visited 1001 times, 31 visits today)