பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் வைகுந்த ஏகாதசி பெருவிழாவில், 21 நாள்களிலும் மூலவர் பெரியபெருமாளுக்கு முத்தங்கி சேவை நடைபெறுகிறது. 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்றும் அழைக்கப்படுவது ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில். இந்த திருக்கோயிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெற்றாலும், திருஅத்யயன உற்ஸவம் எனப்படும் வைகுந்த ஏகாதசி திருவிழா 21 நாள்கள் நடைபெறுவது தனிச்சிறப்புக்குரியது. பகல்பத்து, இராப்பத்து, இயற்பா என 21 நாள்கள் நடைபெறும் திருவிழாவில், மூலவரான பெரியபெருமாளையும், உற்ஸவரான நம்பெருமாளையும் தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமல்லாது, பல்வேறு மாநிலங்களிலிருந்தும் திரளான பக்தர்கள் ஸ்ரீரங்கத்துக்கு வருகைத் தருவர். திருமொழித் திருநாள் என்றழைக்கப்படும் பகல்பத்து உற்ஸவத்தின் போது, நாள்தோறும் நம்பெருமாள் கருவறையிலிருந்து புறப்பட்டு, அர்ச்சுன மண்டபத்திலும், திருவாய்மொழித் திருநாள் என்றழைக்கப்படும் இராப்பத்து திருநாள்களில் பரமபதவாசல் வழியாகச் சென்று திருமாமணி மண்டபம் எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்திலும் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இதில் இராப்பத்து எட்டாம் திருநாளில் பரமபதவாசல் திறப்பு கிடையாது. நிகழாண்டில் கார்த்திகை மாதத்திலேயே பரமபதவாசல் திறப்பு பொதுவாக அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி திதியன்றுதான் பரமபதவாசல் திறப்பு நடைபெறும். அதற்கேற்றவாறு கார்த்திகை மாத இறுதியில் திருவிழா தொடங்கி, மார்கழி மாத ஏகாதசி திதியன்று பரமபதவாசல் திறக்கப்படும். ஆனால், 19 ஆண்டுகளுக்குப் பிறகு கார்த்திகை மாதத்தில் வைகுந்த ஏகாதசி திருவிழா தொடங்கி, இந்த மாதத்திலேயே பரமபதவாசல் திறப்பும் நடைபெறுகிறது. இக்கோயிலில் தை மாதத்தில் நடைபெறும் தேரோட்டத்தையொட்டி, புனர்பூச நட்சத்திரத்தை கணக்கில் கொண்டு கார்த்திகை மாதத்தில் பரமபதவாசல் திறப்பு நடைபெறுவதாக திருக்கோயில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 21 நாள்களும் முத்தங்கி சேவைராகு – கேது பெயர்ச்சி பலன்கள்: மேஷம் நிகழாண்டில் டிசம்பர் 4-ஆம் தேதி பகல்பத்து உற்ஸவத்துடன் வைகுந்த ஏகாதசி திருவிழா தொடங்கிய நிலையில், பகல்பத்து பத்தாம் திருநாளான திங்கள்கிழமை (டிச.13) நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் காட்சியளித்தார். டிசம்பர் 14-ஆம் தேதி பரமபதவாசல் திறப்பு நடைபெறுகிறது. ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி பகல் பத்து பத்தாம் நாளான திங்கட்கிழமை அர்ச்சுன மண்டபத்தில் மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் நம்பெருமாள். பொதுவாக ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் நடைபெறும் திருவிழாவில் உற்ஸவரான நம்பெருமாளுக்கு அணிவிக்கப்படும் ஆபரணங்கள் விலைமதிப்பற்றவை. மேலும் நம்பெருமாளை அலங்காரப் பிரியன் என்றும் அழைப்பர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் நம்பெருமாள் புறப்பாடாகும் போது, அவர் அணிந்திருக்கும் ஆபரணங்களைக் காண கண்கோடி வேண்டும். பொதுவாக வைகுந்த ஏகாதசி திருவிழாவில் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கருவறையிலுள்ள பெரியபெருமாளையும், நம்பெருமாளையும் தரிசித்து செல்வர். இதற்காக பல மணி நேரம் காத்திருக்கும் நிலையும் பக்தர்களுக்கு ஏற்படும். ஆனாலும், பக்தர்கள் அதை பொருள்படுத்தாது தரிசித்து செல்வர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை பரமபதவாசல் திறப்பன்று முதலே கருவறை பெருமாளுக்கு முத்தங்கி அணிவிக்கப்பட்டு, 10 நாள்கள் மட்டுமே அந்த சேவை நடைபெற்றுவந்தது. இந்நிலையில் பக்த பெருமக்களின் வேண்டுக்கோளுக்கிணங்க, கடந்த…
மனிதனின் குறிக்கோள் எதை நோக்கிச் செல்கிறது, அவற்றில் அவன் வெற்றி பெறுவானா, லாபம் உண்டா அவற்றில் திருப்தி அடைகின்றானா என்று தெரிந்துகொள்ள அவரவர் ஜாதகம் கொண்டு சொல்ல முடியும். ஒவ்வொருவனுக்கும் சந்தோசம் என்பது வீடு, மனைவி மற்றும் குழந்தைகள் என்பது உலக நியதி. முக்கியமாக ஒருவன் அதற்காக பல தொழிலை செய்து முன்னேற பார்க்கிறான். அதனால் வரும் லாபம் நன்மையே. ஜாதக கட்டத்தின் முக்கிய பாவம் பதினொன்று. பதினோன்றம் பாவம் பல்வேறு காரகத்துவத்தை கொண்டது அவற்றில் முக்கியமாக லாபம், திருப்தி, மகிழ்ச்சி, மூத்த சகோர /சகோதரி, மருமகள் மருமகன் பற்றிய விவரம், அரசாங்க கடன், ஒருவரின் நோய் சரியாகும் நிலை, தாயாரின் ஆயுள், முழங்கால் பாதிப்பு, நல்லவர்கள் நட்பு, விவசாயம் என பலவற்றை அடுக்கிக் கொண்டு போகலாம். லக்கினம் (1) பலம் முக்கியம் என்பர் அதற்கு அடுத்து பூர்வ புண்ணியம் ஸ்தானம் மற்றும் பாக்கியம் ஸ்தானம் (5,9) என்று நல்ல பாவங்களாக சொல்லப்படுகிறது. கடைசியில் அவர் வெற்றி பெறுவாரா, சந்தோசமாக இருப்பாரா? அந்த சந்தோஷம் எதில் கிடைக்கும் என்பதை பதினொன்றாம் பாவம் உணர்த்தும். இன்று 11ம் பாவத்தின் நுணுக்கங்களை விரிவாகப் பார்ப்போம். ஒருவரின் வெற்றி எதை நோக்கி இருக்க வேண்டும் என்பதை ஜாதகரின் முக்கிய பாவங்கள் சொல்லிவிடும். அதனால் ஏற்படும் நிறைவு என்பதைப் பார்க்க ஒவ்வொருவரின் ஜாதகத்தில் நல்லது செய்யும் பாவத்தில் முக்கியமான 11ம் பாவத்தைப் பார்க்க வேண்டும். ஜாதகத்தில் திரிகோணத்தோடு 11ம் பாவம் சம்பந்தம் பெரும்பொழுது, அவன் எல்லாவற்றையும் வெற்றி கொண்டு மிகப்பெரிய செல்வந்தன் ஆவான். வாழ்க்கையில் திருப்தியுடன் சந்தோஷம் என்பது அவசியம் தேவை. முக்கியமாக 11ம் அதிபதி ஏழுடன் தொடர்புகொள்ளும்பொழுது திருமண உறவில் சந்தோஷமான வாழ்க்கை அமையும். 11ம் அதிபதி 7ல் இருந்தால் திருமணத்திற்குப் பிறகு மகிழ்ச்சி, உயர்வு பெறுவார். ஆனால் அதுவே 11ம் பாவம் என்பது இரண்டாவது திருமணத்தையும் குறிக்கும். அதனால் ஜாதகத்தில் பார்த்து பலன் சொல்ல வேண்டும். பதினோராம் பாவம் அசுப சேர்க்கை, சுக்கிரனோடு பாவி மற்றும் அயன பாவம் தொடர்பு பெரும்பொழுது, ஒருவன் மது மற்றும் மாது என்று சந்தோஷத்தை நோக்கிச் செல்வான். இந்த ஜாதகருக்கு திரிகோண அதிபதிகளும் கெட்டுப் போயிருப்பார்கள். லக்கினம் 5,11 மற்றும் சுபர்களோடு தொடர்புகொள்ளும்பொழுது குழந்தைகளுக்காக பணம் ஈட்டுவதே அவனுக்கு சந்தோஷத்தை தரும். எடுத்துக்காட்டாக கும்ப லக்கினம் 5ல் புதன் சனி அவரோடு 11ம் பாவ அதிபதி லக்கினத்தில். இவரின் 5ம் பாவத்தில் ஆட்சி பெற்ற புதனுடன், லக்கினாதிபதி சனி சேர்க்கை பெற்று 11ம் அதிபதி பார்வையில் உள்ளார். இந்த ஜாதகர் தன் தொழில் மூலம் ஈட்டிய பணத்தைக் குழந்தைக்காக சந்தோஷமாக செலவு செய்து வெற்றி வாகையும் சூடுவார். பதினொன்றாம் பாவதிபதி லக்கினதோடு தொடர்பு கொண்டால், அந்த ஜாதகர் மற்றவர்களுக்கு சந்தோஷத்தை கொடுப்பார். ஆனால் மற்றவர்களால் அவருக்கு எந்த சந்தோஷமும் கிடைக்காது. எடுத்துக்காட்டாக லக்கினாதிபதி ஆட்சி மற்றும் சுப நிலையில் இருந்து,…
