12 ராசி அன்பர்களுக்கும் நவம்பர் மாத பலன்களை தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். மேஷம்(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை: தன ஸ்தானத்தில் ராஹூ – களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், புதன் – அஷ்டம ஸ்தானத்தில் கேது – பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் – தொழில் ஸ்தானத்தில் குரு, சனி என கிரக நிலவரம் உள்ளது. கிரகமாற்றம்: 13-11-2021 அன்று குரு பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். 17-11-2021 அன்று புதன் பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: ஒரு குறிக்கோளை மனதில் வைத்து துணிவுடன் செயலாற்றும் மேஷராசியினரே நீங்கள் எடுக்கும் முடிவில் உறுதியாக இருப்பவர். இந்த மாதம் பல நன்மைகள் உண்டாகும். உங்கள் பேச்சு திறமை அதிகரித்து அதனால் பல காரியங்கள் சிறப்பாக நடந்துமுடியும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் அவர்களால் உதவி ஆகியவையும் கிடைக்கலாம். நீங்கள் செய்யும் காரியங்களுக்கு உதவுவதற்காக யாராவது ஒருவர் துணை நிற்பார். பகைகள் விலகும். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்ய எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் தொல்லை தராது. போட்டிகள் விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர்ந்த நிலைக்கு வருவார்கள். உழைப்புக்கு பலன் கிடைக்கும். உங்கள் மீதான மதிப்பு உயரும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள், எதிர்ப்புகள் தீரும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் உங்களுக்கு பெருமை உண்டாகும். பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சக கலைஞர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும். கோபத்தை குறைத்து தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத செலவு இருக்கும். அரசியல் துறையினருக்கு தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய தூண்டும். பிரிந்து சென்றவர்களை மீண்டும் சந்திக்க நேரலாம். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறவும், மேல்படிப்பு படிக்கவும் எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பரிகாரம்: செவ்வாய்க்கிழமையில் நவக்கிரகத்திற்கு தீபம் ஏற்றி வணங்கி வர சொத்து பிரச்சனை தீரும். குடும்ப குழப்பம் தீரும். அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் – வியாழன் – வெள்ளி சந்திராஷ்டம தினங்கள்: 6, 7 அதிர்ஷ்ட தினங்கள்: 1, 27, 28 **** ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை: ராசியில் ராஹூ – ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், புதன் – களத்திர ஸ்தானத்தில் கேது – அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன் – பாக்கிய ஸ்தானத்தில் குரு, சனி என கிரக நிலவரம் உள்ளது. கிரகமாற்றம்: 13-11-2021 அன்று குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். 17-11-2021…
மானுஜரோ, முதற்காரியமாக அருளாளனின் ஆறாவது கட்டளைப்படி பெரிய நம்பியை ஆசார்யனாக ஏற்று, பஞ்ச சம்ஸ்காரங்களை அவரிடம் பெற ஸ்ரீரங்கம் நோக்கிப் புறப்பட்டார். பெரிய நம்பியோ ராமானுஜரைச் சந்திக்க காஞ்சி நோக்கி வந்து கொண்டிருந்தார். எதிரெதிரே புறப்பட்ட இருவரும், வழியில் மதுராந்தகத்தில் எதிர்கொண்டனர். தண்டனிட்டு வணங்கிய ராமானுஜரை வாரி அணைத்து எடுத்து வாழ்த்தினார் பெரிய நம்பி. கருணாகரப் பெருமாள் (இப்போது ஏரிகாத்த ராமன் திருக்கோயில் எனப்படுகிறது என்பர்) சந்நிதியில் இருவரும் இளைப்பாறினர். "எண்ணிய பயன் எதிர்ப்பட்டது! எல்லாம் இறைவன் செயல்’ என மகிழ்ந்தனர். "அடியேனுக்கு இப்போதே மந்திர உபதேசம் செய்தருள வேண்டும்’ என்று வேண்டினார் ராமானுஜர். ராமானுஜரின் தணியாத ஆர்வம் கண்டு, அப்போதே பெருமாள் சந்நிதி பிரகாரத்தில் நம்மாழ்வாரின் அம்சமான மகிழ மரத்தடியில் பெரிய நம்பிகள், பஞ்ச சம்ஸ்காரத்தை ராமானுஜருக்குச் செய்துவித்தார். "பஞ்ச சம்ஸ்காரம்’ என்பது வைணவனைப் பக்குவப்படுத்தும் ஐந்து விதமான வைணவச் சடங்குகள் ஆகும். அவை, தாப, புண்ட்ர, நாம, மந்த்ர, யாக சமஸ்காரம் எனப்படும். பெருமாளின் சங்கு, சக்கரம் ஆகியவற்றை நிரந்தரமாக உடலில் முறையே வலது தோளில் சக்கரத்தையும், இடது தோளில் சங்கத்தையும் முத்திரையாக நெருப்பில் சுட வைத்துப் பொறித்துக் கொள்வது "தாப சமஸ்காரம்’ ஆகும். நெற்றியில் மட்டுமின்றி உடலில் பன்னிரு இடங்களில் திருமண் காப்புத் தரித்தல் ஆகும். இவற்றைத் தரிக்கும்பொழுது பன்னிரு இடங்களான நெற்றி, நாபி, மார்பு, கழுத்து, இருதோள்கள், பிடரி, பின் இடுப்பு ஆகிய உடலின் பாகங்களில் முறையே, கேசவ, நாராயண, மாதவ, கோவிந்த, விஷ்ணு, மதுசூதன, திருவிக்கிரம, வாமன, ஸ்ரீதர, ஹிருஷிகேச, பத்மநாப, தாமோதர மூர்த்திகளைத் தியானித்து திருமண்காப்பு அணிவது "புண்டர சமஸ்காரம்’ எனப்படும். "நாம சம்ஸ்காரம்’ என்பது, பெற்றோர்கள் வைத்த பெயரைத் தவிர ஆச்சார்யன் (குரு) வைக்கும் நாமமாக ஒன்றை வைத்துக்கொள்ளுதல் ஆகும். இதற்கு, "தாஸ்ய நாமம்’ என்று பெயர். கோத்திரம், சூத்திரம் முதலிய சரீர சம்பந்தமான சிறப்புகளை விடுத்து, ஓர் ஆத்மாவுக்குரிய ஒருபடியான தாஸஸ்ய நாமாவை அடியேன் என்னும் பெயரை ஏற்றல். என்பதே நாம சமஸ்காரம் ஆகும். "மந்திர சம்ஸ்காரம்’ என்பது, "ஓம் நமோ நாராயணாய!’ என்ற எட்டெழுத்தான நாராயண மந்திரத்தையும் மறை பொருளோடு த்வயம், சரம ஸ்லோகம் (மோட்சத்துக்கான வழி) ஆகியவற்றை ஆச்சாரியன் மூலம், வலது செவியில் உபதேசமாகப் பெறுதல் ஆகும். "யாக சம்ஸ்காரம்’, என்பது சரீரம், ஆத்மா இவைகளைப்பற்றி தொடர்ந்து வரும் கர்மம், ஞானம் இவற்றுக்குப் போக்கு வீடாக அமையும்படி, எம்பெருமானின் மூர்த்தியை, அமைத்துக் கொடுத்து, திருவாராதனம், திருவாராதனை, பூசை செய்யும் முறைமைகள் ஆகியவற்றை முறையாக ஆச்சாரியனிடம் கற்றுக்கொள்ளல், இவை அனைத்தும் ஒரு நன்னாளில், ஒரே வேளையில் நடத்தப்படும். இத்தகைய பஞ்ச சம்ஸ்காரத்தைத்தான் ஆச்சாரியனாக இருந்து பெரிய நம்பிகள், ஸ்ரீ ராமானுஜருக்கு 983 ஆண்டுகளுக்கு முன்னர் செய்து வைத்தார். இந்த ஐந்தும் பெற்றவரே ஸ்ரீ வைஷ்ணவ நெறியில் ஒழுகக்கூடிய தகுதி பெற்றவர் ஆவார். சீடர்கள் வேண்டியபடி, பெரியநம்பி தம் துணைவியுடன் காஞ்சிக்குச் சென்றார். அங்கு,…
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 23 மாரி மலைமுழஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப் போதருமா போலேநீ பூவைப்பூ வண்ணாஉன் கோயில் நின் றிங்ஙனே போந்தருளிக் கோப்புடைய சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த காரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய். பாடியவர் – பவ்யா ஹரி விளக்கம்: சிங்கமென எழுந்து சிம்மாசனத்தில் அமர்ந்து தங்களின் கோரிக்கையைச் செவிமடுக்க வேண்டுமென்று நோன்பியற்றும் பெண்கள் விண்ணப்பிக்கும் பாசுரம். “மழைக் காலத்தில் மலைக் குகைக்குள்உறங்குகிற சிங்கம், மழை முடிந்தவுடன் கண்களை உருட்டி விழித்து, பிடரி குலுங்கும்படிச் சிலிர்த்து, உதறி எழுந்து, முதுகை நீட்டி நிமிர்த்தி, குகையை விட்டு வெளியில் வரும். அந்தச் சிங்கம் போல் நீயும் புறப்பட்டு வா கண்ணா! காயாம்பூ வண்ணனே, சிங்கம் போன்றே நீயும் எழுந்தருளி, உன்னுடைய சிம்மாசனத்தில் அமர்ந்து, நாங்கள் எதற்காக உன்னைக் காண வந்திருக்கிறோம் என்பதை விசாரித்து அருள வேண்டும்’ என்று பிரார்த்திக்கிறார்கள். பாசுரச் சிறப்பு: எம்பெருமானுக்குச் சிங்கம் உவமையாகக் காட்டப்பெறுகிறது. மழைக் காலத்தில் குகைக்குள் அடைப்பட்டிருக்கும் காட்டு அரசனான சிங்கம், மழை முடிந்தவுடன் தன்னுடைய காட்டின் நிலையை அறிவதற்காக வேகமாக எழுந்து வருமாம். அதுபோல், உறக்க குகையிலிருந்து கண்ணன் எழுந்து