மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 21)

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 21 ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய் ஊற்ற முடையாய் பெரியாய் உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே துயிலெழாய் மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண் ஆற்றாது வந்துன் னடிபணியு மாபோலே போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்! பாடியவர் – பவ்யா ஹரி விளக்கம்: கண்ணன் அருளை வேண்டுகிற பாசுரம். “மடியின் கீழே பாத்திரத்தை வைத்தால், பொங்கப் பொங்கப் பாலைத் தவறாமல் சொரியக்கூடிய தன்மையைக் கொண்ட பெரிய பசுக்கள் பல கொண்ட  நந்தகோபனுடைய திருமகனே, எழுந்திருக்கவேணும். ஆழ்ந்த வலு கொண்டவனே,  பெருமை பொருந்தியவனே,  பேரொளியாக உலகத்தில் தோற்றம் தந்தவனே, பகைவர்கள் தங்களின் வலிமையை உன்னிடத்தில் தொலைத்து, உன் மாளிகை வாசலுக்கு வந்து உன் திருவடிகளில் பணிவது போலவே, நாங்களும் உன்னைப் புகழ்ந்து போற்றி வந்திருக்கிறோம்’ என்று கூறி, கண்ணனின்அருளை வேண்டுகிறார்கள்.  பாசுரச் சிறப்பு: மறைமுகமாகச் சிலவற்றைக் கண்ணனுக்குக் கூறுவதுபோல் அமைந்திருக்கும் பாசுரம் இது. “உன்னுடைய தந்தையிடம் இருக்கும் பசுக்களுக்கே, பாத்திரத்தை வைத்தால் பாலைப் பொழிய வேண்டுமென்னும் அறிவு இருக்கும்போது, வீட்டு வாசலில் வந்து வேண்டுகிற எங்களுக்கு அருள வேண்டுமென்று எண்ண மாட்டாயோ?’ என்று மொழிகிறார்கள். நந்தகோபன் மகனே என்றழைத்துவிட்டு, தொடர்ந்து, உலகினில் (அவதாரங்களாக) தன்னையே எம்பெருமான் வெளிப்படுத்திக் கொண்டதைக் குறிப்பிடுவதற்குக் காரணம் உள்ளது. “அவதாரம் எடுத்து ஆயர்பாடிக்கு வந்ததே எங்களுக்கு அருள்வதற்குத்தானே, இன்னும் என்ன தயக்கம்?’ என்பது உள்பொதிந்த வினா. ஊற்றம் என்பது உறுதி. அடியார்களுக்கு அருள வேண்டும் என்பதே ஆண்டவனின் ஊற்றம். தங்களின் ஆணவத்தைத் தொலைத்துப் பகைவர்கள் வந்ததைப் போல் “நாங்களும் ஆணவம் தொலைத்து வந்திருக்கிறோம்’ என்பது உள்பொதிந்த பணிவு. ஆணவம் தொலைத்தால்தான் ஆண்டவன் அருள் கிட்டும் என்பதை உணர்த்துகிற பாசுரம்.  ****** ஸ்ரீமாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி – பாடல் – 1   (திருப்பெருந்துறையில்  அருளியது) ராகு – கேது பெயர்ச்சி பலன்கள்: ரிஷபம் போற்றிஎன் வாழ்முதலாகிய பொருளே புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண் டேற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும் எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம் சேற்றிதழ்க் கமலங்கள் மலரும்தண் வயல்சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே! ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே. பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன் பாடியவர்கள் – ஆலவாய் அண்ணல் தேவாரப் பாடசாலை மாணவர்கள் விளக்கம்: பாவை நோன்பை நிறைவேற்றிய நிலையில், திருப்பள்ளியெழுச்சி தொடங்குகிறது. இறைவனைத் துயிலெழப் பாடுவதே திரு+பள்ளி+எழுச்சி ஆகும். “என் வாழ்க்கையின் முதல் பொருளாகத் திகழும் இறைவனே,  உனக்குப் போற்றி. பொழுது புலர்ந்தது. கழல் அணிந்த உன்னுடைய மலர்த் திருவடிகளுக்கு மலர் தூவி, உன்னைத் துதித்து, உன்னுடைய திருமுகத்தில் எங்களுக்காக மலர்கிற அழகுப் புன்னகையை எண்ணியவாறே உன்னைத் தொழுகிறோம். சேற்றில் செந்தாமரைகள் மலர்ந்துள்ள குளிர்ச்சிமிக்க வயல்கள் சூழ்ந்துள்ள திருப்பெருந்துறையில் எழுந்தருளியசிவபெருமானே, ரிஷபக் கொடி உடையவனே, என்னையும் ஆளாகக் கொண்டவனே, எம்பெருமான், பள்ளி…

Continue Reading

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 22)

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 22 அங்கண்மா ஞாலத் தரசர் அபிமான பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே சங்க மிருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம் கிங்கிணிவாய்ச் செய்த தாமரைப் பூப்போல செங்கண் சிறுச்சிறிதே யெம்மேல் விழியாவோ திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல் அங்கண் இரண்டும்கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல் எங்கள்மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய். பாடியவர் –  பவ்யா ஹரி விளக்கம்:   இந்தப் பாசுரமும் கண்ணனிடத்தில் அருளை வேண்டுவதே ஆகும். “பெரியதான இவ்வுலகினில் உள்ள அரசர்கள் பலரும், தங்களின் ஆணவத்தை விட்டொழித்து வந்து, உன்னுடைய சிம்மாசனத்தின்கீழ் கூட்டம் கூட்டமாக நிற்கிறார்கள். அதுபோன்றே, நாங்களும் உன்னுடைய திருவடிக்கீழ் வந்து நிற்கிறோம். தாமரைப்பூப் போன்ற செம்மைமிக்க உன் திருக்கண்களை மெல்ல மெல்லத் திறந்து எங்களைக் காணாயோ? சந்திரனும் சூரியனும் ஒருசேர உதித்ததுபோல், அழகிய கண்கள் இரண்டையும் எங்கள்மீது விழித்தாயென்றால், எங்கள் சாபங்கள் யாவும் அழிந்துவிடும்’ என்று நோன்பியற்றும் பெண்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.  பாசுரச் சிறப்பு:  இப்பாசுரமும்  ஆணவம் தொலைத்து வந்திருக்கும் தன்மையைக் காட்டுகிறது. கண்ணன் அரண்மனை வாயிலில் பெருங்கூட்டம் ஒன்று நிற்கிறது }ஆணவத்தைத் தொலைத்துவிட்டுக் கண்ணனுடைய நட்பைப் பெறவேண்டும் என்பதற்காக வந்து நிற்கிற கூட்டம். கடவுளை அணுகுவதற்குத் தடையாக இருப்பது ஆணவம். தடையை வென்று எம்பெருமானை அடையும் வழியை இவ்விரண்டு பாசுரங்களும் விளக்குகின்றன. “கிங்கிணி’ என்பது சலங்கையிலும் கொலுசிலும் காணப்படும் முத்துப்பரல்; இதற்குள்முத்துபோன்ற சிறு மணி இருக்கும். கிங்கிணி முழுவதுமாக மூடப்படாமல், பாதித் திறந்திருக்கும். அப்போதுதான், உள்ளிருக்கும் மணி உருள உருள, அதன் ஓசை இனிமையாக ஒலிக்கும். கூடுதலாக மூடினால், ஒலி கேட்காமல் மழுங்கும்; கூடுதலாகத் திறந்தால், உள்ளிருக்கும் மணி விழுந்துவிடும். கண்ணனைக் கண் விழிக்கச் சொல்பவர்கள், முழுவதுமாகக் கண்களைத் திறந்தால், தம்மால் தாங்க முடியா தென்பதால், “சிறுச்சிறிதே’ விழிக்கக் கோருகிறார்கள். கிங்கிணி தக்க அளவே திறந்திருப்பதுபோல், கண்களும் தக்க அளவு திறக்கவேணும்.  கடவுளின் கண்கள், நல்லவர்களுக்குச் சந்திரனாகவும் தீயவர்களுக்குக் கதிரவனாகவும் இருக்கின்றன. “எம் மேல்’, “எங்கள் மேல்’, “எங்கள் மேல்’ என்று மும்முறை வேண்டுவது, மிகவும் தீனர்களான தங்களின் நிலையைக் காட்டுவதற்காக எனக் கொள்ளலாம்.  ****** ஸ்ரீமாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி – பாடல் 2   ஜோதிட ரீதியான பரிகாரங்களை எப்போது செய்ய வேண்டும்? அருணன்இந் திரன்திசை அணுகினன்; இருள்போய் அகன்றது; உதயம்நின் மலர்த்திரு முகத்தின் கருணையின் சூரியன் எழஎழ நயனக் கடிமலர் மலரமற் றண்ணல்அங் கண்ணாம் திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர் திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே! அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே! அலைகட லேபள்ளி எழுந்தரு ளாயே!  பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன் பாடியவர்கள் – ஆலவாய் அண்ணல் தேவாரப் பாடசாலை மாணவர்கள் விளக்கம்: உதய நேரத்து நடப்புகள் நினைவூட்டப் பெறுகின்றன. “கதிரவனின் தேரோட்டியான அருணன், தன்னுடைய செவ்வொளியைப் பரப்பிக் கொண்டு, கிழக்கு திசையை நெருங்கிவிட்டான். இருள் அகன்றுவிட்டது. இது புறத்தே நிகழும் உதயம். நாங்கள் மற்றொரு உதயத்தை எதிர்நோக்கி நிற்கிறோம். இறைவா!…

Continue Reading

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 28)

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 28 கறவைகள் பின்சென்று கானம்சேர்ந் துண்போம் அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்றன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம் குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்றன்னோடு உறவேல் நமக்கிங் கொழிக்க ஒழியாது அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்றன்னைச் சிறுபே ரழைத்தனவும் சீறி யருளாதே இறைவா நீதாராய் பறையேலோ ரெம்பாவாய். பாடியவர் – பவ்யா ஹரி விளக்கம்: முந்தைய பாசுரங்கள் இரண்டிலும் தங்களுக்கு என்னென்ன பரிசுகள் வேண்டும் என்று விண்ணப்பித்த பெண்கள், தங்களுக்கு அருளும்படியாகக் கண்ணனிடம் கோரிக்கை வைக்கிறார்கள். "மாடுகளுக்குப் பின்னாலே சென்று, மேய்ச்சல் காட்டை அடைந்தவுடனேயே கையில் கட்டியெடுத்துச் செல்லும் சோற்றை உண்பவர்கள் நாங்கள். எங்கள் குலத்தில் வந்து கண்ணா, நீ தோன்றியுள்ளாய். உன்னோடு உடன் உறவாடும் அளவுக்கு எங்களுக்கு அறிவோதிறனோ இல்லையென்றாலும், நீ பிறந்துள்ள குலத்தில் நாங்களும் பிறந்துள்ளோம் என்பதே புண்ணியம். எத்தனைக் காலமானாலும், உன்னுடனான எங்களுடைய உறவை ஒழிக்கவோ பிரிக்கவோ இயலாது. நாங்கள் படிப்பறிவில்லாத சிறு பெண்கள். உன்னைப் பலவிதமாகப் பெயர்கள் கூறி அழைத்துவிட்டோம். சினம் கொள்ளாமல் எங்களுக்கு அருளவேணும்’ என்று பிரார்த்திக்கிறார்கள்.  பாசுரச் சிறப்பு: ஆயர்பாடியில் கண்ணன் பிறந்ததால், எத்தனை எத்தனைக் காலமானாலும் அந்த உறவு இருக்கத்தான் செய்யும். பற்பல தலைமுறைகளுக்குப் பின்னரும், "கண்ணன் எங்கள் மூதாதை’ என்று ஆயர்பாடியார் சொல்லிக்கொள்ள முடியும். அதுபோன்றே, எத்தனைப் பிறவிகள் எடுத்தாலும், இந்த உயிர் எம்பெருமானின் உடைமை என்று உறவு சொல்லிக்கொள்ள முடியும். ஜீவனுக்கும் பரமனுக்குமான உறவு, பிறவிகள் தோறும், மற்று, பிறவிகளுக்கு அப்பாற்பட்டும் தொடரும் என்பது உள்பொருள். "சிறுபேர்’ என்பது ஒருமையில் பெயர் சொல்லி அழைத்தல் ஆகும். எம்பெருமான் என்று தெரிந்த பின்னர் இவ்வாறு அழைக்கலாமோ? ஆயின், இங்குச் "சிறுபேர்’ என்பது பிறிதொன்று. எம்பெருமானாக இருப்பினும், சிறுவனாக வந்து, மாடும் கன்றும் மேய்த்து உடன் விளையாடுவதுதான் கண்ணனுக்கு மகிழ்ச்சி. தன்னை "நாராயணா’ என்று உயர்நாமம் சொல்லி அழைத்ததற்காகச் சீறுகிறானாம். எனவே, ஆயர்பாடி அவதாரத்திற்கே உரித்தான கோவிந்த நாமம் சொல்லி அழைக்கிறார்கள். இந்தப் பாசுரத்திலும் (குறையொன்றுமில்லாத கோவிந்தா) இதன் முன் பாசுரத்திலும் (கூடாரைவெல்லும் கோவிந்தா) இன்னும் இதன் மேல்பாசுரத்திலும் (அன்று காண் கோவிந்தா), கோவிந்த நாமம் சாற்றப்படுகிறது. செயல் பெருமையோஅறிவுப் பெருமையோ இல்லாத ஜீவன்கள், இறைவனின் உயர்வையும் இறைவனோடான உறவின் அருமையையும் உணர்ந்து, பணிந்து போற்றி வணங்குவதைக் காட்டுகிற} உணர்த்துகிற பாசுரம். எந்த விரதத்திற்கும், பணிவும் தன் கட்டுப்பாடுமே முக்கியம் என்பதை வலியுறுத்துகிற பாசுரம் எனலாம்.  ****** ஸ்ரீமாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி – பாடல் 8மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 29) முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய் மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார்? பந்தணை விரலியும் நீயும்நின் அடியார் பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே! செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித் திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி அந்தணன் ஆவதுங் காட்டிவந் தாண்டாய் ஆரமு தே!பள்ளி எழுந்தரு ளாயே.  பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன்  பாடியவர்கள் –…

