செவ்வாய் தோஷம் என்ன செய்துவிடும்? 

  செவ்வாய் என்கிற மங்களகாரகன் ஜாதகத்தில் மிக முக்கியமான கிரகம் ஆவார். செவ்வாய் கேந்திர திரிக்கோணத்தில் இருந்தால் தொழில், நிலம் மற்றும் அபரிமிதமான சொத்து, உடன்  பிறப்புகளால் உதவி, வீர தீர செயலுக்கு முக்கிய காரகனாக இருப்பார். அதேசமயம் மறுபக்கமாக ஒரு சில பாவங்களில் (கட்டங்களில்) தீமை என்ற நிலையையும் உருவாக்கும் அவை தோஷத்தையும் ஏற்படுத்துவார். களத்திர பாவங்கள் தொடர்புடன்  செவ்வாய் ஒருவருக்கு  இருந்தால் கோபம், ஆக்ரோஷம், அதீத உணர்ச்சியில் வேகமுடன் இருப்பார்கள். அதனால் தான் திருமண பொருத்தம் பார்க்கும்பொழுது ஒருவருக்கு ஒருவர் ஈடுகொடுக்கும் அளவுக்கு தோஷம் உள்ள இருவருக்கும் திருமணம் செய்கிறார்கள். ஆனாலும் அது ஒரு சில நேரங்களில் தவறாக முடிகிறது.  செவ்வாய் என்பது ரத்த சம்பந்தமான காரக கிரகம். அறிவியல் ரீதியாக செவ்வாய் தோஷம் இருப்பவருக்கு ரத்தத்தில் Rh factor நெகட்டிவாக இருக்கலாம். இது குழந்தை பிறப்புக்கு பிரச்னையை தரவல்லது. வீட்டில் கல்யாணம் என்ற பேச்சு பேசியவுடன் ஆண் பெண் இருவருக்கும் திருமண பொருத்தம் மற்றும் தோஷங்கள் உள்ளதா எனப் பார்ப்போம். தோஷங்களில் செவ்வாய் தோஷத்தை நினைத்து ஒருவித பயம் பெற்றோர்களுக்கு இருந்து கொண்டே இருக்கும். ஜாதக கட்டத்தை எடுத்தவுடன் அனைவர் கண்களிலும் படுவது செவ்வாய் தோஷம் தான். லக்கினத்திலிருந்து செவ்வாய் 2,4,7,8,12ல் இருந்தால் தோஷத்தை தருவார். அதேபோல் அடுத்தபடியான தோஷத்தை சந்திரன், சுக்கிரன்  இருக்கும் இடத்திலிருந்து செவ்வாய் 2,4,7,8,12ல் இருந்தால் குறைத்து தருவார்.  எடுத்துக்காட்டாக 2ல் செவ்வாய் இருந்தால் பேச்சில் விஷம் கக்கும் சொல் இருக்கும். இதனால் திருமண வாழ்க்கை சுகம் குறையும். ஏழு என்பது எதிர் பாலினத்தை ஆக்ரோஷத்தைக் குறிப்பது. எட்டு என்பது ஆயுளையும், 12ம் பாவம் அயணம் /மெத்தை சுகத்தை கெடுக்கும். அதில் முக்கிய பாவமான 7,8,12ல் இருந்தால் திருமண முறிவு மற்றும் உடல் பிரச்னை ஏற்படுத்தும். இவைகளே தோஷம் என்று கூறுகிறோம். திருமண பொருத்தத்தை விட மன பொருத்தம் மிக முக்கிய பொருத்தம் ஆகும். தோஷம் இருந்தாலும் இதன் அடிப்படையில் பலபேர் திருமணம் முடித்து அவர்கள் ஓரளவு சீரான வாழ்க்கையை நடத்துகிறார்கள். பெண்கள் ஜாதகத்தில் லக்கினம் அல்லது சந்திர லக்னத்தில் பலம் எது என்று பார்த்து அதற்கு ஏற்ற ராசியை கொண்டு தோஷத்தைக் கணிக்க வேண்டும். செவ்வாய் தோஷம் என்ன செய்துவிடும் எப்பொழுது பிரச்சனை கொடுக்கும் என்று பார்த்தால், களத்திர சம்பந்தம் கொண்ட பாவத்தோடு தொடர்பு கொண்டால் தாமத திருமணம், குடும்ப உறவு பிரிவு, நோய், குழந்தைப் பேற்றில் சிக்கல் ஏற்படுத்தும். எடுத்துக்காட்டாக திருமணம் ஆன ஒருவர் அவர் சுய ஜாதகத்தில் செவ்வாய் களத்திரம் மற்றும் குடும்ப ஸ்தானத்தில் இருந்து, செவ்வாய் தசை ஏற்பட்டால் களத்திர பிரிவு நிகழும். அதுவே அந்த நபருக்கு செவ்வாய் தசை மற்றும் புத்தி பல வருடங்களுக்குப் பின் வந்தால், அவருக்கு தோஷமே இருந்தாலும் ஒன்றும் செய்யாது. படிக்க: சூரியன் – சந்திரன் சேர்க்கை நம்மை என்ன செய்துவிடும்? ஜோதிட சூட்சுமங்கள் தோஷம் உள்ளவர்கள் -செவ்வாய்…

Continue Reading

ராகு -​ ‌கே‌து பெய‌ர்‌ச்​சி​‌ பல‌ன்​க‌ள்!

  இந்த பிலவ வருஷம் உத்தராயணம் சிசிர ருது பங்குனி மாதம் 3-ஆம் தேதி (17.03.2022) சுக்ல பட்சம் (வளர்பிறை) சதுர்த்தசி திதி, வியாழக்கிழமை, பூரம் நட்சத்திரம் இரண்டாம் பாதத்தில், சூல நாமயோகம் பத்திரை கரணம், சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில், உதயாதி ஒன்றரை நாழிகைக்குள் காலை 06.37 மணி அளவில் குரு பகவானின் ஹோரையில் ராகு-கேது பகவான்கள் முறையே ரிஷப, விருச்சிக ராசிகளிலிருந்து மேஷம், துலாம் ராசிகளுக்குப் பெயர்ச்சி  ஆகிறார்கள்.  ராகு பகவான், கிருத்திகை நட்சத்திரம் ஒன்றாம் பாதத்தில் 11.07.2022 வரை சஞ்சரித்துவிட்டு, 12.07.2022 அன்று மாலை 5.30 மணி அளவில் பரணி நட்சத்திரம் நான்காம் பாதம் இறுதியில் சஞ்சரிக்கத் தொடங்குகிறார். இந்த காலகட்டத்தில் கேது பகவான் விசாகம் நட்சத்திரம் இரண்டாம் பாதம் இறுதியில் சஞ்சரிப்பார். 06.02.2023 வரை பரணி நட்சத்திரம் ஒன்றாம் பாதம் தொடக்கத்தில் சஞ்சரித்து விட்டு, 07.02.2023 அன்று விடியற்காலை 12.45 மணி அளவில் அசுவினி நட்சத்திரம் நான்காம் பாதம் இறுதியில் சஞ்சரிக்கத் தொடங்குகிறார். இந்த காலகட்டத்தில் கேது பகவான் சுவாதி நட்சத்திரம் இரண்டாம் பாதம் இறுதியில் சஞ்சரிப்பார். 28.11.2023 வரை அசுவினி நட்சத்திரம் ஒன்றாம் பாதம் தொடக்கத்தில் சஞ்சரித்துவிட்டு, மேஷ ராசியை விட்டு மீன ராசிக்கு 29.11.2023 அன்று விடியற்காலை 02.50 மணிக்கு ராகு-கேது பகவான்கள் முறையே மேஷம், துலாம் ராசிகளை விட்டு முறையே மீனம், கன்னி ராசிகளுக்குப் பெயர்ச்சி ஆகிறார்கள். இந்த காலகட்டத்தில் கேது பகவான் சித்திரை நட்சத்திரம் மூன்றாம் பாதம் தொடக்கத்தில் சஞ்சரித்துவிட்டு, சித்திரை நட்சத்திரம் இரண்டாம் பாதம் இறுதியில் கன்னி ராசியில் சஞ்சரிக்கத் தொடங்குவார். இந்த ராகு, கேது பெயர்ச்சி பலன்கள் மேற்கூறிய நட்சத்திர சஞ்சாரங்களின் அடிப்படையில் மூன்றாகப் பிரிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளது. ராகு, கேது பெயர்ச்சி காலம் சராசரியாக 18 மாதங்கள் என்பதை அனைவரும் அறிந்ததே. ஒரு பாத சஞ்சாரத்திற்கு சராசரியாக இரண்டு மாதங்கள் என்று வைத்துக்கொண்டால் ஒன்பது பாதங்களை முழுமையாக கடக்க 18 மாதங்கள் (2 * 9 = 18 மாதங்கள்) ஆகும். இதில் சில நேரங்களில் ராகு, கேது பகவான்கள் ஒரே நட்சத்திரத்தில் ஸ்தம்பித்து நிற்பார்கள். இதனால் கார்த்திகை ஒன்றாம் பாதத்தைக் கடக்க நான்கு மாதங்கள் எடுத்துக் கொண்டாலும், மொத்த ராசியை 18 மாதங்கள் 10 நாள்களில் கடந்து விடுகிறார்கள். ராகு, கேது பெயர்ச்சி சக்கரத்தில் மீன லக்னம், சிம்ம ராசி, பூரம் நட்சத்திரம் இரண்டாம் பாதம். லக்னம், தொழில் ஸ்தானமான பத்தாம் வீடு ஆகிய இரண்டு வீடுகளுக்கும் அதிபதி குரு பகவானாவார்.  எனவே செய்யும் தொழிலில் எப்போதும் கண்ணும் கருத்துமாகவே இருந்து வருவார்கள். தாங்கள் முன்னேறுவதில் அதிக அக்கறை காட்டி, எப்படி நடந்துகொண்டால் முன்னேற முடியும் என்ற நுணுக்கத்தை இவர்கள் நன்கு உணர்ந்தவர்களாவார்கள். மரியாதை கொடுக்க வேண்டிய இடத்தில் மரியாதையுடன் நடந்து கொண்டால், எதிர் பாகத்திலும் இவர்களுக்கு தக்க மரியாதை கிடைக்கும். குரு பகவான் சாத்வீக குணமுடையவராதலால், இனிமையாகப் பேசி தங்களுக்கு…

