கர்மாவின் நான்கு வாயில்கள் முதலில் “கர்மாவின் நான்கு வாயில்கள்” எவை எவை என ஒருவரின் ஜாதகம் மூலம் அறியலாம். எல்லா கர்மாக்களும் ஒரே எடை கொண்டவை அல்ல, ஏனென்றால் அவை ஒரே காரணத்திலிருந்து தோன்றுவதில்லை. அனைத்தும் உருவாக்கப்பட்ட நான்கு ஜோதிட கூறுகளின் மாதிரியின்படி, கர்மா செயல்படும், நான்கு நிலைகள் உள்ளன. ஒரு குறிப்பிட்ட செயலுக்குப் பின்னால் இருக்கும் முறை அல்லது முதன்மை நோக்கத்தைப் பொறுத்து, கர்மாவின் அந்த நான்கு வாயில்கள் பின்வருமாறு : – 1. பூமி கர்மா (EARTH):- நிகழ்வுகளை நினைவில் கொள்வதற்கான இயற்பியல் நிலை. (பூமி வீடுகள் – லக்கினத்திற்கு 2,6,10) இதுவே மிகவும் எளிதான கர்மா, ஏனென்றால் இது அலட்சியத்தால் ஏற்பட்ட வேதனையின் விளைவாக உருவாக்கப்பட்டது. இந்த கர்மா, ஒருவரின் ஜாதகத்தில் பூமியின் தனிமத்துடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் அது வாழ்க்கையில் விளையாடுகிறது. 2. நீர் கர்மா (LAND):- மூலக்கூறு அதாவது நிகழ்வுகளை நினைவில்கொள்ளும் நித்திய நிலை. (நீர் வீடுகள்- லக்கினத்திற்கு 4, 8, 12) கடந்த வாழ்க்கையில் பயமின்றி கெட்ட காரியங்களைச் செய்திருந்தால், அதாவது தங்களைத் தற்காத்துக் கொள்ளும்போது அல்லது உணர்ச்சி ரீதியாகப் பாதிக்கப்பட்டதால் மக்கள் இந்த “தீங்கினால்” பாதிக்கப்படுவார்கள். பொய் மற்றும் ஏமாற்றுதலால் குவிந்த அனைத்து கர்மாக்களும் இங்கே சொந்தமானது. ஒருவரின் ஜாதகத்தில், இது நீர் என்ற கூறுகளில் உள்ள கோளாறுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இது இந்த வாழ்க்கையில் ஒப்பீட்டளவில் நிலையற்ற உளவியல் மற்றும் உணர்ச்சி நிலையின் வடிவத்தில் வெளிப்படுகிறது. 3. நெருப்பு கர்மா (FIRE ):- நிகழ்வுகளை நினைவில் கொள்வதன் நித்திய நிலை. (நெருப்பு வீடுகள் – லக்கினத்திற்கு 1, 5, 9) தொலைதூரத்தில் ஒரு நபர் எப்போதாவது கோப நிலையிலிருந்து எதிர்வினையாற்றி, தனது கோபத்தைக் கடுமையாக வெளிப்படுத்தினால் ஏற்படும் ஆழமான விளைவுகள். தூய சுயநலம் காரணமாகச் செய்யப்பட்ட அனைத்து செயல்களும், அதிகாரம், லட்சியம் அல்லது பெருமைமிக்க சித்தாந்த நம்பிக்கைகள் (அரசியல் அல்லது மதம்) ஆகியவற்றால் தூண்டப்பட்டவை இங்குதான் உள்ளன. ஜாதகர், தனது மிருகத்தனத்தால் மற்றவர்களை ஆபத்தில் ஆழ்த்தியிருந்தாலும் அதைப் பொருட்படுத்தவில்லை என்பது தான் இந்த நிலை . ஜாதகர் மற்றவர்களிடம் மிகக் குறைந்த உணர்வைக் கொண்டுள்ளது என்பதில்தான் பெரும்பாலும் பிரச்சனை உள்ளது, எனவே அனைத்து கர்மாவும் அவர்கள் அதிகார நிலையைத் துஷ்பிரயோகம் செய்த சூழ்நிலைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது நெருப்பு மூலகத்தின் கர்மத்தால் பாதிக்கப்பட்ட கிரகங்கள். இந்த அதிர்வெண்ணில் ஜாதகரின் கோள்களும் அதிர்வுறும். 4. காற்று கர்மா(AIR):- நிகழ்வுகளை நினைவில் கொள்வதற்கான சாதாரண நிலை. (காற்று வீடுகள் – லக்கினத்திற்கு 3, 7, 11) மிகவும் ஆழமான மற்றும் மிகவும் கடினமான கர்மா தூய முன்கூட்டிய திட்டமிடலின் குற்றங்களால் ஏற்படுகிறது. அதாவது மக்கள் பயம் அல்லது கிளர்ச்சியால் உணர்ச்சி ரீதியாக தூண்டப்படவில்லை என அறிய முடிகிறது. அவர்களுக்கு ஒரு தேர்வு இருந்தது, ஆனால் அவர்கள் தங்கள் குற்றத்தை குளிர்ந்த ரத்தத்தில்(COLD BLOODED PLAN) திட்டமிடத் தேர்வு செய்தனர். வேறு எந்த…
முன்பொரு காலத்தில் தேவர்களுக்கு அசுரர்கள் பல தொல்லைகளை அளித்து வந்தனர். அசுரர்களில் சூரபத்மன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து வரம் பெற்றவன். எனவே தேவர்கள் சிவனை வேண்டினர். பிரார்த்தனையை ஏற்ற சிவனும், சூரபத்மனை அழிக்கத் தனது மூன்றாவது கண்ணில் இருந்து வெளிப்பட்ட ஆறு தீப்பொறிகளில் இருந்து முருகனை அவதரிக்கச் செய்தார். குழந்தையான முருகனை கார்த்திகை பெண்கள் சீரும் சிறப்புமாக வளர்த்தனர். பின்பு சூரபத்மனை அழிக்க முருகனுக்கு உத்தரவிட்டார். சூரபத்மனை அழிக்க முருகன் திருச்செந்தூருக்கு வருகிறார். அப்போது தேவர்களின் குரு வியாழன் முருகனின் அருளாசி பெற தவத்தில் இருந்தார். முருகனும் அவருக்கு தரிசனம் தந்து அருள் அளித்துவிட்டு, திருச்செந்தூரை படை வீடாகக் கொண்டு தனது படையுடன் தங்கி சூரபத்மனை அழிக்க வியூகம் வகுத்தார். அசுரர்களின் வரலாற்றை அவர் வியாழனிடமிருந்து அறிந்து கொண்டார். பின்னர் முருகன் தனது நவ வீரர்களில் ஒருவரான வீரபாகுவை சூரபத்மனிடம் தூதுவனாக அனுப்பி, “தேவர்களுக்குக் கொடுக்கும் தொல்லையை நிறுத்த வேண்டும்’ என்று தெரிவித்தார். சமாதானக் கோரிக்கையை சூரபத்மன் ஏற்கவில்லை. கடைசியாக, சூரபத்மன் மீது முருகன் போர் தொடுத்தார். சிவபெருமானிடம் வரம் பெற்ற மாமரமாக உரு மாறிய சூரபத்மனை வதம் செய்யாமல் அவனது ஆணவத்தை அழித்து சேவற்கொடியாகவும், மயிலாகவும் மாற்றி தன்னுள் ஆட்கொண்டு வைத்துக் கொண்டார் . அதனால் முருகன் “சேவற்கொடியோன்’ என்றும் அழைக்கப்பட்டார். இந்த நிகழ்வுக்குப் பிறகு, வியாழன் முருகனை திருச்செந்தூரில் தங்கி அருள் புரியும்படி வேண்டுகோள் விடுத்தார். பின்னர், வியாழன் உத்தரவின்படி விஸ்வகர்மா இந்த திருக்கோயிலை கட்டினார். சூரபத்மனை அழித்ததில் முருகனின் வெற்றியின் காரணமாக, முருகன், “ஜெயந்திநாதர்’ என்று அழைக்கப்படுகிறார். பிற்காலத்தில் “செந்தில்நாதன்’ என்றும் அழைக்கப்பட்டார். இத்தலமும் திருஜெயந்திபுரம் என அழைக்கப் பெற்று காலப்போக்கில் மருவி “திருச்செந்தூர்’ என்று அழைக்கப்படுகிறது. இதற்கு “திருச்சீரலைவாய்’ என்ற மறு பெயரும் உண்டு முருகனின் அறுபடைவீடுகளில் இரண்டாம் படை வீடு திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்ரமணிய சுவாமிகோயில், கடற்கரை கோயிலாக அமைந்துள்ளது. பிற அறுபடை வீடுகள் மலைகளில் அமைந்திருக்க இத்திருத்தலம் வங்கக் கடலின் அருகில் அமைந்துள்ளது தனிச்சிறப்பு. இந்தக் கோயில் ஆதிகாலங்களில் இருந்து சந்தனமலையின் ஒரு பகுதியாக அமைந்திருக்கிறது. தமிழரின் பண்டைய நூல்களில் குறிப்பிடுவது போல், சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான கட்டமைப்பு உடையது. மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 16) திருமுருகாற்றுப்படையில் திருச்செந்தூர் இரண்டாவது தலமாக அமையப் பெற்றுள்ளது. அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல்களிலும் குமரகுருபர சுவாமிகள் கந்தர் கலிவெண்பாவிலும் திருச்செந்தூரை போற்றி உள்ளனர். சிறப்புடைய இந்தக் கோயில் குடமுழுக்கு விழா 15 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜூலை 7 (திங்கள்கிழமை) காலை 6.15 மணி முதல் காலை 6.50 மணிக்குள் நடைபெறுகிறது. க. சுப்பிரமணியன் நன்றி Hindu குலத்தைக் காக்கும் நம்ம வீட்டு குலசாமி : ஜோதிட தேடல்
அக்டோபர் மாத பலன்களை தினமணியின் இணையதள ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். (துலாம் முதல் மீனம் வரை) துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்) கிரகநிலை: ராசியில் கேது – சுக ஸ்தானத்தில் சனி (வ) – களத்திர ஸ்தானத்தில் குரு(வ), ராகு – லாப ஸ்தானத்தில் சுக்ரன் – அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், புதன்என கிரகநிலைகள் உள்ளது. கிரக மாற்றங்கள்: 04-10-2023 அன்று செவ்வாய் பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 08-10-2023 அன்று ராகு பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 08-10-2023 அன்று கேது பகவான் ராசியில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 15-10-2023 அன்று புதன் பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார். 