மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 25)

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 25 ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர தரிக்கிலா னாகித் தான்தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய். பாடியவர் – பவ்யா ஹரி விளக்கம்:  கண்ணனைப் போற்றித்துதித்து, பரிசு தருமாறு கோருகிற பாசுரம். "தேவகியின் மகனாகப் பிறந்து, அன்றிரவே யசோதையின் மகனாக வளரச் சென்று, உன்னையே நீ ஒளித்துக் கொண்டபோதும், அதைக்கூடப் பொறுக்காமல், உன்னைக் கொல்லுவதற்காகப் பல வகைகளிலும் தீங்கிழைத்த கம்சனுடைய எண்ணங்களைப் பொய்யாக்கி, அவனுடைய வயிற்று நெருப்பாக நின்ற பெருமானே! உன்னைத் துதித்து யாசிப்பவர்களாக வந்திருக்கிறோம். (எங்கள் எண்ணத்தை ஈடேற்றி) எங்களுக்குப் பரிசு தருவாயென்றால், விரும்பத்தக்க செல்வமும் வீரமும் பெற்றவர்களாவோம். எங்கள் வருத்தமும் தீரும்; நாங்களும் மகிழ்ச்சியடைவோம்’ என்பது நோன்புப் பெண்களின் வேண்டுகோள்.  பாசுரச் சிறப்பு: கஞ்சன் – கம்சன். நெடுமால் – திருமால். திருமாலின் அவதாரமே கண்ணன் என்பதால், இவ்வாறு கூறுவர். வடமதுரையில் பிறந்த கண்ணன், ஆயர்பாடிக்குச் சென்றது எதற்காக? கம்சனிடத்திருந்து தப்பிப்பதற்காக என்பது மேலோட்டமான பார்வை. அப்படியானால், கம்சனுக்குக் கண்ணன் அச்சப்பட்டது போலாகும். உண்மையில், கண்ணன் ஆயர்பாடிக்குச் சென்றது, கம்சனுக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பு. தவறு செய்பவர்கள் தாமே தம்மைத் திருத்திக் கொள்வதற்காகக் கொடுக்கப்படுகிற வாய்ப்பு. வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள கம்சன் தவறியதுதான், அவனுடைய "பொறுக்காத தன்மை’. துஷ்டனைக் கண்டு தூர விலகுவது அச்சத்தால் அன்று; துஷ்டன் தானாகத் திருந்திக் கொள்ளட்டுமே என்னும் கரிசனம். "ஒளித்து’ என்பது "மறைத்து’ என்பதாகும். வசுதேவ வம்சம் என்பதை மறைத்துக்கொண்டு, பெருமான் என்னும் தன்னுடைய பெருமைகளை மறைத்துக்கொண்டு, ஆயர் சிறுவனாகத் தன்னுடைய சுயம்பிரகாசத்தை மறைத்துக் கொண்டு, மாட்டுக் குச்சிக்குள் சங்கு சக்கரப் பஞ்சாயுதங்களை மறைத்துக்கொண்டு… இப்படியாக எல்லாவற்றையும் மறைத்துக்கொண்டு நின்ற கருணை. கம்சன் எண்ணத்தை ஈடழித்த பெருமான், எங்கள் எண்ணத்தை ஈடேற்ற வேண்டும் என்பது கோரிக்கை.  ****** ஸ்ரீமாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி – பாடல் 5மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 26) பூதங்கள் தோறும்நின் றாயெனின் அல்லால் போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச் சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா சிந்தனைக் கும்அரி யாயெங்கள் முன்வந்து ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தரு ளாயே!  பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன் பாடியவர்கள் – ஆலவாய் அண்ணல் தேவாரப் பாடசாலை மாணவர்கள் விளக்கம்:  "குளிர்ச்சிமிக்க வயல்களால் சூழப்பெற்ற திருப்பெருந்துறையில் உறையும் பெருமானே! ஐம்பூதங்களுக்குள்ளும் அவற்றின் உள்ளுறையாய் விளங்குபவனே. பிறப்பும் இறப்பும் இல்லாதவனே. நீ இவ்வாறு பஞ்சபூதங்களுக்குள் திகழ்வதையும் பிறப்பிலி, இறப்பிலி என்பதையும் செந்நாப்புலவர்கள், இசைப் பாடல்கள் வாயிலாகவும் தோத்திரங்கள் வாயிலாகவும் போற்றுகின்றனர். உன்னை உணர்ந்த ஞானியர், பாடியும் ஆடியும் உன்னைத் தொழுகின்றனர். இவற்றையெல்லாம் கேட்டுள்ளோம். ஆனால்,…

Continue Reading

அக்டோபர் மாத பலன்கள் (துலாம் – மீனம்)

அக்டோபர் மாத பலன்களை தினமணியின் இணையதள ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். (துலாம் முதல் மீனம் வரை) துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்) கிரகநிலை: ராசியில் கேது – சுக ஸ்தானத்தில் சனி (வ) – களத்திர ஸ்தானத்தில் குரு(வ), ராகு – லாப ஸ்தானத்தில் சுக்ரன்  – அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், புதன்என கிரகநிலைகள் உள்ளது. கிரக மாற்றங்கள்: 04-10-2023 அன்று செவ்வாய் பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 08-10-2023 அன்று ராகு பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக  ஸ்தானத்திற்கு மாறுகிறார். 08-10-2023 அன்று கேது பகவான் ராசியில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 15-10-2023 அன்று புதன் பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார். 17-10-2023 அன்று சூரிய பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார். பலன்: கனிவான பேச்சும் நலினமான தோற்றமும் உடைய  துலா ராசி அன்பர்களே, இந்த மாதம் எல்லாவற்றிலும் சாதகமான பலனே கிடைக்கும். பொருளாதார முன்னேற்றம் பணவரவில் திருப்தி ஆகியவை இருக்கும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழிலுக்கு புதிய சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியாளர்களிடம் நீங்கள் காட்டி வந்த கடுமையான போக்கு மாறி உங்கள் செயலில் கனிவான தன்மை நிறைந்து இருக்கும். குடும்பத்தில் திருமணம் ஆனவர்களுக்கு புத்திரப்பேறு கிடைக்கும். வயது வந்த புத்திரர்கள் உள்ளவர்களுக்கு நல் உதவிகளும் கிடைக்கபெறும். தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஆயுள் அபிவிருத்தி அடைவதற்கான வகையில் கிரகங்கள் கெயல்பட உள்ளதால் அதற்கேற்றவாறு பழக்கவழக்கங்களை அமைத்துக்கொள்ளுங்கள். பெண்கள் பணியில் ஈடுபட்டுள்ள தொழில் மேன்மை பெறுவார்கள். கலைத்துறையினர் நிறைவான பொருளாதாரம் பெறுவார்கள். அரசியல்துறையினருக்கு மேலிடத்துடன் சுமூகமான உறவு ஏற்படும். மாணவர்களுக்கு சாமர்த்தியமான செயல்களால் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள்.  பாடங்களில் கவனம் செலுத்துவது  அதிகரிக்கும்   சித்திரை – 3, 4: இந்த மாதம் தொழில் வியாபாரம்  சுமாராக நடக்கும்.  பழைய பாக்கிகள் வசூல்  ஆனாலும் எதிர்பார்த்தபடி இருப்பது சிரமம். உத்தியோகத்தில்  இருப்பவர்கள் மிகவும் கவனமாக  பணிகளை  மேற்கொள்வது நல்லது. ஸ்வாதி: இந்த மாதம் பதவி உயர்வு, நிலுவையில் உள்ள பணம் வருவது  தாமதப்படும். குடும்பத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்படலாம். கணவன் மனைவிக்கிடையே  கருத்து வேற்றுமை வந்து நீங்கும். உறவினர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது.  விசாகம் – 1, 2, 3: இந்த மாதம் வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். களைப்பு, பித்தநோய் உண்டாகலாம். வீண்கவலை இருக்கும்.  மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. வெளி வட்டார தொடர்புகளில்  கவனம் தேவை.   பரிகாரம்: அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று வரவும். மல்லிகை மலரை சாத்தி வழிபடவும் அதிர்ஷ்ட…

Continue Reading

பாறையில் வலம்புரி விநாயகர்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்கத் தலங்களுள் ஒன்று, குன்றாண்டார் கோயில். பல்லவர் காலத்தில் திருக்குன்றாக்குடி என்று அழைக்கப்பட்ட இவ்வூர் சோழர், பாண்டிய, விஜயநகர மன்னர் காலங்களில் பெயர் மருவி வந்திருப்பதை இங்குள்ள கல்வெட்டுகளில் காணமுடிகிறது. இறைவன் பர்வதகிரீஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். அம்பாள் உமையாம்பிகை எனப் போற்றப்படுகிறாள். வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. சந்தனக்காப்புத் திருவிழாவைப் போன்று மஞ்சள் காப்புத் திருவிழா இங்கு நடத்தப்படுகிறது. விழாவின்போது பல்வேறு பிரார்த்தனையாக பெண்கள் மஞ்சளைக் கொண்டு வந்து ஆலயத்தின் வாயில் பகுதியில் அமைந்துள்ள கல்தொட்டியில் கொட்டி, அம்மனுக்குப் படைக்கின்றனர். திருமணமாகாத பெண்கள் திருமணம் நடக்க வேண்டியும், திருமணமான பெண்கள் குழந்தை வரம் வேண்டியும் மஞ்சளை காணிக்கையாகச் செலுத்துகின்றனர். குகைக் கோயில் கருவறையின் வெளிப்புறம் உள்ள சிறிய மண்டபத்தின் தெற்குச் சுவரில் வலம்புரி விநாயகரின் சிற்பம் குடையப்பட்டுள்ளது. வடக்குப் பகுதியில் சிவன், பார்வதியின் புடைப்புச் சிற்பம் உள்ளது. நூற்றுக்கால் மண்டபத்தில் தேர் போன்ற அமைப்பில் சக்கரங்களுடன் கூடிய ஒரு ரதத்தை இரண்டு குதிரைகள் இழுத்துச் செல்வது போன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இக்கோயிலில் பல கல்வெட்டுகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு செய்தியைச் சொல்கின்றன. குன்றாண்டார் கோயிலில் ஒரு தூண் கல்வெட்டு கி.பி. 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அக்கல்வெட்டு கோதை மைந்தன் என்பவன் திருவாதிரைக்கு 120 கலம் அரிசி கொடுத்ததைத் தெரிவிக்கிறது. இதே குடவரைக் கோயிலின் மண்டப தெற்குப் பாதையிலுள்ள பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மனின் மூன்றாவது ஆட்சியாண்டுக் கல்வெட்டு புழை நாட்டு வடுவூர் கணபதி பகைச் சந்திர விசைய அரையன் திருவாதிரையன்று 200 நாழி அரிசி வழங்கியதைக் குறிப்பிடுகின்றது.மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 21) கோயிலின் இரண்டாம் கோபுர வாசலிலுள்ள கல்வெட்டு மூன்றாம் குலோத்துங்கனின் 39- ஆவது ஆட்சியாண்டில் செயசிங்கு குலகால வளநாட்டு பெரும்புலியூர் அங்கயராயன் கீழ்செங்களிநாட்டு குத்தங்குடியில் பட்ட மகன் சோழனுக்கு உதிரப்பட்டி நிலம் வழங்கியதைத் தெரிவிக்கிறது. இன்னொரு கல்வெட்டு இதே மன்னனின் 40-ஆவது ஆட்சியாண்டில் திருவழுந்தூர் நாடு என்ற சோழமண்டலத்து ஊருடைய விழிஞ்தரையர் இக்கோயில் வழிபாட்டிற்கு முக்கால் காசு கொடுத்து வைக்கச்சொல்லி, அதற்கு வரும் வட்டியின் மூலம் வழிபாடு நடத்த ஏற்பாடு செய்தமைக்கானது. கோயிலிலுள்ள கோநேரின்னமை கொண்டான் என்ற சுந்தரபாண்டியனின் கல்வெட்டு ஒன்று மேற்படி கோயில் பூசை செலவிற்குரிய அமுதுபடி, சாத்துப்படி ஆகியவைகளுக்காக நூறு பொன் வரி நீக்கி கொடுத்தமைக்கானது. பராக்கிரம பாண்டியனின் 9}ஆவது ஆட்சியாண்டுக் கல்வெட்டு வடபனங்காட்டு தென்மலை நாட்டு பொன்னன் என்பவர் தன் காணி வத்தல்படி நிலத்தினை பணம் இருபதுக்கு விற்றுக் கொடுத்தமைக்கானது. இக்கோயிலிலுள்ள சடையவர்மன் சுந்தரபாண்டியனின் கல்வெட்டு ஒன்று காவல் உரிமையான ஆசிரிய பிரமாணம் நிலம் கொடுத்ததற்குரியது. இக்கோயிலில் இதே மன்னன் காலத்து கல்வெட்டில் இரண்டுமலை நாட்டு அரையர்கள் தங்கள் காவலிலுள்ள ஊர்களில் வழிப்போக்கர்கள், இடைக்குடி மக்கள் ஆகியோரை அழிவு செய்வதில்லை என்றும், அழிவு செய்தால் ஐந்நூறு பணம் தண்டம் கோயிலுக்கு செலுத்துவதாக உறுதி கூறியதற்கானது. புதுக்கோட்டையிலிருந்து 28.கி.மீ. தொலைவில் குன்றாண்டார் கோயில் என்ற…