வி = இதற்கு மேல் இல்லை; நாயகர் = தலைவர். “விநாயகர்’ அதாவது இவர் தான் அனைவருக்கும் தலைவர் என்று பொருள். அதனால் தான் இவரை ‘முழுமுதற்கடவுள்’ என்றும், எல்லா கணங்களுக்கும் அதிபதி என்பதால் ‘கணபதி’ என்றும் அழைக்கப்படுகிறார். நீ அவனை பிடித்தால் அவன் உன்னை ஆசையுடன் பிடிப்பான்; எனவே “தும்பிக்கையானிடம் நம்பிக்கை வை’ என்றனர். நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்ற முதுமொழியினைப்போல்; விநாயகரின் குறும்பு பல தெளிவான செயல்களை விளங்க வைத்துள்ளது. பிரணவ மந்திரத்தில் பிரம்மனுடன் விளையாடினாலும்; அந்த பிரணவ மந்திரத்தின் சிறப்பினை உலகிற்கு தெரியப்படுத்திய பெருமை விக்னேஸ்வரனையே சேரும். அதுபோல் மாம்பழ விளையாட்டில் நீயா நானா போட்டியில் ஆணவமும், அகம்பாவமும் வெல்ல முடியாது; பணிவாய் தாய் தந்தையை வணங்கினால் அனைத்துப் பேற்றினையும் அடையலாம் என்ற உட்கருத்தை தெளிவாகக் கூறியவர். நமக்கு ஒரு சோதனை ஏற்பட்டால் “ஈஸ்வரா இது என்ன திருவிளையாடல்?’ என பரமசிவனை வழிபடுவோரும், “நாராயணா இது என்ன சோதனை?’ என நாராயணனை வழிபடுவோரும்; “தாயே எனக்கு கருணைபுரிவாயா?’ என அம்மனை வழிபடுவோரும் பலவாராகக் கூறி வணங்குவார்கள். இந்த கடவுளர்கள் அனைவரும் நிதானமாக ஆழ்ந்து சிந்தித்து; பலவகையிலும் தகுதிப் பரிசோதனை செய்து பின் நமக்கு அருள்புரிவார்கள். ஆனால் சற்று வித்தியாசமானவர் நம் விநாயகர். பெரிய வழிபாடெல்லாம் செய்ய வேண்டாம்; சாலை ஓரத்தில் அமர்ந்துள்ள விநாயகரைக்கூட போகிறபோக்கில் ஒரு சதுர்தேங்காயை உடைத்து விட்டு “என்னால் முடியவில்லை நீ பார்த்துக் கொள்’ என சரணாகதி அடைந்தால் நம் கோரிக்கையை எளிதில் தீர்த்துவைப்பார். விக்ன விநாயகனுக்கு தனியாக கோயில்கள் பல ஊர்களில் இருந்தாலும் குறிப்பிட்டுச் சொன்னால் தஞ்சையிலிருந்து திருவையாறு செல்லும் மார்க்கத்தில் கண்டியூருக்கு அருகில் “திருவேதிகுடி’ என்ற ஊரில்; சம்பந்தர், நாவுக்கரசரால் பாடப்பெற்ற சிவத்தலம் ஒன்றுள்ளது. முற்காலத்தில் இவ்வூரை “சதுர்வேதி மங்கலம்’ எனவும் அழைத்தனர். வேதநாயகன் பிரும்மன் இங்குள்ள ஈசனை வணங்கி வழிபட்டதால் இவ்வூருக்கு இப்பெயர் வரக்காரணமானது. அங்குள்ள மகா மண்டபத்தில் “வேதம் கேட்ட விநாயகர்’ தன் தலையை வலதுபுறம் சாய்த்து, வலதுகாலை மடித்து, இடது காலை உயரமாக வைத்துக் கொண்டு ஏகாக்ர சித்தத்துடன் (ஆழ்நிலை தியானம்) கண்மூடிய நிலையில் அமர்ந்து அருளாட்சி செய்கிறார். ருக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை செவி சாய்த்து ஊன்றிக் கேட்கிறார் என்பதாக ஐதீகம். அற்புதமான தோற்றம். இதுபோல், திருச்சி லால்குடி மார்க்கத்தில் காவிரியின் கிளை நதியான கொள்ளிடத்தின் வடகரையில் அன்பில் என்ற சிவத்தலம் உள்ளது. ஊர் பெயர் “அன்பில்’ என்றிருந்தாலும் இக்கோயிலை “ஆலந்துறை’ என்றே அழைக்கின்றனர். சம்பந்தர் இவ்வூர் இறையனாரை தரிசிக்க வந்தபோது கரை புரண்டோடிய வெள்ளத்தால் தென்கரையிலிருந்தே பதிகம் பாடினார். இதனை கேட்ட ஈஸ்வரன், தன் மைந்தன் கணபதியையும் செவி சாய்த்து கேட்க அருளினார். இதனால் இவருக்கு “தேவார விநாயகர்’ என்றும், தன் தலையை வலதுபுறம் சாய்த்து கேட்டதால் “செவி சாய்த்த விநாயகர்’ என்ற பெயரைப் பெற்றதாக இத்தலவரலாறு கூறுகிறது. மேற்படி இருதல வரலாற்றின்படி, வேதம் மற்றும் தேவாரம் கேட்பதற்காக அவர் செவி சாய்த்ததாலும்,…
வடுவூரில் நவகோளும் வணங்கும் விநாயகர் எழுந்தருளி உள்ள ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு ஸ்ரீராமநவமி பெருந்திருவிழா இன்று ஏப்ரல் ஒன்பதாம் தேதி துவஜாரோகணம் எனப்படும் திரு கொடியேற்றத்துடன் துவங்கியது. நன்றி Hindu தொன்றுதொட்டு வரும் திருவாதிரைத் திருநாள்
ஆதிமனிதர்கள் காடுகளிலும் மலைகளிலும் வாழ்ந்த காலகட்டத்தில் தம்மிடையே ஒரு அரிய பொருள் கிடைத்துவிட்டால் மிகவும் மகிழ்ச்சியுற்று ஆஹா, ஓஹோ எனக் கூக்குரல் இட்டு கைகளைத் தட்டி ஒலியெழுப்பி கூவிக்குதித்துக் கொண்டாடினர். அப்போதுதான் ஆடல் பாடல்கள் தோற்றம் பெற்றன. இவ்வாறு தோற்றம் பெற்று அவை படிப்படியாய் வளர்ச்சியுற்று கட்டுப்பாடுகளும் கணக்கு அமைப்புகளும் அமையப்பெற்று செப்பமுடன் பல்வேறு வகைகளாக உருப்பெற்றன. தொல்காப்பியத்தின் சொல்லதிகாரம் போர்க்களங்களில் வீரர்கள் பலர் ஆடிய ஆட்டங்களைக் குறிப்பிடுகின்றது. சங்க நூலான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை பல்வேறு வகையான ஆடல்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளன. சிவபெருமான் ஆடிய ‘கொடுகொட்டி’ என்னும் நடனம் குறித்து கலித்தொகை எடுத்துக் காட்டுகிறது. சிலப்பதிகாரம் ஆடல் வகையினைக் குறிப்பிடும் கருவூலம் என்றே கூறலாம். இளங்கோவடிகள் யாத்த இந்நூலில் பல்வேறு வகையான ஆடல் வடிவங்களைக் கூறியுள்ளார். இதேபோல தேவாரத்திலும் ஆடல் வகைகள் பல சுட்டப்பட்டுள்ளன. சிவபெருமான் ஆடற்கலையின் இறைவன் எனப் போற்றப்படுகிறான். சிவன் ஆடல் பல வகைப்படும். இது இறைவியல் கருத்துக்களை உட்கொண்டது. அதனாலே இவனை ‘ஆடும் தொழிலான்’ என்று சம்பந்தர் தன் தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளார். சிவனின் ஆடலை சிவபெருமான் நடனம், நாட்டியம் என்றும், தாண்டவம் என்றும் வழங்குவது உண்டு. தாண்டவம் என்பது வன்மையுற ஆடுவது. நடனம் என்பது மென்மையுற ஆடுவது. சிவபெருமான் ஆடியது 11 வகை ஆடல்கள் ஆகும். இப்பதினோரு வகை ஆடல்கள் ஒவ்வொன்றுக்கும் உரிய உறுப்புகள் எவையெவை என கீழ்வரும் அடிகள் நமக்கு குறள் வடிவில் உணர்த்துகின்றன. 1. அல்லிய மாயவ னாடிற் றதற்குறுப்புச் சொல்லுப வாறா மெனல் 2. கொட்டி கொடுவிடையோ னாடிற் றதற்குறுப் பொட்டிய நான்கா மெனல் 3. அறுமுகத்தோ னாடல் குடைமற் றதற்குப் பெறுமுறுப்பு நான்கா மெனல் 4. குடத்தாடல் குன்றெடுத்தோ னாட லதனுக் கடைக்குப வைந்துறுப் பாய்ந்து 5. பாண்டரங்க முக்கணா னாடிற் றதற்குறுப் பாய்ந்தன வாறா மெனல். 6. நெடியவ னாடிற்று மல்லாடன் மல்லிற் கொடியா வுறுப்போரைந் தாம் 7. துடியாடல் வேன்முருக னாட லதனுக் கொடியா வுறுப்போரைந் தாம்இந்த ராசிக்காரர்களுக்கு தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் வரும்: புரட்டாசி மாத பலன்கள் 8. கடைய மயிராணி யாடிற் றதனுக் கடைய வுறுப்புக்க ளாறு 9. காமன தாடல்பே டாட லதற்குறுப்பு வாய்மையி னாராயி னான்கு 10. மாயவ ளாடன் மரக்கா லதற்குறுப்பு நாமவகை சொல்லுங்கா னான்கு 11. பாவை திருமக ளாடிற் றதற்குறுப் போவாம லொன்றுடனே யொன்று தில்லையில் எழுந்தருளிய பெருமானுக்கு பல்லாண்டு கூறுவதாக அமைந்த பதிகம் திருப்பல்லாண்டு ஆகும். 13 பாடல்கள் கொண்ட இப்பதிகம் திருவாதிரைத் திருநாளில் பாடப்பெற்றது. சைவத்திருமுறைகள் பன்னிரெண்டனுள் 9ம் திருமுறையினைப் பாடியவர் பலராவர். அவற்றுள் ஒன்றுதான் திருப்பல்லாண்டு. இதனைப் பாடியவர் சேந்தனார் ஆவார். சேந்தன்…
களத்திர தோஷம் தரக்கூடிய சில கிரக அமைப்புகள் உள்ளன. இவை உங்கள் ஜாதகத்தில் இருந்தால் திருமணம் நடக்கத் தாமதம் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம். களத்திர ஸ்தானத்தில் (லக்கினத்திற்கு 7 ஆம் இடத்தில்) பாவ கிரகங்கள் இருப்பது. (இயற்கை பாவர்களான சூரியன், செவ்வாய், சனி, ராகு , கேது, தேய்பிறை சந்திரன் மற்றும் லக்கின பாவர்களான பாதகாதிபதி, அஷ்டமாதிபதி, மாரகாதிபதி இருப்பது.) களத்திர ஸ்தானத்தில், ஒன்றுக்கு மேற்பட்ட பகை கிரகங்கள் (ஸ்தான அதிபதிக்கு) இருப்பது. களத்திர ஸ்தான அதிபதி கெடுவது. 1. களத்திர ஸ்தான அதிபதி, ராகு / கேது உடன் நெருக்கமாக இருப்பது ) 2. களத்திர ஸ்தான அதிபதி, நீச்சம், அஸ்தங்கம் அடைதல் . களத்திர தோஷம் எந்த வகையில், யாருக்கு தீங்கு செய்யும்? நாம் முன்ஜென்மத்தில் செய்த தவறுகளால், வினைகளாலும் இந்த தோஷம் வரக் காரணமாகிறது. இந்த தோஷம் (ஆண் / பெண் ) உள்ளவர்களுக்கு, திருமணம் தாமதமாகும். சிலருக்கு, (ஆண் / பெண் ) திருமணமே நடைபெறாமல் போகவும் நேரிடும். திருமணம் (ஆண் / பெண் ) நடைபெற்றாலும், அடிக்கடி பிரச்சினைகள் தோன்றும் , கணவன் – மனைவி உறவுக்குள் ஒற்றுமை ஏற்படாது. களத்திர தோஷம் நீங்க..