17-10-2023 அன்று சூரிய பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார். பலன்: கனிவான பேச்சும் நலினமான தோற்றமும் உடைய துலா ராசி அன்பர்களே, இந்த மாதம் எல்லாவற்றிலும் சாதகமான பலனே கிடைக்கும். பொருளாதார முன்னேற்றம் பணவரவில் திருப்தி ஆகியவை இருக்கும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழிலுக்கு புதிய சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியாளர்களிடம் நீங்கள் காட்டி வந்த கடுமையான போக்கு மாறி உங்கள் செயலில் கனிவான தன்மை நிறைந்து இருக்கும். குடும்பத்தில் திருமணம் ஆனவர்களுக்கு புத்திரப்பேறு கிடைக்கும். வயது வந்த புத்திரர்கள் உள்ளவர்களுக்கு நல் உதவிகளும் கிடைக்கபெறும். தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஆயுள் அபிவிருத்தி அடைவதற்கான வகையில் கிரகங்கள் கெயல்பட உள்ளதால் அதற்கேற்றவாறு பழக்கவழக்கங்களை அமைத்துக்கொள்ளுங்கள். பெண்கள் பணியில் ஈடுபட்டுள்ள தொழில் மேன்மை பெறுவார்கள். கலைத்துறையினர் நிறைவான பொருளாதாரம் பெறுவார்கள். அரசியல்துறையினருக்கு மேலிடத்துடன் சுமூகமான உறவு ஏற்படும். மாணவர்களுக்கு சாமர்த்தியமான செயல்களால் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள். பாடங்களில் கவனம் செலுத்துவது அதிகரிக்கும் சித்திரை – 3, 4: இந்த மாதம் தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். பழைய பாக்கிகள் வசூல் ஆனாலும் எதிர்பார்த்தபடி இருப்பது சிரமம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. ஸ்வாதி: இந்த மாதம் பதவி உயர்வு, நிலுவையில் உள்ள பணம் வருவது தாமதப்படும். குடும்பத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்படலாம். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை வந்து நீங்கும். உறவினர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. விசாகம் – 1, 2, 3: இந்த மாதம் வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். களைப்பு, பித்தநோய் உண்டாகலாம். வீண்கவலை இருக்கும். மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. வெளி வட்டார தொடர்புகளில் கவனம் தேவை. பரிகாரம்: அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று வரவும். மல்லிகை மலரை சாத்தி வழிபடவும் அதிர்ஷ்ட…
12 ராசி அன்பர்களுக்கும் செப்டம்பர் மாத பலன்களை தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். மேஷம் கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராஹூ – பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் – ரண ருண ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் – அஷ்டம ஸ்தானத்தில் கேது – தொழில் ஸ்தானத்தில் சனி (வ) – லாப ஸ்தானத்தில் குரு (வ) என கிரகநிலை உள்ளது. இம்மாதம் 06ம் தேதி சுக்கிர பகவான் சப்தம களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். இம்மாதம் 07ம் தேதி செவ்வாய் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார். இம்மாதம் 13ம் தேதி புத பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் வக்ரம் ஆரம்பம். இம்மாதம் 14ம் தேதி குரு பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். இம்மாதம் 17ம் தேதி சூர்ய பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார். இம்மாதம் 27ம் தேதி சனி பகவான் தொழில் ஸ்தானத்தில் வக்ர நிவர்த்தி அடைகிறார். பலன்: கடின உழைப்பினால் வாழ்க்கையில் முன்னேறும் மேஷ ராசியினரே உங்களுக்கு திடீரென்று வரும் கோபத்தை கட்டுப்படுத்தினால் வெற்றி நிச்சயம். இந்த மாதம் புத்திக் கூர்மையுடன் செயல்களை செய்து எதிலும் வெற்றி பெறுவீர்கள். வசதிகள் அதிகரிக்கும். மதிப்பும், மரியாதையும் கூடும். ஆனால் வீண் செலவுகள் உண்டாகும். மனதுக்கு பிடிக்காத இடத்திற்கு சென்று வரவேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பாக பயணங்கள் சென்று வரவேண்டி இருக்கும். வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திப்பார்கள். குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகலாம் கவனம் தேவை. மேலும் அறிந்துகொள்ள.. இதைச் செய்யாமல் விட்டால் குழந்தையின் ஆதார் செல்லாததாகிவிடும் குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே தேவையற்ற மன வருத்தம் உண்டாகலாம் கவனம் தேவை. மருத்துவம் தொடர்பான செலவும் ஏற்படலாம். ஆயுதம், நெருப்பு ஆகியவற்றை கையாளும் போது கவனமாக இருப்பது நல்லது. அரசியல்வாதிகள், தாங்கள் சார்ந்துள்ள கட்சியின் தொண்டர்களுக்கும், நெருங்கியவர்களுக்கும் மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். மேலிடத்திலிருந்து உங்களுக்கு சந்தோஷமான செய்திகள் வந்து சேரும். கலைத்துறையினர் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். வருமானம் நன்றாக இருப்பதால் ரசிகர்களுக்காகச் செலவு செய்வீர்கள். சக கலைஞர்களால் நன்மை அடைவீர்கள். புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் மேன்மை அடைய கூடுதல் கவனத்துடன் படிப்பது அவசியம். விளையாடும் போதும் கவனம் தேவை. பெண்களுக்கு புத்தி கூர்மையுடன் செயல்பட்டு காரியங்களை வெற்றி கரமாக செய்து முடிப்பீர்கள். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு சக மாணவர்களுடன் பழகும்போது கவனம் தேவை. கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது. அஸ்வினி: இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் அவசரப்படாமல் நிதானமாக பணிகளை கவனிப்பது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு மனவருத்தங்கள் ஏற்படும் வகையில் சூழ்நிலை இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் முன்னேற்றத்தில் தடை தாமதம் ஏற்படலாம்…
ஒரு மனித வாழ்வு என்பது இரண்டு பெரிய பிரிவுகளில் தான் அமைந்துள்ளது. அதாவது, அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டம் இதுதான் மனித வாழ்வை நகர்த்திச் செல்லுகிறது. தொடர்ந்து அதிர்ஷ்டம் கொண்டவரும் இல்லை, தொடர்ந்து துரதிர்ஷ்டம் கொண்டவரும் இல்லை. ஆனால் வெகு சிலர் மட்டுமே தொடர்ந்து துரதிர்ஷ்டத்தையும், அதிர்ஷ்டத்தையுமே அனுபவிப்பதைக் காண முடிகிறது. அது ஏன் அவ்வாறு அவர்களுக்கு மட்டும் நடைபெறுகிறது என்பதனை சில விளக்கங்கள் மூலம் இந்த கட்டுரையில் காணலாம். முதலில் அதிர்ஷ்டம் என்றால் என்னென்ன? அது, உடல் ஆரோக்கியத்தைச் சார்ந்தது, தனி நபர் ஆளுமை தன்மை, அரசியலில் தொடர்ந்து வெற்றி, நிதி ஆதாயம், கல்வியால் நன்மைகள், மனவலிமைகள், பெற்றோரை முதுமையிலும் காக்கும் குழந்தைகள், குழந்தைகளை அருமையாக அன்பாக வளர்க்கும் பெற்றோர்கள், இது போன்று சொல்லிக்கொண்டே போகலாம். மேலே கூறப்பட்டவை அனைத்தும் ஒருவருக்குத் தொடர்ந்து கிடைப்பதுவே அதிர்ஷ்டம் ஆகும். அவரை நாம் கொடுத்துவைத்தவர் எனச் சொல்கிறோம். அவன் என்னப்பா அதிர்ஷ்டகட்டை எனவும் சொல்வதுண்டு. சிலருக்கு சிறிது காலம் அதிர்ஷ்டம் கிடைத்து பின்னர் ஒரு நாள் விலகுவதும் உண்டு. அப்படியே தலைகீழாய் நிலைமை மாறுவதும் உண்டு. துரதிர்ஷ்டம் என்றால் என்னென்ன? துயரங்கள், துயரங்களின் ஆதாரங்கள், அனைத்துவித கவலைகள், துன்பங்கள், பிரச்னைகள், உடல் மற்றும் மன ரீதியான சிதைவுகள், கெட்ட குழந்தைகள் போன்றவையே துரதிர்ஷ்டம் ஆகும். ஒருவரின் ஜாதகம் என்பது 12 கட்டங்களை கொண்டதாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்து இருப்பீர்கள். பொதுவாக அதில் 6 வீடுகள் ஜாதகருக்கு சாதகமானதாக இருக்கும். மீதமுள்ள 6 வீடுகள் ஜாதகருக்கு சாதகமற்றதாகவே இருக்கும். அதிலும் மிகவும் மோசமான வீடுகள் 6, 8, 12ஆம் வீடுகள் தான். இதனை தந்திர (TRIK HOUSES ) வீடுகள் என்பர். அதனை விரிவாகக் காண்போம். ஏன் என்றால், இந்த வீடுகளின் போக்கை அறிவதே மிகச் சிரமமாகும். இதனை நன்கு ஆராய்ந்தால் தான் தெளிவாக தெரிய முடியும். சிலருக்கு, சிலவற்றிற்கு, சில நிலைகளில் இந்த வீடுகள் நல்லன போன்று தோன்றும் / செய்யும் ஆனால் அதே சமயம் சிலருக்கு, சிலவற்றிற்கு, சில நிலைகளில் தீயதை மட்டுமே செய்யும். இதனை ஒவ்வொரு வீடாகக் காணலாம். பொதுவாக ஜோதிடத்தில் ஜனன கால ஜாதகத்தை வைத்து பலனை ஓரளவுக்குத் தான் சொல்லமுடியும். துல்லியமாகப் பலனைக் காண, பல்வேறு பிரிவு விளக்கப்படம் (DIVISIONAL CHARTS) மூலம் தான் காண இயலும். ஒவ்வொரு பிரிவும் ஒருவித பலனைத் துல்லியமாகக் கூறும். அனைத்தையும் கண்டு பலன் சொல்வதென்பது நிச்சயம் வெகு சிரமமான ஒன்று. அதற்கு முதலில் சரியான பிறப்பு குறிப்பு தேவை. அடுத்து இதனைப் பொறுமையாக ஆய்வு செய்ய ஆழ்ந்த அறிவும் அனுபவ ஞானமும் தேவை. எல்லாவற்றிற்கும் மேலாக அவசரமும் இதனை காண்பதற்குரிய தட்சிணை தருவதில் சிக்கல் ஏற்படும். அதனாலேயே இதனை அதிகமாக விரிவாக யாரும் காண்பதில்லை. மேலெழுந்த வாரியாக ராசி சக்கரம் எனும் D -1 , நவாம்ச சக்கரம் எனும் D – 9 மட்டுமே…