Continue Reading

சக்கரம் ஏறி வடு மூலவரான ஸ்ரீ செல்வ விநாயகர்

கி.பி. 1405 – இல் வடநாட்டு துக்கோஜி ராஜா வேலூரைக் கைப்பற்ற முடிவு செய்து இரவில் சாரட்டு வண்டியில் வந்து கொண்டிருந்தார். அப்போது பூமி மட்டத்தோடு மட்டமாக 11 மூர்த்திகளும் மண்மூடியிருந்தனர். அந்த இடத்தினைக் கடக்கும்போது “டக்’ கென்று அவரது சாரட்டின் அச்சு முறிந்து வண்டி நின்று விட்டது. அருகில் ஆள் யாரும் இல்லையாயினும் பூமியில் ரத்தம் ஊறியிருந்தது. விவரம் புரியாமல் இரவு முழுவதும் விநாயகரை வேண்டியபடி பிரயாணத்தில் விக்னம் வந்து விட்டதே என்று வருத்தப்பட்டு தூங்கிப் போய்விட்டார். விநாயகர் கனவில் வந்தார். “அந்த இடத்தில் என்னுடைய ஏகாதச மூர்த்திகள் அருவுருவம் புதைந்து போயிருக்கின்றன. அதன்மேல் உன் வண்டிச் சக்கரம் இடித்ததில் தான் ரத்தம் வந்துவிட்டது. இங்கு கோயில் கட்டிக் கும்பாபிஷேகம் செய்!’ என்றார். அதன்படி கி.பி.1407 இல் இக்கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடந்தது. துக்கோஜியின் சாரட் வண்டியின் சக்கரம் ஏறிய வடு மூலவரான ஸ்ரீ செல்வ விநாயகரின் முதுகில் வலது பக்கத்தில் உள்ளதை இன்றும் தரிசனம் செய்யலாம். செல்வவிநாயகர் கோயில் என்றுஅழைக்கப்படும் இத்தலம், வேலூர் நகருக்கு வடமேற்கில் வேலூரிலிருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பிரிகின்ற பாதையில் 1 கி.மீ தொலைவில் பாலாற்றின் தென்கரையில் சேண்பாக்கம் என்னும் ஊரில் அமைந்துள்ளது. அந்த இடம் முழுக்க செண்பகவனமாக இருந்ததால் செண்பக வனப்பாக்கம் எனப்பட்டு அது மருவி “சேண்பாக்கம்’ என அழைக்கப்படுகிறது. மஹா சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதமிருந்து விநாயகப் பெருமானை வணங்கி ஆதிசங்கரரால் சக்கர ஸ்தாபனம் செய்யப்பட்ட இடத்தில் உள்ள நவக்கிரகங்களை வழிபாடு செய்ததால் நெடுநாள்களாகத் தடைப்பட்டு வரும் திருமணம் கை கூடும். குழந்தைச் செல்வம் இல்லாதவர்கள், ஸ்ரீ செல்வ விநாயகருக்கு பசு நெய்யில் தாமரைத் தண்டுத் திரியிட்டு 33 தீபம் ஏற்றுகிறார்கள். மஹா சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதமிருந்து விநாயகப் பெருமானுக்கு பாலபிஷேகம் செய்து அருகம்புல்லால் அர்ச்சனை செய்கிறார்கள். பிறகு மட்டைத் தேங்காயுடன் கோயிலை 4 முறைவலம்வந்து தலவிருட்சமான வன்னி மரத்தைத் தரிசித்து விநாயகருக்கு அத்தேங்காயை சமர்ப்பிக்கிறார்கள். குழந்தைகளுக்கு உடல் நலக் குறைவானால் இக்கோயிலில் உள்ள பால விநாயகருக்கு பாலபிஷேகம் செய்து வேண்டி, நோய்கள் குணமடைந்து பிரார்த்தனை நிறைவேற்றுகிறார்கள். இதுபோல் சேண்பாக்கம் திருத்தலம் பலவகை பிரார்த்தனை நடக்கும் திருத்தலமாக விளங்குகிறது. பிரம்மன், தான் செய்த தவறுக்கு கழுவாயாக விரிஞ்சிபுரத்து ஈசனுக்கு பூஜை செய்து வந்தார். பூஜை மலர்களுக்காக நந்தவனம் அமைக்க நினைத்தார். ஆனால் அவர் மலர்ச் செடிகள் வைக்க தோண்டிய ஒவ்வொரு இடத்திலும் ஏகதச (11) விநாயகர்கள் சுயம்புவாய் காட்சி தந்தனர். விக்னம் களையும் விநாயகரை வணங்கி நந்தவனம் அமைத்தார். தினமும் முதலில் பறிக்கும் மலர்களால் விநாயகரை அங்கேயே பூஜை செய்து பின்னர், திருவிரிஞ்சிபுரம் சென்று பூஜையைத் தொடர்ந்தார்.பிரம்மனால் இக்கோயிலில் அன்று துவங்கிய இப்பூஜை வழிபாடு இன்றுவரை தொடர்கிறது. சுயம்புமூர்த்திகள் அருளும் தலங்களுக்குச் சென்ற ஸ்ரீ ஆதிசங்கரர் ஒரு முறை சேண்பாக்கத்திற்கு மேற்கேயுள்ள விரிஞ்சிபுரம் சென்றார். தனது ஞான திருஷ்டியினால் கிழக்குப்புறமாக இருக்கும் பதினோரு சுயம்பு…

Continue Reading

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 10)

  ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 10 நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்! மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்? நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால் போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கருணனும் தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ? ஆற்ற அனந்த லுடையாய் அருங்கலமே! தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய். பாடியவர் பவ்யா ஹரி விளக்கம்:   வெளியில் நிற்கும் தோழிகள் அழைக்க, உள்ளிருப்பவள் விடைகூடத் தரவில்லை. “என்னம்மா, நோன்பு நோற்றுச் சுவர்க்கத்திற்குள் புகுந்து கிடக்கிறாயோ?’ என்று பரிகசிக்கிறார்கள். “வாசல்தான் திறக்கவில்லை, விடை தருவதற்கு வாயைத் திறக்கக் கூடாதோ? வாசனை கமழும் துளசி மாலையைத் தன்னுடைய திருமுடியில் சூடியவனான நாராயணன், நாம் துதிக்க, நமக்கு அருள் தருவான். அறத்தின் நாயகனான எம்பெருமான், இராமனாக அவதரித்தபொழுது, இயமன் வாயில் தள்ளப்பட்ட கும்பகர்ணன், தன்னுடைய பெருந்தூக்கத்தை உனக்குத் தந்துவிட்டுப் போய் விட்டானோ? பேருறக்கம் கொண்டவளே, அரிய அணிமணி போன்றவளே, தெளிந்து வந்து கதவைத் திற’ என்று ஆதுரத்தோடு அழைக்கிறார்கள்.  பாசுரச் சிறப்பு: “அருங்கலம்’ என்னும் சொல், நல்ல பாத்திரம் என்னும் பொருளில், இறைவன் அருளைப் பெறுவதற்குத் தக்கவர்கள் என்பதைக் குறிக்கும். உறக்கத்தாலும் சோம்பலாலும் தகுதியைத் தொலைத்துவிடக் கூடாது என்னும் படிப்பினையை நினைவு படுத்துகிற பாசுரம். “இதுதான் நீ நோன்பியற்றும் அழகா?’ என்று கிண்டல் பேசுவதாகப் பொருளுரைத்தாலும், சு+வர்க்கம் என்று பிரித்து, “நல்ல கூட்டமான இந்தக் கூட்டத்திற்குள் சேர்ந்துவிடு’ என்று அழைப்பதாகவும் விரிக்கலாம். ஸ்வாபதேசத்தில், இப்பாசுரமானது பேயாழ்வாரைச் சுட்டுகிறது.  அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – பாடல் 10 அடிமையாக்கும் மறுபிறவியில்லா கேது  பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர் போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே! பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன் வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும் ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன் கோதில் குலத்தரன்றன் கோயிற்பி ணாப்பிள்ளைகாள்! ஏதவன்ஊர்? ஏதவன்பேர்? ஆருற்றார்? ஆர்அயலார்? ஏதவனைப் பாடும் பரிசேலோ ரெம்பாவாய்.  பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன் பாடியவர் – மயிலை சற்குருநாதன் பாடியவர் – சுந்தர் ஓதுவார் விளக்கம்:   பாடிக்கொண்டே நீராடச் சென்றவர்கள், பொய்கையை அடைந்துவிட்டனர் போலும்! இறைவன் பெருமையை மேலும் பாடுகின்றனர். இறைவனின் திருவடியோ, அதல பாதாளம் என்னும் கீழுக்குக் கீழே உள்ள அனைத்தையும் கடந்து கீழே சென்றுள்ளது. திருமுடியோ, பொருள், வன்பொருள், நுண்பொருள் என யாவற்றையும் கடந்து மேலே சென்றுள்ளது. ஆக, அடியும் முடியும் (மனித, மன, சொல்) எல்லைகளுக்கு அப்பாற்பட்டன. அன்னை பார்வதியை ஒரு பாகமாகக் கொண்டவன். எனவே, ஒற்றைத் திருமேனியிலும், ஒரே திருமேனி இல்லாதவன். திருமேனி பலவாக, அதாவது, அனைத்துப் பொருள்களிலும் வடிவுகளிலும் உள்ளவன். வேதத்தின் விழுப்பொருள்ஆனவன். தேவர்களும் மனிதர்களும் (பிறரும்) எவ்வளவு துதித்தாலும் முழுமையாகத் துதிக்க முடியாத பெருமையன். இருப்பினும், உயிர்களிடம் கொண்ட கருணையால் தோழனாகிநிற்பவன். தொண்டர் உள்ளத்தில் வாழ்பவன். சிவன் திருக்கோயிலின் குற்றமற்ற பிணாப்பிள்ளைகளே! அவனுடைய ஊரும் பேரும் என்ன? உற்றவரும் அயலாரும் யார்?…

Continue Reading

ஆசைகளைப் பூர்த்தி செய்யுமா பதினோராம் பாவம்? ஜோதிட சூட்சுமங்கள்!