Continue Reading

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 18)

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 18 உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன் நந்தகோ பாலன் மருமகளே நப்பின்னாய்! கந்தங் கமழுங் குழலி! கடைதிறவாய் வந்தெங்கும் கோழி அழைத்தனகாண் மாதவிப் பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண் பந்தார் விரலி உன் மைத்துனன் பேர்பாட செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய். பாடியவர் – பவ்யா ஹரி விளக்கம்:  கண்ணனுடைய திருவாட்டியான நப்பின்னை எழுப்பப்படுகிறாள். "வலிமைமிக்க யானைகளைக் கொண்டவனும் போர்க்களத்தில் புறமுதுகு காட்டாதவனும் தோள்வீரம் செறிந்தவனுமான நந்தகோபனுடைய மருமகளே, நறுமணம் வீசும் கூந்தலைக் கொண்டவளே, கதவைத் திற. எல்லா இடங்களுக்கும் பரவிய கோழிகள் ஒலியெழுப்புகின்றன. குருக்கத்திப் பந்தல்களில் குயில்கள் அமர்ந்து கூவுகின்றன. பந்தைப் பிடித்திருப்பவளே! உன் கணவனின் திருநாமத்தை நாங்கள் பாடுகிறோம். உன்னுடைய கைவளைகள் ஒலிக்க வந்து, உன்னுடைய தாமரைக் கைகளால் கதவைத் திற’ என்று விண்ணப்பிக்கிறார்கள்.  பாசுரச் சிறப்பு: பிராட்டியின் வழியாகவே பிரானை அணுக வேண்டும் என்பது மரபு. அவ்வகையில், நப்பின்னையை அணுகித் தங்களுக்கு அருளப் பிரார்த்திக்கிறார்கள். விடியலின் அடையாளங்களாகக் கோழிகளின் குரலையும் குயில்களின் பாட்டையும் உணர்த்துகிறார்கள். ஆயர்பாடியில், கண்ணனுக்கு நப்பின்னையே பட்டமகிஷி. "பந்தார் விரலி’ என்னும் தொடர் சிறப்பு. ஒரு கையில் பூப்பந்தைப் பற்றியிருக்கும் நப்பின்னை, இன்னொரு கையில் கண்ணனைப் பற்றியிருக்கிறாள். அதாவது, ஒரு கையில் உடைமை, ஒரு கையில் உடையவன். இது போன்றே, உடைமைகளான நம்மை (ஜீவன்கள்) ஒரு கையில் பற்றிக்கொண்டு போய், இன்னொரு கையிலுள்ள எம்பெருமானிடம் சேர்க்க வல்லவள் பிராட்டி என்பதை உணர்த்தும் தொடர். பிராட்டியின் புருஷகாரத்தைச் (ஜீவன்களுக்காகப் பெருமானிடம் பரிந்துரைக்கும் பாங்கு) சிலாகிக்கும் பாசுரம் அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – பாடல் 18 அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும் விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற்போல்செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை நல்லதா? கெட்டதா? கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத் தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப் பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர் விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக் கண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல்பாடிப் பெண்ணே!இப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய். பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன் பாடியவர்கள் : ஆலவாய் அண்ணல் பாடசாலை மாணவர்கள் பாடியவர் – மயிலை சற்குருநாதன் பாடியவர் – பொன் முத்துக்குமரன் விளக்கம்: ஒளிப்பிழம்பாகத் தோற்றம் தந்த இறைவன், அண்ணாமலையானாக நிற்கிறான். இந்த இறைவனின் திருவடியில், தேவர்கள் வந்து வணங்குகின்றனர். இவ்வாறு வந்து வணங்கித் தாள் பணிகையில், அவர்களின் தலைகளில் தாங்கியிருக்கும் கிரீடங்களின் நவரத்தின ஒளி குன்றுகிறது. இந்தக் காட்சியைக் காலை விடியலுக்கு ஒப்பாக்குகின்றனர் இப் பெண்கள். இரவு நேரம், வானில் நிலவு தெரியும்; விண்மீன்கள் சுடரும். சூரியன் மெல்ல மெல்லத் தலைக்காட்டும்போது, விண்மீன்கள் மெதுவாக மறையத் தொடங்கும்; சந்திரனும் காணாமல் போகும். சிறிது பொழுதில், மொத்தமாகக் கதிரவக் கதிர்கள் நிறையும். இத்தகைய விடியல் காட்சியை விவரிக்கிறார்கள். இப்படிப்பட்ட விடியல் பொழுதில், "பெண் வடிவங்களாக, ஆண் வடிவங்களாக, இரண்டுமில்லா அலி வடிவங்களாக, இவையும்…

Continue Reading

திருமணப் பொருத்தம் என்பது தேவையான ஒன்றா?

இந்தக் கட்டுரையை முழுவதுமாகப் படித்த பின்னர், படிப்பவர்கள் நீங்களாகவே முடிவு செய்யுங்கள், “திருமணப் பொருத்தம் தேவையான ஒன்றா, இல்லையா” என்று காதலிப்பவர்களுக்கு, திருமணப் பொருத்தம் தேவையா ? காந்தர்வ திருமணம் எனும், காதல் திருமணத்திற்கு, ஜோதிடத்தில்  திருமணப் பொருத்தம் தேவை இல்லை, மனப்பொருத்தம் மட்டுமே தேவை. அதே சமயம் அவர்களின் ஜாதகத்தில், ஷஷ்ட்டாஷ்டகமாக இருவரின் லக்கினம் மற்றும் ராசி உள்ளதா என காணுதல் அவசியம்.  அதாவது பெண்ணின் ஜாதகத்தின் லக்கினத்தில்  இருந்து, ஆணின் ஜாதகத்தில் உள்ள லக்கினம், 6 ஆகவோ அல்லது 8 ஆகவோ வரக்கூடாது. அப்படி இருப்பின், ஒரு ஜோதிடர் அவர்களுக்கு எச்சரித்தல் அவசியம். அதாவது, காதலிக்கும் இருவரும் மனம்விட்டு பேசுங்கள், ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொள்ளுங்கள் என்று மட்டும் சொல்லிவிடுவது நல்லது இந்த ஷஷ்டாஷ்டகம் இல்லாதவர்களை, சேர்ப்பதில் தவறேதும் இல்லை என்பது, எனது கருத்து. காரணம், அவர்கள் இருவரையும் கடவுளே இணைத்திருப்பதாக கருதுதல் அவசியம் ஆகிறது. அதனால், திருமணப்பொருத்தம் காண வரும் ஜாதகங்களுக்கிடையே (ஒரு ஆண், ஒரு பெண் ஜாதகத்தில் ) அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ தனித்தனியாகவோ காதல் வயப்பட்டுள்ளனரா என காணுதல், ஒரு ஜோதிடரின் முதல் கடமை ஆகிறது. இதனை அறிந்து, பின்னரே, பொருத்தம் பார்த்தால் சரி ஆகும். இந்த காலகட்டத்தில், காதல் பல விபரீதங்களை உருவாக்குகிறது. ஒரு பெரிய அனுபவம் மிக்க ஜோதிடரால் கூட சரியான  தீர்வை உடனடியாக கூறிவிட முடியாத விஷயம். என்னவென்றால், “திருமண பொருத்தம்” ஒன்று மட்டும் தான். கலாசார மாற்றம் அதிகரிக்க அதிகரிக்க,  திருமணப் பொருத்தம் என்பது மிகவும் கடினமானதாக உள்ளது என்பது, ஒரு மறுக்க முடியாத உண்மை ஆகும். திருமணப் பொருத்தத்திற்கு முன்பாக ஒரு ஜோதிடர் காண வேண்டியது என்னவென்றால், 1. பொருத்தம் பார்க்க வந்த ஜாதகத்தில் இருவரும் (பையன் மற்றும் பெண் ) காதலிக்கிறார்களா அல்லது யாரேனும் ஒருவரோ அல்லது இருவருமோ காதல் வயப்பெற்றிருக்கிறாரா? என்பது 2. இவர்களுக்குள் திருமணம் நடக்குமா? 3. நிச்சயம் பண்ணிய பிறகு திருமணம் நின்று போகுமா? என முதலில் பார்க்கவேண்டும். ஏன் என்றால், திருமணம் என்பது இரு இதயங்களை, இரு உள்ளங்களை, இரு குடும்பத்தை இணைக்கிறது, என்பதனை யாரும் மறுக்க முடியாது. பொருத்தம் என்பது மூன்று வகையானது 1. ஜாதக ரீதியான ஆய்வு, கிரக பலம் மற்றும் பாவ பலம் ஆய்வு. 2.  தற்போது நடைபெறுவது, திருமணத்தை நடத்தி வைக்கும் தசாபுத்தியா? அது இருவருக்கும் மகிழ்ச்சியை அளிக்குமா அல்லது கசப்பைத் தருமா ! 3. திருமணம் ஆன பிறகு, தம்பதியர் இருவருக்குள், பிரிவினை வருமா? என்பதனை, “தோஷ சாம்யம்” எனும் ஜோதிட ஆய்வு மூலம் அறிவதாகும். ஏன் என்றால், ஒருவர் திருமணத்திற்கு முன்பு பெரிய நிலையில் இருக்கிறார். திருமணத்திற்கு பின் மிகவும் தாழ்ந்த நிலைக்கு தள்ளப்படுகிறார். அதுவே வேறு ஒருவர், திருமணத்திற்கு முன்பு தாழ்ந்த நிலையில் இருக்கிறார். திருமணத்திற்கு பின்னர் மிக உன்னத நிலையை அடைகிறார்….