ஆலங்குடியும் அஷ்ட திக்கு கோயில்களும் – மினி தொடர் – பகுதி 4 – புலவர்நத்தம் சிவன் கோவில் களத்திர காரகரான சுக்கிரனின் இருப்பிடமான ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் சேர்த்தி சேவையில் நேரிடையாகவோ, ஆன்லைன் மூலம் பணம் செலுத்தியோ வரலாம். தடை நீங்கி திருமணம் விரைவில் நடந்தேறும். வீட்டில் சுமங்கலி பூஜை செய்து வர, திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்கும். (சுமங்கலி பூஜை: வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று, சுக்கிரனின் எண்ணிக்கையான 6 எண்ணிக்கையிலான சுமங்கலி பெண்களை வீட்டிற்கு / கோவிலுக்கு அழைத்து அவர்களுக்கு உடை, உணவு மற்றும் காணிக்கை, இம்மூன்றும் அளித்து அவர்களிடம் ஆசி பெற்றால், நிச்சயம் இந்த தோஷம் விலகும். விரைவில் திருமணம் நடக்கும்.) களத்திர தோஷ பரிகாரம் குருவின் பலம் சேர்க்க, குரு பலம் / ஆதிக்கம் மிக்க கோயில்களுக்குச் சென்று வந்தால், இந்த தோஷத்திற்கு சிறந்த பரிகாரமாகவும், உடனடி குருவின் அருளால், குரு பலம் பெற்று திருமணம் நடக்கவும் செய்யும். கும்பகோணம் ஆடுதுறையில் அருகில் உள்ள, திருமணஞ்சேரி சென்று வணங்கி வந்தாலும் திருமணம் உடனடியாக நடந்தேறும். கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள திருவிடந்தை எனும் இடத்தில் கோவில் கொண்டிருக்கும், நித்ய கல்யாண பெருமாள் கோவிலுக்குச் சென்று, இரு மாலைகளைக் கொண்டுசென்று கோவிலில் பெருமாளுக்கு ஒன்றை சார்த்தி பின்னர் ஒன்றை கைலியில் ஏந்தி 9 முறை பெருமாள் தாயாரை வலம் வந்து வணங்கி கும்பிட்டு வீட்டில் கொண்டு ஆணியில் மாட்டிவைத்தால், அதிகமான நாள்களாக 90 நாள்களுக்குள் திருமணம் நடந்தேறும். இது திண்ணம். திருமணம் ஆன பின்னர் கோவிலுக்கு மறுபடியும் இரு மாலை வாங்கி பெருமாளிடம் சமர்ப்பித்து தம்பதியர் அணிந்து…
ஜோதிடம் என்பது ஒரு முன்னெச்சரிக்கையே தவிர, அது கூறும் விஷயங்களை/ தகவல்களை / எச்சரிக்கைகளை பயமுறுத்தவோ, பயந்து ஓடவோ, கதறி அழவோ இல்லை என்பதனை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். ஏன்னெனில், ஜோதிடம் ஒரு முடிவானது அல்ல, ஜோதிடம் என்பது ஒரு முன்னெச்சரிக்கையே. ஜோதிட வரலாற்றை முதலில் தெரிந்து கொள்வோம். பார்வதி பரமசிவனை பார்த்து கேட்டார்கள். படைத்த ஜீவ ராசிகளிலே மானிட பிறவி தான் அதிக தன்மைகளைக் கொண்டதாகப் படைக்கப்பட்டுள்ளது. மற்றைய ஜீவ ராசிகள் தமக்கு வரும் நன்மை தீமைகளை அறிய மாட்டாது. அப்படியே அறிந்தாலும் அதற்கேற்ப சூழலையோ, முடிவையோ மாற்ற இயலாது. மானிட வர்க்கத்துக்கு ஏதேனும் ஒரு முன்னெச்சரிக்கை தன்மையை அளித்தால், அதனை ஓரளவு தம்மால், தம்மைக் காக்க முடியுமே என்ற எண்ணத்தால் அன்னை பார்வதியின் கருணையினால் உருவானதே ஜோதிடம் எனும் ஒரு பெரிய சொத்து. இதனை யாக்ஞவல்கியர் மற்றும் பராசரர் போன்ற ரிஷிகள் மற்றும் பல முனிபுங்கவர்கள் முன்னிலையில் உருவானதே இந்த அறிய பொக்கிஷமான ஜோதிடம் ஆகும். ஜோதிடம் பற்றி முன்னதாகவே, ஒரு மானிடன் அறிந்துகொண்டால் அவனால் பிரச்னைகளை எளிதில் எதிர்கொள்ளவோ அல்லது தற்காத்துக் கொள்ளவோ இயலும். மற்ற உயிரினங்களுக்கு, இது கொஞ்சவும் பொருந்தாது, மின்கம்பி தரையில் விழுந்து கிடந்தால், அதில் மின்சாரம் உள்ளதா இல்லையா என யோசிக்கவும் செய்யாது. அப்படியே அதனைக் கடந்து செல்லும். ஆனால், மனிதர்கள் மட்டும் சிந்திக்கும் திறனால் அந்த இடத்தை விட்டு நகரவோ மற்றவர்களுக்கு எச்சரிக்கவோ செய்வார்கள். இதையும் படிக்கலாம்: உ.பி.யில் பெண்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்திய காவலர்கள்: எதற்கு? அது போல தான் ஜோதிடமும், ஜோதிடத்தால் நமக்கு வரும் பிரச்னைகளை அப்படியே தூக்கி எறியவோ மாற்றவோ முடியாது. நம்மை தற்காத்துக்கொள்ளவும், சந்தர்ப்பத்துக்கேற்ப நிகழ்வுகளைத் தள்ளிப்போடவும், தேவையற்றவைகளை புறம் தள்ளவும் முடியும், நாம் முன்னதாகவே நமக்கு ஏற்படப்போகும், அதாவது நமது கர்மாவினால் எதிர்ப்படும் வினைகளை ஜோதிடம் மூலம் கடக்க முடியும். உதாரணத்திற்கு ஒரு திருமணம் எனும் விஷயத்தை எடுத்துக்கொள்வோம். திருமண பொருத்தம் பார்த்து திருமணம் செய்விக்கிறார்கள், ஒரு சில நாள்களில், ஒரு சில மாதங்களில் ஏன் ஓரிரு குழந்தை பெற்ற பின்னரும் திருமணப் பந்தத்திலிருந்து விலகுவதை சர்வ சாதாரணமாக தற்போது காண முடிகிறது. இரண்டாவது திருமணத்திற்கென்றே சில மாட்ரிமோனியல் இருப்பது மிகவும் வருந்தத்தக்கதே. ஏன் இவ்வாறு நடக்கிறது. திருமண பிரிவை குடும்ப நல நீதிமன்றங்களும் நிரம்பி வழிகிறதே. இந்தியன் டிவோர்ஸ் ஆக்ட் 1859 (INDIAN DIVORCE ACT – 1859) படி நிறைய சட்டங்கள்…
கிரகங்களில் முக்கிய ஒளியான சூரியன் என்கிற சிவனின் ஒளியும் அவரைச் சார்ந்த பார்வதியின் பிம்பமான சந்திரன் என்கிற ஒளி கிரகமும் மற்ற கிரகங்களை இயக்கும் கதிர்வீச்சுகள் ஆற்றல் கொண்டது. பிரபஞ்ச சக்தியை இயக்க வல்ல முக்கிய கோள்கள் இந்த சூரியக் குடும்பத்தில் உள்ளன. அவற்றில் சூரியன் என்பவர் பகலிலும் சந்திரன் என்பவர் இரவிலும் தன்னுடைய கதிர்வீச்சால் பிறக்கும் அனைத்து ஜீவ ராசிக்கும் பலத்தை கொடுக்கவல்லவர். சூரியன் பகலில் பிறக்கும் குழந்தைகளுக்கும், சந்திரன் இரவில் பிறக்கும் குழந்தைகளுக்கும் அவரவர் பலத்தை கர்மாவிற்கு ஏற்ப பலம் கொடுக்க வல்லவர்கள். ஜாதக கட்டத்தில் முக்கிய தலைமை பொறுப்பில் சூரியன் – சந்திரன் என்ற ஒளி கிரகங்களுக்கு ஒரு ஆதிபத்தியமும் மற்ற கிரகங்களுக்கு இரண்டு ஆதிபத்தியம் கொடுக்கப்பட்டுள்ளது. ஜெனனம் எடுக்கும் குழந்தைக்கு ஒளிகிரகங்களை வைத்துதான் லக்கினம் மற்றும் ராசி முக்கிய புள்ளிகளாக குறித்து தரப்படுகிறது. இதையும் படிக்கலாமே.. அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் திரிகோண அதிபதிகள் ஒருவரது ஜனன ஜாதகத்தில் உள்ள நெருங்கிய பாகையில் உள்ள இரு கிரகங்களின் சேர்க்கை. அது தவிர திரிகோண சேர்க்கை, கிரகங்களின் பார்வை, கோட்சார கிரகத்தோடு ஜெனன கிரகத்தின் சேர்க்கை, என்று பல்வேறு சூட்சம சேர்க்கைகள் உண்டு. இவற்றில் உள்ள பாகை கொண்டு ஜாதகத்தை ஆராய்ந்து கூற வேண்டும். வானவியல் அடிப்படையில் சூரியனுக்கும் சனி கிரகத்திற்கும் இடையே உள்ள தொலைவு 142 கோடி கிலோமீட்டருக்கு மேல் இருக்கும், அதனால் சூரியனின் கதிர்வீச்சு சனி கிரகத்திற்கு மிகவும் குறைவாக வந்து சேரும். ஜோதிட வானவியல் சாஸ்த்திரத்தில் சனி என்பவர் முழு இருள் கிரகமாக சொல்லப்படுகிறது. இவர் சூரியனை சுழன்றவாறு சுற்றி வர 29 ஆண்டுகள் 5 மாதங்கள் ஆகும். அதனால் சூரியனின் சுழற்சி மற்றும் கதிர் அளவு கொண்டு சனியை கரியவன்(இருள்), மந்தன் என்று அழைப்பார்கள். முதலில் இவர்களுடைய இயற்கை பண்புகள் காரகத்துவங்களை சற்றுப்பார்ப்போம். சூரியன் என்றால் தலை கிரகமாகும். சனி என்கிற சூரியபுத்திரன் கஷ்டங்களும் கடமைகளும் நிறைவேற்றும் ஒரு கடின உழைப்பாளி என்று கூறலாம். சூரியன் ஒளிப் பிழம்பு என்றால் அதற்கு எதிர்மறையாக சனி இருள். இவர்கள் சேரும்பொழுது வெவ்வேறு எதிர் நிலையை தான் ஏற்படுத்தும். அதாவது கருத்துக்கள் செயல்கள் மாறுபட்டு திகழும். சூரியன் சிவந்தவன் என்றால் சனி கருப்பு மற்றும் கருநீலம் கொண்டவன். சூரியன் புகழ் மீது ஆசை. ஆனால் சனி எளிமை மீது ஆசை. சூரியன் உயிரை உருவாக்குபவன், சனி ஆயுளுக்கு தடை விதிப்பவன். சூரியன் தனித்த ஆளுமை பெற்றவன், சனி கும்பலான சமூகத்தைக் கொண்டவன். முக்கிய உறுப்புகளான மூளைச்சாவு, தலைச் சுற்றல், வழுக்கை, ஒற்றைத் தலைவலி, உயிர்ச்சத்து டி, கால்சியம் மற்றும் தாமிர குறைபாடு, பித்தம் சம்பந்தப்பட்ட பாதிப்பு, இருதயம் மற்றும் கல்லீரல் பாதிப்பு, வலது கண் பிரச்னை, காய்ச்சல், முதுகு எலும்புகளில் பாதிப்பு, சூட்டால் ஏற்படும் நோய் என்று அனைத்தும் சூரியனால் ஏற்படும் நோய்கள். அதற்கு மாறாக சனி வாதத்திற்கு உரியவன்,…