Continue Reading

இந்த ராசிக்காரருக்கு திறமைக்கேற்ற வேலை கிடைக்கும்: இந்த வாரப் பலன்கள்

ஆகஸ்ட் 22 முதல் 28ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்துக்கு ஜோதிடர் கே.சி.எஸ். ஐயர் கணித்துக் கொடுத்திருக்கும் வாரப்பலன்கள். மேஷம்  22.10.2021 முதல் 28.10.2021 வரை (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய) திறமைக்குத் தகுந்த வேலைகளைச் செய்வீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உடலாரோக்கியம் சற்று கவனிக்க வேண்டியிருக்கும். தாமதம் செய்யாமல் மருத்துவரிடம் ஆலோசனை பெறவேண்டும்.   உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து நடந்து கொண்டால் மேலும் நன்மை அடையலாம். இட மாற்றமும், ஊதிய உயர்வும் கிடைக்கும். வியாபாரிகள் யாருக்கும் கடன் கொடுப்பதோ ஜாமீன் கையொப்பமிடுவதோ கூடாது. பண வரவு சீராக இருப்பினும் ஜாக்கிரதையாகக் கையாளவும். விவசாயிகள் சந்தையில் போட்டிகளைச் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். மகசூல் லாபம் அதிகமாகும்.  அரசியல்வாதிகள் பயணங்களால் நன்மை அடைவீர்கள். மேலிடத்திலிருந்து பாராட்டுகள் கிடைத்து மகிழ்ச்சியடைவீர்கள். கலைத்துறையினர் புதுப்புது ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். சக கலைஞர்கள் தாமாக முன் வந்து உதவுவார்கள். பெண்மணிகள் எவரிடமும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவமணிகளின் கோரிக்கைகளை ஆசிரியர்களும், பெற்றோர்களும் நிறைவேற்றுவார்கள். நீண்ட காலத் திட்டங்கள் தீட்ட இது உகந்த காலமாகும். பரிகாரம்: விநாயகரை வழிபட்டு வரவும்.  அனுகூலமான தினங்கள்: 22, 23.  சந்திராஷ்டமம்: இல்லை. ••• ரிஷபம் 22.10.2021 முதல் 28.10.2021 வரை (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) இயந்திரப் பணிகள் லாபம் தரும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். உடல் நிலை மிகவும் பாதிப்புக்குள்ளாகி, பின்பு சரியாகி விடும். தகுந்த நேரத்தில் மருத்துவ வசதிகளைப் பெறுவீர்கள்  உத்தியோகஸ்தர்களுக்கு நல்லதொரு வாய்ப்பு கூடி வரும். எதிர்பார்த்த அரசுப் பணிகள் நிறைவேறும். உடல் நலனில் கவனம் தேவை. வியாபாரிகளுக்கு தொலை தூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். தொழில் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்பட்டு விலகும். விவசாயிகளின் பொருளாதார நிலை உயரும். கூட்டுத் தொழிலில் அபிவிருத்தி காணலாம்.   அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவி வரும். பொருள் வரவு, வழக்கில் அனுகூலமான தீர்ப்பு கிடைக்கும். கலைத்துறையினருக்கு சுபிட்சம் ஏற்படும். பிறரிடம் சுமூகமாகப் பேசிப் பழகுவது அவசியமாகும். பெண்மணிகளுக்கு முன்னேற்றம் தடைபடும். உடல் நலனில் மிகுந்த அக்கறை தேவை. அலங்காரப் பொருள்களின் சேர்க்கை நிகழும். மாணவமணிகளின் திறமை பளிச்சிடும். சக மாணவர்களை நம்பி எந்த விஷயத்தையும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். அயல்நாட்டுத் தொடர்பு பயன் தரும். பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபட்டு வரவும்.  அனுகூலமான தினங்கள்: 22, 24.  சந்திராஷ்டமம்: இல்லை. •••• மிதுனம் 22.10.2021 முதல் 28.10.2021 வரை (மிருகசீரிஷம் 3-ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய) விவேகத்துடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழ வாய்ப்பு கூடி வரும். வேலையில்லாதவர்களுக்கு, நல்லதொரு வாய்ப்பு கிட்டும். உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு முன்னேற்றமான சூழல் நிலவும். ஊதிய உயர்வு, விரும்பிய இடமாற்றம் போன்றவை கிடைத்து மகிழ்ச்சியில் திளைப்பீர்கள். வியாபாரிகள் தங்கள் நோக்கம் நிறைவேறப்…

Continue Reading

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 9)

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 9 தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும் மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய் மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள் தான் ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ? ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ? மாமாயன் மாதவன் வைகுந்த னென்றென்று நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய். பாடியவர் பவ்யா ஹரி விளக்கம்: புறத்தே நின்று நோக்க, உள்ளே உறங்குபவளின் மாளிகையும் அதன் அழகுகளும் புலப்படுகின்றன. தூய்மையான மாணிக்கங்கள் பதித்துக் கட்டப்பெற்ற மாடம்; இந்த மாடத்தில் தீபம் ஏற்றி வைக்கப்பட்டிருக்க, தீப ஒளியும் வாசனாதி திரவிய தூபங்களின் மணமும் சூழ, உள்ளே ஒரு தோழி உறங்குகிறாள். அவளை உறவு சொல்லி “மாமான் மகளே, கதவைத் திற’ என்று அழைக்கிறார்கள்.  அவள் எழவில்லை என்னும் நிலையில் மாமன் மனைவியை விளிக்கிறார்கள். “மாமி, உன் மகளை எழுப்பமாட்டாயா? அவளென்ன ஊமையா(எங்களுக்கு மறுமொழி கூறவில்லை)? செவிடா (எங்கள் ஒலி கேட்கவில்லையோ)? சோம்பேறியா? உறக்கம் என்னும் மந்திரத்தின் வசப்பட்டாளா? கண்ணன் திருநாமங்கள் பலவற்றைப் பாடுகிறோம். கீழினும் கீழான எம்மோடு கலந்து பழக வந்திருப்பதால், “மாமாயன்’ என்கிறோம்; லட்சுமி நாயகன் என்பதால் “மாதவன்’ (மா=லட்சுமி) என்கிறோம்; பரமபத நாதன் என்பதால் “வைகுந்தன்’ என்கிறோம்; பற்பல பெயர்கள் கூறியும் அவள் எழவில்லையே’ என்று அங்கலாய்க்கிறார்கள்.  பாசுரச் சிறப்பு:  “இதோ, இதோ’ என்று சொன்னாலும், சோம்பலிலும் சுய மயக்கத்திலும் ஆழ்ந்து செயல்படாமல் இருக்கும் தன்மையை இப்பாசுரம் காட்டுகிறது. “மாமான் மகள்’ என்றும் “மாமி’ என்றும் கூறுவது, ஒருவகையானஉறவுத் தொடர்பைக் காட்டுவதாகும்; எம்பெருமான் அடியார்கள் யாவரும் உறவினர்களே என்பதாம். ஸ்வாபதேசத்தில், திருமழிசையாழ்வாரை இப்பாசுரம் போற்றுகிறது.  அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – பாடல் 9 முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே!பகல்பத்து 4 ஆம் நாள்: செளரி கொண்டையில் நம்பெருமாள்! பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும்அப் பெற்றியனே! உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம் உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம் அன்னவரே எங்கணவர் ஆவார் அவர்உகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம் இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல் என்ன குறையும் இலோமேலோ ரெம்பாவாய்.  பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன் பாடியவர் – மயிலை சற்குருநாதன் பாடியவர் – சுந்தர் ஓதுவார்  விளக்கம்:   உள்ளே இருப்பவர்களும் புறத்தே நிற்பவர்களும் ஒன்றிணைந்து இறைவனைப் போற்றுவதாக அமைகிற பாடல் இது. “முன்னருள்ள பழைய பொருட்களிலெல்லாம் மிகப் பழைமையான பொருளே! இனி வரவிருக்கும் புதுமைகளுக்கெல்லாம் புதியதான தன்மை கொண்டவனே! உன்னை ஆண்டவனாகப் பெற்ற உன்னுடைய ஆழ்ந்த அடியார்களாகிய நாங்கள், உன்னுடைய அடியார்களின் திருவடிகளை வணங்குவோம்; அவருக்கே பாங்காக அடிமை செய்வோம்; அப்படிப்பட்டவரே எங்களின் கணவர்களாக ஆகும்படி அருள்வாயாக. அவர்கள் இடும் கட்டளைகளை உகப்போடு செயல்படுத்துவோம். எங்கள் பெருமானே, இவ்வகையில் எமக்கு நீ அருள்வாயேயானால், எந்தக் குறையும் இல்லாதவர் ஆவோம்’ என்றே வழிபடுகிறார்கள்.  பாடல் சிறப்பு: பழைமையைக் குறிப்பிடும்போது “பொருள்’ என்கிறார்கள். சிந்தனையானது, செறிவடைந்து, கருத்தாக்கம் பெற்று,…

Continue Reading

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 6)

  ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 6 புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில் வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ? பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் பாடியவர் பவ்யா ஹரி விளக்கம்: இந்தப் பாசுரத்திலிருந்து இனி வரும் பத்துப் பாசுரங்கள், முன்னர் எழும்பிவந்த பெண்கள், உள்ளே உறங்கும் பிற பெண்களை எழுப்புவதாக அமைந்த துயிலெடைப் பாசுரங்களாகும்.  “பறவைகள் ஒலியெழுப்பத் தொடங்கிவிட்டன. திருக்கோயில் கருடன் சந்நிதிக்கு அருகே நிற்கும் கோயில் துறையார், சங்கநாதம் எழுப்புகின்றனர். பெண் வடிவில் வந்த பேயளான பூதகியின் பாலருந்தி உயிரை உண்டவனும், வண்டிச் சக்கரத்தின் வடிவில் வந்த சகடாசுரனைக் காலால் உதைத்து அழித்தவனும், பாற்கடலில் ஆதிசேஷன் மீது துயில் கொள்பவனும், பிரபஞ்சத்தின் முழு முதல் ஆதிகாரணம் ஆனவனுமானகண்ணனைத் தங்களின் உள்ளத்தில் கொலு வைத்திருக்கும் முனிவர்களும் யோகிகளும், மெல்லத் துயிலெழுந்து அவன் திருநாமத்தைக் கூறுகின்றனர். இத்தனை ஒலிகளும் உன் செவியில் புக, கண்ணனை நினைந்து எழுந்திரு சின்னஞ் சிறியவளே’ என்றழைக்கின்றனர்.  பாசுரச் சிறப்பு: உள்ளத்திலிருக்கும் எம்பெருமானுக்கு எவ்விதத் துன்பமும் வந்துவிடக் கூடாது என்பதற்காக, முனிவர்களும் யோகிகளும் மெல்ல எழுவது, அவர்கள் அன்பின் ஆழம் எனலாம். துயிலெடைப் பாசுரங்கள் ஸ்வாபதேசம் கூறுகிற வழக்கம் உண்டு. அதாவது, மேலோட்டமாகக் காண்கையில், ஏதோவொரு பெண்ணை எழுப்புவதுபோல் தோன்றினாலும், உள்ளுறையாகத் தன்னைத் தவிர பிற ஆழ்வார்கள் (மதுரகவியார் நம்மாழ்வாரில் அடக்கம்) பதின்மரை ஆண்டாள் போற்றுவதாக ஐதீகம். இம்முறைப்படி, தன்னுடைய திருத்தந்தையாரான பெரியாழ்வாரை இப்பாசுரத்தில் ஆண்டாள் குறிப்பதாகக் கணக்கு.  அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – பாடல் 6 மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 20) மானேநீ நென்னலை நாளைவந் துங்களை நானே எழுப்புவன் என்றலும் நாணாமே போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ? வானே நிலனே பிறவே அறிவரியான் தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும் வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய் ஊனே உருகாய் உனக்கே உறும்எமக்கும் ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோ ரெம்பாவாய்!  பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன் பாடியவர் – மயிலை சற்குருநாதன் பாடியவர் – சுந்தர் ஓதுவார் விளக்கம்: முந்தைய நாள், இப்பெண்களெல்லாம் ஒன்றுகூடிப் பேசிக் கொண்டிருந்தபோது, “நாளை நான் விரைவாக எழுந்துவந்து உங்களை எழுப்புகிறேன்’ என்று கூறியவள் உள்ளே உறங்குகிறாள். “மானே, நேற்று நீ சொன்ன சொல் எங்கே போனது? உனக்கு இன்னமும் விடியவில்லையோ? விண்ணவர், மண்ணவர், பிற உலகினர் என்று எவராலும் அறிய முடியாதவனும், வலிய வந்து நம்மை ஆட்கொண்டு அருளுபவனுமான இறைவனுடைய அழகான வீரக்கழல் அணிந்த திருவடிகளைப் பாடிக்கொண்டு வந்துள்ளோம். எங்களோடு பாட வாயைத் திறக்கமாட்டாயா? ஊன் உருகமாட்டாயா? இவ்வாறு இருப்பது உனக்கே பொருந்தும். எங்களுக்காக நம் தலைவனைப் பாடு’ என்று வெளியில் நிற்கும் பெண்கள் அழைக்கிறார்கள்.  பாடல் சிறப்பு: இதுவும் இதற்கு…

Continue Reading

ஆசைகளைப் பூர்த்தி செய்யுமா பதினோராம் பாவம்? ஜோதிட சூட்சுமங்கள்!

  மனிதனின் குறிக்கோள் எதை நோக்கிச் செல்கிறது, அவற்றில் அவன் வெற்றி பெறுவானா, லாபம் உண்டா அவற்றில் திருப்தி அடைகின்றானா  என்று தெரிந்துகொள்ள அவரவர் ஜாதகம் கொண்டு சொல்ல முடியும். ஒவ்வொருவனுக்கும் சந்தோசம் என்பது வீடு, மனைவி மற்றும் குழந்தைகள் என்பது உலக நியதி. முக்கியமாக ஒருவன் அதற்காக பல தொழிலை செய்து முன்னேற பார்க்கிறான். அதனால் வரும் லாபம் நன்மையே. ஜாதக கட்டத்தின் முக்கிய பாவம் பதினொன்று. பதினோன்றம் பாவம் பல்வேறு காரகத்துவத்தை கொண்டது அவற்றில் முக்கியமாக லாபம், திருப்தி, மகிழ்ச்சி, மூத்த சகோர /சகோதரி, மருமகள் மருமகன் பற்றிய விவரம், அரசாங்க கடன், ஒருவரின் நோய் சரியாகும் நிலை, தாயாரின் ஆயுள், முழங்கால் பாதிப்பு, நல்லவர்கள் நட்பு, விவசாயம் என பலவற்றை அடுக்கிக் கொண்டு போகலாம். லக்கினம் (1) பலம் முக்கியம் என்பர் அதற்கு அடுத்து பூர்வ புண்ணியம் ஸ்தானம் மற்றும் பாக்கியம் ஸ்தானம் (5,9) என்று நல்ல பாவங்களாக சொல்லப்படுகிறது. கடைசியில் அவர் வெற்றி பெறுவாரா, சந்தோசமாக இருப்பாரா? அந்த சந்தோஷம் எதில் கிடைக்கும் என்பதை பதினொன்றாம் பாவம் உணர்த்தும். இன்று 11ம் பாவத்தின் நுணுக்கங்களை விரிவாகப் பார்ப்போம். ஒருவரின் வெற்றி  எதை நோக்கி இருக்க வேண்டும் என்பதை ஜாதகரின்  முக்கிய பாவங்கள் சொல்லிவிடும். அதனால் ஏற்படும் நிறைவு என்பதைப் பார்க்க ஒவ்வொருவரின் ஜாதகத்தில் நல்லது செய்யும் பாவத்தில் முக்கியமான 11ம் பாவத்தைப் பார்க்க வேண்டும். ஜாதகத்தில் திரிகோணத்தோடு 11ம் பாவம் சம்பந்தம் பெரும்பொழுது, அவன் எல்லாவற்றையும் வெற்றி கொண்டு மிகப்பெரிய செல்வந்தன் ஆவான். வாழ்க்கையில் திருப்தியுடன் சந்தோஷம் என்பது அவசியம் தேவை. முக்கியமாக 11ம் அதிபதி ஏழுடன் தொடர்புகொள்ளும்பொழுது திருமண உறவில் சந்தோஷமான வாழ்க்கை அமையும். 11ம் அதிபதி 7ல் இருந்தால் திருமணத்திற்குப் பிறகு மகிழ்ச்சி, உயர்வு பெறுவார். ஆனால் அதுவே 11ம் பாவம் என்பது இரண்டாவது திருமணத்தையும் குறிக்கும். அதனால் ஜாதகத்தில் பார்த்து பலன் சொல்ல வேண்டும். பதினோராம் பாவம் அசுப சேர்க்கை, சுக்கிரனோடு பாவி மற்றும் அயன பாவம் தொடர்பு பெரும்பொழுது, ஒருவன் மது மற்றும் மாது என்று சந்தோஷத்தை நோக்கிச் செல்வான். இந்த ஜாதகருக்கு திரிகோண அதிபதிகளும் கெட்டுப் போயிருப்பார்கள். லக்கினம் 5,11 மற்றும் சுபர்களோடு தொடர்புகொள்ளும்பொழுது குழந்தைகளுக்காக பணம் ஈட்டுவதே அவனுக்கு சந்தோஷத்தை தரும். எடுத்துக்காட்டாக கும்ப லக்கினம் 5ல் புதன் சனி அவரோடு 11ம் பாவ அதிபதி லக்கினத்தில். இவரின் 5ம் பாவத்தில் ஆட்சி பெற்ற புதனுடன், லக்கினாதிபதி சனி சேர்க்கை பெற்று 11ம் அதிபதி பார்வையில் உள்ளார். இந்த ஜாதகர்  தன் தொழில் மூலம் ஈட்டிய பணத்தைக் குழந்தைக்காக சந்தோஷமாக செலவு செய்து வெற்றி வாகையும் சூடுவார்.     பதினொன்றாம் பாவதிபதி லக்கினதோடு தொடர்பு கொண்டால், அந்த ஜாதகர் மற்றவர்களுக்கு சந்தோஷத்தை கொடுப்பார். ஆனால் மற்றவர்களால் அவருக்கு எந்த சந்தோஷமும் கிடைக்காது. எடுத்துக்காட்டாக லக்கினாதிபதி ஆட்சி மற்றும் சுப நிலையில் இருந்து,…

Continue Reading

51 சக்தி பீடங்களின் மகத்துவம் (முழு விவரங்களுடன்) – நவராத்திரி ஸ்பெஷல்!

இந்த பிரபஞ்சம் என்ற நாணயத்தின் இரு பக்கங்களாக விளங்குபவர்கள்தான் சதி (அன்னை பார்வதி தேவி), இறைவன் சிவபெருமான். பிரம்மன் மற்றும் பிரதானும் போல. இந்தக் கதை ஒரு யாகத்தில் தொடங்கி சதியின் தீக்குளிப்புடன் சக்திக்கு அடிகோலி நிறைவு பெறுகிறது. சிவபெருமானுக்கு அழைப்பு விடுக்காமல், அவமதிக்கும் வகையில், தட்சிணன் மிக வலிமையான யாகம் நடத்த, யாகத்தைத் தடுக்கும் வகையில் சதி, அந்த யாகத்தில் தன்னைத் தானே இட்டு மாய்த்துக் கொண்டதால் உருவானதே 51 சக்தி பீடங்கள். இதனால் கடும் உக்கிரம் கொண்டு சதியின் உடலைக் கையில் ஏந்தியபடி சிவபெருமான் இந்த உலகமே அழியும் வகையில் தாண்டவமாட, மகாவிஷ்ணு தனது சுதர்சன சக்கரத்தால் சதியின் உடலை 51 துண்டுகளாக்குகிறார் (சில மகான்கள், இதனை 108 துண்டுகள் என்கிறார்கள்.) சிவனின் உக்கிர தாண்டவத்தால், சதியின் உடல் பகுதிகளும் இறைவி அணிந்திருந்த அணிகலன்களும் பூமியின் பல பகுதிகளில் சிதறி விழுந்தன. இவ்வாறு தேவியின் உடல் பகுதிகள் ஒவ்வொன்றும் விழுந்த புனித இடங்களே 51 சக்தி பீடங்களாக விளங்குகின்றன, பக்தர்களால் வணங்கப்படுகின்றன. இவை, சமஸ்கிருத மொழியில் உள்ள 51 எழுத்துகளைக் குறிப்பதாகவும் நம்பப்படுகிறது. இந்த 51 சக்தி பீடங்களிலும் ஒன்றுபோல சக்தி தேவியும், கால பைரவரும் முக்கிய வழிபாட்டுத் தெய்வங்களாக அருள்பாலிக்கின்றனர். தனிச்சிறப்பு கொண்ட சக்தி பீடங்கள், இந்திய எல்லைக்குள் மட்டுமல்லாமல், அண்டை நாடுகளான பாகிஸ்தான், நேபாளம், திபெத், வங்கதேசம், இலங்கை ஆகியவற்றிலும் விரிந்து பரந்து உள்ளன. இவை அனைத்தும் இந்து மதத்தைப் பறை சாற்றுவதோடு, அந்தந்தப் பகுதியின் சிறப்பியல்புகளை எடுத்தியம்பும் வகையிலும் அமைந்திருப்பது கூடுதல் விசேஷம். தெய்வ வழிபாடு என்பது, பல நாடுகளின் எல்லைகளைக் கடந்து, அவற்றை ஒரு குடும்பம் போலக் கருதச் செய்யும் இந்து மதத்தின் மகத்துவத்தையும் கொண்டுள்ளன சக்தி பீடங்கள். காஷ்மீர் முதல் தமிழகம் வரையிலும் குஜராத் முதல் மேற்கு வங்கம் வரையிலும் தியாகம் – காதல், நம்பிக்கை –  மறுமலர்ச்சியின் அம்சங்களாக சக்தி பீடங்களில் இறைவி அருள்பாலித்து வருகிறார். சிவ புராணம் மற்றும் காளிகா புராணங்களில், 4 சக்தி பீடங்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன – அவை, விமலா (புரி, ஒடிசா), தாரா தாரிணி (கஞ்சம், ஒடிசா), காமாக்யா (குவஹாட்டி), தட்சிண காளிகா (காளிகட், கொல்கத்தா) ஆகியன. சில சக்தி பீடங்கள், நூறுநூறாண்டுகள் பழைமை வாய்ந்தவையாக உள்ளன. அதோடு, இந்தக் கோயில்கள் இதுநாள் வரை, பல புராதன உள்ளூர் நம்பிக்கைகளையும் ஐதீகங்களையும் தாங்கி நிற்கின்றன. உதாரணமாக, 15 ஆம் நூற்றாண்டில், புத்த மாலிக் என்ற கால்நடை மேய்ப்பவருக்கு, ஒரு துறவி பை நிறைய நிலக்கரியை அளிக்கிறார். அது சிவபெருமானின் சக்தியால் தங்கமாக மாறியது. தனது நன்றியை வெளிப்படுத்த இறைவனைத் தேடிய புத்த மாலிக், அமர்நாத் குகையில் பனி லிங்கமாகக் காட்சியளித்த சிவலிங்கத்தை வணங்கினார் என்ற ஐதீகம் இன்றளவிலும் விளங்கி வருகிறது. உலகின் மிகப் பெரும் ஆக்கும் சக்தியாகவும் அழிக்கும் சக்தியாகவும் பார்வதி தேவி விளங்குகிறார். சதியின் மறுபிறவியான பார்வதி தேவி, ஆக்கம், மகப்பேறு, மாற்றம், ஆணின் சுதந்திரம் போன்றவற்றைப் பிரதிபலிக்கும் சக்தியாகவும் வழிபடப்படுகிறார். சக்தியின் முக்கியத்துவம் சிவராத்திரியின் போது வெளிப்படுகிறது. சதி,…