Continue Reading

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 17)

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 17 அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும் எம்பெருமான் நந்தகோ பாலா எழுந்திராய்! கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே! எம்பெரு மாட்டி யசோதாய் அறிவுறாய் அம்பர மூடறுத் தோங்கி உலகளந்த உம்பர்கோ மானே! உறங்கா தெழுந்திராய் செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா! உம்பியும் நீயும் உறங்கலோ ரெம்பாவாய். பாடியவர் – பவ்யா ஹரி விளக்கம்: நந்தகோபன் வீட்டிற்கு வந்த பெண்கள், உள்ளே அனுமதிக்கப் பட்டுவிட்டார்கள் என்று தெரிகிறது. உள்ளே வந்து, நந்தகோபனையும் யசோதை பிராட்டியையும் பலராமனையும் கண்ணனையும் எழுப்புகிறார்கள். “சோறும் நீரும் ஆடையும் எங்களுக்கு வழங்குகிற நந்தகோபனே, எழுந்திருக்க வேணும். பெண்களுக்கெல்லாம் கொழுந்து போன்றவளே, ஆயர் குலத்தின் விளக்கானவளே, எம்பெருமாட்டி யசோதையே, உணர்ந்தெழுந்திருக்க வேணும். வாமனனாகத் தோன்றித் திரிவிக்கிரமனாக வளர்ந்து உலகை அளந்த தேவாதி தேவனே, கண்ணா, எழுந்திருக்க வேணும். ஆணிப் பொன்னால் செய்த வீரக்கழல்களை அணிந்த செல்வனே, பலராமனே, உன் தம்பியும் நீயும் எழுந்திருக்க வேணும்’ என்று வேண்டுகிறார்கள்.  பாசுரச் சிறப்பு: கீழ்ப் பாசுரம் போன்று, மூத்தோரின் துணைகொண்டு ஆண்டவனை அணுகும் முறையை வலியுறுத்துகிற பாசுரம். நந்தகோபனையும் யசோதையையும் முன்னிட்டுக் கொண்டு கண்ணனை அணுகுகிறார்கள். பலராமன் சகோதரன் என்பதால், தம்பியை எழுப்பும்படி வேண்டுகிறார்கள். “கொழுந்து’ என்னும் சொல்லாட்சி நோக்கத்தக்கது. செடிக்கு ஏதேனும் ஊறு நேருமென்றால், அந்த பாதிப்பில், துளிர்ப் பகுதியானகொழுந்துதான் முதலில் வாடும். அவ்வாறே, ஆயர் குலத்திற்கு ஏதேனும் ஊறு நேருமென்றால், முதலில் யசோதை பிராட்டி வாடுவாள். இராமாவதாரத்தில் இலக்குவனாக அவதரித்த ஆதிசேஷன், கிருஷ்ணாவதாரத்தில் பலராமன் ஆனான். எம்பெருமானோடு கூடவே இருந்து தொண்டு செய்யும் பேறு கிட்டியதால், “செல்வன்’ஆனான். பணம் அன்று, கைங்கரியமே செல்வம் ஆகும். சுவாமிக்கு ஆதிசேஷன் படுக்கை ஆவான். படுக்கை மீது ஒருவர் உறங்கக்கூடும். ஆனால் படுக்கையே உறங்கலாமா? என்னும் ஆதங்கம் தொனிக்கும் பாசுரம்.  அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – பாடல் 17 செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால் எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக்சக்கரம் ஏறி வடு மூலவரான ஸ்ரீ செல்வ விநாயகர் கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச் செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப் பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.  பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன் பாடியவர்கள் : ஆலவாய் அண்ணல் பாடசாலை மாணவர்கள் பாடியவர் – மயிலை சற்குருநாதன் பாடியவர் – பொன் முத்துக்குமரன்  விளக்கம்: நோன்பியற்றும் பெண்கள், பேரின்ப நிலை தருகிற இறைவனைப் போற்றித் துதிப்போம் என்றுரைக்கும் பாடல். “திருமாலிடத்து, பிரம்மாவினிடத்து, தேவர்களிடத்து என்று யாரிடமும் இதுவரை காட்டாத அன்பினை நம்மிடம் காட்டி, நமக்குப் பேரின்பம் தருகிற வகையில், நம்முடைய இல்லங்களுக்கே எழுந்தருளி, நம்முடைய குற்றங்களையும் வினைத் துன்பங்களையும் போக்கி, தன்னுடைய தாமரைத் திருவடிகளை நமக்காகத் தருகின்ற வீரனை, அருள் பார்வை பார்க்கும் இறைவனை, நமக்கு அரும்பெரும் அமுதமாக இருப்பவனை, நம்முடைய…

Continue Reading

ஒரே ஜாதகத்தைப் பற்றி ஜோதிடர்களின் வெவ்வேறு கருத்துகள் ஏன்?

ஒரு ஜோதிடர், ஜாதகத்தில் ஒரே கிரக சீரமைப்பைப் பற்றி மற்றொரு ஜோதிடரை விட வேறுபட்ட புரிதலையும் விளக்கத்தையும் கொண்டிருக்கலாம், இதனால் வெவ்வேறு கருத்துகள் எழுகின்றன. ஒரு ஜோதிடரின் பார்வையைப் பாதிக்கும் மற்றொரு காரணி அவர்களின் அனுபவமும் பயிற்சியும் ஆகும். சில ஜோதிடர்கள் பல ஆண்டுகளாகப் பயிற்சி செய்து வருகின்றனர், மற்றவர்கள் சமீபத்தில் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கியிருக்கலாம். அதிக அனுபவம் உள்ளவர்கள் ஜாதகத்தை விளக்குவதில் இந்தத் துறையில் புதியவர்களை விட வேறுபட்ட அணுகுமுறையைக் கொண்டிருக்கலாம். ஜோதிடப் பயிற்சியும் ஒரு ஜோதிடரின் பார்வையில் குறிப்பிடத்தக்கப் பங்கை வகிக்கிறது. வெவ்வேறு ஆசிரியர்கள் வெவ்வேறு நுட்பங்களை வலியுறுத்தலாம், இதன் விளைவாக ஒரே ஜாதகத்திற்கு வெவ்வேறு விளக்கங்கள் கிடைக்கும். இருப்பினும், அனுபவம் வாய்ந்த ஜோதிடர்கள் இறுதியில் தங்கள் தனித்துவமான கண்ணோட்டத்தை வளர்த்துக் கொள்கிறார்கள், இதனால் வித்தியாசமாகப் பயிற்சி பெற்ற ஜோதிடர்களுடன் உடன்படுவது அவர்களுக்குக் கடினமாகிறது. நேரம் மற்றும் இடம் ஒரு ஜோதிடரின் பிறப்பு நேரம் மற்றும் இடம் அவர்களின் ஜாதக விளக்கத்தில் ஒரு பங்கை வகிக்கிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் பிறந்த ஜோதிடர்கள் வெவ்வேறு ஜோதிட மரபுகளுக்கு ஆளாகியிருக்கலாம், இதனால் வெவ்வேறு கருத்துகள் எழலாம். அதேபோல், வெவ்வேறு காலங்களில் பிறந்தவர்களுக்கு வெவ்வேறு கிரக தாக்கங்கள் இருக்கலாம், இதன் விளைவாக ஜாதகங்களின் வெவ்வேறு விளக்கங்கள் ஏற்படலாம். கூடுதலாக, ஜோதிடம் உருவாகி வருகிறது, மேலும் வெவ்வேறு காலங்களில் பயிற்சி பெற்ற ஜோதிடர்கள் வெவ்வேறு கண்ணோட்டங்களைக் கொண்டிருக்கலாம். உதாரணமாக, 50 ஆண்டுகளுக்கு முன்பு பயிற்சி பெற்ற ஒரு ஜோதிடர், கடந்த ஆண்டு பயிற்சி பெற்ற ஒரு ஜோதிடரை விட ஜாதகத்தை விளக்குவதில் வேறுபட்ட அணுகுமுறையைக் கொண்டிருக்கலாம். இந்த கட்டுரையில், ஒரே ஜாதகத்தைப் பற்றி வெவ்வேறு ஜோதிடர்கள் வெவ்வேறு கருத்துக்களை வழங்குவதற்கான காரணங்களைக் காணலாம்.. ஜோதிடத்தில் சிக்கலான தன்மை ஜோதிடம் என்பது வான உடல்களின் நிலைகள் மற்றும் இயக்கங்கள் மற்றும் மனித வாழ்வில் ஏற்படும் விளைவுகளைப் படிப்பதை உள்ளடக்கிய ஒரு சிக்கலான அறிவியல் ஆகும். ஜாதகங்களை விளக்குவதற்கு வெவ்வேறு ஜோதிடர்கள் வெவ்வேறு முறைகள் மற்றும் அணுகுமுறைகளைக் கொண்டுள்ளனர், இதன் விளைவாக வெவ்வேறு கருத்துகள் ஏற்படலாம். விளக்கத்தின் அகநிலைத்தன்மை ஜாதகங்களின் விளக்கம் அகநிலை சார்ந்தது மற்றும் ஜோதிடரின் அனுபவம், அறிவு மற்றும் உள்ளுணர்வைப் பொறுத்தது. விளக்க முறைகளில் சிறிய வேறுபாடு கருத்து வேறுபாடுகளுக்கு வழிவகுக்கும், வெவ்வேறு மருத்துவர்கள் ஒரு நோயைப் பற்றி வெவ்வேறு நோயறிதல்களையும் கருத்துக்களையும் கொண்டிருக்கலாம். ஜோதிட அமைப்புகளில் மாறுபாடுகள் வேத ஜோதிடம், மேற்கத்திய ஜோதிடம் மற்றும் சீன ஜோதிடம் போன்ற ஜோதிடத்திற்கு வெவ்வேறு அணுகுமுறைகள் மற்றும் அமைப்புகள் உள்ளன. ஒவ்வொரு அமைப்புக்கும் அதன் சொந்த விதிகள் மற்றும் விளக்கங்கள் உள்ளன, அவை வெவ்வேறு கருத்துகளுக்கு வழிவகுக்கும். உதாரணமாக, மேற்கத்திய ஜோதிடம் பூமியின் பருவங்களை அடிப்படையாகக் கொண்ட வெப்பமண்டல ராசியைப் பயன்படுத்துகிறது, அதே நேரத்தில் வேத ஜோதிடம் நிலையான நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட நட்சத்திர ராசியைப் பயன்படுத்துகிறது. எனவே, மேற்கத்திய அமைப்பைப் பயன்படுத்தும் ஒரு ஜோதிடர் வேத அமைப்பைப் பயன்படுத்தும்…

Continue Reading

உங்கள் ராசிக்கு இந்த டிசம்பர் மாதம் எப்படி இருக்கும்?

