ரத்தின அபயஹஸ்தம், கர்ண பூசனம், பவளமாலை,அடுக்கு பதக்கம், இருதலை பட்சத்துடன் முத்து பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள். ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோவிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி பெருவிழாவின் பகல் பத்து மூன்றாம் நாளான வியாழக்கிழமை ஸ்ரீ நம்பெருமாள் முத்து பாண்டியன் கொண்டையில் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். இக்கோவிலில் வைகுந்த ஏகாதசி பெருவிழா கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. தொடா்ந்து பகல் பத்து விழாவின் மூன்றாம் நாளான வியாழக்கிழமை காலை 6.30-க்கு முத்து பாண்டியன் கொண்டை, ரத்தின அபயஹஸ்தம், கர்ண பூசனம், கழுத்தில் பவள மாலை, அடுக்கு பதக்கம், இருதலை பட்சம் உள்ளிட்ட திரு ஆபரணங்கள் அணிந்து மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்ட நம்பெருமாள், 7 மணிக்கு அா்ச்சுன மண்டபத்தை அடைந்தாா். பின்னா் திரையிடப்பட்டது. பின்னா் 8 மணிக்கு அனுமதிக்கப்பட்ட பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று நம்பெருமாளை தரிசித்தனா். கரோனா காரணமாக பக்தா்கள் அனைவரும் முகக் கவசம் சரிபாா்க்கப்பட்டு, சமூக இடைவெளியுடன், உடல் வெப்ப நிலை சரிபாா்க்கப்பட்ட பிறகே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.சக்கரம் ஏறி வடு மூலவரான ஸ்ரீ செல்வ விநாயகர் 12 ஆழ்வாா்கள் ஒரே இடத்தில் தரிசனம் வைகுந்த ஏகாதசி பெருவிழாவின்போது மட்டும் 12 ஆழ்வாா்கள் ஒரே இடத்தில் எழுந்தருளி ஸ்ரீநம்பெருமாளைத் தரிசிக்கும் அற்புதக் காட்சியை பக்தா்கள் காணலாம். நம்பெருமாள் பகல்பத்து மண்டபமான அா்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளும்போது அவரைப் பின் தொடா்ந்து வரிசையாக 12 ஆழ்வாா்களும் வந்து எழுந்தருளுவா். பக்தா்கள் நம்பெருமாளைத் தரிசித்து விட்டு ஆழ்வாா்களையும் தரிசிப்பா். நன்றி Hindu ஸ்ரீ கிருஷ்ணரின் திருவிளையாடல்கள்
பீத மாதமும் பாவை நோன்பும் மார்கழி மாதம்தான், சாந்தீபனியின் ஆச்ரமத்தில் கிருஷ்ணர் பாடம் கேட்டார் என்னும் நம்பிக்கையும் உண்டு. மார்கழி மாதத்தை தேவர்களின் பிரம்ம முகூர்த்தம் என்று விவரிப்பது வழக்கம். ஒவ்வொரு நாளும், சூரியோதயத்திற்கு முன்னதாக இருக்கும் 96 நிமிடங்கள், பிரம்ம முகூர்த்தமாகும். பொழுது புலர்ந்து நாள் தொடங்குவதற்கு முன்னர், கடவுளை வணங்கி வழிபட வேண்டிய நேரம் அது. நம்முடைய ஓராண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள்; தை முதல் ஆனி வரையிலான உத்தராயண ஆறு மாதங்கள் அவர்களுக்குப் பகல்; ஆடி முதல் மார்கழி வரையிலான தட்சிணாயண ஆறு மாதங்கள் அவர்களுக்கு இரவு. இந்தக் கணக்கில், தேவ பகல் தொடங்கும் தை மாதத்திற்கு முன்னதான மார்கழி, தேவர்களின் பிரம்ம முகூர்த்தமாகும். இந்த வேளையில், தேவர்களும் முனிவர்களும் இறைவனை வழிபடுகிறார்கள். மார்கழி மாதத்தில் இறைவனைத் துதித்துப் பலவாறாக நம்முடைய முன்னோர்கள் வழிபட்டார்கள் என்பது புராணங்கள் வழியாகவும் இலக்கியங்கள் வழியாகவும் புலனாகிறது. ஆயர்பாடிப் பெண்கள், ஆற்று மணலில் பாவை (அம்பிகை போன்ற பொம்மை) பிடித்து வைத்து வழிபட்ட தகவல், ஸ்ரீமத் பாகவதத்தின் தசம ஸ்கந்தத்தில் (பத்தாவது தொகுப்பு) காணப்படுகிறது. ஹேமந்தே ப்ரதமே மாஸி நந்த வ்ரஜகுமாரிகா: சேருர்ஹவிஷ்யம் புஞ்சானா: காத்யாயன்யர்ச்சனவ்ரதம்ஆப்லுத்யாம்பஸி காலிந்த்யா ஜலாந்தே சோதிதே அருணேக்ருத்வா ப்ரதிக்ருதிம் தேவீமானர்சுர் – – – காத்யாயனி மஹாமாயே மஹாயோகின்யதீச்வரீ நந்த கோப ஸூதம் தேவி பதிம் மே குரு தே நம: ஹேமந்த பருவத்தின் முதல் மாதத்தில் (மார்கழி), நந்த விரஜையின் கோபிகைகள், விரதமிருந்து, காத்யாயனி வழிபாடு செய்தார்கள். காளிந்தி நதியின் (யமுனை) கரையில் மணல் பாவை பிடித்து அம்பாளாக வழிபட்டார்கள். காத்யாயனி, மகாமாயீ, மகா யோகீச்வரி என்றெல்லாம் அழைத்து, “நந்தகோபர் மகனாக கண்ணன் என் கணவனாக ஆகும்படி அருள்வாயாக’ என்று வேண்டினார்கள். சங்கத் தமிழ் நூலான பரிபாடல், அம்பா ஆடலைக் குறிப்பிடுகிறது. ஞாயிறு காயா நளிமாரிப் பிற்குளத்து மாயிரும் திங்கள் மறுநிறை ஆதிரை விரிநூல் அந்தணர் விழவு தொடங்கப் புரிநூல் அந்தணர் பொலங்கலம் ஏற்பதோஷ சாம்யம் பார்க்காமல் திருமணம் செய்யலாமா? வெம்பாதாக, வியன் நில வரைப்பென அம்பா ஆடலின் ஆய்தொடிக் கன்னியர் முனித்துறை முதல்வியர் முறைமை காட்டப் பனிப்புலர் பாடி… ஆதிரையோடு நிலவு சேர்கிற நன்னாளில், விரிநூல் அந்தணர்களின் விழா தொடங்கியபோது, கன்னியர் அம்பா ஆடல் ஆடினர். மிருகசீர்ஷத்திற்கு அடுத்த நட்சத்திரம் திருவாதிரை. ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி நிலவானது 2 நட்சத்திரத்தோடு இணையும் (27 நட்சத்திரங்கள் – 12 மாதங்கள், ஆக ஒவ்வொரு மாதத்திற்கும் 2 நட்சத்திரங்கள்). மார்கழிப் பெளர்ணமியில் (அது மிருகசீர்ஷம் அல்லது ஆதிரை என்று எதுவானாலும்) அந்தணர்கள் தங்களுடைய அத்யயனத்தைத் தொடங்கினார்கள். அதே நாளில், கன்னிப் பெண்களும் ஆற்றங்கரையில் மணலால் அம்பிகை வடிவம் செய்து நோன்பு நோற்றார்கள். நூற்றாண்டுகள் பலவற்றுக்கு முன்னர் அம்பா ஆடலாக இருந்த நோன்பு முறை, பின்னர், தைந்நீராடல் என்றும் வழங்கப்பட்டிருக்கிறது. எவ்வாறு? சந்திர- சூரிய அசைவுகளைக் கொண்டு நாள்களைக் கணிக்கும்போது, நட்சத்திரக் கணக்கு சில நாள்கள்…
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 2 வையத்து வாழ்வீா்காள்! நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் அடிபாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி மையிட் டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம் செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம் ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி உய்யுமா றெண்ணி உகந்தேலோா் எம்பாவாய்! திருப்பாவை – பாடியவர் புவனேஸ்வரி விஸ்வநாதன் பாடியவர் – பவ்யா ஹரி விளக்கம்:உலகத்தில் வாழ்வோரே என்று அனைவரையும் அழைக்கிற ஆண்டாள்,நோன்பில் செய்ய வேண்டியவற்றை வரிசையாகக் கூறுகிறாள். ‘திருப்பாற்கடலில் கண்வளரும் எம்பெருமானின் திருவடிகளைப் போற்றிப் பாடுவோம்; அதிகாலையில் நீராடுவோம்; நெய்யும் பாலுமான உணவுகளை உண்ணமாட்டோம்; நீராடி வந்தபிறகு, பெண்கள் வழக்கமாகத் தங்களை அலங்கரித்துக் கொள்ளும் வகையில் கண்களில் மைதீட்டி, முகம் திருத்தி, கூந்தலில் மலா் சூடுவது போன்றவற்றைச் செய்யமாட்டோம் (எங்களை அலங்கரித்துக் கொள்ளமாட்டோம்); எங்கள் பெரியவா்கள் செய்யகூடாது என்று தடுத்தவற்றைச் செய்யமாட்டோம்; பிறா் பற்றி அவதூறு பேசி, கோள் சொல்லமாட்டோம். எங்களால் முடிந்த அளவுக்கு ஐயம் இடுவோம், பிச்சை இடுவோம்.’ பாசுரச் சிறப்பு:என்னவெல்லாம் செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்பதை விளக்குகிற பாசுரம் இது. ‘டூ’ஸ்அண்ட்டோண்ட்’ஸ்’ என்று மேலாண்மையில் கூறுவதுபோல், செய்வன (கடைப்பிடிகள்),செய்யக்கூடாதன (விலக்கடிகள்) என இரண்டையும் பட்டியலிடும் சிறப்புக்குரியது. ‘ஐயம்’ என்பது உயா்ந்தவா்களுக்கும் தக்கவா்களுக்குமிடுவது; ‘பிச்சை’ என்பது அனைவருக்கும் இடுவது. அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை- பாடல் – 2 திருவண்ணாமவையில் அருளியது பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்முத்து மாரியம்மன் கோயில் திருவிழா பேசும்போ தெப்போதிப் போதா ரமளிக்கே நேசமும் வைத்தனையோ? நேரிழையாய் நேரிழையீா்! சீசி யிவையுஞ் சிலவோ விளையாடி ஏசு மிடமீதோ? விண்ணோா்கள் ஏத்துதற்குக் கூசு மலா்ப்பாதம் தந்தருள வந்தருளும் தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள் ஈசனாா்க் கன்பாா்யாம் ஆரேலோா் எம்பாவாய்! பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன் பாடியவர் – மயிலை சற்குருநாதன் பாடியவர் – கரூர் சுவாமிநாதன் விளக்கம்: நோன்புக் களத்திற்குச் (நோன்பு செய்கிற இடம்) செல்வதற்காகப் புறப்பட்டு வரும் பெண்கள், இன்னும் புறப்படாமல் உள்ளே உறங்குகிற பெண்ணை அழைக்கிறாா்கள். பகலும் இரவும் தோழிப் பெண்களான இவா்கள் அளவளாவிக்கொண்டே இருப்பாா்கள். இவ்வாறு பேசும்போதெல்லாம், ‘என்னுடைய அன்பு முழுவதும் பரமனுக்குத்தான்’ என்று வாய்ச் சாலாக்குப் பேசியவள், இப்போது எழுந்திராமல் உறங்குகிறாள். ‘அணிமணிகள்அணிந்தவளே! பரமனுக்குப் பாசமா? படுக்கைக்குப் பாசமா?’ என்று கிண்டல் செய்கிறாா்கள். உள்ளிருந்து அவள் உடனே கூறுகிறாள்: ‘தோழிகளே! உங்கள் வாயிலிருந்து இகழ்வுச் சொற்கள் வரலாமா? விளையாடிப் பழிக்கும் நேரம் இதுவோ? இதைக் கேட்டவுடன், ‘தேவா்கள் போற்றினாலும் கொடுத்தருள்வதற்கு நாணுகிற திருவடிகளை, எளியவா்களானநமக்குக் கொடுப்பதற்காக எழுந்தருளியிருக்கும் திருக்கயிலாய நாதனும் தில்லைச்சிற்றம்பலத் தேவனுமான இறைவனின் அன்பு எங்கே? கேலிப் பேச்சு பேசும் நாம் எங்கே?’ என்று கூறி நோன்புக்குச் சித்தமாகிறாா்கள். பாடல் சிறப்பு:பாவை பாடல்கள், உரையாடல் முறையில் அமைவது வழக்கம். இறைவனிடம் உள்ளத்தைச் செலுத்தாமல், வேண்டாதவற்றில் செலவிடுதலைத் தவிா்க்கக்கூறும் இப்பாடலில், உள்ளும் புறத்தும் இருப்பவா்கள் மாறி மாறிப் பேசிக்…
ஒவ்வொரு தனிநபரும் கல்வி, வேலைவாய்ப்பு, சுற்றுலாப் போன்ற காரணங்களுக்காக வெளிநாடு செல்ல ஆர்வமாக உள்ளனர். வெளிநாட்டில் வாழும் இந்தியாவின் மக்கள்தொகை உலகிலேயே மிகப்பெரியது. வெளிநாட்டில் தங்கியிருப்பவர் துரதிர்ஷ்டவசமாகக் கருதப்படுவார் என்று பண்டைய பாரம்பரிய புத்தகங்கள் விளக்குகின்றன. ஆனால் தற்போது அனைத்தும் மாறிவிட்டது. நவீனத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், இன்று மக்கள் தங்கள் குடும்பத்தைத் தவறவிடாமல் பயணத்தை அனுபவிக்க முடியும். மொபைல் போன்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வெளிநாடுகளுக்கும், சொந்த நாட்டிற்கும் இடையிலான சங்கிலிகள். இப்போது தூரம் குறைவாக உள்ளது எனவே, வெளிநாட்டு வருகைகளுக்கு மக்கள் அதிகம் ஈர்க்கப்படுகிறார்கள். தற்போதுள்ள மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது ஒரு சாதனையாகவும் வெற்றியாகவும் கருதுகின்றனர். பெரும்பாலான மக்கள் கல்வி நோக்கத்திற்காகவும், வெளிநாட்டில் குடியேறுவது, திருமணம், குறுகிய சுற்றுப்பயணங்களுக்கும் செல்கின்றனர். வெளிநாட்டுப் பயணங்களுக்குப் பொறுப்பான ஜோதிட வீடுகள் முழு ராசியும் 360 டிகிரி மற்றும் ஜோதிடத்தின் நோக்கத்திற்காக, இது ஒவ்வொன்றும் 30 டிகிரி, 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 12 வீடுகளில், வெளிநாட்டுப் பயணங்களுக்குப் பொறுப்பான சில முக்கியமான வீடுகள் பின்வருமாறு:- முதல் வீடு: இது ஒரு தனிநபரின் சுயம், சொந்தம் மற்றும் ஆளுமை ஆகியவற்றைக் குறிக்கிறது. இந்த வீட்டை 7 மற்றும் 12க்கு இணைப்பது வெளிநாட்டுப் பயணத்தைக் குறிக்கிறது. மூன்றாவது வீடு: இந்த வீடு குறுகிய பயணங்களைக் குறிக்கிறது, ஏனெனில் இது 4வது வீட்டிலிருந்து 12வது வீட்டில் உள்ளது. 4வது வீடு தாய்நாட்டைக் குறிக்கிறது. நான்காவது வீடு: வெளிநாட்டுக் குடியேற்றத்திற்கு, நிபந்தனைகளில் ஒன்று. தீங்கு விளைவிக்கும் கிரகங்கள் அல்லது இந்த கிரகங்களின் அம்சம் இந்த வீட்டில் அவசியம். எனவே நாட்டை விட்டு வெளியேறுவதற்கு இந்த வீட்டிற்கு துன்பம் விளைவிக்கும் கிரகங்கள் அவசியம். ஏழாவது வீடு: இந்த வீடு பயணம், கூட்டு வணிகம் மற்றும் மனைவியைக் குறிக்கிறது. 12வது வீட்டுடனான அதன் தொடர்பு வெளிநாட்டுப் பயணங்களுக்கும் அவசியம். மனைவி வெளிநாட்டில் இருந்து வரலாம் என்பதும் கவனிக்கப்படுகிறது. எட்டாவது வீடு: இந்த வீட்டிற்கு வெளியூர் செல்வதற்கும் முக்கிய பங்கு உண்டு. இது கடல் பயணத்தைக் குறிக்கிறது. நவீனக் காலத்தில் இது அமானுஷ்ய வீடு என்றும் ஆராய்ச்சி இல்லம் என்றும் அழைக்கப்படுகிறது. ஒன்பதாம் வீடு: 9வது வீடு ஒரு நீண்ட பயணத்தைக் குறிக்கிறது. வெளிநாட்டுப் பயணத்தைக் குறிக்கும் மிக முக்கியமான வீடு இது. 9ஆம் வீட்டின் அதிபதி நல்ல நிலையிலிருந்தால் அந்த நபர் வெளிநாட்டில் செழிப்புடன் இருப்பார். இந்த வீடு ஆன்மீக கற்றல் மற்றும் உயர் கல்வியையும் குறிக்கிறது. 12 வது வீட்டுடனான அதன் தொடர்பு வெளிநாட்டுப் பயணத்திற்கு வலுவான கலவையாகும். பத்தாம் வீடு: 10வது வீடு தொழிலைக் குறிக்கிறது. இதுவும் கர்ம வீடுதான். 9, 3 அல்லது 12 ஆம் வீடுகளுடனான அதன் உறவு, மக்கள் தொழில் நோக்கங்களுக்காக வெளிநாடு செல்வார்கள் என்பதைக் காட்டுகிறது. வெளிநாட்டுக் குடியேற்ற ஜோதிடத்திற்கான கிரக மற்றும் வீடு சேர்க்கைகள் பலர் மத்திய கிழக்கு, அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற பிற நாடுகளில் குடியேறவும் வாழவும்…
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 29 சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள்கேளாய்! பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய். பாடியவர் – பவ்யா ஹரி விளக்கம்: நோன்பு தொடங்கிய நாள் முதல், பறை என்று பரிசுகளைப்பற்றிக் கூறிக்கொண்டேயிருந்த பெண்கள், இப்பாசுரத்தில்தான், தாங்கள் நாடுகிற பரிசு என்ன என்பதைத் தெளிவாக உரைக்கிறார்கள். “அதிகாலைப் பொழுதில் வந்து உன்னை வணங்கி, உன்னுடைய திருவடிகளைப் போற்றி நாங்கள் நிற்பதற்கான காரணத்தைக் கேளாய். பசுக்கூட்டத்தை மேய்க்கும் ஆயர்குலத்தில் பிறந்துள்ள நீ, எங்களை உனக்கான தொண்டர்களாகக் கொள்ளாமல் விட்டுவிடாதே. ஏதோ இப்போதைக்குப் பரிசு பெறுவதற்காக வந்தோம் என்று எண்ணாதே. எந்தக் காலமானாலும், எத்தனைப் பிறவிகளானாலும் உன்னோடு உறவு கொண்டவர்களாக இருப்பதையே யாசிக்கிறோம். என்றென்றும் உனக்கு அடிமைகளாக இருப்போம். இவைதவிர வேறு ஏதேனும் விருப்பங்கள் எங்களுக்கு இருக்குமானால், அவற்றை மாற்றிவிடு’ என்று கோருகிறார்கள். பாசுரச் சிறப்பு: நோன்பைத் தலைக்கட்டுகிற (நிறைவேற்றுகிற) நிலையில் வைக்கப்படுகிற விண்ணப்பம் இது. குற்றேவல் என்பது சிறு சிறு ஏவல் கூவல் பணிகள். அந்தரங்கக் கைங்கர்யம் (தனித் தொண்டு) என்பார்கள். ஏழேழு என்பதனை 7, 7+7, 7+7 என்று எவ்விதமாகவேனும் கொள்ளலாம். என்றைக்காக இருந்தாலும் எம்பெருமானுக்கு அடிமைகளாகவும் எம்பெருமானின் உடைமைகளாகவும் இருக்க வேண்டும் என்பதே நிரந்தர விண்ணப்பம். செயல் பெரியதா சிறியதா என்பதைக் காட்டிலும், அது செய்யப்படுகிற நோக்கம் முக்கியமானது. எந்தச் செயலாக இருந்தாலும், அளவுக்கும் பார்வைக்கும் சிறியதாகவே இருப்பினும், அச்செயலுள் இருக்கும் அன்பும் பக்தியும் அறமும் ஆர்வமும் முக்கியமானவை. ஆங்கிலக் கவிஞர் மில்டனின் They also serve who stand and wait என்னும் வரியை நினைவூட்டுகிற பாசுரம் (இதே உணர்வைத் திருப்பள்ளியெழுச்சியின் 7ஆவது பாடலில், எது எமைப் பணி கொள்ளும் ஆறு என்னும் வரியில் காணலாம்). நோன்பை நிறைவேற்றிய நிலையில், நோன்பின் பலனை இப்பெண்கள் பெற விருக்கிறார்கள். ஒரு செயலின் பலனை அனுபவிக்கும்போது, அந்தச் செயலைச் செய்ததற்கான பெருமையும், செயல் பலனுக்கான ஆனந்தமும், ஒருவகையான மதர்ப்பைத் தரும். அந்த ஆனந்தமே சுயநலமாக மாறும்; ஆணவமாகத் தலைதூக்கும். இதற்குப் பிராப்ய விரோதம் என்று பெயர். இப்படிப்பட்ட சுயநலம் இல்லாமல், நோன்பென்னும் செயலையும், நோன்பின் நற்பலன்களையும்கூட இறைவனின் திருவடிகளில் அர்ப்பணிக்கிற பாசுரம் இது. ****** ஸ்ரீமாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி – பாடல் 9 விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டாவேண்டியது கிடைக்கும் விநாயகர் வழிபாடு விழுப்பொரு ளேயுன தொழுப்படி யோங்கள் மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே! வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம் கண்ணகத் தேநின்று களிதரு தேனே! கடலமு தேகரும் பேவிரும் படியார் எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே. பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன் பாடியவர்கள் –…
