ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 10 நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்! மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்? நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால் போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கருணனும் தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ? ஆற்ற அனந்த லுடையாய் அருங்கலமே! தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய். பாடியவர் பவ்யா ஹரி விளக்கம்: வெளியில் நிற்கும் தோழிகள் அழைக்க, உள்ளிருப்பவள் விடைகூடத் தரவில்லை. “என்னம்மா, நோன்பு நோற்றுச் சுவர்க்கத்திற்குள் புகுந்து கிடக்கிறாயோ?’ என்று பரிகசிக்கிறார்கள். “வாசல்தான் திறக்கவில்லை, விடை தருவதற்கு வாயைத் திறக்கக் கூடாதோ? வாசனை கமழும் துளசி மாலையைத் தன்னுடைய திருமுடியில் சூடியவனான நாராயணன், நாம் துதிக்க, நமக்கு அருள் தருவான். அறத்தின் நாயகனான எம்பெருமான், இராமனாக அவதரித்தபொழுது, இயமன் வாயில் தள்ளப்பட்ட கும்பகர்ணன், தன்னுடைய பெருந்தூக்கத்தை உனக்குத் தந்துவிட்டுப் போய் விட்டானோ? பேருறக்கம் கொண்டவளே, அரிய அணிமணி போன்றவளே, தெளிந்து வந்து கதவைத் திற’ என்று ஆதுரத்தோடு அழைக்கிறார்கள். பாசுரச் சிறப்பு: “அருங்கலம்’ என்னும் சொல், நல்ல பாத்திரம் என்னும் பொருளில், இறைவன் அருளைப் பெறுவதற்குத் தக்கவர்கள் என்பதைக் குறிக்கும். உறக்கத்தாலும் சோம்பலாலும் தகுதியைத் தொலைத்துவிடக் கூடாது என்னும் படிப்பினையை நினைவு படுத்துகிற பாசுரம். “இதுதான் நீ நோன்பியற்றும் அழகா?’ என்று கிண்டல் பேசுவதாகப் பொருளுரைத்தாலும், சு+வர்க்கம் என்று பிரித்து, “நல்ல கூட்டமான இந்தக் கூட்டத்திற்குள் சேர்ந்துவிடு’ என்று அழைப்பதாகவும் விரிக்கலாம். ஸ்வாபதேசத்தில், இப்பாசுரமானது பேயாழ்வாரைச் சுட்டுகிறது. அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – பாடல் 10 குலத்தைக் காக்கும் நம்ம வீட்டு குலசாமி : ஜோதிட தேடல் பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர் போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே! பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன் வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும் ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன் கோதில் குலத்தரன்றன் கோயிற்பி ணாப்பிள்ளைகாள்! ஏதவன்ஊர்? ஏதவன்பேர்? ஆருற்றார்? ஆர்அயலார்? ஏதவனைப் பாடும் பரிசேலோ ரெம்பாவாய். பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன் பாடியவர் – மயிலை சற்குருநாதன் பாடியவர் – சுந்தர் ஓதுவார் விளக்கம்: பாடிக்கொண்டே நீராடச் சென்றவர்கள், பொய்கையை அடைந்துவிட்டனர் போலும்! இறைவன் பெருமையை மேலும் பாடுகின்றனர். இறைவனின் திருவடியோ, அதல பாதாளம் என்னும் கீழுக்குக் கீழே உள்ள அனைத்தையும் கடந்து கீழே சென்றுள்ளது. திருமுடியோ, பொருள், வன்பொருள், நுண்பொருள் என யாவற்றையும் கடந்து மேலே சென்றுள்ளது. ஆக, அடியும் முடியும் (மனித, மன, சொல்) எல்லைகளுக்கு அப்பாற்பட்டன. அன்னை பார்வதியை ஒரு பாகமாகக் கொண்டவன். எனவே, ஒற்றைத் திருமேனியிலும், ஒரே திருமேனி இல்லாதவன். திருமேனி பலவாக, அதாவது, அனைத்துப் பொருள்களிலும் வடிவுகளிலும் உள்ளவன். வேதத்தின் விழுப்பொருள்ஆனவன். தேவர்களும் மனிதர்களும் (பிறரும்) எவ்வளவு துதித்தாலும் முழுமையாகத் துதிக்க முடியாத பெருமையன். இருப்பினும், உயிர்களிடம் கொண்ட கருணையால் தோழனாகிநிற்பவன். தொண்டர் உள்ளத்தில் வாழ்பவன். சிவன் திருக்கோயிலின் குற்றமற்ற பிணாப்பிள்ளைகளே! அவனுடைய ஊரும்…
இந்த பிரபஞ்சம் என்ற நாணயத்தின் இரு பக்கங்களாக விளங்குபவர்கள்தான் சதி (அன்னை பார்வதி தேவி), இறைவன் சிவபெருமான். பிரம்மன் மற்றும் பிரதானும் போல. இந்தக் கதை ஒரு யாகத்தில் தொடங்கி சதியின் தீக்குளிப்புடன் சக்திக்கு அடிகோலி நிறைவு பெறுகிறது. சிவபெருமானுக்கு அழைப்பு விடுக்காமல், அவமதிக்கும் வகையில், தட்சிணன் மிக வலிமையான யாகம் நடத்த, யாகத்தைத் தடுக்கும் வகையில் சதி, அந்த யாகத்தில் தன்னைத் தானே இட்டு மாய்த்துக் கொண்டதால் உருவானதே 51 சக்தி பீடங்கள். இதனால் கடும் உக்கிரம் கொண்டு சதியின் உடலைக் கையில் ஏந்தியபடி சிவபெருமான் இந்த உலகமே அழியும் வகையில் தாண்டவமாட, மகாவிஷ்ணு தனது சுதர்சன சக்கரத்தால் சதியின் உடலை 51 துண்டுகளாக்குகிறார் (சில மகான்கள், இதனை 108 துண்டுகள் என்கிறார்கள்.) சிவனின் உக்கிர தாண்டவத்தால், சதியின் உடல் பகுதிகளும் இறைவி அணிந்திருந்த அணிகலன்களும் பூமியின் பல பகுதிகளில் சிதறி விழுந்தன. இவ்வாறு தேவியின் உடல் பகுதிகள் ஒவ்வொன்றும் விழுந்த புனித இடங்களே 51 சக்தி பீடங்களாக விளங்குகின்றன, பக்தர்களால் வணங்கப்படுகின்றன. இவை, சமஸ்கிருத மொழியில் உள்ள 51 எழுத்துகளைக் குறிப்பதாகவும் நம்பப்படுகிறது. இந்த 51 சக்தி பீடங்களிலும் ஒன்றுபோல சக்தி தேவியும், கால பைரவரும் முக்கிய வழிபாட்டுத் தெய்வங்களாக அருள்பாலிக்கின்றனர். தனிச்சிறப்பு கொண்ட சக்தி பீடங்கள், இந்திய எல்லைக்குள் மட்டுமல்லாமல், அண்டை நாடுகளான பாகிஸ்தான், நேபாளம், திபெத், வங்கதேசம், இலங்கை ஆகியவற்றிலும் விரிந்து பரந்து உள்ளன. இவை அனைத்தும் இந்து மதத்தைப் பறை சாற்றுவதோடு, அந்தந்தப் பகுதியின் சிறப்பியல்புகளை எடுத்தியம்பும் வகையிலும் அமைந்திருப்பது கூடுதல் விசேஷம். தெய்வ வழிபாடு என்பது, பல நாடுகளின் எல்லைகளைக் கடந்து, அவற்றை ஒரு குடும்பம் போலக் கருதச் செய்யும் இந்து மதத்தின் மகத்துவத்தையும் கொண்டுள்ளன சக்தி பீடங்கள். காஷ்மீர் முதல் தமிழகம் வரையிலும் குஜராத் முதல் மேற்கு வங்கம் வரையிலும் தியாகம் – காதல், நம்பிக்கை – மறுமலர்ச்சியின் அம்சங்களாக சக்தி பீடங்களில் இறைவி அருள்பாலித்து வருகிறார். சிவ புராணம் மற்றும் காளிகா புராணங்களில், 4 சக்தி பீடங்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன – அவை, விமலா (புரி, ஒடிசா), தாரா தாரிணி (கஞ்சம், ஒடிசா), காமாக்யா (குவஹாட்டி), தட்சிண காளிகா (காளிகட், கொல்கத்தா) ஆகியன. சில சக்தி பீடங்கள், நூறுநூறாண்டுகள் பழைமை வாய்ந்தவையாக உள்ளன. அதோடு, இந்தக் கோயில்கள் இதுநாள் வரை, பல புராதன உள்ளூர் நம்பிக்கைகளையும் ஐதீகங்களையும் தாங்கி நிற்கின்றன. உதாரணமாக, 15 ஆம் நூற்றாண்டில், புத்த மாலிக் என்ற கால்நடை மேய்ப்பவருக்கு, ஒரு துறவி பை நிறைய நிலக்கரியை அளிக்கிறார். அது சிவபெருமானின் சக்தியால் தங்கமாக மாறியது. தனது நன்றியை வெளிப்படுத்த இறைவனைத் தேடிய புத்த மாலிக், அமர்நாத் குகையில் பனி லிங்கமாகக் காட்சியளித்த சிவலிங்கத்தை வணங்கினார் என்ற ஐதீகம் இன்றளவிலும் விளங்கி வருகிறது. உலகின் மிகப் பெரும் ஆக்கும் சக்தியாகவும் அழிக்கும் சக்தியாகவும் பார்வதி தேவி விளங்குகிறார். சதியின் மறுபிறவியான பார்வதி தேவி, ஆக்கம், மகப்பேறு, மாற்றம், ஆணின் சுதந்திரம் போன்றவற்றைப் பிரதிபலிக்கும் சக்தியாகவும் வழிபடப்படுகிறார். சக்தியின் முக்கியத்துவம் சிவராத்திரியின் போது வெளிப்படுகிறது. சதி,…