  மனிதனின் குறிக்கோள் எதை நோக்கிச் செல்கிறது, அவற்றில் அவன் வெற்றி பெறுவானா, லாபம் உண்டா அவற்றில் திருப்தி அடைகின்றானா  என்று தெரிந்துகொள்ள அவரவர் ஜாதகம் கொண்டு சொல்ல முடியும். ஒவ்வொருவனுக்கும் சந்தோசம் என்பது வீடு, மனைவி மற்றும் குழந்தைகள் என்பது உலக நியதி. முக்கியமாக ஒருவன் அதற்காக பல தொழிலை செய்து முன்னேற பார்க்கிறான். அதனால் வரும் லாபம் நன்மையே. ஜாதக கட்டத்தின் முக்கிய பாவம் பதினொன்று. பதினோன்றம் பாவம் பல்வேறு காரகத்துவத்தை கொண்டது அவற்றில் முக்கியமாக லாபம், திருப்தி, மகிழ்ச்சி, மூத்த சகோர /சகோதரி, மருமகள் மருமகன் பற்றிய விவரம், அரசாங்க கடன், ஒருவரின் நோய் சரியாகும் நிலை, தாயாரின் ஆயுள், முழங்கால் பாதிப்பு, நல்லவர்கள் நட்பு, விவசாயம் என பலவற்றை அடுக்கிக் கொண்டு போகலாம். லக்கினம் (1) பலம் முக்கியம் என்பர் அதற்கு அடுத்து பூர்வ புண்ணியம் ஸ்தானம் மற்றும் பாக்கியம் ஸ்தானம் (5,9) என்று நல்ல பாவங்களாக சொல்லப்படுகிறது. கடைசியில் அவர் வெற்றி பெறுவாரா, சந்தோசமாக இருப்பாரா? அந்த சந்தோஷம் எதில் கிடைக்கும் என்பதை பதினொன்றாம் பாவம் உணர்த்தும். இன்று 11ம் பாவத்தின் நுணுக்கங்களை விரிவாகப் பார்ப்போம். ஒருவரின் வெற்றி  எதை நோக்கி இருக்க வேண்டும் என்பதை ஜாதகரின்  முக்கிய பாவங்கள் சொல்லிவிடும். அதனால் ஏற்படும் நிறைவு என்பதைப் பார்க்க ஒவ்வொருவரின் ஜாதகத்தில் நல்லது செய்யும் பாவத்தில் முக்கியமான 11ம் பாவத்தைப் பார்க்க வேண்டும். ஜாதகத்தில் திரிகோணத்தோடு 11ம் பாவம் சம்பந்தம் பெரும்பொழுது, அவன் எல்லாவற்றையும் வெற்றி கொண்டு மிகப்பெரிய செல்வந்தன் ஆவான். வாழ்க்கையில் திருப்தியுடன் சந்தோஷம் என்பது அவசியம் தேவை. முக்கியமாக 11ம் அதிபதி ஏழுடன் தொடர்புகொள்ளும்பொழுது திருமண உறவில் சந்தோஷமான வாழ்க்கை அமையும். 11ம் அதிபதி 7ல் இருந்தால் திருமணத்திற்குப் பிறகு மகிழ்ச்சி, உயர்வு பெறுவார். ஆனால் அதுவே 11ம் பாவம் என்பது இரண்டாவது திருமணத்தையும் குறிக்கும். அதனால் ஜாதகத்தில் பார்த்து பலன் சொல்ல வேண்டும். பதினோராம் பாவம் அசுப சேர்க்கை, சுக்கிரனோடு பாவி மற்றும் அயன பாவம் தொடர்பு பெரும்பொழுது, ஒருவன் மது மற்றும் மாது என்று சந்தோஷத்தை நோக்கிச் செல்வான். இந்த ஜாதகருக்கு திரிகோண அதிபதிகளும் கெட்டுப் போயிருப்பார்கள். லக்கினம் 5,11 மற்றும் சுபர்களோடு தொடர்புகொள்ளும்பொழுது குழந்தைகளுக்காக பணம் ஈட்டுவதே அவனுக்கு சந்தோஷத்தை தரும். எடுத்துக்காட்டாக கும்ப லக்கினம் 5ல் புதன் சனி அவரோடு 11ம் பாவ அதிபதி லக்கினத்தில். இவரின் 5ம் பாவத்தில் ஆட்சி பெற்ற புதனுடன், லக்கினாதிபதி சனி சேர்க்கை பெற்று 11ம் அதிபதி பார்வையில் உள்ளார். இந்த ஜாதகர்  தன் தொழில் மூலம் ஈட்டிய பணத்தைக் குழந்தைக்காக சந்தோஷமாக செலவு செய்து வெற்றி வாகையும் சூடுவார்.     பதினொன்றாம் பாவதிபதி லக்கினதோடு தொடர்பு கொண்டால், அந்த ஜாதகர் மற்றவர்களுக்கு சந்தோஷத்தை கொடுப்பார். ஆனால் மற்றவர்களால் அவருக்கு எந்த சந்தோஷமும் கிடைக்காது. எடுத்துக்காட்டாக லக்கினாதிபதி ஆட்சி மற்றும் சுப நிலையில் இருந்து,…

Continue Reading

கலியுகம் எப்படி இருக்கும்? யுகம் முழுக்க, எது துணை வரும்?

ஒரு சமயம் பாண்டவருள் யுதிஷ்டிரர் அல்லாத நால்வர் தனித்திருந்தனர். யுதிஷ்டிரர் (தருமர்) அங்கு இல்லை.   ஒரு சமயம் பாண்டவருள் யுதிஷ்டிரர் அல்லாத நால்வர் தனித்திருந்தனர். யுதிஷ்டிரர் (தருமர்)  அங்கு இல்லை. அப்போது கண்ணன் அங்கு வந்தார். அவரிடம் இந்த நால்வரும் கண்ணனைப் பார்த்துக் கேட்டார்கள், கலியுகம் என்றால் என்ன? அது எப்படி இருக்கும்? என வினவினர் . கண்ணன், புன்னகைத்தவாறு கூறலானான். கலியுகம் எவ்வாறு இருக்கும் என்பதனை இப்போது ஒரு செயலால் நிரூபிக்கிறேன் என்று கூறி, கையில் வில் அம்பை எடுத்து அவர்கள் நின்றிருந்த இடத்தின் நான்கு திசைக்கும் ஒவ்வொரு திசைக்கும் ஒரு அம்பாக எய்தான். அங்கிருந்த நால்வரையும் பார்த்து கண்ணன், நீங்கள் நால்வரும் ஒவ்வொரு திசைக்கும் ஒருவராகச் சென்று அந்த அம்பை எடுத்து வாருங்கள் எனக் கட்டளை இட்டான். உடனே, அந்த நால்வரும் திசைக்கு ஒருவராக, கண்ணன் எய்த அந்த அம்பை கண்டு எடுத்துவரக் கிளம்பினார்கள். அர்ஜுனன் தேடிச் சென்ற திசையில் கண்ணன் எய்த அம்பைக் கண்டு எடுக்கும் போது அங்கு ஒரு இனிமையான குரலை கேட்கலானான். அந்த இனிமையான குரலுக்குச் சொந்தக்காரர் யாரென சுற்றிலும் திரும்பி கண்டபோது,  அங்கு ஒரு குயில் தான் இனிமையான குரலில் பாடிக்கொண்டு, ஒரு முயலினை உயிரோடு அதன் தசைகளைக் கொத்தித் தின்று கொண்டிருந்தது. ஆனால், அந்த முயல்  தமது தீனமான குரலை எழுப்பி கொண்டிருந்ததை இந்த  குயில் காணாதது போல் அதனை உண்டு கொண்டிருந்தது. அர்ஜுனன் இந்த தெய்வீக பறவையின் கோரமான செயலைக் கண்டு ஆச்சரியப்படலானான். உடனே அந்த இடத்தை விட்டு திரும்பினான்.  பீமன் அவன் தேடிச் சென்ற இடத்திலிருந்து ஒரு அம்பை எடுத்தான். அங்கு அவன் கண்ட காட்சி வியப்பாக இருந்தது. அது என்னவென்றால், நான்கு கிணறுகள் ஒரு கிணற்றைச் சுற்றி இருந்தது. அந்த நான்கு கிணற்றில் இருந்தும் சுவையான, இனிப்பான நீர் வழிந்து அவற்றிற்கு மத்தியில் உள்ள கிணற்றினுள் ஒரு சொட்டு நீரும் விழாமல் எங்கோ அடையாளம் தெரியாமல் காணாமல் போனது, ஒரு ஆச்சரியமாக இருந்தது. நகுலன் தாம் சென்ற வழியில் கண்ட ஒரு அம்பை எடுத்துத் திரும்பலானான். திரும்பிய அந்த இடத்தில் ஒரு பசு கன்று ஈனும் தருவாயில் இருந்தது. கன்று ஈன்ற பிறகு அந்த கன்றை நாவால் நக்கிய வண்ணம் இருந்தது. கன்று சுத்தமானது பின்னரும் விடாமல் நக்கிய வண்ணம் இருந்தது. சுற்றியிருந்த மக்கள் அந்த கன்றையும் பசுவையும் பிரித்துவிட எத்தனித்தும் அது இயலாமல் போய் கன்றுக்கு காயம் ஏற்படலானது. நகுலன் இந்த சாது பிராணியின் செயலை அதன் குணத்தைக்  கண்டு வியக்கலானான். படிக்க: உன்மத்தர் உழலும் ஊஞ்சலூர்! சேஷாத்திரி சுவாமிகள் ஆராதனை! சகாதேவனோ அவன் சென்ற திசையில் உள்ள ஒரு மலையின் அடிவாரத்தில் அம்பைக் கண்டான். அப்போது ஒரு பெரிய கற்பாறை விழுவதைக் கண்டான். அது மலையின் சரிவில், வழியில் உள்ள பாறைகள்  மற்றும்  பெரிய மரங்களை நசுக்கிக்கொண்டும், உருண்டும் கீழே வந்து…

