சப்த விநாயகர்களைக் கொண்ட திருக்கண்டியூர் திருத்தலம்

சந்தோஷம் தரும் சப்த விநாயகர்கள்! தஞ்சாவூரிலிருந்து சுமார் 9 கி.மீ. தொலைவில் உள்ள திருத்தலம் திருக்கண்டியூர். இத்தலத்தில் கோயில் கொண்டுள்ளார் ஸ்ரீ பிரம்மகண்டீஸ்வரர், அம்பாள் ஸ்ரீ மங்களாம்பிகை.  சிவபெருமானைப் போல் ஐந்து தலைகளுடன் காட்சி தந்த படைக்கும் கடவுளான பிரம்மன் தலைகர்வத்துடன் அலைந்ததால் பிரம்மனின் ஐந்து தலைகளில் ஒரு தலையைக் கொய்ந்து, தலைக்கனத்தை அடக்கினார், சிவபெருமான். இந்த நிகழ்வு இத்தலத்தில் நடந்ததாக தலபுராணம் கூறுகிறது.  இங்கு, மேற்குதிசை நோக்கி இறைவன் அருள்புரிய, அம்பாள் தெற்குதிசை நோக்கி எழுந்தருளியுள்ளாள். மூலவர் சந்நிதிக்கு இடதுபுறம் பிரம்மனுக்கு கிழக்குதிசை நோக்கி தனி சந்நிதி உள்ளது. இங்கு அமர்ந்த கோலத்தில் காட்சி தரும் பிரம்மனுக்கு அருகில் சரஸ்வதியும் அமர்ந்துள்ளாள். ஆனால், கைகளில் வீணை இல்லை என்பது தனிச்சிறப்பு.  இறைவனையும் அம்பாளையும் தரிசித்துவிட்டு பிரகார வலம் வந்தால் மொத்தம் பதினொரு விநாயகர்களைத் தரிசிக்கலாம். இவர்களில் ஏழு விநாயகர்கள் சப்தவிநாயகர்களாக திருமாளிகைச் சுற்றில் வரிசையாகக்காட்சி தருகிறார்கள். சங்கடஹர சதுர்த்தி மற்றும் விநாயக சதுர்த்தி ஆகிய நாள்களில் இங்கு வந்து, சப்த விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்தி அர்ச்சித்து வழிபட்டால், ஏழேழு ஜன்மத்தின் பாவங்களிலிருந்தும் விமோசனம் கிட்டும் என்பது ஜதீகம்.வேண்டியது கிடைக்கும் விநாயகர் வழிபாடு  இந்த சப்த விநாயகர்கள் வரிசையாக எழுந்தருளியுள்ள இந்தத் திருமாளிகைச் சுற்றில் இடது புறத்தில் “கல்ப சூரியன்’ என்ற திருப்பெயரில் சூரியபகவான், நின்ற கோலத்தில் சுமார் ஆறடி உயரத்தில் காட்சி தருகிறார். அருகில் சந்திரபகவானையும் தரிசிக்கலாம். மேலும் அர்த்தநாரீஸ்வரர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவதையும் தரிசிக்கலாம்.  மேற்கு திசை நோக்கி அருள்புரியும் சப்த விநாயகர்கள் எழுந்தருளியிருக்கும் ஒரே திருத்தலம் திருக்கண்டியூர் ஸ்ரீ பிரம்ம சிரகண்டீஸ்வரர் கோயில் என்று போற்றப்படுகிறது. ஒரே சமயத்தில் ஒரே இடத்தில் வரிசையாகக் காட்சிதரும் சப்தவிநாயகர்களைத் தரிசிப்பதால் சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் நிலவும் என்று ஞானநூல்கள் கூறுகின்றன.  தஞ்சாவூரிலிருந்து திருக்கண்டியூர் செல்ல வாகன வசதிகள் உள்ளன.  – டி.ஆர். பரிமளரங்கன் நன்றி Hindu கல் எறிந்தவருக்கும் பேறு…

வடுவூரில் ஸ்ரீராமநவமித் திருவிழா துவங்கியது

வடுவூரில் மாா்கழி வழிபாடு-3: திருப்பாவை,  திருவெம்பாவை (பாசுரம் 3) எழுந்தருளி உள்ள ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு ஸ்ரீராமநவமி பெருந்திருவிழா இன்று ஏப்ரல் ஒன்பதாம் தேதி துவஜாரோகணம் எனப்படும் திரு கொடியேற்றத்துடன் துவங்கியது. நன்றி Hindu செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை நல்லதா? கெட்டதா?

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 27)

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 27 கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்றன்னைப் பாடிப் பறைகொண்டு யாம்பெறு சம்மானம் நாடு புகழும் பரிசினால் நன்றாகச் சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம் ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு மூடநெய் பெய்து முழங்கை வழிவார கூடி யிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய். பாடியவர் – பவ்யா ஹரி விளக்கம்:   "கூடாரவல்லி’ என்று அழைக்கப்படும் பாசுரம் இது. கீழ்ப்பாசுரத்தில் நோன்புக்கு வேண்டிய உபகரணங்கள் பேசப்பட்டன. ஆயர் பெண்களைப் பார்த்து, "நோன்பியற்றினால் பரிசுண்டு என்கிறீர்களே, என்ன பரிசு?’ என்று கண்ணன் வினவியிருக்கக்கூடும். "பகைவர்களை வெல்கிற கோவிந்தனே, உன்னைப் பாடுவதனால் எங்களுக்குக் கிட்டுகிற பரிசுகளைக் கூறுகிறோம், கேள்’ என்று வரிசைப்படுத்துகிறார்கள். கைவளைகள், தோள் வளைகள், செவிப் பூக்கள், தோடுகள், பாதக்கடகங்கள் முதலிய பலவகையானஅணிமணிகளைப் பெறுவோம். புத்தாடைகளை உடுப்போம். பின்னர், உன்னையும் சேர்த்துக்கொண்டு பால் சோறிட்டு, அதனில் நெய் மிக்கு வழியும்படியாக உன்னோடு இருந்து உண்போம். இதுவே எங்கள் உள்ளத்திற்கும் உணர்வுகளுக்கும் குளிர்ச்சி’ என்றுரைக்கிறார்கள்.  பாசுரச் சிறப்பு: "கூடாரை வெல்லுதல்’ குறித்து இப்பாசுரம் பேசுவதாலும், பாசுரத்தின் பிற்பகுதியில் கூடியிருந்து குளிர்வதைப் பற்றிக் குறிப்பிடப்படுவதாலும், இந்தப் பாசுரத்திற்கே "கூடாரவல்லி’ என்னும் பெயர் ஏற்பட்டுவிட்டது. "கூடாரைவெல்லி’ என்பது இவ்வாறு மருவியிருக்கலாம்; அல்லது  "கூடாரம் வல்லி’ (கூடாரம்}கூட்டம்) என்பதுமாக இருக்கலாம். இந்த நாளுக்கே, கூடாரவல்லித் திருநாள் என்றுதான் பெயர். தங்களுக்குக் கிடைக்கக்கூடிய பரிசுகளை விவரித்து உரைப்பதாகவே இப்பாசுரம் அமைகிறது. ஐந்து வகையான அணிகலன்கள் கூறப்படுகின்றன. கை வளை } கைக்கு அழகு சேர்ப்பது, கைகூப்புதல்; தோள் வளை – தோளுக்கு அழகு சேர்ப்பது, வைணவ இலச்சினையாகச் சங்கு சக்கரப் பொறி ஒற்றிக் கொள்ளுதல்; தோடு } செவிக்கு முதல் அழகு, மந்திரத்தைச் செவி மடுத்தல்; செவிப் பூ } செவிக்குக் கூடுதல் அழகு, மந்திரத்தின் பொருளை உணர்ந்து உபதேசம் கேட்டல்; பாடகம் } பாதங்களுக்கு அழகு, கோயில்களையும் ஆசார்ய இருப்பிடங்களையும் சுற்றி வருதல். செவி மடலின் கீழ்ப்பகுதியில் அணிவது தோடு; மேல் பகுதியில் கூடுதலாக அணிவது செவிப்பூ. ஆடை என்பது உறை. பால் சோறு என்பது உடைமை; சோற்றுக்குரியவன் சோற்றைப் பயன் கொள்ளுதல் போல், உடைமையை உடையவன் எவ்வாறேனும் பயன் கொள்ளலாம்.  ஒவ்வொரு உயிரும் எம்பெருமானுக்கு உறை என்பதும், "உன்னுடைய உடைமைகளான நாங்கள், உனக்குத் தொண்டு செய்வதில் குளிர்ச்சி பெறுகிறோம்’ என்பதும் உள்பொருள் விளக்கங்கள். அணிகலன் அணிவோம், ஆடை உடுப்போம் என்று கூறிய ஆண்டாள், சோறு உண்போம் என்று முடிக்காமல், கூடியிருத்தல் குறித்தே கூறுகிறாள். இப்பரிசுகளைக் காட்டிலும் கண்ணனின் அணுக்கமே முக்கிய நோக்கம் என்பது இதன் தெளிவு. 2ஆவது பாசுரத்தில் ஆணையிடப்பட்ட பாலும் நெய்யும் உண்ணாத நோன்பு, நோன்பின் நோக்கம் நிறைவேற இருப்பதால், பால்சோறு உண்ணும் நிலையை அடைந்துவிட்டது.  ****** ஸ்ரீமாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி – பாடல் 7 அதுபழச் சுவையென அமுதென அறிதற்குஒரு ஜாதகர் எப்படிப்பட்ட குழந்தை பாக்கியத்தை பெறுவார்? அரிதென எளிதென அமரரும்…

Continue Reading

திருமணத்தை மீறிய உறவை ஜாதகத்தில் அறிய முடியுமா? என்ன சொல்கிறார் ஜோதிடர்?