  டிசம்பர் மாதத்துக்கான ராசிப்பலன்களை தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார்.    மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராஹூ – களத்திர ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் – அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், புதன், செவ்வாய் – பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் – தொழில் ஸ்தானத்தில் சனி – லாப ஸ்தானத்தில் குரு என கிரகநிலை உள்ளது. கிரகமாற்றங்கள்: 04-12-2021 அன்று புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்க்கு மாறுகிறார். 05-12-2021 அன்று சுக்ர பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்க்கு மாறுகிறார். 06-12-2021 அன்று செவ்வாய் பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்க்கு மாறுகிறார். 28-12-2021 அன்று புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்க்கு மாறுகிறார். பலன்: எதையும் சமாளித்து குறுகிய காலத்தில் முன்னுக்கு வரும் திறன் உடைய மேஷ ராசியினரே நீங்கள் ரத்த சம்பந்தமான உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பவர். இந்த மாதம் எதையும் சமாளிக்கும் திறமை உண்டாகும். அடுத்தவர்களது செய்கை உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தலாம். எனவே நிதானமாக இருப்பது நல்லது. சொந்த காரியங்களில் தாமதம் ஏற்படலாம். சின்ன விஷயங்களால் மன நிறைவை அடைவீர்கள். எதிர்பாலினரிடம் பழகும் போது கவனம் தேவை.  தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். மருந்து, ரசாயனம் போன்ற தொழில்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான காரியங்களில் ஈடுபடும் போது அவசரப்படாமல் நிதானமாக செயல்படுவது காரிய வெற்றியை உண்டாக்கும். எளிதில் மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்பட வாய்ப்பு உண்டு. குடும்பம் தொடர்பான கவலைகள் மறையும். குடும்ப செலவை சமாளிக்க  பணவரத்து இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதில் ஆன்மீக எண்ணங்கள் ஏற்படும். வாழ்க்கை துணை மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும். பெண்களுக்கு அடுத்தவர்கள் செயல்கள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். எனவே  நிதானமாக செயல்படுவது நன்மையை தரும். எந்த பிரச்சனையையும் சமாளிக்கும் திறமை  கூடும். கலைத்துறையினருக்கு நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். தேவையான  பொருள்களை வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக செய்ய நினைத்த ஒரு காரியத்தை செய்து முடிப்பீர்கள். மதிப்பும், மரியாதையும் வரும். அரசியல் துறையினருக்கு மனஸ்தாபம் நீங்கும். நண்பர்களிடையே சுமூக உறவு இருக்க விட்டு கொடுத்து செல்வது நல்லது. வாழ்வில் முன்னேற அக்கறை காட்டுவீர்கள். மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி  திருப்திகரமாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டி குறையும். எதையும் அவசரப்படாமல் நிதானமாக செய்வது நல்லது.   அஸ்வினி: இந்த மாதம் குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். உங்களது கருத்துக்களுக்கு மாற்று கருத்துக்கள் இருக்காது. கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகளின் செயல்பாடுகள் மனதிருப்தியை தரும். வேடிக்கை வினோதங்களை கண்டு களிக்கும் சூழ்நிலை ஏற்படலாம். தொலைதூர தகவல்கள் மன மகிழ்ச்சியை தருவதாக இருக்கும். பயணங்களால் சாதகமான பலன் கிடைக்கும்….

Continue Reading

மாா்கழி வழிபாடு-2: திருப்பாவை,  திருவெம்பாவை (பாசுரம் 2)

  ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 2 வையத்து வாழ்வீா்காள்! நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் அடிபாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி மையிட் டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம் செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம் ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி உய்யுமா றெண்ணி உகந்தேலோா் எம்பாவாய்! திருப்பாவை – பாடியவர் புவனேஸ்வரி  விஸ்வநாதன் பாடியவர் – பவ்யா ஹரி விளக்கம்:உலகத்தில் வாழ்வோரே என்று அனைவரையும் அழைக்கிற ஆண்டாள்,நோன்பில் செய்ய வேண்டியவற்றை வரிசையாகக் கூறுகிறாள். ‘திருப்பாற்கடலில் கண்வளரும் எம்பெருமானின் திருவடிகளைப் போற்றிப் பாடுவோம்; அதிகாலையில் நீராடுவோம்; நெய்யும் பாலுமான உணவுகளை உண்ணமாட்டோம்; நீராடி வந்தபிறகு, பெண்கள் வழக்கமாகத் தங்களை அலங்கரித்துக் கொள்ளும் வகையில் கண்களில் மைதீட்டி, முகம் திருத்தி, கூந்தலில் மலா் சூடுவது போன்றவற்றைச் செய்யமாட்டோம் (எங்களை அலங்கரித்துக் கொள்ளமாட்டோம்); எங்கள் பெரியவா்கள் செய்யகூடாது என்று தடுத்தவற்றைச் செய்யமாட்டோம்; பிறா் பற்றி அவதூறு பேசி, கோள் சொல்லமாட்டோம். எங்களால் முடிந்த அளவுக்கு ஐயம் இடுவோம், பிச்சை இடுவோம்.’ பாசுரச் சிறப்பு:என்னவெல்லாம் செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்பதை விளக்குகிற பாசுரம் இது. ‘டூ’ஸ்அண்ட்டோண்ட்’ஸ்’ என்று மேலாண்மையில் கூறுவதுபோல், செய்வன (கடைப்பிடிகள்),செய்யக்கூடாதன (விலக்கடிகள்) என இரண்டையும் பட்டியலிடும் சிறப்புக்குரியது. ‘ஐயம்’ என்பது உயா்ந்தவா்களுக்கும் தக்கவா்களுக்குமிடுவது; ‘பிச்சை’ என்பது அனைவருக்கும் இடுவது. அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை- பாடல் – 2 திருவண்ணாமவையில் அருளியது பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்பகல் பத்து 10-ம் திருநாள்: மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் பேசும்போ தெப்போதிப் போதா ரமளிக்கே நேசமும் வைத்தனையோ? நேரிழையாய் நேரிழையீா்! சீசி யிவையுஞ் சிலவோ விளையாடி ஏசு மிடமீதோ? விண்ணோா்கள் ஏத்துதற்குக் கூசு மலா்ப்பாதம் தந்தருள வந்தருளும் தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள் ஈசனாா்க் கன்பாா்யாம் ஆரேலோா் எம்பாவாய்! பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன் பாடியவர் – மயிலை சற்குருநாதன் பாடியவர் – கரூர் சுவாமிநாதன் விளக்கம்: நோன்புக் களத்திற்குச் (நோன்பு செய்கிற இடம்) செல்வதற்காகப் புறப்பட்டு வரும் பெண்கள், இன்னும் புறப்படாமல் உள்ளே உறங்குகிற பெண்ணை அழைக்கிறாா்கள். பகலும் இரவும் தோழிப் பெண்களான இவா்கள் அளவளாவிக்கொண்டே இருப்பாா்கள். இவ்வாறு பேசும்போதெல்லாம், ‘என்னுடைய அன்பு முழுவதும் பரமனுக்குத்தான்’ என்று வாய்ச் சாலாக்குப் பேசியவள், இப்போது எழுந்திராமல் உறங்குகிறாள். ‘அணிமணிகள்அணிந்தவளே! பரமனுக்குப் பாசமா? படுக்கைக்குப் பாசமா?’ என்று கிண்டல் செய்கிறாா்கள். உள்ளிருந்து அவள் உடனே கூறுகிறாள்: ‘தோழிகளே! உங்கள் வாயிலிருந்து இகழ்வுச் சொற்கள் வரலாமா? விளையாடிப் பழிக்கும் நேரம் இதுவோ? இதைக் கேட்டவுடன், ‘தேவா்கள் போற்றினாலும் கொடுத்தருள்வதற்கு நாணுகிற திருவடிகளை, எளியவா்களானநமக்குக் கொடுப்பதற்காக எழுந்தருளியிருக்கும் திருக்கயிலாய நாதனும் தில்லைச்சிற்றம்பலத் தேவனுமான இறைவனின் அன்பு எங்கே? கேலிப் பேச்சு பேசும் நாம் எங்கே?’ என்று கூறி நோன்புக்குச் சித்தமாகிறாா்கள். பாடல் சிறப்பு:பாவை பாடல்கள், உரையாடல் முறையில் அமைவது வழக்கம். இறைவனிடம் உள்ளத்தைச் செலுத்தாமல், வேண்டாதவற்றில் செலவிடுதலைத் தவிா்க்கக்கூறும் இப்பாடலில், உள்ளும் புறத்தும் இருப்பவா்கள்…

Continue Reading

வரலட்சுமி விரதம்: பூஜை செய்யும் முறையும், பலன்களும்!

  தீர்க்க சுமங்கலியாக வாழப் பெண்கள் வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கின்றனர். செல்வங்களுக்கும் அதிபதியான மகாலட்சுமியின் அருள் வேண்டி செய்யப்படும் விரதம். ஒவ்வொரு ஆண்டும் ஆடி அல்லது ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமை வரலட்சுமி பூஜை நோன்பு நாளாகும்.  மகாலட்சுமியை தனலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தானலட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என அஷ்டலட்சுமிகளாகப் பிரித்துள்ளனர். எட்டு வகை செல்வங்களை வாரி வழங்குபவள். திருமாலின் மார்பில் குடியிருப்பவள். பெண்களுக்கே உரித்தான கருணை உள்ளம், அழகு, வெட்கம், அன்பு, புத்தி ஆகியவற்றிற்கு அதிபதியும் அவளே. வரலட்சுமி விரதம் இருப்பதால் பல நன்மைகள் கிடைக்கும்.  புராணக் கதைகள் சித்திரநேமி என்ற தேவகுலப் பெண் நீதிபதியாக இருந்தாள். அவள் தேவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு நடுவராக இருந்து தீர்ப்பு வழங்குவாள். ஒருமுறை அவள் பாரபட்சமாக நடந்துகொண்டதால் அன்னை பார்வதி அவளை குஷ்டரோகியாகும்படி சாபம் கொடுத்தாள். சித்திரநேமி சாபவிமோசனம் கேட்டு பார்வதியில் காலில் விழுந்தாள். வரலட்சுமி விரதத்தை கடைப்பிடித்தால் நோய் நீங்கும் என பார்வதி அருள் செய்தாள். அவள் பூலோகம் வந்து, ஒரு குளக்கரையில் அமர்ந்து வரலட்சுமி பூஜை செய்து சாபம் நீங்கப் பெற்றாள்.  மகத நாட்டில் வசித்த ராணி சுசந்திரா, செல்வ வளத்தின் மமதையால், மகாலட்சுமியை அவமதித்தாள். அதனால், அனைத்து செல்வங்களையும் இழந்து வருந்தினாள். சுசந்திராவின் மகள் சாருமதி, தெய்வ அனுகூலத்தால் வரலட்சுமி விரதம் பற்றி அறிந்து, அதைக் கடைப்பிடித்தாள். அதனால் மகிழ்ந்த மகாலட்சுமித் தாய், அவளுக்கு சகல நலன்களையும் அருளினாள். சுசந்திராவும் தன் மகளைப் பார்த்து வரலட்சுமி விரதம் கடைப்பிடித்து, இழந்த செல்வத்தை மீண்டும் பெற்று வளமோடு வாழ்ந்தாள். எப்படி பூஜை செய்வது? அவரவர் குடும்ப வழக்கப்படி பூஜை செய்யலாம். பூஜைக்குத் தேவையானவற்றை அருகில் வைத்துக்கொண்டு பூஜையைத் தொடங்கவும். தேவையான பொருட்கள்  மஞ்சள் பொடி (பிள்ளையார் பிடிக்க), நுனிவாழை இலை, அரிசி, தேங்காய், எலுமிச்சம்பழம், குங்குமம், சந்தனம், புஷ்ப வகைகள், வெற்றிலை, பாக்கு, பழம், கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, அட்சதை, வஸ்திரம், மஞ்சள் சரடுகள், பஞ்சாமிர்தம், குத்துவிளக்கு, திரிநூல், நல்லெண்ணெய், தீப்பெட்டி, தாம்பாளம், பஞ்சபாத்ரம், கிண்ணம், கற்பூரத் தட்டு, தூபக்கால், தீபக்கால், மணி ஆகியவை. நிவேதனப் பொருள்கள் வசதிக்கேற்ப அப்பம், வடை, பொங்கல், கேசரி போன்ற நைவேத்யங்கள் படைத்து கும்பத்தில் மஞ்சள் நோன்பு கயிறுகள் வைத்து பூஜை செய்ய வேண்டும். பழ வகைகளில் ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், வாழை, திராட்சை பூஜைக்கான முன்னேற்பாடுகள்ராகு – கேது பெயர்ச்சி பலன்கள்: மேஷம் வீட்டின் கிழக்கு திசையில் ஈசான்ய மூலையில், பூஜைக்கான இடத்தை அமைத்து, நன்றாக மெழுகி, கோலமிட்டு, மண்டபம் அமைத்து, அலங்கரிக்கவும். மண்டபத்தின் கீழ் நுனி வாழை இலையில் நெல்லைப் பரப்பி, அதன் மீது ஒரு தட்டில் அரிசியை வைக்க வேண்டும். அதன் மேல் கலச கும்பத்தை வைக்க வேண்டும். அரிசி, தங்கம், ரத்தினம் ஆகியவற்றை கும்பத்தில் நிரப்பவும் (தீர்த்தத்தையும் நிரப்பலாம்). மேலே மாவிலைக் கொத்தும் தேங்காயும் வைத்து அலங்கரித்து, புதிய…

Continue Reading

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 15)