தமிழ் மாதங்களில் “ஆடி’க்கும், “மார்கழி’க்கும் தனிப் பெருமை உண்டு. இவ்விரு மாதங்களையும் இறை வழிபாட்டிற்காகவே நம் முன்னோர்கள் அமைத்தனர். இறைவனின் திருவிழா வைபவங்களுக்கென்றே இரண்டு மாதங்களும் என்பதால், இந்த மாதங்களில் திருமண வைபவத்தைத் தமிழ் மக்கள் நடத்துவதில்லை. அதிலும் ஆடி மாதத்தில் அம்பிகைக்கும், அவளுடைய குமரன் முருகனுக்கும் கோயில்களில் கோலாகலமாகத் திருவிழா நடக்கும். அந்த வகையில், ஆடிக்கிருத்திகை அழகென்ற சொல்லுக்கு முருகா என்று போற்றப்பட்ட ஆறுமுகப் பெருமானுக்கு அணி சேர்க்கும் முக்கியத் திருவிழா. சூரபத்மாதியர் செய்த கொடுமையால் தேவர்கள் சிவபெருமானிடம் தஞ்சம் புகுந்தனர். அவர்களின் இன்னல்களைக் களையத் திருவுளம் கொண்டார் ஈசன். அவருடைய நெற்றிக் கண்ணிலிருந்து வெளியான தீப்பொறியிலிருந்து ஆறு குழந்தைகளாக அவதரித்தார் ஆறுமுகப் பெருமான். அந்தக் குழந்தைகளுக்குக் கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி வளர்த்ததால் முருகனுக்குக் கார்த்திகேயன் என்ற திருப்பெயரும் ஏற்பட்டது. அதன்பின் ஆறுமுகக் கடவுள் சூரனை வதம் செய்து தேவர்களைக் காத்த வரலாற்றை புராணங்கள் எடுத்தியம்புகின்றன. “கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதமிருந்து முருகனை வழிபடுவோருக்குத் துன்பங்கள் அனைத்தும் நீங்கி இனிமையான வாழ்வு அமையும்’ என்று சிவபெருமான் கார்த்திகைப் பெண்களுக்கு அருள்பாலித்தார். எனவே ஒவ்வொரு மாதமும் வரும் கிருத்திகை நட்சத்திரம் முருகனுக்கு மிகவும் உகந்த நாளாயிற்று. மேலும் தமிழ் மாதங்களில் “கிருத்திகை’ என்ற பெயரில் ஒரு மாதமும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முருகப் பெருமான் அக்னியிலிருந்து தோன்றியவன் அல்லவா? அதை உணர்த்தும் வகையில் இம்மாதம் முழுவதும் தீப ஒளியால் இறைவனை வழிபாடு செய்தால் வாழ்வில் ஒளி பிறக்கும். வேத காலத்தில் கிருத்திகை நட்சத்திரமே முதலாவதாக இருந்தது. இது அம்பா, துலா, நிதத்னி, அப்ரயந்தீ, மேகயந்தீ, வர்ஷயந்தீ, சுபணிகா ஆகிய ஏழு நட்சத்திரங்களின் கூட்டமாகும். வேத நெறியில் ஒழுகும் அந்தணர்கள் கார்ஹபத்யம், ஆஹவனீயம், தட்சிணாக்னி ஆகிய மூன்று அக்னி கொண்டு யாக யக்ஞாதிகளை, வேத வேள்விகளைச் செய்வர். “மூன்று வகை குறித்த முத்தீச் செல்வத்து இரு பிறப்பாளர்” என்று இதனை நக்கீரர், திருமுருகாற்றுப்படையில் போற்றுவார். இந்த யாகங்கள் ஆதானம் என்ற கர்மாவினால் செய்யப்படுகிறது. கிருத்திகை நட்சத்திரம் அக்னியின் நட்சத்திரம் என்றும் அந்த நட்சத்திரத்தில் அக்னியை ஆதானம் செய்ய வேண்டும் என்றும் வேதம் கூறுகிறது. ஏனெனில் நட்சத்திரங்களின் முகம் கார்த்திகை. மேலும் மற்ற நட்சத்திரங்கள் ஒன்று, இரண்டு, மூன்று அல்லது நான்கு நட்சத்திரங்களின் கூட்டமாகும். ஆனால் கிருத்திகை நட்சத்திரம் மட்டும் ஏழு நட்சத்திரங்களின் கூட்டமாகும். எனவே, அதில் ஆதானம் செய்பவரும் அவரது வம்சத்தாரும் அளவற்ற நன்மைகளை அடைகிறார்கள் என்று வேதம் கூறுகிறது. எனவே அவ்வளவு சிறப்புடையது கார்த்திகை நட்சத்திரம்.ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி: வழிபடும் முறை “ஸ்ரீசுப்ரமண்ய கடவுள் க்ஷேத்திரக் கோவை பிள்ளைத் தமிழ்’ என்னும் பிரபந்தத்தில் காஞ்சிபுரம் சிதம்பர முனிவர் “கார்த்திகை மலை” என்னும் தலத்தை ஒரு பாடலில் போற்றுகிறார். இது முருகன் தவமிருந்து சிவபெருமானை அர்ச்சனை செய்து வழிபட்ட மலையாகும். மஹாராஷ்டிர மாநிலத்தில் புனே அருகில் உள்ள பார்வதி மலையில் கார்த்திகேயன் கோயில் உள்ளது. இதனை கார்த்திகை மலை என்று அழைக்கிறார்கள். அனைத்து…
தமிழர்களுக்கு மாதந்தோறும் பண்டிகைகள்தான். பொங்கல், மாட்டுப் பொங்கல், கன்னிப் பொங்கல், திருவள்ளுவர் திருநாள், வைகாசி விசாகம், ஆனித் திருமஞ்சனம், ஆடிப்பெருக்கு, ஆவணி அவிட்டம், கிருஷ்ண ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜயதசமி, தீபாவளி, திருக்கார்த்திகை தீபம் உள்ளிட்ட ஏராளமான பண்டிகைகள் உள்ளது. அதில்,சில பண்டிகைகள் மிகவும் பிரசித்தி பெற்றது. அதில், மார்கழி மாதம் வரக்கூடிய திருவாதிரை திருநாள் முக்கியமானதாகும். மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரமும், பெளர்ணமியும் சேரும் திருநாள் திருவாதிரை திருநாள் ஆகும். திருவாதிரைப் பண்டிகை தென்னிந்திய சைவர்களால் கொண்டாடப்படுகின்றது. அனைத்து சிவாலயங்களிலும் உறையும் சிவபெருமானுக்கும், தியாகராஜர், நடராஜப் பெருமானுக்கும் திருவாதிரை அன்று விசேஷமாக ஆறு கால பூஜைகளும், அபிஷேகங்களும் செய்யப்படும். முடிவில், கூடியிருக்கும் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலிப்பார். இதை ஆரூத்ரா தரிசனம் என்பர். ஐம்பூதங்களில் ஆகாசத்தலமான சிதம்பரம் ஷேத்திரத்திலும், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியிலும் திருவாதிரை திருநாள் ஆண்டுதோறும் மிகப் பெரும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. (இந்த ஆண்டு கரோனா தொற்றால் நடத்தப்படவில்லை.) சிதம்பரத்தில் அஷ்ட மூர்த்திகள் காட்சியளிப்பது போலவே, மன்னார்குடி தேரடி, ராஜகோபால சுவாமி கோயில் முன்பு, அஷ்டமூர்த்திகளும் அலங்காரக் கோலத்தில் வரிசையாக நிறுத்தப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிப்பார்கள். திருவாதிரை நாளன்று வீடுகளில் பெண்கள் நோன்பிருந்து களியும், கூட்டும் சமைத்து கடவுளுக்கும் படைத்து வழிபடுவர். அன்று சிவபெருமான் களியும், கூட்டும் சாப்பிட்டு களியாட்டம் ஆடி, கூடி நின்ற பக்தர்களுக்கு தில்லை மூவாயிரவர் எனப்படும் சிவனடியார்க்கு தரிசனம் கொடுத்ததாக ஐதீகம். திருவாதிரை நாளன்று சிவபெருமானுக்கு படைத்த களியை பிரசாதமாக உண்ணுவதில் பெண்களுக்குத்தான் முன்னுரிமை. கடவுள் எதிரில் ஒரு வாழையிலையையும், வீட்டிலுள்ள கட்டுக் கிழத்தியாருக்கும், கன்னிப் பெண்களுக்கும் வாழையிலைகள் போடப்பட்டு, இலை நுனியில் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் வைப்பர். கடவுளுக்கு நிவேதனம் செய்து அப்படியே பெண்களும் தங்களது இலைகளுக்கு நீர் சுற்றி களி நிவேதனம் செய்து வணங்கி சாப்பிடுவர். சாப்பிட்டு முடித்த பின் தங்களின் கணவரை அழைத்து வணங்கி ஆசி பெறுதல் மரபு. பிறகு வீட்டில் உள்ள ஆண்களுக்கு பிரசாதம் பரிமாறப்படும். திருவாதிரைக் களி பிரசாதம் சாப்பிட்டால் மிகவும் விசேஷமாகும். திருவாதிரைக் களியை திருடியாவது தின்ன வேண்டும் என்று ஒரு வழக்கு (பழமொழி) இருக்கிறது. இந்த சிறப்பு மிகுந்த களியை எப்படி சமைப்பது என்று சிலருக்கு தெரிய வாய்ப்பில்லை. அதனால் களி செய்வதின் செயல்முறையைப் பார்ப்போம். களி செய்யத் தேவையான பொருட்கள் பச்சரிசி, வெல்லம் தூளாக்கியது. துவரம் பருப்பு, தேங்காய் துருவல், ஏலக்காய், முந்திரி, திராட்சை, கனிந்த பூவன் வாழைப்பழம், பச்சை கற்பூரம், நெய் ஆகியவைகளை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 12) செய்முறை அரிசியை சிவக்க வறுத்து நொய் (குருணை)யாகப் பொடியாக்க வேண்டும். துவரம் பருப்பையும் சிவக்க வறுக்க வேண்டும். அடி கனமான பாத்திரத்தில் தேவையான அளவுக்கு தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றி, துவரம் பருப்பையும் அதில் போட்டு கொதிக்க விட வேண்டும். தண்ணீர் கொதித்ததும் தேவையான உப்பைப் போட்டு, அரிசி நொய்யை கொஞ்சம் கொஞ்சமாகத் தூவி…
