மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 16)

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 16 நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய கோயில் காப்பானே கொடித்தோன்றும் தோரண வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய் ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னனலே வாய்நேர்ந்தான் தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான் வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா நீ நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய். பாடியவர் – பவ்யா ஹரி விளக்கம்: துயிலெடை நிறைவுற்று, நோன்பின் நோக்கம் தொடங்குகிறது. நோன்பியற்றும் பெண்கள் கண்ணனுடைய இல்லத்தை அடைந்து விட்டார்கள். இது நந்தகோபனுடைய இல்லம் அல்லவா? அதையே கூறுகிறார்கள். வாயிலில் வந்து நின்று, இல்லத்திற்குள் தங்களை அனுமதிக்கும்படி வேண்டுகிறார்கள். "நந்தகோபனுடைய அரண்மனையின் காவலனே, வாயிலின் காவலனே, கதவைத் திறந்து எங்களை உள்ளே அனுமதித்துவிடு. ஆயர் சிறுமிகளான எங்களுக்குப் பரிசு தருவதாக நேற்றே கண்ணன் எங்களிடம் தெரிவித்துவிட்டான். மாயனும் மணிவண்ணனுமான அவனைத் துயிலெழுப்புவதற்காக நாங்கள் தூய்மையானவர்களாக வந்திருக்கிறோம். இல்லை இல்லை என்று உன்னுடைய வாயால் மறுக்காதே. கதவைத் திறந்துவிடு’ என்று விண்ணப்பிக்கிறார்கள்.  பாசுரச் சிறப்பு: முறை தெரிந்தவர்களின் துணைகொண்டு கடவுளை அணுக வேண்டும் என்பதைத் தெரிவிக்கும் பாசுரம். கண்ணனுடைய இல்லம் என்று குறிப்பிடாமல், நந்தகோபன் இல்லம் என்று குறிப்பிடுவதற்குக் காரணம் உண்டு. நந்தகோபன் மகன் என்று அறிமுகம் செய்து கொள்வதுதான் கண்ணனுக்குப் பிடிக்கும். காண்பதற்கு அழகான (மணிக்கதவம்) கதவுகள், நேயக் கதவுகளாகவும் இருக்கின்றன. கண்ணன் தோன்றிய பின்னர், ஆயர்பாடியின் அஃறிணைப் பொருள்களும்கூட அன்பு கொண்டவையாக மாறிவிட்டன. உள்ளுறைப் பொருளில், "தூயோமாய் வந்தோம்’ என்பது கடவுள் திருத்தொண்டைத் தவிர வேறெதிலும் இவர்களுக்கு விருப்பம் இல்லை என்பதைக் காட்டுகிறது. ஆண்டவனை அணுகும் நெறியில், அடியார்களையும் ஆசானையும் அணுகி, அவர்கள் வழியாகக் கடவுளை நெருங்கும் வழிமுறையைக் குறிப்பாகச் சுட்டுகிற பாசுரம்.  அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – பாடல் 16 முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள் என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின் மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 15) பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம் என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள் தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு முன்னி அவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே என்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய்.  பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன் பாடியவர்கள் : ஆலவாய் அண்ணல் பாடசாலை மாணவர்கள் பாடியவர் – மயிலை சற்குருநாதன் பாடியவர் – பொன் முத்துக்குமரன் விளக்கம்: பாவை நோன்பின் பொதுப் பயனாக மழையை வேண்டுகிற பாடல். திருப்பாவையின் நான்காவது பாடலான "ஆழி மழைக்கண்ணா’ என்னும் பாசுரத்தை ஈண்டு நினைவுகூரலாம். மழை மேகத்தைக் காண்கிறபோது, இப்பெண்களின் சிந்தனையில் அம்மையின் தோற்றம் எழுகிறது. கருநீலமாகப் புலப்படுகிற பெருங்கடலை, அப்படியே சுருக்கி வற்றச் செய்ததுபோல், வானிலுள்ள கருமேகமும் காட்சி தருகிறது. கருமேகத்தைக் கண்டால், கரிய திருமேனி கொண்டவளான அம்பிகை போன்றே தோன்றுகிறது. "எம்மை ஆட்கொள்கிற உடையாளான அம்பிகையின் நுண்ணிடை இருப்பதும் இல்லாததுமாகத் தோன்றுவதுபோல், மேகத்தின் மின்னலும் மிளிர்ந்து மறைகிறது. அடுத்து இடிக்கிற இடியோ,…

Continue Reading

வரலட்சுமி விரதம்: பூஜை செய்யும் முறையும், பலன்களும்!

  தீர்க்க சுமங்கலியாக வாழப் பெண்கள் வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கின்றனர். செல்வங்களுக்கும் அதிபதியான மகாலட்சுமியின் அருள் வேண்டி செய்யப்படும் விரதம். ஒவ்வொரு ஆண்டும் ஆடி அல்லது ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமை வரலட்சுமி பூஜை நோன்பு நாளாகும்.  மகாலட்சுமியை தனலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தானலட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என அஷ்டலட்சுமிகளாகப் பிரித்துள்ளனர். எட்டு வகை செல்வங்களை வாரி வழங்குபவள். திருமாலின் மார்பில் குடியிருப்பவள். பெண்களுக்கே உரித்தான கருணை உள்ளம், அழகு, வெட்கம், அன்பு, புத்தி ஆகியவற்றிற்கு அதிபதியும் அவளே. வரலட்சுமி விரதம் இருப்பதால் பல நன்மைகள் கிடைக்கும்.  புராணக் கதைகள் சித்திரநேமி என்ற தேவகுலப் பெண் நீதிபதியாக இருந்தாள். அவள் தேவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு நடுவராக இருந்து தீர்ப்பு வழங்குவாள். ஒருமுறை அவள் பாரபட்சமாக நடந்துகொண்டதால் அன்னை பார்வதி அவளை குஷ்டரோகியாகும்படி சாபம் கொடுத்தாள். சித்திரநேமி சாபவிமோசனம் கேட்டு பார்வதியில் காலில் விழுந்தாள். வரலட்சுமி விரதத்தை கடைப்பிடித்தால் நோய் நீங்கும் என பார்வதி அருள் செய்தாள். அவள் பூலோகம் வந்து, ஒரு குளக்கரையில் அமர்ந்து வரலட்சுமி பூஜை செய்து சாபம் நீங்கப் பெற்றாள்.  மகத நாட்டில் வசித்த ராணி சுசந்திரா, செல்வ வளத்தின் மமதையால், மகாலட்சுமியை அவமதித்தாள். அதனால், அனைத்து செல்வங்களையும் இழந்து வருந்தினாள். சுசந்திராவின் மகள் சாருமதி, தெய்வ அனுகூலத்தால் வரலட்சுமி விரதம் பற்றி அறிந்து, அதைக் கடைப்பிடித்தாள். அதனால் மகிழ்ந்த மகாலட்சுமித் தாய், அவளுக்கு சகல நலன்களையும் அருளினாள். சுசந்திராவும் தன் மகளைப் பார்த்து வரலட்சுமி விரதம் கடைப்பிடித்து, இழந்த செல்வத்தை மீண்டும் பெற்று வளமோடு வாழ்ந்தாள். எப்படி பூஜை செய்வது? அவரவர் குடும்ப வழக்கப்படி பூஜை செய்யலாம். பூஜைக்குத் தேவையானவற்றை அருகில் வைத்துக்கொண்டு பூஜையைத் தொடங்கவும். தேவையான பொருட்கள்  மஞ்சள் பொடி (பிள்ளையார் பிடிக்க), நுனிவாழை இலை, அரிசி, தேங்காய், எலுமிச்சம்பழம், குங்குமம், சந்தனம், புஷ்ப வகைகள், வெற்றிலை, பாக்கு, பழம், கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, அட்சதை, வஸ்திரம், மஞ்சள் சரடுகள், பஞ்சாமிர்தம், குத்துவிளக்கு, திரிநூல், நல்லெண்ணெய், தீப்பெட்டி, தாம்பாளம், பஞ்சபாத்ரம், கிண்ணம், கற்பூரத் தட்டு, தூபக்கால், தீபக்கால், மணி ஆகியவை. நிவேதனப் பொருள்கள் வசதிக்கேற்ப அப்பம், வடை, பொங்கல், கேசரி போன்ற நைவேத்யங்கள் படைத்து கும்பத்தில் மஞ்சள் நோன்பு கயிறுகள் வைத்து பூஜை செய்ய வேண்டும். பழ வகைகளில் ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், வாழை, திராட்சை பூஜைக்கான முன்னேற்பாடுகள்பிடித்து வைத்தால் பிள்ளையார்! வீட்டின் கிழக்கு திசையில் ஈசான்ய மூலையில், பூஜைக்கான இடத்தை அமைத்து, நன்றாக மெழுகி, கோலமிட்டு, மண்டபம் அமைத்து, அலங்கரிக்கவும். மண்டபத்தின் கீழ் நுனி வாழை இலையில் நெல்லைப் பரப்பி, அதன் மீது ஒரு தட்டில் அரிசியை வைக்க வேண்டும். அதன் மேல் கலச கும்பத்தை வைக்க வேண்டும். அரிசி, தங்கம், ரத்தினம் ஆகியவற்றை கும்பத்தில் நிரப்பவும் (தீர்த்தத்தையும் நிரப்பலாம்). மேலே மாவிலைக் கொத்தும் தேங்காயும் வைத்து அலங்கரித்து, புதிய வஸ்திரம் சாற்றி, தங்கம்…

Continue Reading

ஜீவாத்மா – பரமாத்மாவுடன் இணைய ஜோதிடம் காட்டும் வழி..!