Continue Reading

அட்சய திருதியையும் ஸ்ரீ அன்னபூரணியும்

  ‘அட்சயம்’ என்னும் வடமொழிச் சொல்லுக்கு ‘அள்ள அள்ளக் குறையாது’ என்பது தான் பொருள்.  சித்திரை மாதம், அமாவாசையைத் தொடர்ந்து வரும் திரிதியை அன்று அட்சய த்ரிதியை அனுசரிக்கப்படுகிறது.  இந்தப் புண்ணிய தினமான, திரிதியை நாள்,  நமக்குத் தெரிந்ததும், தெரியாததுமான அநேக விஷயங்களை நாம் அறிந்து கொள்ள உதவும் உன்னத நாளாகத் திகழ்கிறது.  இன்றைய தினத்தில்தான்…  ஸ்ரீ வேதவியாசர், மகாபாரதம் என்னும் அற்புதமான காவியத்தை எழுதத்தொடங்கினார்.  ஸ்ரீ மகாவிஷ்ணுவின், ஆறாவது அவதாரமான, ஸ்ரீ பரசுராமரின் அவதாரம் நிகழ்ந்தது.  குபேரன், தான் இழந்த செல்வங்களைத் திரும்பப் பெற்றார்.  ஒரு பிடி அவலுடன், குசேலர், ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை சந்தித்த நாள்.  ஸ்ரீ கங்காமாதா, பூமியைத் தொட்ட நாள்.  ஸ்ரீ ஆதிசங்கரர், கனகதாரா ஸ்தோத்திரத்தை நமக்கு அருளிய நாள்.  இப்படி பல அம்சங்கள் இந்த நன்னாளில் அமைந்திருந்தாலும், முக்கியமான ஒரு தேவ நிகழ்வை, நாம் மறந்துவிடக்கூடாது.  அதுதான்,  நம்முடைய அத்யாவசியத் தேவையான உணவை அதாவது அன்னத்தை, நமக்குக் குறைவில்லாமல் அன்றாடம் வழங்கி அருளும் ஸ்ரீ அன்னபூரணி மாதா அவதாரம் செய்த நாள்தான் அது.  காரியம் என்று ஒன்று இருந்தால், அதற்குக் காரணம் இல்லாமல் இருக்காது அல்லவா?  ஒருமுறை, கைலாயத்தில், ஸ்ரீ சிவபெருமானும், ஸ்ரீ பார்வதியும் சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்தார்கள். ஆடும்பொழுது, பந்தயத்தில், தன்னுடைய சூலாயுதம் முதற்கொண்டு அனைத்தையும், உமாதேவியிடம், மகேசன் இழந்தார்.  செய்வதறியாது, மகேசன், ஸ்ரீ விஷ்ணுவை, அணுகி, உபாயம் கேட்டார்.  மீண்டும் ஒரு முறை சொக்கட்டான் ஆடினால், இழந்ததைப் பெறலாம் என்று பரமாத்மா கூறினார்.  அதன்படி, கங்காதரன், அன்னையுடன், மீண்டும்,  விளையாடத் தொடங்கினார்.  ஸ்ரீ கேசவன் கூறியது போல், கேட்ட விருத்தம் விளையாட்டில் விழ, ஸ்ரீ சிவபெருமானும் இழந்ததை மீட்டுக் கொண்டார்.  ஸ்ரீ பார்வதி தேவி, கணவர் தப்பாட்டம் ஆடி, தன்னை ஏமாற்றி, வெற்றி கண்டார் என்று கோபப்பட்டார்.  அதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. செவ்வாய் தோஷம் என்ன செய்துவிடும்?  அந்த சமயத்தில், அங்கு, ஸ்ரீ விஷ்ணு வருகை புரிந்தார்.  நடந்தது எல்லாமே மாயைதான் என்பதைக்கூறி இருவரையும் சமாதானப்படுத்தினார்.  ஆனால், எல்லாமே மாயை என்பதில் அன்னைக்கு உடன்பாடு இல்லாமல் இருந்தது. ‘பூலோகத்தில், ஒரு ஜீவனின் வாழ்வாதாரத்திற்கு ஆகாரம் என்பது அத்யாவசியமாகிறது. அது கூட மாயை ஆகுமா?’ என்று தன் பதியிடம் தன் சந்தேகத்தைக் கேட்டார், ஸ்ரீ பார்வதி.  பதியின் ‘இதிலென்ன சந்தேகம்?’ என்னும் பதிலைக் கேட்டதும், ‘நான் மாயை இல்லை என்பதை நிரூபித்துக் காட்டுகிறேன்’ என்று கூறி, சட்டென்று மறைந்து போனார், உமை.  அவ்வளவுதான். சக்தியின் தயை இல்லாமல், உணவு பொருட்களின் விளைச்சல், உற்பத்தி நின்றது.  ஆகாரம் இன்றி ஜீவராசிகள் அவதிப்படுவதை,  அன்னை, கண்ணுற்றார்.   லோகமாதாவிற்கு, தன் குழந்தைகள் பசியால்வாடுவதை காணப்பொறுக்கவில்லை.  காசி என்னும் மகா புண்ணிய பூமியில், அட்சய திருதியை அன்று, ஸ்ரீ அன்னபூரணியாக, அவதாரம் செய்தார்.  அங்கு, தானே தன் கைப்பட அன்னம் தயார் செய்து, எல்லாருக்கும் வயிறு நிறைய ஆகாரம் அளித்தார்.  ஸ்ரீ சிவபெருமானும், கப்பரையைக்…

Continue Reading

குரு பெயர்ச்சி: மேஷம், ரிஷபம், மிதுனம், கடக ராசிகளுக்கான பலன்கள்

2021ஆம் ஆண்டு நடைபெறும் குரு பெயர்ச்சி தொடர்பான பொதுப் பலன்களை ஜோதிடர்  கே.சி.எஸ். ஐயர்  கணித்து வழங்கியுள்ளார். இந்த பிலவ வருஷம் தட்சிணாயனம் சரத் ருது கார்த்திகை மாதம் 4-ஆம் தேதி (20.11.2021) சனிக்கிழமை, கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) துவிதியை திதி, கடக லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம், அமிர்த யோகம் கூடிய சுபயோக சுபதினத்தில், உதயாதி 44 நாழிகை அளவில் இரவு 11.28 மணிக்கு சூரிய பகவானின் ஹோரையில், அவிட்டம் நட்சத்திரம் 2-ஆம் பாதத்திலிருந்து அவிட்டம் நட்சத்திரம் 3-ஆம் பாதத்திற்கு அதாவது “பிரகஸ்பதி’ என்கிற தேவர்களுக்கு ஆசானாகிய குரு பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்குப் பெயர்ச்சியாகிறார்.  முதல் நான்கு ராசிகளுக்கான குரு பெயர்ச்சிப் பலன்களைப் பார்க்கலாம். மேஷம்(அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய) 20.11.2021 முதல் 13.04.2022 வரை உள்ள காலகட்டத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். பதினொன்றாம் வீட்டில் குரு பகவான் சஞ்சரிப்பதை “”ஏகாதச பிரகஸ்பதி” என்று கூறுகிறோம்.  இந்த காலகட்டத்தில் செய்தொழிலில் ஏற்றமும் பொருளாதாரத்தில் உயர்வும் உண்டாகும். புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். உற்சாகமான மனநிலையுடன் வலம் வருவீர்கள். குடும்பத்தில் குழந்தை பிறப்பு உண்டாகும்.  என்ன செய்வது என்று தெரியாமல் கண்கலங்கி நின்ற விஷயங்களில், திடீரென்று எதிர்பாராத உதவிகள் தேடி வந்து அனைத்து கஷ்டங்களும் கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்துவிடும். முக்கியமான விஷயங்களுக்கு பயணம் செய்ய நேரிடும். இல்லத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். உடலில் இருந்த நோய்கள் மறைந்து புதுப் பொலிவுடன் காணப்படுவீர்கள்.  இதையும் படிக்கலாமே.. குரு பெயர்ச்சி – 2021 பொதுப் பலன்கள் படிப்பில் மந்தமாக இருந்தவர்கள் நன்றாகப் படித்து, உயர் கல்வி பெற வாய்ப்புகள் கிடைக்கும். பங்காளிகளுடன் இருந்த சண்டை சச்சரவுகள், பிணக்குகள் மறைந்து சகஜ நிலை உண்டாகும். பொதுச் சேவையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு பாராட்டுகளும், விருதுகளும் கிடைக்கும். சிலருக்கு கடல் கடந்து செல்லும் வாய்ப்புகளும் உண்டாகும். வருமானம் சிறப்பாக அமைவதால் புதிய வருவாய் வரக்கூடிய சேமிப்புகளில் ஈடுபடுவீர்கள்.  வெளியூர், வெளிநாடுகளில் இருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். அசையும், அசையா சொத்துக்களை வாங்குவீர்கள். சமுதாயத்தில் உயர்ந்தவர்களின் நட்பு கிடைத்து, அதனால் புதிய சாதனைகளைச் செய்வீர்கள். உடன்பிறந்தோர் தக்க சமயத்தில் தேவையான உதவிகளைச் செய்வார்கள். அவர்களுக்கும் நீங்கள் ஆதரவாக இருப்பீர்கள். சாதுர்யத்துடன் பேசி அனைவரையும் கவர்வீர்கள். எந்த காரியத்திலும் அவசரப்படாமல் நிதானமாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். பழைய கடன்களை அடைத்து விடுவீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்னைகள் தீர்ந்து சுமூகமான பாகப் பிரிவு உண்டாகும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். ஆலயத் திருப்பணிகளில் கலந்து கொள்வீர்கள். முக்கியமான தருணங்களில் உங்கள் பழைய அனுபவம் கை கொடுக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு இந்த காலகட்டத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். குரு பகவான் உங்களின் பலவித பிரச்னைகளுக்கு முடிவு காண வைப்பார். வழக்குகளில் வெற்றியைக் காண்பீர்கள். மேலதிகாரிகள் தங்களின் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். பணவரவும் மிகுதியாக வரும். விரும்பிய…

Continue Reading

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 28)