பிறந்த தேதியிலிருந்து திருமணத்திற்கு மீறிய உறவுகளை ஜோதிடத்தில் எவ்வாறு கண்டறியலாம்? ஜோதிடத்தைப் பயன்படுத்தி பிறப்பு ஜாதகத்தில் திருமணத்திற்குப் புறம்பான அல்லது ரகசிய உறவைப் பற்றி அறிய சிறந்த வழி, திருமணத்திற்கு முன்பே அதை ஆராய்வதாகும். மேலே சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளபடி திருமணத்திற்கான விளக்கப்படங்களைப் பொருத்துவதன் மூலம் ஒரு துணையின் திருமணத்திற்குப் புறம்பான உறவுகளின் அறிகுறியை ஒருவர் எளிதாகக் கண்டறியலாம். அதன் விரிவான விளக்கத்தைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் நீங்கள் படிக்கலாம். பிறப்பு ஜாதகத்திலிருந்து திருமணத்திற்குப் புறம்பான அல்லது ரகசிய உறவைப் பற்றி ஜோதிடம் எவ்வாறு விரிவாகக் காண்கிறது என்பதை இப்போது புரிந்து கொள்ளுங்கள். எந்தவொரு உறவிற்கும், மனதைக் குறிக்கும் சந்திரன் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. சுக்கிரன் காதல் மற்றும் காதலைக் குறிக்கிறது. ராகு என்பது ஒரு நபரை சமூக விதிமுறைகளை மீறத் தூண்டும் கிரகம். செவ்வாய் ஆக்கிரமிப்பு மற்றும் ஆர்வத்தைக் குறிக்கிறது. எனவே, இந்த கிரகங்களின் மோசமான சேர்க்கை ஒரு நபரின் பிறப்பு ஜாதகத்தில், திருமணத்திற்குப் புறம்பான உறவுகள் மற்றும் பிற உறவுகளைக் குறிக்கிறது. 3, 7 மற்றும் 11 ஆம் வீடுகள் காம திரிகோணம் (ஆசை), 5 ஆம் வீடு காதலுக்கான வீடு & 12 ஆம் வீடு படுக்கை இன்பத்திற்கான வீடு. பிறப்பு ஜாதகத்தில் திருமணத்திற்குப் பிறகு ஒரு ரகசிய உறவு மேலே உள்ள அனைத்து பண்புகளையும் பாதிக்கும். ஒரு ஜாதகத்தில் ராகு, சுக்கிரன், சந்திரன் அல்லது செவ்வாய் 3, 5, 7, 11 மற்றும் 12 ஆம் வீடுகளுடன் இணைந்திருப்பதும், அவர்களின் அதிபதியாக இருப்பதும் ரகசிய காதல் / திருமணத்திற்குப் புறம்பான உறவுகளைக் குறிக்கிறது. இதன் பொருள் இந்த மோசமான இணைப்பு உள்ள ஒருவர் ஏமாற்றும் வாழ்க்கைத் துணையாக இருக்கலாம். ஆனால் இதனைப் படித்து தாமாகவே புரிந்து கொள்ளுதல் இதனை மூலமாகக் கொண்டு திருமண வாழ்வில் விரிசல் ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது. நல்லதொரு அனுபவமிக்க ஜோதிடரைக் கலந்து ஆலோசித்து “திருமணத்திற்கு முன்னரே ஏற்படுத்தக்கூடிய விஷயம் தான் இந்த கட்டுரையில் பேசப்படுகிறது.” திருமண வாழ்வில் உள்ளவர்களுக்கு இது பொருந்தாது. “நீங்களே ஒரு ஜோதிடராக மாறாதீர்கள்.”மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டும்! அதில் ஜோதிட பங்கு என்ன?   ஜாதகத்தில் ரகசிய உறவுகளின் அறிகுறி சந்திரன், நமது மனம் நமது ஞானத்தாலும், புதன், நமது புத்திசாலித்தனத்தாலும் கட்டுப்படுத்தப்படுகிறது. இங்கே, ஜோதிடர், வாழ்க்கைத் துணையின் ஜாதகத்தில் சந்திரனுக்கு ஞானம் மற்றும் தர்மம் அல்லது கூடுதல் காம அல்லது காம உணர்வுகள் தொடர்பான தொடர்பு உள்ளதா என்று பார்ப்பார். புதன் ஜனன சந்திரனில் இருந்து 5வது அல்லது 9வது வீட்டில் இணைந்திருந்தால், அந்த நபருக்கு சரீர மற்றும் சட்டவிரோத காம ஆசைகள் இருக்கும். ஆனால் வியாழன் சந்திரனில் இருந்து 5வது மற்றும் 9வது வீடுகளின் மீது நல்ல கட்டுப்பாட்டில் இருந்தால், அந்த நபர் வாழ்க்கைத் துணைக்கு விசுவாசமாக இருப்பார். ஜோதிடத்தின் படி, பிறப்பு ஜாதகத்தில் கூடுதல் திருமண விவகாரங்களைக் குறிக்க…

Continue Reading

செவி சாய்க்கும் சாமி!

வி = இதற்கு மேல் இல்லை; நாயகர் = தலைவர். “விநாயகர்’ அதாவது இவர் தான் அனைவருக்கும் தலைவர் என்று பொருள். அதனால் தான் இவரை ‘முழுமுதற்கடவுள்’ என்றும், எல்லா கணங்களுக்கும் அதிபதி என்பதால் ‘கணபதி’ என்றும் அழைக்கப்படுகிறார். நீ அவனை பிடித்தால் அவன் உன்னை ஆசையுடன் பிடிப்பான்; எனவே “தும்பிக்கையானிடம் நம்பிக்கை வை’ என்றனர். நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்ற முதுமொழியினைப்போல்; விநாயகரின் குறும்பு பல தெளிவான செயல்களை விளங்க வைத்துள்ளது. பிரணவ மந்திரத்தில் பிரம்மனுடன் விளையாடினாலும்; அந்த பிரணவ மந்திரத்தின் சிறப்பினை உலகிற்கு தெரியப்படுத்திய பெருமை விக்னேஸ்வரனையே சேரும். அதுபோல் மாம்பழ விளையாட்டில் நீயா நானா போட்டியில் ஆணவமும், அகம்பாவமும் வெல்ல முடியாது; பணிவாய் தாய் தந்தையை வணங்கினால் அனைத்துப் பேற்றினையும் அடையலாம் என்ற உட்கருத்தை தெளிவாகக் கூறியவர். நமக்கு ஒரு சோதனை ஏற்பட்டால் “ஈஸ்வரா இது என்ன திருவிளையாடல்?’ என பரமசிவனை வழிபடுவோரும், “நாராயணா இது என்ன சோதனை?’ என நாராயணனை வழிபடுவோரும்; “தாயே எனக்கு கருணைபுரிவாயா?’ என அம்மனை வழிபடுவோரும் பலவாராகக் கூறி வணங்குவார்கள். இந்த கடவுளர்கள் அனைவரும் நிதானமாக ஆழ்ந்து சிந்தித்து; பலவகையிலும் தகுதிப் பரிசோதனை செய்து பின் நமக்கு அருள்புரிவார்கள். ஆனால் சற்று வித்தியாசமானவர் நம் விநாயகர். பெரிய வழிபாடெல்லாம் செய்ய வேண்டாம்; சாலை ஓரத்தில் அமர்ந்துள்ள விநாயகரைக்கூட போகிறபோக்கில் ஒரு சதுர்தேங்காயை உடைத்து விட்டு “என்னால் முடியவில்லை நீ பார்த்துக் கொள்’ என சரணாகதி அடைந்தால் நம் கோரிக்கையை எளிதில் தீர்த்துவைப்பார். விக்ன விநாயகனுக்கு தனியாக கோயில்கள் பல ஊர்களில் இருந்தாலும் குறிப்பிட்டுச் சொன்னால் தஞ்சையிலிருந்து திருவையாறு செல்லும் மார்க்கத்தில் கண்டியூருக்கு அருகில் “திருவேதிகுடி’ என்ற ஊரில்; சம்பந்தர், நாவுக்கரசரால் பாடப்பெற்ற சிவத்தலம் ஒன்றுள்ளது. முற்காலத்தில் இவ்வூரை “சதுர்வேதி மங்கலம்’ எனவும் அழைத்தனர். வேதநாயகன் பிரும்மன் இங்குள்ள ஈசனை வணங்கி வழிபட்டதால் இவ்வூருக்கு இப்பெயர் வரக்காரணமானது. அங்குள்ள மகா மண்டபத்தில் “வேதம் கேட்ட விநாயகர்’ தன் தலையை வலதுபுறம் சாய்த்து, வலதுகாலை மடித்து, இடது காலை உயரமாக வைத்துக் கொண்டு ஏகாக்ர சித்தத்துடன் (ஆழ்நிலை தியானம்) கண்மூடிய நிலையில் அமர்ந்து அருளாட்சி செய்கிறார். ருக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை செவி சாய்த்து ஊன்றிக் கேட்கிறார் என்பதாக ஐதீகம். அற்புதமான தோற்றம். இதுபோல், திருச்சி லால்குடி மார்க்கத்தில் காவிரியின் கிளை நதியான கொள்ளிடத்தின் வடகரையில் அன்பில் என்ற சிவத்தலம் உள்ளது. ஊர் பெயர் “அன்பில்’ என்றிருந்தாலும் இக்கோயிலை “ஆலந்துறை’ என்றே அழைக்கின்றனர். சம்பந்தர் இவ்வூர் இறையனாரை தரிசிக்க வந்தபோது கரை புரண்டோடிய வெள்ளத்தால் தென்கரையிலிருந்தே பதிகம் பாடினார். இதனை கேட்ட ஈஸ்வரன், தன் மைந்தன் கணபதியையும் செவி சாய்த்து கேட்க அருளினார். இதனால் இவருக்கு “தேவார விநாயகர்’ என்றும், தன் தலையை வலதுபுறம் சாய்த்து கேட்டதால் “செவி சாய்த்த விநாயகர்’ என்ற பெயரைப் பெற்றதாக இத்தலவரலாறு கூறுகிறது. மேற்படி இருதல வரலாற்றின்படி, வேதம் மற்றும் தேவாரம் கேட்பதற்காக அவர் செவி சாய்த்ததாலும்,…