‘அட்சயம்’ என்னும் வடமொழிச் சொல்லுக்கு ‘அள்ள அள்ளக் குறையாது’ என்பது தான் பொருள். சித்திரை மாதம், அமாவாசையைத் தொடர்ந்து வரும் திரிதியை அன்று அட்சய த்ரிதியை அனுசரிக்கப்படுகிறது. இந்தப் புண்ணிய தினமான, திரிதியை நாள், நமக்குத் தெரிந்ததும், தெரியாததுமான அநேக விஷயங்களை நாம் அறிந்து கொள்ள உதவும் உன்னத நாளாகத் திகழ்கிறது. இன்றைய தினத்தில்தான்… ஸ்ரீ வேதவியாசர், மகாபாரதம் என்னும் அற்புதமான காவியத்தை எழுதத்தொடங்கினார். ஸ்ரீ மகாவிஷ்ணுவின், ஆறாவது அவதாரமான, ஸ்ரீ பரசுராமரின் அவதாரம் நிகழ்ந்தது. குபேரன், தான் இழந்த செல்வங்களைத் திரும்பப் பெற்றார். ஒரு பிடி அவலுடன், குசேலர், ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை சந்தித்த நாள். ஸ்ரீ கங்காமாதா, பூமியைத் தொட்ட நாள். ஸ்ரீ ஆதிசங்கரர், கனகதாரா ஸ்தோத்திரத்தை நமக்கு அருளிய நாள். இப்படி பல அம்சங்கள் இந்த நன்னாளில் அமைந்திருந்தாலும், முக்கியமான ஒரு தேவ நிகழ்வை, நாம் மறந்துவிடக்கூடாது. அதுதான், நம்முடைய அத்யாவசியத் தேவையான உணவை அதாவது அன்னத்தை, நமக்குக் குறைவில்லாமல் அன்றாடம் வழங்கி அருளும் ஸ்ரீ அன்னபூரணி மாதா அவதாரம் செய்த நாள்தான் அது. காரியம் என்று ஒன்று இருந்தால், அதற்குக் காரணம் இல்லாமல் இருக்காது அல்லவா? ஒருமுறை, கைலாயத்தில், ஸ்ரீ சிவபெருமானும், ஸ்ரீ பார்வதியும் சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்தார்கள். ஆடும்பொழுது, பந்தயத்தில், தன்னுடைய சூலாயுதம் முதற்கொண்டு அனைத்தையும், உமாதேவியிடம், மகேசன் இழந்தார். செய்வதறியாது, மகேசன், ஸ்ரீ விஷ்ணுவை, அணுகி, உபாயம் கேட்டார். மீண்டும் ஒரு முறை சொக்கட்டான் ஆடினால், இழந்ததைப் பெறலாம் என்று பரமாத்மா கூறினார். அதன்படி, கங்காதரன், அன்னையுடன், மீண்டும், விளையாடத் தொடங்கினார். ஸ்ரீ கேசவன் கூறியது போல், கேட்ட விருத்தம் விளையாட்டில் விழ, ஸ்ரீ சிவபெருமானும் இழந்ததை மீட்டுக் கொண்டார். ஸ்ரீ பார்வதி தேவி, கணவர் தப்பாட்டம் ஆடி, தன்னை ஏமாற்றி, வெற்றி கண்டார் என்று கோபப்பட்டார். அதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 28) அந்த சமயத்தில், அங்கு, ஸ்ரீ விஷ்ணு வருகை புரிந்தார். நடந்தது எல்லாமே மாயைதான் என்பதைக்கூறி இருவரையும் சமாதானப்படுத்தினார். ஆனால், எல்லாமே மாயை என்பதில் அன்னைக்கு உடன்பாடு இல்லாமல் இருந்தது. ‘பூலோகத்தில், ஒரு ஜீவனின் வாழ்வாதாரத்திற்கு ஆகாரம் என்பது அத்யாவசியமாகிறது. அது கூட மாயை ஆகுமா?’ என்று தன் பதியிடம் தன் சந்தேகத்தைக் கேட்டார், ஸ்ரீ பார்வதி. பதியின் ‘இதிலென்ன சந்தேகம்?’ என்னும் பதிலைக் கேட்டதும், ‘நான் மாயை இல்லை என்பதை நிரூபித்துக் காட்டுகிறேன்’ என்று கூறி, சட்டென்று மறைந்து போனார், உமை. அவ்வளவுதான். சக்தியின் தயை இல்லாமல், உணவு பொருட்களின் விளைச்சல், உற்பத்தி நின்றது. ஆகாரம் இன்றி ஜீவராசிகள் அவதிப்படுவதை, அன்னை, கண்ணுற்றார். லோகமாதாவிற்கு, தன் குழந்தைகள் பசியால்வாடுவதை காணப்பொறுக்கவில்லை. காசி என்னும் மகா புண்ணிய பூமியில், அட்சய திருதியை அன்று, ஸ்ரீ அன்னபூரணியாக, அவதாரம் செய்தார். அங்கு, தானே தன் கைப்பட அன்னம் தயார் செய்து, எல்லாருக்கும் வயிறு நிறைய ஆகாரம் அளித்தார். ஸ்ரீ…
2023-ம் ஆண்டுக்கான மஹாளயபட்சம் இன்று(செப்.30) முதல் தொடங்கியுள்ளது. மஹாளயபட்சமான 15 நாள்களும் எப்படி இருக்க வேண்டும், தர்ப்பணம் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று தெரிந்துகொள்ளலாம். மஹாளய பட்சம் நாளில் ஒவ்வொருவரும் அவரது வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் சண்டை போடுவது, தகாத சொற்களைப் பேசுவது, புலால் உண்ணுதல், கள், மது குடித்தல் ஆகியவற்றைக் கட்டாயம் தவிர்த்தல் வேண்டும். நாம் எந்த அளவிற்குத் தூய்மையாக இருக்கிறோமோ, ஒற்றுமையாக இருக்கிறோமோ, பித்ருக்களைச் சிரத்தையுடன் பூஜிக்கிறோமோ அந்த அளவிற்கு இந்தப் பதினைந்து நாள்களும் நம்முடன் தங்கியிருக்கும் நம் பித்ருக்கள், மனமகிழ்ச்சியையும், மனநிறைவையும் அடைவார்கள். பித்ருக்கள் இவ்விதம் இந்தப் பதினைந்து நாள்களும் நாம் குடும்பம் நடத்தும் நேர்மையைக் கண்டு மனத்திருப்தி அடைவதன் பலனைப் பித்ரு தேவதைகள் அவர்களிடம் பெற்று நம்மிடம் சேர்க்கிறார்கள். மஹாளயபட்ச திதியில் தர்ப்பணம் செய்தால் கிடைக்கும் பலன்கள் * முதல்நாள் – பிரதமை திதியில் தர்ப்பணம் செய்தால் பணக்கஷ்டம் தீர்ந்து, பணம் வந்து சேரும். * இரண்டாம் நாள் – துவிதியை திதியில் தர்ப்பணம் செய்தால் ஒழுக்கமான குழந்தைகள் பிறப்பார்கள். * மூன்றாம் நாள் – திரிதியை திதியில் தர்ப்பணம் செய்தால் நாம் நினைத்த காரியங்கள் நிறைவேறும். * நான்காம் நாள் – சதுர்த்தி திதியில் தர்ப்பணம் செய்தால் எதிரிகளால் தொல்லை இல்லாமல் வாழலாம். * ஐந்தாம் நாள் – பஞ்சமி திதியில் தர்ப்பணம் செய்தால் செல்வம் சேரும், நியாயமான சொத்துகள் கிடைக்கும். வீடு, நிலம் முதலான சொத்துக்கள் வாங்கி செல்வச் செழிப்புடன் வாழலாம். * ஆறாம் நாள் – சஷ்டி திதியில் தர்ப்பணம் செய்தால் பேரும் புகழும் கிடைக்கும். இதையும் படிக்க: முன்னோர்களை வீட்டிற்கு அழைக்கத் தயாராகுங்கள்: மஹாளயபட்சம் ஆரம்பம்!அறுபடை வீடு கொண்ட திருமுருகா… * ஏழாம் நாள் – சப்தமி திதியில் தர்ப்பணம் செய்தால் சிறந்த பதவிகளை அடையலாம். உத்தியோகத்தில் தலைமைப் பதவி கிடைக்கும், தடைப்பட்ட பதவி உயர்வு கிடைக்கும். * எட்டாம் நாள் – அஷ்டமி திதியில் தர்ப்பணம் செய்வதால் அறிவாற்றல் பெருகும். * ஒன்பதாம் நாள் – நவமியில் தர்ப்பணம் செய்தால் திருமணத் தடை நீங்கும். சிறந்த வாழ்க்கைத்துணை அமைவார்கள். குடும்பத்திற்கேற்ற மருமகள் அமைந்து புத்திசாலியான பெண் குழந்தைகள்பிறக்கும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். * பத்தாம் நாள் – தசமி திதியில் தர்ப்பணம் செய்தால் நீண்ட நாட்களாக இருந்து வந்த ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். * பதினொன்றாம் நாள் – ஏகாதசி திதியில் தர்ப்பணம் செய்வதால் படிப்பு, விளையாட்டு மற்றும் கலையில் வளர்ச்சி அடைவார்கள். * பனிரெண்டாம் நாள் – துவாதசி திதியில் தர்ப்பணம் செய்வதால் தங்கநகை சேர்தல், விலை உயர்ந்த ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். * பதின்மூன்றாம் நாள் – திரயோதசி திதியில் தர்ப்பணம் செய்வதால் பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்க ஆயுள், ஆரோக்கியம், நல்ல தொழில் போன்றவை சிறப்பாக இருக்கும். * பதினான்காம் நாள்…
ஒற்றைக் கண்ணில் பார்வை பெற்று சில நாள்கள் காஞ்சிபுரத்தில் தங்கியிருந்தார் சுந்தரர். திருவாரூர் செல்ல வேண்டிய ஆசையால், தன் பயணத்தைத் தொடர்ந்தார்.கண் பார்வை குறையோடு உடலிலும் தோலிலும் நோய் கண்டிருந்தது. பயணத்தாலும் களைப்பாலும் நோய் அதிகப்பட்டிருந்தது. திருவாவடுதுறையில் வணங்கி வழிபட்டுவிட்டுத் திருத்துருத்தி என்னும் தலத்தை அடைந்தார். தன் உடலின் மீதுள்ள நோய் நீங்க வேண்டுமென்று வேண்டினார். இறைவன் – உத்தரவேதீஸ்வரர்இறைவி – மிருதுமுகிழாம்பிகை சிவபெருமான் சுந்தரரை நோக்கி, "நம்பி! இந்தக் கோயிலின் வடக்குப் பக்கத்தில் ஒரு தீர்த்தம் உள்ளது. அதில் மூழ்கு. உன் உடல் நோய் தீரும்” என்று திருவாக்கு அருளினார். சுந்தரரும் அக்குளத்தில் மூழ்கி எழுந்தார். அவரின் உடல்நோய் நீங்கியிருந்தது. மேனி, பொன்னாய்ப் பிரகாசித்தது. உடனே திருக்கோயிலுக்குள் சென்று தன் நன்றியைக் காட்டப் பதிகம் பாடினார்.மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 26) திருத்துருத்தியில் உடல்பிணி நீங்கப் பெற்ற சுந்தரர் பாடிய பதிகம் "மின்னுமா மேகங்கள் பொழிந்திழிந்து அருவிவெடிபடக் கரையொடும் திரைகொணர்ந்து எற்றும்அன்னமாங் காவிரி அகன்கரை உறைவார்அடியிணை தொழுதெழும் அன்பராம் அடியார்சொன்னவாறு அறிவார் துருத்தியார் வேள்விக்குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்என்னைநான் மறக்குமாறு எம்பெரு மானைஎன்னுடம்பு அடும்பிணி இடர்கெடுத் தானை” திருத்துருத்தி தலத்தினைச் சென்றடையும் வழி:குத்தாலத்திற்குப் பக்கத்தில் உள்ளது. மயிலாடுதுறை – மகாராஜபுரம் சாலையில் உள்ளது. நன்றி Hindu சமுதாயத்தில் எனது நிலை எப்படி இருக்கும்?