முன்பொரு காலத்தில் தேவர்களுக்கு அசுரர்கள் பல தொல்லைகளை அளித்து வந்தனர். அசுரர்களில் சூரபத்மன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து வரம் பெற்றவன். எனவே தேவர்கள் சிவனை வேண்டினர். பிரார்த்தனையை ஏற்ற சிவனும், சூரபத்மனை அழிக்கத் தனது மூன்றாவது கண்ணில் இருந்து வெளிப்பட்ட ஆறு தீப்பொறிகளில் இருந்து முருகனை அவதரிக்கச் செய்தார். குழந்தையான முருகனை கார்த்திகை பெண்கள் சீரும் சிறப்புமாக வளர்த்தனர். பின்பு சூரபத்மனை அழிக்க முருகனுக்கு உத்தரவிட்டார். சூரபத்மனை அழிக்க முருகன் திருச்செந்தூருக்கு வருகிறார். அப்போது தேவர்களின் குரு வியாழன் முருகனின் அருளாசி பெற தவத்தில் இருந்தார். முருகனும் அவருக்கு தரிசனம் தந்து அருள் அளித்துவிட்டு, திருச்செந்தூரை படை வீடாகக் கொண்டு தனது படையுடன் தங்கி சூரபத்மனை அழிக்க வியூகம் வகுத்தார். அசுரர்களின் வரலாற்றை அவர் வியாழனிடமிருந்து அறிந்து கொண்டார். பின்னர் முருகன் தனது நவ வீரர்களில் ஒருவரான வீரபாகுவை சூரபத்மனிடம் தூதுவனாக அனுப்பி, “தேவர்களுக்குக் கொடுக்கும் தொல்லையை நிறுத்த வேண்டும்’ என்று தெரிவித்தார். சமாதானக் கோரிக்கையை சூரபத்மன் ஏற்கவில்லை. கடைசியாக, சூரபத்மன் மீது முருகன் போர் தொடுத்தார். சிவபெருமானிடம் வரம் பெற்ற மாமரமாக உரு மாறிய சூரபத்மனை வதம் செய்யாமல் அவனது ஆணவத்தை அழித்து சேவற்கொடியாகவும், மயிலாகவும் மாற்றி தன்னுள் ஆட்கொண்டு வைத்துக் கொண்டார் . அதனால் முருகன் “சேவற்கொடியோன்’ என்றும் அழைக்கப்பட்டார். இந்த நிகழ்வுக்குப் பிறகு, வியாழன் முருகனை திருச்செந்தூரில் தங்கி அருள் புரியும்படி வேண்டுகோள் விடுத்தார். பின்னர், வியாழன் உத்தரவின்படி விஸ்வகர்மா இந்த திருக்கோயிலை கட்டினார். சூரபத்மனை அழித்ததில் முருகனின் வெற்றியின் காரணமாக, முருகன், “ஜெயந்திநாதர்’ என்று அழைக்கப்படுகிறார். பிற்காலத்தில் “செந்தில்நாதன்’ என்றும் அழைக்கப்பட்டார். இத்தலமும் திருஜெயந்திபுரம் என அழைக்கப் பெற்று காலப்போக்கில் மருவி “திருச்செந்தூர்’ என்று அழைக்கப்படுகிறது. இதற்கு “திருச்சீரலைவாய்’ என்ற மறு பெயரும் உண்டு முருகனின் அறுபடைவீடுகளில் இரண்டாம் படை வீடு திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்ரமணிய சுவாமிகோயில், கடற்கரை கோயிலாக அமைந்துள்ளது. பிற அறுபடை வீடுகள் மலைகளில் அமைந்திருக்க இத்திருத்தலம் வங்கக் கடலின் அருகில் அமைந்துள்ளது தனிச்சிறப்பு. இந்தக் கோயில் ஆதிகாலங்களில் இருந்து சந்தனமலையின் ஒரு பகுதியாக அமைந்திருக்கிறது. தமிழரின் பண்டைய நூல்களில் குறிப்பிடுவது போல், சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான கட்டமைப்பு உடையது. ஆலங்குடியும் அஷ்ட திக்கு கோயில்களும் – மினி தொடர் திருமுருகாற்றுப்படையில் திருச்செந்தூர் இரண்டாவது தலமாக அமையப் பெற்றுள்ளது. அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல்களிலும் குமரகுருபர சுவாமிகள் கந்தர் கலிவெண்பாவிலும் திருச்செந்தூரை போற்றி உள்ளனர். சிறப்புடைய இந்தக் கோயில் குடமுழுக்கு விழா 15 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜூலை 7 (திங்கள்கிழமை) காலை 6.15 மணி முதல் காலை 6.50 மணிக்குள் நடைபெறுகிறது. க. சுப்பிரமணியன் நன்றி Hindu புனர்பூ தோஷத்தை உருவாக்கும் கிரகங்களும் பரிகாரங்களும்
சனியைப் போல் கொடுப்பாரும் இல்லை; கெடுப்பாரும் இல்லை என்பது கிராமங்களில் வழங்கப்படும் வழக்கு. நவகிரகங்களில், ஈஸ்வர பட்டம் பெற்றவர் சனிபகவான். நாம் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப நடுநிலையுடன் பலன்களைத் தருபவர் என்பதால், அவருக்கு ‘நீதிமான்’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு. ‘ஆயுள்காரகன்’ என்ற சிறப்பும் சனீஸ்வர பகவானுக்கு உண்டு. காரி என்ற பெயர் சனீஸ்வரனுக்கு உண்டு. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் சனீஸ்வரன் குடி கொண்டிருந்ததால் “காரி” குப்பமென இறைவன் பெயரால் அழைக்கப்பட்டது. அவ்வூரில் நெடுநாள்களாக மக்கள் வழிபட்ட சனிபகவான் மக்களின் தவறால், வழிபாடற்று தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு மட்டும் அருளுபவராக இருந்து வந்தார். பொ.ஆ 1236 முதல் 1375ம் ஆண்டு வரை அம்மன் கோவில் படைவீடை தலைநகராகக் கொண்டு சம்புவராய மன்னர்கள் ஆண்டனர். அவர்களில் ராஜவீர கம்பீரன் என்பவர் சனீஸ்வர யந்திரத்தைப் பிரதிஷ்டை செய்து, போருக்குச் செல்லும்போதெலாம் வழிபட்டு வெற்றி பெற்று வந்தனர் என்பது அறியப்படும் வரலாறாகும். 1535ம் ஆண்டு இப்பகுதியை ஆட்சி செய்த நாயக்க மன்னரின் படைத்தளபதி வையாபுரி இவ்வழியாக குதிரையில் செல்லும்போது, திடீரென கீழே விழுந்து இடது காலில் முறிவு ஏற்பட்டது. குதிரையும் நிலைதடுமாறியதால் பலத்த அடிபட்டது. சிகிச்சையின்போது ஒரு பெண்ணின் வாயிலாக இறைவன் வெளிப்பட்டு, யந்திர வடிவில் சனீஸ்வர பகவானுக்கு கோயில் ஒன்றை இங்கே எழுப்பி, சிறப்பு வழிபாடுகள் செய்தால் அனைத்தும் நலமாகுமென, அதன்படியே உடல் தேறிய வையாபுரி, பெரியோர்களின் ஆலோசனைப்படி புதரும் புல்லும் நீக்கி யந்திர வடிவிலான சனீஸ்வரன் யந்திரத்தை எடுத்து வைத்து நிறுத்தி 4 கால பூஜைகளை செய்து நற்பலன்கள் பெற்றார். கால வெள்ளத்தில் கோயில் மறைந்து புதர் மண்டிப்போக யந்திர சிலை மீண்டும் முட்புதர்களால் மூடப்பட்டது. ஊரார் ஆண்டுக்கு சிலநாட்கள் புதர்விலக்கி வழிபாடு செய்யும் பழக்கம் மட்டும் இருந்தது. யந்திர சனீஸ்வரரும் அடுத்துக் குளமும் குளத்தை ஒட்டி பெரிய ஏரியும் அமைந்திருந்ததால் காரியூர் என்னும் பெயர் ஏரியூர் என மருவிற்று. ஏரிக்கருகில் குடி கொண்டிருந்த சனீஸ்வரர் இருக்கும் தகவல் ஆடுமாடு மேய்க்கும் சிறுவர்கள் மூலம் அறியப்பட்டு தொல்பொருள் துறையினரால் தகவல்கள் வெளித்தெரிந்து மீண்டும் பூஜைகள் நிறுவி வழிபாடு நடைபெற்று வருகிறது. சனிபகவானை, விக்கிரக வடிவத்தில் மட்டும் காகம், கழுகு வாகனத்துடன் நவக்கிரகங்களுடனோ பிரகாரத்திலோ தரிசிக்கலாம். தேனி மாவட்டம் குச்சனூரில் சுயம்பு சனீஸ்வரனாகவும் வட நாட்டில் சனிசிக்னாபூர் என்னும் தலத்தில் பாறை வடிவத்திலும் தரிசிக்க முடியும். ஆனால், மேற்கூரையின்றி கருவறை கொண்ட யந்திர சனீஸ்வர பகவான் அருள்புரியும் கோயில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவிலிருக்கும் ஏரிக்குப்பதில் மட்டுமே உள்ளது, திறந்த வெளிக்கருவறையில் ஐந்தரை அடி உயரமும் ஒன்றரை அடி அகலமும் கொண்ட உயரமான பலகைக் கல்லில், யந்திர சனீஸ்வரர், காக்கைச்சித்தரால் நிறுவப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. கிழக்கு நோக்கிக் காட்சிதரும் யந்திர சனீஸ்வரர் சனிபகவானின் பீஜாட்சர மந்திரங்கள் பொறிக்கப்பட்ட யந்திரத்தின் மேல் இடப்புறம் சூரியனும், வலப்புறம் சந்திரனும் இரண்டுக்கும் நடுவில் சனீஸ்வரனின்…
தமிழ் மாதங்களில் அவதாரம்! குறுந்தொடர் 4quot;ஆடி #39;க்கும், quot;மார்கழி #39;க்கும் தனிப் பெருமை உண்டு. இவ்விரு மாதங்களையும் இறை வழிபாட்டிற்காகவே நம் முன்னோர்கள் அமைத்தனர். நன்றி Hindu மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 24)