Continue Reading

12 மாதங்களிலும் திருவிழாக் காணும் அலங்காரப்பிரியன் அரங்கன்

  ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமியை பொதுவாக அலங்காரப் பிரியன் என்பார்கள்.  ஒவ்வொரு திருவிழாவுக்கும் பெருமாள் அணிந்திருக்கும் அலங்காரங்கள், ஆபரணங்கள் காணக் கண்கோடி வேண்டும்.   இத்தனை சிறப்புடைய ஸ்ரீரங்கம் கோயிலில் ஆண்டில் திருவிழா நடைபெறாத மாதங்களே இல்லை எனலாம். இதையும் படிக்கலாமே.. ஸ்ரீரங்கத்தில் சிறப்பு வாய்ந்த வைகுந்த ஏகாதசி திருவிழா தமிழ் மாதத் தொடக்கமான சித்திரையில் தேரோட்டம், கஜேந்திர மோட்சம்,  வைகாசியில் நம்பெருமாள், தாயார் வசந்த உற்ஸவம், ரங்கநாச்சியார் கோடை உற்ஸவம், ஆனியில் ஆனித்திருமஞ்சனம்,  பெரியபெருமாள், ஸ்ரீரங்கநாச்சியார், சக்கரத்தாழ்வார் ஜேஷ்டாபிஷேகம்,  ஆடியில் ஆடிப்பெருக்கு, காவிரித்தாய்க்கு திருமாலை, பொட்டு அளித்தல், ஆவணியில் கிருஷ்ணஜெயந்தி – உறியடி உற்சவம், புரட்டாசியில் நவராத்திரி உற்ஸவம், ஐப்பசியில் ஊஞ்சல் உற்ஸவம், கார்த்திகையில் ஏகாதசி, நம்பெருமாளுக்கு 365 வஸ்திரங்களைச் சாற்றுதல், மார்கழியில் வைகுந்த ஏகாதசி,  தையில் சங்காரந்தி, சமயபுரம் மாரியம்மனுக்கு சீர்வரிசை அளித்தல், மாசியில் தெப்போத்ஸவம், பங்குனியில் நம்பெருமாள் தாயார் சேர்த்தி சேவை, ஆதி பிரம்மோத்ஸவம் என 12 மாதங்களிலும் திருவிழாக்கள் நடைபெறும் புண்ணியத்தலமாக ஸ்ரீரங்கம் கோயில் திகழ்கிறது. அலங்காரப் பிரியன்ஸ்ரீரங்கம் அரங்கநாதரை ரங்கராஜா என்றழைப்பார்கள். இந்த ரங்கராஜனுக்கு அணிவிக்கப்படும் அலங்காரங்கள் விலைமதிப்பில்லாதவை. ஒவ்வொரு திருநாளுக்கும் நம்பெருமாள் புறப்பாடாகும் போது அணிவிக்கப்படும் ஆபரணங்களுக்கும் தனி சிறப்பு இருக்கிறது. புகைப்படங்களைக் காண.. ஸ்ரீரங்கம்: கவரிமான் தொப்பாரைக் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்! குறிப்பாக, வைகுந்த ஏகாதசி திருவிழாவில் பகல்பத்து நாளன்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அலங்காரத்தில் எழுந்தருளும் நம்பெருமாளுக்கு வைரம்,  வைடூரியம், முத்து, பவளம் என பலவிதமான ஆபரணங்கள் அணிவிக்கப்படுகின்றன.  எத்தனை ஆபரணங்கள் அணிந்தாலும் அத்தனையிலும் அழகாய் காட்சியளிப்பார் நம்பெருமாள். வைகுந்த ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்வாகக் கருதப்படும் பரமபதவாசல் திறப்பன்று  கருவறையிலிருந்து பாண்டியன் கொண்டை, கிளி மாலை, ரத்தின அங்கியுடன் புறப்பட்டு சிம்மக்கதியில் வரும் நம்பெருமாளைத் தரிசிக்க திரளும் பக்தர்களே இதற்கு சாட்சியாகும். இதுபோல, இராப்பத்து ஏழாம் திருநாளன்று நடைபெறும் திருக்கைத்தல சேவை, எட்டாம் திருநாள் நடைபெறும் வேடுபறி சேவையில் குதிரை வாகனத்தில்  நம்பெருமாள் எழுந்தருளி வையாளி கண்டருளுதல்,  சாற்றுமறையன்று  நடைபெறும்  நம்மாழ்வார் மோட்ச நிகழ்விலும் திரளான பக்தர்கள் பங்கேற்று அலங்காரப் பிரியனின் அழகைக் கண்டு தரிசித்து மகிழ்வர். வைகுந்த ஏகாதசி திருவிழாவில் நடைபெறும் நடைமுறைகள்மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 18) ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி திருவிழா பகல்பத்து உற்ஸவத்துக்கென சில நடைமுறைகள் உள்ளன. அந்த நடைமுறைகளின்படி திருவிழா நடைபெற்று வருகிறது. பெரிய திருக்கோயில் எனப்படும் அரங்கநாதசுவாமி திருக்கோயில் நடைபெறும் எந்த திருவிழாக இருந்தாலும் திருக்கோயில் நிர்வாகத்தால் குறிப்பிடப்படும் நேரத்தில் சுவாமி புறப்பாடு தொடங்கும்.  யாருக்காகவும் பெருமாள் காத்திருக்க மாட்டார்கள் என்பார்கள்.   உடையவர் எனப்படும் ராமானுஜர் காலத்தில் வகுத்த நிர்வாக முறை இன்றளவும் இக்கோயிலில் பின்பற்றப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் திருவிழாக்களில் புறப்பாடு தொடங்கப்பட்டுவிடும். திரு அத்யயன உற்ஸவம் எனப்படும் வைகுந்த ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம், பகல்பத்து, இராப்பத்து என 21 நாள்கள் நடைபெறும்.  இந்த 21 நாள்களிலும்  நம்பெருமாள் புறப்பாடுக்கான வரைமுறைகள்…

Continue Reading

மஹாளயம்: 15 நாள்களும் எப்படி இருக்க வேண்டும்?

  2023-ம் ஆண்டுக்கான மஹாளயபட்சம் இன்று(செப்.30) முதல் தொடங்கியுள்ளது. மஹாளயபட்சமான 15 நாள்களும் எப்படி இருக்க வேண்டும், தர்ப்பணம் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று தெரிந்துகொள்ளலாம்.  மஹாளய பட்சம் நாளில் ஒவ்வொருவரும் அவரது வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் சண்டை போடுவது, தகாத சொற்களைப் பேசுவது, புலால் உண்ணுதல், கள், மது குடித்தல் ஆகியவற்றைக் கட்டாயம் தவிர்த்தல் வேண்டும். நாம் எந்த அளவிற்குத் தூய்மையாக இருக்கிறோமோ, ஒற்றுமையாக இருக்கிறோமோ, பித்ருக்களைச் சிரத்தையுடன் பூஜிக்கிறோமோ அந்த அளவிற்கு இந்தப் பதினைந்து நாள்களும் நம்முடன் தங்கியிருக்கும் நம் பித்ருக்கள், மனமகிழ்ச்சியையும், மனநிறைவையும் அடைவார்கள். பித்ருக்கள் இவ்விதம் இந்தப் பதினைந்து நாள்களும் நாம் குடும்பம் நடத்தும் நேர்மையைக் கண்டு மனத்திருப்தி அடைவதன் பலனைப் பித்ரு தேவதைகள் அவர்களிடம் பெற்று நம்மிடம் சேர்க்கிறார்கள். மஹாளயபட்ச திதியில் தர்ப்பணம் செய்தால் கிடைக்கும் பலன்கள் * முதல்நாள் – பிரதமை திதியில் தர்ப்பணம் செய்தால் பணக்கஷ்டம் தீர்ந்து, பணம் வந்து சேரும். * இரண்டாம் நாள் – துவிதியை திதியில் தர்ப்பணம் செய்தால் ஒழுக்கமான குழந்தைகள் பிறப்பார்கள். * மூன்றாம் நாள் – திரிதியை திதியில் தர்ப்பணம் செய்தால் நாம் நினைத்த காரியங்கள் நிறைவேறும். * நான்காம் நாள் – சதுர்த்தி திதியில் தர்ப்பணம் செய்தால் எதிரிகளால் தொல்லை இல்லாமல் வாழலாம். * ஐந்தாம் நாள் – பஞ்சமி திதியில் தர்ப்பணம் செய்தால் செல்வம் சேரும், நியாயமான சொத்துகள் கிடைக்கும். வீடு, நிலம் முதலான சொத்துக்கள் வாங்கி செல்வச் செழிப்புடன் வாழலாம். * ஆறாம் நாள் – சஷ்டி திதியில் தர்ப்பணம் செய்தால் பேரும் புகழும் கிடைக்கும். இதையும் படிக்க: முன்னோர்களை வீட்டிற்கு அழைக்கத் தயாராகுங்கள்: மஹாளயபட்சம் ஆரம்பம்!மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 5) * ஏழாம் நாள் – சப்தமி திதியில் தர்ப்பணம் செய்தால் சிறந்த பதவிகளை அடையலாம். உத்தியோகத்தில் தலைமைப் பதவி கிடைக்கும், தடைப்பட்ட பதவி உயர்வு கிடைக்கும். * எட்டாம் நாள் – அஷ்டமி திதியில் தர்ப்பணம் செய்வதால் அறிவாற்றல் பெருகும். * ஒன்பதாம் நாள் – நவமியில் தர்ப்பணம் செய்தால் திருமணத் தடை நீங்கும். சிறந்த வாழ்க்கைத்துணை அமைவார்கள். குடும்பத்திற்கேற்ற மருமகள் அமைந்து புத்திசாலியான பெண் குழந்தைகள்பிறக்கும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். * பத்தாம் நாள் – தசமி திதியில் தர்ப்பணம் செய்தால் நீண்ட நாட்களாக இருந்து வந்த ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். * பதினொன்றாம் நாள் – ஏகாதசி திதியில் தர்ப்பணம் செய்வதால் படிப்பு, விளையாட்டு மற்றும் கலையில் வளர்ச்சி அடைவார்கள். * பனிரெண்டாம் நாள் – துவாதசி திதியில் தர்ப்பணம் செய்வதால் தங்கநகை சேர்தல், விலை உயர்ந்த ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். * பதின்மூன்றாம் நாள் – திரயோதசி திதியில் தர்ப்பணம் செய்வதால் பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்க ஆயுள், ஆரோக்கியம், நல்ல தொழில் போன்றவை சிறப்பாக இருக்கும். *…