Continue Reading

சிறுநீரக பாதிப்பின் அறிகுறிகளை ஜாதகம் சுட்டிக்காட்டுமா?   

  சிறுநீரக பாதிப்பின் அறிகுறிகளை, ஒருவரின் பிறந்த ஜாதகம் மூலம் நிச்சயம் காண முடியும். இதற்கு , ஒருவரின் சரியான பிறப்பு குறிப்புகளான பிறந்த தேதி, மாதம், வருடம், நேரம், ஊர்  இவைகள் சரியாக இருப்பின் சிறுநீரக பாதிப்பு பற்றி நிச்சயம் காண முடியும். முதலில், பின்வரும் அறிகுறிகள் ஒருவருக்கு இருப்பின் சிறுநீரக நோய் முன்னேறுகிறது / தீவிரமடைகிறது என அர்த்தம். 1. குமட்டல் மற்றும் வாந்தி 2. தசைப் பிடிப்புகள் 3. பசி இழப்பு 4. கால்கள் மற்றும் கணுக்கால் வழியாக வீக்கம் 5. தோலில் உலர் தன்மையுடன் அரிப்பு 6. மூச்சுத் திணறல் 7. தூங்குவதில் சிக்கல் 8. சிறுநீர் கழிப்பதில் அதிக அளவு / குறைந்த அளவு எந்த வகையான உணர்ச்சிகள், சிறுநீரகத்தில் சேமிக்கப்படுகிறது? பயம் எனும் உணர்வு மட்டுமே சிறுநீரகம் மற்றும் சிறுநீரகப்பை, நீர் தொடர்புடைய, நீர் உறுப்புகள் தேக்கி வைக்கும் இடமாகும். சாதாரண தகவமைப்பு உணர்ச்சிகளால் சிறுநீர் வெளிப்படுவதை காணலாம். சிறு வயது குழந்தைகள் இரவில் தூக்கத்தில் காணும் சிறு பய கனவுகளால், படுக்கையில் சிறுநீர் வெளியாவதை காணலாம். வீட்டில் உள்ளவர்கள் இதனைக் கண்டிக்கும்போதோ அல்லது கேலி செய்யும் போதோ , குழந்தைகள் சிறுநீர் கழிப்பதை புறக்கணித்து அடக்குகிறார்கள். அதுவே அதிக நாள் இதனை புறக்கணிக்கப்படும் போது சிறுநீரகங்கள் பாதிப்புக்கு உள்ளாகிறது என அறியமுடிகிறது.  எந்த வீடு ஜோதிடத்தில் சிறுநீரகத்தை குறிக்கிறது? நமது செரிமான அமைப்பு, சிறுநீரகம், கருப்பை, ஆசனவாய் ஆகியவை ஆறாவது வீட்டின் வகையின் கீழ் வருகின்றன. இருப்பினும், ஜோதிட அட்டவணையில் ஆறாவது வீடு மருத்துவ ஜோதிடத்தில் ‘நோய்களின் வீடு’ என்றும் அழைக்கப்படுகிறது. சிறுநீரக செயலிழப்பு எந்த மாதம்? ஐப்பசி, கார்த்திகை மாதம் பிறந்தவர்களுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படும். ஏன் என்றால் சூரியன், சிறுநீரக காரக ராசிகளான துலாம், விருச்சிகம் ராசிகளில் இருக்கும் காலம் ஆகும். மார்ச் மாதம் தேசிய சிறுநீரக மாதம். சிறுநீரக நோய் பெரும்பாலும் “அமைதியான நோய்” என்று குறிப்பிடப்படுகிறது. ஏனெனில் அதன் ஆரம்பக் கட்டங்களில் பொதுவாக எந்த அறிகுறிகளும் இருக்காது.  சிறுநீரக செயலிழப்பை தடுக்கும் உணவுகள் என்ன? உங்கள் இதயம் மற்றும் முழு உடலுக்கும் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்வு செய்யுங்கள். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் குறைந்த கொழுப்பு அல்லது கொழுப்பு இல்லாத பால் பொருட்களை பயன்படுத்தலாம்.  உப்பு மற்றும் சர்க்கரையை குறைக்கலாம். ஒவ்வொரு நாளும் 2,300 மில்லிகிராம் சோடியம் குறைவாக இருக்க வேண்டும். சிறுநீரக செயலிழப்பு எந்த வயதில் தொடங்கலாம்?குரு பெயர்ச்சி – 2021 பொதுப் பலன்கள் இது எந்த வயதிலும் உருவாகலாம் மற்றும் பல்வேறு நிலைமைகள் CKD க்கு (நாள்பட்ட சிறுநீரக நோய் / கிரோனிக் கிட்னி டிசீஸ்) வழிவகுக்கும். இருப்பினும், வயது அதிகரிக்கும் போது CKD மிகவும் பொதுவானதாகிறது. 40 வயதிற்குப் பிறகு, சிறுநீரக வடிகட்டுதல் ஆண்டுக்கு சுமார் 1% குறையத் தொடங்குகிறது. சிறுநீரகத்திற்கு எந்த பழங்கள் சிறந்தது? ஸ்ட்ராபெர்ரிகள்குருதிநெல்லிகள்அவுரிநெல்லிகள்ராஸ்பெர்ரிஆப்பிள்கள்திராட்சைஅன்னாசிப்பழம்சிட்ரஸ்…

Continue Reading

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 24)

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 24 அன்றிவ் வுலகம் அளந்தாய் அடிபோற்றி! சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி! பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி! கன்று குணிலா எறிந்தாய் கழல்போற்றி! குன்று குடையாய் எடுத்தாய் குணம்போற்றி! வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி! என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான் இன்றுயாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய். பாடியவர் – பவ்யா ஹரி விளக்கம்: மேல் பாசுரத்தில் (பா.23) “சிம்மாசனத்தில் வீற்றிரு’ என்று வேண்டியதற்கேற்ப இப்போது கண்ணன் அமர்ந்துவிட்டான். எனவே, போற்றிப் பாடுகிறார்கள். “அன்றொரு அவதாரத்தில், வாமனனாகத் தோன்றித் திரிவிக்ரமனாக வளர்ந்து உலகை அளந்தாய், அந்தத் திருவடிகளுக்குப் போற்றி. இராமாவதாரத்தில் தென் திசை சென்று இலங்கை அரசனை வீழ்த்தினாய், அந்த வலிமைக்குப் போற்றி. சக்கரமாக ஒளித்திருந்த சகடாசுரனை அழித்தாய், உன்னுடைய புகழுக்குப் போற்றி. கன்றாக மறைந்திருந்த வத்ஸôசுரனை எறிதடியாக்கி, கபித்தாசுரன்மீது எறிந்தாய், உன் திருவடிகளுக்குப் போற்றி. கோவர்த்தனம் என்னும் குன்றைக் குடையாகத் தூக்கினாய், உன் குணத்திற்குப் போற்றி. பகைவர்களை வென்றழிக்கும் உன்னுடைய கையிலுள்ள வேலுக்குப் போற்றி. இவ்வாறெல்லாம் பலவாறாக உன்னுடைய வீரத்தையும் திறனையும் புகழ்ந்து பாடிக்கொண்டே உன்னிடம் பரிசு பெற்றுக்கொள்வதற்காக வந்திருக்கிறோம். அருள வேண்டும்’ என்று பாராட்டிப் பணிகிறார்கள்.  பாசுரச் சிறப்பு: அடியார்களின் அன்பு முழுமையாக வெளிப்படுகிற பாசுரம் இது. நோன்பு நோற்று, கண்ணனிடம் பரிசு பெறுவதற்காக வந்திருப்பவர்கள் இப்பெண்கள். இவர்களுக்கு அருள்வதற்காகக் கண்ணன் சிம்மாசனத்தில் வந்து அமர, தாங்கள் கேட்க வேண்டியதை விட்டுவிட்டுக் கண்ணனுக்குப் “போற்றி’ இசைக்கிறார்கள். கண்ணனின் பேரழகைக் கண்டவுடன், தங்களின் கோரிக்கை மறந்து, இந்த அழகுக்குக் கண் திருஷ்டி நேர்ந்துவிடுமே என்னும் கவலை எழுகிறது. ஆகவே, காப்பிடுவதுபோல “போற்றி’ இசைக்கிறார்கள். ஆண்டவன் மீதான அடியார்களின் அளப்பரிய அன்பு இது. கண்ணனைப் போற்றினாலும், வாமனஅவதாரத்தையும் இராமாவதாரத்தையும் பாடுவதில் ஆண்டாளுக்கு உள்ள அவாவினை 3, 17 (வாமனன்), 10, 12 (இராமன்) பாசுரங்களில் காணலாம். வலிமைக்கும் திறமைக்கும் புகழுக்கும் “போற்றி’ சொன்னாலும், திருவடிக்கு இருமுறை கூறுவது (அடி போற்றி, கழல் போற்றி), பக்தியின் பாங்கு. பிறவற்றில் வலிமைக்கும் கழலுக்கும் “போற்றி’ சொல்லிவிட்டு, கோவர்த்தனத்தைத் தூக்கியதற்கு குணத்தைப் போற்றுகிறார்கள். ஆயர்களையும் ஆடுமாடுகளையும் மழையிலிருந்து காப்பதற்காக ஒருவார காலம் கோவர்த்தனத்தைக் கையில் தாங்கியிருந்தது, எம்பெருமானின் செüசீல்ய குணத்தை (நீர்மையாகப் பாயும் கருணையை) அல்லவா காட்டுகிறது!  ஸ்ரீமாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி – பாடல் 4 ஆடியில் எந்த அம்மனை வணங்கினால் பிரச்னைகள் தீரும்? இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால் தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே! என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே! பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன் பாடியவர்கள் – ஆலவாய் அண்ணல் தேவாரப் பாடசாலை மாணவர்கள் விளக்கம்: அதிகாலைப் பொழுதில், சிவபெருமான் சந்நிதிக்கு அருகே காத்திருப்பவர் யார் யார்? வீணைகளையும் யாழ்களையும்…