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 28 கறவைகள் பின்சென்று கானம்சேர்ந் துண்போம் அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்றன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம் குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்றன்னோடு உறவேல் நமக்கிங் கொழிக்க ஒழியாது அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்றன்னைச் சிறுபே ரழைத்தனவும் சீறி யருளாதே இறைவா நீதாராய் பறையேலோ ரெம்பாவாய். பாடியவர் – பவ்யா ஹரி விளக்கம்: முந்தைய பாசுரங்கள் இரண்டிலும் தங்களுக்கு என்னென்ன பரிசுகள் வேண்டும் என்று விண்ணப்பித்த பெண்கள், தங்களுக்கு அருளும்படியாகக் கண்ணனிடம் கோரிக்கை வைக்கிறார்கள். "மாடுகளுக்குப் பின்னாலே சென்று, மேய்ச்சல் காட்டை அடைந்தவுடனேயே கையில் கட்டியெடுத்துச் செல்லும் சோற்றை உண்பவர்கள் நாங்கள். எங்கள் குலத்தில் வந்து கண்ணா, நீ தோன்றியுள்ளாய். உன்னோடு உடன் உறவாடும் அளவுக்கு எங்களுக்கு அறிவோதிறனோ இல்லையென்றாலும், நீ பிறந்துள்ள குலத்தில் நாங்களும் பிறந்துள்ளோம் என்பதே புண்ணியம். எத்தனைக் காலமானாலும், உன்னுடனான எங்களுடைய உறவை ஒழிக்கவோ பிரிக்கவோ இயலாது. நாங்கள் படிப்பறிவில்லாத சிறு பெண்கள். உன்னைப் பலவிதமாகப் பெயர்கள் கூறி அழைத்துவிட்டோம். சினம் கொள்ளாமல் எங்களுக்கு அருளவேணும்’ என்று பிரார்த்திக்கிறார்கள்.  பாசுரச் சிறப்பு: ஆயர்பாடியில் கண்ணன் பிறந்ததால், எத்தனை எத்தனைக் காலமானாலும் அந்த உறவு இருக்கத்தான் செய்யும். பற்பல தலைமுறைகளுக்குப் பின்னரும், "கண்ணன் எங்கள் மூதாதை’ என்று ஆயர்பாடியார் சொல்லிக்கொள்ள முடியும். அதுபோன்றே, எத்தனைப் பிறவிகள் எடுத்தாலும், இந்த உயிர் எம்பெருமானின் உடைமை என்று உறவு சொல்லிக்கொள்ள முடியும். ஜீவனுக்கும் பரமனுக்குமான உறவு, பிறவிகள் தோறும், மற்று, பிறவிகளுக்கு அப்பாற்பட்டும் தொடரும் என்பது உள்பொருள். "சிறுபேர்’ என்பது ஒருமையில் பெயர் சொல்லி அழைத்தல் ஆகும். எம்பெருமான் என்று தெரிந்த பின்னர் இவ்வாறு அழைக்கலாமோ? ஆயின், இங்குச் "சிறுபேர்’ என்பது பிறிதொன்று. எம்பெருமானாக இருப்பினும், சிறுவனாக வந்து, மாடும் கன்றும் மேய்த்து உடன் விளையாடுவதுதான் கண்ணனுக்கு மகிழ்ச்சி. தன்னை "நாராயணா’ என்று உயர்நாமம் சொல்லி அழைத்ததற்காகச் சீறுகிறானாம். எனவே, ஆயர்பாடி அவதாரத்திற்கே உரித்தான கோவிந்த நாமம் சொல்லி அழைக்கிறார்கள். இந்தப் பாசுரத்திலும் (குறையொன்றுமில்லாத கோவிந்தா) இதன் முன் பாசுரத்திலும் (கூடாரைவெல்லும் கோவிந்தா) இன்னும் இதன் மேல்பாசுரத்திலும் (அன்று காண் கோவிந்தா), கோவிந்த நாமம் சாற்றப்படுகிறது. செயல் பெருமையோஅறிவுப் பெருமையோ இல்லாத ஜீவன்கள், இறைவனின் உயர்வையும் இறைவனோடான உறவின் அருமையையும் உணர்ந்து, பணிந்து போற்றி வணங்குவதைக் காட்டுகிற} உணர்த்துகிற பாசுரம். எந்த விரதத்திற்கும், பணிவும் தன் கட்டுப்பாடுமே முக்கியம் என்பதை வலியுறுத்துகிற பாசுரம் எனலாம்.  ****** ஸ்ரீமாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி – பாடல் 8சாதிக்கப் பிறந்தவர்கள் தனுசு ராசிக்காரர்கள்! முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய் மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார்? பந்தணை விரலியும் நீயும்நின் அடியார் பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே! செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித் திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி அந்தணன் ஆவதுங் காட்டிவந் தாண்டாய் ஆரமு தே!பள்ளி எழுந்தரு ளாயே.  பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன்  பாடியவர்கள் – ஆலவாய் அண்ணல்…

Continue Reading

குழந்தை பாக்கியம்பெற கோகுலாஷ்டமியில் பூஜை

இன்று கோகுலாஷ்டமி எனும் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை தமிழகத்திலும், ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த மதுராநகர் மற்றும் வட மாநிலங்களிலும் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாத சுக்லபட்ச அஷ்டமி, அத்தனைப் புண்ணியம் நிறைந்த நன்னாளாக மாறியதற்குக் காரணம் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த திருநாள் இது என்பதால்தான். தன் தங்கைக்குப் பிறக்கும் எட்டாவது குழந்தையால் தன் உயிருக்கு ஆபத்து என்பதை அறிந்து பதறினான் கம்சன். முதல்கட்டமாக தங்கை தேவகியையும் அவளின் கணவர் வசுதேவரையும் சிறையில் அடைத்து கண்கொத்திப் பாம்பாகப் பார்த்து வந்தான். எட்டாவது குழந்தைதான் நமக்கு வில்லன் என்றபோதிலும் பிறந்த ஒவ்வொரு குழந்தையையும் கொன்றான். பதறிப்போனார்கள் தம்பதியர். ஏழாவது குழந்தை பலராமர். தேவகியில் வயிற்றில் கருவாகியிருந்தார். அப்போது ஸ்ரீமகாவிஷ்ணு என்ன செய்தார் தெரியுமா. மாயாதேவியை (துர்கா தேவி) அழைத்தார். பலராமரின் கருவை, கோகுலத்தில் உள்ள நந்தகோபரின் மனைவியரில் ஒருவரான ரோகிணியின் கர்ப்பப்பைக்குள் வைக்கும்படி அருளினார். தவிர, மாயாதேவியை நந்தகோபரின் மற்றொரு மனைவியான யசோதையின் வயிற்றில் கருவாக வளரும்படி பணித்தார். எட்டாவதாக, கிருஷ்ண பகவான் தேவகியின் வயிற்றில் வளர்ந்தார். ஆவணி மாத சுக்ல பட்ச அஷ்டமியில் கிருஷ்ணர் அவதரித்தார். தாயும் தந்தையும் மகிழ்ந்து கொண்டாடினார்கள். அப்போது குழந்தையானது, ஸ்ரீமகாவிஷ்ணுவாக விஸ்வரூபம் எடுத்து காட்சி தர, வியந்து போனார்கள். இது வரம். ஏற்கெனவே வாங்கி வந்த வரம். இது நிகழ்ந்த நன்னாள்தான் ஆவணி சுக்லபட்ச அஷ்டமித் திருநாள். கிருஷ்ண ஜெயந்தி எனும் புனித நன்னாள். இந்த நாளில், வீட்டு வாசலில் இருந்து வீட்டுப் பூஜையறைக்குள் பகவான் ஸ்ரீகிருஷ்ணரை, குழந்தையாகவே பாவித்து நாம் வரவேற்று பூஜிப்பது வழக்கம். அனேக சமயங்களில் கோகுலாஷ்டமி ஆவணி மாதம் சுக்ல பக்ஷ அஷ்டமியில் ரோஹினி நக்ஷத்திரத்தோடு இணைந்து நிகழும். இந்த கிருஷ்ண ஜென்மாஷ்டமி தினத்தை வைஷ்ணவர்கள் ரோகினி நக்ஷத்திர அடிப்படையிலும் வைஷ்ணவரல்லாதோர் அஷ்டமியை அடிப்படையாக கொண்டும் அனுஷ்டிப்பார்கள். சில சமயங்களில் ஸ்மார்தர்களுக்கு அஷ்டமி திதியிலும் வைஷ்ணவர்களுக்கு ரோகிணி நக்ஷத்திரத்திலும் தனித்தனியாக நிகழ்வதும் உண்டு. இந்தமுறை அஷ்டமியும் ரோகிணியும் இணைந்து வருகிறது. இந்த கோகுலாஷ்டமி தினத்தில் அரிசிமாவில் மாக்கோலமிட்டு கிருஷ்ணர் பாதம் வரைந்து ஒவ்வொருவர் வீட்டுக்கும் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா வந்தருளியிருப்பதாக எண்ணி குதூகலிப்போம். மாலை வரை விரதமிருப்போம். அதன் பிறகு கிருஷ்ணருக்குப் பிடித்த உப்பு சீடை, வெல்ல சீடை, தேன்குழல், தட்டை, அதிரசம், கைமுறுக்கு, அப்பம் வெண்ணெய், அவல், பால், கற்கண்டு முதலான பட்சணங்களை நைவேத்தியம் செய்து பூஜிப்போம். ஸ்ரீ கிருஷ்ணர் ஜாதகமும் ஜோதிடமும் ஸ்ரீ கிருஷ்ணர் போன்ற தெய்வ திரு அவதாரங்கள் எல்லாம் நவ கோள்களுக்கெல்லம் அப்பார்பட்டவர்கள். எனவே தெய்வங்களுக்கு ஜாதகம் உண்டா இல்லையா என்ற ஆராய்ச்சியை விடுத்து ஸ்ரீ க்ருஷ்ணரின் அவதார குறிப்புகளைக் கொண்டு நம்முன்னோர்கள் நமக்களித்துள்ள ஜாதகத்தை இந்த கோகுலாஷ்டமி தினத்தில் நினைவுக்கூறுவது நன்மை பயக்கும். ஸ்ரீ கிருஷ்ண பகவான் ரிஷப லக்னம் ரிஷப ராசி சந்திரன் உச்சம். லக்னமும் ராசியும் ஒன்றாக அமைந்தால் ஜட ஜன்ம ராசி என்பார்கள். ஜட ஜென்ம ராசியில் பிறந்தவர்களும் ரிஷபத்தை லக்னமாகவோ…

Continue Reading

குழந்தையின்மைக்குக் காரணம் ஆணா, பெண்ணா? அன்றே உரைத்த ஜோதிடம்

இன்றைய நவீனஎனக்கு எப்போது தான் திருமணம் நடக்கும்?காலகட்டத்தில் அனைத்தையும் அறிவியல் ரீதியாக ஆராய்ந்து பார்ப்பதற்கு உள்ளது. அதன்படி ஒருவருக்கு பிறக்கும் ஆண் குழந்தை என்பது ஆணிடமிருந்து தான் பெறப்படுகிறது. நன்றி Hindu மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 30)