Continue Reading

ஜோதிடத்தில் புற்று நோயை முன்கூட்டியே கணிக்க முடியுமா?

  “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ” .  ஜோதிடம் ஒரு முன்னெச்சரிக்கையே தவிர, முடிவு அல்ல. மருத்துவ ஜோதிடம் மற்றும் பரிகாரங்களில் புற்றுநோய் பற்றிய அனைத்தும் இக்கட்டுரையில் அறியலாம்.  புற்றுநோய்க்கான காரணத்தை மருத்துவத்துறை இன்னும் கண்டறியவில்லை. இது ஆரம்பக் கட்டத்தில் கண்டறியப்படவில்லை என்றால் அது மரணத்தை நோக்கித் தான் செல்லும். கீமோதெரபி மூலம் இது சில அளவுக்கு சிகிச்சை அளிக்கப்படலாம், ஆனால் மீதம் கடவுளின் கைகளில் தான் உள்ளது.  கடந்த காலங்களில் பல உயிர்க் கொல்லி நோய்களுக்கு நாம் முடிவு கொடுத்திருக்கிறோம். ஆனால் கேன்சர் நோய்க்கு மட்டும் இன்னும் தீர்வு காண முடியவில்லை. சிலரின் ஜாதகத்தில் இந்த உயிர்க் கொல்லி நோய் தாக்குவதற்கான வாய்ப்பு உள்ளதைப் பற்றி அறிவதனால் நோயின் பிடிக்குள் சிக்காமல் தவிர்க்க முன் எச்சரிக்கையாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது.  புற்றுநோய் என்பது ஒரு குறிப்பிட்ட நோயின் பெயர் அல்ல. கேன்சர் எனும் புற்றுநோய் நமது உடலின் கட்டுப்பாடற்ற உயிரணு வளர்ச்சியை உள்ளடக்கிய நோய்களின் குழுவைக் குறிக்கிறது. புற்றுநோயில், நமது உடலின் செல்கள் பல வடிவங்களாகப் பிரிந்து, பின்னர் முற்றிலும் ஒழுங்கற்ற முறையில் வளர்ந்து, சில சமயங்களில் வீரியம் மிக்க கட்டிகளை உருவாக்குகின்றன, அவை உடலின் குறிப்பிட்ட பாகங்களின் அருகிலுள்ள செல்களுக்கு தீங்கு விளைவிக்கும் அல்லது வேறு இடங்களுக்கும் படையெடுக்கின்றன. இது நீண்ட காலத்திற்கு சிகிச்சையாக்கப்படாவிட்டால், வீரியம் மிக்க கட்டியானது நமது இரத்த ஓட்டம் அல்லது நிணநீர் மண்டலத்தின் உதவியுடன் உடலின் மற்ற தொலைதூர பகுதிகளுக்கு பரவுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் உள்ளது. இந்த நோயை சரியான முறையில் கையாண்டு சிகிச்சையளிக்க வேண்டும், ஏனெனில் இது மரணத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு வீரியம் மிக்கது.  புற்றுநோயாளிகளுக்கான ஜோதிட சேர்க்கைகள் – மருத்துவ ஜோதிடம்  ஜோதிடத்தில் புற்று நோயைக் கணிப்பது எப்படி?  ஒரு நபர் புற்றுநோயால் பாதிக்கப்படுவாரா இல்லையா என்பதை ஜோதிடத்தின் மூலம் தீர்மானிக்க முடியும். “குணப்படுத்துவதை விட தடுப்பு சிறந்தது” என்பது பழமொழி. நம் அன்புக்குரியவர்களுக்கு புற்றுநோயின் சாத்தியத்தை புரிந்துகொள்ள முடிந்தால், நோய் கையை விட்டு வெளியேறுவதற்கு முன்பு அதைத் தடுக்கலாம். இந்த விஷயத்தில் ஜோதிடம் எவ்வாறு நமக்கு உதவுகிறது என்று பார்ப்போம். ஒரு நபருக்கு புற்றுநோய் இருப்பதைக் குறிக்கும் சில ஜோதிட /கிரக சேர்க்கைகள் கீழே உள்ளன. 1. ஜோதிடத்தில் புற்றுநோய் நோயின் கிரக அறிகுறிகள்  ஜோதிடத்தில் உள்ள அனைத்து கிரகங்களும் இந்த கொடிய நோய்க்கு ஒருவிதத்தில் காரணம், ஆனால் சில கிரகங்கள் நோயை அதிகம் பாதிக்கின்றன. அவை சனி, ராகு, கேது, செவ்வாய் ஜாதகத்தில் புற்று நோய்களுக்கான கிரக சேர்க்கைகள் (ராசிகள் / வீடுகள் மற்றும் கிரகங்கள் மருத்துவ ஜோதிடத்தில் புற்றுநோய் நோய்க்கு வழிவகுக்கிறது.) 1. லக்னம் அல்லது ஜாதகத்தின் முதல் வீடு அதன் பலம். 2. நமது உடலின் உயிர் சக்தியை சூரியன் ஆட்சி செய்கிறது. ஒரு ஜாதகத்தில் சூரியன் எங்குள்ளது போன்ற காரணி மற்றும் அதன் வலிமையின் நிலை பொறுத்து அமைகிறது….

Continue Reading

அடிமையாக்கும் மறுபிறவியில்லா கேது 

சாயா கிரகங்கள் என்று கூறப்படும் ராகுவும் கேதுவும் இந்த கலியுகத்தில் பல்வேறு நிலையை ஜாதகருக்கு ஏற்படுத்தும். ஒருவரின் வாழ்க்கை தரத்தை திடீர் என்று மேலே தூக்கி உயர வைக்கும் அல்லது சூழ்ச்சி என்கிற வலையில் மாட்டி நிலைகுலைய வைக்கும்.   ராகு உருவாக்கும் செயல்கள் வெளிப்படையாக தெரியும், ஆனால் கேது என்பவர் இலை மறை காய் மறையாக தெரியும்படியாக செயல்படுத்துவார். நம் நாட்டில் நிறைய பேர் வாழ்க்கையில் பட்டரற்ற பெரிய மகான்கள் மற்றும் ஆன்மீக பெரியவர்கள் பிறந்தது கேதுவின் நட்சத்திரங்களாக  அமையப்பெற்றுள்ளது. அதற்கும் அவரவர் பாக்கிய ஸ்தானம் வலுப்பெற்றால் தான் நடைபெறும்.  ஜாதகருக்கு இந்த கிரகங்களும் நன்மையும் தீமையும் கண்ணிமைக்கும் நேரத்தில் திடீர் என்று செய்ய வல்லமை மிக்கவர்கள். ஜோதிட சாஸ்திரித்தில் ராகு போகக் காரகன், கரும்பாம்பு  என்றும் கேது ஞானக்காரகன், செம்பாம்பு  என்று கூறுவார்.    இந்த இரு கிரகங்களில் ஒன்றான மாய வலையில் பின்னுவதில் சாமர்த்தியசாலியானா கேதுவை பற்றி மட்டும் பார்ப்போம். கேது என்பவன் ஞானத்தை தருபவன் என்று பெருமை பட முடியாது. கேது ஞானத்தை முடக்கவும், அஞ்ஞானத்தை உருவாக்கவும் செய்வார்.  அவர் இருக்கும் இடம் அதாவது பாவத்தை பொறுத்து மாறுபடுவார். கேது என்பவர் வலை என்று கூறலாம். ஒரு மனிதனின் செயல், மனம் என்று அனைத்தையும் அவர் வலையில் சிக்க வைப்பார். ஒருவரின் உடலில் நோய் தெரியாவண்ணம் மறைந்து தீவிரமானால் அங்கு கேது தன்னுடைய செயலை செய்திருப்பார் என்பது உண்மையே. கேதுவால் நன்மைகளும் உண்டு. அதேவேளையில் தீமைகளும் உண்டு.  எந்தக் காரணமும் ஒரு கிரகம் மட்டும் மூல காரணம் என்று சொல்ல முடியாது. அவற்றில் பல்வேறு கிரகங்களும் பாவங்களும், லக்கினமும், ராசியும் உள்ளடங்கும்.  முக்கியமாக கேதுவின் செயல் ஆராயும்பொழுது பல்வேறு செயல்கள் தென்படுகிறது.  எடுத்துக்காட்டாக பன்னிரெண்டில் கேது இருந்தால் அவருக்கு மறுபிறவி என்பது கிடையாது என்பர். இது வாய்வாக்காக சொல்லப்பட்டாலும் அவற்றை ஆராய்ந்து பார்க்க வேண்டும். பன்னிரெண்டில் கேது இருந்தால் அவர் ஒரு மனிதனை எதாவது ஒன்றில் அடிமை வலையில் சிக்க வைப்பார். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் என்று பாரதி கூற்றுக்கு ஏற்ப கேது என்பவர் சூது என்ற சூட்சமமும் அடங்கும். முக்கியமாக நான் பார்க்கும் ஒருசில நபர்கள் நம் வருவதுகூட தெரியாமல் கைபேசியில் விளையாடுவது, அவர்கள் மனது அவர் கையில் இல்லா நிலையை உண்டுபண்ணுகிறது. எடுத்துக்காட்டாக போதை வஸ்துகளால்  அல்லது லாட்டரி சீட்டு, பெண்ணிற்கு அடிமை, சூது  அல்லது  குடியை போன்ற ஒரு அடிமை ஆகிய காரணிகளை கேது உருவாக்குகிறார். முக்கியமாக இந்த நபர்களின் ஜாதகத்தைப் பார்த்தால் பன்னிரெண்டுக்கும் கேதுவுக்கும் ஒரு தொடர்பு ஏற்பட்டு இருக்கும். இவர்களை சுலபத்தில் சரிசெய்யவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பன்னிரெண்டாம்  பாவத்தில் கேது இருந்தால் அவருக்கு பிறவி என்பது கிடையாது என்பர். நான் பார்த்த நிறையபேர் புத்திரதோஷம் அதாவது பிள்ளை பிறப்பு இருக்காது அல்லது ஒரு பகுதிக்கு பிறகு மனதை அடிமையாகக் கொண்டு செல்லவர்கள்….