Continue Reading

பகல்பத்து 4 ஆம் நாள்: செளரி கொண்டையில் நம்பெருமாள்!

ஸ்ரீநம்பெருமாள் கிருஷ்ணர் செளரி  கொண்டை, வைர அபயஹஸ்தம், மார்பில் மஹாலட்சுமி பதக்கம், முத்துச்சரம், பவள மாலை, அவுரிசரம் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.    ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி பெருவிழாவின் பகல் பத்து 4 ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை ஸ்ரீநம்பெருமாள் கிருஷ்ணர் செளரி கொண்டையில் எழுந்தருளி பக்தா்களுக்குச் சேவை சாதித்தாா். பகல்பத்து விழாவில் நம்பெருமாள் ஒவ்வொரு நாளும் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தா்களுக்குச் சேவை சாதிப்பாா். செவ்வாய் – கேது சூட்சம விளக்கம்  பகல்பத்து 4 ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை மூலஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் செளரி  கொண்டை , வைர அபயஹஸ்தம், மார்பில் மஹாலட்சுமி பதக்கம் , முத்துச்சரம், பவள மாலை உள்ளிட்ட திரு ஆபரணங்கள் அணிந்து அா்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தா்களுக்குச் சேவை சாதித்தாா். காலை 8 மணி முதல் பக்தா்கள் வரிசையில் நின்று தரிசித்து வருகின்றன. இரவு 8 மணிக்கு மேல் பக்தா்களுக்கு அனுமதியில்லை. பக்தா்கள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் தரிசனம் செய்து வருகின்றனர்.    நன்றி Hindu ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி: வழிபடும் முறை

இந்த ராசிக்காரர்களுக்கு தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் வரும்: புரட்டாசி மாத பலன்கள்

12 ராசி அன்பர்களுக்கும் புரட்டாசி மாத பலன்களை தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். மேஷம்: கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராஹூ – ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய், புதன் (வ) – களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் – அஷ்டம ஸ்தானத்தில் கேது – தொழில் ஸ்தானத்தில் சந்திரன்,  குரு (வ), சனி (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றம்: 3-10-2021 அன்று சுக்ர பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: நியாயமான திட்டங்களுக்கு ஆதரவு அளித்து அடுத்தவர் மதிப்பை பெறும் மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் ஆக்க பூர்வமான யோசனைகளை செயல்படுத்தி எதிலும் வெற்றி காண்பீர்கள். தெளிவான மனநிலை இருக்கும். சாமர்த்தியமாக செயல்பட்டு சாதகமான பலன் பெறுவீர்கள். செயல்திறன் அதிகரிக்கும் ஆனால் உங்களுக்கு எதிராக சிலர் செயல்படும் சூழ்நிலை இருப்பதால் கவனம் தேவை. நெருக்கடியான சமயத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பது தாமதப்படும். தொழில், வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். சில நேரங்களில் முக்கிய முடிவு எடுப்பதில் தயக்கம் காட்டுவீர்கள். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்க பெறுவார்கள். ஆனால் அலைச்சல் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்க மனம் விட்டுபேசுவது நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும். அவர்களிடம் நிதானமாக பேசுவது நன்மை தரும். பிள்ளைகளிடம் கோபம் காட்டாமல் அன்பாக பேசுவது நல்லது. மகிழ்ச்சி உண்டாகும். பெண்கள் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். வீண் அலைச்சல் உண்டாகும். கலைத்துறையினருக்கு தகுந்த மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். விருதுகள் கிடைக்கும். தேவையான பண உதவி கிடைக்கும். கடன் தொல்லை குறையும். தொழில் போட்டிகள் நீங்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். எடுத்திருக்கும் அரசாங்க வேலைகள் மூலம் நன்மை உண்டாகும். மாணவர்களுக்கு செயல்திறமை அதிகரிக்கும். உயர்கல்வி கற்பவர்கள் கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது. அஸ்வினி: இந்த மாதம் கடன் பிரச்சனைகள் தொல்லை தராமல் இருக்கும். எதிர்பார்த்த பணவசதி கிடைக்கும்.  உங்களது செயல்களுக்கு இருந்த எதிர்ப்புகள் நீங்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். பரணி: இந்த மாதம் தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். எதிர்பார்த்த பணவரத்து இருந்தாலும் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். போட்டிகள் தொல்லை தராமல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து காணப்படுவார்கள். கார்த்திகை 1ம் பாதம்: இந்த மாதம் வேலையில்  திறமைக்கு பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு இருந்து வந்த நோய் நீங்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். பரிகாரம்: ஸ்ரீசரஸ்வதி தேவதையை பூஜித்து வர அறிவு திறமை அதிகரிக்கும். கல்வியில் வெற்றி உண்டாகும்….

Continue Reading

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 28)

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 28 கறவைகள் பின்சென்று கானம்சேர்ந் துண்போம் அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்றன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம் குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்றன்னோடு உறவேல் நமக்கிங் கொழிக்க ஒழியாது அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்றன்னைச் சிறுபே ரழைத்தனவும் சீறி யருளாதே இறைவா நீதாராய் பறையேலோ ரெம்பாவாய். பாடியவர் – பவ்யா ஹரி விளக்கம்: முந்தைய பாசுரங்கள் இரண்டிலும் தங்களுக்கு என்னென்ன பரிசுகள் வேண்டும் என்று விண்ணப்பித்த பெண்கள், தங்களுக்கு அருளும்படியாகக் கண்ணனிடம் கோரிக்கை வைக்கிறார்கள். “மாடுகளுக்குப் பின்னாலே சென்று, மேய்ச்சல் காட்டை அடைந்தவுடனேயே கையில் கட்டியெடுத்துச் செல்லும் சோற்றை உண்பவர்கள் நாங்கள். எங்கள் குலத்தில் வந்து கண்ணா, நீ தோன்றியுள்ளாய். உன்னோடு உடன் உறவாடும் அளவுக்கு எங்களுக்கு அறிவோதிறனோ இல்லையென்றாலும், நீ பிறந்துள்ள குலத்தில் நாங்களும் பிறந்துள்ளோம் என்பதே புண்ணியம். எத்தனைக் காலமானாலும், உன்னுடனான எங்களுடைய உறவை ஒழிக்கவோ பிரிக்கவோ இயலாது. நாங்கள் படிப்பறிவில்லாத சிறு பெண்கள். உன்னைப் பலவிதமாகப் பெயர்கள் கூறி அழைத்துவிட்டோம். சினம் கொள்ளாமல் எங்களுக்கு அருளவேணும்’ என்று பிரார்த்திக்கிறார்கள்.  பாசுரச் சிறப்பு: ஆயர்பாடியில் கண்ணன் பிறந்ததால், எத்தனை எத்தனைக் காலமானாலும் அந்த உறவு இருக்கத்தான் செய்யும். பற்பல தலைமுறைகளுக்குப் பின்னரும், “கண்ணன் எங்கள் மூதாதை’ என்று ஆயர்பாடியார் சொல்லிக்கொள்ள முடியும். அதுபோன்றே, எத்தனைப் பிறவிகள் எடுத்தாலும், இந்த உயிர் எம்பெருமானின் உடைமை என்று உறவு சொல்லிக்கொள்ள முடியும். ஜீவனுக்கும் பரமனுக்குமான உறவு, பிறவிகள் தோறும், மற்று, பிறவிகளுக்கு அப்பாற்பட்டும் தொடரும் என்பது உள்பொருள். “சிறுபேர்’ என்பது ஒருமையில் பெயர் சொல்லி அழைத்தல் ஆகும். எம்பெருமான் என்று தெரிந்த பின்னர் இவ்வாறு அழைக்கலாமோ? ஆயின், இங்குச் “சிறுபேர்’ என்பது பிறிதொன்று. எம்பெருமானாக இருப்பினும், சிறுவனாக வந்து, மாடும் கன்றும் மேய்த்து உடன் விளையாடுவதுதான் கண்ணனுக்கு மகிழ்ச்சி. தன்னை “நாராயணா’ என்று உயர்நாமம் சொல்லி அழைத்ததற்காகச் சீறுகிறானாம். எனவே, ஆயர்பாடி அவதாரத்திற்கே உரித்தான கோவிந்த நாமம் சொல்லி அழைக்கிறார்கள். இந்தப் பாசுரத்திலும் (குறையொன்றுமில்லாத கோவிந்தா) இதன் முன் பாசுரத்திலும் (கூடாரைவெல்லும் கோவிந்தா) இன்னும் இதன் மேல்பாசுரத்திலும் (அன்று காண் கோவிந்தா), கோவிந்த நாமம் சாற்றப்படுகிறது. செயல் பெருமையோஅறிவுப் பெருமையோ இல்லாத ஜீவன்கள், இறைவனின் உயர்வையும் இறைவனோடான உறவின் அருமையையும் உணர்ந்து, பணிந்து போற்றி வணங்குவதைக் காட்டுகிற} உணர்த்துகிற பாசுரம். எந்த விரதத்திற்கும், பணிவும் தன் கட்டுப்பாடுமே முக்கியம் என்பதை வலியுறுத்துகிற பாசுரம் எனலாம்.  ****** ஸ்ரீமாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி – பாடல் 8 மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 30) முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய் மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார்? பந்தணை விரலியும் நீயும்நின் அடியார் பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே! செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித் திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி அந்தணன் ஆவதுங் காட்டிவந் தாண்டாய் ஆரமு தே!பள்ளி எழுந்தரு ளாயே.  பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன்  பாடியவர்கள்…