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 15 எல்லே இளங்கிளியே இன்னும் உறங்குதியோ? சில்லென் றழையேன்மின் நங்கைமீர் போதருகின்றேன் வல்லைஉன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும் வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை எல்லாரும் போந்தாரோ? போந்தார்போந் தெண்ணிக்கொள் வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க வல்லானை மாயனைப் பாடலோர் எம்பாவாய்! பாடியவர் – பவ்யா ஹரி  விளக்கம்:   துயிலெடையின் நிறைவுப் பாசுரமான இதனில், உள்ளும் புறத்துமாக நடைபெறும் உரையாடல் முழு வீச்சடைகிறது. இப்பொழுது அழைக்கப்பெறுபவள், எல்லோரிலும் இளையவள் போலும்! இதையே சொல்லி அழைக்கிறார்கள்.  புறத்திருப்பவர்கள்: “சின்னஞ்சிறிய கிளி போன்றவளே! இன்னமும் துயில்கிறாயோ?’  உள்ளிருப்பவள்: சிலீரென்றுஅழைக்காதீர்கள். இதோ வந்துவிட்டேன். புறம்: வாயாடாதே. உன் வாய் வார்த்தை எங்களுக்குத் தெரியும்.  உள்: நானா (வாயாடி)? நீங்கள்தான் வாய் வல்லவர்கள். சரி சரி. நானே இருந்துவிட்டுப் போகிறேன்.  புறம்: கிடக்கட்டும்.. சீக்கிரம் வா. வேறென்ன அதிசயம் கண்டாய்?உள்: எல்லோரும் வந்துவிட்டார்களா?  புறம்: வந்துவிட்டார்கள். வெளியில் வந்து எண்ணிக் கொள். வலிய யானையான குவலயா பீடத்தை அழித்தவனும், பகைவர்களின் பகைமையை அழிப்பவனுமான கண்ணனைப் பாடலாம், வா.  பாசுரச் சிறப்பு: திருவெம்பாவையின் நான்காவது பாடலில், எல்லோரும் வந்துவிட்டார்களா என்று வினவும் தன்மையை, இங்கு இப்பாசுரத்தில் காணலாம். பாவை பாடல்கள் உரையாடல்களாக அமையும் என்னும் இலக்கணமும் இலங்கக் காணலாம். குவலயாபீடம் என்னும் யானையை மதம் கொள்ளச் செய்து கண்ணனுக்கு ஆபத்து விளைவிக்க நினைத்தான் கம்சன் என்னும் நிகழ்ச்சி சுட்டப்படுகிறது. “திருப்பாவையாகிறது இப்பாட்டிறே’ என்று திருப்பாவையின் மையமாகச் சிலாகிக்கப்படுகிற பாசுரம். புறத்தே நிற்பவர்கள் குறை சொன்னவுடன் முதலில் மறுத்தவள், பின்னர் பணிந்து ஏற்றுக்கொள்கிறாள். தன்னிடம் இல்லாத குறையைப் பிறர் உரைத்தாலும் தன்னுடையதாகவே ஏற்றுக்கொள்ளுதல் அடியார் இயல்பு.  ஸ்வாப தேசத்தில், ஆழ்வார்களிலேயே கடைக்குட்டியான திருமங்கையாழ்வாரை இப்பாசுரம் குறிக்கிறது. அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – பாடல் 15ஆலங்குடியும் அஷ்ட திக்கு கோயில்களும் – மினி தொடர் ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான் சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப் பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள் பேரரையற் கிங்ஙனே பித்தொருவர் ஆமாறும் ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள் வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.  பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன் பாடியவர் – மயிலை சற்குருநாதன் பாடியவர் மயிலாடுதுறை சிவகுமார் விளக்கம்: இப்பெண்கள் கூட்டத்தில் ஒருத்திக்கு ஏற்பட்ட இறையனுபவத்தையும் இத்தகைய அனுபவத்தை அருளிய இறைவனாரின் பெருமையையும் கூறுகிற பாடல்.  பெண் அடைந்த நிலை: ஒவ்வொரு பொழுது, “எம்பெருமான், எம்பெருமான்’ என்று சிவனாரின் பெருமைகளை வாய் ஓயாமல் பேசுவாள். உள்ளத்தில் மகிழ்ச்சி நிறைந்ததால், கண்களில் இன்பக் கண்ணீர் இடைவிடாது பொழிய நிற்பாள். கீழே விழுந்து வணங்கியபடியே கிடப்பாள். சிறு தெய்வங்களைப் பணியமாட்டாள். இவ்வாறு பித்தாகும்படி இவளை இந்நிலைக்குத் தள்ளியவர் யார்? இந்நிலைக்குக் காரணமானவர்: பேரரசனான வித்தகன்.  ஆட்கொள்ளும் வித்தகனான சிவனின் திருவடிகளை வாயாரப் பாடி, பூக்கள்…

Continue Reading

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 28)

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 28 கறவைகள் பின்சென்று கானம்சேர்ந் துண்போம் அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்றன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம் குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்றன்னோடு உறவேல் நமக்கிங் கொழிக்க ஒழியாது அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்றன்னைச் சிறுபே ரழைத்தனவும் சீறி யருளாதே இறைவா நீதாராய் பறையேலோ ரெம்பாவாய். பாடியவர் – பவ்யா ஹரி விளக்கம்: முந்தைய பாசுரங்கள் இரண்டிலும் தங்களுக்கு என்னென்ன பரிசுகள் வேண்டும் என்று விண்ணப்பித்த பெண்கள், தங்களுக்கு அருளும்படியாகக் கண்ணனிடம் கோரிக்கை வைக்கிறார்கள். “மாடுகளுக்குப் பின்னாலே சென்று, மேய்ச்சல் காட்டை அடைந்தவுடனேயே கையில் கட்டியெடுத்துச் செல்லும் சோற்றை உண்பவர்கள் நாங்கள். எங்கள் குலத்தில் வந்து கண்ணா, நீ தோன்றியுள்ளாய். உன்னோடு உடன் உறவாடும் அளவுக்கு எங்களுக்கு அறிவோதிறனோ இல்லையென்றாலும், நீ பிறந்துள்ள குலத்தில் நாங்களும் பிறந்துள்ளோம் என்பதே புண்ணியம். எத்தனைக் காலமானாலும், உன்னுடனான எங்களுடைய உறவை ஒழிக்கவோ பிரிக்கவோ இயலாது. நாங்கள் படிப்பறிவில்லாத சிறு பெண்கள். உன்னைப் பலவிதமாகப் பெயர்கள் கூறி அழைத்துவிட்டோம். சினம் கொள்ளாமல் எங்களுக்கு அருளவேணும்’ என்று பிரார்த்திக்கிறார்கள்.  பாசுரச் சிறப்பு: ஆயர்பாடியில் கண்ணன் பிறந்ததால், எத்தனை எத்தனைக் காலமானாலும் அந்த உறவு இருக்கத்தான் செய்யும். பற்பல தலைமுறைகளுக்குப் பின்னரும், “கண்ணன் எங்கள் மூதாதை’ என்று ஆயர்பாடியார் சொல்லிக்கொள்ள முடியும். அதுபோன்றே, எத்தனைப் பிறவிகள் எடுத்தாலும், இந்த உயிர் எம்பெருமானின் உடைமை என்று உறவு சொல்லிக்கொள்ள முடியும். ஜீவனுக்கும் பரமனுக்குமான உறவு, பிறவிகள் தோறும், மற்று, பிறவிகளுக்கு அப்பாற்பட்டும் தொடரும் என்பது உள்பொருள். “சிறுபேர்’ என்பது ஒருமையில் பெயர் சொல்லி அழைத்தல் ஆகும். எம்பெருமான் என்று தெரிந்த பின்னர் இவ்வாறு அழைக்கலாமோ? ஆயின், இங்குச் “சிறுபேர்’ என்பது பிறிதொன்று. எம்பெருமானாக இருப்பினும், சிறுவனாக வந்து, மாடும் கன்றும் மேய்த்து உடன் விளையாடுவதுதான் கண்ணனுக்கு மகிழ்ச்சி. தன்னை “நாராயணா’ என்று உயர்நாமம் சொல்லி அழைத்ததற்காகச் சீறுகிறானாம். எனவே, ஆயர்பாடி அவதாரத்திற்கே உரித்தான கோவிந்த நாமம் சொல்லி அழைக்கிறார்கள். இந்தப் பாசுரத்திலும் (குறையொன்றுமில்லாத கோவிந்தா) இதன் முன் பாசுரத்திலும் (கூடாரைவெல்லும் கோவிந்தா) இன்னும் இதன் மேல்பாசுரத்திலும் (அன்று காண் கோவிந்தா), கோவிந்த நாமம் சாற்றப்படுகிறது. செயல் பெருமையோஅறிவுப் பெருமையோ இல்லாத ஜீவன்கள், இறைவனின் உயர்வையும் இறைவனோடான உறவின் அருமையையும் உணர்ந்து, பணிந்து போற்றி வணங்குவதைக் காட்டுகிற} உணர்த்துகிற பாசுரம். எந்த விரதத்திற்கும், பணிவும் தன் கட்டுப்பாடுமே முக்கியம் என்பதை வலியுறுத்துகிற பாசுரம் எனலாம்.  ****** ஸ்ரீமாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி – பாடல் 8 மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 14) முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய் மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார்? பந்தணை விரலியும் நீயும்நின் அடியார் பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே! செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித் திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி அந்தணன் ஆவதுங் காட்டிவந் தாண்டாய் ஆரமு தே!பள்ளி எழுந்தரு ளாயே.  பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன்  பாடியவர்கள்…

Continue Reading

ஆவணி மாத பலன்களும், பரிகாரங்களும்!

தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஆவணி மாத பலன்களை துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார்.  மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய) கிரகநிலை: ராசியில்     குரு, ராகு – பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன்(வ), சூர்யன், சந்திரன், புதன்(வ) – களத்திர ஸ்தானத்தில் கேது – லாப ஸ்தானத்தில் சனி (வ) என கிரகநிலைகள் உள்ளது. கிரகமாற்றங்கள்: 18-08-2023 அன்று சுக்ர பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 19-08-2023 அன்று செவ்வாய் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 24-08-2023 அன்று சனி பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: கம்பீரமான தோற்றத்தையும் பரந்த மனப்பான்மையும் உள்ள உறுதியும் கொண்ட மேஷ ராசி அன்பர்களே இந்த மாதம் நீங்கள் பொருளாதாரத்தில் வளர்ச்சி உண்டாகக் காண்பீர்கள். தெய்வ வழிபாட்டில் நாட்டம் அதிகரிக்கும். தள்ளி வைத்திருந்த காரியங்களைச் செய்யத் தொடங்குவீர்கள். சகோதர சகோதரிகளின் குறைகளைப் பெரிது படுத்தமாட்டீர்கள். முன்பு உங்களை ஏமாற்றியவர்களையும் இந்த மாதம் மன்னித்துவிடுவீர்கள். வேலை நிமித்தம் குடும்பத்தை விட்டுப் பெரிந்திருந்த தம்பதி இப்போது சேர்ந்து வாழச் சந்தர்ப்பம் உருவாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகாரிகளின் ஆதரவை உறுதுணையாகக் கொண்டு உங்கள் பெரும்பாலான விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். சக பணியாளர்களின் பொறாமைப் பார்வை உங்களைத் துரத்திக் கொண்டே இருக்கும். வியாபாரம் லாபகரமாகவே நடைபெற்று வரும்.  நாளுக்குநாள் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெற்று வியாபாரத்திலும் வளர்ச்சியைக் காண்பீர்கள். கலைத்துறையினருக்கு  இடைத்தரகர்கள் போன்றவர்களின் ஒத்துழைப்பை எதிர்பாராமல் நீங்கள் நேரடியாகவே முயற்சி செய்து வருவதன் மூலம் புதிய வாய்ப்புகள் சிலவற்றைப் பெற்று மகிழ இடமுண்டு.  சக கலைஞர்களிடம் சுமுகமாக் நடந்து கொள்வதன் மூலம் உங்கள் நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்.  மாணவர்களுக்கு  நீங்கள் முயற்சித்தால் கல்வியில் நாளுக்கு நாள் முன்னேற்றம் காண முடியும்.  தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்று உயர்வகுப்புகளுக்குச் செல்லக் கூடும். இடையில் நிறுத்தி வைத்திருந்த சில பகுதிகளுக்கான தேர்வுகளையும் இப்போது எழுதி நிறைவு செய்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு உங்களுக்கு சில சோதனைகள் நேர இடமுண்டு என்றாலும் நீங்கள் உறுதியான மனத்துடன் இருந்து பொறுமை காத்து வருவதன்மூலம் தலைமையின் பேரன்பையும், நன்மதிப்பையும் பெறுவீர்கள்.  உங்களுக்குத் தரப்பட்டுள்ள பணிகளைத் திறமையாக நிறைவேற்றுவதிலேயே உங்கள் நோக்கமெல்லாம் இருந்து வருவது அவசியம். பெண்களுக்கு  வேலைக்குச் செல்லும் பெண்கள் எதிபாராத நன்மைகளைப் பெறக் கூடும்.  தள்ளிப்போய் வந்த திருமணம் திடீரென்று முடிவாகி திருமண வாய்ப்பைச் சிலர் பெறக்கூடும்.  படிக்க: அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும் இந்த ராசிக்கு: வாரப்பலன்கள்! அஸ்வினி: இந்த மாதம்  பணவரத்து திருப்தி தரும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. புதிய நபர்களிடம் எச்சரிக்கை தேவை. வீண் அலைச்சலை குறைத்துக்கொண்டு வேலைகளில் கவனம் செலுத்துவது நல்லது. பெரியோர்களின் உதவியும் கிடைக்கும். மனதில் தைரியம் தன்னம்பிக்கை உண்டாகும். துணிச்சலுடன் எந்த காரியத்திலும் ஈடுபட்டு சாதகமாக செய்து முடிப்பீர்கள். பரணி: இந்த மாதம்  நிம்மதியும்,…