மேஷ ராசி (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய) ஜோதிடர் கே.சி.எஸ். ஐயர், தினமணி மேஷ ராசிக்கான ராகு – கேது பெயர்ச்சி பலன்களை கணித்து வழங்கியுள்ளார். 17.03.2022 முதல் 11.07.2022 வரை உள்ள காலகட்டத்தில் மனதிலிருந்த பயங்கள் அனைத்தும் படிப்படியாக மறையத் தொடங்கும். புத்துணர்ச்சியுடன் காரியமாற்றத் தொடங்குவீர்கள். செய்தொழிலை புதிய இடங்களுக்குச் சென்று விரிவுபடுத்துவீர்கள். பரந்த மனதுடன் செயல்பட்டு மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள். இதனால் தன்னம்பிக்கையும், வளைந்து கொடுக்கும் தன்மையும் அதிகரிக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கூடுதல் பணவரவும் கிடைக்கும். எதிர்மறை எண்ணங்களுக்கு அடிமையாக மாட்டீர்கள். உற்றார் உறவினர்களுடன் விட்டுக் கொடுத்து நடந்துகொண்டு உறவுகளைப் புதுப்பித்துக் கொள்வீர்கள். தாய்வழி உறவினர்கள் மூலம் ஆதரவான சூழல் அமையும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் மூலம் உங்கள் திறமைகள் வெளிப்படும். பயணங்கள் மூலம் முன்னேற்றகரமான வாய்ப்புகள் ஏற்படும் காலகட்டமிது என்றால் மிகையாகாது. 12.07.2022 முதல் 06.02.2023 வரை உள்ள காலகட்டத்தில் எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்குவீர்கள். குடும்பத்தில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். சமூகத்தில் உயர்ந்தவர்களின் நட்பைப் பெற்று அவர்கள் உதவியுடன் செயற்கரிய விஷயங்களையும் சுலபமாக செய்து முடித்து விடுவீர்கள். நண்பர்களிடமும் நிதானமாகப் பழகுவீர்கள். பொருளாதாரம் படிப்படியாக உயரும். புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். பழைய நண்பர்களைக் கண்டு மகிழ்வீர்கள். 07.02.2023 முதல் 28.11.2023 வரை உள்ள காலகட்டத்தில் அரசு சம்பந்தமான செயல்பாடுகளில் இருந்த தடைகள் அகலும். வங்கிகளிடமிருந்து எதிர்பார்த்த கடன் கிடைத்து தொழிலை விரிவுபடுத்துவீர்கள். ஆராய்ச்சி, தத்துவ விஷயங்களில் தேடல் அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகள் தானாகவே மறைந்துவிடும். உடன் பிறந்தோரின் தேவைகளை அவர்கள் கேட்காமலேயே பூர்த்தி செய்வீர்கள். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். சிலர் அசையும், அசையாச் சொத்துகளை வாங்குவார்கள். அனைத்துச் செயல்களையும் நன்கு சிந்தித்து திட்டமிட்டு செயல்படுத்தி வெற்றி பெறுவீர்கள். நீண்ட நாள்களாக சந்திக்க விரும்பிய நண்பர்களைச் சந்திப்பதற்கான சூழ்நிலைகள் உருவாகி உங்கள் பெயர், புகழ், அந்தஸ்து, கெüரவம் உயரும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 12) உத்தியோகஸ்தர்களுக்கு இந்த ராகு, கேது பெயர்ச்சியில் பணவரவுக்குத் தடைகள் இராது. அலுவலக வேலைகளை முன்கூட்டியே செய்து முடித்து மேலதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பீர்கள். சில நேரங்களில் சக ஊழியர்களால் சில இடையூறுகளைச் சந்திக்க நேரிடும். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் நீங்கும். மனதில் உற்சாகம் பெருகும். போட்டிகள் குறையும். வாடிக்கையாளர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். விவசாயிகள் கால்நடைகளின் மூலம் விரும்பிய பலனை அடைவீர்கள். நீர்வரத்து நன்றாக இருக்கும். தகுந்த நேரத்தில் விதைத்து, மகசூல் பெருகி, சந்தையில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். அரசியல்வாதிகள் மக்கள் நலப்பணிகளில் அதிகம் கவனம் செலுத்துவீர்கள். கட்சி மேலிடத்தில் ஆதரவு பெருகும். எதிரிகளிடம் பழகும் போது ஜாக்கிரதையாக இருக்கவும். கலைத்துறையினருக்கு அதிகமான முயற்சிகளுக்குப் பிறகு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். விருதுகளும் பாராட்டுகளும் பெற கடினமாக உழைப்பீர்கள்….
விநாயகப் பெருமானின் வாகனம் மூஷிகம் என்று சொல்லப்பட்டாலும் இவர், பல்வேறு யுகங்களில் வெவ்வேறு வாகனத்தில் அருள்புரிந்திருக்கிறார். கிருதயுகத்தில் இவரது வாகனம் சிங்கம். திரேதா யுகத்தில் மயில். துவாபர யுகத்தில் மூஷிகம். கலியுகத்தில் இவரது வாகனம் குதிரை என்று சொல்லப்பட்டாலும் அந்த வாகனத்துடன் இவரை தரிசிப்பது அரிதாகும். விநாயகருக்கு ரிஷபம், யானை ஆகியவையும் வாகனமாய் இருந்திருக்கின்றன. கப்பட்டினம் நீலாயதாட்சி அம்மன் ஆலயத்தில் பஞ்சமுகங்களுடன் காணப்படும் விநாயகர், சிம்ம வாகனத்தில் காட்சி அளிக்கிறார். திருவொற்றியூர் குருதட்சிணாமூர்த்தி ஆலயத்திலும் பஞ்சமுகங்களுடன் சிம்மத்தில் அருள்புரிகிறார். பாண்டிச்சேரி மணக்குள விநாயகர் ஆலய சுதைச் சிற்பத்திலும் அருப்புக்கோட்டை தாதன்குள விநாயகர் ஆலயத்திலும் திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி ஆலயத்தில் உள்ள ஓவியத்திலும் விநாயகர் மயில் வாகனத்துடன் காட்சி தருகிறார். கோயம்புத்தூர் குருபதேசக் கவுண்டர் ஆலயத்திலும் கடலூர் வட்டம் சென்னப்ப நாயக்கன் பாளையத்தில் உள்ள மலையாண்டவர் விநாயகர் ஆலயத்திலும் குதிரை வாகனத்தில் காட்சி தருகிறார். திருச்செந்தூர் ஆவுடையார் குளக்கரையில் உள்ள அரசாள்வார் விநாயகருக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்விளாகம் வைத்தியநாத சுவாமி ஆலயத்தில் உள்ள விநாயகருக்கும் யானை வாகனமாக உள்ளது. சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயத்திலுள்ள விநாயகர் முன்பும் நெல்லை காந்திமதியம்மன் கோயிலில் அருள்புரியும் விநாயகப்பெருமானின் முன்பும் காளை வாகனம் காட்சியளிக்கிறது. – டி.ஆர். பரிமளரங்கன் சாட்சி விநாயகர்ஆலங்குடியும் அஷ்ட திக்கு கோயில்களும் – மினி தொடர் – பகுதி 4 – புலவர்நத்தம் சிவன் கோவில் திருச்சானூரில் பெருமாளும் தாயாரும் திருமணம் செய்து கொள்ள சாட்சியாக இருந்த விநாயகர் “சாட்சி விநாயகர்’ என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். பெருமாள் தாயாருடன் சேர்ந்து இருக்கும் விநாயகரை இங்கு தான் தரிசிக்க முடியும். குழந்தைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்க இங்கு வந்து மணி கட்டி வழிபாடு செய்து வருகிறார்கள். ஆந்திர மாநிலம் சித்தூர் அருகில் உள்ளது காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில். இக்கோயிலின் பிரசாதம் அங்குள்ள கிணற்று நீர்தான். இந்த கிணற்றில் தான் சுயம்புவாக வரசித்தி விநாயகர் தோன்றினார். அதனால் அதே கிணற்றின் மேல் தான் அவர் காட்சி தருகிறார். விநாயகரைச் சுற்றிலும் எப்போதும் கிணற்றின் நீர் ஓடிக் கொண்டே இருக்கிறது. இந்தப் பிள்ளையாரை சாட்சியாக வைத்து ஒரு காலத்தில் வழக்குகளை முடித்துக் கொள்வார்களாம். அதனால் இன்றும் வழக்குகளில் வெற்றி பெற இந்த விநாயகரை வழிபட்டு வருகின்றனர். திருச்சானூரில் பெருமாளும் தாயாரும் திருமணம் செய்து கொள்ள சாட்சியாக இருந்த விநாயகர் “சாட்சி விநாயகர்’ என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். பெருமாள் தாயாருடன் சேர்ந்து இருக்கும் விநாயகரை இங்கு தான் தரிசிக்க முடியும். குழந்தைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்க இங்கு வந்து மணி கட்டி வழிபாடு செய்து வருகிறார்கள். ஆந்திர மாநிலம் சித்தூர் அருகில் உள்ளது காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில். இக்கோயிலின் பிரசாதம் அங்குள்ள கிணற்று நீர்தான். இந்த கிணற்றில் தான் சுயம்புவாக வரசித்தி விநாயகர் தோன்றினார். அதனால் அதே கிணற்றின் மேல் தான் அவர் காட்சி தருகிறார். விநாயகரைச் சுற்றிலும் எப்போதும் கிணற்றின் நீர் ஓடிக் கொண்டே இருக்கிறது….