தம்பதியருக்குள் ஏற்படும் பிரிவினையை, திருமணப் பொருத்தம் கூறுமா? என்றால் ஆம்! நிச்சயமாகத் தெரிய வரும் என்றுதான் கூற முடியும். அதற்கு பல விதிகள் ஜோதிடத்தில் இருந்தாலும், தோஷ சாம்யம் எனும் தோஷ அளவீடுகளை அறிந்து, முன்னரே அறிந்துகொள்ள முடியும். இதனை நமது ஜோதிட பிதாமகர்கள், மஹா கவி காளிதாசரும் அற்புதமாக தெளிவுபடுத்தியுள்ளனர். பிரிவினைக்கான காரணங்கள்: – 1. விஷ கன்னிகா தோஷம் இது பலவிதம்… அதாவது, செவ்வாய்- சனி சேர்க்கை, செவ்வாய்-சனிக்கு இடையில் எந்த கிரகமும் இல்லாதிருப்பது. திருமண யோகத்தைத் தடுத்து நிறுத்தும் ஒரு கிரக அமைப்பாகும். இதனால் குழந்தை பிறப்பு பாதிக்கப்படுகிறது. குழந்தை பிறந்ததும் நிம்மதி பாதிக்கும். மறுமணம் ஏற்படும் சூழல் உருவாகும். இந்த சூழலில் மற்றவர்கள், இவர்களின் வாழ்வில் இணைந்து விடுகிறார்கள். 2. தம்பதியருள் ஏற்படும் அகந்தை பொதுவாக லக்கினாதிபதி தான் ஒருவருக்கு அகந்தையைத் தருபவர். இப்படிப்பட்ட நிலையில் அகந்தை அதிகமாகும்போது தம்பதியருள் பிரிவினை ஏற்படுகிறது. ஒருவரின் லக்கின அதிபதி மற்றவர் ஜாதகத்தில் பலவீனமானால், அவரை இவர் மதிக்க மாட்டார். அதேபோல் ஒருவரின் ஏழாம் அதிபதி அடுத்தவர் ஜாதகத்தில் பலவீனமானால், இவர் அவரை மதிக்கமாட்டார். இதனை, சர்வாஷ்டக வர்க்க பரல்களும் எடுத்துரைக்கும். அதாவது லக்கினத்தில் பெற்ற பரல்களின் எண்ணிக்கை 7 ஆம் இடத்தின் பரல்களை விட அதிகமாக இருப்பின் ஜாதகர் தமது வாழ்க்கை துணைவரை அடக்கி ஆள நினைப்பார். அதே சமயம் ஒருவரின் ஜாதகத்தில் 7 ஆம் இடத்து பரல்கள் லக்கின பரல்களைவிட அதிகமாக இருப்பின், வாழ்க்கை துணைவரின் கட்டுப்பாட்டில் ஜாதகர் இருப்பார். இது ஆண் – பெண் இருபாலருக்கும் அதாவது கணவன், மனைவி ஜாதகத்திற்கும் பொருந்தும். இதனை இன்னமும் விரிவாக காணும் போது, மனைவியின் ஜாதகத்தின் லக்கின அதிபதி கணவரின் ஜாதகத்தில் நீசமாக இருப்பின், மனைவி கணவரின் மீது உயிரையே வைத்திருந்தாலும், கணவர் மனைவியைத் துளியும் மதிப்பதில்லை என்பதை காண முடிகிறது. அதேபோல் கணவரின் லக்கினாதிபதி மனைவியின் ஜாதகத்தில், நீச்சமாகும் போது கணவர் மனைவியின் மீது உயிரையே வைத்திருந்தாலும், மனைவி, கணவரை எவ்வளவு தரக்குறைவாக நடத்த வேண்டுமோ அவ்வளவு தரக்குறைவாக நடத்துகிறார். உதாரணத்திற்கு, பொருத்தம் பார்க்கும் இருவரும் (ஆண் மற்றும் பெண் ஜாதகத்தில்) தேவ கணம் என்று தெரிகிறது. அருமையாக தானே பொருந்துகிறது என சேர்த்துவைத்தால், பின்னர் இருவருக்கும் பிரிவினை ஏற்படுகிறது. காரணம் பெண்ணின் ஜாதகத்திலோ அல்லது ஆணின் ஜாதகத்திலோ அல்லது இருவரின் ஜாதகத்திலோ செவ்வாய் , ராகு இணைவு உள்ளது. ஆணாக இருப்பின் கர்வம் மிகுந்தும், முரட்டு குணமும் இருக்க வாய்ப்பு அதே சமயம் பெண்ணிற்கு பிடிவாத குணம் நிறைய இருக்கும். இது இந்த தம்பதியரைப் பிரித்துவைக்கும். அதனால் தான் வெறும் நட்சத்திர பொருத்தம் தவிர கிரக பொருத்தமும் காண்பது சிறந்தது. 3. தம்பதியரில் ஏற்படும் பொறுமை இழப்புகுரு பெயர்ச்சி – 2021 பொதுப் பலன்கள் முன்பெல்லாம் தம்பதியருள் பிரச்னை வராது. காரணம் கூட்டு குடும்பம். அப்படியே குடும்பத்தை விட்டு வெகு…
நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ ப்லவ வருஷம் – தக்ஷிணாயனம் – சரத் ரிது – கார்த்திகை மாதம் 03ம் நாள் – வெள்ளிக்கிழமை – பௌர்ணமி திதி – க்ருத்திகை நக்ஷத்ரத்தில் – சந்திர கிரகணம் நிகழ்கிறது. பௌர்ணமி தினமான நவம்பர் 19ஆம் தேதியன்று இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் நிகழப்போகிறது. பகுதி கிரகணமாக 3 மணி நேரம், 28 நிமிடங்கள் மற்றும் 24 வினாடிகள் நீடிக்கும். முழு கிரகணமாக 6 மணி நேரம் 1 நிமிடம் நீடிக்கும். சுமார் 580 ஆண்டுகளில் இது போன்ற நீண்ட கிரகணம் வந்ததில்லை என்று அறிவியலாளர்கள் தெரிவிக்கிறார்கள். சந்திர கிரகணம் பௌர்ணமி நாளிலும் சூரிய கிரகணம் அமாவாசை நாளிலும் நிகழும். பொதுவாக ஆண்டுக்கு இரண்டு சந்திர கிரகணமும் இரண்டு சூரிய கிரகணமும் நிகழும். பொதுவாக இரவு நேரத்தில் வரும் சந்திர கிரகணமும் – பகல் நேரத்தில் வரும் சூரிய கிரகணமும்தான் இந்தியாவில் தெரியும். வெள்ளிக்கிழமையன்று நிகழவிருக்கும் சந்திர கிரகணம் தமிழ் பஞ்சாங்கப்படி பகல் நேரத்தில் இந்திய நேரப்படி பகல் 11.30 மணிக்கு தொடங்கி மாலை 5.32 மணி வரை நீடிக்கிறது. 6 மணி நேரம் மிகநீண்ட சந்திர கிரகணம் நிகழப்போகிறது. கிரகணம் ஏன் ஏற்படுகிறது?வானவியலில் சூரியன் அல்லது சந்திரன் மீது ஏற்படும் நிழலை கிரகணம் என கூறுகிறது. சூரிய கிரகணம், அமாவாசை நாளிலும், சந்திர கிரகணம் பௌர்ணமி நாளிலும் உண்டாகிறது. எல்லா அமாவாசை நாளிலும் சூரிய கிரகணம் ஏற்படாது. எல்லா பௌர்ணமி நாளிலும் சந்திர கிரகணம் உண்டாவது இல்லை. சூரியன், பூமி, சந்திரன் அனைத்தும் ஒரே நேர் கோட்டில் வரும்போது சந்திர கிரகணம் ஏற்படும். நவம்பர் 19ஆம் தேதி சந்திர கிரகணம் நிகழ உள்ளது. பூமியின் நிழல் சந்திரனில் விழுவதால், சந்திரன் பிரகாசம் குறைந்து கருஞ்சிவப்பாக காட்சியளிக்கும். ஜோதிட ரீதியாக கிரகணம் ஏன் ஏற்படுகிறது?சந்திர கிரகணம் சூர்யனுக்கு நேர் எதிராக 180 டிகிரியில் சந்திரன் ராகுவுடனோ அல்லது கேதுவுடனோ சேரும் போது ஏற்படும். இந்த வருடம் நிகழும் சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியாததால் யாருக்கும் கிரகண தோஷம் இல்லை. எனவே கிரகண பரிகாரம் தேவையில்லை. இருப்பினும் ரிஷபம் – வ்ருச்சிக ராசிக்காரர்கள் தங்களால் முடிந்த தானங்கள் செய்யலாம்.மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 20) கிரகண உச்சம் எப்போது?இந்த வருடம் நிகழும் சந்திர கிரகணம் மிக நீண்டதாக உள்ளது. சந்திர கிரகணம் வெள்ளிக்கிழமை 19ம் தேதி இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு தொடங்கும் சந்திர கிரகணம் மாலை 5.32 மணி வரை மிகவும் நீண்டு நிகழ்கிறது. அதாவது 6 மணி நேரம் 2 நிமிடங்கள் என நீடிக்கின்றது. இந்த கிரகணத்தின் உச்சம் மதியம் 2மணி 32 நிமிடத்தில் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திர கிரகணம் எந்த நாட்டில் தெரியும்? இந்த சந்திர கிரகணத்தை அலாஸ்கா மற்றும் ஹவாய் போன்ற பகுதிகளில் நவம்பர் 18ம் தேதி வியாழக்கிழமை (இந்திய…
டிசம்பர் மாத பலன்களை தினமணியின் இணையதள ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். (மேஷம் முதல் கன்னி வரை) மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை: ராசியில் குரு (வ) – ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது – களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் – அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் – பாக்கிய ஸ்தானத்தில் புதன் – தொழில் ஸ்தானத்தில் சனி – அயன சயன போக ஸ்தானத்தில் ராஹூ என கிரக நிலைகள் உள்ளன. கிரகமாற்றங்கள்: 02-12-2023 அன்று புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். 16-12-2023 அன்று சூர்ய பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 20-12-2023 அன்று சனி பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 25-12-2023 அன்று சுக்ர பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 27-12-2023 அன்று செவ்வாய் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: இந்த மாதம் நீங்கள் ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மருத்துவம் சார்ந்த செலவுகள் குறையும். அடுத்தவர்களுக்கு உதவும் முன் யோசித்து செயல்படுங்கள். மூன்றாம் மனிதர்களின் தலையீட்டால் பிரச்சனைகள் சுமூகமாக முடியும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் நீங்கும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாடிக்கையாளர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தரும். வியாபார ஸ்தலத்திற்காக புதியதாக இடம் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டி இருக்கும். இருப்பினும் நற்பெயர் கிட்டும். மேலதிகாரிகளிடம் உங்களது மீதான நல்ல எண்ணங்கள் மேலோங்கும். பணி நிமித்தமாக பயணங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகள் விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உறவினர்கள் வருகை இருக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுடன் பேசும் போது வார்த்தைகளை கோர்த்து பேசுவது முக்கியம். பெண்களுக்கு சமையல் செய்யும் போது கவனம் தேவை. மற்றவர்களுக்கு உதவப்போய் வீண் பிரச்சனை உண்டாகலாம். கவனம் தேவை. அரசியல் துறையினருக்கு பெயர், புகழ், கௌரவம் யாவும் தேடி வரும். மக்களின் ஆதரவைப் பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. உங்கள் பேச்சிற்கு மதிப்பும், மரியாதையும் உயரும். கலைத்துறையினருக்கு திறமைக்கேற்ற கதாபாத்திரங்கள் கிடைக்கப்பெற்று ரசிகர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். இதுவரை நிலுவையிலிருந்த பணத்தொகைகளும் கைக்கு கிடைக்கும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாக அமையும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக செல்வது நல்லது. அஸ்வினி: இந்த மாதம் பணவரத்து இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்க தூண்டும்….