12 ராசி அன்பர்களுக்கும் நவம்பர் மாத பலன்களை தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். மேஷம்(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை: தன ஸ்தானத்தில் ராஹூ – களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், புதன் – அஷ்டம ஸ்தானத்தில் கேது – பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் – தொழில் ஸ்தானத்தில் குரு, சனி என கிரக நிலவரம் உள்ளது. கிரகமாற்றம்: 13-11-2021 அன்று குரு பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். 17-11-2021 அன்று புதன் பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: ஒரு குறிக்கோளை மனதில் வைத்து துணிவுடன் செயலாற்றும் மேஷராசியினரே நீங்கள் எடுக்கும் முடிவில் உறுதியாக இருப்பவர். இந்த மாதம் பல நன்மைகள் உண்டாகும். உங்கள் பேச்சு திறமை அதிகரித்து அதனால் பல காரியங்கள் சிறப்பாக நடந்துமுடியும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் அவர்களால் உதவி ஆகியவையும் கிடைக்கலாம். நீங்கள் செய்யும் காரியங்களுக்கு உதவுவதற்காக யாராவது ஒருவர் துணை நிற்பார். பகைகள் விலகும். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்ய எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் தொல்லை தராது. போட்டிகள் விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர்ந்த நிலைக்கு வருவார்கள். உழைப்புக்கு பலன் கிடைக்கும். உங்கள் மீதான மதிப்பு உயரும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள், எதிர்ப்புகள் தீரும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் உங்களுக்கு பெருமை உண்டாகும். பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சக கலைஞர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும். கோபத்தை குறைத்து தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத செலவு இருக்கும். அரசியல் துறையினருக்கு தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய தூண்டும். பிரிந்து சென்றவர்களை மீண்டும் சந்திக்க நேரலாம். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறவும், மேல்படிப்பு படிக்கவும் எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பரிகாரம்: செவ்வாய்க்கிழமையில் நவக்கிரகத்திற்கு தீபம் ஏற்றி வணங்கி வர சொத்து பிரச்சனை தீரும். குடும்ப குழப்பம் தீரும். அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் – வியாழன் – வெள்ளி சந்திராஷ்டம தினங்கள்: 6, 7 அதிர்ஷ்ட தினங்கள்: 1, 27, 28 **** ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை: ராசியில் ராஹூ – ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், புதன் – களத்திர ஸ்தானத்தில் கேது – அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன் – பாக்கிய ஸ்தானத்தில் குரு, சனி என கிரக நிலவரம் உள்ளது. கிரகமாற்றம்: 13-11-2021 அன்று குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். 17-11-2021…
2021ஆம் ஆண்டுக்கான குரு பெயர்ச்சி தொடர்பான ராசி பலன்களை ஜோதிடர் கே.சி.எஸ். ஐயர் கணித்து வழங்கியுள்ளார். இந்த பிலவ வருஷம் தட்சிணாயனம் சரத் ருது கார்த்திகை மாதம் 4-ஆம் தேதி (20.11.2021) சனிக்கிழமை, கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) துவிதியை திதி, கடக லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம், அமிர்த யோகம் கூடிய சுபயோக சுபதினத்தில், உதயாதி 44 நாழிகை அளவில் இரவு 11.28 மணிக்கு சூரிய பகவானின் ஹோரையில், அவிட்டம் நட்சத்திரம் 2-ஆம் பாதத்திலிருந்து அவிட்டம் நட்சத்திரம் 3-ஆம் பாதத்திற்கு அதாவது “பிரகஸ்பதி’ என்கிற தேவர்களுக்கு ஆசானாகிய குரு பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்குப் பெயர்ச்சியானார். குரு பெயர்ச்சி: மேஷம், ரிஷபம், மிதுனம், கடக ராசிகளுக்கான பலன்கள் குரு பெயர்ச்சி: சிம்மம், கன்னி, துலாம், விருச்சிக ராசிகளுக்கான பலன்கள் தனுசு, மகரம், கும்பம், மீன ராசிகளுக்கான குரு பெயர்ச்சிப் பலன்களைப் பார்க்கலாம். தனுசு(மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய) 20.11.2021 முதல் 13.04.2022 வரை உள்ள காலகட்டத்தில் அனைத்து செயல்களையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். உங்கள் செயல்களிலிருந்த தடை தாமதங்கள் நீங்கிவிடும். குடும்பத்திலும் வெளியிலும் தேவையான ஒத்துழைப்பு கிடைக்கும். வண்டி வாகனங்களில் இருந்த பழுதுகளைச் சீர் செய்வீர்கள். பாகப்பிரிவினை தொடர்பாக நடந்து வந்த விஷயங்களில் இழுபறிகள் குறைந்து சுமூகமான நிலையை நோக்கிச் செல்லத் தொடங்கும். மனதில் இனம் புரியாத ஆசைகள் மற்றும் எண்ணங்கள் தோன்றும். இந்த சிந்தனைகள் உங்களை புதுவித பாதையில் இட்டுச் செல்வதைக் காண்பீர்கள். பழைய கடன்களைத் திருப்பி அடைத்து விடுவீர்கள். வருமானத்தில் புதிய இலக்குகளை நோக்கி பயணிப்பீர்கள். கிடைத்தற்கரிய அரிய வாய்ப்புகளையும் பெறுவீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். படிக்கவும், வேலை செய்யவும் பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவீர்கள். செய்தொழிலில் சிறிய மாற்றங்களைச் செய்து புதிய வருமானம் வரும் வாய்ப்புகளையும் பெறுவீர்கள். பழைய காலத்திலிருந்த பொருளாதார நெருக்கடிகள் மறையும். தனித் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உற்றார் உறவினர்கள் உடன்பிறந்தோரின் தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றுவீர்கள். நேர்முக, மறைமுக எதிரிகள் விலகி ஓடுவார்கள். தனிக்காட்டு ராஜாவாக உங்கள் பாதையில் பயணப்படுவீர்கள். செய் தொழிலில் இருந்த போட்டி பொறாமைகள் குறைந்து அனைவரும் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். உடன்பிறந்தோரிடமும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். அதேநேரம் உங்கள் ரகசியங்களை அவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். குடும்பத்துடன் பொழுதுபோக்கு சுற்றுலாத் தலங்களுக்கு சென்று வருவீர்கள். முக்கியமான விஷயங்களில் பெரியோர்களிடம் கலந்தாலோசித்து முடிவுகளை எடுப்பீர்கள். அசையும், அசையா சொத்துக்கள் மூலம் ஆதாயங்களைப் பெறுவீர்கள். இறுக்கமான சூழ்நிலைகளை ஹாஸ்யமான பேச்சினால் சகஜமாக மாற்றி விடுவீர்கள். அரசு சம்பந்தமான விஷயங்களில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தியானம், பிரணாயாமம், யோகா போன்றவைகளைச் செய்வீர்கள். சமுதாயத்தில் உயர்ந்தவர்களின் நட்பு கிடைத்து, அவர்களின் மூலம் தேவையான ஆதரவைப் பெற்று, புதிய பொறுப்புகளை ஏற்று நடத்தும் காலகட்டமிது என்றால் மிகையாகாது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் தவறுகளைத் திருத்திக்கொண்டு அலுவலக வேலைகளில் கவனம் செலுத்துங்கள். மேலதிகாரிகளின் பாராட்டுகளைப்…