வரவேண்டும் என்பது பிரார்த்தனை. சிங்கம் இரு பக்கமும் தலையைத் திருப்பித் திருப்பிப் பார்த்தவாறே நடக்கும். அதுபோல், “காத்திருக்கும் எங்களைப் பார்த்தவாறே வரவேணும்’ என்னும் ஆதங்கம். பூவைப்பூ என்பது காயாம்பூ; கருநீல மலர். “யாம் வந்த காரியம் ஆராய்ந்து’ } அதிகாலைப் பொழுதில், ஒருவரையொருவர் எழுப்பி, தூயவர்களாய் வந்து, கோயில்}வாயில் காப்பவரைப் பணிந்து, நந்தகோபன், யசோதை, பலராமன், நப்பின்னை என்று பெரியோர் பலரின் துணைகொண்டு வந்திருக்கிறோமே, எங்களின் இத்தனை முயற்சிகளையும் மனத்தில் கொண்டு அருள வேண்டும். முதல் பாசுரத்தில் “யசோதை இளஞ்சிங்கம்’ என்பது, இப்பாசுரத்தில் “சீரிய சிங்கம்’ஆனதை எண்ணி மகிழலாம். ஸ்ரீமாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி – பாடல் 3 கூவின பூங்குயில் கூவின கோழிசெவ்வாய் சுக்கிரன் சேர்க்கை நல்லதா? கெட்டதா? குருகுகள் இயம்பின இயம்பின சங்கம் ஓவின தாரகை ஒளியொளி உதயத் தொருப்படு கின்றது விருப்பொடு நமக்குத் தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய் திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே! யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே! பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன் பாடியவர்கள் – ஆலவாய் அண்ணல் தேவாரப் பாடசாலை மாணவர்கள் விளக்கம்: உதயத்தின் அடையாளங்கள் காட்டப் பெறுகின்றன. “குயில்கள் கூவிவிட்டன; கோழிகளும் நாரைகளும் இன்னும் பல பறவைகளும் ஒலி எழுப்பத் தொடங்கிவிட்டன. திருக்கோயில்களில் சங்கநாதம் ஒலிக்கிறது. நட்சத்திரங்கள் ஒளி மழுங்கிவிட்டன. கதிரவனுடைய ஒளி ஒருங்கிணைந்து நிகரின்றித் தோன்றுகிறது. எவ்வளவு அறிவாளியாக இருந்தாலும், அத்தகைய பேரறிவுக்கும் அரிதானவனே, அன்பினால் எங்களுக்கு எளிதாகக் கிட்டுபவனே, பெருங்கருணையோடு உன்னுடைய திருவடிகளை எமக்குக் காட்டி அருள வேண்டும்’ என்னும் விண்ணப்பம் உரைக்கப்படுகிறது. பாடல்…
ஸ்ரீ ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு சிறப்பு தரிசனம் பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான மதுரகவி ஆழ்வார் எந்த திவ்ய தேசப்பெருமாளையும் பாடவில்லை. அவர் பாடியது அவரது குருவான நம்மாழ்வாரை மட்டுமே. ஒரு நேரத்தில் நம்மாழ்வாரிடம் நித்திய பூஜைக்கு அவருடைய அர்ச்சா விக்ரகம் வேண்டுமெனக் கேட்டார் மதுரகவியாழ்வார். தண்பொருநை தண்ணீரை எடுத்து சுண்டக்காய்ச்சினால் அர்ச்சா விக்ரகம் வெளிவரும் என அருளினார் நம்மாழ்வார். பொருநைத் தண்ணீரை எடுத்து காய்ச்சியபோது திருதண்டம் காஷாய உடையுடன் மதுரகவிகள் அதுவரை அறியாத விக்ரகம் ஒன்று உருவாகி வெளி வந்தது. நம்மாழ்வாரிடம் சென்று அதன் விவரம் கேட்டார் மதுரகவிகள். ஞானத்தால் உண்மையைக் கண்டுணர்ந்த நம்மாழ்வார் அது எனக்குப் பின்னர் 300 ஆண்டுகள் கழித்து உதித்து வைணவத்தை நிலைநிறுத்தப்போகிற ராமானுஜர் என அருளினார். கி.பி. 1017 இல் பிறக்கப்போவதற்கு 300 ஆண்டுகளுக்கு முன்பே விக்ரக வடிவில் வந்து காட்சி தந்தவர் ஆழ்வார்திருநகரியில் எழுந்தருளியுள்ள ராமானுஜர். தற்போது பின்னால் எழுந்தருளப்போகிற என்ற பொருளில் பவிஷ்ய என்ற அடைமொழி சேர்த்து ‘பவிஷ்ய ராமானுஜர்’ என அழைக்கப்படுகிறார். அந்த விக்ரகத்தைப் பெற்ற நாதமுனிகள் அதனை நம்மாழ்வார் அவதாரத் தலமான ஆழ்வார் திருநகரியிலேயே பிரதிஷ்டை செய்தார். இங்கு துறவறம் ஏற்கும் முன் உருவான திருவிக்ரகமாதலால் எப்போதும் எம்பெருமானார்க்கு வெள்ளையாடை மட்டும் சார்த்தப்படுகிறது. ஸ்ரீ ராமானுஜரை ஆழ்வார்திருநகரியில் நிறுவிய நாதமுனிகள் மகனான ஈஸ்வர முனியின் திருக்குமாரர் ஆளவந்தார் ஆவார். சிறந்த அறிஞராக விளங்கிய ஆளவந்தாருக்குப் பல சீடர்கள் உண்டு. அவர்களில் ஒருவரான பெரிய திருமலை நம்பிக்கு இரு சகோதரிகள். மூத்த சகோதரி பூமிபிராட்டி என்பவள், இவள் ஸ்ரீ பெரும்புதூர் ஆசூரி குல திலகரான கேசவ சோமயாஜியை மணந்தார். இளையவள் பெரியபிராட்டி மதுரமங்கலம் கமல நயன பட்டரை மணந்தாள். பெரிய திருமலை நம்பி தன் சகோதரிகளுக்கு நற்புத்திரர்கள் பிறக்க வேண்டும் என திருவேங்கடமுடையானை அனுதினமும் வேண்டுதல் செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் பெரும்புதூர் கேசவ சோமயாஜி நெடுநாள் பிள்ளை பேறின்றி இருந்தமையால், திருவல்லிக்கேணி பார்த்தசாரதியை வேண்டி, புத்திர காமேஷ்டி யாகம் செய்து, அதன் பயனால் பூமிபிராட்டி கருவுற்றாள். சரியாக, 1000 ஆண்டுகளுக்கு முன்னால் கலியுகம் 4196 இல் பிங்கள வருடம், சித்திரை மாதம், சுக்கில பட்ச பஞ்சமி திதி சேர்ந்த, திருவாதிரை நட்சத்திரத்தில் ஓர் ஆண் குழந்தை ஆதிசேஷனின் அம்சமாக அவதரித்தது. முற்பிறவியில் ராமனின் தம்பியாகிய லட்சுமணனாக அவதரித்து கிருஷ்ணாவதாரத்தில் பலராமனாகப் பிறப்பெடுத்து இப்பிறவியில் உலக மக்களை உய்விக்க வேண்டி பெரும்புதூர் கேசவ பட்டர்க்கு முற்பிறவியில் ராமனின் தம்பியாகிய லட்சுமணனே இப்பிறவியில் மகவாக அவதரித்தார். தம் சகோதரிக்கு மகன் பிறந்திருப்பதைக் காண திருமலை நம்பிகள் பெரும்புதூருக்கு வந்தார். குழந்தையை கண்டு மகிழ்ந்து உள்ளம் நிறைந்தார். திருமாலுக்கு தொண்டு செய்யும் அறிகுறிகள் அக்குழந்தையிடம் இயல்பாகவேத் தென்பட்டது. ஆதிசேஷனின் அம்சமாக ராமாவதாரக் காலத்தில் இலக்குவனாக அவதரித்த அதே அறிகுறிகளும் அம்சங்களும் இக்குழந்தைக்கு இருந்ததால் ராமனுக்கு நெருக்கமானவன் என்னும் பொருளில் அக்குழந்தைக்கு ‘இளையாழ்வார்’ என பெயர் சூட்டினார்.ஆறுமுகப் பெருமானுக்கு அணி சேர்க்கும் முக்கியத்…
நவக்கிரகங்களில் முழு சுப கிரகம் வாழ்வில் அனைத்து விதமான செல்வங்களையும் அளிப்பவர் – சப்த ரிஷிகளில் ஆங்கிரஸ முனிவரின் மகன் குரு என்றும் பிரகஸ்பதி என்றும் வியாழ பகவான் அழைக்கப்படுகிறார். இவர் தேவர்களுக்கு எல்லாம் குரு. நம் வாழ்வில் 2 விஷயங்கள் மிக முக்கியம். அதாவது தனம் என்று சொல்லக்கூடிய பணம், 2-வது புத்திர சம்பத்து என்று சொல்லக்கூடிய குழந்தை செல்வம். இந்த இரண்டையும் அளிக்க கூடிய சர்வ வல்லமை பெற்ற கிரகம் குரு. குருவுக்கு மேலும் பல்வேறு விதமான ஆதிக்கங்கள் உள்ளன. ஞானம், கூர்ந்த மதிநுட்பம், மந்திரி யோகம், நிதித்துறை, நீதித்துறை, வங்கி, கல்வி, வேத உபதேசம் போன்றவை எல்லாம் குருவின் அதிகாரத்துக்கு உட்பட்டவை. அவரது அருள் இருந்தால் இந்த துறைகளில் பிரகாசிக்கலாம். குரு பார்வை அல்லது வியாழ அனுகூலம் நம் வாழ்வில் சுபநிகழ்ச்சிகள் உதாரணமாக திருமணம் அனைவரின் வாழ்க்கையிலும் முக்கியமானது. திருமணத்துக்கு மிக முக்கிய கிரகமாக குரு பகவான் திகழ்கிறார். குரு பார்வை என்று சொல்லப்படும் வியாழ அனுகூலம் திருமணத்துக்கு முக்கியமாக தேவைப்படுகிறது. வியாழ நோக்கம் வந்து விட்டதா என்று பார்த்த பிறகே திருமண விஷயங்களை ஆரம்பிக்க முடியும். குருவின் பலம் குரு எந்த ஸ்தானத்தை பார்க்கிறாரோ அந்த ஸ்தானம் பலமும், விருத்தியும் அடைகிறது. குரு பார்வை சர்வ தோஷ நிவர்த்தி. குருவுக்கு 5,7,9 ஆகிய பார்வைகள் உள்ளன. அதாவது குரு இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். ஐந்தாம் பார்வையும், ஒன்பதாம் பார்வையும் சிறப்பு பார்வைகளாகும். நிகழும் மங்களகராமன ஸ்வஸ்திஸ்ரீப்லவ வருஷம் – தக்ஷிணாயனம் – சரத் ரிது – ஐப்பசி மாதம் 27ம் தேதி (ஆங்கிலம் 13.11.2021) அன்றைய தினம் சுக்லப்க்ஷ தசமி – சதய நக்ஷத்ரம் – வ்யாகாத நாமயோகம் – பாலவ கரணம் – சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 3024க்கு (மாலை மணி 6.21க்கு) ரிஷப லக்னத்தில் குரு பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு மாறுகிறார். நன்மை பெறும் ராசிகள் மிதுனம் – சிம்மம் – துலாம் நன்மை தீமை இரண்டும் கலந்து பலன்கள் பெறும் ராசிகள் மேஷம் – ரிஷபம் – விருச்சிகம் – மகரம் – கும்பம் பரிகாரத்தின் மூலம் பயன்பெறும் ராசிகள் கடகம் – கன்னி – தனுசு – மீனம் தற்போது மாறக்கூடிய குருபகவான் கும்ப ராசியில் இருந்து தனது ஐந்தாம் பார்வையால் மிதுன ராசியையும் – ஏழாம் பார்வையால் சிம்ம ராசியையும் – ஒன்பதாம் பார்வையால் துலா ராசியையும் பார்க்கிறார். குரு பகவானுக்கு ஸ்தான பலத்தை விட த்ருக் பலமே அதிகம். அதாவது இருக்கும் இடத்தின் பலத்தினை விட பார்க்கும் பலமே அதிகம். எனமே குருவின் பார்வை பெறும் ராசிகள் பூரண பலன்கள் பெறும். குரு பயோடேட்டா சொந்த வீடு – தனுசு, மீனம் உச்சராசி – கடகம் நீச்சராசி – மகரம்…