இன்றைய கால கட்டத்தில் அனைவருக்கும் தொழில் என்பது மிக மிக அவசியமான ஒன்று. சங்க கால பாடலுக்கு ஏற்ப “வினையே ஆடவருக்கு உயிரே, மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்’ (குறுந்தொகை- 135).- ஒரு சோம்பல் இல்லா ஆண் மகனுக்கு தொழில்தான் உயிர். இல்லத்தில் வாழும் பெண்களுக்கு கணவனே உயிர் என்று கூறப்படுகிறது. இந்த பாடலில் ஒருவனுக்கு தொழில் அவசியத்தை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சொல்லப்பட்ட உண்மை. அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப தொழில் அமைவது என்பது கொஞ்சம் கடினமே. ஒரு சிலருக்கு மட்டும் சந்தோஷமான நிறைவான வேலை அமையும் அது அவர்களின் பாக்கியமாகும். சிலசமயம் வேலை பிடிக்காமல் அவர்கள் செய்யும் வேலையை விட்டு, சொந்த தொழில் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அதில் சொற்பமானவர்கள் மட்டுமே மேலே வர முடியும். முக்கியமாக ஒரு மனிதனுக்கு முதலாளி என்ற சொல்லை கேட்டாலே ஒருவித பரமானந்தமே. ஒருவருக்கு கொடுப்பனை இருந்தால் மட்டுமே தொழில் செய்து முதலாளியாக இருப்பார்கள். அவரவர் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் கூட்டமைப்பு மற்றும் பலத்தை கொண்டு சரியான தொழில் துறையை தேர்ந்தெடுத்து வெற்றி பெறவேண்டும். ஒன்று மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்களின் சேர்க்கை மற்றும் 1,10ம் பாவத்தோடு தொடர்புகொண்டு அவர்களின் தொழில்களின் பிரிவுகள் அமையும். எடுத்துக்காட்டாக: தொடர்பான அனைத்து துறையும் அவற்றில் முக்கியமாக இனிப்பு கடை அல்லது உணவகம் அல்லது சமையல் ஒப்பந்ததாராக தொழில் செய்ய- இரண்டாம் பாவத்துடன் சந்திரன், சுக்கிரன் சுப தன்மையுடனும், அவற்றோடு நெருப்பு சம்பந்தப்படுவதால் செவ்வாய் பகவானின் உதவியும் தேவை. அதேபோல் தையல் துறை தேர்ந்தெடுப்பவருக்கு துணி, தையல் மிஷின் என்றவுடன் சுக்கிரன், செவ்வாய் பலம் பெறவேண்டும். அடுத்த முக்கிய கிரகமான குரு என்பவர் பணம் புழக்கமுள்ள துறை தொடர்பு கொண்டவர். குரு ஆதிக்கம் பெற்றவர்கள் கௌரவமான தொழில், நீதி நேர்மைக்கு உரிய முதலாளியாக இருப்பார். எ.க. பணம் சம்பந்தப்பட்ட துறை, சட்ட நீதித் துறை, ஜோதிட ஆன்மீக ஆராய்ச்சி, தங்க கட்டிகள் விற்பனை (ஆபரண நகையாக விற்க சுக்கிரன் உதவி தேவை) என்று அடுக்கிக்கொண்டு போகலாம். எந்த துறையாக இருந்தாலும் சனி+புதன் கிரகங்களின் பலம் மிக மிக அவசியம் தேவை. ஒருவரின் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் பலம் கொண்டு அவரவர் தொழில் துறையைப் பிரித்துச் சொல்ல முடியும். முதலாளியாக மாறுவது எப்படி? முதலாளியாக மாறுவது அவரவருக்கு ஏற்படும் ஒருவித மோகம், பாட்டன் மற்றும் மாமனார் வழி தொடர்பான தொழில் என்று சொந்த தொழிலில் கட்டாயம் செய்ய வைத்துவிடும். பொதுவாக ஒரு சிலருக்கு படிக்கும்பொழுதே தன்னுடைய செலவுக்கு யாரிடமும் நிற்காமல் இருக்க பகுதிநேர சிறு தொழிலை தனித்தோ அல்லது நண்பர்கள் உடனோ ஆரம்பிப்பார்கள். அதில் ஒரு சிறு பகுதி வெற்றி கண்ட பிறகு அந்த வேலையின் மீது ஒரு மோகம் மற்றும் முதலாளி என்ற சந்தோஷத்தில் அந்த தொழிலில் ஈர்ப்பு அதிகப்படுத்திவிடும். அவர்கள் படித்து முடித்தவுடன் அதே தொழிலை முழுநேரமாக தொடர்ந்து செய்ய…
12 ராசி அன்பர்களுக்கும் ஆகஸ்ட் மாத பலன்களை தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். ••• மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை:ராசியில் சந்திரன் – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராஹூ – சுக ஸ்தானத்தில் சூர்யன், புதன் – பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் – அஷ்டம ஸ்தானத்தில் கேது – தொழில் ஸ்தானத்தில் சனி (வ) – லாப ஸ்தானத்தில் குரு (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றங்கள்:05-08-2021 அன்று புதன் பகவான் சுக ஸ்தானத்திலிருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.12-08-2021 அன்று சுக்கிர பகவான் பஞ்சம ஸ்தானத்திலிருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.17-08-2021 அன்று சூரிய பகவான் சுக ஸ்தானத்திலிருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.23-08-2021 அன்று புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்திலிருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்:தலைமை தாங்கும் பண்பை இயற்கையிலேயே பெற்ற மேஷ ராசியினரே இந்த மாதம் தைரியம் அதிகரிக்கும். பணவரவு இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். முன் கோபம் ஏற்பட்டு அதனால் வீண் தகராறு ஏற்படலாம். நிதானமாக செயல்படுவது நல்லது.தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற சூழ்நிலைகள் ஏதுவாக இருக்கும். செலவை குறைப்பதன் மூலம் பணத் தட்டுப்பாடு குறையலாம். பேச்சில் கடுமையை காட்டாமல் இருப்பது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி புரியும் இடங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குறிப்பாக எந்திரங்களை இயக்கும் போது கவனம் தேவை. மேலிடத்தின் மூலமாக நடக்க வேண்டிய காரியங்களில் தாமதம் ஏற்படலாம். குடும்பத்தில் குதூகலமான சுப பலன்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே பந்தபாசம் அதிகரிக்கும். குழந்தைகளின் மூலம் மனமகிழும் படியான சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் உறவினர்களுடன் கவனமாக பேசி பழகுவது நல்லது.பெண்களுக்கு மனதில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். முன்கோபத்தை குறைப்பது நன்மையை தரும். கலைத்துறையினருக்கு கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது வேலையை கண்டு மற்றவர்கள் பொறாமைப்படுவார்கள். கடன் பிரச்சனை தீரும். செல்வதில்லை உயரும்.அரசியல்துறையினருக்கு இருந்த இறுக்கமான நிலை மாறும். மேலிடத்திற்கும் உங்களுக்கும் கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. பண விஷயத்தில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. மாணவர்களுக்கு: மற்றவர்களுடன் பழகும் போது கவனமாக இருப்பது நல்லது. கல்வி பற்றிய மனக்கவலை ஏற்பட்டு விலகும். அஸ்வினி:இந்த மாதம் சாமர்த்தியமாக செயலாற்றுவீர்கள். சில நேரத்தில் இடம், பொருள் தெரியாமலும் செயல்பட்டு விடுவீர்கள். மனதில் நம்பிக்கை உண்டாகும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பேச்சின் இனிமையால் காரிய வெற்றி உண்டாகும். பரணி:இந்த மாதம் எதிலும் வேகம் காணப்படும். எதிர்ப்புகள் விலகும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தமான போக்கு மாறும். வேகம் பிறக்கும். கடன் பிரச்சனை தீரும். போட்டிகள் மறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்க பெறுவார்கள். கார்த்திகை:இந்த மாதம் இடமாற்றத்துடன் பதவி உயர்வு சிலருக்கு கிடைக்கலாம். குடும்ப பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே மனகசப்பு நீங்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி உண்டாகும்….