  ஜோதிடத்தில் ஆத்ம காரகன் என்று ஒன்று உண்டு. ஆத்ம காரகன் ஜாதகத்தில் உச்சபட்ச பாகை பெற்ற கிரகம். இந்திய ஜோதிடத்தின்படி, ஆத்ம காரகா ஒரு நபரின் ஆன்மாவையும், அவரது உண்மையான ஆளுமையையும், இந்த பிறவியின் அவதாரத்தை / பிறப்பை ஏற்றுக்கொள்ளச் செய்த அந்த இலக்குகள் மற்றும் ஆசைகளையும் காட்டுகிறது. ஆத்ம காரக கிரகங்கள் மற்றும் அவற்றின் பொருள் ஜாதகத்தில் ஆத்ம காரகத்தையும் அதன் நிலையையும் பகுப்பாய்வு செய்வதன் மூலம், ஒரு நபரின் கர்ம பணிகளை ஒருவர் தீர்மானிக்க முடியும். ஜாதகர் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் மற்றும் இப்பிறவியில் செய்யவேண்டிய காரியங்கள் யாவை என்று அறிவதோடு, பரமாத்வாவோடு இணைய வழிகளையும் அதன் மூலம் அறிய முடியும். ஆத்ம காரகமாக சூரியன் ஒரு நபர் பெருமை மற்றும் அகங்காரத்தைக் கட்டுப்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கிறது. அத்தகையவர்கள் அடக்கமாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும். அவர்கள் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். ஆத்ம காரகமாக சந்திரன் கருணை, அனுதாபம், இரக்கம் ஆகியவை வளர்த்துக்கொள்ள வேண்டிய முக்கிய குணங்கள் என்பதை சந்திரன் ஆத்ம காரகம் காட்டுகிறது. அத்தகையவர்கள் ஒருவரை கவனித்துக்கொள்வது, தாய்மை அல்லது தந்தையின் அனுபவத்தை அனுபவிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆத்ம காரகமாக செவ்வாய்  ஒரு நபர் தனது ஆக்கிரமிப்பைக் கட்டுப்படுத்த வேண்டும், வன்முறை மற்றும் அவமதிப்புகளைத் தவிர்க்க வேண்டும் என்பதை செவ்வாய் குறிக்கிறது. ஆத்ம காரக செவ்வாய் உள்ளவர்கள் அஹிம்சை (உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்காதது) கொள்கையை புரிந்து கொண்டு கடைப்பிடிப்பது மிகவும் இன்றியமையாதது. ஆத்ம காரகமாக புதன்  ஒரு நபர் துறவி பேச்சைக் கடைப்பிடிப்பது பயனுள்ளதாக இருக்கும் என்பதைக் காட்டுகிறது. பொய்கள், திட்டுதல் மற்றும் வாய்மொழி துஷ்பிரயோகம் ஆகியவை குறிப்பாகக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். கிசுகிசுக்காமல் இருப்பதும், அதிகம் பேசாமல் இருப்பதும் உத்தமம். முழு மௌனத்தைக் கடைப்பிடிப்பது இன்னும் சிறந்தது. உதாரணமாக, வாரத்தில் ஒரு நாள் இதற்காக ஒதுக்குங்கள்.குரு பெயர்ச்சி உங்களுக்கு எப்படி இருக்கும்? ஒரு வரியில் பதில் ஆத்ம காரகமாக குரு வியாழன் ஆத்ம காரகம் இந்த வாழ்க்கையில் ஒரு நபர் பெரியவர்கள், தந்தை, ஆசிரியர், தலைவர் மற்றும் கணவர் ஆகியோரை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கிறது. அதிகாரிகளுக்கு மரியாதை, அதே போல் குழந்தைகளை (நம் சொந்தம் அல்லது மற்றவர்கள்) கவனித்துக்கொள்வது அத்தகைய நபர்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது. ஆத்ம காரகமாக சுக்கிரன் சுக்கிரன் – முதலில், நீங்கள் தூய்மையைக் கவனித்துக் கொள்ள வேண்டும். இது உடலின் தூய்மைக்கும் மனசாட்சியின் தூய்மைக்கும் பொருந்தும். எண்ணங்களிலும் செயல்களிலும் கற்பு அவசியம். அப்படிப்பட்டவர்கள், தகாத பாலுறவைத் தவிர்ப்பது, விசுவாசமாக இருப்பது, ஆசைகளைக் கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம். ஆத்ம காரகமாக சனி துரதிர்ஷ்டத்தின் சுமையைத் தாங்க ஒரு நபர் தனது துக்கங்களையும் சிரமங்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதை சனி குறிக்கிறது. மற்றவர்களுக்கு துன்பம் தராமல் இருப்பதும் முக்கியம். இத்தகைய மக்கள் உண்ணாவிரதம் மற்றும் துறவறத்தில் மிகவும் நல்லவர்கள், இதன் காரணமாக ஒருவர் ஆன்மீக வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைய முடியும். ஆத்ம காரகமாக ராகு ராகு மாயையிலிருந்து விடுபடவும்,…

Continue Reading

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 19)

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 19 குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய் மைத்தடங் கண்ணினாய் நீ உன் மணாளனை எத்தனை போதும் துயிலெழ வொட்டாய்காண் எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால் தத்துவ மன்று தகவேலோ ரெம்பாவாய். பாடியவர் – பவ்யா ஹரி  விளக்கம்:  கீழ்ப்பாசுரத்தில் நப்பின்னை நல்லாளின் உதவியை நாடியவர்கள், இப்போது கண்ணனையும் நப்பின்னையையும் ஒருசேரப் பிரார்த்திக்கிறார்கள். "நிலை விளக்குகள் வெளிச்சம் தந்து கொண்டிருக்க, யானைத் தந்தத்தாலான கால்களைக் கொண்ட கட்டிலின்மீது, மெத்தென்றிருக்கும் படுக்கையின்மீது, கூந்தலில் மலர் சூடியவளான நப்பின்னையை அணைத்துக்கொண்டு கிடக்கும் கண்ணனே, எங்களுக்காக உன் வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்ல மாட்டாயா? அஞ்சனமை தீட்டிய அழகிய கண்களைக் கொண்டவளே நப்பின்னாய், உன்னுடைய கணவனை ஒரு நொடியும் எழுந்திருக்க விடமாட்டாய். ஒரு கணமும் அவனை உன்னால் பிரிய முடியாது. (எனினும்) நீ இப்படி இருப்பது உனக்குத் தக்கதில்லை’ என்றே தங்களின் வருத்தத்தை உரைக்கிறார்கள்.  பாசுரச் சிறப்பு: அடியார்களுக்கு அருள்வதில், எம்பெருமானும் பிராட்டியும் போட்டி போடுவார்களாம். அதற்கொப்ப, இருவரையும் இப்பாசுரத்தில் வேண்டுகிறார்கள். கோபியருக்கு நப்பின்னை மீது ஏற்படக்கூடிய லேசான பொறாமையும் இங்கு எட்டிப் பார்க்கிறது. "நாங்களெல்லாம் குளிரில் புறத்தே காத்துக் கிடக்க, கண்ணனை உனக்கானவனாக மட்டும் பிடித்து வைத்திருக்கிறாயே’ என்னும் பொறாமை. "பஞ்ச சயனம்’ என்பது ஐந்து தன்மைகளைக் கொண்ட படுக்கை. படுக்கையென்பதில், அழகு, குளிர்ச்சி, வெண்மை, மென்மை, நறுமணம் ஆகிய ஐந்து தன்மைகளும் இருக்க வேண்டும். பருத்தி, இலவம் பஞ்சு, பட்டு, மலர்கள், துளிர் இலைகள் ஆகிய ஐந்துப் பொருள்களால் படுக்கை உருவாக்கப்படலாம். "பஞ்சினால் ஆன சயனம்’ என்பதும் "பஞ்ச சயனம்’ ஆகும். உள்ளுறைப் பொருளில், ஐந்து என்பது அர்த்தபஞ்சக ஞானத்தைச் சுட்டுவது. ஈச்வர ஸ்வரூபம் (மிக்க உயர் நிலை), ஜீவ ஸ்வரூபம் (உயிர் நிலை), முக்திக்கான வழியாக உபாய ஸ்வரூபம் (தக்க நெறி), விரோதி ஸ்வரூபம் (இறைவனைஅடைவதைத் தடுக்கும் தீவினைகள்), முக்தி ஸ்வரூபம் (வாழ்வினை) என்னும் இவ்வைந்தினைப் பற்றிய அறிவே, "அர்த்தபஞ்சகம்’ ஞானம். இஞ்ஞானத்தை உணர்த்துகிற பாசுரம்.  அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – பாடல் 19 உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று அங்கப் பழஞ்சொற் புதுக்கும்எம் அச்சத்தால் எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம்கேள்!ஆடியில் எந்த அம்மனை வணங்கினால் பிரச்னைகள் தீரும்? எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க; எங்கை உனக்கல்லாது எப்பணியுஞ் செய்யற்க; கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க; இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல் எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோ ரெம்பாவாய்.  பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன் பாடியவர்கள் : ஆலவாய் அண்ணல் பாடசாலை மாணவர்கள் பாடியவர் – மயிலை சற்குருநாதன் பாடியவர் – பொன் முத்துக்குமரன் விளக்கம்: வழக்கில் உள்ள பழமொழி ஒன்றை நினைவுபடுத்திப் பேசுகிற பாடல். திருமண காலத்தில், மணப்பெண்ணின் பெற்றோர், மணாளனின் கையில் பெண்ணைக் கொடுத்து, "இந்தப்…

Continue Reading

உங்கள் ராசிக்கு இந்த டிசம்பர் மாதம் எப்படி இருக்கும்?

  டிசம்பர் மாதத்துக்கான ராசிப்பலன்களை தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார்.    மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராஹூ – களத்திர ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் – அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், புதன், செவ்வாய் – பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் – தொழில் ஸ்தானத்தில் சனி – லாப ஸ்தானத்தில் குரு என கிரகநிலை உள்ளது. கிரகமாற்றங்கள்: 04-12-2021 அன்று புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்க்கு மாறுகிறார். 05-12-2021 அன்று சுக்ர பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்க்கு மாறுகிறார். 06-12-2021 அன்று செவ்வாய் பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்க்கு மாறுகிறார். 28-12-2021 அன்று புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்க்கு மாறுகிறார். பலன்: எதையும் சமாளித்து குறுகிய காலத்தில் முன்னுக்கு வரும் திறன் உடைய மேஷ ராசியினரே நீங்கள் ரத்த சம்பந்தமான உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பவர். இந்த மாதம் எதையும் சமாளிக்கும் திறமை உண்டாகும். அடுத்தவர்களது செய்கை உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தலாம். எனவே நிதானமாக இருப்பது நல்லது. சொந்த காரியங்களில் தாமதம் ஏற்படலாம். சின்ன விஷயங்களால் மன நிறைவை அடைவீர்கள். எதிர்பாலினரிடம் பழகும் போது கவனம் தேவை.  தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். மருந்து, ரசாயனம் போன்ற தொழில்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான காரியங்களில் ஈடுபடும் போது அவசரப்படாமல் நிதானமாக செயல்படுவது காரிய வெற்றியை உண்டாக்கும். எளிதில் மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்பட வாய்ப்பு உண்டு. குடும்பம் தொடர்பான கவலைகள் மறையும். குடும்ப செலவை சமாளிக்க  பணவரத்து இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதில் ஆன்மீக எண்ணங்கள் ஏற்படும். வாழ்க்கை துணை மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும். பெண்களுக்கு அடுத்தவர்கள் செயல்கள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். எனவே  நிதானமாக செயல்படுவது நன்மையை தரும். எந்த பிரச்சனையையும் சமாளிக்கும் திறமை  கூடும். கலைத்துறையினருக்கு நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். தேவையான  பொருள்களை வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக செய்ய நினைத்த ஒரு காரியத்தை செய்து முடிப்பீர்கள். மதிப்பும், மரியாதையும் வரும். அரசியல் துறையினருக்கு மனஸ்தாபம் நீங்கும். நண்பர்களிடையே சுமூக உறவு இருக்க விட்டு கொடுத்து செல்வது நல்லது. வாழ்வில் முன்னேற அக்கறை காட்டுவீர்கள். மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி  திருப்திகரமாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டி குறையும். எதையும் அவசரப்படாமல் நிதானமாக செய்வது நல்லது.   அஸ்வினி: இந்த மாதம் குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். உங்களது கருத்துக்களுக்கு மாற்று கருத்துக்கள் இருக்காது. கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகளின் செயல்பாடுகள் மனதிருப்தியை தரும். வேடிக்கை வினோதங்களை கண்டு களிக்கும் சூழ்நிலை ஏற்படலாம். தொலைதூர தகவல்கள் மன மகிழ்ச்சியை தருவதாக இருக்கும். பயணங்களால் சாதகமான பலன் கிடைக்கும்….