இந்த ராசி பெண்களுக்கு மனதிற்கினிய செய்திகள் தேடி வரும்: வார ராசிபலன்

பிப்ரவரி 18 முதல் 24ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்துக்கு ஜோதிடர் கே.சி.எஸ். ஐயர் கணித்துக் கொடுத்திருக்கும் வாரப்பலன்கள். மேஷம்(அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய) புதிய வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளும் நேரமிது.  எதிரிகளின் மறைமுக எதிர்ப்புகளை தைரியத்துடன் சமாளிப்பீர்கள். பூர்வீகச் சொத்துகளில் இருந்துவந்த வில்லங்கங்கள் அகலும்.   உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளைப் பகைத்துக் கொள்ளாமல் அவர்களின் அறிவுரையைக் கேட்டு நடக்கவும். வியாபாரிகள் புதிய முதலீட்டுக்கான முயற்சிகளை மறு பரிசீலனை செய்வீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சற்று சிரமத்துக்கு உரியதாக இருக்கும். விவசாயிகளுக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால் விளைச்சல் அதிகரிக்கும். சந்தையில் தானிய விற்பனையில் லாபம் சற்று சுமாராகவே இருக்கும்.  அரசியல்வாதிகள் நெருங்கிய நண்பர்களின் மூலம் சில இடையூறுகளைச் சந்திப்பீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வதால் மனதில் திருப்தி ஏற்படும். சக கலைஞர்களின் விருப்பத்தை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பப் பிரச்னைகளைச் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். வருமானம் பெருகும். மாணவமணிகள் சக மாணவர்களுடன் ஜாக்கிரதையாகப் பழகவும். பெற்றோர் சொல் கேட்டு நடக்கவும். பரிகாரம்: பரிக்கல் ஸ்ரீநரசிம்மரை வழிபடவும். அனுகூலமான தினங்கள்: 18, 19. சந்திராஷ்டமம்: 23, 24. *** ரிஷபம்(கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)பயணங்களால் புதிய அனுபவங்கள் கிடைக்கும் நேரமிது. உற்சாகமான மனநிலையில் இருப்பீர்கள். உழைப்பிற்குத் தகுந்த முழுமையான பலன் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். எதிலும் திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி அடைவீர்கள்.  உத்தியோகஸ்தர்கள் எதிர்வரும் இடையூறுகளைச் சாதுர்யமாக சமாளிக்கப் பழகிக் கொள்வீர்கள். உங்கள் முயற்சிகள் அனைத்தும் சாத்தியமாகும். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சுமுகமாக முடியும். அவசியமான செலவுகளுக்கு கடன் வாங்க நேரிடும். விவசாயிகளுக்கு திருப்திகரமான மகசூல் லாபம் கிடைக்கும். சந்தையில் போட்டிக்குத் தகுந்தவாறு விற்பனை செய்வீர்கள். கால்நடைகளால் நன்மை உண்டாகும்.  அரசியல்வாதிகள் செய்யும் மக்கள் நலத்திட்டங்களுக்கு மாற்றுக் கட்சியினரும் ஒத்துழைப்பு தருவார்கள். அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். பெயரும் புகழும் அதிகரிப்பதற்கான சாதனைகளைச் செய்வீர்கள். பெண்மணிகள் குடும்பத்தினருடன் வீண் வாக்கு வாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். கணவருடன் ஒற்றுமை ஓங்கும். மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்தி அதிக மதிப்பெண்களைப் பெறுவீர்கள். பரிகாரம்: நந்தீஸ்வரரை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 18, 20. சந்திராஷ்டமம்: இல்லை.***மிதுனம்(மிருகசீரிஷம் 3}ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய) மந்தமாக நடந்த காரியங்கள் சுறுசுறுப்பாக நிறைவேறும் நேரமிது. பொருளாதார நிலையில் சீரான வளர்ச்சியைக் காண்பீர்கள். உறவினர்களிடம் இருந்து வந்த மனக்குழப்பங்கள் அகல சற்று தாமதமாகும்.  உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகம் இருக்கும். சக ஊழியர்கள் உங்களுக்கு உதவுவார்கள். ரகசியங்களை எவரிடமும் வெளியிடாதீர்கள். வியாபாரிகள் விற்பனைப் பிரதிநிதிகளைப் பல இடங்களுக்கு அனுப்பி வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். எதிர்பார்த்த வகையில் லாபம் காண்பீர்கள். விவசாயிகள் புதிய உபகரணங்களை வாங்கி விளைச்சலைப் பெருக்கப் பாடுபடுவீர்கள். கால்நடைகளின் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.  அரசியல்வாதிகள் கட்சி மேலிடம் இட்ட பணிகளை நிறைவேற்ற நேரம் ஒதுக்குவீர்கள். கடந்த கால உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும்….

Continue Reading

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 29)

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 29 சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள்கேளாய்! பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய். பாடியவர் – பவ்யா ஹரி விளக்கம்:   நோன்பு தொடங்கிய நாள் முதல், பறை என்று பரிசுகளைப்பற்றிக் கூறிக்கொண்டேயிருந்த பெண்கள், இப்பாசுரத்தில்தான், தாங்கள் நாடுகிற பரிசு என்ன என்பதைத் தெளிவாக உரைக்கிறார்கள். "அதிகாலைப் பொழுதில் வந்து உன்னை வணங்கி, உன்னுடைய திருவடிகளைப் போற்றி நாங்கள் நிற்பதற்கான காரணத்தைக் கேளாய். பசுக்கூட்டத்தை மேய்க்கும் ஆயர்குலத்தில் பிறந்துள்ள நீ, எங்களை உனக்கான தொண்டர்களாகக் கொள்ளாமல் விட்டுவிடாதே. ஏதோ இப்போதைக்குப் பரிசு பெறுவதற்காக வந்தோம் என்று எண்ணாதே. எந்தக் காலமானாலும், எத்தனைப் பிறவிகளானாலும் உன்னோடு உறவு கொண்டவர்களாக இருப்பதையே யாசிக்கிறோம். என்றென்றும் உனக்கு அடிமைகளாக இருப்போம். இவைதவிர வேறு ஏதேனும் விருப்பங்கள் எங்களுக்கு இருக்குமானால், அவற்றை மாற்றிவிடு’ என்று கோருகிறார்கள்.  பாசுரச் சிறப்பு: நோன்பைத் தலைக்கட்டுகிற (நிறைவேற்றுகிற) நிலையில் வைக்கப்படுகிற விண்ணப்பம் இது. குற்றேவல் என்பது சிறு சிறு ஏவல் கூவல் பணிகள். அந்தரங்கக் கைங்கர்யம் (தனித் தொண்டு) என்பார்கள். ஏழேழு என்பதனை 7, 7+7, 7+7 என்று எவ்விதமாகவேனும் கொள்ளலாம். என்றைக்காக இருந்தாலும் எம்பெருமானுக்கு அடிமைகளாகவும் எம்பெருமானின் உடைமைகளாகவும் இருக்க வேண்டும் என்பதே நிரந்தர விண்ணப்பம். செயல் பெரியதா சிறியதா என்பதைக் காட்டிலும், அது செய்யப்படுகிற நோக்கம் முக்கியமானது. எந்தச் செயலாக இருந்தாலும், அளவுக்கும் பார்வைக்கும் சிறியதாகவே இருப்பினும், அச்செயலுள் இருக்கும்  அன்பும் பக்தியும் அறமும் ஆர்வமும் முக்கியமானவை. ஆங்கிலக் கவிஞர் மில்டனின் They also serve who stand and wait என்னும் வரியை நினைவூட்டுகிற பாசுரம் (இதே உணர்வைத் திருப்பள்ளியெழுச்சியின் 7ஆவது பாடலில், எது எமைப் பணி கொள்ளும் ஆறு என்னும் வரியில் காணலாம்). நோன்பை நிறைவேற்றிய நிலையில், நோன்பின் பலனை இப்பெண்கள் பெற விருக்கிறார்கள். ஒரு செயலின் பலனை அனுபவிக்கும்போது, அந்தச் செயலைச் செய்ததற்கான பெருமையும், செயல் பலனுக்கான ஆனந்தமும், ஒருவகையான மதர்ப்பைத் தரும். அந்த ஆனந்தமே சுயநலமாக மாறும்; ஆணவமாகத் தலைதூக்கும். இதற்குப் பிராப்ய விரோதம் என்று பெயர். இப்படிப்பட்ட  சுயநலம் இல்லாமல், நோன்பென்னும் செயலையும், நோன்பின் நற்பலன்களையும்கூட இறைவனின் திருவடிகளில் அர்ப்பணிக்கிற பாசுரம் இது.  ****** ஸ்ரீமாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி – பாடல் 9 விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டாஆலங்குடியும் அஷ்ட திக்கு கோயில்களும் – மினி தொடர் – பகுதி 2 – மருவத்தூர் ஆலயம் விழுப்பொரு ளேயுன தொழுப்படி யோங்கள் மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே! வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம் கண்ணகத் தேநின்று களிதரு தேனே! கடலமு தேகரும் பேவிரும் படியார் எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே. …

Continue Reading

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 25)

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 25 ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர தரிக்கிலா னாகித் தான்தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய். பாடியவர் – பவ்யா ஹரி விளக்கம்:  கண்ணனைப் போற்றித்துதித்து, பரிசு தருமாறு கோருகிற பாசுரம். “தேவகியின் மகனாகப் பிறந்து, அன்றிரவே யசோதையின் மகனாக வளரச் சென்று, உன்னையே நீ ஒளித்துக் கொண்டபோதும், அதைக்கூடப் பொறுக்காமல், உன்னைக் கொல்லுவதற்காகப் பல வகைகளிலும் தீங்கிழைத்த கம்சனுடைய எண்ணங்களைப் பொய்யாக்கி, அவனுடைய வயிற்று நெருப்பாக நின்ற பெருமானே! உன்னைத் துதித்து யாசிப்பவர்களாக வந்திருக்கிறோம். (எங்கள் எண்ணத்தை ஈடேற்றி) எங்களுக்குப் பரிசு தருவாயென்றால், விரும்பத்தக்க செல்வமும் வீரமும் பெற்றவர்களாவோம். எங்கள் வருத்தமும் தீரும்; நாங்களும் மகிழ்ச்சியடைவோம்’ என்பது நோன்புப் பெண்களின் வேண்டுகோள்.  பாசுரச் சிறப்பு: கஞ்சன் – கம்சன். நெடுமால் – திருமால். திருமாலின் அவதாரமே கண்ணன் என்பதால், இவ்வாறு கூறுவர். வடமதுரையில் பிறந்த கண்ணன், ஆயர்பாடிக்குச் சென்றது எதற்காக? கம்சனிடத்திருந்து தப்பிப்பதற்காக என்பது மேலோட்டமான பார்வை. அப்படியானால், கம்சனுக்குக் கண்ணன் அச்சப்பட்டது போலாகும். உண்மையில், கண்ணன் ஆயர்பாடிக்குச் சென்றது, கம்சனுக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பு. தவறு செய்பவர்கள் தாமே தம்மைத் திருத்திக் கொள்வதற்காகக் கொடுக்கப்படுகிற வாய்ப்பு. வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள கம்சன் தவறியதுதான், அவனுடைய “பொறுக்காத தன்மை’. துஷ்டனைக் கண்டு தூர விலகுவது அச்சத்தால் அன்று; துஷ்டன் தானாகத் திருந்திக் கொள்ளட்டுமே என்னும் கரிசனம். “ஒளித்து’ என்பது “மறைத்து’ என்பதாகும். வசுதேவ வம்சம் என்பதை மறைத்துக்கொண்டு, பெருமான் என்னும் தன்னுடைய பெருமைகளை மறைத்துக்கொண்டு, ஆயர் சிறுவனாகத் தன்னுடைய சுயம்பிரகாசத்தை மறைத்துக் கொண்டு, மாட்டுக் குச்சிக்குள் சங்கு சக்கரப் பஞ்சாயுதங்களை மறைத்துக்கொண்டு… இப்படியாக எல்லாவற்றையும் மறைத்துக்கொண்டு நின்ற கருணை. கம்சன் எண்ணத்தை ஈடழித்த பெருமான், எங்கள் எண்ணத்தை ஈடேற்ற வேண்டும் என்பது கோரிக்கை.  ****** ஸ்ரீமாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி – பாடல் 5 எல்லாம் அருள்வார் யந்திர சனீஸ்வரர் பூதங்கள் தோறும்நின் றாயெனின் அல்லால் போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச் சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா சிந்தனைக் கும்அரி யாயெங்கள் முன்வந்து ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தரு ளாயே!  பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன் பாடியவர்கள் – ஆலவாய் அண்ணல் தேவாரப் பாடசாலை மாணவர்கள் விளக்கம்:  “குளிர்ச்சிமிக்க வயல்களால் சூழப்பெற்ற திருப்பெருந்துறையில் உறையும் பெருமானே! ஐம்பூதங்களுக்குள்ளும் அவற்றின் உள்ளுறையாய் விளங்குபவனே. பிறப்பும் இறப்பும் இல்லாதவனே. நீ இவ்வாறு பஞ்சபூதங்களுக்குள் திகழ்வதையும் பிறப்பிலி, இறப்பிலி என்பதையும் செந்நாப்புலவர்கள், இசைப் பாடல்கள் வாயிலாகவும் தோத்திரங்கள் வாயிலாகவும் போற்றுகின்றனர். உன்னை உணர்ந்த ஞானியர், பாடியும் ஆடியும் உன்னைத் தொழுகின்றனர். இவற்றையெல்லாம் கேட்டுள்ளோம். ஆனால், உன்னைக்…