Continue Reading

ஒரு ஜாதகர் எப்படிப்பட்ட குழந்தை பாக்கியத்தை பெறுவார்?

  குழந்தை பாக்கியத்தைப் பற்றி ஒவ்வொன்றாகப் பார்ப்போம்…  முதலில் ஒருவர் திருமணம் ஆன பின்னர், திருமணம் செய்து வைத்த பெற்றோர், ஜோதிடரிடம் முதலில் கேட்பது.. எனது மகன் / மகளுக்கு எத்தனை குழந்தைகள்? குழந்தை எப்போது பிறக்கும்? இதுபோன்று நிறையக் கேள்விகள் கேட்பார்கள். அதேபோல் தான் காதல் திருமண தம்பதியினரும், தமது விருப்பம் திருமணத்தில் நிறைவேறினாலும் அடுத்து குழந்தையைப் பற்றிய கவலை சூழ்ந்துகொள்ளும். “எப்படிப்பட்ட” என்பதில் இருவேறு கேள்விகள் உள்ளது. முதலில் இயற்கை முறையில் குழந்தை பிறப்பா? அல்லது செயற்கை முறையில் குழந்தை பிறப்பா? என்பது அடுத்தது, அப்படிப் பிறக்கும் குழந்தை அதன் குண நலன்களில் எப்படிப்பட்டதாக இருக்கும்? என்பது. ஜாதகருக்கு எத்தனை குழந்தைகள்?  ஒருவரின், ராசி சக்கரத்தில், லக்கினத்திற்கு 5ஆம் அதிபதி யாரோ, அவர் நவாம்சத்தில் எந்த வீட்டில் இருக்கிறார் எனக் குறிப்பெடுத்துக் கொள்ளவும். அந்த வீட்டை முதலாவதாக, ராசி சக்கரத்தில் கொண்டு, லக்கினம் வரும் வரை எண்ண, எத்தனை கிரகங்கள் வருகிறதோ, அத்தனை குழந்தைகள் எனக் கொள்ளலாம். அதில் ஆண் கிரகங்களான செவ்வாய், குரு, சூரியன் மற்றும் ராகு இருப்பின் அத்தனை ஆண் குழந்தைகள் என்றும், பெண் / அலி  கிரகங்களான சந்திரன், புதன், சுக்கிரன், சனி, கேது இருப்பின் அத்தனை பெண் குழந்தைகள் என்றும் அறியலாம். இதில் மாந்தி இருப்பின், அது ஒரு கருச் சிதைவையோ அல்லது பிறந்து இறத்தலையோ உணர்த்தும். இன்னும் துல்லியமாகக் கூறப்போனால், மேற்சொன்ன கிரகங்கள் பெற்ற சாரம், பிறக்கும் குழந்தைகளின், ஆண் / பெண் வாரிசைப் பற்றி நன்கு  உணர்த்தும். இதில் தம்பதிகள் இருவருக்கும் ஒன்றாக வந்தால், நிச்சயமாக நமது கணிப்பு தப்பாது. ஆனால், ஒருவருக்கு வரும் கிரகங்கள் 3 என்றும் மற்றவருக்கு இரண்டும் என்றும் வந்தால், நிச்சயம் 2 குழந்தைகள் உண்டு எனலாம். ஆனால், அதற்கடுத்து பிறக்கும் குழந்தையோ அல்லது முதல் குழந்தைக்கும் அடுத்துப் பிறக்கும் குழந்தைக்கும் இடையிலோ, கருவிலேயே சிதைவு ஏற்படவோ அல்லது பிறந்து உடனே இறக்கவோ நேரிடும். ஆக மொத்தம் இரண்டு குழந்தைகள் நிச்சயம் உண்டு எனலாம். இப்படிப்பட்ட குறைந்த எண்ணிக்கையில் (ஒன்று அல்லது இரண்டு மட்டும் தான்) வருகிறபோது, அந்த தம்பதியினருக்கு, ஒரு ஜோதிடர், குழந்தை பிறப்பைத் தள்ளியோ அல்லது வேண்டாம் என்றோ செய்துவிடாதீர்கள் என எச்சரிக்கை செய்வார். ஏனெனில் ஒரு சிலருக்கு ஒரு குழந்தை தான் என இருக்கும் போது, அதனை உதாசீனப்படுத்துவார்களானால், அவர்களுக்கு அடுத்து குழந்தை பாக்கியம் பெறுவது மிகவும் கேள்விக்குறியாகிவிடும். இதில் எச்சரிக்கை அதிகம் தேவை. இது ஒரு ஜோதிடம் மூலம் பெறும் அனுமானமே.. ஏனெனில் பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை. ஜோதிடம் ஒரு முன்னெச்சரிக்கை / வழிகாட்டி தானே தவிர, முற்றும் உணர்த்தும் நிலை இல்லை. அதோடு, ஜோதிடர் ஒரு படைக்கும் தொழில் செய்யும் பிரம்மாவும் இல்லை. சிலருக்கு, ஜோதிட ரீதியாகப் பிள்ளைகள் இல்லை என அறிந்து சொன்ன ஜாதகருக்கு, தகுந்த பரிகாரங்கள் மற்றும் இறை…

Continue Reading

ராகு – கேது பெயர்ச்சி பலன்கள்: மேஷம்

மேஷ ராசி (அசுவினி, பரணி, கார்த்திகை  முதல் பாதம் முடிய) ஜோதிடர் கே.சி.எஸ். ஐயர், தினமணி மேஷ ராசிக்கான ராகு – கேது பெயர்ச்சி பலன்களை கணித்து வழங்கியுள்ளார். 17.03.2022 முதல் 11.07.2022 வரை உள்ள காலகட்டத்தில் மனதிலிருந்த பயங்கள் அனைத்தும் படிப்படியாக மறையத் தொடங்கும். புத்துணர்ச்சியுடன்  காரியமாற்றத் தொடங்குவீர்கள். செய்தொழிலை புதிய இடங்களுக்குச் சென்று விரிவுபடுத்துவீர்கள். பரந்த மனதுடன் செயல்பட்டு மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள்.  இதனால் தன்னம்பிக்கையும், வளைந்து கொடுக்கும் தன்மையும் அதிகரிக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கூடுதல் பணவரவும் கிடைக்கும். எதிர்மறை எண்ணங்களுக்கு அடிமையாக மாட்டீர்கள். உற்றார் உறவினர்களுடன் விட்டுக் கொடுத்து நடந்துகொண்டு உறவுகளைப் புதுப்பித்துக் கொள்வீர்கள். தாய்வழி உறவினர்கள் மூலம் ஆதரவான சூழல் அமையும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் மூலம் உங்கள் திறமைகள் வெளிப்படும். பயணங்கள் மூலம் முன்னேற்றகரமான வாய்ப்புகள் ஏற்படும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.  12.07.2022 முதல் 06.02.2023 வரை உள்ள காலகட்டத்தில் எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்குவீர்கள். குடும்பத்தில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். சமூகத்தில் உயர்ந்தவர்களின் நட்பைப் பெற்று அவர்கள் உதவியுடன் செயற்கரிய விஷயங்களையும் சுலபமாக செய்து முடித்து விடுவீர்கள். நண்பர்களிடமும் நிதானமாகப் பழகுவீர்கள்.  பொருளாதாரம் படிப்படியாக உயரும். புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். பழைய நண்பர்களைக் கண்டு மகிழ்வீர்கள்.  07.02.2023 முதல் 28.11.2023 வரை உள்ள காலகட்டத்தில் அரசு சம்பந்தமான செயல்பாடுகளில் இருந்த தடைகள் அகலும். வங்கிகளிடமிருந்து எதிர்பார்த்த கடன் கிடைத்து தொழிலை விரிவுபடுத்துவீர்கள். ஆராய்ச்சி, தத்துவ விஷயங்களில் தேடல் அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகள் தானாகவே மறைந்துவிடும். உடன் பிறந்தோரின் தேவைகளை அவர்கள் கேட்காமலேயே பூர்த்தி செய்வீர்கள்.  வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். சிலர் அசையும், அசையாச் சொத்துகளை வாங்குவார்கள். அனைத்துச் செயல்களையும் நன்கு சிந்தித்து திட்டமிட்டு செயல்படுத்தி வெற்றி பெறுவீர்கள். நீண்ட நாள்களாக சந்திக்க விரும்பிய நண்பர்களைச் சந்திப்பதற்கான சூழ்நிலைகள் உருவாகி உங்கள் பெயர், புகழ், அந்தஸ்து, கெüரவம் உயரும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 14) உத்தியோகஸ்தர்களுக்கு இந்த ராகு, கேது பெயர்ச்சியில் பணவரவுக்குத் தடைகள் இராது. அலுவலக வேலைகளை முன்கூட்டியே செய்து முடித்து மேலதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பீர்கள். சில நேரங்களில் சக ஊழியர்களால் சில இடையூறுகளைச் சந்திக்க நேரிடும்.  வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் நீங்கும். மனதில் உற்சாகம் பெருகும். போட்டிகள் குறையும். வாடிக்கையாளர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும்.  விவசாயிகள் கால்நடைகளின் மூலம் விரும்பிய பலனை அடைவீர்கள். நீர்வரத்து நன்றாக இருக்கும். தகுந்த நேரத்தில் விதைத்து, மகசூல் பெருகி, சந்தையில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள்.  அரசியல்வாதிகள் மக்கள் நலப்பணிகளில் அதிகம் கவனம் செலுத்துவீர்கள். கட்சி மேலிடத்தில் ஆதரவு பெருகும். எதிரிகளிடம் பழகும் போது ஜாக்கிரதையாக இருக்கவும்.  கலைத்துறையினருக்கு அதிகமான முயற்சிகளுக்குப் பிறகு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். விருதுகளும் பாராட்டுகளும் பெற கடினமாக உழைப்பீர்கள்….