பிறந்த தேதியிலிருந்து திருமணத்திற்கு மீறிய உறவுகளை ஜோதிடத்தில் எவ்வாறு கண்டறியலாம்? ஜோதிடத்தைப் பயன்படுத்தி பிறப்பு ஜாதகத்தில் திருமணத்திற்குப் புறம்பான அல்லது ரகசிய உறவைப் பற்றி அறிய சிறந்த வழி, திருமணத்திற்கு முன்பே அதை ஆராய்வதாகும். மேலே சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளபடி திருமணத்திற்கான விளக்கப்படங்களைப் பொருத்துவதன் மூலம் ஒரு துணையின் திருமணத்திற்குப் புறம்பான உறவுகளின் அறிகுறியை ஒருவர் எளிதாகக் கண்டறியலாம். அதன் விரிவான விளக்கத்தைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் நீங்கள் படிக்கலாம். பிறப்பு ஜாதகத்திலிருந்து திருமணத்திற்குப் புறம்பான அல்லது ரகசிய உறவைப் பற்றி ஜோதிடம் எவ்வாறு விரிவாகக் காண்கிறது என்பதை இப்போது புரிந்து கொள்ளுங்கள். எந்தவொரு உறவிற்கும், மனதைக் குறிக்கும் சந்திரன் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. சுக்கிரன் காதல் மற்றும் காதலைக் குறிக்கிறது. ராகு என்பது ஒரு நபரை சமூக விதிமுறைகளை மீறத் தூண்டும் கிரகம். செவ்வாய் ஆக்கிரமிப்பு மற்றும் ஆர்வத்தைக் குறிக்கிறது. எனவே, இந்த கிரகங்களின் மோசமான சேர்க்கை ஒரு நபரின் பிறப்பு ஜாதகத்தில், திருமணத்திற்குப் புறம்பான உறவுகள் மற்றும் பிற உறவுகளைக் குறிக்கிறது. 3, 7 மற்றும் 11 ஆம் வீடுகள் காம திரிகோணம் (ஆசை), 5 ஆம் வீடு காதலுக்கான வீடு & 12 ஆம் வீடு படுக்கை இன்பத்திற்கான வீடு. பிறப்பு ஜாதகத்தில் திருமணத்திற்குப் பிறகு ஒரு ரகசிய உறவு மேலே உள்ள அனைத்து பண்புகளையும் பாதிக்கும். ஒரு ஜாதகத்தில் ராகு, சுக்கிரன், சந்திரன் அல்லது செவ்வாய் 3, 5, 7, 11 மற்றும் 12 ஆம் வீடுகளுடன் இணைந்திருப்பதும், அவர்களின் அதிபதியாக இருப்பதும் ரகசிய காதல் / திருமணத்திற்குப் புறம்பான உறவுகளைக் குறிக்கிறது. இதன் பொருள் இந்த மோசமான இணைப்பு உள்ள ஒருவர் ஏமாற்றும் வாழ்க்கைத் துணையாக இருக்கலாம். ஆனால் இதனைப் படித்து தாமாகவே புரிந்து கொள்ளுதல் இதனை மூலமாகக் கொண்டு திருமண வாழ்வில் விரிசல் ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது. நல்லதொரு அனுபவமிக்க ஜோதிடரைக் கலந்து ஆலோசித்து “திருமணத்திற்கு முன்னரே ஏற்படுத்தக்கூடிய விஷயம் தான் இந்த கட்டுரையில் பேசப்படுகிறது.” திருமண வாழ்வில் உள்ளவர்களுக்கு இது பொருந்தாது. “நீங்களே ஒரு ஜோதிடராக மாறாதீர்கள்.”எல்லாம் அருள்வார் யந்திர சனீஸ்வரர் ஜாதகத்தில் ரகசிய உறவுகளின் அறிகுறி சந்திரன், நமது மனம் நமது ஞானத்தாலும், புதன், நமது புத்திசாலித்தனத்தாலும் கட்டுப்படுத்தப்படுகிறது. இங்கே, ஜோதிடர், வாழ்க்கைத் துணையின் ஜாதகத்தில் சந்திரனுக்கு ஞானம் மற்றும் தர்மம் அல்லது கூடுதல் காம அல்லது காம உணர்வுகள் தொடர்பான தொடர்பு உள்ளதா என்று பார்ப்பார். புதன் ஜனன சந்திரனில் இருந்து 5வது அல்லது 9வது வீட்டில் இணைந்திருந்தால், அந்த நபருக்கு சரீர மற்றும் சட்டவிரோத காம ஆசைகள் இருக்கும். ஆனால் வியாழன் சந்திரனில் இருந்து 5வது மற்றும் 9வது வீடுகளின் மீது நல்ல கட்டுப்பாட்டில் இருந்தால், அந்த நபர் வாழ்க்கைத் துணைக்கு விசுவாசமாக இருப்பார். ஜோதிடத்தின் படி, பிறப்பு ஜாதகத்தில் கூடுதல் திருமண விவகாரங்களைக் குறிக்க சுக்கிரன் காதலைக் குறிப்பது முக்கியம். ராகு மற்றும்…
ஜோதிடத்தில் முக்கிய அங்கங்களான வாரம், திதி, கரணம், நட்சத்திரம், யோகம் கொண்டு பஞ்ச பூத தத்துவத்தில் இயக்கப்படுகிறது. இந்த ஐந்து அங்கங்களே பஞ்சாங்கம் ஆகும். இவற்றில் கரணம் திதியில் பாதி. ஒரு திதியின் 12 பாகையில், 6 பாகைக்கு ஒரு கரணமாக 12 பாகைக்கு இரண்டு கரணமாக வரும். அதாவது 30 திதிக்கும் 60 கரணங்களாக வரும். அதிலும் கரணம் அவற்றோடு தொடர்புடைய கரணநாதன் முக்கியமானவர். மொத்தமாக 11 கரணங்கள் ஆகும். அவற்றில் சர கரணங்களான பவ, பாலவ, கெளலவ, தைதுளை, கரசை கரணங்கள் பூரண சுபத்துவம் வாய்ந்தது. மற்ற கரணங்களான பத்திரை(விஷ்டி), சகுனி, நாகவம், கிம்ஸ்துக்ன கரணங்கள் அசுப தன்மை பெற்றது. இவற்றில் சர கரணத்தில் உள்ள வணிசை மற்றும் ஸ்திர கர்ணத்தில் சதுஷ்பாதமும் மத்திம சுப தன்மை கொண்டது. ஒரு உயிர் இயங்க காற்று அவசியம் மற்றும் ஒரு மனிதனின் ஏற்ற தாழ்வு செயலுக்கு கர்ம காரகன் சனி பகவான் நிலை தேவை. அதனால் தான் கரணத்தின் கிரகம் கர்மகாரகன் சனி என்றும், இது காற்று தத்துவம் கொண்டதாக கூறப்படுகிறது. ஒருவருக்கு கரணநாதன் பலம் பெற வேண்டும். கரணம் தப்பினால் மரணம் என்பதற்கு ஏற்ப கரணம் சூட்சுமம் தெரியவில்லை என்றால் மரணதிற்கு நிகரான கெட்ட சம்பவங்கள் நடைபெறும் என்பது சிறு கூற்று. ஒவ்வொரு ஜோதிட நூல்களில் உள்ள சூட்சுமங்களை அப்படியே ஜாதகத்தில் பொருத்தி நன்கு ஆராய வேண்டும். பதினோரு கரணத்தின் குணங்களையும் ஜாதக அலங்காரத்தில் விளக்கி உள்ளது. அது கரணாதிபதி நிலையை பொறுத்து குணம், செயல்கள் மாறுபடும். ஜோதிட சூட்சுமத்தில் ஜாதகருக்கு தெய்வ அருள் பெற, திதியின் பாதியாக உள்ள கரண நாதனை வணங்கினால் நன்று. முக்கியமாக கிரகங்கள், அதிதேவதை மற்றும் அவற்றின் தொடர்புள்ள அனைத்தையும் கொண்டு கரணநாதனை இயக்க வேண்டும். ஒருவருக்கு தோஷம் இருந்தால் அந்த தோஷம் பெற்ற வீட்டை கரண நாதன் சுப நிலையில் பார்த்தால் அவரவர் கர்மாவிற்கு ஏற்ப, அவருக்கு தோஷத்தைக் குறைக்கும் என்பது விதி. அது அசுப நிலையிலிருந்தால் பலன் பெற கொஞ்சம் கடினம். இன்னும் அடுத்த கட்டத்தில் ஆராய்ந்தால், கரணத்தை கொண்டு திருமண பொருத்தம் பார்க்க வேண்டும், கரசை கரணத்தில் வாழ்க்கை துவங்குது நன்று, இந்த கரண தம்பதியர்கள் ஒற்றுமை பலம் பெரும். அசுப கரணத்தில் வாழ்க்கையை துவங்கக்கூடாது, குழந்தைப் பாக்கியம் பெற, கரணாதிபதி மூலம் பரிகாரம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக ஒருவருக்கு குழந்தைப் பாக்கியம் இல்லை என்றாலும் சுப நிலையில் உள்ள கரணநாதன் பார்வை பெற்றால் புதிய மருத்துவச் சிகிச்சைகள் மற்றும் சோதனை குழாய் முறையில் குழந்தை பாக்கியம் உண்டாகும். ஒவ்வொருவருக்கும் எது சரியான தொழில், அது வெற்றியின் உச்சத்தை அடையமுடியுமா என்று பார்க்க இது ஒரு சூட்சும விதி. அதுவும் முக்கியமாக ஜாதகர் எந்த காரணத்தில் பிறந்தாரோ அந்த கரணத்துக்குரிய மிருகத்திற்கு துன்பம் கொடுக்கக்கூடாது. எடுத்துக்காட்டாக வன்னிசை கரணம்…