Continue Reading

ஆடியில் எந்த அம்மனை வணங்கினால் பிரச்னைகள் தீரும்?

தமிழ் மாதங்கள்டிசம்பர் மாத பலன்கள் (மேஷம் – கன்னி)ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்புகள் உள்ளன. எனினும் இவை அனைத்தைக் நன்றி Hindu மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 27)

உடல் எடை குறைக்க – ஜோதிட சூட்சுமங்களும் பரிகாரமும்!

ஒரு மனிதன் என்றும் இளமையாக, திடமாக, ஆரோக்கியமாக இருக்க உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், புரதம், கார்போஹைட்ரேட்கள், தாது உப்புகள், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கொழுப்பு, சர்க்கரை  சரியான விகிதாச்சாரத்தில் இருக்க வேண்டும். முக்கியமாக இவற்றில் கெட்ட கொழுப்பை அதிக்கப்படுத்தும் கார்போஹைட்ரேட் உணவுகள் உண்ணுவதால் உடல் பருமன் கூடும். உடல் எடை கூடுவதால் மனம் மற்றும் உடலில் சுலபமாக நோயின் தாக்கம் ஏற்படுத்தும். இதனால் ஒருவர் எந்த செயலையும் சீராக செய்ய முடியாது. ஆண்களை விட பெண்களுக்குகே இந்த பிரச்னை அதிகம் ஏற்படுத்தும். உடலில் முக்கியமாகப் பெருத்த வயிறு என்பது நோயின் தாக்கம் அதிகமாகும். ஜோதிட ஆராய்ச்சியில் ஒருவரின் உடல் பருமனாக இருக்க கிரகங்களோடு பாவங்களையும் பார்ப்போம். உடல்வாகு, நிறம், குணம் அனைத்தும் லக்கினாதிபதி மற்றும் அங்குள்ள கிரகங்களைக் கொண்டு சொல்லப்படும். அவற்றில் உடல் என்று கூறப்படும் சந்திரன் அதி முக்கியமாகும். இந்த பிரபஞ்சத்தில் சந்திரன், சுக்கிரன் ராகுவின் கலியாட்டத்தில் ஒருவருக்கு பேராசை, பணம் மற்றும் ஆடம்பர மோகத்தில் உடலின் ஆரோக்கியத்தைத் தவற விட்டுவிடுகிறோம். இலை போட்டு நிதானமாக வீட்டுச் சாப்பாட்டைச் சாப்பிடும் காலம் போய், நின்றபடியே பரோட்டா, பர்கர், பக்கெட் பிரியாணி, பானிபூரி என்று காலம் தவறி சாப்பிடுவது என்பது வழக்கமாகிவிட்டது. படிக்க: ஜோதிட ரீதியான பரிகாரங்களை எப்போது செய்ய வேண்டும்? இந்த கலிகாலத்தில் சிலசமயம் ஜாதகரின் கிரகங்களின் செயலையே திணற வைக்கிறது. ஒருசிலரே தங்கள் உடல் சீராக இருக்க BMI (உடல் நிறை குறியீட்டெண்), சரியான முறையில் வைத்திருப்பார்கள். ஜாதகத்தில் கட்டுக்கோப்பாக இருந்தாலும் இடத்திற்கு ஏற்ப உணவு பழக்கவழக்கத்தில், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தங்கள் உடல் பருமனாக மாறுபடும். முக்கியமாக திருமணம் ஆன பெண்கள், குழந்தை பெற்ற பெண்கள் எளிதில் உடல் பருமனை நோக்கிச் சென்றுவிடுகிறார்கள். இது அவரவர் தசை புத்திக்கு ஏற்ப மாறுபடும். குரு எங்கு தொடர்பு கொள்ளுகிறாரோ அங்கு உள்ள பாவ அடிப்படையில் அந்த பாகம் மட்டும் பெருத்துக் காணப்படும். ஓபிசிட்டி எதனால் என்று ஆராயும்பொழுது ஒரே நாற்காலியில் ஸ்திரமாக அமர்ந்து வேலை செய்வது, உணவுப் பழக்கம், சரியான தூக்கமின்மை, மரபணு முறைப்படி, திருமணத்திற்குப் பிறகு ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மை என்று பல்வேறு வகையில் பிரிக்கப்படுகிறது. நீர் கிரகங்களான சந்திரன் சுக்கிரன் மற்றும், குரு (கொழுப்பு கிரகம்) அவற்றோடு ராகு சேரும்பொழுது அதிகப்படியான உடல் வளர்ச்சியை ஏற்படுத்தும். பஞ்ச பூதத்தில் உள்ளடங்கிய நீர் மற்றும் ஆகாய தத்துவ கிரகங்களின் காரகத்துவத்தை கட்டுப்படுத்தினால் உடலின் அளவு குறைக்கப்படும். உடலுக்கு ஏற்ப வெப்ப கிரகங்களான சூரியன் செவ்வாயின் உஷ்ணத்தால் நீர் வெளியேறும்பொழுது உடல் எடை குறைக்கப்படலாம். அதாவது சூட்டு தன்மை கொண்ட உணவு வகைகளுடன், பச்சைக் காய்கறிகள், நல்ல கொழுப்பு கொண்ட உணவுகள், இயற்கை சர்க்கரை கொண்ட காய்கறிகளை உட்கொள்ளலாம். உடல் கட்டுக்கோப்பாக இருக்க சனி மற்றும் கேது கிரக செயல்களும் உதவியாக இருப்பார்கள். அதாவது இரும்பு பொருள்களை கொண்டு உடற்பயிற்சி, தியானம்/யோகா, சமபங்கு தூக்கம் என்று அனைத்து…

Continue Reading

டிசம்பர் மாத பலன்கள் (மேஷம் – கன்னி)

டிசம்பர் மாத பலன்களை தினமணியின் இணையதள ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். (மேஷம் முதல் கன்னி வரை) மேஷம் (அஸ்வினி, பரணி,  கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை: ராசியில்  குரு (வ) –  ரண ருண ரோக  ஸ்தானத்தில் கேது –  களத்திர  ஸ்தானத்தில் சுக்ரன் –  அஷ்டம  ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் –  பாக்கிய ஸ்தானத்தில் புதன் –  தொழில்  ஸ்தானத்தில் சனி –  அயன சயன போக  ஸ்தானத்தில் ராஹூ  என கிரக நிலைகள் உள்ளன. கிரகமாற்றங்கள்: 02-12-2023 அன்று புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். 16-12-2023 அன்று சூர்ய பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 20-12-2023 அன்று சனி பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 25-12-2023 அன்று சுக்ர பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 27-12-2023 அன்று செவ்வாய் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இந்த மாதம் நீங்கள் ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மருத்துவம் சார்ந்த செலவுகள் குறையும். அடுத்தவர்களுக்கு உதவும் முன் யோசித்து செயல்படுங்கள். மூன்றாம் மனிதர்களின் தலையீட்டால் பிரச்சனைகள் சுமூகமாக முடியும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் நீங்கும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாடிக்கையாளர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தரும். வியாபார ஸ்தலத்திற்காக புதியதாக இடம் வாங்குவீர்கள்.  உத்தியோகத்தில் கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டி இருக்கும். இருப்பினும் நற்பெயர் கிட்டும்.  மேலதிகாரிகளிடம் உங்களது மீதான நல்ல எண்ணங்கள் மேலோங்கும். பணி நிமித்தமாக பயணங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகள் விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உறவினர்கள் வருகை இருக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுடன் பேசும் போது வார்த்தைகளை கோர்த்து பேசுவது முக்கியம். பெண்களுக்கு சமையல் செய்யும் போது கவனம் தேவை. மற்றவர்களுக்கு உதவப்போய் வீண் பிரச்சனை உண்டாகலாம். கவனம் தேவை. அரசியல் துறையினருக்கு பெயர், புகழ், கௌரவம் யாவும் தேடி வரும். மக்களின் ஆதரவைப் பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. உங்கள் பேச்சிற்கு மதிப்பும், மரியாதையும் உயரும். கலைத்துறையினருக்கு திறமைக்கேற்ற கதாபாத்திரங்கள் கிடைக்கப்பெற்று ரசிகர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். இதுவரை நிலுவையிலிருந்த பணத்தொகைகளும் கைக்கு கிடைக்கும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாக அமையும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக செல்வது நல்லது. அஸ்வினி: இந்த மாதம் பணவரத்து இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்க தூண்டும்….