ஜோதிடத்தில் முக்கிய அங்கங்களான வாரம், திதி, கரணம், நட்சத்திரம், யோகம் கொண்டு பஞ்ச பூத தத்துவத்தில் இயக்கப்படுகிறது. இந்த ஐந்து அங்கங்களே பஞ்சாங்கம் ஆகும். இவற்றில் கரணம் திதியில் பாதி. ஒரு திதியின் 12 பாகையில், 6 பாகைக்கு ஒரு கரணமாக 12 பாகைக்கு இரண்டு கரணமாக வரும். அதாவது 30 திதிக்கும் 60 கரணங்களாக வரும். அதிலும் கரணம் அவற்றோடு தொடர்புடைய கரணநாதன் முக்கியமானவர். மொத்தமாக 11 கரணங்கள் ஆகும். அவற்றில் சர கரணங்களான பவ, பாலவ, கெளலவ, தைதுளை, கரசை கரணங்கள் பூரண சுபத்துவம் வாய்ந்தது. மற்ற கரணங்களான பத்திரை(விஷ்டி), சகுனி, நாகவம், கிம்ஸ்துக்ன கரணங்கள் அசுப தன்மை பெற்றது. இவற்றில் சர கரணத்தில் உள்ள வணிசை மற்றும் ஸ்திர கர்ணத்தில் சதுஷ்பாதமும் மத்திம சுப தன்மை கொண்டது. ஒரு உயிர் இயங்க காற்று அவசியம் மற்றும் ஒரு மனிதனின் ஏற்ற தாழ்வு செயலுக்கு கர்ம காரகன் சனி பகவான் நிலை தேவை. அதனால் தான் கரணத்தின் கிரகம் கர்மகாரகன் சனி என்றும், இது காற்று தத்துவம் கொண்டதாக கூறப்படுகிறது. ஒருவருக்கு கரணநாதன் பலம் பெற வேண்டும். கரணம் தப்பினால் மரணம் என்பதற்கு ஏற்ப கரணம் சூட்சுமம் தெரியவில்லை என்றால் மரணதிற்கு நிகரான கெட்ட சம்பவங்கள் நடைபெறும் என்பது சிறு கூற்று. ஒவ்வொரு ஜோதிட நூல்களில் உள்ள சூட்சுமங்களை அப்படியே ஜாதகத்தில் பொருத்தி நன்கு ஆராய வேண்டும். பதினோரு கரணத்தின் குணங்களையும் ஜாதக அலங்காரத்தில் விளக்கி உள்ளது. அது கரணாதிபதி நிலையை பொறுத்து குணம், செயல்கள் மாறுபடும். ஜோதிட சூட்சுமத்தில் ஜாதகருக்கு தெய்வ அருள் பெற, திதியின் பாதியாக உள்ள கரண நாதனை வணங்கினால் நன்று. முக்கியமாக கிரகங்கள், அதிதேவதை மற்றும் அவற்றின் தொடர்புள்ள அனைத்தையும் கொண்டு கரணநாதனை இயக்க வேண்டும். ஒருவருக்கு தோஷம் இருந்தால் அந்த தோஷம் பெற்ற வீட்டை கரண நாதன் சுப நிலையில் பார்த்தால் அவரவர் கர்மாவிற்கு ஏற்ப, அவருக்கு தோஷத்தைக் குறைக்கும் என்பது விதி. அது அசுப நிலையிலிருந்தால் பலன் பெற கொஞ்சம் கடினம். இன்னும் அடுத்த கட்டத்தில் ஆராய்ந்தால், கரணத்தை கொண்டு திருமண பொருத்தம் பார்க்க வேண்டும், கரசை கரணத்தில் வாழ்க்கை துவங்குது நன்று, இந்த கரண தம்பதியர்கள் ஒற்றுமை பலம் பெரும். அசுப கரணத்தில் வாழ்க்கையை துவங்கக்கூடாது, குழந்தைப் பாக்கியம் பெற, கரணாதிபதி மூலம் பரிகாரம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக ஒருவருக்கு குழந்தைப் பாக்கியம் இல்லை என்றாலும் சுப நிலையில் உள்ள கரணநாதன் பார்வை பெற்றால் புதிய மருத்துவச் சிகிச்சைகள் மற்றும் சோதனை குழாய் முறையில் குழந்தை பாக்கியம் உண்டாகும். ஒவ்வொருவருக்கும் எது சரியான தொழில், அது வெற்றியின் உச்சத்தை அடையமுடியுமா என்று பார்க்க இது ஒரு சூட்சும விதி. அதுவும் முக்கியமாக ஜாதகர் எந்த காரணத்தில் பிறந்தாரோ அந்த கரணத்துக்குரிய மிருகத்திற்கு துன்பம் கொடுக்கக்கூடாது. எடுத்துக்காட்டாக வன்னிசை கரணம்…
ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமியை பொதுவாக அலங்காரப் பிரியன் என்பார்கள். ஒவ்வொரு திருவிழாவுக்கும் பெருமாள் அணிந்திருக்கும் அலங்காரங்கள், ஆபரணங்கள் காணக் கண்கோடி வேண்டும். இத்தனை சிறப்புடைய ஸ்ரீரங்கம் கோயிலில் ஆண்டில் திருவிழா நடைபெறாத மாதங்களே இல்லை எனலாம். இதையும் படிக்கலாமே.. ஸ்ரீரங்கத்தில் சிறப்பு வாய்ந்த வைகுந்த ஏகாதசி திருவிழா தமிழ் மாதத் தொடக்கமான சித்திரையில் தேரோட்டம், கஜேந்திர மோட்சம், வைகாசியில் நம்பெருமாள், தாயார் வசந்த உற்ஸவம், ரங்கநாச்சியார் கோடை உற்ஸவம், ஆனியில் ஆனித்திருமஞ்சனம், பெரியபெருமாள், ஸ்ரீரங்கநாச்சியார், சக்கரத்தாழ்வார் ஜேஷ்டாபிஷேகம், ஆடியில் ஆடிப்பெருக்கு, காவிரித்தாய்க்கு திருமாலை, பொட்டு அளித்தல், ஆவணியில் கிருஷ்ணஜெயந்தி – உறியடி உற்சவம், புரட்டாசியில் நவராத்திரி உற்ஸவம், ஐப்பசியில் ஊஞ்சல் உற்ஸவம், கார்த்திகையில் ஏகாதசி, நம்பெருமாளுக்கு 365 வஸ்திரங்களைச் சாற்றுதல், மார்கழியில் வைகுந்த ஏகாதசி, தையில் சங்காரந்தி, சமயபுரம் மாரியம்மனுக்கு சீர்வரிசை அளித்தல், மாசியில் தெப்போத்ஸவம், பங்குனியில் நம்பெருமாள் தாயார் சேர்த்தி சேவை, ஆதி பிரம்மோத்ஸவம் என 12 மாதங்களிலும் திருவிழாக்கள் நடைபெறும் புண்ணியத்தலமாக ஸ்ரீரங்கம் கோயில் திகழ்கிறது. அலங்காரப் பிரியன்ஸ்ரீரங்கம் அரங்கநாதரை ரங்கராஜா என்றழைப்பார்கள். இந்த ரங்கராஜனுக்கு அணிவிக்கப்படும் அலங்காரங்கள் விலைமதிப்பில்லாதவை. ஒவ்வொரு திருநாளுக்கும் நம்பெருமாள் புறப்பாடாகும் போது அணிவிக்கப்படும் ஆபரணங்களுக்கும் தனி சிறப்பு இருக்கிறது. புகைப்படங்களைக் காண.. ஸ்ரீரங்கம்: கவரிமான் தொப்பாரைக் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்! குறிப்பாக, வைகுந்த ஏகாதசி திருவிழாவில் பகல்பத்து நாளன்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அலங்காரத்தில் எழுந்தருளும் நம்பெருமாளுக்கு வைரம், வைடூரியம், முத்து, பவளம் என பலவிதமான ஆபரணங்கள் அணிவிக்கப்படுகின்றன. எத்தனை ஆபரணங்கள் அணிந்தாலும் அத்தனையிலும் அழகாய் காட்சியளிப்பார் நம்பெருமாள். வைகுந்த ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்வாகக் கருதப்படும் பரமபதவாசல் திறப்பன்று கருவறையிலிருந்து பாண்டியன் கொண்டை, கிளி மாலை, ரத்தின அங்கியுடன் புறப்பட்டு சிம்மக்கதியில் வரும் நம்பெருமாளைத் தரிசிக்க திரளும் பக்தர்களே இதற்கு சாட்சியாகும். இதுபோல, இராப்பத்து ஏழாம் திருநாளன்று நடைபெறும் திருக்கைத்தல சேவை, எட்டாம் திருநாள் நடைபெறும் வேடுபறி சேவையில் குதிரை வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளி வையாளி கண்டருளுதல், சாற்றுமறையன்று நடைபெறும் நம்மாழ்வார் மோட்ச நிகழ்விலும் திரளான பக்தர்கள் பங்கேற்று அலங்காரப் பிரியனின் அழகைக் கண்டு தரிசித்து மகிழ்வர். வைகுந்த ஏகாதசி திருவிழாவில் நடைபெறும் நடைமுறைகள்ஜோதிடம் ஒரு முன் எச்சரிக்கையா, முடிவா? ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி திருவிழா பகல்பத்து உற்ஸவத்துக்கென சில நடைமுறைகள் உள்ளன. அந்த நடைமுறைகளின்படி திருவிழா நடைபெற்று வருகிறது. பெரிய திருக்கோயில் எனப்படும் அரங்கநாதசுவாமி திருக்கோயில் நடைபெறும் எந்த திருவிழாக இருந்தாலும் திருக்கோயில் நிர்வாகத்தால் குறிப்பிடப்படும் நேரத்தில் சுவாமி புறப்பாடு தொடங்கும். யாருக்காகவும் பெருமாள் காத்திருக்க மாட்டார்கள் என்பார்கள். உடையவர் எனப்படும் ராமானுஜர் காலத்தில் வகுத்த நிர்வாக முறை இன்றளவும் இக்கோயிலில் பின்பற்றப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் திருவிழாக்களில் புறப்பாடு தொடங்கப்பட்டுவிடும். திரு அத்யயன உற்ஸவம் எனப்படும் வைகுந்த ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம், பகல்பத்து, இராப்பத்து என 21 நாள்கள் நடைபெறும். இந்த 21 நாள்களிலும் நம்பெருமாள் புறப்பாடுக்கான வரைமுறைகள் வகுக்கப்பட்டு…