Continue Reading

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 30)

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 30 வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி அங்கு அப் பறைகொண்ட ஆற்றை அணி புதுவை பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே இங்கு இப்பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள் செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய். பாடியவர் – பவ்யா ஹரி விளக்கம்: திருப்பாவையின் நிறைவுப் பாசுரம் இது. நோன்புக்கு அழைத்து, நோன்பு விதிகளை விவரித்து, நோன்பியற்றி, நோன்பை நிறைவேற்றியும் விட்டவர்கள், இப்போது பாவைப் பாட்டின் பெருமையைப் பகர்கிறார்கள். "மாபெரும் கடலைக் கடைந்தவனான மாதவனை, கேசவனை, ஆய்ச்சிகளான நாங்கள் சென்று சேவித்துப் பாடி, பரிசுகள் பெற்ற பெருமையை,  பசுமைமிக்க தாமரை மலர்களால் ஆன மாலைகளைக் கட்டிக் கொடுக்கும் திருவில்லிப்புத்தூர் பெரியாழ்வாரின் மகளான கோதை உரைத்த இந்தப் பாமாலையை ஓதுபவர்கள், மலை போன்ற நான்குத் திருத்தோள்களையும், செம்மைமிக்க திருக்கண்களையும், நிறைந்த செல்வத்தையும் கொண்ட எம்பெருமான் திருமாலின் அருளைப் பெற்று மகிழ்ச்சி கொள்வார்கள்.’ பாசுரச் சிறப்பு: மா+தவன் – திருமகள் நாதன். பாற்கடலிலிருந்து பிறந்தவள் திருமகள். பாற்கடல் கடைந்ததை உரைக்கும் பாசுரத்தில், கண்ணனை "மாதவன்’ என்றழைப்பதன் பொருத்தம் எண்ணுதற்குரியது. நோன்புக்குள் புகும்போது "பரமனடி பாடி’ என்றவர்கள், இப்போது "கேசவன்’ என்று எம்பெருமான் திருமுடியைப் (கேசம் -கூந்தல்; அனைத்துக்கும் யாவர்க்கும் தலைவனாய் நிற்பவன் கேசவன்) பாடுகிறார்கள். பாதாதிகேச முறையில் பரமனைஅனுபவிக்கிறார்கள். புதுவை -திருவில்லிப்புத்தூர். வில்லி என்பவரால் புதியதாக நிர்மாணிக்கப்பட்ட  ஊர் என்பதால் அக்காலத்தே புதுவை என்று வழங்கப்பட்டது. பட்டர்பிரான் – பெரியாழ்வார். சங்கத் தமிழ் – கூட்டமாக இருந்து அடியாருடன் கூடி அனுபவிக்க வேண்டிய பாமாலை. மாதவன் என்னும் நாமமும் செல்வத் திருமால் என்னும் நாமமும் ஒரே பொருளைச் சுட்டுபவை; மா, செல்வம் – திருமகள்; தவன், மால் – திருமால். அதிகாலை எழுந்து அனுஷ்டானம் செய்து நோன்பியற்றி அதனால் கிட்டும் பலன்களை, இப்பாமாலையை ஓதுவதன் வழியாகவே பெற்றுவிடலாம் என்பது பெருஞ்சிறப்பு.  ****** ஸ்ரீமாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி – பாடல் 10 ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம் புவனியிற் போய்ப்பிற வாமையில் நாள்நாம்குழந்தை பாக்கியம் கிட்ட செய்ய வேண்டியவை.. ஜோதிடம் சொல்வதென்ன? போக்குகின் றோம்அவ மேயிந்தப் பூமி சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித் திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம் அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப் படவும்நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும் அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய் ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே!  பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன்  பாடியவர்கள் – ஆலவாய் அண்ணல் தேவாரப் பாடசாலை மாணவர்கள் விளக்கம்:  திருப்பள்ளியெழுச்சியின் நிறைவுப் பாடல் இது. மானுட வாழ்வின் பெருமிதத்தையும் இறைவனின் பரம கருணையையும் விளக்க முற்படுகிற பாடல். "திருப்பெருந்துறை உறை சிவபெருமானே! சிவபெருமானால் உய்யக் கொள்ளப்பட வேண்டுமானால் பூமியில் பிறக்க வேண்டும்; அவ்வாறு பிறக்காமல், வேறு உலகங்களில் இருந்துகொண்டு, நாள்களை வீணாகப் போக்குகிறோமே என்றெண்ணித் திருமாலும்…

Continue Reading

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 25)

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 25 ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர தரிக்கிலா னாகித் தான்தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய். பாடியவர் – பவ்யா ஹரி விளக்கம்:  கண்ணனைப் போற்றித்துதித்து, பரிசு தருமாறு கோருகிற பாசுரம். "தேவகியின் மகனாகப் பிறந்து, அன்றிரவே யசோதையின் மகனாக வளரச் சென்று, உன்னையே நீ ஒளித்துக் கொண்டபோதும், அதைக்கூடப் பொறுக்காமல், உன்னைக் கொல்லுவதற்காகப் பல வகைகளிலும் தீங்கிழைத்த கம்சனுடைய எண்ணங்களைப் பொய்யாக்கி, அவனுடைய வயிற்று நெருப்பாக நின்ற பெருமானே! உன்னைத் துதித்து யாசிப்பவர்களாக வந்திருக்கிறோம். (எங்கள் எண்ணத்தை ஈடேற்றி) எங்களுக்குப் பரிசு தருவாயென்றால், விரும்பத்தக்க செல்வமும் வீரமும் பெற்றவர்களாவோம். எங்கள் வருத்தமும் தீரும்; நாங்களும் மகிழ்ச்சியடைவோம்’ என்பது நோன்புப் பெண்களின் வேண்டுகோள்.  பாசுரச் சிறப்பு: கஞ்சன் – கம்சன். நெடுமால் – திருமால். திருமாலின் அவதாரமே கண்ணன் என்பதால், இவ்வாறு கூறுவர். வடமதுரையில் பிறந்த கண்ணன், ஆயர்பாடிக்குச் சென்றது எதற்காக? கம்சனிடத்திருந்து தப்பிப்பதற்காக என்பது மேலோட்டமான பார்வை. அப்படியானால், கம்சனுக்குக் கண்ணன் அச்சப்பட்டது போலாகும். உண்மையில், கண்ணன் ஆயர்பாடிக்குச் சென்றது, கம்சனுக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பு. தவறு செய்பவர்கள் தாமே தம்மைத் திருத்திக் கொள்வதற்காகக் கொடுக்கப்படுகிற வாய்ப்பு. வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள கம்சன் தவறியதுதான், அவனுடைய "பொறுக்காத தன்மை’. துஷ்டனைக் கண்டு தூர விலகுவது அச்சத்தால் அன்று; துஷ்டன் தானாகத் திருந்திக் கொள்ளட்டுமே என்னும் கரிசனம். "ஒளித்து’ என்பது "மறைத்து’ என்பதாகும். வசுதேவ வம்சம் என்பதை மறைத்துக்கொண்டு, பெருமான் என்னும் தன்னுடைய பெருமைகளை மறைத்துக்கொண்டு, ஆயர் சிறுவனாகத் தன்னுடைய சுயம்பிரகாசத்தை மறைத்துக் கொண்டு, மாட்டுக் குச்சிக்குள் சங்கு சக்கரப் பஞ்சாயுதங்களை மறைத்துக்கொண்டு… இப்படியாக எல்லாவற்றையும் மறைத்துக்கொண்டு நின்ற கருணை. கம்சன் எண்ணத்தை ஈடழித்த பெருமான், எங்கள் எண்ணத்தை ஈடேற்ற வேண்டும் என்பது கோரிக்கை.  ****** ஸ்ரீமாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி – பாடல் 5சிறுநீரக பாதிப்பின் அறிகுறிகளை ஜாதகம் சுட்டிக்காட்டுமா?    பூதங்கள் தோறும்நின் றாயெனின் அல்லால் போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச் சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா சிந்தனைக் கும்அரி யாயெங்கள் முன்வந்து ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தரு ளாயே!  பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன் பாடியவர்கள் – ஆலவாய் அண்ணல் தேவாரப் பாடசாலை மாணவர்கள் விளக்கம்:  "குளிர்ச்சிமிக்க வயல்களால் சூழப்பெற்ற திருப்பெருந்துறையில் உறையும் பெருமானே! ஐம்பூதங்களுக்குள்ளும் அவற்றின் உள்ளுறையாய் விளங்குபவனே. பிறப்பும் இறப்பும் இல்லாதவனே. நீ இவ்வாறு பஞ்சபூதங்களுக்குள் திகழ்வதையும் பிறப்பிலி, இறப்பிலி என்பதையும் செந்நாப்புலவர்கள், இசைப் பாடல்கள் வாயிலாகவும் தோத்திரங்கள் வாயிலாகவும் போற்றுகின்றனர். உன்னை உணர்ந்த ஞானியர், பாடியும் ஆடியும் உன்னைத் தொழுகின்றனர். இவற்றையெல்லாம் கேட்டுள்ளோம். ஆனால்,…