Continue Reading

இந்த ராசிக்காரர்கள் கடன்களிலிருந்து விடுபடும் காலகட்டமிது: அக்டோபர் மாதப் பலன்கள்

12 ராசி அன்பர்களுக்கும் அக்டோபர் மாத பலன்களை தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார்.  மேஷம்(அஸ்வினி, பரணி,  கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராஹூ – ரண ருண ஸ்தானத்தில் புதன் (வ), செவ்வாய், சூர்யன் – களத்திர ஸ்தானத்தில் சுக்கிரன் – அஷ்டம ஸ்தானத்தில் கேது – தொழில் ஸ்தானத்தில் சனி, குரு (வ) என கிரகநிலை உள்ளது. 3ம் தேதி – ஞாயிற்றுக்கிழமை அன்று சுக்கிர பகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திற்கு மாறுகிறார். 4ம் தேதி புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். 14ம் தேதி குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். 18ம் தேதி சூர்ய பகவான் சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 23ம் தேதி செவ்வாய் பகவான் சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 30ம் தேதி புதபகவான் சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 31ம் தேதி சுக்கிர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். இந்த மாதம் மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். மனகவலை குறையும். எல்லாவகையிலும் சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள்.சற்று கூடுதலாக எதிலும் கவனம் செலுத்துவது நல்லது.  திடீர் செலவு உண்டாகலாம். திட்டமிட்டபடி செல்ல முடியாமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். எந்த காரியத்தையும் யோசித்து செய்வது நன்மை தரும். அதிக கவனம் உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும் என்ற தன்னம்பிக்கை ஏற்படும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி வரும். அலுவலக வேலைகள் உடனே முடியாமல் இழுபறியாக இருக்கும். குடும்பத்தில் வெளிநபர்களால் ஏதாவது குழப்பம் ஏற்படலாம். சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளை கேட்பதை தவிர்ப்பது நல்லது.  கணவன், மனைவி ஒருவருக் கொருவர் மனம் விட்டு பேசுவதன் மூலம் இடைவெளி குறையும். பிள்ளைகள்  நலனுக்காக செலவுகள்  செய்ய வேண்டி இருக்கும்.   பெண்கள் எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பாராமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். அதனால் வெளியூர் பயணங்களைத் தள்ளிப்போடுவது நல்லது. கணவனின் உடல்நலத்தில் கவனம் தேவை. பிள்ளைகள் உங்கள் சொல்படி நடந்து கொள்வார்கள். உங்கள் புத்திக்கூர்மை உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். வியாபாரிகள் போட்டிகளையும், பொறாமைகளையும் சந்தித்தாலும் பொறுமையுடன் செயல்பட்டு அவற்றைச் சமாளிப்பீர்கள். உங்களின் சமயோஜித புத்தியால் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்வீர்கள். அரசியல்வாதிகள், தாங்கள் சார்ந்துள்ள கட்சியின் தொண்டர்களுக்கும், நெருங்கியவர்களுக்கும் மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். மேலிடத்திலிருந்து உங்களுக்கு சந்தோஷமான செய்திகள் வந்து சேரும். கலைத்துறையினர் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். வருமானம் நன்றாக இருப்பதால் ரசிகர்களுக்காகச் செலவு செய்வீர்கள். சக கலைஞர்களால் நன்மை அடைவீர்கள். புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் மேன்மை அடைய கூடுதல்  கவனத்துடன்  படிப்பது அவசியம். விளையாடும் போதும் கவனம் தேவை.   பரிகாரம்: குலதெய்வத்தை பூஜித்து வணங்க குடும்ப பிரச்சனை தீரும். கடன் கட்டுக்குள் இருக்கும். முடிந்தால்…

Continue Reading

இந்த ராசிப் பெண்கள் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது நல்லது: செப்டம்பர் மாத பலன்

12 ராசி அன்பர்களுக்கும் செப்டம்பர் மாத பலன்களை தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார்.  மேஷம் கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராஹூ – பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் – ரண ருண ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் – அஷ்டம ஸ்தானத்தில் கேது – தொழில் ஸ்தானத்தில் சனி (வ) – லாப ஸ்தானத்தில் குரு (வ) என கிரகநிலை உள்ளது. இம்மாதம் 06ம் தேதி சுக்கிர பகவான் சப்தம களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். இம்மாதம் 07ம் தேதி செவ்வாய் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார். இம்மாதம் 13ம் தேதி புத பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் வக்ரம் ஆரம்பம். இம்மாதம் 14ம் தேதி குரு பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். இம்மாதம் 17ம் தேதி சூர்ய பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார். இம்மாதம் 27ம் தேதி சனி பகவான் தொழில் ஸ்தானத்தில் வக்ர நிவர்த்தி அடைகிறார். பலன்: கடின உழைப்பினால் வாழ்க்கையில் முன்னேறும் மேஷ ராசியினரே உங்களுக்கு திடீரென்று  வரும் கோபத்தை கட்டுப்படுத்தினால் வெற்றி நிச்சயம். இந்த மாதம் புத்திக் கூர்மையுடன் செயல்களை செய்து எதிலும் வெற்றி பெறுவீர்கள். வசதிகள்  அதிகரிக்கும். மதிப்பும், மரியாதையும் கூடும். ஆனால் வீண் செலவுகள் உண்டாகும். மனதுக்கு பிடிக்காத இடத்திற்கு சென்று வரவேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பாக பயணங்கள் சென்று வரவேண்டி இருக்கும். வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திப்பார்கள். குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகலாம் கவனம் தேவை. மேலும் அறிந்துகொள்ள.. இதைச் செய்யாமல் விட்டால் குழந்தையின் ஆதார் செல்லாததாகிவிடும் குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே தேவையற்ற மன வருத்தம் உண்டாகலாம் கவனம் தேவை. மருத்துவம் தொடர்பான செலவும் ஏற்படலாம். ஆயுதம், நெருப்பு ஆகியவற்றை கையாளும் போது கவனமாக இருப்பது நல்லது. அரசியல்வாதிகள், தாங்கள் சார்ந்துள்ள கட்சியின் தொண்டர்களுக்கும், நெருங்கியவர்களுக்கும் மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். மேலிடத்திலிருந்து உங்களுக்கு சந்தோஷமான செய்திகள் வந்து சேரும். கலைத்துறையினர் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். வருமானம் நன்றாக இருப்பதால் ரசிகர்களுக்காகச் செலவு செய்வீர்கள். சக கலைஞர்களால் நன்மை அடைவீர்கள். புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் மேன்மை அடைய கூடுதல்  கவனத்துடன்  படிப்பது அவசியம். விளையாடும் போதும் கவனம் தேவை. பெண்களுக்கு புத்தி கூர்மையுடன் செயல்பட்டு காரியங்களை வெற்றி கரமாக செய்து முடிப்பீர்கள். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு சக மாணவர்களுடன் பழகும்போது கவனம் தேவை. கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது. அஸ்வினி: இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள்  அவசரப்படாமல் நிதானமாக பணிகளை கவனிப்பது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு மனவருத்தங்கள் ஏற்படும் வகையில் சூழ்நிலை இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் முன்னேற்றத்தில் தடை தாமதம் ஏற்படலாம்…

Continue Reading

குரு பெயர்ச்சி – 2021 பொதுப் பலன்கள்

2021ஆம் ஆண்டு நடைபெறும் குரு பெயர்ச்சி தொடர்பான பொதுப் பலன்களை ஜோதிடர்  கே.சி.எஸ். ஐயர்  கணித்து வழங்கியுள்ளார். இந்த பிலவ வருஷம் தட்சிணாயனம் சரத் ருது கார்த்திகை மாதம் 4-ஆம் தேதி (20.11.2021) சனிக்கிழமை, கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) துவிதியை திதி, கடக லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம், அமிர்த யோகம் கூடிய சுபயோக சுபதினத்தில், உதயாதி 44 நாழிகை அளவில் இரவு 11.28 மணிக்கு சூரிய பகவானின் ஹோரையில், அவிட்டம் நட்சத்திரம் 2-ஆம் பாதத்திலிருந்து அவிட்டம் நட்சத்திரம் 3-ஆம் பாதத்திற்கு அதாவது “பிரகஸ்பதி’ என்கிற தேவர்களுக்கு ஆசானாகிய குரு பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்குப் பெயர்ச்சியாகிறார்.  இதையும் படிக்கலாமே.. குரு பெயர்ச்சி: மேஷம், ரிஷபம், மிதுனம், கடக ராசிகளுக்கான பலன்கள் இங்கு 12. 04. 2022 வரை சஞ்சரித்துவிட்டு 13. 04. 2022 அன்று பிற்பகல் 03.48 (ஐஎஸ்டி) மணி அளவில் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். கடக லக்னத்திற்கு லக்னாதிபதியான சந்திர பகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் சுய சாரத்தில் (ரோகிணி நட்சத்திரம்) உச்சம் பெற்றமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். இதனால் லக்னாதிபதி உயர்ந்த ஸ்தான பலத்தைப் பெறுகிறார் என்று கூறவேண்டும்.  லக்னாதிபதி பலம் பெற்றிருப்பதால் மற்ற கிரகங்களுக்கு அமைகின்ற யோகங்கள் பரிமளிக்கும் என்பது ஜோதிட விதி. லக்னத்திற்கோ அல்லது ராசிக்கோ கேந்திர தானங்களில் (1, 4, 7, 10) சுபக் கிரகங்கள் இருப்பது சிறப்பாகும்.  “”சந்திரமா மன5ஸோ ஜாத” அதாவது தேவர்கள் முதலான அனைவருக்கும் மனமாக இருப்பவர் என்று வேதம் உரைக்கிறது. அதோடு அவரே தனு (உடல்) காரகருமாகிறார். அதனால் சந்திர பகவான் நம் மனித உடலையும், மனதையும் ஆட்டுவிப்பவர் என்றால் மிகையாகாது.  நவகிரகங்களில் சூரிய பகவானுக்கு அடுத்த நிலையில் இருப்பவர். சிவபெருமானின் வலது கண் சூரியன்; இடது கண் சந்திரன்; நெற்றிக்கண் செவ்வாய் பகவான் ஆவதால், எந்த ஒரு ஜாதகத்திலும் இம்மூவரின் இணைவு “திரிநேத்ர யோகம்’ என்றழைக்கப்படுகிறது. பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் (கடக லக்னத்திற்கு யோக காரகர் என்கிற அந்தஸ்தில் இருப்பவர்) சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் குரு பகவானின் சாரத்தில் (விசாகம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் மூலத்திரிகோண ராசியான மேஷ ராசியை அடைகிறார். அதோடு சுக ஸ்தானத்திலமர்ந்து தொழில் ஸ்தானத்தைப் பார்வை செய்வது சிம்மாசன யோகமாகும்! இதனால் சந்தான (குழந்தைகள்) அபிவிருத்தி, திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளும், தன தானிய லாபமும், அனைத்துச் செயல்களும் விரைவாக நிறைவேறுதல் ஆகியவை உண்டாகும்.  பத்தாமதிபதி, ஒன்பதாமதிபதியின் சாரத்திலமர்வதும் தர்மகர்மாதிபதி யோகத்தின் சாயலையும் கொடுக்கிறது. வம்பு வழக்குகளிலும் எதிர்பாராத வெற்றியுண்டாகும். மனித நேயத்துடன் சமுதாயத் தொண்டுகள் செய்து, பெயர் புகழ் அடையும் யோகமுண்டாகும்!  மேலும் எப்படிப்பட்ட நெருக்கடிகள் ஏற்பட்டாலும் அதை எதிர்கொண்டு சமாளிக்கும் ஆற்றலும் துணிவும் ஏற்படும் என்றால் மிகையாகாது.  ருணம் (கடன்), ரோகம் (வியாதி),…