இன்றைய நவீன காலகட்டத்தில் அனைத்தையும் அறிவியல் ரீதியாக ஆராய்ந்து பார்ப்பதற்கு உள்ளது. அதன்படி ஒருவருக்கு பிறக்கும் ஆண் குழந்தை என்பது ஆணிடமிருந்து தான் பெறப்படுகிறது என்று அறிய முடிகிறது. முன்பெல்லாம், பெண் தான், ஆண் மகவை பெற்று தரவில்லை என்பதனால், வேறு பெண்ணை திருமணம் செய்துகொள்ளச் சொல்வார்கள். அதே போல் ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறக்கவில்லை என்றாலும் அந்த பெண்ணை தள்ளிவைத்துவிட்டு வேறு பெண்ணை; அது அவளின் சகோதரியாகக்கூட இருக்கலாம், அந்த பெண்ணை திருமணம் செய்விக்கச் சொல்லுவார்கள். பிள்ளை பெறாத அந்த பெண்ணின் மனதையும், உடலையும் நோகடிக்கச் செய்வார்கள். அதுவும் ஆணை விட பெண்களே, அதாவது நாத்தனார், மாமியார், அண்டை மற்றும் அயலார் வீட்டு பெண்களே, அதற்கு காரணமாக இருப்பார்கள். இப்போது கூறப்போவதை நன்றாக மனதில் ஆழ பதிய வைத்துக்கொள்ளுங்கள். எந்த ஒரு பெண்ணுக்கும் குழந்தைப் பேறு இல்லை என்பதே இல்லை. அதாவது குழந்தைப் பேறு இல்லாத பெண் என்பதே இல்லை. குழந்தைப் பேறு இல்லாத ஆண்தான் உண்டு. இதற்கு ஜோதிடம் கூறும் விதிகளை ஏன் மறைத்து வைத்தார்கள் என்பதை வெளிப்படையாகக் கூற முடியவில்லை. அந்த காலத்தில் சில ஜோதிடர்கள் தமது பிழைப்புக்காக மற்றும் கௌரவத்திற்காக – பெரும் பணக்காரர்களுக்கும், ஏன் அரசர்களுக்கும் இவ்வாறு ஆணின் தவறை, ஆணின் உடலில் உள்ள குறையை மறைத்து பெண் மீது, அந்தக் காலத்தில் பல அநீதிகளை பெண்ணுக்கு அளித்தது போல், பெண் மீது பழி சுமத்தி ஆணுக்கு சாதகமாக இந்த செயலில் ஈடுபட்டுள்ளார்கள் என இன்று அறியும் போது மிகவும் வேதனையாகவும், அவர்களின் மீது வெறுப்பையும் காட்ட வேண்டியதாக உள்ளது. இது போல் செய்தது வேற்று கிரக வாசிகளில்லை, நமது முன்னோர்கள் தான். இன்றைய தேதியில் அனைவரும், அனைத்து மதத்தினரும் ஆண், பெண் அனைவரும் ஜோதிடம் கற்கிறார்கள் எனும்போது மிகவும் சந்தோஷமாகவும், உண்மைகளை வெளிக்கொணரும் போது மட்டற்ற மகிழ்ச்சி கொள்வதாகவும் இருக்கிறது. ஜோதிடம் ஒரு அருமையான அறிவியல் மற்றும் கலை ஆகும். எனது குருநாதர் கூறுவார், “ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு நன்கு கற்றறிந்த ஜோதிடர் இருக்க வேண்டும்” என்று. இதை இங்கு நானும் கூற கடமைப் பெற்றுள்ளேன். நிற்க, ஜோதிடம் மூலம், குழந்தை பிறக்க தகுதியான ஆண் மகனா அல்லது பெற்று தர ஒரு பெண் தகுதி ஆனவளா என பிறப்பு ஜாதகம் கொண்டே அறிய முடியும். மேலும், அப்படி இல்லையெனில் மருத்துவ உதவி பெற்று அதன் மூலம் குழந்தை பாக்கியம் பெற முடியுமா என்பதனையும் அறிய ஜோதிடத்தில் நமக்கு பராசரர் மற்றும் அதற்கு பின்வந்த ஜோதிட விற்பன்னர்கள் அன்றே ஜோதிடம் மூலம் அருமையாகக் கூறியுள்ளனர். ஒரு ஆண், குழந்தை பிறக்க தகுதி உள்ளவனா, அதாவது உயிர் அணுக்கள் அவனுக்கு சரியான நிலையில் உள்ளதா அல்லது மருத்துவத்திற்கு பின்னர் உயிர் அணுக்களை உயர்த்திக்கொள்ள வேண்டுமா என்பதனை அவனின் பிறப்பு ஜாதகமே கூறிவிடும். அதற்கான சில ஜோதிட விதிகளும்…
• விநாயகப் பெருமானின் திருவுருவங்கள் பல. யானை முகத்துடன் காட்சி தரும் விநாயகர், பெண் வடிவிலும் சில திருத்தலங்களில் அருள்புரிகிறார். தாய் தெய்வங்கள் வரிசையில் சக்தி கணபதி, விநாயகி, விக்னேஸ்வரி, கணேசினி, கணேஸ்வரி, கஜானனி, ஐங்கினி முதலிய பெயர்களால் அழைக்கப்படுகிறார். • யானை முகம், கால் முதல் இடை வரை புலியின் உருவம், இடை முதல் கழுத்து வரை பெண் வடிவத்தில் அருள்புரியும் விநாயகரை “வியாக்ர சக்தி விநாயகர்’ என்பர். இந்த புதுமையான வடிவத்தினை மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் முன் மண்டபத்தில் காணலாம். • கையில் வீணையுடன் காட்சி தரும் விநாயகியின் திருவுருவை கோவை மாவட்டம், பவானி பகுதியில் அமைந்துள்ள ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் உள்ள ஸ்ரீ சௌந்தரநாயகி தாயார் சந்நிதியின் மேல்மண்டபத்தில் காணலாம். • இடுப்பிற்குக் கீழே யாளி வடிவமுடனும் கைகளில் வாள், மழு, கதை, கேடயம் ஆகியவற்றுடன் காட்சி தரும் விநாயகி திருவுருவத்தை நெல்லை மாவட்டம், வாசுதேவ நல்லூரில் உள்ள கோயிலில் தரிசிக்கலாம். • சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பிள்ளையார்பட்டி திருத்தலத்தில் அமர்ந்த நிலையில் அருள்புரியும் கற்பக விநாயகர் இருகரங்கள் கொண்டு எழுந்தருளியுள்ளார். வலது கரத்தில் சிறிய சிவலிங்கத்தினை ஏந்தியுள்ளார். இடது கரத்தினை தொடையில் வைத்துள்ளார். இவரைச் சுற்றி ஒன்பது சர விளக்குகள் தொங்குகின்றன. அவை; நவக்கிரகங்களைக் குறிக்கின்றன. • பிள்ளையார்பட்டி தலத்திற்கு அருகில் அமைந்துள்ள திருவீசர் நகரில் ஸ்ரீ சித்ரகுப்தர் ஆலய வளாகத்தில் அருள்புரியும் ஸ்ரீ குபேர விநாயகர் இரு திருக்கரங்களுடன் விளங்குகிறார். மேலும் பக்தர்களை ஆசீர்வதிக்கும் தோற்றத்தில் இரு கரங்களையும் சற்று தூக்கி அபயம் அளிக்கும் கோலத்தில் காட்சி தருகிறார். • இரு கரங்களுடன் காட்சி தரும் விநாயகர்களைப்போல் நான்கு திருக்கரங்களுடன் அருள்புரியும் விநாயகர்கள் தங்கள் கரங்களில் வேறு வகையான பொருள்களையும் வைத்திருப்பதை தரிசிக்கலாம். அந்த வகையில் சங்கரன் கோயில் திருத்தலத்தில் “சர்ப்ப விநாயகர்’ தன்னிருகைகளில் சர்ப்பங்களை ஏந்தி அருள்புரிகிறார். • திருச்சி ஜெயம்கொண்டம் தலத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீ வைரவனீச்சுவரர் ஆலயத்தில் “வில்’ ஏந்திய விநாயகர் காட்சி தருகிறார். இவர், அர்ஜுனனுக்கு பாசுபதாஸ்திரம் ஏவுவதற்கு கற்றுக் கொடுத்ததாக சொல்வர்.குரு பெயர்ச்சி உங்களுக்கு எப்படி இருக்கும்? ஒரு வரியில் பதில் • மதுரை மாவட்டம், பேரையூர் தாலுக்கா பூலாம்பட்டி மத்தங்கரை திருத்தலத்தில் கோயில் கொண்டுள்ள விநாயகர் கோடாரி ஏந்தி காட்சி தருகிறார். • முத்துப்பேட்டை- மன்னார்குடி சாலையில் உள்ள தலத்தின் தலமரம் மாமரம். அதனால் இத்தலத்திற்கு சூதவனம் என்ற பெயரும் உண்டு. அதற்கு ஏற்ப இத்தல விநாயகர் திருக்கரத்தில் மா இலையை ஏந்தி அருள்கிறார். • ராஜபாளையத்தை அடுத்துள்ள அமியாச்சிபட்டி எனும் ஊரில் பருத்திக்காட்டுப் பகுதியில் கோயில் கொண்டுள்ள விநாயகர் கையில் வேலுடன் காட்சி தருகிறார். • சேலம் நகரின் மையப்பகுதியில் “செர்ரி’ சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ சுகவனேஸ்வரர் கோயிலில் அருள்புரியும் விநாயகர், தம் இரு கரங்களிலும் கொழுக்கட்டை ஏந்தியவாறு காட்சி தருகிறார். • விநாயகப்…