Continue Reading

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 25)

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 25 ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர தரிக்கிலா னாகித் தான்தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய். பாடியவர் – பவ்யா ஹரி விளக்கம்:  கண்ணனைப் போற்றித்துதித்து, பரிசு தருமாறு கோருகிற பாசுரம். “தேவகியின் மகனாகப் பிறந்து, அன்றிரவே யசோதையின் மகனாக வளரச் சென்று, உன்னையே நீ ஒளித்துக் கொண்டபோதும், அதைக்கூடப் பொறுக்காமல், உன்னைக் கொல்லுவதற்காகப் பல வகைகளிலும் தீங்கிழைத்த கம்சனுடைய எண்ணங்களைப் பொய்யாக்கி, அவனுடைய வயிற்று நெருப்பாக நின்ற பெருமானே! உன்னைத் துதித்து யாசிப்பவர்களாக வந்திருக்கிறோம். (எங்கள் எண்ணத்தை ஈடேற்றி) எங்களுக்குப் பரிசு தருவாயென்றால், விரும்பத்தக்க செல்வமும் வீரமும் பெற்றவர்களாவோம். எங்கள் வருத்தமும் தீரும்; நாங்களும் மகிழ்ச்சியடைவோம்’ என்பது நோன்புப் பெண்களின் வேண்டுகோள்.  பாசுரச் சிறப்பு: கஞ்சன் – கம்சன். நெடுமால் – திருமால். திருமாலின் அவதாரமே கண்ணன் என்பதால், இவ்வாறு கூறுவர். வடமதுரையில் பிறந்த கண்ணன், ஆயர்பாடிக்குச் சென்றது எதற்காக? கம்சனிடத்திருந்து தப்பிப்பதற்காக என்பது மேலோட்டமான பார்வை. அப்படியானால், கம்சனுக்குக் கண்ணன் அச்சப்பட்டது போலாகும். உண்மையில், கண்ணன் ஆயர்பாடிக்குச் சென்றது, கம்சனுக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பு. தவறு செய்பவர்கள் தாமே தம்மைத் திருத்திக் கொள்வதற்காகக் கொடுக்கப்படுகிற வாய்ப்பு. வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள கம்சன் தவறியதுதான், அவனுடைய “பொறுக்காத தன்மை’. துஷ்டனைக் கண்டு தூர விலகுவது அச்சத்தால் அன்று; துஷ்டன் தானாகத் திருந்திக் கொள்ளட்டுமே என்னும் கரிசனம். “ஒளித்து’ என்பது “மறைத்து’ என்பதாகும். வசுதேவ வம்சம் என்பதை மறைத்துக்கொண்டு, பெருமான் என்னும் தன்னுடைய பெருமைகளை மறைத்துக்கொண்டு, ஆயர் சிறுவனாகத் தன்னுடைய சுயம்பிரகாசத்தை மறைத்துக் கொண்டு, மாட்டுக் குச்சிக்குள் சங்கு சக்கரப் பஞ்சாயுதங்களை மறைத்துக்கொண்டு… இப்படியாக எல்லாவற்றையும் மறைத்துக்கொண்டு நின்ற கருணை. கம்சன் எண்ணத்தை ஈடழித்த பெருமான், எங்கள் எண்ணத்தை ஈடேற்ற வேண்டும் என்பது கோரிக்கை.  ****** ஸ்ரீமாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி – பாடல் 5 குரு பெயர்ச்சி – 2021 பொதுப் பலன்கள் பூதங்கள் தோறும்நின் றாயெனின் அல்லால் போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச் சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா சிந்தனைக் கும்அரி யாயெங்கள் முன்வந்து ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தரு ளாயே!  பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன் பாடியவர்கள் – ஆலவாய் அண்ணல் தேவாரப் பாடசாலை மாணவர்கள் விளக்கம்:  “குளிர்ச்சிமிக்க வயல்களால் சூழப்பெற்ற திருப்பெருந்துறையில் உறையும் பெருமானே! ஐம்பூதங்களுக்குள்ளும் அவற்றின் உள்ளுறையாய் விளங்குபவனே. பிறப்பும் இறப்பும் இல்லாதவனே. நீ இவ்வாறு பஞ்சபூதங்களுக்குள் திகழ்வதையும் பிறப்பிலி, இறப்பிலி என்பதையும் செந்நாப்புலவர்கள், இசைப் பாடல்கள் வாயிலாகவும் தோத்திரங்கள் வாயிலாகவும் போற்றுகின்றனர். உன்னை உணர்ந்த ஞானியர், பாடியும் ஆடியும் உன்னைத் தொழுகின்றனர். இவற்றையெல்லாம் கேட்டுள்ளோம்….

Continue Reading

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 24)

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 24 அன்றிவ் வுலகம் அளந்தாய் அடிபோற்றி! சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி! பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி! கன்று குணிலா எறிந்தாய் கழல்போற்றி! குன்று குடையாய் எடுத்தாய் குணம்போற்றி! வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி! என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான் இன்றுயாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய். பாடியவர் – பவ்யா ஹரி விளக்கம்: மேல் பாசுரத்தில் (பா.23) “சிம்மாசனத்தில் வீற்றிரு’ என்று வேண்டியதற்கேற்ப இப்போது கண்ணன் அமர்ந்துவிட்டான். எனவே, போற்றிப் பாடுகிறார்கள். “அன்றொரு அவதாரத்தில், வாமனனாகத் தோன்றித் திரிவிக்ரமனாக வளர்ந்து உலகை அளந்தாய், அந்தத் திருவடிகளுக்குப் போற்றி. இராமாவதாரத்தில் தென் திசை சென்று இலங்கை அரசனை வீழ்த்தினாய், அந்த வலிமைக்குப் போற்றி. சக்கரமாக ஒளித்திருந்த சகடாசுரனை அழித்தாய், உன்னுடைய புகழுக்குப் போற்றி. கன்றாக மறைந்திருந்த வத்ஸôசுரனை எறிதடியாக்கி, கபித்தாசுரன்மீது எறிந்தாய், உன் திருவடிகளுக்குப் போற்றி. கோவர்த்தனம் என்னும் குன்றைக் குடையாகத் தூக்கினாய், உன் குணத்திற்குப் போற்றி. பகைவர்களை வென்றழிக்கும் உன்னுடைய கையிலுள்ள வேலுக்குப் போற்றி. இவ்வாறெல்லாம் பலவாறாக உன்னுடைய வீரத்தையும் திறனையும் புகழ்ந்து பாடிக்கொண்டே உன்னிடம் பரிசு பெற்றுக்கொள்வதற்காக வந்திருக்கிறோம். அருள வேண்டும்’ என்று பாராட்டிப் பணிகிறார்கள்.  பாசுரச் சிறப்பு: அடியார்களின் அன்பு முழுமையாக வெளிப்படுகிற பாசுரம் இது. நோன்பு நோற்று, கண்ணனிடம் பரிசு பெறுவதற்காக வந்திருப்பவர்கள் இப்பெண்கள். இவர்களுக்கு அருள்வதற்காகக் கண்ணன் சிம்மாசனத்தில் வந்து அமர, தாங்கள் கேட்க வேண்டியதை விட்டுவிட்டுக் கண்ணனுக்குப் “போற்றி’ இசைக்கிறார்கள். கண்ணனின் பேரழகைக் கண்டவுடன், தங்களின் கோரிக்கை மறந்து, இந்த அழகுக்குக் கண் திருஷ்டி நேர்ந்துவிடுமே என்னும் கவலை எழுகிறது. ஆகவே, காப்பிடுவதுபோல “போற்றி’ இசைக்கிறார்கள். ஆண்டவன் மீதான அடியார்களின் அளப்பரிய அன்பு இது. கண்ணனைப் போற்றினாலும், வாமனஅவதாரத்தையும் இராமாவதாரத்தையும் பாடுவதில் ஆண்டாளுக்கு உள்ள அவாவினை 3, 17 (வாமனன்), 10, 12 (இராமன்) பாசுரங்களில் காணலாம். வலிமைக்கும் திறமைக்கும் புகழுக்கும் “போற்றி’ சொன்னாலும், திருவடிக்கு இருமுறை கூறுவது (அடி போற்றி, கழல் போற்றி), பக்தியின் பாங்கு. பிறவற்றில் வலிமைக்கும் கழலுக்கும் “போற்றி’ சொல்லிவிட்டு, கோவர்த்தனத்தைத் தூக்கியதற்கு குணத்தைப் போற்றுகிறார்கள். ஆயர்களையும் ஆடுமாடுகளையும் மழையிலிருந்து காப்பதற்காக ஒருவார காலம் கோவர்த்தனத்தைக் கையில் தாங்கியிருந்தது, எம்பெருமானின் செüசீல்ய குணத்தை (நீர்மையாகப் பாயும் கருணையை) அல்லவா காட்டுகிறது!  ஸ்ரீமாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி – பாடல் 4 நவம்பர் மாதம் இந்த ராசிக்காரருக்கு பல நன்மைகள் உண்டாகும்: மாதப் பலன் இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால் தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே! என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே! பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன் பாடியவர்கள் – ஆலவாய் அண்ணல் தேவாரப் பாடசாலை மாணவர்கள் விளக்கம்: அதிகாலைப் பொழுதில், சிவபெருமான் சந்நிதிக்கு அருகே காத்திருப்பவர் யார்…