மனிதனின் முக்கிய தேவைகளை பூர்த்தி செய்ய வருமானம் அவசியம் தேவை. வருமானம் வரும் பாதை இரண்டு உள்ளது. அவை உழைப்பால் வரும் வருமானம். மற்றொன்று உழைக்காமல் வரும் வருமானம். ஒருவன் என்னதான் உழைத்தாலும் பணம் சம்பாதிக்க முடியாது, மற்றும் சிலருக்கு உழைக்காமல் வரும் வருமானம் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும், மற்றும் சிலர் ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு உழைப்பு இருக்கும் பின்பு சீர்பட்டு ஒரு கணிசமான வருமானம் நிரந்தரமாகும். வருமானம் என்றவுடன் ஜோதிடத்தில் 2ம் பாவத்தையும், தொழில் அதனால் ஏற்படும் லாபம் கலந்த திருப்தி 10ம் பாவத்தைத் தொடர்ந்து 11ம் பாவத்தையும் குறிப்பிடும். இவற்றில் சொந்த தொழிலா, அடிமை தொழிலா என்பது வெவ்வேறு பாவங்கள் கூறும். வருமானம் எந்த வழியில் வரும் என்பது அவரவர் கர்மாவை பொறுத்து அமையும். வருமானம் என்று சொல்லும்போது உழைப்பாள் வரும் வருமானம், தந்தை அல்லது பரம்பரை சொத்து மூலம் வருமானம், மனைவி வழியில் வருமானம், சேமிப்பு மூலமாகவோ, வட்டி, வாடகை வழியாகவோ – ஜோதிட வாயிலாக ஆராய்ந்து சொல்லலாம். இவற்றில் இரண்டாம் பாவத்தில் உள்ள கிரகம் அல்லது அந்த பாவத்தில் அதிபதி முக்கிய பங்கு வகிப்பார். இரண்டாம் அதிபதி ஆட்சியோ, உச்சமோ பெற்று சுபத்துவம் பெற்றால் மற்றும் ராகு சம்பந்தம் பெற்றால் பல்வேறு (multiple) வழியில் வருமானம் இருக்கும். இவற்றில் வருமானம் என்ற 2ம் பாவம் மட்டும் முக்கிய பங்கு வகிக்கவில்லை, அவற்றோடு 10ம் பாவம், புதன், சனி சம்பந்தம் பெறவேண்டும். கூட்டு தொழிலோடு ஒப்பிடும் பொழுது 7ம் பாவமும், மாற்றவரிடம் வேலை பற்றி சொல்லும்பொழுது 10, 6ம் பாவம் தொடர்பு பெறவேண்டும். பாட்டன் சொத்து வருமானம் என்ற பொழுது திரிகோண அதிபதிகள் இரண்டாம் பாவத்துடன் தொடர்பு பெறவேண்டும். இரண்டாம் பாவத்தை பற்றி பேசும்பொழுது நிறைய காரகத்துவம் உண்டு. ஆனால் நாம் இன்று பார்ப்பது பேச்சு தன்மையால் வருமானம் ஈட்டும் ஜோதிட சூட்சமங்களைப் பார்க்கலாம். எடுத்துக்காட்டாக ஜோதிடத்தில் இரண்டாம் பாவத்தில் வாக்கு, பேச்சு, ஆசிரியர், உணவு, குடும்பம் என்று சொல்லும் இடம். அந்த பாவம் பலம் பெற்றால் பேச்சால் வருமானம் ஈட்டுவார் (உதாரணமாக.. பேச்சாளர், ஜோதிடர், விற்பனைப் பிரதிநிதி போன்றோர்). நிறந்தர வருமானம் என்று சொன்னால் இரண்டோடு மற்றும் பூர்வபுண்ணியம் மற்றும் காரியத்திற்குரிய கர்மா, லக்கின சுபாரோடு செயல் படவேண்டும். இது தவிர இன்னும் ஆழமாக போனால் முக்கிய நிபுணர் என்று உள்ளது. அது எந்தத் துறை என்பது 2, 10ம் பாவத்தின் சாரநாதன் கொண்டு முடிவு பெரும். பத்து மற்றும் இரண்டாம் பாவ தொடர்பு கொண்டால் பேச்சால் வருமானம் ஈட்டுபவர். உதாரணமாக தொகுப்பாளர், ஜோதிடர், மார்க்கெட்டிங், பேச்சாளர்கள், கலைத்துறை, உணவு துறை, முகம் சார்ந்த ஒப்பணை என்று அடுக்கி கொண்டு போகலாம். இவற்றில் அரசியல் பேச்சும், குடும்பத்தின் மூலம் வருமானம், வட்டி தொழில், கண் மற்றும் முகம் சார்ந்த தொடர்பு கொண்ட செயல் மூலம் வருமானம் இருக்கும். இரண்டாம் பாவம்…
மேஷம் ஜூலை 16 முதல் 22 வரை (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய) எதிர்பாராத தனவரவு உண்டாகும். நிலம், வீடு மற்றும் வீட்டு மனைகளின் மூலம் ஆதாயம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சற்று பாதிக்கப்படலாம், கவனம் தேவை. சமூகத்தில் உயர்ந்தவர்களின் சந்திப்பு நிகழும். உத்தியோகஸ்தர்களுக்கு புதிய மாற்றங்கள் நிகழும். உழைப்பிற்குத் தகுந்த ஊதியம் கிடைக்கும். வியாபாரிகள் பொறுமையுடன் வாடிக்கையாளர்களைக் கையாளுவீர்கள். நேரடியாகவே வியாபாரத்தைக் கவனித்தால் நஷ்டம் வராது. விவசாயிகளுக்கு வருமானம் சற்று குறைந்து காணப்பட்டாலும் கால்நடைகளால் நன்மை உண்டாகும். கால்நடைகளை நன்கு பராமரிக்கவும். அரசியல்வாதிகள் போட்டி பொறாமைகளை அதிகம் சந்திப்பீர்கள். வாக்குவாதங்களும் அதிகரிக்கும். கலைத்துறையினர் பெயரும் புகழும் பெற புதிய சாதனைகளைச் செய்வீர்கள். ரசிகர்களால் பெரிதும் போற்றப்படுவீர்கள். பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையை நிலைநாட்டப் பாடுபடுவீர்கள். கணவருடன் பரஸ்பரம் அன்பு மேலோங்கும். மாணவமணிகள் நண்பர்களுடன் ஊர் சுற்றாமல் ஆக்கபூர்வமான சிந்தனையில் ஈடுபடவும். ஆராய்ச்சியில் ஈடுபாடு அதிகரிக்கும். பரிகாரம்: விநாயகப்பெருமானை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 16, 17. சந்திராஷ்டமம்: 20, 21. ••• ரிஷபம் ஜூலை 16 முதல் 22 வரை (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) பொருளாதார நிலைமை சீராக இருந்தாலும் செலவுகள் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவச் செலவுகள் செய்ய நேரிடலாம். உறவினர்களிடம் எச்சரிக்கையாகப் பழகுவும். உத்தியோகஸ்தர்களிடம் சக ஊழியர்கள் நட்புடன் பழகுவார்கள். கடுமையாக உழைத்து மேலதிகாரிகளிடம் நற்பெயர் எடுப்பீர்கள். வியாபாரிகள் காலதாமதம் ஏற்பட்டாலும் கடுமையாக உழைத்து வெற்றி பெறுவீர்கள். வருமானம் உங்களைத் தேடி வருமாறு நடந்துகொள்வீர்கள். விவசாயிகள் கூலித்தொழிலாளர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். குத்தகை விஷயங்களில் போட்டிகளைச் சந்திப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தின் பாராட்டுகள் கிடைக்கும். நினைத்த காரியங்களை வெற்றியுடன் முடித்து விடுவீர்கள். கலைத்துறையினர் புதிய படைப்புகளைத் தயாரிப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். தொழிலில் ஆர்வம் அதிகரிக்கும். பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையைக் காண்பீர்கள். உடலாரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். மாணவமணிகள் கல்வியில் முன்னேற்றம் அடைய நிறைய உழைக்க வேண்டி இருக்கும். ஆசிரியர்கள், பெற்றோரின் அறிவுரைகளைப் பின்பற்றுவீர்கள். பரிகாரம்: குருவாயூரப்பனை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 16, 18. சந்திராஷ்டமம்: 22. ••• மிதுனம் ஜூலை 16 முதல் 22 வரை (மிருகசீரிஷம் 3-ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய) பொருள் திரட்டுவதில் ஆர்வம் கூடும். செய்தொழிலில் விருத்தி அடைவீர்கள். உங்களின் அறிவாற்றலும் திறமையும் வெளிப்படும். துணிச்சலான காரியங்களில் அதிக ஈடுபாடு உண்டாகும். பொருளாதார நிலை சற்றே உயரும். உத்தியோகஸ்தர்களுக்கு புதிய பதவிகள் தேடி வரும். புதிய கண்டுபிடிப்புகள் மூலம் உங்களுக்கு பெயரும், புகழும் உண்டாகும். வியாபாரிகள் செய்து வரும் தொழில் விருத்தி அடையும். கொடுக்கல், வாங்கல் முதலான விஷயங்களில் லாபம் ஏற்படும். விவசாயிகளுக்கு சோர்வு, சலிப்பு நீங்கி மன உற்சாகம் பெருகும். விவசாயத்தில் அபிவிருத்தி காண்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு பொருள் திரட்டுவதில் அதிக ஆர்வம் கூடும். உயர் பொறுப்புகளும் உங்களை வந்தடையும். கலைத்துறையினர் வெளிவட்டாரத்தில்…
திருச்சிராப்பள்ளி, திருப்பராய்த்துறை ஆகிய திருத்தலங்களுக்குச் சென்றுவிட்டு, அங்கிருந்து திருப்பைஞ்ஞீலி என்னும் தலம் நோக்கிச் சென்றார் திருநாவுக்கரசர். போகும் வழியோ தனிவழி. களைப்பு, பசி, தாகம் இருப்பினும் திருப்பைஞ்ஞீலி செல்வதையே குறிக்கோளாகக் கொண்டு தன் பயணத்தைத் தொடர்ந்தார். இறைவன் – நீலகண்டேஸ்வரர், ஞீலிவனநாதர், கதலிவசந்தர், ஆரண்யவிடங்கர் இறைவி – விசாலாட்சி பசியும் தாகமும் அதிகரித்தது. இருப்பினும் சிவபெருமானையே சிந்தித்துக் கொண்டு நடக்கலானார். பக்தன் பாடுபடுவதைப் பார்த்துக்கொண்டு பரமனால் பேசாமல் இருக்க முடியுமா? நாவுக்கரசர் நடந்து வரும் வழியில், ஒரு சிறுகுளம் உருவாக்கி, அதன் கரையில் பொதிசோறு கட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தார் சிவபெருமான். நாவுக்கரசர் அத்தடாகத்தின் அருகாமையில் வந்தவுடன், அந்தணர் வேடத்தில் உட்கார்ந்திருந்த ஆண்டவன், ""பெரியவர் களைத்துப் போய் வந்திருக்கிறீர்கள். என்னிடம் சோறு இருக்கிறது. சாப்பிடுங்கள். சாப்பிட்டு விட்டுத் தடாகத்தில் தாகம் தீர்த்துக் கொள்ளுங்கள். தங்கி இளைப்பாறிவிட்டுப் போங்கள்” என்று அழைத்தார். நாவுக்கரசரும் அங்கு நின்று உணவுண்டு நீர் அருந்திக் களைப்பாறினார். அந்தணர் அவரைப் பார்த்து, "எங்கு போகப் போகிறீர்கள்?” என்று கேட்டார். "திருப்பைஞ்ஞீலிக்குச் செல்கிறேன்” என்று சொன்னவரிடம் ""நானும் அங்குதான் போகிறேன்” என்று கூறித் தன் மூட்டையைக் கட்டிக்கொண்டு கூடவே வந்தார் அந்தணர். திருப்பைஞ்ஞீலி அடைந்ததும் திரும்பிப் பார்த்தால் உடன் போந்தவரைக் காணோம்.மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 21) எப்படி இருப்பார்? பசிக்கு உணவு தந்து, களைப்புக்கு உற்சாகம் தந்து, வழித்துணையாய் வந்திடத்தானே சிவபெருமான் சித்தம் கொண்டார்! உணவு தந்தார்; துணையாய் வந்தார். தோன்றிய துணையாயும், உடன்வந்த தோன்றா துணைவன் கொண்டு வந்துவிட திருப்பைஞ்ஞீலியில் திருநாவுக்கரசர் பாடிய பதிகம் "உடையர் கோவணம் ஒன்றுங் குறைவிலர்படைகாள் பாரிடஞபு சூழ்ந்த பைஞ்ஞீலியார்சடையிற் கங்கை தரித்த சதுரரைஅடைய வல்லவர்க் கில்லை அவலமே”. திருப்பைஞ்ஞீலி தலத்தினைச் சென்றடையும் வழி:திருச்சியிலிருந்து பேருந்து செல்கிறது. திருச்சியிலிருந்து மண்ணச்சநல்லூர் வழியாக இத்தலத்தை அடையலாம். கோயில் வரை வாகனங்கள் செல்லும். திருப்பைங்கிளி என்பது இப்போதைய பெயர். நன்றி Hindu வேண்டியது கிடைக்கும் விநாயகர் வழிபாடு