Continue Reading

வரலட்சுமி விரதம்: பூஜை செய்யும் முறையும், பலன்களும்!

  தீர்க்க சுமங்கலியாக வாழப் பெண்கள் வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கின்றனர். செல்வங்களுக்கும் அதிபதியான மகாலட்சுமியின் அருள் வேண்டி செய்யப்படும் விரதம். ஒவ்வொரு ஆண்டும் ஆடி அல்லது ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமை வரலட்சுமி பூஜை நோன்பு நாளாகும்.  மகாலட்சுமியை தனலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தானலட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என அஷ்டலட்சுமிகளாகப் பிரித்துள்ளனர். எட்டு வகை செல்வங்களை வாரி வழங்குபவள். திருமாலின் மார்பில் குடியிருப்பவள். பெண்களுக்கே உரித்தான கருணை உள்ளம், அழகு, வெட்கம், அன்பு, புத்தி ஆகியவற்றிற்கு அதிபதியும் அவளே. வரலட்சுமி விரதம் இருப்பதால் பல நன்மைகள் கிடைக்கும்.  புராணக் கதைகள் சித்திரநேமி என்ற தேவகுலப் பெண் நீதிபதியாக இருந்தாள். அவள் தேவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு நடுவராக இருந்து தீர்ப்பு வழங்குவாள். ஒருமுறை அவள் பாரபட்சமாக நடந்துகொண்டதால் அன்னை பார்வதி அவளை குஷ்டரோகியாகும்படி சாபம் கொடுத்தாள். சித்திரநேமி சாபவிமோசனம் கேட்டு பார்வதியில் காலில் விழுந்தாள். வரலட்சுமி விரதத்தை கடைப்பிடித்தால் நோய் நீங்கும் என பார்வதி அருள் செய்தாள். அவள் பூலோகம் வந்து, ஒரு குளக்கரையில் அமர்ந்து வரலட்சுமி பூஜை செய்து சாபம் நீங்கப் பெற்றாள்.  மகத நாட்டில் வசித்த ராணி சுசந்திரா, செல்வ வளத்தின் மமதையால், மகாலட்சுமியை அவமதித்தாள். அதனால், அனைத்து செல்வங்களையும் இழந்து வருந்தினாள். சுசந்திராவின் மகள் சாருமதி, தெய்வ அனுகூலத்தால் வரலட்சுமி விரதம் பற்றி அறிந்து, அதைக் கடைப்பிடித்தாள். அதனால் மகிழ்ந்த மகாலட்சுமித் தாய், அவளுக்கு சகல நலன்களையும் அருளினாள். சுசந்திராவும் தன் மகளைப் பார்த்து வரலட்சுமி விரதம் கடைப்பிடித்து, இழந்த செல்வத்தை மீண்டும் பெற்று வளமோடு வாழ்ந்தாள். எப்படி பூஜை செய்வது? அவரவர் குடும்ப வழக்கப்படி பூஜை செய்யலாம். பூஜைக்குத் தேவையானவற்றை அருகில் வைத்துக்கொண்டு பூஜையைத் தொடங்கவும். தேவையான பொருட்கள்  மஞ்சள் பொடி (பிள்ளையார் பிடிக்க), நுனிவாழை இலை, அரிசி, தேங்காய், எலுமிச்சம்பழம், குங்குமம், சந்தனம், புஷ்ப வகைகள், வெற்றிலை, பாக்கு, பழம், கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, அட்சதை, வஸ்திரம், மஞ்சள் சரடுகள், பஞ்சாமிர்தம், குத்துவிளக்கு, திரிநூல், நல்லெண்ணெய், தீப்பெட்டி, தாம்பாளம், பஞ்சபாத்ரம், கிண்ணம், கற்பூரத் தட்டு, தூபக்கால், தீபக்கால், மணி ஆகியவை. நிவேதனப் பொருள்கள் வசதிக்கேற்ப அப்பம், வடை, பொங்கல், கேசரி போன்ற நைவேத்யங்கள் படைத்து கும்பத்தில் மஞ்சள் நோன்பு கயிறுகள் வைத்து பூஜை செய்ய வேண்டும். பழ வகைகளில் ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், வாழை, திராட்சை பூஜைக்கான முன்னேற்பாடுகள்இன்று பகுதிநேர சந்திர கிரகணம் – 2021 வீட்டின் கிழக்கு திசையில் ஈசான்ய மூலையில், பூஜைக்கான இடத்தை அமைத்து, நன்றாக மெழுகி, கோலமிட்டு, மண்டபம் அமைத்து, அலங்கரிக்கவும். மண்டபத்தின் கீழ் நுனி வாழை இலையில் நெல்லைப் பரப்பி, அதன் மீது ஒரு தட்டில் அரிசியை வைக்க வேண்டும். அதன் மேல் கலச கும்பத்தை வைக்க வேண்டும். அரிசி, தங்கம், ரத்தினம் ஆகியவற்றை கும்பத்தில் நிரப்பவும் (தீர்த்தத்தையும் நிரப்பலாம்). மேலே மாவிலைக் கொத்தும் தேங்காயும் வைத்து அலங்கரித்து, புதிய…

Continue Reading

அட்சய திருதியையும் ஸ்ரீ அன்னபூரணியும்

  ‘அட்சயம்’ என்னும் வடமொழிச் சொல்லுக்கு ‘அள்ள அள்ளக் குறையாது’ என்பது தான் பொருள்.  சித்திரை மாதம், அமாவாசையைத் தொடர்ந்து வரும் திரிதியை அன்று அட்சய த்ரிதியை அனுசரிக்கப்படுகிறது.  இந்தப் புண்ணிய தினமான, திரிதியை நாள்,  நமக்குத் தெரிந்ததும், தெரியாததுமான அநேக விஷயங்களை நாம் அறிந்து கொள்ள உதவும் உன்னத நாளாகத் திகழ்கிறது.  இன்றைய தினத்தில்தான்…  ஸ்ரீ வேதவியாசர், மகாபாரதம் என்னும் அற்புதமான காவியத்தை எழுதத்தொடங்கினார்.  ஸ்ரீ மகாவிஷ்ணுவின், ஆறாவது அவதாரமான, ஸ்ரீ பரசுராமரின் அவதாரம் நிகழ்ந்தது.  குபேரன், தான் இழந்த செல்வங்களைத் திரும்பப் பெற்றார்.  ஒரு பிடி அவலுடன், குசேலர், ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை சந்தித்த நாள்.  ஸ்ரீ கங்காமாதா, பூமியைத் தொட்ட நாள்.  ஸ்ரீ ஆதிசங்கரர், கனகதாரா ஸ்தோத்திரத்தை நமக்கு அருளிய நாள்.  இப்படி பல அம்சங்கள் இந்த நன்னாளில் அமைந்திருந்தாலும், முக்கியமான ஒரு தேவ நிகழ்வை, நாம் மறந்துவிடக்கூடாது.  அதுதான்,  நம்முடைய அத்யாவசியத் தேவையான உணவை அதாவது அன்னத்தை, நமக்குக் குறைவில்லாமல் அன்றாடம் வழங்கி அருளும் ஸ்ரீ அன்னபூரணி மாதா அவதாரம் செய்த நாள்தான் அது.  காரியம் என்று ஒன்று இருந்தால், அதற்குக் காரணம் இல்லாமல் இருக்காது அல்லவா?  ஒருமுறை, கைலாயத்தில், ஸ்ரீ சிவபெருமானும், ஸ்ரீ பார்வதியும் சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்தார்கள். ஆடும்பொழுது, பந்தயத்தில், தன்னுடைய சூலாயுதம் முதற்கொண்டு அனைத்தையும், உமாதேவியிடம், மகேசன் இழந்தார்.  செய்வதறியாது, மகேசன், ஸ்ரீ விஷ்ணுவை, அணுகி, உபாயம் கேட்டார்.  மீண்டும் ஒரு முறை சொக்கட்டான் ஆடினால், இழந்ததைப் பெறலாம் என்று பரமாத்மா கூறினார்.  அதன்படி, கங்காதரன், அன்னையுடன், மீண்டும்,  விளையாடத் தொடங்கினார்.  ஸ்ரீ கேசவன் கூறியது போல், கேட்ட விருத்தம் விளையாட்டில் விழ, ஸ்ரீ சிவபெருமானும் இழந்ததை மீட்டுக் கொண்டார்.  ஸ்ரீ பார்வதி தேவி, கணவர் தப்பாட்டம் ஆடி, தன்னை ஏமாற்றி, வெற்றி கண்டார் என்று கோபப்பட்டார்.  அதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 26) அந்த சமயத்தில், அங்கு, ஸ்ரீ விஷ்ணு வருகை புரிந்தார்.  நடந்தது எல்லாமே மாயைதான் என்பதைக்கூறி இருவரையும் சமாதானப்படுத்தினார்.  ஆனால், எல்லாமே மாயை என்பதில் அன்னைக்கு உடன்பாடு இல்லாமல் இருந்தது. ‘பூலோகத்தில், ஒரு ஜீவனின் வாழ்வாதாரத்திற்கு ஆகாரம் என்பது அத்யாவசியமாகிறது. அது கூட மாயை ஆகுமா?’ என்று தன் பதியிடம் தன் சந்தேகத்தைக் கேட்டார், ஸ்ரீ பார்வதி.  பதியின் ‘இதிலென்ன சந்தேகம்?’ என்னும் பதிலைக் கேட்டதும், ‘நான் மாயை இல்லை என்பதை நிரூபித்துக் காட்டுகிறேன்’ என்று கூறி, சட்டென்று மறைந்து போனார், உமை.  அவ்வளவுதான். சக்தியின் தயை இல்லாமல், உணவு பொருட்களின் விளைச்சல், உற்பத்தி நின்றது.  ஆகாரம் இன்றி ஜீவராசிகள் அவதிப்படுவதை,  அன்னை, கண்ணுற்றார்.   லோகமாதாவிற்கு, தன் குழந்தைகள் பசியால்வாடுவதை காணப்பொறுக்கவில்லை.  காசி என்னும் மகா புண்ணிய பூமியில், அட்சய திருதியை அன்று, ஸ்ரீ அன்னபூரணியாக, அவதாரம் செய்தார்.  அங்கு, தானே தன் கைப்பட அன்னம் தயார் செய்து, எல்லாருக்கும் வயிறு நிறைய ஆகாரம் அளித்தார்.  ஸ்ரீ…