Continue Reading

வரத்தை அருளும் அம்மன்

ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர், வீரராம்பட்டினத்தில் வீரராகவச் செட்டியார் என்ற மீனவர் வசித்துவந்தார். ஒருநாள் வழக்கம்போல் மீன் பிடிக்க இவர் அருகேயுள்ள செங்கழுநீர் ஓடைக்குச் சென்றார். நெடுநேரம் வலை வீசியும் மீன்கள் சிக்கவில்லை. மனம் வெறுத்த வீரராகவச் செட்டியார் கடைசியாக ஒருமுறை முயற்சி செய்தபோது, பெரிய மீன் சிக்கியதற்கான அறிகுறி தென்பட்டது. அவர் வலையைக் கரைக்கு இழுத்து வந்து பார்த்தபோது, சிக்கியது மிகப் பெரிய மரக்கட்டையாக இருந்தது. அதை அவர் தன் வீட்டுத் தோட்டத்தில் கொண்டுவந்து சேர்த்தார். நாள்கள் கடந்தன. ஒருநாள் அடுப்பெரிக்க வீரராகவச் செட்டியாரின் மனைவி கொல்லைப் புறத்தில் கிடந்த மரக்கட்டையை கோடாரியைக் கொண்டு பிளக்க முயன்றார். அப்போது, மரத்தில் ரத்தம் பீறிட்டது. வீடு திரும்பிய வீரராகவச் செட்டியார் அந்த மரக்கட்டையைத் தன் வீட்டில் உள்ளே வைத்து வழிபட்டு வந்தார். அப்போது, அவரின் வாழ்வில் மகிழ்ச்சியும், வளமும் ஏற்பட்டது. ஒருநாள் இரவு வீரராகவச் செட்டியாரின் கனவில் அம்மன் வந்து, “ரேணுகாதேவியான நான் இங்கே குடியேற வந்துள்ளேன். இதற்காகவே மரக்கட்டையை உன்னிடம் வந்து சேர்ந்துள்ளது. இந்த மரக்கட்டையை நான் குறிப்பிடும் இடத்தில் நிறுவி, அதன்மீது என் திருவுருவை விக்கிரகத்தால் பிரதிஷ்டை செய்து வழிபடு. அந்த இடம் பல்லாண்டு காலம் சித்தர் வழிபட்டு வரும் சித்தர் பீடமாகும். என்னை “செங்கழுநீர் அம்மன்’ என்ற திருப்பெயரில் அழைக்கலாம்”, என்றார்.எனக்கு எப்போது தான் திருமணம் நடக்கும்? மறுநாள் அவர் ஊர் மக்களுடன் சேர்ந்து, குறிப்பிட்ட இடத்தைத் தேடினர். அப்போது புதர்கள் அடர்ந்த பாம்புப் புற்றில் வெளிப்பட்ட பெரிய நாகம் படம் விரித்து ஆடி மூன்று முறை பூமியில் அடித்து இடத்தை அடையாளம் காட்டி மறைந்தது. அந்த இடத்தை சுத்தம் செய்து, கோயில் அமைக்கப்பட்டது. புதுச்சேரியின் தொன்மைக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் அரிக்கமேடு அருகே இந்தக் கோயில் அமைந்துள்ளது. வேண்டிய வரத்தை அருளும் செங்கழுநீர் அம்மனை புதுச்சேரி, தமிழ்நாடு மட்டுமின்றி, வெளிமாநில பக்தர்களும் வழிபட்டு செல்கின்றனர். ஆடி வெள்ளிக் கிழமைகளில் கோயில் விழாக்கோலம் பூண்டிருக்கும். ஐந்தாம் வெள்ளியன்று நடைபெறும் தேர்த் திருவிழாவை புதுவை துணை நிலை ஆளுநரும், முதல்வரும் இணைந்தே தொடங்கிவைப்பது, பிரெஞ்சு ஆட்சியாளர்கள் காலத்தின்போது தொடங்கிவைக்கப்பட்டது. இன்றும் தொடர்கிறது. நன்றி Hindu இந்துமத அற்புதங்கள் 52 – அற்புதங்கள் சாத்தியமா?

வருமானத்தை நிர்ணயிக்கும் ஜாதகம்: சொந்தத் தொழிலா? அடிமைத் தொழிலா? அறியலாம்

மனிதனின் முக்கிய தேவைகளை பூர்த்தி செய்ய வருமானம் அவசியம் தேவை. வருமானம் வரும் பாதை இரண்டு உள்ளது. அவை உழைப்பால்  வரும் வருமானம். மற்றொன்று  உழைக்காமல் வரும் வருமானம். ஒருவன் என்னதான் உழைத்தாலும் பணம் சம்பாதிக்க முடியாது, மற்றும் சிலருக்கு உழைக்காமல் வரும் வருமானம் தொடர்ந்து  வந்துகொண்டே இருக்கும், மற்றும் சிலர் ஒரு  குறிப்பிட்ட கால அளவிற்கு உழைப்பு இருக்கும் பின்பு சீர்பட்டு ஒரு கணிசமான வருமானம் நிரந்தரமாகும். வருமானம் என்றவுடன் ஜோதிடத்தில் 2ம் பாவத்தையும், தொழில் அதனால் ஏற்படும் லாபம் கலந்த திருப்தி 10ம் பாவத்தைத் தொடர்ந்து 11ம் பாவத்தையும் குறிப்பிடும்.  இவற்றில் சொந்த தொழிலா,  அடிமை தொழிலா என்பது வெவ்வேறு பாவங்கள் கூறும். வருமானம் எந்த வழியில் வரும் என்பது அவரவர் கர்மாவை பொறுத்து அமையும்.  வருமானம் என்று சொல்லும்போது உழைப்பாள்  வரும் வருமானம், தந்தை அல்லது  பரம்பரை சொத்து மூலம் வருமானம், மனைவி வழியில் வருமானம், சேமிப்பு மூலமாகவோ, வட்டி, வாடகை வழியாகவோ – ஜோதிட வாயிலாக ஆராய்ந்து சொல்லலாம்.  இவற்றில் இரண்டாம் பாவத்தில் உள்ள கிரகம் அல்லது அந்த பாவத்தில் அதிபதி  முக்கிய பங்கு வகிப்பார்.  இரண்டாம் அதிபதி ஆட்சியோ, உச்சமோ பெற்று சுபத்துவம் பெற்றால் மற்றும் ராகு சம்பந்தம் பெற்றால் பல்வேறு (multiple) வழியில் வருமானம் இருக்கும். இவற்றில் வருமானம் என்ற 2ம் பாவம் மட்டும் முக்கிய பங்கு வகிக்கவில்லை, அவற்றோடு 10ம் பாவம், புதன், சனி சம்பந்தம் பெறவேண்டும். கூட்டு தொழிலோடு ஒப்பிடும் பொழுது 7ம் பாவமும், மாற்றவரிடம் வேலை பற்றி சொல்லும்பொழுது 10, 6ம் பாவம் தொடர்பு பெறவேண்டும். பாட்டன் சொத்து வருமானம் என்ற பொழுது திரிகோண அதிபதிகள் இரண்டாம் பாவத்துடன் தொடர்பு பெறவேண்டும். இரண்டாம் பாவத்தை பற்றி பேசும்பொழுது நிறைய காரகத்துவம் உண்டு. ஆனால் நாம் இன்று பார்ப்பது பேச்சு தன்மையால் வருமானம் ஈட்டும் ஜோதிட சூட்சமங்களைப்  பார்க்கலாம். எடுத்துக்காட்டாக ஜோதிடத்தில் இரண்டாம் பாவத்தில் வாக்கு, பேச்சு, ஆசிரியர், உணவு, குடும்பம் என்று சொல்லும் இடம். அந்த பாவம் பலம் பெற்றால்  பேச்சால் வருமானம் ஈட்டுவார் (உதாரணமாக.. பேச்சாளர், ஜோதிடர், விற்பனைப் பிரதிநிதி போன்றோர்).  நிறந்தர வருமானம் என்று சொன்னால் இரண்டோடு மற்றும் பூர்வபுண்ணியம் மற்றும் காரியத்திற்குரிய கர்மா, லக்கின சுபாரோடு  செயல் படவேண்டும். இது தவிர இன்னும் ஆழமாக போனால் முக்கிய நிபுணர் என்று உள்ளது. அது எந்தத் துறை என்பது 2, 10ம் பாவத்தின் சாரநாதன் கொண்டு முடிவு பெரும். பத்து மற்றும் இரண்டாம் பாவ தொடர்பு கொண்டால் பேச்சால் வருமானம் ஈட்டுபவர். உதாரணமாக தொகுப்பாளர், ஜோதிடர், மார்க்கெட்டிங், பேச்சாளர்கள், கலைத்துறை, உணவு துறை, முகம் சார்ந்த ஒப்பணை என்று அடுக்கி கொண்டு போகலாம். இவற்றில் அரசியல் பேச்சும், குடும்பத்தின் மூலம் வருமானம், வட்டி தொழில்,  கண் மற்றும் முகம் சார்ந்த தொடர்பு கொண்ட செயல் மூலம் வருமானம் இருக்கும். இரண்டாம் பாவம்…

Continue Reading

அனைவராலும் முதலாளி ஆக முடியுமா? ஜோதிட சூட்சுமங்கள் என்ன?