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 4 ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல் ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேறி ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து பாழியந் தோளுடைப் பத்பநாபன் கையில் ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல் வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய். திருப்பாவை – பாடியவர் புவனேஸ்வரி விஸ்வநாதன் பாடியவர் – பவ்யா ஹரி விளக்கம்: நோன்பு நோற்கச் செல்லும் பெண்கள் மழைக் கடவுளை நோக்கி மழை பொழியுமாறு வேண்டுகிற பாசுரம். “மழைக் கடவுளே! உன்னுடைய தன்மையை நீ ஒளித்துக் கொள்ளாதே. கடலுக்குள் புகுந்து, அங்கிருந்து நீரை முகந்துகொண்டு மேலே ஏறி, மேகமாகி, ஊழிப்பிரளய காலத்திலும் தான் ஒருவன் மட்டுமே இருக்கும் எம்பெருமான் கண்ணனின் திருமேனிபோல் கருமை பெற்று, அழகிய தோள்களை உடைய பத்மநாபனின் வலது திருக்கரத்தில் திகழும் திருவாழிச் சக்கரம்போல் மின்னல் மின்னி, இடது திருக்கரத்தில் உள்ள திருச்சங்கம் போல் இடியென அதிர்ந்து, சார்ங்க வில்லிலிருந்து புறப்படும் அம்புகள் போல் சரம் சரமாக மழை பொழிந்துவிடு. உனது மழைக் கொடையினால் உலகம் வாழட்டும். நாங்களும் மகிழ்வோம்’ என்று கோரிக்கை வைக்கிறார்கள். பாசுரச் சிறப்பு: முந்தைய பாசுரத்தில் (கீழ்ப் பாசுரம்) நோன்பு வழிபாட்டையும் அதன் பலனையும் கூறிய ஆண்டாள், இந்தப் பாசுரத்தில், அந்தப் பலனை விரித்துக் கூறுகிறாள். தீங்கின்றிப் பெய்யும் திங்கள் மும்மாரியானது, அனைவரும் வாழும்படியாகப் பெய்யும் என்பதை உறுதி செய்கிறாள். மேகம், மின்னல், இடி, மழை என்று யாவுமே எம்பெருமானாகத் தெரியும் அளவுக்கு அன்பில் தோய்ந்துள்ளனர் இப்பெண்கள் எனலாம். அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – பாடல் 4 ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ?ஆலங்குடியும் அஷ்ட திக்கு கோயில்களும் – மினி தொடர் – பகுதி 4 – புலவர்நத்தம் சிவன் கோவில் வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ? எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும் கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக் கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம் உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்து எண்ணிக் குறையில், துயிலேலோ ரெம்பாவாய். பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன் பாடியவர் – மயிலை சற்குருநாதன் பாடியவர் – கரூர் சுவாமிநாதன் விளக்கம்: உள்ளும் புறத்துமான உரையாடல் இப்பாடலிலும் தொடர்கிறது. புறம்: ஒளிபொருந்திய முத்துப் போன்ற பற்களையும் புன்சிரிப்பையும் கொண்டவளே, இன்னும் விடியவில்லையோ? உள்: கிளி போன்று பேசும் பெண்கள் எல்லோரும் வந்துவிட்டனரா? புறம்: நாங்கள் உள்ளவர்கள் உள்ளபடிச் சொல்லுகிறோம்; நீயே எண்ணிக்கொள். ஆனால், நாங்கள் சொல்கிற நேரத்திலும் தூங்கிக் கொள்ளலாம் என்றெண்ணிக் காலத்தை வீணடித்துவிடாதே. விண்ணவர்களுக்கு அமிழ்தமாகவும், வேதங்களின் சிறப்புப் பொருளாகவும், நமக்கெல்லாம் கண்ணுக்கினிய திருமேனி கொண்டவனாகவும் உள்ள சிவப்பரம்பொருளைப் பாடுகிறோம். நீயும் வந்து பாடி, உள்ளம் கசிந்து, நெஞ்சம் நெகிழ்ந்து உருகுவாயாக. இல்லையெனில், நீயே வந்து எண்ணிப் பார்; (எங்கள்) எண்ணிக்கை குறைந்தால் மீண்டும் போய்…
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 22 அங்கண்மா ஞாலத் தரசர் அபிமான பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே சங்க மிருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம் கிங்கிணிவாய்ச் செய்த தாமரைப் பூப்போல செங்கண் சிறுச்சிறிதே யெம்மேல் விழியாவோ திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல் அங்கண் இரண்டும்கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல் எங்கள்மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய். பாடியவர் – பவ்யா ஹரி விளக்கம்: இந்தப் பாசுரமும் கண்ணனிடத்தில் அருளை வேண்டுவதே ஆகும். "பெரியதான இவ்வுலகினில் உள்ள அரசர்கள் பலரும், தங்களின் ஆணவத்தை விட்டொழித்து வந்து, உன்னுடைய சிம்மாசனத்தின்கீழ் கூட்டம் கூட்டமாக நிற்கிறார்கள். அதுபோன்றே, நாங்களும் உன்னுடைய திருவடிக்கீழ் வந்து நிற்கிறோம். தாமரைப்பூப் போன்ற செம்மைமிக்க உன் திருக்கண்களை மெல்ல மெல்லத் திறந்து எங்களைக் காணாயோ? சந்திரனும் சூரியனும் ஒருசேர உதித்ததுபோல், அழகிய கண்கள் இரண்டையும் எங்கள்மீது விழித்தாயென்றால், எங்கள் சாபங்கள் யாவும் அழிந்துவிடும்’ என்று நோன்பியற்றும் பெண்கள் கோரிக்கை வைக்கிறார்கள். பாசுரச் சிறப்பு: இப்பாசுரமும் ஆணவம் தொலைத்து வந்திருக்கும் தன்மையைக் காட்டுகிறது. கண்ணன் அரண்மனை வாயிலில் பெருங்கூட்டம் ஒன்று நிற்கிறது }ஆணவத்தைத் தொலைத்துவிட்டுக் கண்ணனுடைய நட்பைப் பெறவேண்டும் என்பதற்காக வந்து நிற்கிற கூட்டம். கடவுளை அணுகுவதற்குத் தடையாக இருப்பது ஆணவம். தடையை வென்று எம்பெருமானை அடையும் வழியை இவ்விரண்டு பாசுரங்களும் விளக்குகின்றன. "கிங்கிணி’ என்பது சலங்கையிலும் கொலுசிலும் காணப்படும் முத்துப்பரல்; இதற்குள்முத்துபோன்ற சிறு மணி இருக்கும். கிங்கிணி முழுவதுமாக மூடப்படாமல், பாதித் திறந்திருக்கும். அப்போதுதான், உள்ளிருக்கும் மணி உருள உருள, அதன் ஓசை இனிமையாக ஒலிக்கும். கூடுதலாக மூடினால், ஒலி கேட்காமல் மழுங்கும்; கூடுதலாகத் திறந்தால், உள்ளிருக்கும் மணி விழுந்துவிடும். கண்ணனைக் கண் விழிக்கச் சொல்பவர்கள், முழுவதுமாகக் கண்களைத் திறந்தால், தம்மால் தாங்க முடியா தென்பதால், "சிறுச்சிறிதே’ விழிக்கக் கோருகிறார்கள். கிங்கிணி தக்க அளவே திறந்திருப்பதுபோல், கண்களும் தக்க அளவு திறக்கவேணும். கடவுளின் கண்கள், நல்லவர்களுக்குச் சந்திரனாகவும் தீயவர்களுக்குக் கதிரவனாகவும் இருக்கின்றன. "எம் மேல்’, "எங்கள் மேல்’, "எங்கள் மேல்’ என்று மும்முறை வேண்டுவது, மிகவும் தீனர்களான தங்களின் நிலையைக் காட்டுவதற்காக எனக் கொள்ளலாம். ****** ஸ்ரீமாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி – பாடல் 2 அருணன்இந் திரன்திசை அணுகினன்; இருள்போய்சப்தாம்சம்: கடந்த பிறவியில் செய்த பாவ, புண்ணியமும் அதனால் விளையும் தாக்கமும் அகன்றது; உதயம்நின் மலர்த்திரு முகத்தின் கருணையின் சூரியன் எழஎழ நயனக் கடிமலர் மலரமற் றண்ணல்அங் கண்ணாம் திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர் திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே! அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே! அலைகட லேபள்ளி எழுந்தரு ளாயே! பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன் பாடியவர்கள் – ஆலவாய் அண்ணல் தேவாரப் பாடசாலை மாணவர்கள் விளக்கம்: உதய நேரத்து நடப்புகள் நினைவூட்டப் பெறுகின்றன. "கதிரவனின் தேரோட்டியான அருணன், தன்னுடைய செவ்வொளியைப் பரப்பிக் கொண்டு, கிழக்கு திசையை நெருங்கிவிட்டான். இருள் அகன்றுவிட்டது. இது புறத்தே நிகழும் உதயம். நாங்கள் மற்றொரு உதயத்தை எதிர்நோக்கி நிற்கிறோம்….