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 12 கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி நினைத்து முலைவழியே நின்றுபால் சோர நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்! பனித்தலை வீழநின் வாசல் கடைபற்றி சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக் கினியானைப் பாடவும்நீவாய் திறவாய் இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம் அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய். பாடியவர் – பவ்யா ஹரி விளக்கம்: இதுவும் துயிலெடைப் பாசுரமாகும். இந்தப் பெண்ணின் வீடும் செழிப்பு மிக்கது. தன்னுடைய கன்றை நினைத்துக்கொண்டு (அது பாலருந்திய பின்னரும்), எருமை மாடானது தானே பாலைப் பொழிகிறது; இதனால், வீட்டின் முற்றமெல்லாம் சேறாகிறது. இப்படிப் பொங்கப் பொங்கப் பால் பொழியும் மாடுகள் நிறைய உடைய கோபாலரின் தங்கை இவள். “அதிகாலை நேரத்துப் பனி, எங்களின் தலையில் விழும்படியாக உன்னுடைய வீட்டிற்கு வந்து அழைக்கிறோம். சீதைக்கு நேர்ந்த துன்பத்தை எண்ணிச் சினம் கொண்டு, அத்துன்பத்திற்குக் காரணமான இலங்கேச்வரன் இராவணனை அழித்தவனான மனத்துக்கு இனியான் இராமன் பெயர்களைச் சொல்லிப் பாடுகிறோம். வாயைத் திறக்கமாட்டாயா? எங்கள் இசையொலி கேட்டு, பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லோரும் எட்டிப் பார்க்கிறார்கள். இன்னமும் உறங்குகிறாயே’ என்று கிண்டல் பேசுகிறார்கள். பாசுரச் சிறப்பு: கீழ்ப்பாசுரத்திலும் இப்பாசுரத்திலும் “செல்வம்’ குறித்த குறிப்புகள் உள்ளன. செல்வம் என்பது பணம், காசு போன்றவை அல்ல. இறைத்தொண்டே செல்வம். இவ்வகையில் ஆயர்பாடியர் யாவரும் நற்செல்வம் கொண்டவர் ஆவர். கோபியர் பலருடன் விளையாடும் கண்ணன், கண்ணுக்கினியான்; ஏக பத்தினி விரதனான இராமன் மனத்துக்கினியான் என்னும் விளக்கம் சுவை கூட்டும். கீழே பால் வெள்ளம் (முற்றத்துச் சேறு), மேலே பனி வெள்ளம் (பனித்தலைவீழ) நடுவே மால் வெள்ளம் (உள்ளத்தில் திருமால் எண்ணம்) என்பது இப்பாசுரத்தின் பெருமை. ஸ்வாபதேசத்தில், பொய்கை ஆழ்வாரை இப்பாசுரம் குறிக்கும். அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – பாடல் 12 மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 26) ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும் தீர்த்தன்நற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும் கூத்தன்இவ் வானும் குவலயமும் எல்லோமும் காத்தும் படைத்து கரந்தும் விளையாடி வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள் ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப் பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம் ஏத்தி இருஞ்சுனை நீராடேலோ ரெம்பாவாய். பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன் பாடியவர் – மயிலை சற்குருநாதன் பாடியவர் – மயிலாடுதுறை சிவகுமார் விளக்கம்: இறைவனைத் துதித்துப் பாடுவதே தங்களின் நோன்பு என்பதாக இப்பெண்கள் கூறுகிற பாடல். “கட்டப்பட்ட இப்பிறவியின் துன்பம் தீருவதற்காக, நாம் ஆர்ப்பரித்து ஆடுகிற தீர்த்தமாகத் திகழ்பவன்; தில்லைத் திருத்தலத்தின் சிற்றம்பலத்தில், தீயைக் கையிலேந்தி ஆடுகிற கூத்தன்; அண்டம், கோள்கள், உலகங்கள் என யாவற்றையும் படைத்து, காத்து, அழித்து விளையாடுபவன்; இத்தகைய இறைவனை வாயாரப் பாடி, வளைகளும் மேகலை போன்ற ஆபரணங்களும் ஆரவாரிக்க, கூந்தலின் மேல் வண்டுகள் ரீங்கரிக்க, மலர்களைக்கொண்ட பொய்கையில் மூழ்கி, இறைவன் திருவடிகளை வணங்குகிறோம்’ என்று விளக்குகிறார்கள். பாடல் சிறப்பு: பந்தம், பாசம் போன்றவற்றால் கட்டப்பட்ட பிறவி…
கேதுவின் ஆன்மிக தாக்கம் ஒவ்வொரு வீட்டின் வழியாகவும் “சரணடைதல்” மற்றும் “மாற்றம்” மட்டுமே கற்பிக்கும் கேது… வேத ஜோதிடத்தில் மாய நிழல் கிரகமாகவும், பெரும்பாலும் கடந்த கால கர்மா, ஆன்மிக விடுதலை மற்றும் பற்றின்மை ஆகியவற்றுடன் தொடர்புடையது. ஒருவரின் ஜனன ஜாதகத்தில் கேது எங்கிருந்தாலும், அது பிரிக்க, கரைக்க அல்லது பிரிக்க முனைகிறது. அந்த குறிப்பிட்ட வீடு சரணடைதல் அவசியமான ஒரு களமாக மாறுகிறது. அந்தப் பகுதியை வெல்ல அல்லது கட்டுப்படுத்த முயற்சிப்பதற்கு பதிலாக, ஒருவர் எதிர்ப்பு இல்லாமல் வாழ்க்கையை வெளிப்படுத்த அனுமதிக்கும்போது உண்மையான அமைதி வருகிறது. கேது நோக்கமின்றி அழிப்பதில்லை; அது அடக்குகிறது, மென்மையாக்குகிறது மற்றும் விழித்தெழுகிறது. முதல் வீட்டில் கேது: (சுய அடையாள பிம்பத்தை விட்டுவிடுங்கள்) சுய அடையாளத்திலிருந்து பிரிந்து, ஜாதகர் தனது ஆளுமை எப்படி இருக்கிறது என்பதைப் பற்றி குழப்பம் அடைகிறார், பெரும்பாலும் தங்கள் சொந்த அடையாளத்தை தேடி மற்றவர்களைப் பின்பற்ற முயற்சிக்கிறார். தந்தைக்கு பதவி உயர்வு கிடைத்திருக்கலாம். மூத்த சகோதரர் சொந்த ஊரிலிருந்து மிகவும் தொலைவில் இருப்பார் அல்லது தகவல் தொடர்பு மோசமாக இருக்கும். ஜாதகரின் சம்பளம் பெரும்பாலும் சரியாகப் பயன்படுத்தப்படுவது இல்லை, மாறாகப் பயனற்ற விஷயங்களில் வீணடிக்கப்படுகிறது. கேது முதல் வீட்டில் இருக்கும்போது, அது சுய அடையாளம், தோற்றம் மற்றும் மற்றவர்கள் உங்களை எப்படி உணர்கிறார்கள் என்பதைக் குறிக்கிறது, “நான் யார்” என்ற வழக்கமான உணர்வு தெளிவாகத் தெரியவில்லை. இந்த நிலையைக் கொண்டவர்கள் பெரும்பாலும் தங்கள் தனிப்பட்ட உருவத்தைப் பற்றி நிச்சய மற்றவர்களாக உணர்கிறார்கள் அல்லது பாரம்பரிய சொற்களில் தங்களை வரையறுப்பதில் சிரமப்படுகிறார்கள். ஒரு நிலையான அடையாளத்தைத் துரத்துவதற்குப் பதிலாக, அவர்கள் தங்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதில் மிகுந்த அக்கறை கொள்கிறார்கள். எனவே, இங்கு தாம் பெற்ற பட்டங்கள், தாம் கொண்ட உறவுகள் மற்றும் தனக்குற்ற பதவிகளை அகற்றுவதற்கான ஒரு ஆன்மிக அழைப்பு பெரும்பாலும் உள்ளது. ஒருவராக இருக்க வேண்டும் என்ற உந்துதலை நீங்கள் எவ்வளவு அதிகமாக விடுவிக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக உங்கள் உயர்ந்த சுயத்தை வெளிப்பட அனுமதிக்கிறீர்கள். 2 ஆம் வீட்டில் கேது (பொதுவான பாதுகாப்பு மீதான பிடியை விடுவிக்கவும்) தொடர்பு பிரச்னைகள், ஜாதகரின் பற்களில் பிரச்னைகள் ஏற்படலாம். சில சமயங்களில் ஜாதகர் தங்கள் குழந்தைகளிடமிருந்து பிரிக்க வேண்டியிருக்கும். பூர்வீக சொத்துக்கள் அதிக நன்மையை தராமல் போகலாம். வாகனம் திடீரென உடைந்து போகலாம் அல்லது பழைய சொத்திலிருந்து சில அறியப்படாத செலவுகள் வரலாம். ஜாதகரின் முகம் அல்லது புருவப் பகுதியில் வெட்டுக்கள் ஏற்படலாம். இரண்டாவது வீடு பேச்சு, குடும்ப பரம்பரை, உடைமைகள் மற்றும் மதிப்புகளை நிர்வகிக்கிறது. இந்த பகுதிகளில் உள்ள பற்றுகளை விடுவிக்க கேது இங்கே ஒரு உந்துதலைக் கொண்டுவருகிறார். ஜாதகர் குரல் கேட்கப்படாததாக உணரலாம், அல்லது பொருள் செல்வம் மற்றும் குடும்பத்துடன் ஜாதகர் உறவு துண்டிக்கப்படலாம் அல்லது தொலைவில் இருக்கலாம். நிதி அல்லது குடும்ப இயக்கவியலை நுண்ணிய முறையில் நிர்வகிக்க முயற்சிப்பது பெரும்பாலும் பின்வாங்கும். அதற்குப் பதிலாக,…
ஒருவருக்கு வாழ்க்கையில்அவதாரம்! குறுந்தொடர் 4குறிப்பிட்ட காலத்தில் நடைபெறும் சுப நிகழ்வுகள் அனைத்தும் சீராக நடந்தால் பேரானந்தமே. நன்றி Hindu தம்பதியருக்குள் ஏற்படும் பிரிவினையை, திருமணப் பொருத்தம் கூறுமா?