12 ராசி அன்பர்களுக்கும் புரட்டாசி மாத பலன்களை தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். மேஷம்: கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராஹூ – ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய், புதன் (வ) – களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் – அஷ்டம ஸ்தானத்தில் கேது – தொழில் ஸ்தானத்தில் சந்திரன், குரு (வ), சனி (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றம்: 3-10-2021 அன்று சுக்ர பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: நியாயமான திட்டங்களுக்கு ஆதரவு அளித்து அடுத்தவர் மதிப்பை பெறும் மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் ஆக்க பூர்வமான யோசனைகளை செயல்படுத்தி எதிலும் வெற்றி காண்பீர்கள். தெளிவான மனநிலை இருக்கும். சாமர்த்தியமாக செயல்பட்டு சாதகமான பலன் பெறுவீர்கள். செயல்திறன் அதிகரிக்கும் ஆனால் உங்களுக்கு எதிராக சிலர் செயல்படும் சூழ்நிலை இருப்பதால் கவனம் தேவை. நெருக்கடியான சமயத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பது தாமதப்படும். தொழில், வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். சில நேரங்களில் முக்கிய முடிவு எடுப்பதில் தயக்கம் காட்டுவீர்கள். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்க பெறுவார்கள். ஆனால் அலைச்சல் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்க மனம் விட்டுபேசுவது நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும். அவர்களிடம் நிதானமாக பேசுவது நன்மை தரும். பிள்ளைகளிடம் கோபம் காட்டாமல் அன்பாக பேசுவது நல்லது. மகிழ்ச்சி உண்டாகும். பெண்கள் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். வீண் அலைச்சல் உண்டாகும். கலைத்துறையினருக்கு தகுந்த மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். விருதுகள் கிடைக்கும். தேவையான பண உதவி கிடைக்கும். கடன் தொல்லை குறையும். தொழில் போட்டிகள் நீங்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். எடுத்திருக்கும் அரசாங்க வேலைகள் மூலம் நன்மை உண்டாகும். மாணவர்களுக்கு செயல்திறமை அதிகரிக்கும். உயர்கல்வி கற்பவர்கள் கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது. அஸ்வினி: இந்த மாதம் கடன் பிரச்சனைகள் தொல்லை தராமல் இருக்கும். எதிர்பார்த்த பணவசதி கிடைக்கும். உங்களது செயல்களுக்கு இருந்த எதிர்ப்புகள் நீங்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். பரணி: இந்த மாதம் தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். எதிர்பார்த்த பணவரத்து இருந்தாலும் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். போட்டிகள் தொல்லை தராமல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து காணப்படுவார்கள். கார்த்திகை 1ம் பாதம்: இந்த மாதம் வேலையில் திறமைக்கு பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு இருந்து வந்த நோய் நீங்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். பரிகாரம்: ஸ்ரீசரஸ்வதி தேவதையை பூஜித்து வர அறிவு திறமை அதிகரிக்கும். கல்வியில் வெற்றி உண்டாகும்….
ஜோதிடர் கே.சி.எஸ்.ஆறுமுகப் பெருமானுக்கு அணி சேர்க்கும் முக்கியத் திருவிழாஐயர், கடக ராசிக்கான ராகு – கேது பெயர்ச்சி பலன்களை கணித்து வழங்கியுள்ளார். நன்றி Hindu மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 5)
கி.பி. 1405 – இல் வடநாட்டு துக்கோஜி ராஜா வேலூரைக் கைப்பற்ற முடிவு செய்து இரவில் சாரட்டு வண்டியில் வந்து கொண்டிருந்தார். அப்போது பூமி மட்டத்தோடு மட்டமாக 11 மூர்த்திகளும் மண்மூடியிருந்தனர். அந்த இடத்தினைக் கடக்கும்போது “டக்’ கென்று அவரது சாரட்டின் அச்சு முறிந்து வண்டி நின்று விட்டது. அருகில் ஆள் யாரும் இல்லையாயினும் பூமியில் ரத்தம் ஊறியிருந்தது. விவரம் புரியாமல் இரவு முழுவதும் விநாயகரை வேண்டியபடி பிரயாணத்தில் விக்னம் வந்து விட்டதே என்று வருத்தப்பட்டு தூங்கிப் போய்விட்டார். விநாயகர் கனவில் வந்தார். “அந்த இடத்தில் என்னுடைய ஏகாதச மூர்த்திகள் அருவுருவம் புதைந்து போயிருக்கின்றன. அதன்மேல் உன் வண்டிச் சக்கரம் இடித்ததில் தான் ரத்தம் வந்துவிட்டது. இங்கு கோயில் கட்டிக் கும்பாபிஷேகம் செய்!’ என்றார். அதன்படி கி.பி.1407 இல் இக்கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடந்தது. துக்கோஜியின் சாரட் வண்டியின் சக்கரம் ஏறிய வடு மூலவரான ஸ்ரீ செல்வ விநாயகரின் முதுகில் வலது பக்கத்தில் உள்ளதை இன்றும் தரிசனம் செய்யலாம். செல்வவிநாயகர் கோயில் என்றுஅழைக்கப்படும் இத்தலம், வேலூர் நகருக்கு வடமேற்கில் வேலூரிலிருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பிரிகின்ற பாதையில் 1 கி.மீ தொலைவில் பாலாற்றின் தென்கரையில் சேண்பாக்கம் என்னும் ஊரில் அமைந்துள்ளது. அந்த இடம் முழுக்க செண்பகவனமாக இருந்ததால் செண்பக வனப்பாக்கம் எனப்பட்டு அது மருவி “சேண்பாக்கம்’ என அழைக்கப்படுகிறது. மஹா சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதமிருந்து விநாயகப் பெருமானை வணங்கி ஆதிசங்கரரால் சக்கர ஸ்தாபனம் செய்யப்பட்ட இடத்தில் உள்ள நவக்கிரகங்களை வழிபாடு செய்ததால் நெடுநாள்களாகத் தடைப்பட்டு வரும் திருமணம் கை கூடும். குழந்தைச் செல்வம் இல்லாதவர்கள், ஸ்ரீ செல்வ விநாயகருக்கு பசு நெய்யில் தாமரைத் தண்டுத் திரியிட்டு 33 தீபம் ஏற்றுகிறார்கள். மஹா சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதமிருந்து விநாயகப் பெருமானுக்கு பாலபிஷேகம் செய்து அருகம்புல்லால் அர்ச்சனை செய்கிறார்கள். பிறகு மட்டைத் தேங்காயுடன் கோயிலை 4 முறைவலம்வந்து தலவிருட்சமான வன்னி மரத்தைத் தரிசித்து விநாயகருக்கு அத்தேங்காயை சமர்ப்பிக்கிறார்கள். குழந்தைகளுக்கு உடல் நலக் குறைவானால் இக்கோயிலில் உள்ள பால விநாயகருக்கு பாலபிஷேகம் செய்து வேண்டி, நோய்கள் குணமடைந்து பிரார்த்தனை நிறைவேற்றுகிறார்கள். இதுபோல் சேண்பாக்கம் திருத்தலம் பலவகை பிரார்த்தனை நடக்கும் திருத்தலமாக விளங்குகிறது. பிரம்மன், தான் செய்த தவறுக்கு கழுவாயாக விரிஞ்சிபுரத்து ஈசனுக்கு பூஜை செய்து வந்தார். பூஜை மலர்களுக்காக நந்தவனம் அமைக்க நினைத்தார். ஆனால் அவர் மலர்ச் செடிகள் வைக்க தோண்டிய ஒவ்வொரு இடத்திலும் ஏகதச (11) விநாயகர்கள் சுயம்புவாய் காட்சி தந்தனர். விக்னம் களையும் விநாயகரை வணங்கி நந்தவனம் அமைத்தார். தினமும் முதலில் பறிக்கும் மலர்களால் விநாயகரை அங்கேயே பூஜை செய்து பின்னர், திருவிரிஞ்சிபுரம் சென்று பூஜையைத் தொடர்ந்தார்.பிரம்மனால் இக்கோயிலில் அன்று துவங்கிய இப்பூஜை வழிபாடு இன்றுவரை தொடர்கிறது. சுயம்புமூர்த்திகள் அருளும் தலங்களுக்குச் சென்ற ஸ்ரீ ஆதிசங்கரர் ஒரு முறை சேண்பாக்கத்திற்கு மேற்கேயுள்ள விரிஞ்சிபுரம் சென்றார். தனது ஞான திருஷ்டியினால் கிழக்குப்புறமாக இருக்கும் பதினோரு சுயம்பு…