பகவான் ஸ்ரீ கிருஷ்ணனின் புராண கதைகளை எப்பொழுது படித்தாலும் மனதுக்கு இனிமையாக இருக்கிறது. மதுரா நகரில் “பாங்கே பிஹாரி” என்று அன்போடு அழைக்கப்படும் ஸ்ரீ கிருஷ்ணன் திருவிளையாடல்கள் பல செவி வழி செய்திகளாக அவ்வப்போது உலா வந்து கொண்டு இருக்கின்றன. அதில் ஒன்றை நாம் இப்போது அனுபவிப்போம். வெகு நாட்களுக்கு முன்பு பிருந்தாவன ஷேத்திரத்தில் “ஸ்ரீ பாங்கே பிஹாரிஜி மந்திர்” என்று அழைக்கப்படும் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் திருக்கோயில் இருக்கிறது. அழகே உருவான ஸ்ரீ கிருஷ்ணர் அங்குத் திருக்கோயில் கொண்டு ஸேவை சாதிக்கிறார். கையில் புல்லாங்குழல், தலையில் மயில் பீலி, இடுப்பில் பட்டு வஸ்திரம், கூடவே வெண்மை நிறமான பசுவும், கன்றும் கொண்டுள்ள கிருஷ்ணனைப் பார்க்க எப்போதும் பக்தர்கள் வந்து கொண்டு இருப்பார்கள். வரும் போது கையில் சீடை, முறுக்கு, லட்டு, ஜாங்கிரி முதலான தின்பண்டங்களை கொண்டு வந்து சமர்ப்பிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். அந்தக் கோயிலில் ஒரு குருக்கள் பூஜை செய்து கொண்டு வந்திருந்தார். அவர் மிகுந்த பக்தி பாவத்துடனும், மனம் உருகியும் கைங்கர்யம் செய்து கொண்டு வந்திருந்தார். அபிஷேக, ஆராதனைகளைத் தவிர திருப்பள்ளி அறையை மிகுந்த கவனத்துடன் நேர்த்தியாக அழகுபடுத்தி, படுக்கையை விரித்து, அதன் மீது மலர்களைத் தூவி, வாசனைத் திரவியங்களை தெளித்து, புதியதாக தோரணங்கள் கட்டி, படுக்கையின் அருகில் பழங்கள், ஜலம் இவற்றை வைப்பார். சயன ஆரத்தி சமயத்தில் ஒரு சிறியதாக கிருஷ்ண விக்ரஹத்தினை படுக்கையில் வைப்பது வழக்கம். தவிர, இரவு நேரத்தில் கிருஷ்ணன் விழித்து எழுந்தால், கிருஷ்ணனுக்குப் பசிக்குமே என்று அவருக்கு ஆதங்கம். அதனால், மாலை வேளைக் கோயிலுக்கு வரும் போது ஒரு தின்பண்ட கடையில் நான்கு லட்டுக்களை வாங்கி வருவார். அந்த லட்டுக்களைப் படுக்கையின் அருகில் ஒரு தட்டில் வைத்து மூடி வைக்கும் வழக்கத்தினை கொண்டு இருந்தார். அவ்வளவு பக்தி பாவம் அவருக்கு. ஆனால் என்ன ஆச்சரியம்.. காலையில் படுக்கையிலும், தரையிலும் லட்டுக்களின் துகள்கள் சிதறிக் கிடக்கும். இது தினமும் நடக்கும். தன்னுடைய லட்டுக்களைப் பகவான் ஸ்வீகரித்துக் கொண்டுவிட்டான் என்று எண்ணம் அவருக்கு வேரூன்றி இருந்தது. இது ஒரு சிலருக்கு மாத்திரம்தான் தெரியும். ஒரு நாள் அவருக்கு உடல் நிலை சரியில்லாததால், வரும் போது அவர் 4 லட்டுக்களைக் கோயிலுக்கு வரும் போது வாங்கி வரவில்லை. மறந்துவிட்டார். அன்று இரவு சயன அறையைத் தயார் செய்து விட்டு, கிருஷ்ண விக்ரஹத்தினை வைத்து விட்டு ஆரத்தி எடுத்தபிறகு இல்லம் வந்து சேர்ந்தார் அவர். அன்று இரவு 2 மணி அளவில், ஊர் அடங்கிய பிறகு, எந்தத் தின்பண்ட கடையில் அவர் லட்டு வாங்குவாரோ அந்தக் கடையின் முதலாளி கடையை சார்த்த முற்பட்டார். அப்பொழுது ஒரு சிறுவன் கடை முதலாளியிடம் ஓடி வந்து தனக்கு பசிக்கிறது என்றும் லட்டு வேண்டும் என்று கேட்க, கடை முதலாளி லட்டு தீர்ந்து விட்டது, நாளை காலை புதியதாக வரும் அப்போது வா அல்லது வேறு ஏதாவது வாங்கிக்கொள்…
செங்கல்பட்டு பகுதியில் உள்ள கோயில்களில் ஆடித்திருவிழா, கூழ்வார்த்தல் அண்மையில் நடைபெற்றது. செங்கல்பட்டு பழைய பேருந்துநிலையம் அருகில் உள்ள கடும்பாடி அம்மன் கோயிலில் ஆடித்திருவிழா நடைபெற்றது. இதையொட்டி, கடந்த 18-ஆம் தேதி காப்புகட்டுதல் நிகழ்ச்சியும், 22-ஆம் தேதி கரக ஊர்வலமும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, தீமிதி விழாவும், அம்மன் வீதி உலாவும் நடைபெற்றது. 24 ஆம் தேதி கடும்பாடி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கூழ்வார்த்தல் நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை கே.ஜெயவேல், ஜே.பாஸ்கர் உள்ளிட்டோர் செய்திருந்தனர். இதேபோன்று, செங்கல்பட்டு காட்டுநாயக்கன் வீதியில் உள்ள முத்துமாரியம்மனுக்கு 56-ஆம் ஆண்டு உற்சவத்தையொட்டி, கடந்த 22-ஆம் தேதி காப்புகட்டுதல் நிகழ்ச்சியும், மறுநாள் பூங்கரகம் வீதிவலமும், 24 ஆம் தேதி கூழ்வார்த்தில் நிகழ்ச்சியும் நடைபெற்றன.உடல் எடை குறைக்க – ஜோதிட சூட்சுமங்களும் பரிகாரமும்! இரவு உற்சவ அம்மன் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை அறங்காவலர்கள் டி.பாலகுமார், ஆர்.வீரராகவன், காட்டுநாயக்கன் கிளை சங்கத் தலைவர் கே.எஸ்.முருகன், செயலாளர் இ.செல்வம், தர்மகர்த்தா கே.வெங்கடேசன், துணைத் தலைவர் ஓ.குமார் உள்பட கோயில் நிர்வாக குழுவினர், பொதுமக்கள் செய்திருந்தனர். செங்கல்பட்டு முருகேசனார் தெருவில் உள்ள கங்கையம்மன் கோயில் ஆடி உற்சவ விழாவில் காப்புகட்டுதல், கரக ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 24 ஆம் தேதி கூழ்வார்த்தலைத் தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆரத்தி நடைபெற்றது. இரவில் அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் ரத வீதியுலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர். நன்றி Hindu அதிர்ஷ்டம், துரதிர்ஷ்டம் பற்றி ஜாதகம் மூலம் அறிய முடியுமா?