2021ஆம் ஆண்டு நடைபெறும் குரு பெயர்ச்சி தொடர்பான பொதுப் பலன்களை ஜோதிடர் கே.சி.எஸ். ஐயர் கணித்து வழங்கியுள்ளார். இந்த பிலவ வருஷம் தட்சிணாயனம் சரத் ருது கார்த்திகை மாதம் 4-ஆம் தேதி (20.11.2021) சனிக்கிழமை, கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) துவிதியை திதி, கடக லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம், அமிர்த யோகம் கூடிய சுபயோக சுபதினத்தில், உதயாதி 44 நாழிகை அளவில் இரவு 11.28 மணிக்கு சூரிய பகவானின் ஹோரையில், அவிட்டம் நட்சத்திரம் 2-ஆம் பாதத்திலிருந்து அவிட்டம் நட்சத்திரம் 3-ஆம் பாதத்திற்கு அதாவது “பிரகஸ்பதி’ என்கிற தேவர்களுக்கு ஆசானாகிய குரு பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். இதையும் படிக்கலாமே.. குரு பெயர்ச்சி: மேஷம், ரிஷபம், மிதுனம், கடக ராசிகளுக்கான பலன்கள் இங்கு 12. 04. 2022 வரை சஞ்சரித்துவிட்டு 13. 04. 2022 அன்று பிற்பகல் 03.48 (ஐஎஸ்டி) மணி அளவில் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். கடக லக்னத்திற்கு லக்னாதிபதியான சந்திர பகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் சுய சாரத்தில் (ரோகிணி நட்சத்திரம்) உச்சம் பெற்றமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். இதனால் லக்னாதிபதி உயர்ந்த ஸ்தான பலத்தைப் பெறுகிறார் என்று கூறவேண்டும். லக்னாதிபதி பலம் பெற்றிருப்பதால் மற்ற கிரகங்களுக்கு அமைகின்ற யோகங்கள் பரிமளிக்கும் என்பது ஜோதிட விதி. லக்னத்திற்கோ அல்லது ராசிக்கோ கேந்திர தானங்களில் (1, 4, 7, 10) சுபக் கிரகங்கள் இருப்பது சிறப்பாகும். “”சந்திரமா மன5ஸோ ஜாத” அதாவது தேவர்கள் முதலான அனைவருக்கும் மனமாக இருப்பவர் என்று வேதம் உரைக்கிறது. அதோடு அவரே தனு (உடல்) காரகருமாகிறார். அதனால் சந்திர பகவான் நம் மனித உடலையும், மனதையும் ஆட்டுவிப்பவர் என்றால் மிகையாகாது. நவகிரகங்களில் சூரிய பகவானுக்கு அடுத்த நிலையில் இருப்பவர். சிவபெருமானின் வலது கண் சூரியன்; இடது கண் சந்திரன்; நெற்றிக்கண் செவ்வாய் பகவான் ஆவதால், எந்த ஒரு ஜாதகத்திலும் இம்மூவரின் இணைவு “திரிநேத்ர யோகம்’ என்றழைக்கப்படுகிறது. பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் (கடக லக்னத்திற்கு யோக காரகர் என்கிற அந்தஸ்தில் இருப்பவர்) சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் குரு பகவானின் சாரத்தில் (விசாகம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் மூலத்திரிகோண ராசியான மேஷ ராசியை அடைகிறார். அதோடு சுக ஸ்தானத்திலமர்ந்து தொழில் ஸ்தானத்தைப் பார்வை செய்வது சிம்மாசன யோகமாகும்! இதனால் சந்தான (குழந்தைகள்) அபிவிருத்தி, திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளும், தன தானிய லாபமும், அனைத்துச் செயல்களும் விரைவாக நிறைவேறுதல் ஆகியவை உண்டாகும். பத்தாமதிபதி, ஒன்பதாமதிபதியின் சாரத்திலமர்வதும் தர்மகர்மாதிபதி யோகத்தின் சாயலையும் கொடுக்கிறது. வம்பு வழக்குகளிலும் எதிர்பாராத வெற்றியுண்டாகும். மனித நேயத்துடன் சமுதாயத் தொண்டுகள் செய்து, பெயர் புகழ் அடையும் யோகமுண்டாகும்! மேலும் எப்படிப்பட்ட நெருக்கடிகள் ஏற்பட்டாலும் அதை எதிர்கொண்டு சமாளிக்கும் ஆற்றலும் துணிவும் ஏற்படும் என்றால் மிகையாகாது. ருணம் (கடன்), ரோகம் (வியாதி),…
12 ராசி அன்பர்களுக்கும் புரட்டாசி மாத பலன்களை தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். மேஷம்: கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராஹூ – ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய், புதன் (வ) – களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் – அஷ்டம ஸ்தானத்தில் கேது – தொழில் ஸ்தானத்தில் சந்திரன், குரு (வ), சனி (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றம்: 3-10-2021 அன்று சுக்ர பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: நியாயமான திட்டங்களுக்கு ஆதரவு அளித்து அடுத்தவர் மதிப்பை பெறும் மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் ஆக்க பூர்வமான யோசனைகளை செயல்படுத்தி எதிலும் வெற்றி காண்பீர்கள். தெளிவான மனநிலை இருக்கும். சாமர்த்தியமாக செயல்பட்டு சாதகமான பலன் பெறுவீர்கள். செயல்திறன் அதிகரிக்கும் ஆனால் உங்களுக்கு எதிராக சிலர் செயல்படும் சூழ்நிலை இருப்பதால் கவனம் தேவை. நெருக்கடியான சமயத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பது தாமதப்படும். தொழில், வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். சில நேரங்களில் முக்கிய முடிவு எடுப்பதில் தயக்கம் காட்டுவீர்கள். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்க பெறுவார்கள். ஆனால் அலைச்சல் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்க மனம் விட்டுபேசுவது நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும். அவர்களிடம் நிதானமாக பேசுவது நன்மை தரும். பிள்ளைகளிடம் கோபம் காட்டாமல் அன்பாக பேசுவது நல்லது. மகிழ்ச்சி உண்டாகும். பெண்கள் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். வீண் அலைச்சல் உண்டாகும். கலைத்துறையினருக்கு தகுந்த மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். விருதுகள் கிடைக்கும். தேவையான பண உதவி கிடைக்கும். கடன் தொல்லை குறையும். தொழில் போட்டிகள் நீங்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். எடுத்திருக்கும் அரசாங்க வேலைகள் மூலம் நன்மை உண்டாகும். மாணவர்களுக்கு செயல்திறமை அதிகரிக்கும். உயர்கல்வி கற்பவர்கள் கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது. அஸ்வினி: இந்த மாதம் கடன் பிரச்சனைகள் தொல்லை தராமல் இருக்கும். எதிர்பார்த்த பணவசதி கிடைக்கும். உங்களது செயல்களுக்கு இருந்த எதிர்ப்புகள் நீங்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். பரணி: இந்த மாதம் தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். எதிர்பார்த்த பணவரத்து இருந்தாலும் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். போட்டிகள் தொல்லை தராமல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து காணப்படுவார்கள். கார்த்திகை 1ம் பாதம்: இந்த மாதம் வேலையில் திறமைக்கு பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு இருந்து வந்த நோய் நீங்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். பரிகாரம்: ஸ்ரீசரஸ்வதி தேவதையை பூஜித்து வர அறிவு திறமை அதிகரிக்கும். கல்வியில் வெற்றி உண்டாகும்….