2021ஆம் ஆண்டுக்கான குரு பெயர்ச்சி தொடர்பான ராசி பலன்களை ஜோதிடர் கே.சி.எஸ். ஐயர் கணித்து வழங்கியுள்ளார். இந்த பிலவ வருஷம் தட்சிணாயனம் சரத் ருது கார்த்திகை மாதம் 4-ஆம் தேதி (20.11.2021) சனிக்கிழமை, கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) துவிதியை திதி, கடக லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம், அமிர்த யோகம் கூடிய சுபயோக சுபதினத்தில், உதயாதி 44 நாழிகை அளவில் இரவு 11.28 மணிக்கு சூரிய பகவானின் ஹோரையில், அவிட்டம் நட்சத்திரம் 2-ஆம் பாதத்திலிருந்து அவிட்டம் நட்சத்திரம் 3-ஆம் பாதத்திற்கு அதாவது “பிரகஸ்பதி’ என்கிற தேவர்களுக்கு ஆசானாகிய குரு பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்குப் பெயர்ச்சியானார். குரு பெயர்ச்சி: மேஷம், ரிஷபம், மிதுனம், கடக ராசிகளுக்கான பலன்கள் குரு பெயர்ச்சி: சிம்மம், கன்னி, துலாம், விருச்சிக ராசிகளுக்கான பலன்கள் தனுசு, மகரம், கும்பம், மீன ராசிகளுக்கான குரு பெயர்ச்சிப் பலன்களைப் பார்க்கலாம். தனுசு(மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய) 20.11.2021 முதல் 13.04.2022 வரை உள்ள காலகட்டத்தில் அனைத்து செயல்களையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். உங்கள் செயல்களிலிருந்த தடை தாமதங்கள் நீங்கிவிடும். குடும்பத்திலும் வெளியிலும் தேவையான ஒத்துழைப்பு கிடைக்கும். வண்டி வாகனங்களில் இருந்த பழுதுகளைச் சீர் செய்வீர்கள். பாகப்பிரிவினை தொடர்பாக நடந்து வந்த விஷயங்களில் இழுபறிகள் குறைந்து சுமூகமான நிலையை நோக்கிச் செல்லத் தொடங்கும். மனதில் இனம் புரியாத ஆசைகள் மற்றும் எண்ணங்கள் தோன்றும். இந்த சிந்தனைகள் உங்களை புதுவித பாதையில் இட்டுச் செல்வதைக் காண்பீர்கள். பழைய கடன்களைத் திருப்பி அடைத்து விடுவீர்கள். வருமானத்தில் புதிய இலக்குகளை நோக்கி பயணிப்பீர்கள். கிடைத்தற்கரிய அரிய வாய்ப்புகளையும் பெறுவீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். படிக்கவும், வேலை செய்யவும் பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவீர்கள். செய்தொழிலில் சிறிய மாற்றங்களைச் செய்து புதிய வருமானம் வரும் வாய்ப்புகளையும் பெறுவீர்கள். பழைய காலத்திலிருந்த பொருளாதார நெருக்கடிகள் மறையும். தனித் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உற்றார் உறவினர்கள் உடன்பிறந்தோரின் தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றுவீர்கள். நேர்முக, மறைமுக எதிரிகள் விலகி ஓடுவார்கள். தனிக்காட்டு ராஜாவாக உங்கள் பாதையில் பயணப்படுவீர்கள். செய் தொழிலில் இருந்த போட்டி பொறாமைகள் குறைந்து அனைவரும் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். உடன்பிறந்தோரிடமும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். அதேநேரம் உங்கள் ரகசியங்களை அவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். குடும்பத்துடன் பொழுதுபோக்கு சுற்றுலாத் தலங்களுக்கு சென்று வருவீர்கள். முக்கியமான விஷயங்களில் பெரியோர்களிடம் கலந்தாலோசித்து முடிவுகளை எடுப்பீர்கள். அசையும், அசையா சொத்துக்கள் மூலம் ஆதாயங்களைப் பெறுவீர்கள். இறுக்கமான சூழ்நிலைகளை ஹாஸ்யமான பேச்சினால் சகஜமாக மாற்றி விடுவீர்கள். அரசு சம்பந்தமான விஷயங்களில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தியானம், பிரணாயாமம், யோகா போன்றவைகளைச் செய்வீர்கள். சமுதாயத்தில் உயர்ந்தவர்களின் நட்பு கிடைத்து, அவர்களின் மூலம் தேவையான ஆதரவைப் பெற்று, புதிய பொறுப்புகளை ஏற்று நடத்தும் காலகட்டமிது என்றால் மிகையாகாது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் தவறுகளைத் திருத்திக்கொண்டு அலுவலக வேலைகளில் கவனம் செலுத்துங்கள். மேலதிகாரிகளின் பாராட்டுகளைப்…
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 29 சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள்கேளாய்! பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய். பாடியவர் – பவ்யா ஹரி விளக்கம்: நோன்பு தொடங்கிய நாள் முதல், பறை என்று பரிசுகளைப்பற்றிக் கூறிக்கொண்டேயிருந்த பெண்கள், இப்பாசுரத்தில்தான், தாங்கள் நாடுகிற பரிசு என்ன என்பதைத் தெளிவாக உரைக்கிறார்கள். “அதிகாலைப் பொழுதில் வந்து உன்னை வணங்கி, உன்னுடைய திருவடிகளைப் போற்றி நாங்கள் நிற்பதற்கான காரணத்தைக் கேளாய். பசுக்கூட்டத்தை மேய்க்கும் ஆயர்குலத்தில் பிறந்துள்ள நீ, எங்களை உனக்கான தொண்டர்களாகக் கொள்ளாமல் விட்டுவிடாதே. ஏதோ இப்போதைக்குப் பரிசு பெறுவதற்காக வந்தோம் என்று எண்ணாதே. எந்தக் காலமானாலும், எத்தனைப் பிறவிகளானாலும் உன்னோடு உறவு கொண்டவர்களாக இருப்பதையே யாசிக்கிறோம். என்றென்றும் உனக்கு அடிமைகளாக இருப்போம். இவைதவிர வேறு ஏதேனும் விருப்பங்கள் எங்களுக்கு இருக்குமானால், அவற்றை மாற்றிவிடு’ என்று கோருகிறார்கள். பாசுரச் சிறப்பு: நோன்பைத் தலைக்கட்டுகிற (நிறைவேற்றுகிற) நிலையில் வைக்கப்படுகிற விண்ணப்பம் இது. குற்றேவல் என்பது சிறு சிறு ஏவல் கூவல் பணிகள். அந்தரங்கக் கைங்கர்யம் (தனித் தொண்டு) என்பார்கள். ஏழேழு என்பதனை 7, 7+7, 7+7 என்று எவ்விதமாகவேனும் கொள்ளலாம். என்றைக்காக இருந்தாலும் எம்பெருமானுக்கு அடிமைகளாகவும் எம்பெருமானின் உடைமைகளாகவும் இருக்க வேண்டும் என்பதே நிரந்தர விண்ணப்பம். செயல் பெரியதா சிறியதா என்பதைக் காட்டிலும், அது செய்யப்படுகிற நோக்கம் முக்கியமானது. எந்தச் செயலாக இருந்தாலும், அளவுக்கும் பார்வைக்கும் சிறியதாகவே இருப்பினும், அச்செயலுள் இருக்கும் அன்பும் பக்தியும் அறமும் ஆர்வமும் முக்கியமானவை. ஆங்கிலக் கவிஞர் மில்டனின் They also serve who stand and wait என்னும் வரியை நினைவூட்டுகிற பாசுரம் (இதே உணர்வைத் திருப்பள்ளியெழுச்சியின் 7ஆவது பாடலில், எது எமைப் பணி கொள்ளும் ஆறு என்னும் வரியில் காணலாம்). நோன்பை நிறைவேற்றிய நிலையில், நோன்பின் பலனை இப்பெண்கள் பெற விருக்கிறார்கள். ஒரு செயலின் பலனை அனுபவிக்கும்போது, அந்தச் செயலைச் செய்ததற்கான பெருமையும், செயல் பலனுக்கான ஆனந்தமும், ஒருவகையான மதர்ப்பைத் தரும். அந்த ஆனந்தமே சுயநலமாக மாறும்; ஆணவமாகத் தலைதூக்கும். இதற்குப் பிராப்ய விரோதம் என்று பெயர். இப்படிப்பட்ட சுயநலம் இல்லாமல், நோன்பென்னும் செயலையும், நோன்பின் நற்பலன்களையும்கூட இறைவனின் திருவடிகளில் அர்ப்பணிக்கிற பாசுரம் இது. ****** ஸ்ரீமாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி – பாடல் 9 விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டாதிருடியாவது தின்ன வேண்டும் திருவாதிரை களியை.. விழுப்பொரு ளேயுன தொழுப்படி யோங்கள் மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே! வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம் கண்ணகத் தேநின்று களிதரு தேனே! கடலமு தேகரும் பேவிரும் படியார் எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே. பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன் பாடியவர்கள்…