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 13 புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய் பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார் வெள்ளி எழுந்து வியாழ முறங்கிற்று புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய் குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே பள்ளிக்கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால் கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய். பாடியவர் – பவ்யா ஹரி விளக்கம்: இதுவும் துயிலெடை. “பறவை வடிவம் கொண்டுவந்த பகாசுரனின் வாயைக் கிழித்து அழித்தவனும், கொடிய இராவணனைக் குலத்தொடும் வேரறுத்தவனுமான எம்பெருமானுடைய பெருமைகளைப் பாடிக்கொண்டே நோன்புக் களத்திற்குப் பெண்கள் சென்றுவிட்டனர். கிழக்கே வெள்ளி முளைத்துவிட்டது. வியாழக் கோள் இறங்கிவிட்டது. பறவைகள் பலவகைகளிலும் ஒலி எழுப்புகின்றன. மலர்போன்ற கண்களைக் கொண்ட அழகானவளே. (அதிகாலைப் பொழுதில்) ஆற்றில் குள்ளக் குடைந்து நீராடாமல் இவ்வாறு உறங்கிக் கிடக்கிறாயே’ என்று உள்ளிருப்பவளைப் புறத்திருப்போர் அழைக்கின்றனர். பிறரெல்லாம் நோன்புக் களம் போன பின்னாலும் நீ இன்னும் உறங்கலாமா? என்னும் அங்கலாய்ப்பு. பாசுரச் சிறப்பு: கிருஷ்ணாவதார, இராமாவதாரப் பெருமைகளை இப்பெண்கள் பாடுகின்றனர். விடியலின் அடையாளங்களாக வெள்ளி எழுவதும் வியாழன் விழுவதும் காட்டப்பெறுகின்றன. முதலில் பறவைகளின் ஒலி என்று பொதுவாய்ச் சொல்லி, பின்னர் ஆனைச்சாத்தனைக் காட்டியவர்கள், இப்போது மீண்டும் பறவைகள் என்கின்றனர். எல்லா வகைப் பறவைகளும் ஒலியெழுப்பதால், பொழுது நிறையவே புலர்ந்துவிட்டது எனக் கொள்ளலாம். இனிமை கூறுவதில் குயில் போலவும், ஒருமுகச் சிந்தனையில் கொக்கு போலவும், நன்மையை ஈர்ப்பதில் அன்னம் போலவும், எம்பெருமான் தொண்டில் கருடன் போலவும் இருக்கவேணும். ஸ்வாபதேச முறையில், தொண்டரடிப் பொடி ஆழ்வாரைக் குறிக்கும் பாசுரம். அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – பாடல் 13 பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்உங்கள் ராசிக்கு இந்த டிசம்பர் மாதம் எப்படி இருக்கும்? அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால் தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால் எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம் சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக் கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப் பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய். பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன் பாடியவர் – மயிலை சற்குருநாதன் பாடியவர் – மயிலாடுதுறை சிவகுமார் விளக்கம்: பொய்கையை அடைந்த பெண்கள், அப்பொய்கையையும் அம்மையப்பனாகவே காண்கிறார்கள். கருமையான குவளை மலர், கருமேனி கொண்ட அம்மையாகத் தோற்றம் தர, தாமரையின் செம்மை ஐயனை நினைவூட்டுகிறது. வெண்குருகுப் பறவைகள் நீரில் விளையாடுகின்றன; சிற்றலைகள் பாம்புகள் போல் நெளிகின்றன. இவற்றைக் காண, இறைவன் திருமேனியில் திகழும் குருக்கத்தி மாலையும் பாம்பணிகளும் நினைவு வருகின்றன. உடல் அழுக்கைப் போக்கிக்கொள்ள விரும்புவோர் பொய்கைக்கு வருகின்றனர். மன அழுக்கைப் போக்கிக்கொள்ள விரும்புவோர், இறைவன் காலடியில் பணிகின்றனர். ஆக, இப்பொய்கையைக் கண்டால், மொத்தத்தில் அம்மையும் அப்பனுமாகத் தெரிகிறது. இத்தகைய பொய்கையில் பாய்ந்து, வளைகளும்சிலம்புகளும் ஓசையெழுப்ப, மார்புகள் அசையவும் நீர் மேலெழும்பிப் பொங்கவும் நீராடுகின்றார்கள். பாடல் சிறப்பு: அழகென்பது காண்பவர் கண்ணைப் பொறுத்தது என்பார்கள். முதலில் குளமாகத் தெரிந்த…
இந்த பிரபஞ்ச சக்தியில் உள்ள அனைத்து ஜீவராசிகள் முழுவதும் பஞ்சபூத தத்துவங்கள் அடிப்படையில் உள்ளடங்கிய சாத்வீக, தாமச, ராட்ச ஆகிய முக்குணங்களால் வடிவமைக்கப்பட்ட, தசைநார்களுடன் கூடிய ஆத்மா என்று கூறலாம். நாம் வாழும் இந்த வாழ்க்கை வட்டமானது 360 பகையில் உள்ளடங்கியது. இங்கு உள்ள கிரகங்கள் நம்மை சீற்படுத்தும் என்று கூறலாம். ஒருவரின் இன்பம், குறிகோளுடைய வெற்றி அனைத்து பாக்கியங்களும் அவரவர் வைத்திருக்கும் பூர்வப்புண்ணியம் மற்றும் கர்மபதிவு கொண்ட வைப்பு நிதியின் வட்டித் தொகையாகும். நாம் செய்யும் அனைத்து நற்காரியங்கள் மற்றும் கெட்ட செயல்கள் அனைத்தும் நம்முடைய பூர்வ புண்ணிய கணக்கில் சேர்க்கப்படும். இவற்றின் சுமையை ஜெனன ஜாதகத்தில் திரிக்கோணங்கள் என்று சொல்லப்படும் 1, 5, 9 பாவங்கள் வாயிலாக செயல்படும். திரிக்கோணத்தை பிரிக்கும் பொழுது திரி என்றால் மூன்று, கோணங்கள் என்பது மூலைகள் என்று பொருள். ஒவ்வொரு மூலைகளும் 120 பாகை கொண்டது. அவற்றின் மூன்று பிரிவின் கூட்டுத் தொகை ஒரு வட்ட பாகையில் அடங்கும் (360). நம்முடைய வாழ்வின் நோக்கங்கள் அதற்கேற்ப செயல்கள் அனைத்தும் இந்த திரிகோணங்கள் என்ற பெருங்கடல் ஆகிய கர்மாக்களை கடக்க வேண்டிய சூழ்நிலையில் அமர்ந்துள்ளோம். நம்முடைய பிறவியின் கடைசி அத்தியாயம் ஜீவ முக்தியாக இருக்கவேண்டும். எளிமையாக சொல்ல வேண்டுமானால் நம் ஜாதக கட்டத்தில் உள்ள முக்கோண வடிவமைப்பில் உள்ள திரிக்கோண முறையில் அவரவர் நோக்கம் எதை நோக்கி செல்கிறோம் என்று படம் போட்டு காட்டி விடும். கிரகங்களின் கதிர் வீச்சு மூன்று கோணங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்பில் இருந்து அந்த ஜாதகரை இழுத்துச் செல்லும். எடுத்துக்காட்டாக ஒருவர் முற்பிறவியின் தொடர்ச்சியாக பெண் சாபம் அல்லது முன்னோர்கள் சாபம் பெற்று இருந்தால் அதே சாபத்தை இப்பிறவியிலும் கிரகங்கள் வாயிலாக செய்ய வைக்கும். திரிகோண பாவங்கள் நான்காக பிரிக்கப்படும். அவை அறம்(தர்ம), பொருள்( கர்ம), இன்பம்(காமம்), வீடு(மோட்ச) அடங்கியது. மனிதப் பிறவியில் முக்கியமானது; நம்முடைய பாதையின் பார்வை தர்ம திரிகோணம் (1,5,9) மற்றும் மோட்ச திரிகோணம் (4,8,12 ) நோக்கி நாம் செல்லவேண்டும். இது தவிர நம்முடைய பிறவியானது இன்பம், மற்றும் குடும்ப பந்தத்தின் கர்மாவிற்கு ஏற்ப செல்லவேண்டும். இங்கு கர்மகாரகன் சனியானவர், சுப தன்மை கொண்ட குருவானவர் தங்களுடைய கோட்சாரம் மற்றும் தசா புத்தியில் ஜாதகருக்கு திருமண பந்தத்தையும் குழந்தை பேரையும் தரவல்லவர். இது கர்ம திரிகோணம் (2,6,10), காம திரிகோணம் (3,7,11) சார்ந்து அமையும். இவற்றில் உங்களுடைய பூர்வ புண்ணியத்திற்கு ஏற்ப எல்லா பாக்கியமும் கிட்டும். ஒவ்வொரு திரிகோண பாவங்களையும் அதன் முந்தைய திரிகோண பாவங்கள் சுப மற்றும் அசுப பலன்களை தரவல்லது. நிம்மதியான, மனநிறைவான வாழ்க்கை ஒருவனுக்கு அமைந்துவிட்டால் அவனுடைய ஜாதகத்தில் 1, 5, 9 பாவங்கள் பலம் பெற்றிருக்கும். முக்கியமாக இந்த அமைப்பு அனைவருக்கும் அமையாது. சிலருக்கு வெளிப்பார்வைக்கு பகட்டான வாழ்கை தெரியும், ஆனால் அவர்கள் மனதில் ஒரு சில ஏக்கங்கள் இருந்து கொண்டே இருக்கும். அதற்கு…