ஒரு மனிதன் என்றும் இளமையாக, திடமாக, ஆரோக்கியமாக இருக்க உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், புரதம், கார்போஹைட்ரேட்கள், தாது உப்புகள், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கொழுப்பு, சர்க்கரை சரியான விகிதாச்சாரத்தில் இருக்க வேண்டும். முக்கியமாக இவற்றில் கெட்ட கொழுப்பை அதிக்கப்படுத்தும் கார்போஹைட்ரேட் உணவுகள் உண்ணுவதால் உடல் பருமன் கூடும். உடல் எடை கூடுவதால் மனம் மற்றும் உடலில் சுலபமாக நோயின் தாக்கம் ஏற்படுத்தும். இதனால் ஒருவர் எந்த செயலையும் சீராக செய்ய முடியாது. ஆண்களை விட பெண்களுக்குகே இந்த பிரச்னை அதிகம் ஏற்படுத்தும். உடலில் முக்கியமாகப் பெருத்த வயிறு என்பது நோயின் தாக்கம் அதிகமாகும். ஜோதிட ஆராய்ச்சியில் ஒருவரின் உடல் பருமனாக இருக்க கிரகங்களோடு பாவங்களையும் பார்ப்போம். உடல்வாகு, நிறம், குணம் அனைத்தும் லக்கினாதிபதி மற்றும் அங்குள்ள கிரகங்களைக் கொண்டு சொல்லப்படும். அவற்றில் உடல் என்று கூறப்படும் சந்திரன் அதி முக்கியமாகும். இந்த பிரபஞ்சத்தில் சந்திரன், சுக்கிரன் ராகுவின் கலியாட்டத்தில் ஒருவருக்கு பேராசை, பணம் மற்றும் ஆடம்பர மோகத்தில் உடலின் ஆரோக்கியத்தைத் தவற விட்டுவிடுகிறோம். இலை போட்டு நிதானமாக வீட்டுச் சாப்பாட்டைச் சாப்பிடும் காலம் போய், நின்றபடியே பரோட்டா, பர்கர், பக்கெட் பிரியாணி, பானிபூரி என்று காலம் தவறி சாப்பிடுவது என்பது வழக்கமாகிவிட்டது. படிக்க: ஜோதிட ரீதியான பரிகாரங்களை எப்போது செய்ய வேண்டும்? இந்த கலிகாலத்தில் சிலசமயம் ஜாதகரின் கிரகங்களின் செயலையே திணற வைக்கிறது. ஒருசிலரே தங்கள் உடல் சீராக இருக்க BMI (உடல் நிறை குறியீட்டெண்), சரியான முறையில் வைத்திருப்பார்கள். ஜாதகத்தில் கட்டுக்கோப்பாக இருந்தாலும் இடத்திற்கு ஏற்ப உணவு பழக்கவழக்கத்தில், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தங்கள் உடல் பருமனாக மாறுபடும். முக்கியமாக திருமணம் ஆன பெண்கள், குழந்தை பெற்ற பெண்கள் எளிதில் உடல் பருமனை நோக்கிச் சென்றுவிடுகிறார்கள். இது அவரவர் தசை புத்திக்கு ஏற்ப மாறுபடும். குரு எங்கு தொடர்பு கொள்ளுகிறாரோ அங்கு உள்ள பாவ அடிப்படையில் அந்த பாகம் மட்டும் பெருத்துக் காணப்படும். ஓபிசிட்டி எதனால் என்று ஆராயும்பொழுது ஒரே நாற்காலியில் ஸ்திரமாக அமர்ந்து வேலை செய்வது, உணவுப் பழக்கம், சரியான தூக்கமின்மை, மரபணு முறைப்படி, திருமணத்திற்குப் பிறகு ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மை என்று பல்வேறு வகையில் பிரிக்கப்படுகிறது. நீர் கிரகங்களான சந்திரன் சுக்கிரன் மற்றும், குரு (கொழுப்பு கிரகம்) அவற்றோடு ராகு சேரும்பொழுது அதிகப்படியான உடல் வளர்ச்சியை ஏற்படுத்தும். பஞ்ச பூதத்தில் உள்ளடங்கிய நீர் மற்றும் ஆகாய தத்துவ கிரகங்களின் காரகத்துவத்தை கட்டுப்படுத்தினால் உடலின் அளவு குறைக்கப்படும். உடலுக்கு ஏற்ப வெப்ப கிரகங்களான சூரியன் செவ்வாயின் உஷ்ணத்தால் நீர் வெளியேறும்பொழுது உடல் எடை குறைக்கப்படலாம். அதாவது சூட்டு தன்மை கொண்ட உணவு வகைகளுடன், பச்சைக் காய்கறிகள், நல்ல கொழுப்பு கொண்ட உணவுகள், இயற்கை சர்க்கரை கொண்ட காய்கறிகளை உட்கொள்ளலாம். உடல் கட்டுக்கோப்பாக இருக்க சனி மற்றும் கேது கிரக செயல்களும் உதவியாக இருப்பார்கள். அதாவது இரும்பு பொருள்களை கொண்டு உடற்பயிற்சி, தியானம்/யோகா, சமபங்கு தூக்கம் என்று அனைத்து…
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 29 சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள்கேளாய்! பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய். பாடியவர் – பவ்யா ஹரி விளக்கம்: நோன்பு தொடங்கிய நாள் முதல், பறை என்று பரிசுகளைப்பற்றிக் கூறிக்கொண்டேயிருந்த பெண்கள், இப்பாசுரத்தில்தான், தாங்கள் நாடுகிற பரிசு என்ன என்பதைத் தெளிவாக உரைக்கிறார்கள். "அதிகாலைப் பொழுதில் வந்து உன்னை வணங்கி, உன்னுடைய திருவடிகளைப் போற்றி நாங்கள் நிற்பதற்கான காரணத்தைக் கேளாய். பசுக்கூட்டத்தை மேய்க்கும் ஆயர்குலத்தில் பிறந்துள்ள நீ, எங்களை உனக்கான தொண்டர்களாகக் கொள்ளாமல் விட்டுவிடாதே. ஏதோ இப்போதைக்குப் பரிசு பெறுவதற்காக வந்தோம் என்று எண்ணாதே. எந்தக் காலமானாலும், எத்தனைப் பிறவிகளானாலும் உன்னோடு உறவு கொண்டவர்களாக இருப்பதையே யாசிக்கிறோம். என்றென்றும் உனக்கு அடிமைகளாக இருப்போம். இவைதவிர வேறு ஏதேனும் விருப்பங்கள் எங்களுக்கு இருக்குமானால், அவற்றை மாற்றிவிடு’ என்று கோருகிறார்கள். பாசுரச் சிறப்பு: நோன்பைத் தலைக்கட்டுகிற (நிறைவேற்றுகிற) நிலையில் வைக்கப்படுகிற விண்ணப்பம் இது. குற்றேவல் என்பது சிறு சிறு ஏவல் கூவல் பணிகள். அந்தரங்கக் கைங்கர்யம் (தனித் தொண்டு) என்பார்கள். ஏழேழு என்பதனை 7, 7+7, 7+7 என்று எவ்விதமாகவேனும் கொள்ளலாம். என்றைக்காக இருந்தாலும் எம்பெருமானுக்கு அடிமைகளாகவும் எம்பெருமானின் உடைமைகளாகவும் இருக்க வேண்டும் என்பதே நிரந்தர விண்ணப்பம். செயல் பெரியதா சிறியதா என்பதைக் காட்டிலும், அது செய்யப்படுகிற நோக்கம் முக்கியமானது. எந்தச் செயலாக இருந்தாலும், அளவுக்கும் பார்வைக்கும் சிறியதாகவே இருப்பினும், அச்செயலுள் இருக்கும் அன்பும் பக்தியும் அறமும் ஆர்வமும் முக்கியமானவை. ஆங்கிலக் கவிஞர் மில்டனின் They also serve who stand and wait என்னும் வரியை நினைவூட்டுகிற பாசுரம் (இதே உணர்வைத் திருப்பள்ளியெழுச்சியின் 7ஆவது பாடலில், எது எமைப் பணி கொள்ளும் ஆறு என்னும் வரியில் காணலாம்). நோன்பை நிறைவேற்றிய நிலையில், நோன்பின் பலனை இப்பெண்கள் பெற விருக்கிறார்கள். ஒரு செயலின் பலனை அனுபவிக்கும்போது, அந்தச் செயலைச் செய்ததற்கான பெருமையும், செயல் பலனுக்கான ஆனந்தமும், ஒருவகையான மதர்ப்பைத் தரும். அந்த ஆனந்தமே சுயநலமாக மாறும்; ஆணவமாகத் தலைதூக்கும். இதற்குப் பிராப்ய விரோதம் என்று பெயர். இப்படிப்பட்ட சுயநலம் இல்லாமல், நோன்பென்னும் செயலையும், நோன்பின் நற்பலன்களையும்கூட இறைவனின் திருவடிகளில் அர்ப்பணிக்கிற பாசுரம் இது. ****** ஸ்ரீமாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி – பாடல் 9 விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டாமார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 11) விழுப்பொரு ளேயுன தொழுப்படி யோங்கள் மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே! வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம் கண்ணகத் தேநின்று களிதரு தேனே! கடலமு தேகரும் பேவிரும் படியார் எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே. பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன்…
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 8 கீழ்வானம் வெள்ளென் றெருமை சிறுவீடு மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும் போவான்போ கின்றாரைப் போகாமல் காத்துன்னைக் கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால் ஆவாவென் றாராய்ந்து அருளேலோர் எம்பாவாய்! பாடியவர் பவ்யா ஹரி விளக்கம்: இப்பொழுது எழுப்பப்படுபவள், கண்ணனுக்கு மிகவும் பிடித்தமானவள்; எப்போதும் உற்சாகமாக இருப்பவள். “கீழ்த்திசை வானம் வெளுத்துவிட்டது. பால் கறப்பதற்கு முன்னர், எருமை மாடுகளை ஆயர்கள் அவிழ்த்து விட்டுள்ளனர். அம் மாடுகள், ஆங்காங்கே உள்ள சிறு புல்லை மேய்கின்றன. நோன்புக்குப் புறப்பட்டுவிட்ட பிற பெண்கள், நோன்புக்களம் நோக்கிச் செல்கின்றனர். அவர்களைத் தடுத்து உன்னையும் அழைத்துப் போவதற்காக வந்தோம். பதுமை போன்றவளே, எழுந்திரு. நோன்பியற்றி, குதிரையின் வாயைப் பிளந்தவனை, மல்லர்களோடு போரிட்டு வென்ற தேவாதி தேவனை நாம் வழிபட்டால், நமக்கு என்னவேண்டும் என்பதை ஆராய்ந்து அவன் அருள்வான்’ என்று அழைக்கிறார்கள். பாசுரச் சிறப்பு: பொழுது விடிவதற்கான அடையாளங்களாகப் பறவைகளின் ஒலி, திருக்கோயில் சங்கநாதம், முனிவர்களும் யோகிகளும் இறைவன் திருநாமம் கூறும் மிடற்றொலி, இல்லங்களில் பெண்கள் நடமாடும் ஒலி ஆகியவற்றைக் காட்டிய ஆண்டாள், இப்பாசுரத்தில் எருமைகளின் நுனிப்புல் மேய்தலைக் காட்டுகிறாள். இடையர்கள், அதிகாலை நுனிப்புல் மேய்வதற்காக மாடுகளை விடுவார்கள். அருகிலிருக்கும் புல்வெளியில் சிறிது பொழுதே கிடைக்கும் அவகாசம் இது. நாள் முழுதும் மேய்ச்சல் காட்டில் கிடைப்பது பெருவிடுதலை என்றால், இதைச் சிறு விடுதலை (வீடு=விடுதலை) என்று மாடுகள் நினைக்குமாம். உள்ளுறைப் பொருளில், எம்பெருமானாலேயே “நம்முடையவர்’ என்று பிரியம் காட்டப்பட்டவரும் கலிக்கு விடியலாகத் தோன்றியவருமானநம்மாழ்வாரை இப்பாசுரம் சுட்டுகிறது. அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – பாடல் 8 கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்ராகு – கேது பெயர்ச்சி பலன்கள்: மேஷம் ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும் கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ? வாழியீ தென்ன உறக்கமோ வாய்திறவாய்! ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ? ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை ஏழைபங் காளனையே பாடேலோ ரெம்பாவாய். பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன் பாடியவர் – மயிலை சற்குருநாதன் பாடியவர் – சுந்தர் ஓதுவார் விளக்கம்: சிவபெருமான் பெருமையைப் பாடிக்கொண்டு வந்து புறத்தே நிற்கும் பெண்கள், இப்பொழுது, விடியலின் அடையாளங்களைக் கூறத் தொடங்குகிறார்கள். “வீட்டில் வளர்க்கும் கோழிகள் கூவுகின்றன. குருகுகள் (நாரைகள்) உள்ளிட்ட பிற பறவைகளும் ஒலி எழுப்புகின்றன. மக்களும் விழித்தெழுந்து, திருக்கோயில்களை அடைந்து மங்கலக் கருவியாம் நாகஸ்வரத்தையும் வெண்சங்குகளையும் இசைக்கிறார்கள். ஒப்பற்ற பேரொளியே, ஒப்பற்ற பெருங்கருணையே, ஒப்பற்ற விழுப்பொருளே என்றெல்லாம் வாயார இறைவன் பெருமையைப் பாடுகிறோம். எந்த ஓசைக்கும் நீ எழவில்லையென்றால், இதென்ன பேருறக்கமோ புரியவில்லையே! ஊழிக்காலத்தில் முழு முதல்வனாகவும் மாதொருபாதியனாகவும் திகழ்கிற பெருமானை நாங்கள் பாடுகிறோம். ஒருவேளை இவ்வாறு கிடப்பதுதான் இறைவன் மீது நீ வைத்திருக்கும் அன்போ?’ என்று வினா…
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 28 கறவைகள் பின்சென்று கானம்சேர்ந் துண்போம் அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்றன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம் குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்றன்னோடு உறவேல் நமக்கிங் கொழிக்க ஒழியாது அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்றன்னைச் சிறுபே ரழைத்தனவும் சீறி யருளாதே இறைவா நீதாராய் பறையேலோ ரெம்பாவாய். பாடியவர் – பவ்யா ஹரி விளக்கம்: முந்தைய பாசுரங்கள் இரண்டிலும் தங்களுக்கு என்னென்ன பரிசுகள் வேண்டும் என்று விண்ணப்பித்த பெண்கள், தங்களுக்கு அருளும்படியாகக் கண்ணனிடம் கோரிக்கை வைக்கிறார்கள். “மாடுகளுக்குப் பின்னாலே சென்று, மேய்ச்சல் காட்டை அடைந்தவுடனேயே கையில் கட்டியெடுத்துச் செல்லும் சோற்றை உண்பவர்கள் நாங்கள். எங்கள் குலத்தில் வந்து கண்ணா, நீ தோன்றியுள்ளாய். உன்னோடு உடன் உறவாடும் அளவுக்கு எங்களுக்கு அறிவோதிறனோ இல்லையென்றாலும், நீ பிறந்துள்ள குலத்தில் நாங்களும் பிறந்துள்ளோம் என்பதே புண்ணியம். எத்தனைக் காலமானாலும், உன்னுடனான எங்களுடைய உறவை ஒழிக்கவோ பிரிக்கவோ இயலாது. நாங்கள் படிப்பறிவில்லாத சிறு பெண்கள். உன்னைப் பலவிதமாகப் பெயர்கள் கூறி அழைத்துவிட்டோம். சினம் கொள்ளாமல் எங்களுக்கு அருளவேணும்’ என்று பிரார்த்திக்கிறார்கள். பாசுரச் சிறப்பு: ஆயர்பாடியில் கண்ணன் பிறந்ததால், எத்தனை எத்தனைக் காலமானாலும் அந்த உறவு இருக்கத்தான் செய்யும். பற்பல தலைமுறைகளுக்குப் பின்னரும், “கண்ணன் எங்கள் மூதாதை’ என்று ஆயர்பாடியார் சொல்லிக்கொள்ள முடியும். அதுபோன்றே, எத்தனைப் பிறவிகள் எடுத்தாலும், இந்த உயிர் எம்பெருமானின் உடைமை என்று உறவு சொல்லிக்கொள்ள முடியும். ஜீவனுக்கும் பரமனுக்குமான உறவு, பிறவிகள் தோறும், மற்று, பிறவிகளுக்கு அப்பாற்பட்டும் தொடரும் என்பது உள்பொருள். “சிறுபேர்’ என்பது ஒருமையில் பெயர் சொல்லி அழைத்தல் ஆகும். எம்பெருமான் என்று தெரிந்த பின்னர் இவ்வாறு அழைக்கலாமோ? ஆயின், இங்குச் “சிறுபேர்’ என்பது பிறிதொன்று. எம்பெருமானாக இருப்பினும், சிறுவனாக வந்து, மாடும் கன்றும் மேய்த்து உடன் விளையாடுவதுதான் கண்ணனுக்கு மகிழ்ச்சி. தன்னை “நாராயணா’ என்று உயர்நாமம் சொல்லி அழைத்ததற்காகச் சீறுகிறானாம். எனவே, ஆயர்பாடி அவதாரத்திற்கே உரித்தான கோவிந்த நாமம் சொல்லி அழைக்கிறார்கள். இந்தப் பாசுரத்திலும் (குறையொன்றுமில்லாத கோவிந்தா) இதன் முன் பாசுரத்திலும் (கூடாரைவெல்லும் கோவிந்தா) இன்னும் இதன் மேல்பாசுரத்திலும் (அன்று காண் கோவிந்தா), கோவிந்த நாமம் சாற்றப்படுகிறது. செயல் பெருமையோஅறிவுப் பெருமையோ இல்லாத ஜீவன்கள், இறைவனின் உயர்வையும் இறைவனோடான உறவின் அருமையையும் உணர்ந்து, பணிந்து போற்றி வணங்குவதைக் காட்டுகிற} உணர்த்துகிற பாசுரம். எந்த விரதத்திற்கும், பணிவும் தன் கட்டுப்பாடுமே முக்கியம் என்பதை வலியுறுத்துகிற பாசுரம் எனலாம். ****** ஸ்ரீமாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி – பாடல் 8 ஆசைகளைப் பூர்த்தி செய்யுமா பதினோராம் பாவம்? ஜோதிட சூட்சுமங்கள்! முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய் மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார்? பந்தணை விரலியும் நீயும்நின் அடியார் பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே! செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித் திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி அந்தணன் ஆவதுங் காட்டிவந் தாண்டாய் ஆரமு தே!பள்ளி எழுந்தரு ளாயே. பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன்…
குழந்தை பாக்கியத்தைப் பற்றி ஒவ்வொன்றாகப் பார்ப்போம்… முதலில் ஒருவர் திருமணம் ஆன பின்னர், திருமணம் செய்து வைத்த பெற்றோர், ஜோதிடரிடம் முதலில் கேட்பது.. எனது மகன் / மகளுக்கு எத்தனை குழந்தைகள்? குழந்தை எப்போது பிறக்கும்? இதுபோன்று நிறையக் கேள்விகள் கேட்பார்கள். அதேபோல் தான் காதல் திருமண தம்பதியினரும், தமது விருப்பம் திருமணத்தில் நிறைவேறினாலும் அடுத்து குழந்தையைப் பற்றிய கவலை சூழ்ந்துகொள்ளும். “எப்படிப்பட்ட” என்பதில் இருவேறு கேள்விகள் உள்ளது. முதலில் இயற்கை முறையில் குழந்தை பிறப்பா? அல்லது செயற்கை முறையில் குழந்தை பிறப்பா? என்பது அடுத்தது, அப்படிப் பிறக்கும் குழந்தை அதன் குண நலன்களில் எப்படிப்பட்டதாக இருக்கும்? என்பது. ஜாதகருக்கு எத்தனை குழந்தைகள்? ஒருவரின், ராசி சக்கரத்தில், லக்கினத்திற்கு 5ஆம் அதிபதி யாரோ, அவர் நவாம்சத்தில் எந்த வீட்டில் இருக்கிறார் எனக் குறிப்பெடுத்துக் கொள்ளவும். அந்த வீட்டை முதலாவதாக, ராசி சக்கரத்தில் கொண்டு, லக்கினம் வரும் வரை எண்ண, எத்தனை கிரகங்கள் வருகிறதோ, அத்தனை குழந்தைகள் எனக் கொள்ளலாம். அதில் ஆண் கிரகங்களான செவ்வாய், குரு, சூரியன் மற்றும் ராகு இருப்பின் அத்தனை ஆண் குழந்தைகள் என்றும், பெண் / அலி கிரகங்களான சந்திரன், புதன், சுக்கிரன், சனி, கேது இருப்பின் அத்தனை பெண் குழந்தைகள் என்றும் அறியலாம். இதில் மாந்தி இருப்பின், அது ஒரு கருச் சிதைவையோ அல்லது பிறந்து இறத்தலையோ உணர்த்தும். இன்னும் துல்லியமாகக் கூறப்போனால், மேற்சொன்ன கிரகங்கள் பெற்ற சாரம், பிறக்கும் குழந்தைகளின், ஆண் / பெண் வாரிசைப் பற்றி நன்கு உணர்த்தும். இதில் தம்பதிகள் இருவருக்கும் ஒன்றாக வந்தால், நிச்சயமாக நமது கணிப்பு தப்பாது. ஆனால், ஒருவருக்கு வரும் கிரகங்கள் 3 என்றும் மற்றவருக்கு இரண்டும் என்றும் வந்தால், நிச்சயம் 2 குழந்தைகள் உண்டு எனலாம். ஆனால், அதற்கடுத்து பிறக்கும் குழந்தையோ அல்லது முதல் குழந்தைக்கும் அடுத்துப் பிறக்கும் குழந்தைக்கும் இடையிலோ, கருவிலேயே சிதைவு ஏற்படவோ அல்லது பிறந்து உடனே இறக்கவோ நேரிடும். ஆக மொத்தம் இரண்டு குழந்தைகள் நிச்சயம் உண்டு எனலாம். இப்படிப்பட்ட குறைந்த எண்ணிக்கையில் (ஒன்று அல்லது இரண்டு மட்டும் தான்) வருகிறபோது, அந்த தம்பதியினருக்கு, ஒரு ஜோதிடர், குழந்தை பிறப்பைத் தள்ளியோ அல்லது வேண்டாம் என்றோ செய்துவிடாதீர்கள் என எச்சரிக்கை செய்வார். ஏனெனில் ஒரு சிலருக்கு ஒரு குழந்தை தான் என இருக்கும் போது, அதனை உதாசீனப்படுத்துவார்களானால், அவர்களுக்கு அடுத்து குழந்தை பாக்கியம் பெறுவது மிகவும் கேள்விக்குறியாகிவிடும். இதில் எச்சரிக்கை அதிகம் தேவை. இது ஒரு ஜோதிடம் மூலம் பெறும் அனுமானமே.. ஏனெனில் பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை. ஜோதிடம் ஒரு முன்னெச்சரிக்கை / வழிகாட்டி தானே தவிர, முற்றும் உணர்த்தும் நிலை இல்லை. அதோடு, ஜோதிடர் ஒரு படைக்கும் தொழில் செய்யும் பிரம்மாவும் இல்லை. சிலருக்கு, ஜோதிட ரீதியாகப் பிள்ளைகள் இல்லை என அறிந்து சொன்ன ஜாதகருக்கு, தகுந்த பரிகாரங்கள் மற்றும் இறை…