  இன்றைய கால கட்டத்தில் அனைவருக்கும் தொழில் என்பது மிக மிக அவசியமான ஒன்று. சங்க கால பாடலுக்கு ஏற்ப “வினையே ஆடவருக்கு உயிரே, மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்’  (குறுந்தொகை- 135).- ஒரு சோம்பல் இல்லா ஆண் மகனுக்கு தொழில்தான் உயிர். இல்லத்தில் வாழும் பெண்களுக்கு கணவனே உயிர் என்று கூறப்படுகிறது.  இந்த பாடலில் ஒருவனுக்கு தொழில் அவசியத்தை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சொல்லப்பட்ட உண்மை. அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப தொழில் அமைவது என்பது கொஞ்சம் கடினமே. ஒரு சிலருக்கு மட்டும் சந்தோஷமான நிறைவான வேலை  அமையும் அது அவர்களின் பாக்கியமாகும். சிலசமயம் வேலை பிடிக்காமல் அவர்கள் செய்யும் வேலையை விட்டு,  சொந்த தொழில் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அதில் சொற்பமானவர்கள் மட்டுமே மேலே வர முடியும். முக்கியமாக ஒரு மனிதனுக்கு முதலாளி என்ற சொல்லை கேட்டாலே ஒருவித  பரமானந்தமே.   ஒருவருக்கு கொடுப்பனை இருந்தால் மட்டுமே தொழில் செய்து முதலாளியாக இருப்பார்கள். அவரவர் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் கூட்டமைப்பு மற்றும் பலத்தை கொண்டு  சரியான தொழில் துறையை தேர்ந்தெடுத்து வெற்றி பெறவேண்டும். ஒன்று மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்களின் சேர்க்கை மற்றும் 1,10ம் பாவத்தோடு தொடர்புகொண்டு  அவர்களின் தொழில்களின் பிரிவுகள்  அமையும்.  எடுத்துக்காட்டாக: தொடர்பான அனைத்து துறையும் அவற்றில் முக்கியமாக இனிப்பு கடை அல்லது உணவகம் அல்லது சமையல் ஒப்பந்ததாராக தொழில் செய்ய- இரண்டாம் பாவத்துடன் சந்திரன், சுக்கிரன் சுப தன்மையுடனும், அவற்றோடு நெருப்பு சம்பந்தப்படுவதால் செவ்வாய் பகவானின் உதவியும் தேவை. அதேபோல் தையல் துறை தேர்ந்தெடுப்பவருக்கு துணி, தையல் மிஷின் என்றவுடன் சுக்கிரன், செவ்வாய் பலம் பெறவேண்டும். அடுத்த முக்கிய கிரகமான குரு என்பவர் பணம் புழக்கமுள்ள துறை தொடர்பு கொண்டவர். குரு ஆதிக்கம் பெற்றவர்கள்  கௌரவமான தொழில், நீதி நேர்மைக்கு உரிய முதலாளியாக இருப்பார். எ.க. பணம் சம்பந்தப்பட்ட துறை, சட்ட நீதித் துறை, ஜோதிட ஆன்மீக ஆராய்ச்சி, தங்க கட்டிகள் விற்பனை (ஆபரண நகையாக விற்க சுக்கிரன் உதவி தேவை) என்று அடுக்கிக்கொண்டு போகலாம். எந்த துறையாக இருந்தாலும் சனி+புதன் கிரகங்களின் பலம் மிக மிக அவசியம் தேவை. ஒருவரின் ஜாதகத்தில் உள்ள  கிரகங்களின் பலம் கொண்டு அவரவர் தொழில் துறையைப்  பிரித்துச் சொல்ல முடியும். முதலாளியாக மாறுவது எப்படி? முதலாளியாக மாறுவது அவரவருக்கு ஏற்படும் ஒருவித மோகம், பாட்டன் மற்றும் மாமனார் வழி தொடர்பான தொழில் என்று சொந்த தொழிலில் கட்டாயம் செய்ய வைத்துவிடும். பொதுவாக  ஒரு சிலருக்கு படிக்கும்பொழுதே தன்னுடைய செலவுக்கு யாரிடமும் நிற்காமல் இருக்க பகுதிநேர சிறு தொழிலை தனித்தோ அல்லது நண்பர்கள் உடனோ ஆரம்பிப்பார்கள். அதில் ஒரு சிறு பகுதி வெற்றி கண்ட பிறகு அந்த வேலையின் மீது ஒரு மோகம் மற்றும் முதலாளி என்ற சந்தோஷத்தில் அந்த தொழிலில் ஈர்ப்பு அதிகப்படுத்திவிடும். அவர்கள் படித்து முடித்தவுடன் அதே தொழிலை முழுநேரமாக தொடர்ந்து செய்ய…

Continue Reading

அவதாரம்! குறுந்தொடர் 6

ராமானுஜரைப் பிரிந்து தமது சீடர்களுடன் காசிக்குச் சென்ற யாதவப் பிரகாசர் கங்கையில் நீராடிக்கொண்டு இருந்தபோது மந்திர சித்து வேலைகள் மூலம் கங்கையில் நீராடிய     கோவிந்தபட்டர் கையில், தீர்த்தத்தோடு ஒரு லிங்கம் வரும்படி செய்தார். கையில் சிவலிங்கத்தைக்கண்ட கோவிந்த பட்டர் ஆசானிடம் காட்டினார். யாதவரும் கங்கையில் நீராடின பலன் உனக்கு கைமேல் கிடைத்தது. நீ இனிமேல் இவரைத் தான் தினமும் பூஜித்துவர வேண்டும். இன்று முதல் உனக்கு "உள்ளங்கை கொணர்ந்த நாயனார்’ என்கிற பெயர் வழங்கும் என வாழ்த்தினார். குரு வார்த்தைக்குக் கட்டுப்பட்டு கோவிந்த பட்டரெனும் ஸ்ரீ வைணவ மாணவனும் அவர் சுட்டிய வழியில் தினமும் சிவலிங்கத்தை பூசை செய்யத் துவங்கினார். சில நாள்களில் காசியிலிருந்து விட்டு கச்சிக்குத் திரும்பிவரும் கோவிந்த பட்டரான உள்ளங்கை கொணர்ந்த நாயனார், யாதவப் பிரகாசர் அனுமதியோடு தமது ஊரான மதுரமங்கலம் சென்று லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜித்து வந்தார். பின்னர், அவர் கனவில் காளஹஸ்திநாதன் தோன்றி கூறியபடி, காளஹஸ்திக்குச் சென்று சிவபூஜை செய்யத் துவங்கினார். காசியாத்திரை சென்ற மகன் இளையாழ்வார் தனியாக வீடு திரும்பியது கண்டு அன்னை காந்திமதி நடந்தவை கேட்டறிந்தாள். ஸ்ரீ வரதராஜன் சந்நிதியில் பணியில் ஈடுபட்டிருந்த திருக்கச்சி நம்பியை அழைத்து வந்து, அவரிடம் ராமானுஜரை காத்தருளும்படி ஒப்படைத்தாள். யாதவரின் சதிச்செயல் குறித்து ராமானுஜர் யாரிடமும் வெளியிடவில்லை. பூவிருந்தவல்லியில் பிறந்த வைசியர் திருக்கச்சி நம்பி ஆளவந்தாரின் சீடர். காஞ்சி அருளாளனிடம் அளவற்ற அன்புள்ளவர் அவருக்கு ஆலவட்டம் வீசும் (விசிறி) கைங்கர்யம் செய்து வந்தார். இறைவனோடு எப்போதும் தனித்து நெருங்கியிருப்பதால் அந்தரங்கத்தில் அருளாளனுடன் அளவளாவும் தகுதி உள்ளவர். பலரும் வரதனோடு பேசுபவர் என்று உணர்ந்து அவரை மதித்துப் போற்றினர். திருக்கச்சி நம்பியின் தொடர்பால் ராமானுஜர் பகவத் கைங்கர்யச் சுவையைக் கண்டார். குரு யாதவப் பிரகாசரை விஞ்சிய ஞானமுடையவர் ராமானுஜர் எனும் புகழ் எங்கும் பரவியிருந்தது. பூவிருந்தவல்லியை அடுத்த பேட்டை என்று அழைக்கப்படும் பச்சை வாரணப் பெருமாள் கோயில் தலத்தில் ராமானுஜரின் சகோதரிக்கு, தாசரதி என்ற ஒரு மைந்தர் இருந்தார். காஞ்சிக்கு அருகில் கூரம் என்னும் ஊரில் செல்வச் சீமானாய் வாழ்ந்து வந்த ஸ்ரீவத்ஸாங்கர் என்னும் கூரத்தாழ்வானும் ராமானுஜரின் சீடர்களானார்கள்.  கி.பி. 1037 -ஆம் ஆண்டு ஸ்ரீரங்கத்திலிருந்து அருளாளனைத் தரிசிக்க நாத முனிகளின் பேரனும், ஸ்ரீ வைணவ உலகின் பரமாசார்யராக விளங்கியவருமான யாமுனமுனி என்னும் ஆளவந்தார் காஞ்சிக்கு வந்தார். அவர் ராமானுஜரைப் பற்றி கச்சி நம்பியிடம் கேட்டறிந்து ராமானுஜரை நேரில் காணவும் ஆவல் கொண்டார். கோயிலில் யாதவப் பிரகாசர் தம் சீடர்களோடு வரதனை தரிசனம் செய்து வலம் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த திருக்கச்சி நம்பி, ஆளவந்தாரிடம் ராமானுஜரைச் சுட்டிக்காட்டினார். ஆளவந்தாரும் ராமானுஜரைக் கண்டு உளம் உவக்க வாழ்த்தி வைணவத்தின் எதிர்காலத்தில் நம் தரிசன நிர்வாகத்துக்கு இவரே ஏற்றவர் என அறுதியிட்டு, கச்சி நம்பியிடம் விடை கொண்டு ஸ்ரீரங்கம் விரைந்தார். கி.பி. 1038 -ஆம் ஆண்டு காஞ்சியில் அந்நாட்டு அரசனின்…

Continue Reading

டிசம்பர் மாத பலன்கள் (துலாம் – மீனம்)

டிசம்பர் மாத பலன்களை தினமணியின் இணையதள ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். (துலாம் முதல் மீனம் வரை) துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்) கிரகநிலை: ராசியில்  சுக்ரன் –  தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் –  தைரிய வீரிய  ஸ்தானத்தில் புதன் –  சுக  ஸ்தானத்தில் சனி –  ரண ருண ரோக  ஸ்தானத்தில் ராஹூ  – களத்திர  ஸ்தானத்தில் குரு (வ) –  அயன சயன போக  ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன. கிரகமாற்றங்கள்: 02-12-2023 அன்று புதன் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 16-12-2023 அன்று சூர்ய பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 20-12-2023 அன்று சனி பகவான்பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 25-12-2023 அன்று சுக்ர பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 27-12-2023 அன்று செவ்வாய் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இந்த மாதம் எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். புத்திசாதூரியத்தால் எதையும் செய்து முடிக்க முடியும். அனுபவபூர்வமான அறிவுத்திறன் கை கொடுக்கும். பணவரத்து தாமதப்படும். மற்றவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மைதரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய  முடிவுகள் எடுக்க நேரிடும்.  பணவரத்து அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது.  அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். பிள்ளைகள் உங்கள் ஆலோசனையை கேட்காமல் தன்னிச்சையாக முடிவு எடுக்கலாம். உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. பெண்களுக்கு அனுபவபூர்வமான அறிவைக்கொண்டு எதையும் சாதிப்பீர்கள். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும்.  கலைத்துறையினருக்கு தொழில் வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம்.  புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பணிகள் தொடர்பான பயணங்கள்  செல்ல நேரலாம். புத்தி சாதூரியத்தால் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அரசியல் துறையினருக்கு நிதானமாக பேசுவது நன்மை தரும். பணவரத்து திருப்தி தரும்.  எதிர்பார்த்த தகவல்கள் வரும்.  மகிழ்ச்சி உண்டாகும்.  வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்படியான காரியங்கள் நடக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். சித்திரை: இந்த மாதம் உங்கள் கீழ் பணியாற்றுபவர்கள் சிறப்பாக பணிபுரிந்து உங்கள் நிலையை உயரச் செய்வார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்பு கிடைக்க பெறுவார்கள். சக பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும். அலுவலகம்…