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 16 நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய கோயில் காப்பானே கொடித்தோன்றும் தோரண வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய் ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னனலே வாய்நேர்ந்தான் தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான் வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா நீ நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய். பாடியவர் – பவ்யா ஹரி விளக்கம்: துயிலெடை நிறைவுற்று, நோன்பின் நோக்கம் தொடங்குகிறது. நோன்பியற்றும் பெண்கள் கண்ணனுடைய இல்லத்தை அடைந்து விட்டார்கள். இது நந்தகோபனுடைய இல்லம் அல்லவா? அதையே கூறுகிறார்கள். வாயிலில் வந்து நின்று, இல்லத்திற்குள் தங்களை அனுமதிக்கும்படி வேண்டுகிறார்கள். "நந்தகோபனுடைய அரண்மனையின் காவலனே, வாயிலின் காவலனே, கதவைத் திறந்து எங்களை உள்ளே அனுமதித்துவிடு. ஆயர் சிறுமிகளான எங்களுக்குப் பரிசு தருவதாக நேற்றே கண்ணன் எங்களிடம் தெரிவித்துவிட்டான். மாயனும் மணிவண்ணனுமான அவனைத் துயிலெழுப்புவதற்காக நாங்கள் தூய்மையானவர்களாக வந்திருக்கிறோம். இல்லை இல்லை என்று உன்னுடைய வாயால் மறுக்காதே. கதவைத் திறந்துவிடு’ என்று விண்ணப்பிக்கிறார்கள். பாசுரச் சிறப்பு: முறை தெரிந்தவர்களின் துணைகொண்டு கடவுளை அணுக வேண்டும் என்பதைத் தெரிவிக்கும் பாசுரம். கண்ணனுடைய இல்லம் என்று குறிப்பிடாமல், நந்தகோபன் இல்லம் என்று குறிப்பிடுவதற்குக் காரணம் உண்டு. நந்தகோபன் மகன் என்று அறிமுகம் செய்து கொள்வதுதான் கண்ணனுக்குப் பிடிக்கும். காண்பதற்கு அழகான (மணிக்கதவம்) கதவுகள், நேயக் கதவுகளாகவும் இருக்கின்றன. கண்ணன் தோன்றிய பின்னர், ஆயர்பாடியின் அஃறிணைப் பொருள்களும்கூட அன்பு கொண்டவையாக மாறிவிட்டன. உள்ளுறைப் பொருளில், "தூயோமாய் வந்தோம்’ என்பது கடவுள் திருத்தொண்டைத் தவிர வேறெதிலும் இவர்களுக்கு விருப்பம் இல்லை என்பதைக் காட்டுகிறது. ஆண்டவனை அணுகும் நெறியில், அடியார்களையும் ஆசானையும் அணுகி, அவர்கள் வழியாகக் கடவுளை நெருங்கும் வழிமுறையைக் குறிப்பாகச் சுட்டுகிற பாசுரம். அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – பாடல் 16 முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள் என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின் மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்ஆலங்குடியும் அஷ்ட திக்கு கோயில்களும் – மினி தொடர் – பகுதி 4 – புலவர்நத்தம் சிவன் கோவில் பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம் என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள் தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு முன்னி அவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே என்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய். பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன் பாடியவர்கள் : ஆலவாய் அண்ணல் பாடசாலை மாணவர்கள் பாடியவர் – மயிலை சற்குருநாதன் பாடியவர் – பொன் முத்துக்குமரன் விளக்கம்: பாவை நோன்பின் பொதுப் பயனாக மழையை வேண்டுகிற பாடல். திருப்பாவையின் நான்காவது பாடலான "ஆழி மழைக்கண்ணா’ என்னும் பாசுரத்தை ஈண்டு நினைவுகூரலாம். மழை மேகத்தைக் காண்கிறபோது, இப்பெண்களின் சிந்தனையில் அம்மையின் தோற்றம் எழுகிறது. கருநீலமாகப் புலப்படுகிற பெருங்கடலை, அப்படியே சுருக்கி வற்றச் செய்ததுபோல், வானிலுள்ள கருமேகமும் காட்சி தருகிறது. கருமேகத்தைக் கண்டால், கரிய திருமேனி கொண்டவளான அம்பிகை போன்றே தோன்றுகிறது. "எம்மை ஆட்கொள்கிற உடையாளான அம்பிகையின் நுண்ணிடை இருப்பதும் இல்லாததுமாகத்…
வைகுந்த ஏகாதசி பகல் பத்து 10-ஆம் திருநாளான் வியாழக்கிழமை மோகினி அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள். ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் வைகுந்த ஏகாதசி பெருவிழாவின் பகல்பத்து 10 ஆம் நாளான வியாழக்கிழமை காலை நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 15) விழாவையொட்டி காலை 6 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் புறப்பட்டு காலை 7 மணிக்கு பகல்பத்து மண்டபமான அா்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினாா். அங்கு அலங்காரம், அமுது செய்யத் திரையிடப்பட்டு காலை 8 மணி முதல் பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று முகக் கவசம், சமூக இடைவெளியுடன் நம்பெருமாளைத் தரிசித்து வருகின்றனர். இரவு 8 மணிக்கு மேல் பக்தா்களுக்கு அனுமதியில்லை. வைகுந்த ஏகாதசி பகல்பத்து 10-ஆம் நாளான வியாழக்கிழமை முத்துக்குறி அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள். நன்றி Hindu மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 24)
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 9 தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும் மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய் மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள் தான் ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ? ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ? மாமாயன் மாதவன் வைகுந்த னென்றென்று நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய். பாடியவர் பவ்யா ஹரி விளக்கம்: புறத்தே நின்று நோக்க, உள்ளே உறங்குபவளின் மாளிகையும் அதன் அழகுகளும் புலப்படுகின்றன. தூய்மையான மாணிக்கங்கள் பதித்துக் கட்டப்பெற்ற மாடம்; இந்த மாடத்தில் தீபம் ஏற்றி வைக்கப்பட்டிருக்க, தீப ஒளியும் வாசனாதி திரவிய தூபங்களின் மணமும் சூழ, உள்ளே ஒரு தோழி உறங்குகிறாள். அவளை உறவு சொல்லி "மாமான் மகளே, கதவைத் திற’ என்று அழைக்கிறார்கள். அவள் எழவில்லை என்னும் நிலையில் மாமன் மனைவியை விளிக்கிறார்கள். "மாமி, உன் மகளை எழுப்பமாட்டாயா? அவளென்ன ஊமையா(எங்களுக்கு மறுமொழி கூறவில்லை)? செவிடா (எங்கள் ஒலி கேட்கவில்லையோ)? சோம்பேறியா? உறக்கம் என்னும் மந்திரத்தின் வசப்பட்டாளா? கண்ணன் திருநாமங்கள் பலவற்றைப் பாடுகிறோம். கீழினும் கீழான எம்மோடு கலந்து பழக வந்திருப்பதால், "மாமாயன்’ என்கிறோம்; லட்சுமி நாயகன் என்பதால் "மாதவன்’ (மா=லட்சுமி) என்கிறோம்; பரமபத நாதன் என்பதால் "வைகுந்தன்’ என்கிறோம்; பற்பல பெயர்கள் கூறியும் அவள் எழவில்லையே’ என்று அங்கலாய்க்கிறார்கள். பாசுரச் சிறப்பு: "இதோ, இதோ’ என்று சொன்னாலும், சோம்பலிலும் சுய மயக்கத்திலும் ஆழ்ந்து செயல்படாமல் இருக்கும் தன்மையை இப்பாசுரம் காட்டுகிறது. "மாமான் மகள்’ என்றும் "மாமி’ என்றும் கூறுவது, ஒருவகையானஉறவுத் தொடர்பைக் காட்டுவதாகும்; எம்பெருமான் அடியார்கள் யாவரும் உறவினர்களே என்பதாம். ஸ்வாபதேசத்தில், திருமழிசையாழ்வாரை இப்பாசுரம் போற்றுகிறது. அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – பாடல் 9 முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே! பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும்அப் பெற்றியனே!