அக்டோபர் மாத பலன்களை தினமணியின் இணையதள ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். (துலாம் முதல் மீனம் வரை) துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்) கிரகநிலை: ராசியில் கேது – சுக ஸ்தானத்தில் சனி (வ) – களத்திர ஸ்தானத்தில் குரு(வ), ராகு – லாப ஸ்தானத்தில் சுக்ரன் – அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், புதன்என கிரகநிலைகள் உள்ளது. கிரக மாற்றங்கள்: 04-10-2023 அன்று செவ்வாய் பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 08-10-2023 அன்று ராகு பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 08-10-2023 அன்று கேது பகவான் ராசியில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 15-10-2023 அன்று புதன் பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார். 17-10-2023 அன்று சூரிய பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார். பலன்: கனிவான பேச்சும் நலினமான தோற்றமும் உடைய துலா ராசி அன்பர்களே, இந்த மாதம் எல்லாவற்றிலும் சாதகமான பலனே கிடைக்கும். பொருளாதார முன்னேற்றம் பணவரவில் திருப்தி ஆகியவை இருக்கும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழிலுக்கு புதிய சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியாளர்களிடம் நீங்கள் காட்டி வந்த கடுமையான போக்கு மாறி உங்கள் செயலில் கனிவான தன்மை நிறைந்து இருக்கும். குடும்பத்தில் திருமணம் ஆனவர்களுக்கு புத்திரப்பேறு கிடைக்கும். வயது வந்த புத்திரர்கள் உள்ளவர்களுக்கு நல் உதவிகளும் கிடைக்கபெறும். தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஆயுள் அபிவிருத்தி அடைவதற்கான வகையில் கிரகங்கள் கெயல்பட உள்ளதால் அதற்கேற்றவாறு பழக்கவழக்கங்களை அமைத்துக்கொள்ளுங்கள். பெண்கள் பணியில் ஈடுபட்டுள்ள தொழில் மேன்மை பெறுவார்கள். கலைத்துறையினர் நிறைவான பொருளாதாரம் பெறுவார்கள். அரசியல்துறையினருக்கு மேலிடத்துடன் சுமூகமான உறவு ஏற்படும். மாணவர்களுக்கு சாமர்த்தியமான செயல்களால் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள். பாடங்களில் கவனம் செலுத்துவது அதிகரிக்கும் சித்திரை – 3, 4: இந்த மாதம் தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். பழைய பாக்கிகள் வசூல் ஆனாலும் எதிர்பார்த்தபடி இருப்பது சிரமம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. ஸ்வாதி: இந்த மாதம் பதவி உயர்வு, நிலுவையில் உள்ள பணம் வருவது தாமதப்படும். குடும்பத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்படலாம். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை வந்து நீங்கும். உறவினர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. விசாகம் – 1, 2, 3: இந்த மாதம் வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். களைப்பு, பித்தநோய் உண்டாகலாம். வீண்கவலை இருக்கும். மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. வெளி வட்டார தொடர்புகளில் கவனம் தேவை. பரிகாரம்: அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று வரவும். மல்லிகை மலரை சாத்தி வழிபடவும் அதிர்ஷ்ட…
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 11 கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும் குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே! புற்றர வல்குல் புனமயிலே போதராய் சுற்றத்துத் தோழிமா ரெல்லாரும் வந்துநின் முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட சிற்றாதே பேசாதே செல்வப்பெண் டாட்டி! நீ எற்றுக் குறங்கும் பொருளேலோர் எம்பாவாய். பாடியவர் – பவ்யா ஹரி விளக்கம்: துயிலெடைப் பாசுரங்கள் ஒவ்வொன்றிலும், உள்ளே உறங்குகிற பெண்ணுடைய தன்மைகளைக் கூறி எழுப்பிக்கொண்டு வருகிறார்கள் என்பது வெளிப்படை. இவ்வகையில், இந்தப் பாசுரத்திலும், உள்ளே இருப்பவளின் பெருமைகள் கூறப்படுகின்றன. இவளுடைய இல்லத்தில் நிறைய மாடுகள்; இவளுடைய வீட்டின் கோபாலர்கள் (இவளின் தந்தையாகவோ சகோதரர்களாகவோ இருக்கக்கூடும்), பகைவர்களோடு திறம்படப் போரிடக் கூடியவர்கள். இவை மட்டுமின்றி, எவ்விதக் குற்றமும் இல்லாதவர்கள். இப்படிப்பட்ட செல்வம் நிறை குடும்பத்தைச் சேர்ந்தவள், பொற்கொடி போலும் அழகானவள், புற்றிலிருக்கும் பாம்பின் படம் போன்ற இடைப்பகுதியைக் கொண்டவள், மயிலின் சாயலாள். “செல்வமிக்க பெண் பிள்ளாய், எழுந்து வா’ என்றழைக்கிறார்கள். “அண்டை அசலில் இருக்கும் தோழிப் பெண்கள் அனைவரும் வந்துவிட்டோம். உன் இல்லத்தின் முற்றத்தில் வந்து நின்று மேக நிறத்தவனான கண்ணனின் பெருமைகளைப் பாடுகிறோம். இவ்வளவிருந்தும் நீ அசையாமலும் விடை பகராமலும் உறங்குகிறாயே, இது நியாயமா?’ என்று வினவுகிறார்கள். பாசுரச் சிறப்பு: நயமிக்க சொற்கள் சில, இப்பாசுரத்தில் கையாளப்பட்டுள்ளன. “கோவலர்’ என்பது கோபாலர் என்பதன் திரிபு. ஆயர்பாடியின் ஆயர்களே, கோபாலர்கள்; பசுக்களைப் பராமரிப்பவர்கள் (கோ=பசு). கண்ணன் மீது நிரம்பப் பிரியம் வைத்தவர்கள்; எவ்வகையிலும் அந்த அன்பில் குறையாதவர்கள். இப்படிப்பட்டவர்களின் வழியில் வந்தவள், கண்ணனைவழிபடுவதை மறந்துவிட்டு உறங்கலாமா? கோபாலன் என்பதைக் கண்ணனைக் குறிக்கும் சொல்லாகக் கொண்டால், கோவலர் பொற்கொடி என்பது அந்த தெய்வத்தையே ஆதாரமாகக்கொண்டு படருகிற கொடி என்றாகும். ஆதாரமில்லாமல் கொடி துவண்டுவிடும்; அதுபோல், பக்தி குன்றினால், அடியார்கள் வாடிவிடுவர். பெண்டாட்டி = பெண் பிள்ளாய். கண்ணனை முகில்வண்ணன் என்று கூறிவிட்டு, நோன்பு நோற்கும் பெண்ணைப் புனமயில் என்பது சிறப்பான நயம். முகிலைக் கண்டால் மயில் ஆடும்; கண்ணனைக் கண்டால், இப்பெண் மகிழ்ச்சியில் ஆடுவாள். ஸ்வாபதேச முறைப்படி, இப்பாசுரமானது, முதலாழ்வார்களில் ஒருவரானபூதத்தாழ்வாரைக் குறிப்பது. அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – பாடல் 11 மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்அம்மன் கோயில்களில் ஆடித்திருவிழா கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி ஐயா! வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற் செய்யாவெண் ணீறாடி! செல்வா! சிறுமருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா! ஐயா!நீ ஆட்கொண் டருளும் விளையாட்டின் உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம் எய்யாமற் காப்பாய் எமையேலோ ரெம்பாவாய். பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன் பாடியவர் – மயிலை சற்குருநாதன் பாடியவர் – மயிலாடுதுறை சிவகுமார் விளக்கம்: பொய்கைக் கரையில் நிற்பவர்கள், இறைவனை மேலும் வழிபடுகின்றனர். “மலர்கள் நிறைந்து, அதனால் வண்டுகள் நிறைந்ததாகக் காணப்படும் குளத்தில் புகுந்து நீராடி உன்னுடைய புகழைப் பாடுகிறோம். வழிவழியாக நாங்கள் உன்னுடைய அடிமைகள். நெருப்பு…
தமிழ் மாதங்களில் குழந்தை பிறப்பின்மையும் ஜோதிடம் தரும் முன்னெச்சரிக்கையும்!quot;ஆடி #39;க்கும், quot;மார்கழி #39;க்கும் தனிப் பெருமை உண்டு. இவ்விரு மாதங்களையும் இறை வழிபாட்டிற்காகவே நம் முன்னோர்கள் அமைத்தனர். நன்றி Hindu மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 4)