Continue Reading

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 17)

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 17 அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும் எம்பெருமான் நந்தகோ பாலா எழுந்திராய்! கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே! எம்பெரு மாட்டி யசோதாய் அறிவுறாய் அம்பர மூடறுத் தோங்கி உலகளந்த உம்பர்கோ மானே! உறங்கா தெழுந்திராய் செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா! உம்பியும் நீயும் உறங்கலோ ரெம்பாவாய். பாடியவர் – பவ்யா ஹரி விளக்கம்: நந்தகோபன் வீட்டிற்கு வந்த பெண்கள், உள்ளே அனுமதிக்கப் பட்டுவிட்டார்கள் என்று தெரிகிறது. உள்ளே வந்து, நந்தகோபனையும் யசோதை பிராட்டியையும் பலராமனையும் கண்ணனையும் எழுப்புகிறார்கள். “சோறும் நீரும் ஆடையும் எங்களுக்கு வழங்குகிற நந்தகோபனே, எழுந்திருக்க வேணும். பெண்களுக்கெல்லாம் கொழுந்து போன்றவளே, ஆயர் குலத்தின் விளக்கானவளே, எம்பெருமாட்டி யசோதையே, உணர்ந்தெழுந்திருக்க வேணும். வாமனனாகத் தோன்றித் திரிவிக்கிரமனாக வளர்ந்து உலகை அளந்த தேவாதி தேவனே, கண்ணா, எழுந்திருக்க வேணும். ஆணிப் பொன்னால் செய்த வீரக்கழல்களை அணிந்த செல்வனே, பலராமனே, உன் தம்பியும் நீயும் எழுந்திருக்க வேணும்’ என்று வேண்டுகிறார்கள்.  பாசுரச் சிறப்பு: கீழ்ப் பாசுரம் போன்று, மூத்தோரின் துணைகொண்டு ஆண்டவனை அணுகும் முறையை வலியுறுத்துகிற பாசுரம். நந்தகோபனையும் யசோதையையும் முன்னிட்டுக் கொண்டு கண்ணனை அணுகுகிறார்கள். பலராமன் சகோதரன் என்பதால், தம்பியை எழுப்பும்படி வேண்டுகிறார்கள். “கொழுந்து’ என்னும் சொல்லாட்சி நோக்கத்தக்கது. செடிக்கு ஏதேனும் ஊறு நேருமென்றால், அந்த பாதிப்பில், துளிர்ப் பகுதியானகொழுந்துதான் முதலில் வாடும். அவ்வாறே, ஆயர் குலத்திற்கு ஏதேனும் ஊறு நேருமென்றால், முதலில் யசோதை பிராட்டி வாடுவாள். இராமாவதாரத்தில் இலக்குவனாக அவதரித்த ஆதிசேஷன், கிருஷ்ணாவதாரத்தில் பலராமன் ஆனான். எம்பெருமானோடு கூடவே இருந்து தொண்டு செய்யும் பேறு கிட்டியதால், “செல்வன்’ஆனான். பணம் அன்று, கைங்கரியமே செல்வம் ஆகும். சுவாமிக்கு ஆதிசேஷன் படுக்கை ஆவான். படுக்கை மீது ஒருவர் உறங்கக்கூடும். ஆனால் படுக்கையே உறங்கலாமா? என்னும் ஆதங்கம் தொனிக்கும் பாசுரம்.  அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – பாடல் 17 செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால் எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக்குரு பெயர்ச்சி: தனுசு, மகரம், கும்பம், மீன ராசிகளுக்கான பலன்கள் கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச் செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப் பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.  பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன் பாடியவர்கள் : ஆலவாய் அண்ணல் பாடசாலை மாணவர்கள் பாடியவர் – மயிலை சற்குருநாதன் பாடியவர் – பொன் முத்துக்குமரன்  விளக்கம்: நோன்பியற்றும் பெண்கள், பேரின்ப நிலை தருகிற இறைவனைப் போற்றித் துதிப்போம் என்றுரைக்கும் பாடல். “திருமாலிடத்து, பிரம்மாவினிடத்து, தேவர்களிடத்து என்று யாரிடமும் இதுவரை காட்டாத அன்பினை நம்மிடம் காட்டி, நமக்குப் பேரின்பம் தருகிற வகையில், நம்முடைய இல்லங்களுக்கே எழுந்தருளி, நம்முடைய குற்றங்களையும் வினைத் துன்பங்களையும் போக்கி, தன்னுடைய தாமரைத் திருவடிகளை நமக்காகத் தருகின்ற வீரனை, அருள் பார்வை பார்க்கும் இறைவனை, நமக்கு அரும்பெரும் அமுதமாக இருப்பவனை,…

Continue Reading

இந்த ராசிப் பெண்கள் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது நல்லது: செப்டம்பர் மாத பலன்

12 ராசி அன்பர்களுக்கும் செப்டம்பர் மாத பலன்களை தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார்.  மேஷம் கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராஹூ – பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் – ரண ருண ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் – அஷ்டம ஸ்தானத்தில் கேது – தொழில் ஸ்தானத்தில் சனி (வ) – லாப ஸ்தானத்தில் குரு (வ) என கிரகநிலை உள்ளது. இம்மாதம் 06ம் தேதி சுக்கிர பகவான் சப்தம களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். இம்மாதம் 07ம் தேதி செவ்வாய் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார். இம்மாதம் 13ம் தேதி புத பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் வக்ரம் ஆரம்பம். இம்மாதம் 14ம் தேதி குரு பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். இம்மாதம் 17ம் தேதி சூர்ய பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார். இம்மாதம் 27ம் தேதி சனி பகவான் தொழில் ஸ்தானத்தில் வக்ர நிவர்த்தி அடைகிறார். பலன்: கடின உழைப்பினால் வாழ்க்கையில் முன்னேறும் மேஷ ராசியினரே உங்களுக்கு திடீரென்று  வரும் கோபத்தை கட்டுப்படுத்தினால் வெற்றி நிச்சயம். இந்த மாதம் புத்திக் கூர்மையுடன் செயல்களை செய்து எதிலும் வெற்றி பெறுவீர்கள். வசதிகள்  அதிகரிக்கும். மதிப்பும், மரியாதையும் கூடும். ஆனால் வீண் செலவுகள் உண்டாகும். மனதுக்கு பிடிக்காத இடத்திற்கு சென்று வரவேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பாக பயணங்கள் சென்று வரவேண்டி இருக்கும். வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திப்பார்கள். குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகலாம் கவனம் தேவை. மேலும் அறிந்துகொள்ள.. இதைச் செய்யாமல் விட்டால் குழந்தையின் ஆதார் செல்லாததாகிவிடும் குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே தேவையற்ற மன வருத்தம் உண்டாகலாம் கவனம் தேவை. மருத்துவம் தொடர்பான செலவும் ஏற்படலாம். ஆயுதம், நெருப்பு ஆகியவற்றை கையாளும் போது கவனமாக இருப்பது நல்லது. அரசியல்வாதிகள், தாங்கள் சார்ந்துள்ள கட்சியின் தொண்டர்களுக்கும், நெருங்கியவர்களுக்கும் மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். மேலிடத்திலிருந்து உங்களுக்கு சந்தோஷமான செய்திகள் வந்து சேரும். கலைத்துறையினர் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். வருமானம் நன்றாக இருப்பதால் ரசிகர்களுக்காகச் செலவு செய்வீர்கள். சக கலைஞர்களால் நன்மை அடைவீர்கள். புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் மேன்மை அடைய கூடுதல்  கவனத்துடன்  படிப்பது அவசியம். விளையாடும் போதும் கவனம் தேவை. பெண்களுக்கு புத்தி கூர்மையுடன் செயல்பட்டு காரியங்களை வெற்றி கரமாக செய்து முடிப்பீர்கள். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு சக மாணவர்களுடன் பழகும்போது கவனம் தேவை. கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது. அஸ்வினி: இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள்  அவசரப்படாமல் நிதானமாக பணிகளை கவனிப்பது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு மனவருத்தங்கள் ஏற்படும் வகையில் சூழ்நிலை இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் முன்னேற்றத்தில் தடை தாமதம் ஏற்படலாம்…

Continue Reading

இஷ்ட தெய்வங்களை அறிவது எப்படி?

  எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே !                                              – தாயுமானவர்- ஜோதிடம் என்பது பார்வதி தேவி, பரமேஸ்வரரிடத்தில் கேட்டதால் கிடைக்கப்பெற்ற அருமையான பொக்கிஷம். ஆம், தாய் பரமேஸ்வரி, எல்லா உயிர்களையும் படைத்த பின்னர் அருமையான மனிதப் பிறவியை படைத்தது அவர்களுக்கு தாம் பெறப்போகும் நன்மை தீமைகளை முன்கூட்டியே அறிவதற்காக முனிசிரேஷ்டர்களிடம் விவாதித்து கிடைத்தவை தான் இந்த ஜோதிடம்.  இதில் யாக்ஞயவல்கியர், பராசரர் போன்றவர்களின் பங்கும் அதற்கடுத்து வந்த காளிதாஸர் உள்பட பல ஜோதிடத்தில் கூறியவைகளை தான் இன்றும் நாம் பயன்படுத்தி வருகிறோம். இதில் நாமாக சொல்வதற்கு ஒன்றுமில்லை. புரிதலின் மூலமாக சிலர் தெள்ள தெளிவாக அதனை விளக்குவர்.  ஒருவரின் ஜாதகத்தில் எந்த கிரகம் அதிக பாகை பெற்றுள்ளதோ அதுவே ஆத்ம காரகர் ஆகிறது. நவாம்சத்தில் உள்ள ஆத்மகாரக கிரகம் காரகாம்ச லக்கினம் என்றும் அதிலிருந்து வரும் பன்னிரண்டாம் வீடு அல்லது ராசியே நமது இஷ்ட தேவதைக்கு உரியது.  இந்த வீட்டில் இருக்கும் கிரகம் / கிரகங்கள் நாம் தேர்ந்தெடுத்த தெய்வத்தை தீர்மானிக்கின்றன, இருப்பினும், இந்த வீடு காலியாக இருந்தால், வீட்டின் கிரகத்தின் இறைவன் குறியீடாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை வணங்க வேண்டும் என்பதனை தீர்மானிக்கிறது. அது யாதெனில், காரகாம்ச லக்கினம் வீட்டிலிருந்து பன்னிரண்டாம் வீட்டில் வசிக்கும் / இருக்கும் கிரகம் அல்லது அந்த வீட்டின் அதிபதியின் படி, வழிபட வேண்டிய தெய்வங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.  சூரியன்:      சிவன், ஸ்ரீராமன்சந்திரன்:     கௌரி தேவி, லலிதா தேவி, சரஸ்வதி தேவி, ஸ்ரீ கிருஷ்ணர்செவ்வாய்:  அனுமன், ருத்ர தேவர், கார்த்திகேயர் (சுப்ரமணியர்), ஸ்ரீ நரசிம்மர்புதன்:            விஷ்ணு, ஸ்ரீ புத்தர்வியாழன்:   ஹயக்ரீவர், விஷ்ணு, இந்திரன், தத்தாத்ரேயர், வழிகாட்டி /ஆசிரியர்சுக்கிரன்:    லட்சுமி தேவி, பார்வதி தேவிசனி:             விஷ்ணு, பிரம்மாராகு:            துர்கா தேவி, ஸ்ரீ நரசிம்மர்கேது:          விநாயகப் பெருமான் விஷ்ணு பகவான் இந்து மும்மூர்த்திகளில் ‘பாதுகாப்பவர்’ என்று அழைக்கப்படுகிறார், மேலும் அவர் முக்தியை அடைவதில் இன்றியமையாததாகக் கருதப்படும் சுதர்சன சக்கரத்தை ஏந்தியதால், ஒவ்வொரு நபரையும் மோட்சத்தை நோக்கி எளிதாக வழிநடத்தும் தெய்வமாக அவர் கருதப்படுகிறார். அத்தகைய நபர்களுக்கு, பின்வரும் பட்டியலில் விஷ்ணுவின் குறிப்பிட்ட வடிவங்கள்(அவதாரம்) உள்ளன, அவர்கள் தங்கள் இஷ்ட தேவதையாக வணங்க வேண்டும்: சூரியன்:     ராமர்சந்திரன்:     பகவான் கிருஷ்ணர்செவ்வாய்:   நரசிம்மர்புதன்:       புத்த பகவான்வியாழன்:       வாமன பகவான்சுக்கிரன்:   பரசுராமர்சனி:        கூர்ம பகவான்ராகு:  …

Continue Reading

வருமானத்தை நிர்ணயிக்கும் ஜாதகம்: சொந்தத் தொழிலா? அடிமைத் தொழிலா? அறியலாம்

மனிதனின் முக்கிய தேவைகளை பூர்த்தி செய்ய வருமானம் அவசியம் தேவை. வருமானம் வரும் பாதை இரண்டு உள்ளது. அவை உழைப்பால்  வரும் வருமானம். மற்றொன்று  உழைக்காமல் வரும் வருமானம். ஒருவன் என்னதான் உழைத்தாலும் பணம் சம்பாதிக்க முடியாது, மற்றும் சிலருக்கு உழைக்காமல் வரும் வருமானம் தொடர்ந்து  வந்துகொண்டே இருக்கும், மற்றும் சிலர் ஒரு  குறிப்பிட்ட கால அளவிற்கு உழைப்பு இருக்கும் பின்பு சீர்பட்டு ஒரு கணிசமான வருமானம் நிரந்தரமாகும். வருமானம் என்றவுடன் ஜோதிடத்தில் 2ம் பாவத்தையும், தொழில் அதனால் ஏற்படும் லாபம் கலந்த திருப்தி 10ம் பாவத்தைத் தொடர்ந்து 11ம் பாவத்தையும் குறிப்பிடும்.  இவற்றில் சொந்த தொழிலா,  அடிமை தொழிலா என்பது வெவ்வேறு பாவங்கள் கூறும். வருமானம் எந்த வழியில் வரும் என்பது அவரவர் கர்மாவை பொறுத்து அமையும்.  வருமானம் என்று சொல்லும்போது உழைப்பாள்  வரும் வருமானம், தந்தை அல்லது  பரம்பரை சொத்து மூலம் வருமானம், மனைவி வழியில் வருமானம், சேமிப்பு மூலமாகவோ, வட்டி, வாடகை வழியாகவோ – ஜோதிட வாயிலாக ஆராய்ந்து சொல்லலாம்.  இவற்றில் இரண்டாம் பாவத்தில் உள்ள கிரகம் அல்லது அந்த பாவத்தில் அதிபதி  முக்கிய பங்கு வகிப்பார்.  இரண்டாம் அதிபதி ஆட்சியோ, உச்சமோ பெற்று சுபத்துவம் பெற்றால் மற்றும் ராகு சம்பந்தம் பெற்றால் பல்வேறு (multiple) வழியில் வருமானம் இருக்கும். இவற்றில் வருமானம் என்ற 2ம் பாவம் மட்டும் முக்கிய பங்கு வகிக்கவில்லை, அவற்றோடு 10ம் பாவம், புதன், சனி சம்பந்தம் பெறவேண்டும். கூட்டு தொழிலோடு ஒப்பிடும் பொழுது 7ம் பாவமும், மாற்றவரிடம் வேலை பற்றி சொல்லும்பொழுது 10, 6ம் பாவம் தொடர்பு பெறவேண்டும். பாட்டன் சொத்து வருமானம் என்ற பொழுது திரிகோண அதிபதிகள் இரண்டாம் பாவத்துடன் தொடர்பு பெறவேண்டும். இரண்டாம் பாவத்தை பற்றி பேசும்பொழுது நிறைய காரகத்துவம் உண்டு. ஆனால் நாம் இன்று பார்ப்பது பேச்சு தன்மையால் வருமானம் ஈட்டும் ஜோதிட சூட்சமங்களைப்  பார்க்கலாம். எடுத்துக்காட்டாக ஜோதிடத்தில் இரண்டாம் பாவத்தில் வாக்கு, பேச்சு, ஆசிரியர், உணவு, குடும்பம் என்று சொல்லும் இடம். அந்த பாவம் பலம் பெற்றால்  பேச்சால் வருமானம் ஈட்டுவார் (உதாரணமாக.. பேச்சாளர், ஜோதிடர், விற்பனைப் பிரதிநிதி போன்றோர்).  நிறந்தர வருமானம் என்று சொன்னால் இரண்டோடு மற்றும் பூர்வபுண்ணியம் மற்றும் காரியத்திற்குரிய கர்மா, லக்கின சுபாரோடு  செயல் படவேண்டும். இது தவிர இன்னும் ஆழமாக போனால் முக்கிய நிபுணர் என்று உள்ளது. அது எந்தத் துறை என்பது 2, 10ம் பாவத்தின் சாரநாதன் கொண்டு முடிவு பெரும். பத்து மற்றும் இரண்டாம் பாவ தொடர்பு கொண்டால் பேச்சால் வருமானம் ஈட்டுபவர். உதாரணமாக தொகுப்பாளர், ஜோதிடர், மார்க்கெட்டிங், பேச்சாளர்கள், கலைத்துறை, உணவு துறை, முகம் சார்ந்த ஒப்பணை என்று அடுக்கி கொண்டு போகலாம். இவற்றில் அரசியல் பேச்சும், குடும்பத்தின் மூலம் வருமானம், வட்டி தொழில்,  கண் மற்றும் முகம் சார்ந்த தொடர்பு கொண்ட செயல் மூலம் வருமானம் இருக்கும். இரண்டாம் பாவம்…

Continue Reading

வடுவூரில் ஸ்ரீராமநவமித் திருவிழா துவங்கியது

  நாராயணன் தர்மம் காக்க தானே மனிதனாக அவதரித்து தசரத மைந்தன் ஸ்ரீராமன் என்ற பெயரோடு அவரே வடிவமைத்த அர்ச்சாரூபமாக  இருந்து வடுவூரில்  எழுந்தருளி உள்ள ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு ஸ்ரீராமநவமி பெருந்திருவிழா 2022ம் ஆண்டு  பிலவ வருடம் பங்குனி மாதம் 26ஆம் நாள், ஏப்ரல் 8-ஆம் தேதி துவங்கி சித்திரை ஐந்தாம் நாள் ஏப்ரல் 18 வரை நடக்க இருக்கிறது இன்று ஏப்ரல் ஒன்பதாம் தேதி துவஜாரோகணம் எனப்படும் திரு கொடியேற்றத்துடன்  துவங்கியது. தொடர்ந்து தினம் காலையில் பல்லக்கில் புறப்பாடு நடைபெற உள்ளது. மாலை வேளைகளில் சூரிய பிரபை, சேஷ வாகனத்தில் பரமபத நாதனாக, 12ம் தேதி  கருடசேவை – வைரமுடி, ஏப்ரல் 13ஆம் தேதி நாச்சியார் திருக்கோலம், இரவு அனுமந்த வாகனம், 14ம் தேதி இரவு மோகன அலங்காரமும் 15ஆம் தேதி ஆறாம் திருநாளின் காலையில் யானை வாகனத்தில் ஸ்ரீ ராமர் ராஜா அலங்காரமும் ஹம்ச வாகனத்தில் தாயார் புறப்பாடும் நடைபெறும். 15ஆம் தேதி  திருக்கல்யாண கோலத்தில் புறப்பாடும் மாலை சூர்ண  அபிஷேகமும் 16ஆம் தேதி பல்லக்கு நவநீத சேவையும் ஏப்ரல் 17ஆம் தேதி திருத்தேரில் ஸ்ரீகோதண்டராமர் எழுந்தருளி சேவையும்  18ம் தேதி சப்தாவர்ணமும் தொடர்ந்து 19 முதல்  விடையாற்றி உற்சவம் நடைபெற உள்ளது. தொன்மையும் வரலாற்றுச்சிறப்பும் உடைய வடுவூர் ஸ்ரீ கோதண்டராமர் கோவில் சிறப்புகள் கீழ் கண்டவையாகும் காவிய நாயகன்அவதாரபுருஷனாகிய  ராமன், தந்தை தசரதனின் ஆணையின்படி 14 ஆண்டுகள் வனவாசம் மேற்கொண்டார். அடர்ந்த கானகத்தில் பர்ணசாலையில் சீதை மற்றும் இலக்குவனுடன் மரவுரி தரித்து காய்கனி உண்டு வசித்து  வந்தபோது, நாடு செல்ல வேண்டிய நிலை வந்தபோது  அங்குள்ள முனிவர்கள் அவரை அங்கேயே தங்கி இருக்கவேண்டும் என்று மன்றாடி கேட்டனர்.  அவதார நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு தான் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டதைக் குறித்து விளக்கி  ராமன் முனிவர்களை சமாதானப்படுத்தி மேற்கொண்டு செல்ல தடைவிதிக்கக்கூடாது என்று கூறினார். அப்போதும்  முனிவர்கள் சம்மதிக்கவில்லை. இதனால் ராமர் என்ன செய்வதென்று சிந்தித்தார். முடிவில் தன் கையாலேயே தன்வடிவத்தைத்தானே விக்ரகமாக செய்து தனது ஆசிரமத்து வாசலில் வைத்துவிட்டு உள்ளே சீதையுடன் இருந்தார். முனிவர்கள் மறுநாள்  ராமனை தரிசிக்க வந்தபோது, ஆசிரமத்து வாசலில் அழகெல்லாம் ஓர் உருவாய் திரண்ட வடிவழகுடன் கூடிய ராமர் செய்த விக்ரகத்தை வணங்கி  உள்ளே சென்றார்கள். அப்போது அவர்கள் ராமனிடம் இந்த தண்ட காரண்யத்தை விட்டுச் செல்லக்கூடாது என்று மீண்டும் வேண்டிக்கொண்டனர்.  அப்போது ராமன் நான் வேண்டுமா? அல்லது எப்போதும் உங்களை பிரியாத  ஆசிரமத்து வாசலில் உள்ள எனது அர்ச்சை உருவம் வேண்டுமா? என்று கேட்டார். ராமனின் விக்ரகத்தின் அழகில் மெய் மறந்து இருந்த முனிவர்கள் அந்த திவ்ய விக்ரகத்தையே விரும்பினார்கள். உடனே விக்ரகத்தை முனிவர்களிடம் கொடுத்த ராமர் அங்கே எழுந்தருளிவிட்டார்.மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 21) ராமனின் பயணம்தண்டகாரண்யத்தில் இருந்த அந்த விக்ரகத்தை திருக்கண்ணபுரத்தில் ராமர் சன்னிதியில் பிரதிஷ்டை செய்து நீண்டகாலம் வழிபட்டு…