Continue Reading

இந்துமத அற்புதங்கள் 52: உணவிட்டு உடன் வந்த தோழன்

திருச்சிராப்பள்ளி, திருப்பராய்த்துறை ஆகிய திருத்தலங்களுக்குச் சென்றுவிட்டு, அங்கிருந்து திருப்பைஞ்ஞீலி என்னும் தலம் நோக்கிச் சென்றார் திருநாவுக்கரசர். போகும் வழியோ தனிவழி. களைப்பு, பசி, தாகம் இருப்பினும் திருப்பைஞ்ஞீலி செல்வதையே குறிக்கோளாகக் கொண்டு தன் பயணத்தைத் தொடர்ந்தார். இறைவன் – நீலகண்டேஸ்வரர், ஞீலிவனநாதர், கதலிவசந்தர், ஆரண்யவிடங்கர் இறைவி – விசாலாட்சி பசியும் தாகமும் அதிகரித்தது. இருப்பினும் சிவபெருமானையே சிந்தித்துக் கொண்டு நடக்கலானார். பக்தன் பாடுபடுவதைப் பார்த்துக்கொண்டு பரமனால் பேசாமல் இருக்க முடியுமா? நாவுக்கரசர் நடந்து வரும் வழியில், ஒரு சிறுகுளம் உருவாக்கி, அதன் கரையில் பொதிசோறு கட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தார் சிவபெருமான்.  நாவுக்கரசர் அத்தடாகத்தின் அருகாமையில் வந்தவுடன், அந்தணர் வேடத்தில் உட்கார்ந்திருந்த ஆண்டவன், ""பெரியவர் களைத்துப் போய் வந்திருக்கிறீர்கள். என்னிடம் சோறு இருக்கிறது. சாப்பிடுங்கள். சாப்பிட்டு விட்டுத் தடாகத்தில் தாகம் தீர்த்துக் கொள்ளுங்கள். தங்கி இளைப்பாறிவிட்டுப் போங்கள்” என்று அழைத்தார். நாவுக்கரசரும் அங்கு நின்று உணவுண்டு நீர் அருந்திக் களைப்பாறினார். அந்தணர் அவரைப் பார்த்து, "எங்கு போகப் போகிறீர்கள்?” என்று கேட்டார். "திருப்பைஞ்ஞீலிக்குச் செல்கிறேன்” என்று சொன்னவரிடம் ""நானும் அங்குதான் போகிறேன்” என்று கூறித் தன் மூட்டையைக் கட்டிக்கொண்டு கூடவே வந்தார் அந்தணர். திருப்பைஞ்ஞீலி அடைந்ததும் திரும்பிப் பார்த்தால் உடன் போந்தவரைக் காணோம்.மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 13) எப்படி இருப்பார்? பசிக்கு உணவு தந்து, களைப்புக்கு உற்சாகம் தந்து, வழித்துணையாய் வந்திடத்தானே சிவபெருமான் சித்தம் கொண்டார்! உணவு தந்தார்; துணையாய் வந்தார். தோன்றிய துணையாயும், உடன்வந்த தோன்றா துணைவன் கொண்டு வந்துவிட திருப்பைஞ்ஞீலியில் திருநாவுக்கரசர் பாடிய பதிகம் "உடையர் கோவணம் ஒன்றுங் குறைவிலர்படைகாள் பாரிடஞபு சூழ்ந்த பைஞ்ஞீலியார்சடையிற் கங்கை தரித்த சதுரரைஅடைய வல்லவர்க் கில்லை அவலமே”. திருப்பைஞ்ஞீலி தலத்தினைச் சென்றடையும் வழி:திருச்சியிலிருந்து பேருந்து செல்கிறது. திருச்சியிலிருந்து மண்ணச்சநல்லூர் வழியாக இத்தலத்தை அடையலாம். கோயில் வரை வாகனங்கள் செல்லும். திருப்பைங்கிளி என்பது இப்போதைய பெயர். நன்றி Hindu அடிமையாக்கும் மறுபிறவியில்லா கேது 

இந்த ராசிக்காரருக்கு திறமைக்கேற்ற வேலை கிடைக்கும்: இந்த வாரப் பலன்கள்

ஆகஸ்ட் 22 முதல் 28ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்துக்கு ஜோதிடர் கே.சி.எஸ். ஐயர் கணித்துக் கொடுத்திருக்கும் வாரப்பலன்கள். மேஷம்  22.10.2021 முதல் 28.10.2021 வரை (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய) திறமைக்குத் தகுந்த வேலைகளைச் செய்வீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உடலாரோக்கியம் சற்று கவனிக்க வேண்டியிருக்கும். தாமதம் செய்யாமல் மருத்துவரிடம் ஆலோசனை பெறவேண்டும்.   உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து நடந்து கொண்டால் மேலும் நன்மை அடையலாம். இட மாற்றமும், ஊதிய உயர்வும் கிடைக்கும். வியாபாரிகள் யாருக்கும் கடன் கொடுப்பதோ ஜாமீன் கையொப்பமிடுவதோ கூடாது. பண வரவு சீராக இருப்பினும் ஜாக்கிரதையாகக் கையாளவும். விவசாயிகள் சந்தையில் போட்டிகளைச் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். மகசூல் லாபம் அதிகமாகும்.  அரசியல்வாதிகள் பயணங்களால் நன்மை அடைவீர்கள். மேலிடத்திலிருந்து பாராட்டுகள் கிடைத்து மகிழ்ச்சியடைவீர்கள். கலைத்துறையினர் புதுப்புது ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். சக கலைஞர்கள் தாமாக முன் வந்து உதவுவார்கள். பெண்மணிகள் எவரிடமும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவமணிகளின் கோரிக்கைகளை ஆசிரியர்களும், பெற்றோர்களும் நிறைவேற்றுவார்கள். நீண்ட காலத் திட்டங்கள் தீட்ட இது உகந்த காலமாகும். பரிகாரம்: விநாயகரை வழிபட்டு வரவும்.  அனுகூலமான தினங்கள்: 22, 23.  சந்திராஷ்டமம்: இல்லை. ••• ரிஷபம் 22.10.2021 முதல் 28.10.2021 வரை (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) இயந்திரப் பணிகள் லாபம் தரும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். உடல் நிலை மிகவும் பாதிப்புக்குள்ளாகி, பின்பு சரியாகி விடும். தகுந்த நேரத்தில் மருத்துவ வசதிகளைப் பெறுவீர்கள்  உத்தியோகஸ்தர்களுக்கு நல்லதொரு வாய்ப்பு கூடி வரும். எதிர்பார்த்த அரசுப் பணிகள் நிறைவேறும். உடல் நலனில் கவனம் தேவை. வியாபாரிகளுக்கு தொலை தூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். தொழில் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்பட்டு விலகும். விவசாயிகளின் பொருளாதார நிலை உயரும். கூட்டுத் தொழிலில் அபிவிருத்தி காணலாம்.   அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவி வரும். பொருள் வரவு, வழக்கில் அனுகூலமான தீர்ப்பு கிடைக்கும். கலைத்துறையினருக்கு சுபிட்சம் ஏற்படும். பிறரிடம் சுமூகமாகப் பேசிப் பழகுவது அவசியமாகும். பெண்மணிகளுக்கு முன்னேற்றம் தடைபடும். உடல் நலனில் மிகுந்த அக்கறை தேவை. அலங்காரப் பொருள்களின் சேர்க்கை நிகழும். மாணவமணிகளின் திறமை பளிச்சிடும். சக மாணவர்களை நம்பி எந்த விஷயத்தையும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். அயல்நாட்டுத் தொடர்பு பயன் தரும். பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபட்டு வரவும்.  அனுகூலமான தினங்கள்: 22, 24.  சந்திராஷ்டமம்: இல்லை. •••• மிதுனம் 22.10.2021 முதல் 28.10.2021 வரை (மிருகசீரிஷம் 3-ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய) விவேகத்துடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழ வாய்ப்பு கூடி வரும். வேலையில்லாதவர்களுக்கு, நல்லதொரு வாய்ப்பு கிட்டும். உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு முன்னேற்றமான சூழல் நிலவும். ஊதிய உயர்வு, விரும்பிய இடமாற்றம் போன்றவை கிடைத்து மகிழ்ச்சியில் திளைப்பீர்கள். வியாபாரிகள் தங்கள் நோக்கம் நிறைவேறப்…

Continue Reading

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 15)

திருவெம்பாவையின் நான்காவது பாடலில், எல்லோரும் வந்துவிட்டார்களா என்று வினவும் தன்மையை, இங்கு இப்பாசுரத்தில் காணலாம். பாவை பாடல்கள் உரையாடல்களாக அமையும் என்னும் இலக்கணமும் இலங்கக் காணலாம். குவலயாபீடம் என்னும் யானையை மதம் கொள்ளச் செய்து கண்ணனுக்கு ஆபத்து விளைவிக்க நினைத்தான் கம்சன் என்னும் நிகழ்ச்சி சுட்டப்படுகிறது. “திருப்பாவையாகிறது இப்பாட்டிறே’ என்று திருப்பாவையின் மையமாகச் சிலாகிக்கப்படுகிற பாசுரம். புறத்தே நிற்பவர்கள் குறை சொன்னவுடன் முதலில் மறுத்தவள், பின்னர் பணிந்து ஏற்றுக்கொள்கிறாள். தன்னிடம் இல்லாத குறையைப் பிறர் உரைத்தாலும் தன்னுடையதாகவே ஏற்றுக்கொள்ளுதல் அடியார் இயல்பு.  ஸ்வாப தேசத்தில், ஆழ்வார்களிலேயே கடைக்குட்டியான திருமங்கையாழ்வாரை இப்பாசுரம் குறிக்கிறது.மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 26) நன்றி Hindu மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 10)