ஸ்ரீரங்கம் கோயில் பகல்பத்து 2ம் நாள் விழா: முத்துசாய் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள் உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம் உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம் அன்னவரே எங்கணவர் ஆவார் அவர்உகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம் இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல் என்ன குறையும் இலோமேலோ ரெம்பாவாய். பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன் பாடியவர் – மயிலை சற்குருநாதன் பாடியவர் – சுந்தர் ஓதுவார் விளக்கம்: உள்ளே இருப்பவர்களும் புறத்தே நிற்பவர்களும் ஒன்றிணைந்து இறைவனைப் போற்றுவதாக அமைகிற பாடல் இது. "முன்னருள்ள பழைய பொருட்களிலெல்லாம் மிகப் பழைமையான பொருளே! இனி வரவிருக்கும் புதுமைகளுக்கெல்லாம் புதியதான தன்மை கொண்டவனே! உன்னை ஆண்டவனாகப் பெற்ற உன்னுடைய ஆழ்ந்த அடியார்களாகிய நாங்கள், உன்னுடைய அடியார்களின் திருவடிகளை வணங்குவோம்; அவருக்கே பாங்காக அடிமை செய்வோம்; அப்படிப்பட்டவரே எங்களின் கணவர்களாக ஆகும்படி அருள்வாயாக. அவர்கள் இடும் கட்டளைகளை உகப்போடு செயல்படுத்துவோம். எங்கள் பெருமானே, இவ்வகையில் எமக்கு நீ அருள்வாயேயானால், எந்தக் குறையும் இல்லாதவர் ஆவோம்’ என்றே வழிபடுகிறார்கள். பாடல் சிறப்பு: பழைமையைக் குறிப்பிடும்போது "பொருள்’ என்கிறார்கள். சிந்தனையானது,…
அரிஸ்டாட்டல் கூற்றுப்படி சொல்லவேண்டுமானால், மனிதன் ஒரு சமுதாய விலங்கு. ஆம் ஒரு மனிதனால் தனியாக வாழ்வதென்பது இயலாத காரியம் தான். பரஸ்பர சார்பு அச்சாணிகளை முறித்து விட்டு வாழ முடியாது. (No man can break the shackles of mutual dependence.) தாயும் தொப்புள் கொடி உறவும் என்பதைப் போல் ஒரு மனிதன் இறக்கும் வரை சமூகத்தை / சமுதாயத்தை விட்டு விலகி விட முடியாது. ஜோதிடம் மூலம் அறிய முடியாத விஷயம் எதுவுமே இல்லை என நிச்சயமாகச் சொல்லலாம். ஜோதிடரின் ஆழ்ந்த ஜோதிட அறிவும், அனுபவமும் நிச்சயம் அனைத்தும் வெளிக்கொணர முடியும். அதற்கு பொறுமையும், கால அவகாசமும் தேவை. ஒருவரின் ஜாதகத்தில் லக்கினத்திற்கு , 11ஆம் இடம் அந்த நபரின் வாழ்க்கை, சமூகத்தில் எவ்வாறு இருக்கும் என்பதனை தெள்ளத்தெளிவாகக் கூறும். இது தான் ஒருவரின் சமூக செயல்பாட்டின் கட்டமைப்பை, அவர் எந்த வகையில் தமது தனித்தன்மையை வெளிப்படுத்துகிறார் மற்றும் செயல்படுத்துகிறார் எனச் சொல்லலாம். இந்த 11ஆம் வீடு தான் ஒரு குழுவில், மற்றவர்களுடன் ஆன தொடர்பு பற்றியும், மற்றவர்களுடனான பழகுதல் பற்றியும் தெரிவிக்கும். இன்றைய கால கட்டத்தில் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களையும் பார்க்கிறோம், நம்பிக்கை வைத்தவர்களை ஏமாற்றுவதையும் காண்கிறோம். இது அவரவர் தனித்தன்மை மற்றும் பிறவிக் குணம் என்றால், மிகை ஆகாது. அதனை நாம் எவ்வாறு முன்கூட்டியே காண்பது என்பதைப் பற்றிய ஒரு குறிப்பேடு தானே தவிர முழுமையான கட்டுரை இது ஆகாது. லக்கினத்திற்கு 11ஆம் வீட்டில் நிற்கும் கிரகங்கள் தான், ஒரு ஜாதகரின் தனிதன்மையை பற்றியும், அவர் மற்றவர்களுடனான தொடர்பு, பிரபலம், புகழ், நிராகரிப்பு போன்றவற்றை வெளிப்படுத்துவனவாக இருக்கும். மேலும் இந்த வீடு ஒருவரின் ஆசை, ஆசைகள், குழு நடவடிக்கைகளில் இவரின் பங்கு போன்றவற்றைப் பற்றி எடுத்துச் சொல்லும். அதுமட்டுமல்லாமல், மற்றவர்களின் தொடர்பில் – இவரின் அணுகுமுறை பற்றியும் விளக்கும். சில மனிதர்கள் அவர்கள் அடையும் இலக்கிற்கு இவரின் பங்கு எவ்வாறு இருக்கும் என்பதைக் கூறும். இந்த கட்டுரையில் கூறப்பட்டது அனைத்தும் கிட்டத்தட்ட 60 முதல் 70 சதவீதம் சரியாகவே இருக்கும். வேறு தீய கிரக சேர்க்கை, பார்வை, சாரம் இருப்பின் மாறுதலுக்கு உட்படும். சிலருக்கு அனைத்துமே சரியாக இருக்கவும் வாய்ப்பு உண்டு. ஒருவரின் பிறந்த கால ஜாதகத்தில், லக்கினத்திற்கு 11 ஆம் இடத்தில் “சூரியன்” இருந்தால்… வெளிப்படையானவர். இவராகவே முன்வந்து மற்றவர்களுடன் தொடர்பு கொள்வார். குழுவின் வெற்றிக்குப் பாடுபடுவர். இவரின் இலக்குகள் சுயநலமின்றி இருக்கும். இவரின் நண்பர்கள் உண்மையாகவும், நேர்மையாகவும் இருப்பர். எப்போதும் தாராளமான மற்றும் உன்னதமான உதவும் எண்ணம் இருக்கும். ஒருவரின் பிறந்த கால ஜாதகத்தில், லக்கினத்திற்கு 11ஆம் இடத்தில் “சந்திரன்” இருந்தால்… இவருக்கு, நிறைய நண்பர்கள் இருப்பார்கள்.ஆனால், திடீரென்று அவர்களை பற்றிய எண்ணம் மாறக்கூடும். நண்பர்களை, தமது சொத்து போல பாவிப்பார். அவர்களை முழுவதுமாக தமது விருப்பத்திற்கு அடிபணியச் செய்வார். இந்த மாதிரியான செயல்களால், ஒவ்வொருவரையும், அதிக பாதுகாப்பாக நடத்துவார் தமது…
ஒருவரின் வருங்காலசெவ்வாய் தோஷம் என்ன செய்துவிடும்? வாழ்க்கைத் துணையை எங்கு, எப்போது காணப்போகிறோம் என்பதை ஜோதிடம் எளிதாக உணர்த்தும். நன்றி Hindu சிறுநீரக பாதிப்பின் அறிகுறிகளை ஜாதகம் சுட்டிக்காட்டுமா?
காஞ்சியிலிருந்து திருவரங்கத்திற்குச் செல்லும் போதே ஆளவந்தார் பரமபதம் எய்தினார் என்ற செய்தி எட்டியது. யதி சமஸ்காரங்கள் முடிந்து காஞ்சி திரும்பிய பிறகு ஒரு தெளிவற்ற நிலையிலிருந்தார். ஆளவந்தாருக்குப்பின் ஸ்ரீ வைஷ்ணவ உலகின் தலைமைப் பொறுப்பு ஏற்று வைணவத்தை நிலை நிறுத்த வேண்டிய பெரும் பொறுப்பு தமக்காகக் காத்து நிற்கிறது என்ற உணர்வு இளையாழ்வாருக்கு ஏற்பட்டது. அதற்கு தம்மைத் தகுதியுடையவராகச் செய்து கொள்வதில் அவர் இறங்கினார். அந்த நினைவு அவரது நெஞ்சில் புயலை எழுப்பியது. குழம்பி நின்ற ராமானுஜர் தெளிவுக்காக இறைவன் கட்டளையை எதிர்நோக்கினார். திருக்கச்சி நம்பியின் உதவியை நாடினார். * நானே (அருளாளன் எனப்படும் -திருமாலே) முழு முதற்கடவுள். * ஜீவாத்மாவிலிருந்து பரமாத்மா வேறுபட்டது. * இறைவனை அடையும் முக்திநெறி முழுச் சரணாகதியே. * இறைவனடி சேர்ந்தார்க்கு மரணத்தைப் பற்றி அச்சப்படத் தேவையில்லை. * உடல் சாய்ந்த பிறகே மனிதருக்கு முக்தி. * பெரிய நம்பியை ஆசார்யராகப் பின்பற்று! என்னும் ஆறு வார்த்தைகளில் விளக்கமளித்தார் அருளாளன். கி.பி. 1039 ஆம் ஆண்டு திருக்கச்சி நம்பியை முதன்மை ஆசார்யராக இருக்கச்செய்து பஞ்ச சம்ஸ்காரங்களைப் பெற்று, ஆத்ம யாத்திரையைத் தொடங்க வேண்டும் என்று எண்ணினார். அதையொட்டி திருக்கச்சி நம்பியைத் தேடி இல்லத்தில் அமுது செய்ய (உணவருந்த) எழுந்தருள வேண்டினார். அவரும் இசைந்தார். மனைவி தஞ்சமாம்பாளிடம் திருக்கச்சி நம்பிக்கு, உணவு தயாரிக்கச் சொல்லி, அவர் உண்டபின் மிச்சமுள்ளதைத் தாம் அருந்தி, தூய்மை பெற விழைந்தார். ஒரு திருமால் அடியாரை உணவருந்தச் செய்து அந்தப் போனகச் சேடம் பெற்று அருள்பெற விழைந்தார் ராமானுஜர். குறிப்பிட்டபடி, தஞ்சமாம்பாள உணவு தயாரித்து விட்டு இன்னும் விருந்துண்ண வர வேண்டிய அவரைக் காணவில்லையே என்றாள் கணவரிடம். "எதிர்வந்து கொண்டிருப்பார் நானே நேரில் போய் அழைத்து வருவேன்’ எனக்கூறி திருக்கச்சி நம்பியைத் தேடி கோயிலை வலமாகச் சுற்றிச் சென்றார். குறித்த காலத்தில் ராமானுஜர் இல்லம் செல்ல வேண்டும் என்பதற்காக கைங்கர்யத்தை நடுவில் நிறுத்தி, திருக்கச்சி நம்பியும் வேறொரு வழியாக வலம் வந்து ராமானுஜரின் இல்லத்தை அடைந்தார். வந்தவர், "அம்மணி அடியேன் இறை சேவையை இடையில் நிறுத்தி வந்தேன். விரைந்து பிரசாதம் பரிமாற வேணும்” என்று பணிவுடன் வேண்டினார்.ராமானுஜரின் மனைவியும், கணவர் வரவுக்குக் காத்திராமல் இடைசுழியில் இலையிட்டு, நம்பிக்கு உணவு பரிமாறி, அவர் சாப்பிட்டதும் விரைந்து, எச்சிலை எடுத்து அகற்றி, சாணம் இட்டு தரை மெழுகி நீராடவும் சென்றாள். திருக்கச்சி நம்பியைத் தேடிச் சென்று கோயில் எங்கும் தேடிக் காணாமல் அலைந்து, வீடு திரும்பிய ராமானுஜர் நீராடி நிற்கும் மனைவியைப் பார்த்து விவரம் வினவினார். தஞ்சமாம்பாளும் நடந்ததைச் சொல்லி மேலே வீட்டைக் கழுவி, புதியது சமைக்க முற்பட்டாள். ராமானுஜருக்குப் ஆற்றொணாச் சீற்றம் அளவு கடந்து வந்தது. ஆளவந்தார் அருள்வேண்டி ஸ்ரீரங்கம் சென்றபோது ஏற்பட்ட ஏமாற்றம், அதைத் தொடர்ந்து அவரது அடியார் சேஷம் பெற ஆசைப்பட்டு அதுவும் கிட்டாத ஏமாற்றம் எல்லாம் சேர்ந்தது. ஆயினும் ஒருவாறு சினத்தை மனத்தில் அடக்கிக்கொண்டு, ""பரம பாகவதரை…