Continue Reading

குழந்தையின்மைக்குக் காரணம் ஆணா, பெண்ணா? அன்றே உரைத்த ஜோதிடம்

  இன்றைய நவீன காலகட்டத்தில் அனைத்தையும் அறிவியல் ரீதியாக ஆராய்ந்து பார்ப்பதற்கு உள்ளது. அதன்படி ஒருவருக்கு பிறக்கும் ஆண் குழந்தை என்பது ஆணிடமிருந்து தான் பெறப்படுகிறது என்று அறிய முடிகிறது. முன்பெல்லாம், பெண் தான், ஆண் மகவை பெற்று தரவில்லை என்பதனால், வேறு பெண்ணை திருமணம் செய்துகொள்ளச் சொல்வார்கள்.   அதே போல் ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறக்கவில்லை என்றாலும் அந்த பெண்ணை தள்ளிவைத்துவிட்டு வேறு பெண்ணை; அது அவளின் சகோதரியாகக்கூட இருக்கலாம், அந்த பெண்ணை திருமணம் செய்விக்கச் சொல்லுவார்கள். பிள்ளை பெறாத அந்த பெண்ணின் மனதையும், உடலையும் நோகடிக்கச் செய்வார்கள். அதுவும் ஆணை விட பெண்களே, அதாவது நாத்தனார், மாமியார், அண்டை மற்றும் அயலார் வீட்டு பெண்களே, அதற்கு காரணமாக இருப்பார்கள். இப்போது கூறப்போவதை நன்றாக மனதில் ஆழ பதிய வைத்துக்கொள்ளுங்கள். எந்த ஒரு பெண்ணுக்கும் குழந்தைப் பேறு இல்லை என்பதே இல்லை. அதாவது குழந்தைப் பேறு இல்லாத பெண் என்பதே இல்லை. குழந்தைப் பேறு இல்லாத ஆண்தான் உண்டு. இதற்கு ஜோதிடம் கூறும் விதிகளை ஏன் மறைத்து வைத்தார்கள் என்பதை வெளிப்படையாகக் கூற முடியவில்லை. அந்த காலத்தில் சில ஜோதிடர்கள் தமது பிழைப்புக்காக மற்றும் கௌரவத்திற்காக – பெரும் பணக்காரர்களுக்கும், ஏன் அரசர்களுக்கும் இவ்வாறு ஆணின் தவறை, ஆணின் உடலில் உள்ள குறையை மறைத்து பெண் மீது, அந்தக் காலத்தில் பல அநீதிகளை பெண்ணுக்கு அளித்தது போல், பெண் மீது பழி சுமத்தி ஆணுக்கு சாதகமாக இந்த செயலில் ஈடுபட்டுள்ளார்கள் என இன்று அறியும் போது மிகவும் வேதனையாகவும், அவர்களின் மீது வெறுப்பையும் காட்ட வேண்டியதாக உள்ளது. இது போல் செய்தது வேற்று கிரக வாசிகளில்லை, நமது முன்னோர்கள் தான். இன்றைய தேதியில் அனைவரும், அனைத்து மதத்தினரும் ஆண், பெண் அனைவரும் ஜோதிடம் கற்கிறார்கள் எனும்போது மிகவும் சந்தோஷமாகவும், உண்மைகளை வெளிக்கொணரும் போது மட்டற்ற மகிழ்ச்சி கொள்வதாகவும் இருக்கிறது. ஜோதிடம் ஒரு அருமையான அறிவியல் மற்றும் கலை ஆகும். எனது குருநாதர் கூறுவார், “ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு நன்கு கற்றறிந்த ஜோதிடர் இருக்க வேண்டும்” என்று. இதை இங்கு நானும் கூற கடமைப் பெற்றுள்ளேன். நிற்க, ஜோதிடம் மூலம், குழந்தை பிறக்க தகுதியான ஆண் மகனா அல்லது பெற்று தர ஒரு பெண் தகுதி ஆனவளா என பிறப்பு ஜாதகம் கொண்டே அறிய முடியும். மேலும், அப்படி இல்லையெனில் மருத்துவ உதவி பெற்று அதன் மூலம் குழந்தை பாக்கியம் பெற முடியுமா என்பதனையும் அறிய ஜோதிடத்தில் நமக்கு பராசரர் மற்றும் அதற்கு பின்வந்த ஜோதிட விற்பன்னர்கள் அன்றே ஜோதிடம் மூலம் அருமையாகக் கூறியுள்ளனர். ஒரு ஆண், குழந்தை பிறக்க தகுதி உள்ளவனா, அதாவது உயிர் அணுக்கள் அவனுக்கு சரியான நிலையில் உள்ளதா அல்லது மருத்துவத்திற்கு பின்னர் உயிர் அணுக்களை உயர்த்திக்கொள்ள வேண்டுமா என்பதனை அவனின் பிறப்பு ஜாதகமே கூறிவிடும். அதற்கான சில ஜோதிட விதிகளும்…

Continue Reading

ஆலங்குடியும் அஷ்ட திக்கு கோயில்களும் – மினி தொடர்

கும்பகோணம்- மன்னார்குடி சாலையில் வலங்கைமான் அடுத்து 18 வது கிமி ல் உள்ளது ஆலங்குடி திருத்தலம். இத்தலம் ஆறாம் நூற்றாண்டில் சம்பந்தரால் பாடப்பெற்றது என்பதால் இது 1500 ஆண்டுகட்குமேல் பழமையானது என அறியலாம். தேவர்களைக் காக்க ஆலகால விஷத்தை இறைவன் குடித்ததால் ஆலங்குடி என்று பெயர் வந்தது. இவ்வூரில் விஷத்தால் எவர்க்கும் எவ்விதத் தீங்கும் உண்டாவதில்லை என்று சொல்லப்படுகிறது. கருநிறமுள்ள பூளைச் செடியைத் தலவிருட்சமாகக் கொண்டுள்ளதால் திருஇரும்பூளை என்றும், அழைக்கப்படுகிறது. காளமேகப் புலவர் பாடல் ஆலங்குடி தலத்தைப் பற்றி அற்புதமாக பாடியுள்ளார். “ஆலங்குடியானை ஆலாலம் உண்டானை ஆலங் குடியான் என்று ஆர் சொன்னார் – ஆலம் குடியானேயாகில் குவலயத்தோரெல்லாம் மடியாரோ மண் மீதினில்”.  என்று பாடி இந்த ஆலயத்தின் பெருமையை உலகரியசெய்கிறார். இந்த தலத்தில் இறைவன் ஆபத்சகாயேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.. இறைவியின் பெயர் ஏலவார்குழலி தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைய வாசுகி என்ற பாம்பை கயிறாகவும், மந்தார மலையை மத்தாகவும் கொண்டு கடைந்தனர். அப்போது அந்தப் பாம்பு வலி பொறுக்காமல் கக்கிய ஆலகால விஷத்தை , சிவபெருமான் உலகத்தை காக்கும் பொருட்டு உட்கொண்டார். விஷத்தை அருந்தி உலகைக் ஆபத்தில் இருந்து காத்ததால் இறைவன்  ஆபத்சகாயேஸ்வரர் அழைக்கப் படுகிறார். முசுகந்தன் என்ற சோழ மன்னன், கோவில் கட்டுவதற்காக தனது மந்திரி அமுதோகரிடம் பணம் கொடுத்தான். ஆனால் மந்திரியோ மன்னன் கொடுத்த பணத்தை பயன்படுத்தாமல் தனது பணத்தை பயன்படுத்தி கோவில் கட்டினான். பின்னர் மன்னன் வந்து கோவில் கட்டிய புண்ணியத்தில் பங்கு கேட்க, மந்திரி மறுத்துவிட்டார். இதனால் கோபமடைந்த மன்னன் மந்திரியின் தலைய வெட்ட வாளை எடுத்து ஓங்க இறைவன் தோன்றி அமுதோகரை தன்னுடன் சேர்த்துக்கொண்டதே இக்கோவில் வரலாறாகும்.   ஒரு முறை திருவாரூரை ஆட்சி புரிந்த சோழ மன்னன் இங்கிருந்த சுந்தரர் சிலையின் அழகை கண்டு அதனை திருவாரூருக்கு எடுத்துச் செல்ல முயற்சித்தான். இதனை அறிந்த கோவில் அர்ச்சகர் அச்சிலையை குழந்தையாக பாவித்து அதற்கு அம்மை நோய் தாக்கி இருப்பதாக கூறி மறைத்து வைத்து சிலையை காப்பாற்றினார். இப்பொழுதும் அந்த சிலையில் அம்மைத் தழும்புகள் இருப்பதைக் காணலாம்.  விசுவாமித்திரர்,  முசுகுந்தர், வீரபத்திரர் போன்ற பலர் வழிபட்ட சிறப்புடையது இக்கோவில்.  இங்கு கோவிலைச் சுற்றி அகழி போன்ற அமைப்பு உள்ளது இதனை செயற்கைக்கோள் படத்தில் தெளிவாக காணலாம். இதுவே அமிர்தபுஷ்கரிணி தீர்த்தம் எனப்படுகிறது., கோவிலின் கிழக்கில் சக்ர தீர்த்தம் அமைந்துள்ளது. சுந்தரர் இத்தலத்திற்கு வரும்போது வெட்டாற்று வெள்ளப் பெருக்கில் ஆபத்சகாயரே ஓடக்காரராக வந்து கரையேற்றிக் காட்சிதந்தார் என்பது தல வரலாறு. ஓடம் நிலைதடுமாறிப் பாறையில் மோதியபோது காத்தவிநாயகர் கலங்காமல் காத்த பிள்ளையார் என வழங்கப்படுகிறார். இத்தலம் திருவிடைமருதூர் தலத்தின் தட்சணாமூர்த்தி இருப்பிடமாக கருதப்படுவதால் இங்கு தட்சணாமூர்த்தி சிறப்பு. பிற கோயில்களில் காண இயலாத தட்சணாமூர்த்தி உற்சவ விக்ரகம் உள்ளது இவர் தேரில் திருவீதி உலாவும் காண்கிறார். கோயிலின் தென்புறம் ஐந்து நிலை ராஜ கோபுரமும், கிழக்கில் சற்று குறுகிய ஐந்து…

Continue Reading

ஜோதிட ரீதியான பரிகாரங்களை எப்போது செய்ய வேண்டும்?