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 8 கீழ்வானம் வெள்ளென் றெருமை சிறுவீடு மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும் போவான்போ கின்றாரைப் போகாமல் காத்துன்னைக் கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால் ஆவாவென் றாராய்ந்து அருளேலோர் எம்பாவாய்! பாடியவர் பவ்யா ஹரி விளக்கம்: இப்பொழுது எழுப்பப்படுபவள், கண்ணனுக்கு மிகவும் பிடித்தமானவள்; எப்போதும் உற்சாகமாக இருப்பவள். “கீழ்த்திசை வானம் வெளுத்துவிட்டது. பால் கறப்பதற்கு முன்னர், எருமை மாடுகளை ஆயர்கள் அவிழ்த்து விட்டுள்ளனர். அம் மாடுகள், ஆங்காங்கே உள்ள சிறு புல்லை மேய்கின்றன. நோன்புக்குப் புறப்பட்டுவிட்ட பிற பெண்கள், நோன்புக்களம் நோக்கிச் செல்கின்றனர். அவர்களைத் தடுத்து உன்னையும் அழைத்துப் போவதற்காக வந்தோம். பதுமை போன்றவளே, எழுந்திரு. நோன்பியற்றி, குதிரையின் வாயைப் பிளந்தவனை, மல்லர்களோடு போரிட்டு வென்ற தேவாதி தேவனை நாம் வழிபட்டால், நமக்கு என்னவேண்டும் என்பதை ஆராய்ந்து அவன் அருள்வான்’ என்று அழைக்கிறார்கள். பாசுரச் சிறப்பு: பொழுது விடிவதற்கான அடையாளங்களாகப் பறவைகளின் ஒலி, திருக்கோயில் சங்கநாதம், முனிவர்களும் யோகிகளும் இறைவன் திருநாமம் கூறும் மிடற்றொலி, இல்லங்களில் பெண்கள் நடமாடும் ஒலி ஆகியவற்றைக் காட்டிய ஆண்டாள், இப்பாசுரத்தில் எருமைகளின் நுனிப்புல் மேய்தலைக் காட்டுகிறாள். இடையர்கள், அதிகாலை நுனிப்புல் மேய்வதற்காக மாடுகளை விடுவார்கள். அருகிலிருக்கும் புல்வெளியில் சிறிது பொழுதே கிடைக்கும் அவகாசம் இது. நாள் முழுதும் மேய்ச்சல் காட்டில் கிடைப்பது பெருவிடுதலை என்றால், இதைச் சிறு விடுதலை (வீடு=விடுதலை) என்று மாடுகள் நினைக்குமாம். உள்ளுறைப் பொருளில், எம்பெருமானாலேயே “நம்முடையவர்’ என்று பிரியம் காட்டப்பட்டவரும் கலிக்கு விடியலாகத் தோன்றியவருமானநம்மாழ்வாரை இப்பாசுரம் சுட்டுகிறது. அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – பாடல் 8 கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்இன்று பகுதிநேர சந்திர கிரகணம் – 2021 ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும் கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ? வாழியீ தென்ன உறக்கமோ வாய்திறவாய்! ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ? ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை ஏழைபங் காளனையே பாடேலோ ரெம்பாவாய். பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன் பாடியவர் – மயிலை சற்குருநாதன் பாடியவர் – சுந்தர் ஓதுவார் விளக்கம்: சிவபெருமான் பெருமையைப் பாடிக்கொண்டு வந்து புறத்தே நிற்கும் பெண்கள், இப்பொழுது, விடியலின் அடையாளங்களைக் கூறத் தொடங்குகிறார்கள். “வீட்டில் வளர்க்கும் கோழிகள் கூவுகின்றன. குருகுகள் (நாரைகள்) உள்ளிட்ட பிற பறவைகளும் ஒலி எழுப்புகின்றன. மக்களும் விழித்தெழுந்து, திருக்கோயில்களை அடைந்து மங்கலக் கருவியாம் நாகஸ்வரத்தையும் வெண்சங்குகளையும் இசைக்கிறார்கள். ஒப்பற்ற பேரொளியே, ஒப்பற்ற பெருங்கருணையே, ஒப்பற்ற விழுப்பொருளே என்றெல்லாம் வாயார இறைவன் பெருமையைப் பாடுகிறோம். எந்த ஓசைக்கும் நீ எழவில்லையென்றால், இதென்ன பேருறக்கமோ புரியவில்லையே! ஊழிக்காலத்தில் முழு முதல்வனாகவும் மாதொருபாதியனாகவும் திகழ்கிற பெருமானை நாங்கள் பாடுகிறோம். ஒருவேளை இவ்வாறு கிடப்பதுதான் இறைவன் மீது நீ வைத்திருக்கும் அன்போ?’ என்று வினா…
எதனை இயலாமல் செய்யும், ஸ்ரீமன் நாராயணனின் நாமம்? சனி பகவான் எப்போது தீய விளைவுகளை அளிப்பார் / அளிக்க மாட்டார் என்று முதலில் தெரிந்துகொள்வோம். ஒரு ஜாதகரின் ஜாதகக் கட்டம் தான் அதனை தீர்மானிக்கும். சிலருக்கு, சனி மிகச் சிறப்பான நன்மைகளைச் செய்திருக்கிறார். ரிஷபத்திற்கும், துலாத்திற்கும் சனி தான் யோகாதிபதி ஆகிறார். ஆம், அவரே கேந்திராதிபதியாகவும், திரிகோணாதிபதியாகவும் வருவதால், யோகாதிபதி ஆகிறார். ரிஷபத்திற்கு, 9, 10க்கு அதிபதியாகவும், துலாத்திற்கு 4, 5 க்கு அதிபதியாகவும் வருவதே ஆகும். இதனால், ரிஷப, துலா லக்கினகாரர்களுக்கு பொதுவாக சனி யோகாதிபதியாகி, பல நன்மைகளைச் செய்கிறார். சனிக்கு பகை ராசிகள் – செவ்வாயின் வீடுகளான மேஷம், விருச்சிகம் மற்றும் சந்திரனின் வீடான கடகம், சூரியனின் வீடான சிம்மத்திலும் பகையாவார். இந்த வீட்டிற்கு இவர் நன்மையை பொதுவாக செய்யமாட்டார். இப்படி பொத்தாம் போக்காகவும் சொல்லிவிடமுடியாது. இந்த ராசிகளில் உள்ள சில நட்சத்திர பாதத்தில் நிற்கும்போது மட்டும் தான் அவர் பகையாவார். நன்மையைச் செய்யமாட்டார். பொதுவாக கூறவேண்டுமானால், சனி – மேஷத்தில் நீச்சம். ஒருவரின் ஜாதகத்தில், இங்கு சனி நிற்பதனால் நீச்சம் என்று எடுத்துக்கொள்ள முடியாது. உதாரணத்திற்கு, மேஷ ராசியில், அஸ்வினி நட்சத்திரம் அனைத்து பாதங்களிலும் சனி நிற்க பிறந்தவர்களுக்கு தீங்கு நேராது. அஸ்வினி -1 ஆம் பாதம் நீச்ச நவாம்சம் அடைவதால் அந்த பாதத்தில் சனி நின்றவர்களுக்கும், அஸ்வினி 4 ஆம் பாதத்தில் சனி நின்றவர்களுக்கு பகை நவாம்சம் பெறுவதால், இந்த இரு பாதங்களில் நின்ற சனி தான் தீமையான பலனை அளிப்பார். அஸ்வினி 2, 3 பாதத்தில் நிற்கும் சனியால் தீமை ஏற்படாது. இது போல் ஒவ்வொன்றாக பார்த்து தான் தீர்மானித்திடல் வேண்டும். பொதுவாக மேஷத்தில் சனி நீச்சம் என கொண்டு சனி மேஷத்தில் நிற்கும். அனைவருக்கும் தீய பலன்களே ஏற்படும் எனச் சொல்லிவிட முடியாது. சனி பகவான் ஒரு தோத்திர பிரியர். அவரை மனம் உருக தோத்தரித்தால், நிச்சயம் பல நன்மைகளை , நமது கர்ம வினைகளைக்கு ஏற்ப தக்கபடி பலன்களை அருள்வார். சனி பகவானை தோத்தரிக்கும் அகரவரிசையில் வரும் வரிகளை மனம் ஒன்றி படிக்கவும். ( ம் +அ = ம , ம் + ஆ = மா … இது போல் துவங்கும் வரிகள்.) 1. மந்தன், கரியவன், கதிர் மகன், சௌரி, நீலன் எனும் சனி கிரக சகாயா நம ஓம். 2. மானிடரின் ஆணவத்தை மாற்றி அருள் மயமாக்கும், சனி கிரக சகாயா நம ஓம். 3. மிகு உச்ச ஆட்சி பலம் இருந்திடில் நலம் சேர்க்கும், சனி கிரக சகாயா நம ஓம். 4. மீளாத வறுமைக்கு ஆளாகாமல் காக்கும் , சனி கிரக சகாயா நம ஓம். 5. முக ரோகி, கால் முடவன், முதுமகன் , காரியன் எனும் சனி கிரக சகாயா நம ஓம். 6….