12 ராசி அன்பர்களுக்கும் செப்டம்பர் மாத பலன்களை தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். மேஷம் கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராஹூ – பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் – ரண ருண ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் – அஷ்டம ஸ்தானத்தில் கேது – தொழில் ஸ்தானத்தில் சனி (வ) – லாப ஸ்தானத்தில் குரு (வ) என கிரகநிலை உள்ளது. இம்மாதம் 06ம் தேதி சுக்கிர பகவான் சப்தம களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். இம்மாதம் 07ம் தேதி செவ்வாய் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார். இம்மாதம் 13ம் தேதி புத பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் வக்ரம் ஆரம்பம். இம்மாதம் 14ம் தேதி குரு பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். இம்மாதம் 17ம் தேதி சூர்ய பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார். இம்மாதம் 27ம் தேதி சனி பகவான் தொழில் ஸ்தானத்தில் வக்ர நிவர்த்தி அடைகிறார். பலன்: கடின உழைப்பினால் வாழ்க்கையில் முன்னேறும் மேஷ ராசியினரே உங்களுக்கு திடீரென்று வரும் கோபத்தை கட்டுப்படுத்தினால் வெற்றி நிச்சயம். இந்த மாதம் புத்திக் கூர்மையுடன் செயல்களை செய்து எதிலும் வெற்றி பெறுவீர்கள். வசதிகள் அதிகரிக்கும். மதிப்பும், மரியாதையும் கூடும். ஆனால் வீண் செலவுகள் உண்டாகும். மனதுக்கு பிடிக்காத இடத்திற்கு சென்று வரவேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பாக பயணங்கள் சென்று வரவேண்டி இருக்கும். வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திப்பார்கள். குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகலாம் கவனம் தேவை. மேலும் அறிந்துகொள்ள.. இதைச் செய்யாமல் விட்டால் குழந்தையின் ஆதார் செல்லாததாகிவிடும் குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே தேவையற்ற மன வருத்தம் உண்டாகலாம் கவனம் தேவை. மருத்துவம் தொடர்பான செலவும் ஏற்படலாம். ஆயுதம், நெருப்பு ஆகியவற்றை கையாளும் போது கவனமாக இருப்பது நல்லது. அரசியல்வாதிகள், தாங்கள் சார்ந்துள்ள கட்சியின் தொண்டர்களுக்கும், நெருங்கியவர்களுக்கும் மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். மேலிடத்திலிருந்து உங்களுக்கு சந்தோஷமான செய்திகள் வந்து சேரும். கலைத்துறையினர் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். வருமானம் நன்றாக இருப்பதால் ரசிகர்களுக்காகச் செலவு செய்வீர்கள். சக கலைஞர்களால் நன்மை அடைவீர்கள். புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் மேன்மை அடைய கூடுதல் கவனத்துடன் படிப்பது அவசியம். விளையாடும் போதும் கவனம் தேவை. பெண்களுக்கு புத்தி கூர்மையுடன் செயல்பட்டு காரியங்களை வெற்றி கரமாக செய்து முடிப்பீர்கள். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு சக மாணவர்களுடன் பழகும்போது கவனம் தேவை. கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது. அஸ்வினி: இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் அவசரப்படாமல் நிதானமாக பணிகளை கவனிப்பது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு மனவருத்தங்கள் ஏற்படும் வகையில் சூழ்நிலை இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் முன்னேற்றத்தில் தடை தாமதம் ஏற்படலாம்…
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 5 மாயனை மன்னு வடமதுரை மைந்தனை தூய பெருநீர் யமுனைத் துறைவனை ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்! திருப்பாவை – பாடியவர் புவனேஸ்வரி விஸ்வநாதன் பாடியவர் பவ்யா ஹரி விளக்கம்: பாயிரத்தின் நிறைவுப் பாசுரமான இதனில், முறையான விரத நெறிகளும் அவற்றின் முழுமையான பயன்களும் காட்டப் பெறுகின்றன. நோன்புக்கு ஆயத்தமான பெண்கள், தங்களின் உறுதிப்பாட்டை உரைக்கிறார்கள். “மாயச் செயல்களைச் செய்யக்கூடியவனும், வடமதுரையில் அவதரித்தவனும், தூய்மையும் ஆழமும் கொண்ட யமுனை ஆற்றின் கரைக்குச் சொந்தக்காரனும், ஆயர் குலத்திற்கே ஒளிகொடுக்கும் படியாகத் தோன்றியிருப்பவனும், மானுட குலத்தில் பிறப்பெடுத்துத் தாயான தேவகிப் பிராட்டியின் திருவயிற்றுக்குப் பெருமை சேர்த்தவனுமான கண்ணனைப் போற்றுகிறோம். தூய்மையாக வந்து, மனத்தால் எண்ணி, வாயினால் துதிக்கிறோம். இதனால், நாங்கள் இதுவரை செய்த பாவங்களும், எங்களை அறியாமல் இனிமேல் செய்யக்கூடிய பாவங்களும், நெருப்பினில் இட்ட தூசிபோல் அழிந்துபோகும்’ என்று தாங்கள் பின்பற்றுகிற வழிமுறையை விவரிக்கிறார்கள். பாசுரச் சிறப்பு: மனம் (மனத்தினால் சிந்திக்க), வாக்கு (வாயினால் பாடி), காயம் (தூயோமாய் வந்து) ஆகிய மூன்றும் (திரிகரண சுத்தி) தூய்மையோடு ஈடுபடுவதே கடவுள் வழிபாடு என்பதை விளக்கும் பாசுரம். கண்ணனும் கோபிகைகளும் தொட்டு விளையாடியதால், யமுனை புனிதம் பெற்றது. “தூயப் பெருநீர்’ } குழந்தைக் கண்ணனைக் கூடையிலிட்டு வசுதேவர் தூக்கிச் சென்றபோது, யமுனையாள் உயரே உயரே பொங்கினாளாம். குழந்தைக்குத் தீங்கு வரக்கூடாது என்று கூடையை மேலும் மேலும் வசுதேவர் தூக்க, ஒரு கணம் யமுனை நீர் கண்ணன் திருவடியைத் தொட்டுவிட, அதன் பின்னர் அப்படியே குறுகினாளாம். திருவடியைத் தொடவே அவள் உயர்ந்தாள் என்பதை வசுதேவர் உணர்ந்தார். அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – பாடல் 5 ராகு – கேது பெயர்ச்சி பலன்கள்: மிதுனம் மாலறியா நான்முகனும் காணா மலையினைநாம் போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும் பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய் ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான் கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டும் சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று ஓலமிடினும் உணராய் உணராய்காண் ஏலக் குழலி பரிசேலோ ரெம்பாவாய்! பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன் பாடியவர் – மயிலை சற்குருநாதன் பாடியவர் – கரூர் சுவாமிநாதன் விளக்கம்: புறத்தே நிற்பவர்கள், “திருமாலும் பிரம்மனும் அடி முடி தேடியும் காணமுடியாத மலையாக நின்ற இறைவனை, நான் அறிவேன் என்று புரட்டாகப் பேசியவளே, பாலும் தேனுமாக வாய்ச் சொல் ஆடுபவளே, கதவைத் திற! மண்ணுலகத்தவர், விண்ணுலகத்தவர் இடைப்பட்ட உலகங்கள் இருக்குமெனில் அவ்வுலகத்தவர் யாவரின் அறிவுக்கும் அப்பாற்பட்டவனான இறைவன் கொண்ட கோலத்தையும், எளியவர்களான நம்மை ஆட்கொண்டு பெருமைப்படுத்துகிற அவனுடைய சீலத்தையும் பாடி, சிவனே சிவனே என்று நாங்கள் கூவுகிறோம்; அந்த ஒலியும் கேட்காமல் உறங்குகிறாயோ?’ என்று…
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 15 எல்லே இளங்கிளியே இன்னும் உறங்குதியோ? சில்லென் றழையேன்மின் நங்கைமீர் போதருகின்றேன் வல்லைஉன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும் வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை எல்லாரும் போந்தாரோ? போந்தார்போந் தெண்ணிக்கொள் வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க வல்லானை மாயனைப் பாடலோர் எம்பாவாய்! பாடியவர் – பவ்யா ஹரி விளக்கம்: துயிலெடையின் நிறைவுப் பாசுரமான இதனில், உள்ளும் புறத்துமாக நடைபெறும் உரையாடல் முழு வீச்சடைகிறது. இப்பொழுது அழைக்கப்பெறுபவள், எல்லோரிலும் இளையவள் போலும்! இதையே சொல்லி அழைக்கிறார்கள். புறத்திருப்பவர்கள்: “சின்னஞ்சிறிய கிளி போன்றவளே! இன்னமும் துயில்கிறாயோ?’ உள்ளிருப்பவள்: சிலீரென்றுஅழைக்காதீர்கள். இதோ வந்துவிட்டேன். புறம்: வாயாடாதே. உன் வாய் வார்த்தை எங்களுக்குத் தெரியும். உள்: நானா (வாயாடி)? நீங்கள்தான் வாய் வல்லவர்கள். சரி சரி. நானே இருந்துவிட்டுப் போகிறேன். புறம்: கிடக்கட்டும்.. சீக்கிரம் வா. வேறென்ன அதிசயம் கண்டாய்?உள்: எல்லோரும் வந்துவிட்டார்களா? புறம்: வந்துவிட்டார்கள். வெளியில் வந்து எண்ணிக் கொள். வலிய யானையான குவலயா பீடத்தை அழித்தவனும், பகைவர்களின் பகைமையை அழிப்பவனுமான கண்ணனைப் பாடலாம், வா. பாசுரச் சிறப்பு: திருவெம்பாவையின் நான்காவது பாடலில், எல்லோரும் வந்துவிட்டார்களா என்று வினவும் தன்மையை, இங்கு இப்பாசுரத்தில் காணலாம். பாவை பாடல்கள் உரையாடல்களாக அமையும் என்னும் இலக்கணமும் இலங்கக் காணலாம். குவலயாபீடம் என்னும் யானையை மதம் கொள்ளச் செய்து கண்ணனுக்கு ஆபத்து விளைவிக்க நினைத்தான் கம்சன் என்னும் நிகழ்ச்சி சுட்டப்படுகிறது. “திருப்பாவையாகிறது இப்பாட்டிறே’ என்று திருப்பாவையின் மையமாகச் சிலாகிக்கப்படுகிற பாசுரம். புறத்தே நிற்பவர்கள் குறை சொன்னவுடன் முதலில் மறுத்தவள், பின்னர் பணிந்து ஏற்றுக்கொள்கிறாள். தன்னிடம் இல்லாத குறையைப் பிறர் உரைத்தாலும் தன்னுடையதாகவே ஏற்றுக்கொள்ளுதல் அடியார் இயல்பு. ஸ்வாப தேசத்தில், ஆழ்வார்களிலேயே கடைக்குட்டியான திருமங்கையாழ்வாரை இப்பாசுரம் குறிக்கிறது. அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – பாடல் 15ராகு – கேது பெயர்ச்சி பலன்கள்: மிதுனம் ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான் சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப் பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள் பேரரையற் கிங்ஙனே பித்தொருவர் ஆமாறும் ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள் வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய். பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன் பாடியவர் – மயிலை சற்குருநாதன் பாடியவர் மயிலாடுதுறை சிவகுமார் விளக்கம்: இப்பெண்கள் கூட்டத்தில் ஒருத்திக்கு ஏற்பட்ட இறையனுபவத்தையும் இத்தகைய அனுபவத்தை அருளிய இறைவனாரின் பெருமையையும் கூறுகிற பாடல். பெண் அடைந்த நிலை: ஒவ்வொரு பொழுது, “எம்பெருமான், எம்பெருமான்’ என்று சிவனாரின் பெருமைகளை வாய் ஓயாமல் பேசுவாள். உள்ளத்தில் மகிழ்ச்சி நிறைந்ததால், கண்களில் இன்பக் கண்ணீர் இடைவிடாது பொழிய நிற்பாள். கீழே விழுந்து வணங்கியபடியே கிடப்பாள். சிறு தெய்வங்களைப் பணியமாட்டாள். இவ்வாறு பித்தாகும்படி இவளை இந்நிலைக்குத் தள்ளியவர் யார்? இந்நிலைக்குக் காரணமானவர்: பேரரசனான வித்தகன். ஆட்கொள்ளும் வித்தகனான சிவனின் திருவடிகளை வாயாரப் பாடி, பூக்கள் நிரம்பிய…