Continue Reading

சூரியன் – சந்திரன் சேர்க்கை நம்மை என்ன செய்துவிடும்? ஜோதிட சூட்சுமங்கள்

நம் பரசார ஜோதிடத்தில் ஒளி கிரகங்களான சூரியன் சந்திரன் என்பவர்கள் சிவனாகவும் சக்தியாகவும் சொல்லப்படுகிறது. இந்த ஒளிகிரகங்கள் மற்ற கிரகங்களையும் இயக்கும் முக்கிய பிரபஞ்ச சக்தியாகும். அவற்றில் சூரியன் என்பவர் பகலிலும் சந்திரன் என்பவர் இரவிலும் தன்னுடைய கதிர்வீச்சால் அனைத்து ஜீவ ராசிக்கும் பலத்தைக் கொடுக்க வல்லவர்.  ஒவ்வொரு உயிர் அணுக்களின் ஜீவன் என்பவர் சூரியன் ஆவார். அதனால் சூரியன் என்பவர் ஜாதக கட்டத்தில் வயிற்றையும் குழந்தையைக் குறிப்பது 5ம் பாவம் சிம்ம வீடு ஆகும். அவரே ஜாதத்தில் முக்கிய புள்ளி. அவரோடு ஜீவ சக்தியாக சந்திரன் உள்ளார். சந்திரன் வைத்துதான் கோச்சாரம் பலன் சொல்லப்படுகிறது. சூரியன் பகலில் பிறக்கும் குழந்தைகளுக்கும், சந்திரன் இரவில் பிறக்கும் குழந்தைகளுக்கும் அவரவர் கர்மாவிற்கு ஏற்ப பலம் கொடுக்க வல்லவர்கள். ஜாதக கட்டத்தில் முக்கிய தலைமை பொறுப்பில் சூரியன் சந்திரன் என்ற பிரகாச கிரகங்களுக்கு ஒரு ஆதிபத்தியமும்  மற்ற கிரகங்களுக்கு இரண்டு ஆதிபத்தியம் கொடுக்கப்பட்டுள்ளது. சூரியனிலிருந்து சந்திரன் நகரும் பாகையைக் கொண்டு அது வளர்பிறை மற்றும் தேய்பிறை என்று பிரிக்கப்படுகிறது. ஒருவரது  ஜனன ஜாதகத்தில் உள்ள இரு கிரகங்களின் நெருங்கிய பாகை,  திரிகோணம்,  மற்றும் அவற்றின் பார்வை என்று பல்வேறு சூட்சுமங்களை சேர்க்கை என்று அழைக்கிறோம். நாம் இன்று சூரியன் சந்திரன் சேர்க்கையின் பொது பலன்களை சிறு விளக்கமாக பார்ப்போம். இவர்களோடு மற்ற அசுப கிரகங்களின் சேர்க்கை என்பது மாறுபட்ட பலன்களை கொடுக்கும். இது அவரவர்  ஜாதகத்தை நன்கு ஆராய்ந்து கூற வேண்டும். புலிப்பாணி தன் நூலில் இருவரின் சேர்க்கை பற்றி நல்ல பலனை கூறியுள்ளார். பாரப்பாயின்ன மொன்று பகரக்கேளு பகலவனும் கலை மதியும் கோணமேற சேரப்பா பலவிதத்தால் திரவியம் சேரும் செல்வனுக்கு வேட்டலுண்டு கிரகமுண்டு ஆறப்பா அமடு பயமில்லை யில்லை அர்த்த ராத்திரிதனிலே சப்தம் கேட்பன் கூறப்பா குமரனுக்கு யெழுபத்தெட்டில் கூற்றுவனார் வருங்குறியை குறிபாய் சொல்லே . விளக்கம்: சூரியனும், சந்திரனும் இணைந்து இருந்தால் எல்லாவித செல்வங்களும், வீடு, ஆயுள் விருத்தி கொண்டவராகவும் மற்றும்  ஜாதகர் இரவில் சப்தங்களைக் கேட்பானாகவும் இருப்பார்.  இத்தகைய அமைப்பில் உள்ள நபர் அதிகபட்சம் 78 வயது வரை உயிர் வாழ்வார் என  சித்தர்  கூற்று. நமக்கு பிராண வாயுவை தரும் நெருப்பு கிரகமான சூரியன் அவரோடு குளிர்ந்த சந்திரன் சேரும்பொழுது நன்று. இந்த இரு கிரகங்களின் பிரகாச சேர்க்கை ஒருவரின் ஜாதகத்தில் அதிக நன்மைகளையும் குறைந்த தீமைகளையும் தரவல்லது. சூரியன் மன உறுதியையும் சந்திரன் மனசலனத்தையும் குறிக்கும். இவர்கள் சேர்க்கை உள்ள ஜாதகர் குழப்பம் ஏற்பட்டாலும் தெளிந்த நீராக முடிவு எடுக்கும் குணம் உண்டு. இந்த சேர்க்கை அரசு சம்பந்த வேலை மற்றும் அரசியல் ஈடுபாடு மனதில் ஒரு ஓட்டம் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். நீர் ஓடை போல பல்வேறு  இடத்தில் வாழ பழகிக்கொள்வார்கள். குடும்ப தலைவர் மற்றும் தந்தைக்கு வெவ்வேறு இடங்களில் வேலை மாற்றம் இருக்கும். இவர்கள் வாழ்க்கை ஏற்ற இறக்கமாகவும்,…

Continue Reading

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 11)

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 11 கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும் குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே! புற்றர வல்குல் புனமயிலே போதராய் சுற்றத்துத் தோழிமா ரெல்லாரும் வந்துநின் முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட சிற்றாதே பேசாதே செல்வப்பெண் டாட்டி! நீ எற்றுக்  குறங்கும் பொருளேலோர் எம்பாவாய். பாடியவர் – பவ்யா ஹரி விளக்கம்:   துயிலெடைப் பாசுரங்கள் ஒவ்வொன்றிலும், உள்ளே உறங்குகிற பெண்ணுடைய தன்மைகளைக் கூறி எழுப்பிக்கொண்டு வருகிறார்கள் என்பது வெளிப்படை. இவ்வகையில், இந்தப் பாசுரத்திலும், உள்ளே இருப்பவளின் பெருமைகள் கூறப்படுகின்றன. இவளுடைய இல்லத்தில் நிறைய மாடுகள்; இவளுடைய வீட்டின் கோபாலர்கள் (இவளின் தந்தையாகவோ சகோதரர்களாகவோ இருக்கக்கூடும்), பகைவர்களோடு திறம்படப் போரிடக் கூடியவர்கள். இவை மட்டுமின்றி, எவ்விதக் குற்றமும் இல்லாதவர்கள். இப்படிப்பட்ட செல்வம் நிறை குடும்பத்தைச் சேர்ந்தவள், பொற்கொடி போலும் அழகானவள், புற்றிலிருக்கும் பாம்பின் படம் போன்ற இடைப்பகுதியைக் கொண்டவள், மயிலின் சாயலாள். "செல்வமிக்க பெண் பிள்ளாய், எழுந்து வா’ என்றழைக்கிறார்கள். "அண்டை  அசலில் இருக்கும் தோழிப் பெண்கள் அனைவரும் வந்துவிட்டோம். உன் இல்லத்தின் முற்றத்தில் வந்து நின்று மேக நிறத்தவனான கண்ணனின் பெருமைகளைப் பாடுகிறோம். இவ்வளவிருந்தும் நீ அசையாமலும் விடை பகராமலும் உறங்குகிறாயே, இது நியாயமா?’ என்று வினவுகிறார்கள்.  பாசுரச் சிறப்பு: நயமிக்க சொற்கள் சில, இப்பாசுரத்தில் கையாளப்பட்டுள்ளன. "கோவலர்’ என்பது கோபாலர் என்பதன் திரிபு. ஆயர்பாடியின் ஆயர்களே, கோபாலர்கள்; பசுக்களைப் பராமரிப்பவர்கள் (கோ=பசு). கண்ணன் மீது நிரம்பப் பிரியம் வைத்தவர்கள்; எவ்வகையிலும் அந்த அன்பில் குறையாதவர்கள். இப்படிப்பட்டவர்களின் வழியில் வந்தவள், கண்ணனைவழிபடுவதை மறந்துவிட்டு உறங்கலாமா? கோபாலன் என்பதைக் கண்ணனைக் குறிக்கும் சொல்லாகக் கொண்டால், கோவலர் பொற்கொடி என்பது அந்த தெய்வத்தையே ஆதாரமாகக்கொண்டு படருகிற கொடி என்றாகும். ஆதாரமில்லாமல் கொடி துவண்டுவிடும்; அதுபோல், பக்தி குன்றினால், அடியார்கள் வாடிவிடுவர். பெண்டாட்டி = பெண் பிள்ளாய். கண்ணனை முகில்வண்ணன் என்று கூறிவிட்டு, நோன்பு நோற்கும் பெண்ணைப் புனமயில் என்பது சிறப்பான நயம். முகிலைக் கண்டால் மயில் ஆடும்; கண்ணனைக் கண்டால், இப்பெண் மகிழ்ச்சியில் ஆடுவாள். ஸ்வாபதேச முறைப்படி, இப்பாசுரமானது, முதலாழ்வார்களில் ஒருவரானபூதத்தாழ்வாரைக் குறிப்பது. அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – பாடல் 11 மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்அட்சய திருதியையும் ஸ்ரீ அன்னபூரணியும் கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி ஐயா! வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற் செய்யாவெண் ணீறாடி! செல்வா! சிறுமருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா! ஐயா!நீ ஆட்கொண் டருளும் விளையாட்டின் உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம் எய்யாமற் காப்பாய் எமையேலோ ரெம்பாவாய்.  பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன் பாடியவர் – மயிலை சற்குருநாதன் பாடியவர் – மயிலாடுதுறை சிவகுமார் விளக்கம்:   பொய்கைக் கரையில் நிற்பவர்கள், இறைவனை மேலும் வழிபடுகின்றனர். "மலர்கள் நிறைந்து, அதனால் வண்டுகள் நிறைந்ததாகக் காணப்படும் குளத்தில் புகுந்து நீராடி உன்னுடைய புகழைப் பாடுகிறோம். வழிவழியாக நாங்கள் உன்னுடைய அடிமைகள்….