Continue Reading

குழந்தை பாக்கியம்பெற கோகுலாஷ்டமியில் பூஜை

இன்று கோகுலாஷ்டமி எனும் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை தமிழகத்திலும், ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த மதுராநகர் மற்றும் வட மாநிலங்களிலும் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாத சுக்லபட்ச அஷ்டமி, அத்தனைப் புண்ணியம் நிறைந்த நன்னாளாக மாறியதற்குக் காரணம் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த திருநாள் இது என்பதால்தான். தன் தங்கைக்குப் பிறக்கும் எட்டாவது குழந்தையால் தன் உயிருக்கு ஆபத்து என்பதை அறிந்து பதறினான் கம்சன். முதல்கட்டமாக தங்கை தேவகியையும் அவளின் கணவர் வசுதேவரையும் சிறையில் அடைத்து கண்கொத்திப் பாம்பாகப் பார்த்து வந்தான். எட்டாவது குழந்தைதான் நமக்கு வில்லன் என்றபோதிலும் பிறந்த ஒவ்வொரு குழந்தையையும் கொன்றான். பதறிப்போனார்கள் தம்பதியர். ஏழாவது குழந்தை பலராமர். தேவகியில் வயிற்றில் கருவாகியிருந்தார். அப்போது ஸ்ரீமகாவிஷ்ணு என்ன செய்தார் தெரியுமா. மாயாதேவியை (துர்கா தேவி) அழைத்தார். பலராமரின் கருவை, கோகுலத்தில் உள்ள நந்தகோபரின் மனைவியரில் ஒருவரான ரோகிணியின் கர்ப்பப்பைக்குள் வைக்கும்படி அருளினார். தவிர, மாயாதேவியை நந்தகோபரின் மற்றொரு மனைவியான யசோதையின் வயிற்றில் கருவாக வளரும்படி பணித்தார். எட்டாவதாக, கிருஷ்ண பகவான் தேவகியின் வயிற்றில் வளர்ந்தார். ஆவணி மாத சுக்ல பட்ச அஷ்டமியில் கிருஷ்ணர் அவதரித்தார். தாயும் தந்தையும் மகிழ்ந்து கொண்டாடினார்கள். அப்போது குழந்தையானது, ஸ்ரீமகாவிஷ்ணுவாக விஸ்வரூபம் எடுத்து காட்சி தர, வியந்து போனார்கள். இது வரம். ஏற்கெனவே வாங்கி வந்த வரம். இது நிகழ்ந்த நன்னாள்தான் ஆவணி சுக்லபட்ச அஷ்டமித் திருநாள். கிருஷ்ண ஜெயந்தி எனும் புனித நன்னாள். இந்த நாளில், வீட்டு வாசலில் இருந்து வீட்டுப் பூஜையறைக்குள் பகவான் ஸ்ரீகிருஷ்ணரை, குழந்தையாகவே பாவித்து நாம் வரவேற்று பூஜிப்பது வழக்கம். அனேக சமயங்களில் கோகுலாஷ்டமி ஆவணி மாதம் சுக்ல பக்ஷ அஷ்டமியில் ரோஹினி நக்ஷத்திரத்தோடு இணைந்து நிகழும். இந்த கிருஷ்ண ஜென்மாஷ்டமி தினத்தை வைஷ்ணவர்கள் ரோகினி நக்ஷத்திர அடிப்படையிலும் வைஷ்ணவரல்லாதோர் அஷ்டமியை அடிப்படையாக கொண்டும் அனுஷ்டிப்பார்கள். சில சமயங்களில் ஸ்மார்தர்களுக்கு அஷ்டமி திதியிலும் வைஷ்ணவர்களுக்கு ரோகிணி நக்ஷத்திரத்திலும் தனித்தனியாக நிகழ்வதும் உண்டு. இந்தமுறை அஷ்டமியும் ரோகிணியும் இணைந்து வருகிறது. இந்த கோகுலாஷ்டமி தினத்தில் அரிசிமாவில் மாக்கோலமிட்டு கிருஷ்ணர் பாதம் வரைந்து ஒவ்வொருவர் வீட்டுக்கும் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா வந்தருளியிருப்பதாக எண்ணி குதூகலிப்போம். மாலை வரை விரதமிருப்போம். அதன் பிறகு கிருஷ்ணருக்குப் பிடித்த உப்பு சீடை, வெல்ல சீடை, தேன்குழல், தட்டை, அதிரசம், கைமுறுக்கு, அப்பம் வெண்ணெய், அவல், பால், கற்கண்டு முதலான பட்சணங்களை நைவேத்தியம் செய்து பூஜிப்போம். ஸ்ரீ கிருஷ்ணர் ஜாதகமும் ஜோதிடமும் ஸ்ரீ கிருஷ்ணர் போன்ற தெய்வ திரு அவதாரங்கள் எல்லாம் நவ கோள்களுக்கெல்லம் அப்பார்பட்டவர்கள். எனவே தெய்வங்களுக்கு ஜாதகம் உண்டா இல்லையா என்ற ஆராய்ச்சியை விடுத்து ஸ்ரீ க்ருஷ்ணரின் அவதார குறிப்புகளைக் கொண்டு நம்முன்னோர்கள் நமக்களித்துள்ள ஜாதகத்தை இந்த கோகுலாஷ்டமி தினத்தில் நினைவுக்கூறுவது நன்மை பயக்கும். ஸ்ரீ கிருஷ்ண பகவான் ரிஷப லக்னம் ரிஷப ராசி சந்திரன் உச்சம். லக்னமும் ராசியும் ஒன்றாக அமைந்தால் ஜட ஜன்ம ராசி என்பார்கள். ஜட ஜென்ம ராசியில் பிறந்தவர்களும் ரிஷபத்தை லக்னமாகவோ…

Continue Reading

ஆறுமுகப் பெருமானுக்கு அணி சேர்க்கும் முக்கியத் திருவிழா

தமிழ் மாதங்களில் மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 9)quot;ஆடி #39;க்கும், quot;மார்கழி #39;க்கும் தனிப் பெருமை உண்டு. இவ்விரு மாதங்களையும் இறை வழிபாட்டிற்காகவே நம் முன்னோர்கள் அமைத்தனர். நன்றி Hindu முத்து மாரியம்மன் கோயில் திருவிழா

நவம்பர் மாதம் இந்த ராசிக்காரருக்கு பல நன்மைகள் உண்டாகும்: மாதப் பலன்

  12 ராசி அன்பர்களுக்கும் நவம்பர் மாத பலன்களை தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார்.  மேஷம்(அஸ்வினி, பரணி,  கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை: தன ஸ்தானத்தில் ராஹூ – களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், புதன் – அஷ்டம ஸ்தானத்தில் கேது – பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் – தொழில் ஸ்தானத்தில் குரு, சனி என கிரக நிலவரம் உள்ளது. கிரகமாற்றம்: 13-11-2021 அன்று குரு பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். 17-11-2021 அன்று புதன் பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: ஒரு குறிக்கோளை மனதில் வைத்து துணிவுடன் செயலாற்றும் மேஷராசியினரே நீங்கள் எடுக்கும் முடிவில் உறுதியாக இருப்பவர். இந்த மாதம் பல நன்மைகள் உண்டாகும். உங்கள் பேச்சு திறமை அதிகரித்து அதனால் பல காரியங்கள் சிறப்பாக நடந்துமுடியும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் அவர்களால் உதவி ஆகியவையும் கிடைக்கலாம். நீங்கள் செய்யும் காரியங்களுக்கு உதவுவதற்காக யாராவது ஒருவர் துணை நிற்பார்.  பகைகள் விலகும். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்ய எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் பிரச்சனைகள்  தொல்லை தராது.  போட்டிகள் விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர்ந்த நிலைக்கு வருவார்கள். உழைப்புக்கு பலன் கிடைக்கும். உங்கள் மீதான மதிப்பு உயரும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள், எதிர்ப்புகள் தீரும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் உங்களுக்கு பெருமை உண்டாகும். பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சக கலைஞர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும். கோபத்தை குறைத்து தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத செலவு இருக்கும். அரசியல் துறையினருக்கு தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும்  நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய தூண்டும். பிரிந்து சென்றவர்களை மீண்டும்  சந்திக்க நேரலாம்.  மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறவும், மேல்படிப்பு படிக்கவும் எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பரிகாரம்: செவ்வாய்க்கிழமையில் நவக்கிரகத்திற்கு தீபம் ஏற்றி வணங்கி வர சொத்து பிரச்சனை தீரும். குடும்ப குழப்பம் தீரும். அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் – வியாழன் – வெள்ளி சந்திராஷ்டம தினங்கள்: 6, 7 அதிர்ஷ்ட தினங்கள்: 1, 27, 28 **** ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை: ராசியில் ராஹூ – ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், புதன் – களத்திர ஸ்தானத்தில் கேது – அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன் – பாக்கிய ஸ்தானத்தில் குரு, சனி என கிரக நிலவரம் உள்ளது. கிரகமாற்றம்: 13-11-2021 அன்று குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். 17-11-2021…

Continue Reading