Continue Reading

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 16)

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 16 நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய கோயில் காப்பானே கொடித்தோன்றும் தோரண வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய் ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னனலே வாய்நேர்ந்தான் தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான் வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா நீ நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய். பாடியவர் – பவ்யா ஹரி விளக்கம்: துயிலெடை நிறைவுற்று, நோன்பின் நோக்கம் தொடங்குகிறது. நோன்பியற்றும் பெண்கள் கண்ணனுடைய இல்லத்தை அடைந்து விட்டார்கள். இது நந்தகோபனுடைய இல்லம் அல்லவா? அதையே கூறுகிறார்கள். வாயிலில் வந்து நின்று, இல்லத்திற்குள் தங்களை அனுமதிக்கும்படி வேண்டுகிறார்கள். “நந்தகோபனுடைய அரண்மனையின் காவலனே, வாயிலின் காவலனே, கதவைத் திறந்து எங்களை உள்ளே அனுமதித்துவிடு. ஆயர் சிறுமிகளான எங்களுக்குப் பரிசு தருவதாக நேற்றே கண்ணன் எங்களிடம் தெரிவித்துவிட்டான். மாயனும் மணிவண்ணனுமான அவனைத் துயிலெழுப்புவதற்காக நாங்கள் தூய்மையானவர்களாக வந்திருக்கிறோம். இல்லை இல்லை என்று உன்னுடைய வாயால் மறுக்காதே. கதவைத் திறந்துவிடு’ என்று விண்ணப்பிக்கிறார்கள்.  பாசுரச் சிறப்பு: முறை தெரிந்தவர்களின் துணைகொண்டு கடவுளை அணுக வேண்டும் என்பதைத் தெரிவிக்கும் பாசுரம். கண்ணனுடைய இல்லம் என்று குறிப்பிடாமல், நந்தகோபன் இல்லம் என்று குறிப்பிடுவதற்குக் காரணம் உண்டு. நந்தகோபன் மகன் என்று அறிமுகம் செய்து கொள்வதுதான் கண்ணனுக்குப் பிடிக்கும். காண்பதற்கு அழகான (மணிக்கதவம்) கதவுகள், நேயக் கதவுகளாகவும் இருக்கின்றன. கண்ணன் தோன்றிய பின்னர், ஆயர்பாடியின் அஃறிணைப் பொருள்களும்கூட அன்பு கொண்டவையாக மாறிவிட்டன. உள்ளுறைப் பொருளில், “தூயோமாய் வந்தோம்’ என்பது கடவுள் திருத்தொண்டைத் தவிர வேறெதிலும் இவர்களுக்கு விருப்பம் இல்லை என்பதைக் காட்டுகிறது. ஆண்டவனை அணுகும் நெறியில், அடியார்களையும் ஆசானையும் அணுகி, அவர்கள் வழியாகக் கடவுளை நெருங்கும் வழிமுறையைக் குறிப்பாகச் சுட்டுகிற பாசுரம்.  அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – பாடல் 16 முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள் என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின்செவ்வாய் தோஷம் என்ன செய்துவிடும்?  மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற் பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம் என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள் தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு முன்னி அவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே என்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய்.  பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன் பாடியவர்கள் : ஆலவாய் அண்ணல் பாடசாலை மாணவர்கள் பாடியவர் – மயிலை சற்குருநாதன் பாடியவர் – பொன் முத்துக்குமரன் விளக்கம்: பாவை நோன்பின் பொதுப் பயனாக மழையை வேண்டுகிற பாடல். திருப்பாவையின் நான்காவது பாடலான “ஆழி மழைக்கண்ணா’ என்னும் பாசுரத்தை ஈண்டு நினைவுகூரலாம். மழை மேகத்தைக் காண்கிறபோது, இப்பெண்களின் சிந்தனையில் அம்மையின் தோற்றம் எழுகிறது. கருநீலமாகப் புலப்படுகிற பெருங்கடலை, அப்படியே சுருக்கி வற்றச் செய்ததுபோல், வானிலுள்ள கருமேகமும் காட்சி தருகிறது. கருமேகத்தைக் கண்டால், கரிய திருமேனி கொண்டவளான அம்பிகை போன்றே தோன்றுகிறது. “எம்மை ஆட்கொள்கிற உடையாளான அம்பிகையின் நுண்ணிடை இருப்பதும் இல்லாததுமாகத் தோன்றுவதுபோல், மேகத்தின் மின்னலும் மிளிர்ந்து மறைகிறது. அடுத்து இடிக்கிற இடியோ, எங்கள் அம்மையின்…

Continue Reading

ஜோதிட ரீதியான பரிகாரங்களை எப்போது செய்ய வேண்டும்?

எல்லா மனிதர்களும் தமது வாழ்வில் எந்த ஒரு பிரச்னையும், கஷ்டமும், கவலையும் இல்லாமல் இருக்கவேண்டும் என்றுதான் ஏங்குகிறோம். ஆனால், எதிர்பாராத விதமாக நாம் எவ்வளவு முன்னெச்சரிக்கையோடும், ஒழுக்கத்தோடும் காரியம் ஆற்றினாலும் முடிவில் சில போது, சிலருக்கு எப்போதும் தவறாகவே நடந்து முடிந்து விடுகிறது. காரணம் தெரிவதில்லை. இதிலிருந்து எல்லா வயதினரும், ஏன் அனுபவம் பெற்றிருந்தும் தவறுகள் நடைபெறுவதைத் தடுத்து நிறுத்த முடிவதில்லை. நமது தகுதிக்கும், பண்புக்கும் மீறி நடைபெறும் அந்த செயல்கள் எதனால் என்பதனை அனைவரும் மனதைக் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். இதற்குதான் ஜோதிடம் ஒரு நல்ல அறிவுரையைத் தருகிறது என்றால் அது மிகை ஆகாது. ஆம்! சிலர் ஜோதிடம் நன்கு அறிந்து, அந்த மாயவித்தையிலிருக்கும் செய்தியை நம்பிக்கையோடு பின்பற்றி சரியான, மகிழ்வான வாழ்வினை அடைகின்றனர். சிலர் நினைக்கக்கூடும், கோயிலில் மணிக்கணக்கில் அமர்ந்து பூஜை செய்வதும், தம்மிடம் உள்ள பணத்தை வாரி இறைப்பதால், பிரச்னைகள் தீரும் என்று நினைத்துச் செயல்பட்ட பின்னரும், அதே போல் இருப்பதால் -அந்த நிலையே நீடிப்பதால், மனம் தளர்வதை காண முடிகிறது. முதலில் தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால், பிரச்னை என்பது நமது வாழ்வோடு இணைந்திருப்பது தான், அதனை எவ்வாறு களைவது  என்பதுதான் நாம் எடுக்கவேண்டிய தீர்வாகும். எப்படி நெல்லின் மேல் தோலை (உமி) நீக்க முதலில் கதிர்களை அடித்து நெல்மணியாக்கி பின்னர் அதனை உரலில் லேசாக இடித்து பின்னர் முறத்தில் இட்டு அதனை காற்று வரும்போது அதற்கு எதிர்த்திசையில் புடைத்தால், உமி நீங்கி அரிசி மட்டும் கிடைக்குமோ, அதுபோலவே நமது பிரச்னைகளை எவ்வாறு, எப்போது நீக்கவேண்டும் என்பதைப் பற்றியே இக்கட்டுரை. (தற்போது அனைத்திற்கும் இயந்திரங்கள் வந்து விட்டதால், எளிமையாக நெல்லிலிருந்து உமியை நீக்கி அரிசி பெறுவது போன்று, சில எளிமைபடுத்தும் வழிகள் பல வந்து விட்டது, உண்மை தான்.) படிக்க: சனிப்பெயர்ச்சி யாருக்கு கைகொடுக்கும்! என்ன சொல்கிறார் ஜோதிடர்? ஜோதிடத்தை பொறுத்தவரை அனைத்துமே நேரம் / காலம். இதனை முதலில் புரிந்துகொள்ளுதல் அவசியம். ஒருவர் பரிகாரம் செய்யவேண்டுமானால், அதனை செய்யும் காலம் அறிதல் முதன்மையானது. நிச்சயம் அது தேய்பிறையாக இருத்தல் அவசியம். மேலும் பாக்கியாதிபதி எனும் 9ஆம் அதிபதியின் தசை அல்லது புத்தியாக இருத்தல் வேண்டும். அல்லது சிலருக்கு யோகாதிபதியாக வரும் அதிபதியின் தசை அல்லது  புத்தியாக இருக்கவேண்டும். அவ்வாறு இருந்தாலும் அந்த கிரகங்கள், அவயோகி நட்சத்திர காலில் நிற்காமல் இருந்திடல் வேண்டும். இவை ஒரு சிலவே, நிச்சயம் ஜோதிடரை நாடி பலன் பெறுவது அவசியம் ஆகும். பொதுவாக ஒரு எண்ணம் அனைவரின் மனதிலும் இருக்கிறது, ஒரு ஜோதிடர் சொன்னால், எல்லோருக்கும் நடந்து விடுகிறது ஆனால் எனக்கு மட்டும் ஏனோ சரியாக நடப்பதில்லை என கூறுவர். இதனை காரணம் காட்டி பல ஜோதிடரை அணுகியும் விடிவு காண முடியாமல் தவிப்போரும் உண்டு. ஜோதிடர் கூறிய சரியான நேரத்தை, சரியான முறைப்படி செய்தால், நிச்சயம் பலன்கிட்டும். ஐயம் வேண்டாம். முதலில் ஜோதிடத்திலும், ஜோதிடர் மீதும், நம் பிரச்னை…