நாராயணன் தர்மம் காக்க தானே மனிதனாக அவதரித்து தசரத மைந்தன் ஸ்ரீராமன் என்ற பெயரோடு அவரே வடிவமைத்த அர்ச்சாரூபமாக இருந்து வடுவூரில் எழுந்தருளி உள்ள ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு ஸ்ரீராமநவமி பெருந்திருவிழா 2022ம் ஆண்டு பிலவ வருடம் பங்குனி மாதம் 26ஆம் நாள், ஏப்ரல் 8-ஆம் தேதி துவங்கி சித்திரை ஐந்தாம் நாள் ஏப்ரல் 18 வரை நடக்க இருக்கிறது இன்று ஏப்ரல் ஒன்பதாம் தேதி துவஜாரோகணம் எனப்படும் திரு கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினம் காலையில் பல்லக்கில் புறப்பாடு நடைபெற உள்ளது. மாலை வேளைகளில் சூரிய பிரபை, சேஷ வாகனத்தில் பரமபத நாதனாக, 12ம் தேதி கருடசேவை – வைரமுடி, ஏப்ரல் 13ஆம் தேதி நாச்சியார் திருக்கோலம், இரவு அனுமந்த வாகனம், 14ம் தேதி இரவு மோகன அலங்காரமும் 15ஆம் தேதி ஆறாம் திருநாளின் காலையில் யானை வாகனத்தில் ஸ்ரீ ராமர் ராஜா அலங்காரமும் ஹம்ச வாகனத்தில் தாயார் புறப்பாடும் நடைபெறும். 15ஆம் தேதி திருக்கல்யாண கோலத்தில் புறப்பாடும் மாலை சூர்ண அபிஷேகமும் 16ஆம் தேதி பல்லக்கு நவநீத சேவையும் ஏப்ரல் 17ஆம் தேதி திருத்தேரில் ஸ்ரீகோதண்டராமர் எழுந்தருளி சேவையும் 18ம் தேதி சப்தாவர்ணமும் தொடர்ந்து 19 முதல் விடையாற்றி உற்சவம் நடைபெற உள்ளது. தொன்மையும் வரலாற்றுச்சிறப்பும் உடைய வடுவூர் ஸ்ரீ கோதண்டராமர் கோவில் சிறப்புகள் கீழ் கண்டவையாகும் காவிய நாயகன்அவதாரபுருஷனாகிய ராமன், தந்தை தசரதனின் ஆணையின்படி 14 ஆண்டுகள் வனவாசம் மேற்கொண்டார். அடர்ந்த கானகத்தில் பர்ணசாலையில் சீதை மற்றும் இலக்குவனுடன் மரவுரி தரித்து காய்கனி உண்டு வசித்து வந்தபோது, நாடு செல்ல வேண்டிய நிலை வந்தபோது அங்குள்ள முனிவர்கள் அவரை அங்கேயே தங்கி இருக்கவேண்டும் என்று மன்றாடி கேட்டனர். அவதார நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு தான் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டதைக் குறித்து விளக்கி ராமன் முனிவர்களை சமாதானப்படுத்தி மேற்கொண்டு செல்ல தடைவிதிக்கக்கூடாது என்று கூறினார். அப்போதும் முனிவர்கள் சம்மதிக்கவில்லை. இதனால் ராமர் என்ன செய்வதென்று சிந்தித்தார். முடிவில் தன் கையாலேயே தன்வடிவத்தைத்தானே விக்ரகமாக செய்து தனது ஆசிரமத்து வாசலில் வைத்துவிட்டு உள்ளே சீதையுடன் இருந்தார். முனிவர்கள் மறுநாள் ராமனை தரிசிக்க வந்தபோது, ஆசிரமத்து வாசலில் அழகெல்லாம் ஓர் உருவாய் திரண்ட வடிவழகுடன் கூடிய ராமர் செய்த விக்ரகத்தை வணங்கி உள்ளே சென்றார்கள். அப்போது அவர்கள் ராமனிடம் இந்த தண்ட காரண்யத்தை விட்டுச் செல்லக்கூடாது என்று மீண்டும் வேண்டிக்கொண்டனர். அப்போது ராமன் நான் வேண்டுமா? அல்லது எப்போதும் உங்களை பிரியாத ஆசிரமத்து வாசலில் உள்ள எனது அர்ச்சை உருவம் வேண்டுமா? என்று கேட்டார். ராமனின் விக்ரகத்தின் அழகில் மெய் மறந்து இருந்த முனிவர்கள் அந்த திவ்ய விக்ரகத்தையே விரும்பினார்கள். உடனே விக்ரகத்தை முனிவர்களிடம் கொடுத்த ராமர் அங்கே எழுந்தருளிவிட்டார்.மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 27) ராமனின் பயணம்தண்டகாரண்யத்தில் இருந்த அந்த விக்ரகத்தை திருக்கண்ணபுரத்தில் ராமர் சன்னிதியில் பிரதிஷ்டை செய்து நீண்டகாலம் வழிபட்டு…
• விநாயகப் பெருமானின் திருவுருவங்கள் பல. யானை முகத்துடன் காட்சி தரும் விநாயகர், பெண் வடிவிலும் சில திருத்தலங்களில் அருள்புரிகிறார். தாய் தெய்வங்கள் வரிசையில் சக்தி கணபதி, விநாயகி, விக்னேஸ்வரி, கணேசினி, கணேஸ்வரி, கஜானனி, ஐங்கினி முதலிய பெயர்களால் அழைக்கப்படுகிறார். • யானை முகம், கால் முதல் இடை வரை புலியின் உருவம், இடை முதல் கழுத்து வரை பெண் வடிவத்தில் அருள்புரியும் விநாயகரை “வியாக்ர சக்தி விநாயகர்’ என்பர். இந்த புதுமையான வடிவத்தினை மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் முன் மண்டபத்தில் காணலாம். • கையில் வீணையுடன் காட்சி தரும் விநாயகியின் திருவுருவை கோவை மாவட்டம், பவானி பகுதியில் அமைந்துள்ள ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் உள்ள ஸ்ரீ சௌந்தரநாயகி தாயார் சந்நிதியின் மேல்மண்டபத்தில் காணலாம். • இடுப்பிற்குக் கீழே யாளி வடிவமுடனும் கைகளில் வாள், மழு, கதை, கேடயம் ஆகியவற்றுடன் காட்சி தரும் விநாயகி திருவுருவத்தை நெல்லை மாவட்டம், வாசுதேவ நல்லூரில் உள்ள கோயிலில் தரிசிக்கலாம். • சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பிள்ளையார்பட்டி திருத்தலத்தில் அமர்ந்த நிலையில் அருள்புரியும் கற்பக விநாயகர் இருகரங்கள் கொண்டு எழுந்தருளியுள்ளார். வலது கரத்தில் சிறிய சிவலிங்கத்தினை ஏந்தியுள்ளார். இடது கரத்தினை தொடையில் வைத்துள்ளார். இவரைச் சுற்றி ஒன்பது சர விளக்குகள் தொங்குகின்றன. அவை; நவக்கிரகங்களைக் குறிக்கின்றன. • பிள்ளையார்பட்டி தலத்திற்கு அருகில் அமைந்துள்ள திருவீசர் நகரில் ஸ்ரீ சித்ரகுப்தர் ஆலய வளாகத்தில் அருள்புரியும் ஸ்ரீ குபேர விநாயகர் இரு திருக்கரங்களுடன் விளங்குகிறார். மேலும் பக்தர்களை ஆசீர்வதிக்கும் தோற்றத்தில் இரு கரங்களையும் சற்று தூக்கி அபயம் அளிக்கும் கோலத்தில் காட்சி தருகிறார். • இரு கரங்களுடன் காட்சி தரும் விநாயகர்களைப்போல் நான்கு திருக்கரங்களுடன் அருள்புரியும் விநாயகர்கள் தங்கள் கரங்களில் வேறு வகையான பொருள்களையும் வைத்திருப்பதை தரிசிக்கலாம். அந்த வகையில் சங்கரன் கோயில் திருத்தலத்தில் “சர்ப்ப விநாயகர்’ தன்னிருகைகளில் சர்ப்பங்களை ஏந்தி அருள்புரிகிறார். • திருச்சி ஜெயம்கொண்டம் தலத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீ வைரவனீச்சுவரர் ஆலயத்தில் “வில்’ ஏந்திய விநாயகர் காட்சி தருகிறார். இவர், அர்ஜுனனுக்கு பாசுபதாஸ்திரம் ஏவுவதற்கு கற்றுக் கொடுத்ததாக சொல்வர்.மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 22) • மதுரை மாவட்டம், பேரையூர் தாலுக்கா பூலாம்பட்டி மத்தங்கரை திருத்தலத்தில் கோயில் கொண்டுள்ள விநாயகர் கோடாரி ஏந்தி காட்சி தருகிறார். • முத்துப்பேட்டை- மன்னார்குடி சாலையில் உள்ள தலத்தின் தலமரம் மாமரம். அதனால் இத்தலத்திற்கு சூதவனம் என்ற பெயரும் உண்டு. அதற்கு ஏற்ப இத்தல விநாயகர் திருக்கரத்தில் மா இலையை ஏந்தி அருள்கிறார். • ராஜபாளையத்தை அடுத்துள்ள அமியாச்சிபட்டி எனும் ஊரில் பருத்திக்காட்டுப் பகுதியில் கோயில் கொண்டுள்ள விநாயகர் கையில் வேலுடன் காட்சி தருகிறார். • சேலம் நகரின் மையப்பகுதியில் “செர்ரி’ சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ சுகவனேஸ்வரர் கோயிலில் அருள்புரியும் விநாயகர், தம் இரு கரங்களிலும் கொழுக்கட்டை ஏந்தியவாறு காட்சி தருகிறார். • விநாயகப் பெருமான் எந்தவிதத்…
ஜோதிடர் கே.சி.எஸ்.மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 28)ஐயர், ரிஷப ராசிக்கான ராகு – கேது பெயர்ச்சி பலன்களை கணித்து வழங்கியுள்ளார். நன்றி Hindu அக்டோபர் மாத பலன்கள் (துலாம் – மீனம்)