திருவெம்பாவையின் நான்காவது பாடலில், எல்லோரும் வந்துவிட்டார்களா என்று வினவும் தன்மையை, இங்கு இப்பாசுரத்தில் காணலாம். பாவை பாடல்கள் உரையாடல்களாக அமையும் என்னும் இலக்கணமும் இலங்கக் காணலாம். குவலயாபீடம் என்னும் யானையை மதம் கொள்ளச் செய்து கண்ணனுக்கு ஆபத்து விளைவிக்க நினைத்தான் கம்சன் என்னும் நிகழ்ச்சி சுட்டப்படுகிறது. “திருப்பாவையாகிறது இப்பாட்டிறே’ என்று திருப்பாவையின் மையமாகச் சிலாகிக்கப்படுகிற பாசுரம். புறத்தே நிற்பவர்கள் குறை சொன்னவுடன் முதலில் மறுத்தவள், பின்னர் பணிந்து ஏற்றுக்கொள்கிறாள். தன்னிடம் இல்லாத குறையைப் பிறர் உரைத்தாலும் தன்னுடையதாகவே ஏற்றுக்கொள்ளுதல் அடியார் இயல்பு. ஸ்வாப தேசத்தில், ஆழ்வார்களிலேயே கடைக்குட்டியான திருமங்கையாழ்வாரை இப்பாசுரம் குறிக்கிறது.
(Visited 1001 times, 31 visits today)