Continue Reading

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 20)

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 20 முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய்! செப்பமுடையாய் திறலுடையாய் செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா துயிலெழாய்! செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல் நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய்! உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய். பாடியவர் – பவ்யா ஹரி விளக்கம்: கண்ணனும் நப்பின்னையுமான திவ்விய தம்பதிகள் எழுப்பப்படுகிற பாசுரம். முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு ஏதேனும் துன்பம் வருவதற்கு முன்னரே சென்று, அவர்களின் நடுக்கத்தை நீக்கக்கூடிய கண்ணனே, எழுந்திருக்க வேணும். (அடியார்களைக் காக்கும்) உறுதி கொண்டவனே, வலிமை உடையவனே, பகைவர்களுக்கு நடுக்கம் தரக்கூடிய தூய்மையாளனே, எழுந்திருக்க வேணும். அழகிய மார்புகளையும் சிவந்த வாயையும்நுண்ணிடையையும் கொண்ட நப்பின்னையே, செல்வத்திற்குரியவளே, எழுந்திருக்க வேணும். நோன்புக்கு உபகரணங்களான ஆலவட்ட விசிறியையும் கண்ணாடியையும் தந்தருளி, உன் மணாளனான கண்ணனை (எங்களுக்கு அருள) அனுப்ப வேணும்.  பாசுரச் சிறப்பு: கண்ணனைப் பாராட்டிவிட்டு, நப்பின்னையிடத்தில் பிரார்த்திக்கிறார்கள். முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு அருளியதை எடுத்துக் காட்டுகிறார்கள். அத்தனை பேருக்கு அருளிய கண்ணனுக்கு, இந்தச் சிறுமிகளுக்கு அருள்வது எம்மாத்திரம் என்பது குறிப்பு. “தேவர்களுக்காவது செருக்கும், ஆணவமும், இறுமாப்பும் உண்டு. எமக்கு அவையெல்லாம் இல்லையே’ என்னும் ஆதங்கத்தின் வெளிப்பாடு. நோன்பு நோற்பதற்கும் வழிபாடு செய்வதற்கும் தக்க பொருள்கள் சில பயன்படுத்தப்படும். அவற்றில் விசிறியும் கண்ணாடியும் மட்டுமே இங்கே பேசப்படுகின்றன. பலவற்றுக்கு ஓர் எடுத்துக்காட்டு என்னும் வகையில்,  அனைத்து உபகரணங்களையும் குறிப்பால் உணர்த்துவதாகக் கொள்ள வேண்டும். அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – பாடல் 20 போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 26) போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள் போற்றியெல் லாவுயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம் போற்றியெல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் போற்றியெல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள் போற்றிமால் நான்முகனும் காணாத புண்டரிகம் போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள் போற்றியாம் மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய்.  பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன் பாடியவர்கள் : ஆலவாய் அண்ணல் பாடசாலை மாணவர்கள் பாடியவர் – மயிலை சற்குருநாதன் பாடியவர் – பொன் முத்துக்குமரன்  விளக்கம்: திருவெம்பாவையின் நிறைவுப் பாடல். நோன்பை நிறைவு செய்யும் பெண்கள், இறைவனின் திருவடிகளைப் போற்றுகின்றனர். “எல்லாவற்றுக்கும் தொடக்கமாக இருக்கும் நின் திருவடிகளுக்குப் போற்றி. எல்லாவற்றுக்கும் இறுதியாக இருக்கும் திருவடிகளுக்குப் போற்றி. உயிர்களும் பொருள்களும் உயர்திணையும் அஃறிணையும் தோன்றுவதற்குக் காரணமான திருவடிகளுக்குப் போற்றி. வாழ்க்கையை அனுபவிக்கக் காரணமான திருவடிகளுக்குப் போற்றி. அனைத்து உயிர்களும் சென்று சேர்கிற இடமான திருவடிகளுக்குப் போற்றி. திருமாலும் பிரம்மாவும் காணாத திருவடிகளுக்குப் போற்றி. எமக்கு உய்யும் கதி நல்குகிற திருவடிகளுக்குப் போற்றி. இப்பேற்றையெல்லாம் அளிக்கவல்ல மார்கழி நோன்புக்கும் நீராட்டத்திற்கும் போற்றி’} போற்றி போற்றி என்று சிவப்பரம்பொருளின் சகல மேன்மைகளையும் போற்றுகின்றனர்.  பாடல் சிறப்பு: நிறைவுப் பாடலில் “மார்கழி நீராடல்’ என்று இத்தனை நாள்கள் நோற்ற நோன்பினைமாணிக்கவாசகப் பெருமான் குறிப்பிடுகிறார். நோன்பு…

Continue Reading

ராகு -​ ‌கே‌து பெய‌ர்‌ச்​சி​‌ பல‌ன்​க‌ள்!

  இந்த பிலவ வருஷம் உத்தராயணம் சிசிர ருது பங்குனி மாதம் 3-ஆம் தேதி (17.03.2022) சுக்ல பட்சம் (வளர்பிறை) சதுர்த்தசி திதி, வியாழக்கிழமை, பூரம் நட்சத்திரம் இரண்டாம் பாதத்தில், சூல நாமயோகம் பத்திரை கரணம், சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில், உதயாதி ஒன்றரை நாழிகைக்குள் காலை 06.37 மணி அளவில் குரு பகவானின் ஹோரையில் ராகு-கேது பகவான்கள் முறையே ரிஷப, விருச்சிக ராசிகளிலிருந்து மேஷம், துலாம் ராசிகளுக்குப் பெயர்ச்சி  ஆகிறார்கள்.  ராகு பகவான், கிருத்திகை நட்சத்திரம் ஒன்றாம் பாதத்தில் 11.07.2022 வரை சஞ்சரித்துவிட்டு, 12.07.2022 அன்று மாலை 5.30 மணி அளவில் பரணி நட்சத்திரம் நான்காம் பாதம் இறுதியில் சஞ்சரிக்கத் தொடங்குகிறார். இந்த காலகட்டத்தில் கேது பகவான் விசாகம் நட்சத்திரம் இரண்டாம் பாதம் இறுதியில் சஞ்சரிப்பார். 06.02.2023 வரை பரணி நட்சத்திரம் ஒன்றாம் பாதம் தொடக்கத்தில் சஞ்சரித்து விட்டு, 07.02.2023 அன்று விடியற்காலை 12.45 மணி அளவில் அசுவினி நட்சத்திரம் நான்காம் பாதம் இறுதியில் சஞ்சரிக்கத் தொடங்குகிறார். இந்த காலகட்டத்தில் கேது பகவான் சுவாதி நட்சத்திரம் இரண்டாம் பாதம் இறுதியில் சஞ்சரிப்பார். 28.11.2023 வரை அசுவினி நட்சத்திரம் ஒன்றாம் பாதம் தொடக்கத்தில் சஞ்சரித்துவிட்டு, மேஷ ராசியை விட்டு மீன ராசிக்கு 29.11.2023 அன்று விடியற்காலை 02.50 மணிக்கு ராகு-கேது பகவான்கள் முறையே மேஷம், துலாம் ராசிகளை விட்டு முறையே மீனம், கன்னி ராசிகளுக்குப் பெயர்ச்சி ஆகிறார்கள். இந்த காலகட்டத்தில் கேது பகவான் சித்திரை நட்சத்திரம் மூன்றாம் பாதம் தொடக்கத்தில் சஞ்சரித்துவிட்டு, சித்திரை நட்சத்திரம் இரண்டாம் பாதம் இறுதியில் கன்னி ராசியில் சஞ்சரிக்கத் தொடங்குவார். இந்த ராகு, கேது பெயர்ச்சி பலன்கள் மேற்கூறிய நட்சத்திர சஞ்சாரங்களின் அடிப்படையில் மூன்றாகப் பிரிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளது. ராகு, கேது பெயர்ச்சி காலம் சராசரியாக 18 மாதங்கள் என்பதை அனைவரும் அறிந்ததே. ஒரு பாத சஞ்சாரத்திற்கு சராசரியாக இரண்டு மாதங்கள் என்று வைத்துக்கொண்டால் ஒன்பது பாதங்களை முழுமையாக கடக்க 18 மாதங்கள் (2 * 9 = 18 மாதங்கள்) ஆகும். இதில் சில நேரங்களில் ராகு, கேது பகவான்கள் ஒரே நட்சத்திரத்தில் ஸ்தம்பித்து நிற்பார்கள். இதனால் கார்த்திகை ஒன்றாம் பாதத்தைக் கடக்க நான்கு மாதங்கள் எடுத்துக் கொண்டாலும், மொத்த ராசியை 18 மாதங்கள் 10 நாள்களில் கடந்து விடுகிறார்கள். ராகு, கேது பெயர்ச்சி சக்கரத்தில் மீன லக்னம், சிம்ம ராசி, பூரம் நட்சத்திரம் இரண்டாம் பாதம். லக்னம், தொழில் ஸ்தானமான பத்தாம் வீடு ஆகிய இரண்டு வீடுகளுக்கும் அதிபதி குரு பகவானாவார்.  எனவே செய்யும் தொழிலில் எப்போதும் கண்ணும் கருத்துமாகவே இருந்து வருவார்கள். தாங்கள் முன்னேறுவதில் அதிக அக்கறை காட்டி, எப்படி நடந்துகொண்டால் முன்னேற முடியும் என்ற நுணுக்கத்தை இவர்கள் நன்கு உணர்ந்தவர்களாவார்கள். மரியாதை கொடுக்க வேண்டிய இடத்தில் மரியாதையுடன் நடந்து கொண்டால், எதிர் பாகத்திலும் இவர்களுக்கு தக்க மரியாதை கிடைக்கும். குரு பகவான் சாத்வீக குணமுடையவராதலால், இனிமையாகப் பேசி தங்களுக்கு…

Continue Reading