இன்று கோகுலாஷ்டமி எனும் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை தமிழகத்திலும், ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த மதுராநகர் மற்றும் வட மாநிலங்களிலும் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாத சுக்லபட்ச அஷ்டமி, அத்தனைப் புண்ணியம் நிறைந்த நன்னாளாக மாறியதற்குக் காரணம் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த திருநாள் இது என்பதால்தான். தன் தங்கைக்குப் பிறக்கும் எட்டாவது குழந்தையால் தன் உயிருக்கு ஆபத்து என்பதை அறிந்து பதறினான் கம்சன். முதல்கட்டமாக தங்கை தேவகியையும் அவளின் கணவர் வசுதேவரையும் சிறையில் அடைத்து கண்கொத்திப் பாம்பாகப் பார்த்து வந்தான். எட்டாவது குழந்தைதான் நமக்கு வில்லன் என்றபோதிலும் பிறந்த ஒவ்வொரு குழந்தையையும் கொன்றான். பதறிப்போனார்கள் தம்பதியர். ஏழாவது குழந்தை பலராமர். தேவகியில் வயிற்றில் கருவாகியிருந்தார். அப்போது ஸ்ரீமகாவிஷ்ணு என்ன செய்தார் தெரியுமா. மாயாதேவியை (துர்கா தேவி) அழைத்தார். பலராமரின் கருவை, கோகுலத்தில் உள்ள நந்தகோபரின் மனைவியரில் ஒருவரான ரோகிணியின் கர்ப்பப்பைக்குள் வைக்கும்படி அருளினார். தவிர, மாயாதேவியை நந்தகோபரின் மற்றொரு மனைவியான யசோதையின் வயிற்றில் கருவாக வளரும்படி பணித்தார். எட்டாவதாக, கிருஷ்ண பகவான் தேவகியின் வயிற்றில் வளர்ந்தார். ஆவணி மாத சுக்ல பட்ச அஷ்டமியில் கிருஷ்ணர் அவதரித்தார். தாயும் தந்தையும் மகிழ்ந்து கொண்டாடினார்கள். அப்போது குழந்தையானது, ஸ்ரீமகாவிஷ்ணுவாக விஸ்வரூபம் எடுத்து காட்சி தர, வியந்து போனார்கள். இது வரம். ஏற்கெனவே வாங்கி வந்த வரம். இது நிகழ்ந்த நன்னாள்தான் ஆவணி சுக்லபட்ச அஷ்டமித் திருநாள். கிருஷ்ண ஜெயந்தி எனும் புனித நன்னாள். இந்த நாளில், வீட்டு வாசலில் இருந்து வீட்டுப் பூஜையறைக்குள் பகவான் ஸ்ரீகிருஷ்ணரை, குழந்தையாகவே பாவித்து நாம் வரவேற்று பூஜிப்பது வழக்கம். அனேக சமயங்களில் கோகுலாஷ்டமி ஆவணி மாதம் சுக்ல பக்ஷ அஷ்டமியில் ரோஹினி நக்ஷத்திரத்தோடு இணைந்து நிகழும். இந்த கிருஷ்ண ஜென்மாஷ்டமி தினத்தை வைஷ்ணவர்கள் ரோகினி நக்ஷத்திர அடிப்படையிலும் வைஷ்ணவரல்லாதோர் அஷ்டமியை அடிப்படையாக கொண்டும் அனுஷ்டிப்பார்கள். சில சமயங்களில் ஸ்மார்தர்களுக்கு அஷ்டமி திதியிலும் வைஷ்ணவர்களுக்கு ரோகிணி நக்ஷத்திரத்திலும் தனித்தனியாக நிகழ்வதும் உண்டு. இந்தமுறை அஷ்டமியும் ரோகிணியும் இணைந்து வருகிறது. இந்த கோகுலாஷ்டமி தினத்தில் அரிசிமாவில் மாக்கோலமிட்டு கிருஷ்ணர் பாதம் வரைந்து ஒவ்வொருவர் வீட்டுக்கும் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா வந்தருளியிருப்பதாக எண்ணி குதூகலிப்போம். மாலை வரை விரதமிருப்போம். அதன் பிறகு கிருஷ்ணருக்குப் பிடித்த உப்பு சீடை, வெல்ல சீடை, தேன்குழல், தட்டை, அதிரசம், கைமுறுக்கு, அப்பம் வெண்ணெய், அவல், பால், கற்கண்டு முதலான பட்சணங்களை நைவேத்தியம் செய்து பூஜிப்போம். ஸ்ரீ கிருஷ்ணர் ஜாதகமும் ஜோதிடமும் ஸ்ரீ கிருஷ்ணர் போன்ற தெய்வ திரு அவதாரங்கள் எல்லாம் நவ கோள்களுக்கெல்லம் அப்பார்பட்டவர்கள். எனவே தெய்வங்களுக்கு ஜாதகம் உண்டா இல்லையா என்ற ஆராய்ச்சியை விடுத்து ஸ்ரீ க்ருஷ்ணரின் அவதார குறிப்புகளைக் கொண்டு நம்முன்னோர்கள் நமக்களித்துள்ள ஜாதகத்தை இந்த கோகுலாஷ்டமி தினத்தில் நினைவுக்கூறுவது நன்மை பயக்கும். ஸ்ரீ கிருஷ்ண பகவான் ரிஷப லக்னம் ரிஷப ராசி சந்திரன் உச்சம். லக்னமும் ராசியும் ஒன்றாக அமைந்தால் ஜட ஜன்ம ராசி என்பார்கள். ஜட ஜென்ம ராசியில் பிறந்தவர்களும் ரிஷபத்தை லக்னமாகவோ…
இன்றைய நவீன காலகட்டத்தில் அனைத்தையும் அறிவியல் ரீதியாக ஆராய்ந்து பார்ப்பதற்கு உள்ளது. அதன்படி ஒருவருக்கு பிறக்கும் ஆண் குழந்தை என்பது ஆணிடமிருந்து தான் பெறப்படுகிறது என்று அறிய முடிகிறது. முன்பெல்லாம், பெண் தான், ஆண் மகவை பெற்று தரவில்லை என்பதனால், வேறு பெண்ணை திருமணம் செய்துகொள்ளச் சொல்வார்கள். அதே போல் ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறக்கவில்லை என்றாலும் அந்த பெண்ணை தள்ளிவைத்துவிட்டு வேறு பெண்ணை; அது அவளின் சகோதரியாகக்கூட இருக்கலாம், அந்த பெண்ணை திருமணம் செய்விக்கச் சொல்லுவார்கள். பிள்ளை பெறாத அந்த பெண்ணின் மனதையும், உடலையும் நோகடிக்கச் செய்வார்கள். அதுவும் ஆணை விட பெண்களே, அதாவது நாத்தனார், மாமியார், அண்டை மற்றும் அயலார் வீட்டு பெண்களே, அதற்கு காரணமாக இருப்பார்கள். இப்போது கூறப்போவதை நன்றாக மனதில் ஆழ பதிய வைத்துக்கொள்ளுங்கள். எந்த ஒரு பெண்ணுக்கும் குழந்தைப் பேறு இல்லை என்பதே இல்லை. அதாவது குழந்தைப் பேறு இல்லாத பெண் என்பதே இல்லை. குழந்தைப் பேறு இல்லாத ஆண்தான் உண்டு. இதற்கு ஜோதிடம் கூறும் விதிகளை ஏன் மறைத்து வைத்தார்கள் என்பதை வெளிப்படையாகக் கூற முடியவில்லை. அந்த காலத்தில் சில ஜோதிடர்கள் தமது பிழைப்புக்காக மற்றும் கௌரவத்திற்காக – பெரும் பணக்காரர்களுக்கும், ஏன் அரசர்களுக்கும் இவ்வாறு ஆணின் தவறை, ஆணின் உடலில் உள்ள குறையை மறைத்து பெண் மீது, அந்தக் காலத்தில் பல அநீதிகளை பெண்ணுக்கு அளித்தது போல், பெண் மீது பழி சுமத்தி ஆணுக்கு சாதகமாக இந்த செயலில் ஈடுபட்டுள்ளார்கள் என இன்று அறியும் போது மிகவும் வேதனையாகவும், அவர்களின் மீது வெறுப்பையும் காட்ட வேண்டியதாக உள்ளது. இது போல் செய்தது வேற்று கிரக வாசிகளில்லை, நமது முன்னோர்கள் தான். இன்றைய தேதியில் அனைவரும், அனைத்து மதத்தினரும் ஆண், பெண் அனைவரும் ஜோதிடம் கற்கிறார்கள் எனும்போது மிகவும் சந்தோஷமாகவும், உண்மைகளை வெளிக்கொணரும் போது மட்டற்ற மகிழ்ச்சி கொள்வதாகவும் இருக்கிறது. ஜோதிடம் ஒரு அருமையான அறிவியல் மற்றும் கலை ஆகும். எனது குருநாதர் கூறுவார், “ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு நன்கு கற்றறிந்த ஜோதிடர் இருக்க வேண்டும்” என்று. இதை இங்கு நானும் கூற கடமைப் பெற்றுள்ளேன். நிற்க, ஜோதிடம் மூலம், குழந்தை பிறக்க தகுதியான ஆண் மகனா அல்லது பெற்று தர ஒரு பெண் தகுதி ஆனவளா என பிறப்பு ஜாதகம் கொண்டே அறிய முடியும். மேலும், அப்படி இல்லையெனில் மருத்துவ உதவி பெற்று அதன் மூலம் குழந்தை பாக்கியம் பெற முடியுமா என்பதனையும் அறிய ஜோதிடத்தில் நமக்கு பராசரர் மற்றும் அதற்கு பின்வந்த ஜோதிட விற்பன்னர்கள் அன்றே ஜோதிடம் மூலம் அருமையாகக் கூறியுள்ளனர். ஒரு ஆண், குழந்தை பிறக்க தகுதி உள்ளவனா, அதாவது உயிர் அணுக்கள் அவனுக்கு சரியான நிலையில் உள்ளதா அல்லது மருத்துவத்திற்கு பின்னர் உயிர் அணுக்களை உயர்த்திக்கொள்ள வேண்டுமா என்பதனை அவனின் பிறப்பு ஜாதகமே கூறிவிடும். அதற்கான சில ஜோதிட விதிகளும்…
முத்துசாய் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள் ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயில் வைகுந்த ஏகாதசி பெருவிழாவில் பகல் பத்து விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இரண்டாம் நிகழ்ச்சியில் முத்துசாய் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பூலோக வைகுண்டம் எனப்படும் இக்கோயிலின் மிகப்பெரிய விழாவான வைகுந்த ஏகாதசி பெருவிழா பகல் பத்து, இராப்பத்து என 21 நாள்கள் நடைபெறும். மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 11) திருநெடுந்தாண்டகத்துடன் திங்கள்கிழமை விழா தொடங்கிய நிலையில், பகல்பத்து விழாவின் முதல் நாளான செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து தனுா் லக்னத்தில் நீள்முடி கிரீடம், ரத்தின அபயஹஸ்தம், திருமாா்பில் லட்சுமி பதக்கம், கா்ணபூசணம், பவளமாலை, அடுக்குப் பதக்கம், சூரியப்பதக்கத்துடன் அா்ச்சன மண்டபத்தை 7.45 -க்கு அடைந்தாா். 8.15 வரை திரையிடல் நிகழ்ச்சியும், 8.15 முதல் பிற்பகல் 1 மணி வரை அரையா் சேவையுடன் பொதுஜன சேவையும் நடைபெற்றது. திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசித்தனா். பகல்பத்து 2 ஆம் நாள் திருநாள் நிகழ்ச்சியான இன்று புதன்கிழமை காலை 6.30 மணிக்கு நம்பெருமாள் கருவறையில் இருந்து புறப்பட்டு ரத்தின அபயஹஸ்தம், திருமார்பில் லட்சுமி பதக்கம், கர்ண பூசனம், பவளமாலை, அடுக்கு பதக்கம், சூரிய பதக்கத்துடன் முத்து சாய் கொண்ட அலங்காரத்தில் அர்ச்சன மண்டபத்தை 7 மணிக்கு அடைந்தார். 7.45 வரை திரையிடல் நிகழ்ச்சியும், பின்னர் மூலஸ்தானத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார் நம்பெருமாள். திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசித்தனா். நன்றி Hindu அடிமையாக்கும் மறுபிறவியில்லா கேது