எல்லா மனிதர்களும் தமது வாழ்வில் எந்த ஒரு பிரச்னையும், கஷ்டமும், கவலையும் இல்லாமல் இருக்கவேண்டும் என்றுதான் ஏங்குகிறோம். ஆனால், எதிர்பாராத விதமாக நாம் எவ்வளவு முன்னெச்சரிக்கையோடும், ஒழுக்கத்தோடும் காரியம் ஆற்றினாலும் முடிவில் சில போது, சிலருக்கு எப்போதும் தவறாகவே நடந்து முடிந்து விடுகிறது. காரணம் தெரிவதில்லை. இதிலிருந்து எல்லா வயதினரும், ஏன் அனுபவம் பெற்றிருந்தும் தவறுகள் நடைபெறுவதைத் தடுத்து நிறுத்த முடிவதில்லை. நமது தகுதிக்கும், பண்புக்கும் மீறி நடைபெறும் அந்த செயல்கள் எதனால் என்பதனை அனைவரும் மனதைக் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். இதற்குதான் ஜோதிடம் ஒரு நல்ல அறிவுரையைத் தருகிறது என்றால் அது மிகை ஆகாது. ஆம்! சிலர் ஜோதிடம் நன்கு அறிந்து, அந்த மாயவித்தையிலிருக்கும் செய்தியை நம்பிக்கையோடு பின்பற்றி சரியான, மகிழ்வான வாழ்வினை அடைகின்றனர். சிலர் நினைக்கக்கூடும், கோயிலில் மணிக்கணக்கில் அமர்ந்து பூஜை செய்வதும், தம்மிடம் உள்ள பணத்தை வாரி இறைப்பதால், பிரச்னைகள் தீரும் என்று நினைத்துச் செயல்பட்ட பின்னரும், அதே போல் இருப்பதால் -அந்த நிலையே நீடிப்பதால், மனம் தளர்வதை காண முடிகிறது. முதலில் தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால், பிரச்னை என்பது நமது வாழ்வோடு இணைந்திருப்பது தான், அதனை எவ்வாறு களைவது  என்பதுதான் நாம் எடுக்கவேண்டிய தீர்வாகும். எப்படி நெல்லின் மேல் தோலை (உமி) நீக்க முதலில் கதிர்களை அடித்து நெல்மணியாக்கி பின்னர் அதனை உரலில் லேசாக இடித்து பின்னர் முறத்தில் இட்டு அதனை காற்று வரும்போது அதற்கு எதிர்த்திசையில் புடைத்தால், உமி நீங்கி அரிசி மட்டும் கிடைக்குமோ, அதுபோலவே நமது பிரச்னைகளை எவ்வாறு, எப்போது நீக்கவேண்டும் என்பதைப் பற்றியே இக்கட்டுரை. (தற்போது அனைத்திற்கும் இயந்திரங்கள் வந்து விட்டதால், எளிமையாக நெல்லிலிருந்து உமியை நீக்கி அரிசி பெறுவது போன்று, சில எளிமைபடுத்தும் வழிகள் பல வந்து விட்டது, உண்மை தான்.) படிக்க: சனிப்பெயர்ச்சி யாருக்கு கைகொடுக்கும்! என்ன சொல்கிறார் ஜோதிடர்? ஜோதிடத்தை பொறுத்தவரை அனைத்துமே நேரம் / காலம். இதனை முதலில் புரிந்துகொள்ளுதல் அவசியம். ஒருவர் பரிகாரம் செய்யவேண்டுமானால், அதனை செய்யும் காலம் அறிதல் முதன்மையானது. நிச்சயம் அது தேய்பிறையாக இருத்தல் அவசியம். மேலும் பாக்கியாதிபதி எனும் 9ஆம் அதிபதியின் தசை அல்லது புத்தியாக இருத்தல் வேண்டும். அல்லது சிலருக்கு யோகாதிபதியாக வரும் அதிபதியின் தசை அல்லது  புத்தியாக இருக்கவேண்டும். அவ்வாறு இருந்தாலும் அந்த கிரகங்கள், அவயோகி நட்சத்திர காலில் நிற்காமல் இருந்திடல் வேண்டும். இவை ஒரு சிலவே, நிச்சயம் ஜோதிடரை நாடி பலன் பெறுவது அவசியம் ஆகும். பொதுவாக ஒரு எண்ணம் அனைவரின் மனதிலும் இருக்கிறது, ஒரு ஜோதிடர் சொன்னால், எல்லோருக்கும் நடந்து விடுகிறது ஆனால் எனக்கு மட்டும் ஏனோ சரியாக நடப்பதில்லை என கூறுவர். இதனை காரணம் காட்டி பல ஜோதிடரை அணுகியும் விடிவு காண முடியாமல் தவிப்போரும் உண்டு. ஜோதிடர் கூறிய சரியான நேரத்தை, சரியான முறைப்படி செய்தால், நிச்சயம் பலன்கிட்டும். ஐயம் வேண்டாம். முதலில் ஜோதிடத்திலும், ஜோதிடர் மீதும், நம் பிரச்னை…

Continue Reading

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 14)

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 14 உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய்நெகிழ்ந் தாம்பல்வாய் கூம்பினகாண் செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார் எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய் சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடலோர் எம்பாவாய். பாடியவர் – பவ்யா ஹரி விளக்கம்: வெளியில் நிற்கும் பெண்கள், பொழுது புலர்ந்ததற்கான மேலும் சில அடையாளங்களைச் சுட்டிக் காட்டுகின்றனர். "உன்னுடைய வீட்டுப் புழைக்கடையில் இருக்கிற குளத்தைப் பார் பெண்ணே. செங்கழுநீர் மலர்கள் மலர்ந்துவிட்டன. ஆம்பல் மலர்கள் கூம்பிவிட்டன. காவி வண்ண ஆடை அணிந்தவரும் வெண்மையான பற்கள் கொண்டவருமான தவசிகள், திருக்கோயில்களில் சங்கநாதம் முழக்குவதற்காகச் செல்கின்றனர். என்னமோ, எங்களை நீ வந்து எழுப்புவதாகக் கதை பேசினாயே. நாணமில்லையா உனக்கு? நாக்கு மட்டும் நீளமோ? சங்கும் சக்கரமும் திருக்கரங்களில் ஏந்தி, தாமரைக் கண்ணானாகக் காட்சி தரும் கண்ணனைப் பாடுகிறோம், எழுந்து வா’ என்று அழைக்கின்றனர்.  பாசுரச் சிறப்பு: விடியலின் இன்னும் சில அடையாளங்கள் காட்டப்பெறுகின்றன. வெகு தொலைவு சென்று இந்த அடையாளங்களைக் காண வேண்டியதில்லை. அவரவர் அணுக்கச் சூழல்களிலேயே காணலாம். வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் சிறிய குளத்தில் காட்சி தெரிகிறது. வெளிச்சம் கண்டு மலர்கிற செங்கழுநீர் (தாமரை வர்க்கம்) மலர்ந்துவிட்டது; வெளிச்சம் கண்டு கூம்புகிற ஆம்பல் (கருநெய்தல் வர்க்கம்) கூம்பிவிட்டது. ஆக, வெளிச்சம் வந்துவிட்டது கண்கூடு. அதிகாலைப் பொழுதில், விடியலின் வெளிச்சக்கீற்றுகள் முதலில் எட்டத்தில் தெரியும். பின்னர்தான், அணுக்கத்தில் தெரியும். அணுக்கத்தில் தெரிந்தால், பொழுது அதிகமாகவே புலர்ந்துவிட்டது என்று புரிந்து கொள்ளலாம். ஸ்வாபதேசத்தில்,திருப்பாணாழ்வாரைக் குறிக்கும் பாசுரம்.  அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – பாடல் 14 காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்கேதுவின் தாக்கம் ஒருவரின் வாழ்வில் எப்படி இருக்கச் சொல்கிறது? கோதை குழலாட வண்டின் குழாமாடச் சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச் சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப் பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன் பாதத் திறம்பாடி ஆடேலோ ரெம்பாவாய்!  பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன் பாடியவர் – மயிலை சற்குருநாதன் பாடியவர் மயிலாடுதுறை சிவகுமார் விளக்கம்:   மனம், மொழி, மெய் ஆகிய மூன்றும் இறைவன்பால் ஈடுபட்டிருக்கும் நிலையைக் காட்டுகிற பாடல் இது. பெண்கள் பொய்கைக்குள் புகுந்து நீராடுகின்றனர். இதுபொழுது, உடலும் உறுப்புகளும் (உயிருள்ளவை), வேறு சில பொருள்களும் (உயிரற்றவை) ஆடுகின்றன. காதுகளில் அணிந்துள்ள குழைகள் ஆடுகின்றன; கழுத்திலும் தோளிலும் கைகளிலும் அணிந்திருக்கும் பிற அணிகளும் ஆடுகின்றன; கூந்தலில் சூடிய பூமாலைகள் ஆடுகின்றன; பூக்களிலிருந்து எழுந்த வண்டுகள் ஆடுகின்றன; குளிர்ந்த நீரில் ஆடி, சிற்றம்பலவனைப் பாடி,வேதப் பொருளாக விளங்கும் தன்மையைப் பாடி, பேரொளிப் பிரகாசமாகத் திகழும் பெருமையைப் பாடி, அதே இறைவன் பலவகை உருவங்களும் வடிவங்களும் கொண்டு அவதரித்து, கொன்றை மாலை சூடுகிற அருமையைப் பாடி, ஆதியும் அந்தமுமாக இருப்பதைப்…

Continue Reading

ஆலங்குடியும் அஷ்ட திக்கு கோயில்களும் – மினி தொடர் – பகுதி 4 – புலவர்நத்தம் சிவன் கோவில் 

தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டம், புலவர்நத்தம் சிவன்கோயில் பல சிறப்புக்கள் கொண்ட ஆலங்குடியினை சுற்றி எட்டு திக்கிலும் சிறப்பான கோயில்கள் உள்ளன, அவையே அஷ்ட திக்கு பாலகர்கள் வழிபட்டவை. இவர்கள்  இறைவனை வழிபட்டு தம் பெயரால் தீர்த்தமும்,  சிவலிங்கமும் நிறுவி பூஜித்து தங்களுக்கு ஏற்பட்ட இடர்பாடுகள் நீங்கியும் பல நற்பேறுகளும்  பெற்றார்கள். ஆலங்குடிக்கு கிழக்கில் இந்திர தேவனால் இந்திர தீர்த்தமும் தென்கிழக்கில் பூனாயிருப்பு கிராமத்தில் அக்கினி தேவனால் அக்கினி தீர்த்தமும் தெற்கில் நரிக்குடி கிராமத்தில் யம தர்மரால் யம தீர்த்தமும் மேற்கில் பூந்தோட்டம் கிராமத்தில் வருண தேவனால் வருண தீர்த்தமும் வடமேற்கில் மருதூர் கிராமத்தில் வாயு தேவனால் வாயு தீர்த்தமும் வடக்கில் கீழ அமராவதி கிராமத்தில் குபேர தேவனால் குபேர தீர்த்தமும் வடகிழக்கில் சித்தன்வாழூர் கிராமத்தில் ஈசான்ய தேவனால் ஈசான்ய தீர்த்தமும் நிறுவி அஷ்டதிக் பாலகர்களே சிவலிங்க பிரதிஷ்டையும்  செய்தார்கள்.  அதன் அடிப்படையில் நிருதி பாகமான, ஆதி காலத்தில் பூளை வளநத்தம் என்று அழைக்கப்பட்ட புலவர்நத்தம் கிராமத்தில் நிருதி தேவனால் நிருதி தீர்த்தமும் நிருதீஸ்வரர் என்ற திருநாமத்தோடு லிங்க பிரதிஷ்டையும் செய்து பூஜித்து, அதுவரை கைவிட்டிருந்த தன் தொழிலை மீண்டும் பெற்றார்,  இந்த தலத்தை சங்க புலவர்கள், மகான்கள், பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள் ஆகியோர் வழிபட்டு பரவசம் அடைந்துள்ளார்கள். ஆதலால் தன்னிகரில்லாத இத் திருத்தலத்தில் உள்ள நிருதி தீர்த்தத்தில் நீராடி சிவபெருமானையும் அன்னை தர்ம சம்வர்த்தினியையும் வணங்குவோர் வாழ்வில் எல்லா வளமும் நிறைந்து வளம் பெற்று வாழ்வர். நிருதி பூமிக்கு அதிபதி என்பதால் இவரை வழிபட்டால் நிலம், மனை வாங்கும் யோகமும் கிட்டும். வரத்தை அருளும் அம்மன் இறைவன்- நிருதீஸ்வரர் இறைவி- தர்மாம்பிகை தொழில் முன்னேற்றம், மன அமைதி, மன உறுதி பெறவும், குடும்பத்தில் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளாமல் பூசல் ஏற்ப்படுதலை தவிர்க்கவும் வில்வம் அல்லது பூளை பூவை சரமாக தொடுத்து சார்த்தி வழிபட்டால் நலம். கிழக்கு நோக்கிய இறைவன், அம்பிகை தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். முருகரின் மயில் வடக்கு நோக்கிய கொண்டுள்ளது சிறப்பு கரிய மாணிக்க பெருமாளும் உள்ளார். கும்பகோணம்-நீடாமங்கலம் சாலையில், குரு தலமான ஆலங்குடியை தாண்டியதும் ஒரு கிமி தூரத்தில் புலவர்நத்தம் பேருந்து நிறுத்தம்  உள்ளது அதில் இருந்து மேற்கு நோக்கி சென்றால் கிராமத்தினை அடையலாம்.  ஊரின் முகப்பிலேயே  உள்ளது நிருதீஸ்வரர் திருக்கோயில்.  கிழக்கு நோக்கிய இறைவன்- இறைவி தெற்கு நோக்கி உள்ளார், வாயில் தென்புறம் உள்ளது, கோயிலுக்கு வடக்கில் நிருதி ஏற்ப்படுத்திய பெரிய குளம் உள்ளது. கடம்பூர் விஜயன்  நன்றி Hindu சிறுநீரக பாதிப்பின் அறிகுறிகளை ஜாதகம் சுட்டிக்காட்டுமா?