“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ” . ஜோதிடம் ஒரு முன்னெச்சரிக்கையே தவிர, முடிவு அல்ல. மருத்துவ ஜோதிடம் மற்றும் பரிகாரங்களில் புற்றுநோய் பற்றிய அனைத்தும் இக்கட்டுரையில் அறியலாம். புற்றுநோய்க்கான காரணத்தை மருத்துவத்துறை இன்னும் கண்டறியவில்லை. இது ஆரம்பக் கட்டத்தில் கண்டறியப்படவில்லை என்றால் அது மரணத்தை நோக்கித் தான் செல்லும். கீமோதெரபி மூலம் இது சில அளவுக்கு சிகிச்சை அளிக்கப்படலாம், ஆனால் மீதம் கடவுளின் கைகளில் தான் உள்ளது. கடந்த காலங்களில் பல உயிர்க் கொல்லி நோய்களுக்கு நாம் முடிவு கொடுத்திருக்கிறோம். ஆனால் கேன்சர் நோய்க்கு மட்டும் இன்னும் தீர்வு காண முடியவில்லை. சிலரின் ஜாதகத்தில் இந்த உயிர்க் கொல்லி நோய் தாக்குவதற்கான வாய்ப்பு உள்ளதைப் பற்றி அறிவதனால் நோயின் பிடிக்குள் சிக்காமல் தவிர்க்க முன் எச்சரிக்கையாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. புற்றுநோய் என்பது ஒரு குறிப்பிட்ட நோயின் பெயர் அல்ல. கேன்சர் எனும் புற்றுநோய் நமது உடலின் கட்டுப்பாடற்ற உயிரணு வளர்ச்சியை உள்ளடக்கிய நோய்களின் குழுவைக் குறிக்கிறது. புற்றுநோயில், நமது உடலின் செல்கள் பல வடிவங்களாகப் பிரிந்து, பின்னர் முற்றிலும் ஒழுங்கற்ற முறையில் வளர்ந்து, சில சமயங்களில் வீரியம் மிக்க கட்டிகளை உருவாக்குகின்றன, அவை உடலின் குறிப்பிட்ட பாகங்களின் அருகிலுள்ள செல்களுக்கு தீங்கு விளைவிக்கும் அல்லது வேறு இடங்களுக்கும் படையெடுக்கின்றன. இது நீண்ட காலத்திற்கு சிகிச்சையாக்கப்படாவிட்டால், வீரியம் மிக்க கட்டியானது நமது இரத்த ஓட்டம் அல்லது நிணநீர் மண்டலத்தின் உதவியுடன் உடலின் மற்ற தொலைதூர பகுதிகளுக்கு பரவுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் உள்ளது. இந்த நோயை சரியான முறையில் கையாண்டு சிகிச்சையளிக்க வேண்டும், ஏனெனில் இது மரணத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு வீரியம் மிக்கது. புற்றுநோயாளிகளுக்கான ஜோதிட சேர்க்கைகள் – மருத்துவ ஜோதிடம் ஜோதிடத்தில் புற்று நோயைக் கணிப்பது எப்படி? ஒரு நபர் புற்றுநோயால் பாதிக்கப்படுவாரா இல்லையா என்பதை ஜோதிடத்தின் மூலம் தீர்மானிக்க முடியும். “குணப்படுத்துவதை விட தடுப்பு சிறந்தது” என்பது பழமொழி. நம் அன்புக்குரியவர்களுக்கு புற்றுநோயின் சாத்தியத்தை புரிந்துகொள்ள முடிந்தால், நோய் கையை விட்டு வெளியேறுவதற்கு முன்பு அதைத் தடுக்கலாம். இந்த விஷயத்தில் ஜோதிடம் எவ்வாறு நமக்கு உதவுகிறது என்று பார்ப்போம். ஒரு நபருக்கு புற்றுநோய் இருப்பதைக் குறிக்கும் சில ஜோதிட /கிரக சேர்க்கைகள் கீழே உள்ளன. 1. ஜோதிடத்தில் புற்றுநோய் நோயின் கிரக அறிகுறிகள் ஜோதிடத்தில் உள்ள அனைத்து கிரகங்களும் இந்த கொடிய நோய்க்கு ஒருவிதத்தில் காரணம், ஆனால் சில கிரகங்கள் நோயை அதிகம் பாதிக்கின்றன. அவை சனி, ராகு, கேது, செவ்வாய் ஜாதகத்தில் புற்று நோய்களுக்கான கிரக சேர்க்கைகள் (ராசிகள் / வீடுகள் மற்றும் கிரகங்கள் மருத்துவ ஜோதிடத்தில் புற்றுநோய் நோய்க்கு வழிவகுக்கிறது.) 1. லக்னம் அல்லது ஜாதகத்தின் முதல் வீடு அதன் பலம். 2. நமது உடலின் உயிர் சக்தியை சூரியன் ஆட்சி செய்கிறது. ஒரு ஜாதகத்தில் சூரியன் எங்குள்ளது போன்ற காரணி மற்றும் அதன் வலிமையின் நிலை பொறுத்து அமைகிறது….
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 25 ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர தரிக்கிலா னாகித் தான்தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய். பாடியவர் – பவ்யா ஹரி விளக்கம்: கண்ணனைப் போற்றித்துதித்து, பரிசு தருமாறு கோருகிற பாசுரம். "தேவகியின் மகனாகப் பிறந்து, அன்றிரவே யசோதையின் மகனாக வளரச் சென்று, உன்னையே நீ ஒளித்துக் கொண்டபோதும், அதைக்கூடப் பொறுக்காமல், உன்னைக் கொல்லுவதற்காகப் பல வகைகளிலும் தீங்கிழைத்த கம்சனுடைய எண்ணங்களைப் பொய்யாக்கி, அவனுடைய வயிற்று நெருப்பாக நின்ற பெருமானே! உன்னைத் துதித்து யாசிப்பவர்களாக வந்திருக்கிறோம். (எங்கள் எண்ணத்தை ஈடேற்றி) எங்களுக்குப் பரிசு தருவாயென்றால், விரும்பத்தக்க செல்வமும் வீரமும் பெற்றவர்களாவோம். எங்கள் வருத்தமும் தீரும்; நாங்களும் மகிழ்ச்சியடைவோம்’ என்பது நோன்புப் பெண்களின் வேண்டுகோள். பாசுரச் சிறப்பு: கஞ்சன் – கம்சன். நெடுமால் – திருமால். திருமாலின் அவதாரமே கண்ணன் என்பதால், இவ்வாறு கூறுவர். வடமதுரையில் பிறந்த கண்ணன், ஆயர்பாடிக்குச் சென்றது எதற்காக? கம்சனிடத்திருந்து தப்பிப்பதற்காக என்பது மேலோட்டமான பார்வை. அப்படியானால், கம்சனுக்குக் கண்ணன் அச்சப்பட்டது போலாகும். உண்மையில், கண்ணன் ஆயர்பாடிக்குச் சென்றது, கம்சனுக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பு. தவறு செய்பவர்கள் தாமே தம்மைத் திருத்திக் கொள்வதற்காகக் கொடுக்கப்படுகிற வாய்ப்பு. வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள கம்சன் தவறியதுதான், அவனுடைய "பொறுக்காத தன்மை’. துஷ்டனைக் கண்டு தூர விலகுவது அச்சத்தால் அன்று; துஷ்டன் தானாகத் திருந்திக் கொள்ளட்டுமே என்னும் கரிசனம். "ஒளித்து’ என்பது "மறைத்து’ என்பதாகும். வசுதேவ வம்சம் என்பதை மறைத்துக்கொண்டு, பெருமான் என்னும் தன்னுடைய பெருமைகளை மறைத்துக்கொண்டு, ஆயர் சிறுவனாகத் தன்னுடைய சுயம்பிரகாசத்தை மறைத்துக் கொண்டு, மாட்டுக் குச்சிக்குள் சங்கு சக்கரப் பஞ்சாயுதங்களை மறைத்துக்கொண்டு… இப்படியாக எல்லாவற்றையும் மறைத்துக்கொண்டு நின்ற கருணை. கம்சன் எண்ணத்தை ஈடழித்த பெருமான், எங்கள் எண்ணத்தை ஈடேற்ற வேண்டும் என்பது கோரிக்கை. ****** ஸ்ரீமாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி – பாடல் 5எல்லாம் அருள்வார் யந்திர சனீஸ்வரர் பூதங்கள் தோறும்நின் றாயெனின் அல்லால் போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச் சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா சிந்தனைக் கும்அரி யாயெங்கள் முன்வந்து ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தரு ளாயே! பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன் பாடியவர்கள் – ஆலவாய் அண்ணல் தேவாரப் பாடசாலை மாணவர்கள் விளக்கம்: "குளிர்ச்சிமிக்க வயல்களால் சூழப்பெற்ற திருப்பெருந்துறையில் உறையும் பெருமானே! ஐம்பூதங்களுக்குள்ளும் அவற்றின் உள்ளுறையாய் விளங்குபவனே. பிறப்பும் இறப்பும் இல்லாதவனே. நீ இவ்வாறு பஞ்சபூதங்களுக்குள் திகழ்வதையும் பிறப்பிலி, இறப்பிலி என்பதையும் செந்நாப்புலவர்கள், இசைப் பாடல்கள் வாயிலாகவும் தோத்திரங்கள் வாயிலாகவும் போற்றுகின்றனர். உன்னை உணர்ந்த ஞானியர், பாடியும் ஆடியும் உன்னைத் தொழுகின்றனர். இவற்றையெல்லாம் கேட்டுள்ளோம். ஆனால், உன்னைக் கண்டு…
தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஆவணி மாத பலன்களை துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய) கிரகநிலை: ராசியில் குரு, ராகு – பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன்(வ), சூர்யன், சந்திரன், புதன்(வ) – களத்திர ஸ்தானத்தில் கேது – லாப ஸ்தானத்தில் சனி (வ) என கிரகநிலைகள் உள்ளது. கிரகமாற்றங்கள்: 18-08-2023 அன்று சுக்ர பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 19-08-2023 அன்று செவ்வாய் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 24-08-2023 அன்று சனி பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். பலன்: கம்பீரமான தோற்றத்தையும் பரந்த மனப்பான்மையும் உள்ள உறுதியும் கொண்ட மேஷ ராசி அன்பர்களே இந்த மாதம் நீங்கள் பொருளாதாரத்தில் வளர்ச்சி உண்டாகக் காண்பீர்கள். தெய்வ வழிபாட்டில் நாட்டம் அதிகரிக்கும். தள்ளி வைத்திருந்த காரியங்களைச் செய்யத் தொடங்குவீர்கள். சகோதர சகோதரிகளின் குறைகளைப் பெரிது படுத்தமாட்டீர்கள். முன்பு உங்களை ஏமாற்றியவர்களையும் இந்த மாதம் மன்னித்துவிடுவீர்கள். வேலை நிமித்தம் குடும்பத்தை விட்டுப் பெரிந்திருந்த தம்பதி இப்போது சேர்ந்து வாழச் சந்தர்ப்பம் உருவாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகாரிகளின் ஆதரவை உறுதுணையாகக் கொண்டு உங்கள் பெரும்பாலான விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். சக பணியாளர்களின் பொறாமைப் பார்வை உங்களைத் துரத்திக் கொண்டே இருக்கும். வியாபாரம் லாபகரமாகவே நடைபெற்று வரும். நாளுக்குநாள் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெற்று வியாபாரத்திலும் வளர்ச்சியைக் காண்பீர்கள். கலைத்துறையினருக்கு இடைத்தரகர்கள் போன்றவர்களின் ஒத்துழைப்பை எதிர்பாராமல் நீங்கள் நேரடியாகவே முயற்சி செய்து வருவதன் மூலம் புதிய வாய்ப்புகள் சிலவற்றைப் பெற்று மகிழ இடமுண்டு. சக கலைஞர்களிடம் சுமுகமாக் நடந்து கொள்வதன் மூலம் உங்கள் நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். மாணவர்களுக்கு நீங்கள் முயற்சித்தால் கல்வியில் நாளுக்கு நாள் முன்னேற்றம் காண முடியும். தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்று உயர்வகுப்புகளுக்குச் செல்லக் கூடும். இடையில் நிறுத்தி வைத்திருந்த சில பகுதிகளுக்கான தேர்வுகளையும் இப்போது எழுதி நிறைவு செய்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு உங்களுக்கு சில சோதனைகள் நேர இடமுண்டு என்றாலும் நீங்கள் உறுதியான மனத்துடன் இருந்து பொறுமை காத்து வருவதன்மூலம் தலைமையின் பேரன்பையும், நன்மதிப்பையும் பெறுவீர்கள். உங்களுக்குத் தரப்பட்டுள்ள பணிகளைத் திறமையாக நிறைவேற்றுவதிலேயே உங்கள் நோக்கமெல்லாம் இருந்து வருவது அவசியம். பெண்களுக்கு வேலைக்குச் செல்லும் பெண்கள் எதிபாராத நன்மைகளைப் பெறக் கூடும். தள்ளிப்போய் வந்த திருமணம் திடீரென்று முடிவாகி திருமண வாய்ப்பைச் சிலர் பெறக்கூடும். படிக்க: அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும் இந்த ராசிக்கு: வாரப்பலன்கள்! அஸ்வினி: இந்த மாதம் பணவரத்து திருப்தி தரும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. புதிய நபர்களிடம் எச்சரிக்கை தேவை. வீண் அலைச்சலை குறைத்துக்கொண்டு வேலைகளில் கவனம் செலுத்துவது நல்லது. பெரியோர்களின் உதவியும் கிடைக்கும். மனதில் தைரியம் தன்னம்பிக்கை உண்டாகும். துணிச்சலுடன் எந்த காரியத்திலும் ஈடுபட்டு சாதகமாக செய்து முடிப்பீர்கள். பரணி: இந்த மாதம் நிம்மதியும்,…
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 21 ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய் ஊற்ற முடையாய் பெரியாய் உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே துயிலெழாய் மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண் ஆற்றாது வந்துன் னடிபணியு மாபோலே போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்! பாடியவர் – பவ்யா ஹரி விளக்கம்: கண்ணன் அருளை வேண்டுகிற பாசுரம். “மடியின் கீழே பாத்திரத்தை வைத்தால், பொங்கப் பொங்கப் பாலைத் தவறாமல் சொரியக்கூடிய தன்மையைக் கொண்ட பெரிய பசுக்கள் பல கொண்ட நந்தகோபனுடைய திருமகனே, எழுந்திருக்கவேணும். ஆழ்ந்த வலு கொண்டவனே, பெருமை பொருந்தியவனே, பேரொளியாக உலகத்தில் தோற்றம் தந்தவனே, பகைவர்கள் தங்களின் வலிமையை உன்னிடத்தில் தொலைத்து, உன் மாளிகை வாசலுக்கு வந்து உன் திருவடிகளில் பணிவது போலவே, நாங்களும் உன்னைப் புகழ்ந்து போற்றி வந்திருக்கிறோம்’ என்று கூறி, கண்ணனின்அருளை வேண்டுகிறார்கள். பாசுரச் சிறப்பு: மறைமுகமாகச் சிலவற்றைக் கண்ணனுக்குக் கூறுவதுபோல் அமைந்திருக்கும் பாசுரம் இது. “உன்னுடைய தந்தையிடம் இருக்கும் பசுக்களுக்கே, பாத்திரத்தை வைத்தால் பாலைப் பொழிய வேண்டுமென்னும் அறிவு இருக்கும்போது, வீட்டு வாசலில் வந்து வேண்டுகிற எங்களுக்கு அருள வேண்டுமென்று எண்ண மாட்டாயோ?’ என்று மொழிகிறார்கள். நந்தகோபன் மகனே என்றழைத்துவிட்டு, தொடர்ந்து, உலகினில் (அவதாரங்களாக) தன்னையே எம்பெருமான் வெளிப்படுத்திக் கொண்டதைக் குறிப்பிடுவதற்குக் காரணம் உள்ளது. “அவதாரம் எடுத்து ஆயர்பாடிக்கு வந்ததே எங்களுக்கு அருள்வதற்குத்தானே, இன்னும் என்ன தயக்கம்?’ என்பது உள்பொதிந்த வினா. ஊற்றம் என்பது உறுதி. அடியார்களுக்கு அருள வேண்டும் என்பதே ஆண்டவனின் ஊற்றம். தங்களின் ஆணவத்தைத் தொலைத்துப் பகைவர்கள் வந்ததைப் போல் “நாங்களும் ஆணவம் தொலைத்து வந்திருக்கிறோம்’ என்பது உள்பொதிந்த பணிவு. ஆணவம் தொலைத்தால்தான் ஆண்டவன் அருள் கிட்டும் என்பதை உணர்த்துகிற பாசுரம். ****** ஸ்ரீமாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி – பாடல் – 1 (திருப்பெருந்துறையில் அருளியது) டிசம்பர் மாத பலன்கள் (மேஷம் – கன்னி) போற்றிஎன் வாழ்முதலாகிய பொருளே புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண் டேற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும் எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம் சேற்றிதழ்க் கமலங்கள் மலரும்தண் வயல்சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே! ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே. பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன் பாடியவர்கள் – ஆலவாய் அண்ணல் தேவாரப் பாடசாலை மாணவர்கள் விளக்கம்: பாவை நோன்பை நிறைவேற்றிய நிலையில், திருப்பள்ளியெழுச்சி தொடங்குகிறது. இறைவனைத் துயிலெழப் பாடுவதே திரு+பள்ளி+எழுச்சி ஆகும். “என் வாழ்க்கையின் முதல் பொருளாகத் திகழும் இறைவனே, உனக்குப் போற்றி. பொழுது புலர்ந்தது. கழல் அணிந்த உன்னுடைய மலர்த் திருவடிகளுக்கு மலர் தூவி, உன்னைத் துதித்து, உன்னுடைய திருமுகத்தில் எங்களுக்காக மலர்கிற அழகுப் புன்னகையை எண்ணியவாறே உன்னைத் தொழுகிறோம். சேற்றில் செந்தாமரைகள் மலர்ந்துள்ள குளிர்ச்சிமிக்க வயல்கள் சூழ்ந்துள்ள திருப்பெருந்துறையில் எழுந்தருளியசிவபெருமானே, ரிஷபக் கொடி உடையவனே, என்னையும் ஆளாகக் கொண்டவனே, எம்பெருமான், பள்ளி…