Continue Reading

பகல் பத்து 10-ம் திருநாள்: மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள்

வைகுந்த ஏகாதசி பகல் பத்து 10-ஆம் திருநாளான் வியாழக்கிழமை மோகினி அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்.   ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் வைகுந்த ஏகாதசி பெருவிழாவின் பகல்பத்து 10 ஆம் நாளான வியாழக்கிழமை காலை நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். இந்த ராசிக்காரருக்கு திறமைக்கேற்ற வேலை கிடைக்கும்: இந்த வாரப் பலன்கள் விழாவையொட்டி காலை 6 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் புறப்பட்டு காலை 7 மணிக்கு பகல்பத்து மண்டபமான அா்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினாா்.  அங்கு அலங்காரம், அமுது செய்யத் திரையிடப்பட்டு காலை 8 மணி முதல் பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று முகக் கவசம், சமூக இடைவெளியுடன் நம்பெருமாளைத் தரிசித்து வருகின்றனர். இரவு 8 மணிக்கு மேல் பக்தா்களுக்கு அனுமதியில்லை.  வைகுந்த ஏகாதசி பகல்பத்து 10-ஆம் நாளான வியாழக்கிழமை முத்துக்குறி அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள். நன்றி Hindu மாா்கழி வழிபாடு-2: திருப்பாவை,  திருவெம்பாவை (பாசுரம் 2)

முத்து மாரியம்மன் கோயில் திருவிழா

உத்தரமேரூர் வட்டம்,மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 14)திருப்புலிவனத்தில் முத்து மாரியம்மன் கோயில் 3-ஆம் ஆண்டு திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நன்றி Hindu வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கும் முறையும், பலன்களும்!

ஆடியில் எந்த அம்மனை வணங்கினால் பிரச்னைகள் தீரும்?

தமிழ் மாதங்கள்ராகு – கேது பெயர்ச்சி பலன்கள்: கடகம்ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்புகள் உள்ளன. எனினும் இவை அனைத்தைக் நன்றி Hindu உங்கள் ராசிக்கு இந்த டிசம்பர் மாதம் எப்படி இருக்கும்?

விநாயகர் சதுர்த்தி பூஜையில் அவசியம் இடம் பெறவேண்டியவை

உலகத்தின் தோற்றத்திற்கும், ஒடுக்கத்துக்கும் “ஓம்’ என்ற பிரணவ மந்திரமே காரணமாகும். அப்பேர்பட்ட பிரணவ மந்திர சொரூபமாகத் திகழ்பவர் விநாயகப்பெருமான். முழுமுதற் கடவுளான அவரை எண்ணிச் செய்யப்படும் எந்த செயலும் உலக நன்மையையும், ஆன்மீக பலத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கவல்லது. இந்த மகாகணபதியை மூலப்பரம் பொருளாகவே பாவித்து வழிபடுவது என்பது வேதகாலத்தில் இருந்தே தொடர்ந்து வரும் மரபு. ஆதிசங்கரர் வகுத்த ஷண்மத வழிபாட்டு முறைகளில் “காணாபத்தியம்’ எனப்படும் கணபதி வழிபாடே முதன்மை வகிக்கின்றது. விநாயகர் தோன்றிய வரலாற்றினையும், நரமுக கணபதியான அவர் கஜமுக கணபதியான வரலாற்றினையும் புராணங்கள் பல்வேறுவிதமாக விவரிக்கின்றன. சுருங்கக்கூறின், அற்புதங்கள் பல நிறைந்தது அவரது அவதாரம். ஆதியிலும் அந்தத்திலும் விளங்கியதால் ஆதியந்தமற்ற பரபிரம்ஹ ஸ்வரூபமாக இவரை, “ஜ்யேஷ்டராஜன்’ (மூத்தவர்) என்று வேதங்கள் அழைக்கின்றன. கணங்களுக்கெல்லாம் தலைவரானதால் கணபதி எனவும் மேலானதலைவர் என்பதால் விநாயகர் எனவும், தடைகளை நீக்குவதால் விக்னேஸ்வரர் எனவும் பல பெயர்கள் உடையவரானார். சிவபெருமானுடைய பிள்ளையானதால் மரியாதையாகப் பிள்ளையார் என்று கூறுகின்றோம். விநாயகரின் திரு உருவத்தில் பல தெய்வங்கள் உறைகின்றனர். அவரது நாபி பிரம்ம சொரூபத்தையும், முகம் விஷ்ணு சொரூபத்தையும், இடப்பாகம் சக்தி வடிவையும், வலப்பாகம் சூரியனையும், முக்கண்கள் சிவசொரூபத்தையும் குறிக்கின்றன. ஜீவனுக்கும், பிரம்மத்திற்கும் உள்ள ஒற்றுமையை உணர்த்தும் விதமாக மனித வடிவத்தில் ஜீவாத்மாவையும், கஜ வடிவத்தில் பிரம்ம சுவரூபத்தையும் இணைத்துக்கொண்டு அற்புதமாக அவர் காட்சி தருகின்றார். ஒளவைப்பிராட்டியார் தனது விநாயகர் அகவலில் “தத்துவ நிலையைத் தந்து எனையாண்ட வித்தக விநாயக விரைகழல் சரணே!’ என அருளிச்செய்ததை இத்தருணத்தில் நினைவிற் கொள்வது சாலச்சிறந்தது. கணபதியை சகலதேவதைகளும் ஆராதித்து தங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொண்டுள்ளனர்  என இதிகாச புராணங்கள் கூறுகின்றன. முப்புரங்களைப் பொசுக்கப்புறப்பட்ட பரமேஸ்வரனுடைய தேரின் அச்சு முறிந்தபோது விநாயகர் துஷ்டி, புஷ்டி என்ற தேவதைகளை வைத்து தேர் சீர் குலைந்து போகாமல் செப்பனிட்டுக் கொடுத்தார். “அச்சது பொடிசெய்த அதிதீரா’ என்பார் அருணகிரியார். பண்டாசுரனுடைய கோட்டையைத் தகர்த்து எரித்து அவன் வதத்திற்கு ஸ்ரீலலிதாம்பிகைக்கு உதவி புரிந்தவர் விக்னேஸ்வரர். திருமால் கண்ணனாக அவதரித்த தருணத்தில், கிடைப்பதற்கரிய சியமந்தக மணியை சத்ராஜித் என்ற மன்னனைக் கொன்று அபகரித்தார் என்ற அவப்பெயர் அவருக்கு ஏற்பட்டது. நாரதர் அறிவுறுத்தியபடி கிருஷ்ணரும் விரதமிருந்து விநாயகப்பெருமானை சதுர்த்தி திதியில் பூஜித்து தனக்கு ஏற்பட்ட சங்கடம் நீங்கப்பெற்றார். முருகனுக்கு வள்ளியைத் திருமணம் புரிவதில் உறுதுணையாக இருந்ததும் விநாயகப் பெருமானே. சந்திரன் தனக்கு ஏற்பட்ட களங்கத்தை விநாயகர் அருளால் நீங்கப்பெற்றான். அகத்தியப்பெருமானின் கமண்டலத்தில் அடங்கியிருந்த காவிரியை காகத்தின் வடிவில் தென்னாட்டிற்கு அளித்தவர் கணநாதர். இதன் மூலம் அகத்தியருக்கும் அருள்புரிந்தார். தனக்கு அளிக்கப்பட்ட இட்சுவாகு குல தனமான ஸ்ரீரங்கநாதரை ரங்கவிமானத்துடன் விபீஷணன் இலங்கைக்கு எடுத்து செல்லுங்கால், தனது திருவிளையாடல் மூலம் ஸ்ரீரங்கத்தில் நிலைப்படுத்தி அருளியதும் விநாயகரே. பக்தி நெறியில் பிள்ளையாரின் அருளைப்பெற்ற மகான்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது. “அற்புதம் நின்ற கற்பகக் களிறே’ என்று பாடிய ஒளவையைத் தன் துதிக்கையால் கைலாயத்தில் சேர்த்தார். திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி, விநாயகரின் அருளால் தேவாரங்களை மீட்டெடுத்தார். வேதங்களை வகைப்படுத்தி…

Continue Reading

பகல் பத்து 10-ம் திருநாள்: மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் வைகுந்த ஏகாதசி பெருவிழாவின் பகல்பத்து 10 ஆம் நாளான வியாழக்கிழமை காலை நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். விழாவையொட்டி காலை 6 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் புறப்பட்டு காலை 7 மணிக்கு பகல்பத்து மண்டபமான அா்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினாா்.  அங்கு அலங்காரம், அமுது செய்யத் திரையிடப்பட்டு காலை 8 மணி முதல் பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று முகக் கவசம், சமூக இடைவெளியுடன் நம்பெருமாளைத் தரிசித்து வருகின்றனர். இரவு 8 மணிக்கு மேல் பக்தா்களுக்கு அனுமதியில்லை. ஸ்ரீரங்கத்தில் சிறப்பு வாய்ந்த வைகுந்த ஏகாதசி திருவிழா வைகுந்த ஏகாதசி பகல்பத்து 10-ஆம் நாளான வியாழக்கிழமை முத்துக்குறி அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள். நன்றி Hindu மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 21)