நம் முன்னோர்கள் காலம்காலமாக வழிபடும் சாமி அவரவர் வீட்டு குலசாமி ஆகும். அவர்களின் முக்கிய கடவுளாக சிவன், பெருமாள், அம்பாள், முருகர் மற்றும் பல்வேறு அவதாரங்களாக அல்லது கன்னி தெய்வமாக அவர்களோடு காக்கும் காவல் தெய்வங்களாகலான ஐயனார், இடும்பன், மதுரை வீரன், கருப்பண்ண சாமி என்று பல்வேறு பெயர்களில் இருக்கலாம். நம்முடைய குலசாமி மற்றும் இஷ்ட தெய்வங்கள் தான் நம் போகும் பாதை சரியாக உள்ளதா என்று உணர்த்தும் ஒரு முக்கிய வழிகாட்டி. அவர் இருக்கும் இடமே நமக்கு கலங்கரை விளக்கம். அதனால் தான் நம்முடைய நல்ல விஷயங்கள் ஆரம்பிக்கும் ஒரு முக்கிய புள்ளியாக குலசாமி நிற்கிறார். பெரியவர்கள் முதலில் நமக்கு சொல்லுவது குலசாமிக்கு ஒரு ரூபாய் காசு முடிந்து வை என்பார்கள். காரணம் குலசாமிதான் நம்மை நல்வழிகாட்டி சரியாக செயல்படுத்துவார் என்பது நம்முடைய பெரியோர்களின் நம்பிக்கை. ஒரு மனிதன் உயர்வதும் தாழ்வதும் அவரவர் கையில் உள்ளது என்பர். அந்த உயர்வை தடுப்பதும், பாதகம் செய்வதும் கோள்களின் தசா புத்திக்கு ஏற்ப மாற்றங்கள் நிகழும். கிரகங்களுக்கு அப்பாற்பட்டு அவரவர் இஷ்ட தெய்வம் மற்றும் குலசாமி துணை இருந்தால் மட்டுமே அவரவர் முயற்சி உயர்வு பெரும். குலதெய்வ வழிபாட்டை ஒழுங்காக செய்து வந்தால் நவக்கிரகங்களும் துணை நிற்கும். அதனால் தான் நாள் செய்யாததை கோள் செய்யும். கோள் செய்யாததை குலதெய்வம் செய்யும் என்பார்கள். ஒருவர் ஆண்டி ஆவதும் அரசனாவதும் நம்ம குலசாமியின் சரியான வழிபாட்டில் உள்ளது. சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, குலதெய்வத்திற்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை என்ற பழமொழி நம் வாழ்க்கைக்கு மிகவும் ஒத்து போகும். என்னதான் நமக்கு பிரச்னை, கஷ்டம் ஏற்பட்டாலும் ஒரு சில காலங்களுக்கு மட்டும் இருக்கும். தசா புத்தியின் மாற்றத்திற்கு ஏற்ப நல்லது – கெட்டது என்று மாறி மாறி நடைபெறும். ஆனால் வாழ்நாள் முழுவதும் பிரச்னைகள் தொடரும் என்றால் அதற்கு முக்கிய கரணம் குலசாமி சாபம் ஆகும். நிறைய பேருக்கு குலசாமி தெரியாது, ஒரு சிலர் குல சாமியை மாற்றி வழிபடுவார்கள். குலசாமி சாபத்தால் பெயருக்கு எல்லாமே இருந்தும் அதனால் சந்தோஷம் இல்லாமல் போகும். எடுத்துக்காட்டாக திருமணம் செய்தும் சந்தோஷம் இருக்காது. குடும்பத்தில் ஈடுபாடு இல்லாத நிலை, குழந்தைகள் பிறந்து பிறந்து இறக்கும் நிலை, சொத்து இருந்தும் அனுபவிக்க முடியாத நிலை. இவை அனைத்திற்கும் குலசாமியின் அருள் இல்லாத நிலை. இவர்கள் என்ன தோஷ நிவர்த்தி செய்தாலும் குலசாமியை கண்டுபிடித்து அவர்களுக்கு வேண்டியதை செய்தால் மட்டுமே சரியாகும். நம்ம குலசாமி நிறைய நாள்கள் நமக்காக காத்திருக்கும் நிலை தோஷத்தை ஏற்படுத்துகிறது. குலதெய்வத்தை மறப்பது என்பது பெற்றோரை மறப்பது போன்றது. குலசாமியை கண்டுபிடிக்க என்ன செய்ய வேண்டும்? அதற்கு நிறைய விதிமுறைகள் உண்டு. அவை.. குலசாமியை பிரசன்னம், பாரம்பரிய ஜோதிடம் மற்றும் ஆருடம் வழியாக கண்டுகொள்ளலாம். அவரவர் ஜாதகத்தில் கடவுளின் அனுகிரகம் இருந்தால் கட்டாயம் கண்டுபிடிக்க முடியும். ஆனால் அவற்றிக்கும் உங்களுக்கு அந்த…
புனர்பூ என்றால்ஆலங்குடியும் அஷ்ட திக்கு கோயில்களும் – மினி தொடர்நம்முடைய தமிழில் சேர்க்கை அல்லது தொடர்பு என்று பொருள். ஒருவருக்கு இருகிரகங்கள் தொடர்பு பெற்று செயல்படும் பொழுது யோகமாகவோ நன்றி Hindu மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 11)
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 12 கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி நினைத்து முலைவழியே நின்றுபால் சோர நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்! பனித்தலை வீழநின் வாசல் கடைபற்றி சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக் கினியானைப் பாடவும்நீவாய் திறவாய் இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம் அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய். பாடியவர் – பவ்யா ஹரி விளக்கம்: இதுவும் துயிலெடைப் பாசுரமாகும். இந்தப் பெண்ணின் வீடும் செழிப்பு மிக்கது. தன்னுடைய கன்றை நினைத்துக்கொண்டு (அது பாலருந்திய பின்னரும்), எருமை மாடானது தானே பாலைப் பொழிகிறது; இதனால், வீட்டின் முற்றமெல்லாம் சேறாகிறது. இப்படிப் பொங்கப் பொங்கப் பால் பொழியும் மாடுகள் நிறைய உடைய கோபாலரின் தங்கை இவள். “அதிகாலை நேரத்துப் பனி, எங்களின் தலையில் விழும்படியாக உன்னுடைய வீட்டிற்கு வந்து அழைக்கிறோம். சீதைக்கு நேர்ந்த துன்பத்தை எண்ணிச் சினம் கொண்டு, அத்துன்பத்திற்குக் காரணமான இலங்கேச்வரன் இராவணனை அழித்தவனான மனத்துக்கு இனியான் இராமன் பெயர்களைச் சொல்லிப் பாடுகிறோம். வாயைத் திறக்கமாட்டாயா? எங்கள் இசையொலி கேட்டு, பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லோரும் எட்டிப் பார்க்கிறார்கள். இன்னமும் உறங்குகிறாயே’ என்று கிண்டல் பேசுகிறார்கள். பாசுரச் சிறப்பு: கீழ்ப்பாசுரத்திலும் இப்பாசுரத்திலும் “செல்வம்’ குறித்த குறிப்புகள் உள்ளன. செல்வம் என்பது பணம், காசு போன்றவை அல்ல. இறைத்தொண்டே செல்வம். இவ்வகையில் ஆயர்பாடியர் யாவரும் நற்செல்வம் கொண்டவர் ஆவர். கோபியர் பலருடன் விளையாடும் கண்ணன், கண்ணுக்கினியான்; ஏக பத்தினி விரதனான இராமன் மனத்துக்கினியான் என்னும் விளக்கம் சுவை கூட்டும். கீழே பால் வெள்ளம் (முற்றத்துச் சேறு), மேலே பனி வெள்ளம் (பனித்தலைவீழ) நடுவே மால் வெள்ளம் (உள்ளத்தில் திருமால் எண்ணம்) என்பது இப்பாசுரத்தின் பெருமை. ஸ்வாபதேசத்தில், பொய்கை ஆழ்வாரை இப்பாசுரம் குறிக்கும். அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – பாடல் 12 மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 25) ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும் தீர்த்தன்நற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும் கூத்தன்இவ் வானும் குவலயமும் எல்லோமும் காத்தும் படைத்து கரந்தும் விளையாடி வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள் ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப் பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம் ஏத்தி இருஞ்சுனை நீராடேலோ ரெம்பாவாய். பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன் பாடியவர் – மயிலை சற்குருநாதன் பாடியவர் – மயிலாடுதுறை சிவகுமார் விளக்கம்: இறைவனைத் துதித்துப் பாடுவதே தங்களின் நோன்பு என்பதாக இப்பெண்கள் கூறுகிற பாடல். “கட்டப்பட்ட இப்பிறவியின் துன்பம் தீருவதற்காக, நாம் ஆர்ப்பரித்து ஆடுகிற தீர்த்தமாகத் திகழ்பவன்; தில்லைத் திருத்தலத்தின் சிற்றம்பலத்தில், தீயைக் கையிலேந்தி ஆடுகிற கூத்தன்; அண்டம், கோள்கள், உலகங்கள் என யாவற்றையும் படைத்து, காத்து, அழித்து விளையாடுபவன்; இத்தகைய இறைவனை வாயாரப் பாடி, வளைகளும் மேகலை போன்ற ஆபரணங்களும் ஆரவாரிக்க, கூந்தலின் மேல் வண்டுகள் ரீங்கரிக்க, மலர்களைக்கொண்ட பொய்கையில் மூழ்கி, இறைவன் திருவடிகளை வணங்குகிறோம்’ என்று விளக்குகிறார்கள். பாடல் சிறப்பு: பந்தம், பாசம் போன்றவற்றால் கட்டப்பட்ட பிறவி…