ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 9 தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும் மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய் மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள் தான் ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ? ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ? மாமாயன் மாதவன் வைகுந்த னென்றென்று நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய். பாடியவர் பவ்யா ஹரி விளக்கம்: புறத்தே நின்று நோக்க, உள்ளே உறங்குபவளின் மாளிகையும் அதன் அழகுகளும் புலப்படுகின்றன. தூய்மையான மாணிக்கங்கள் பதித்துக் கட்டப்பெற்ற மாடம்; இந்த மாடத்தில் தீபம் ஏற்றி வைக்கப்பட்டிருக்க, தீப ஒளியும் வாசனாதி திரவிய தூபங்களின் மணமும் சூழ, உள்ளே ஒரு தோழி உறங்குகிறாள். அவளை உறவு சொல்லி "மாமான் மகளே, கதவைத் திற’ என்று அழைக்கிறார்கள். அவள் எழவில்லை என்னும் நிலையில் மாமன் மனைவியை விளிக்கிறார்கள். "மாமி, உன் மகளை எழுப்பமாட்டாயா? அவளென்ன ஊமையா(எங்களுக்கு மறுமொழி கூறவில்லை)? செவிடா (எங்கள் ஒலி கேட்கவில்லையோ)? சோம்பேறியா? உறக்கம் என்னும் மந்திரத்தின் வசப்பட்டாளா? கண்ணன் திருநாமங்கள் பலவற்றைப் பாடுகிறோம். கீழினும் கீழான எம்மோடு கலந்து பழக வந்திருப்பதால், "மாமாயன்’ என்கிறோம்; லட்சுமி நாயகன் என்பதால் "மாதவன்’ (மா=லட்சுமி) என்கிறோம்; பரமபத நாதன் என்பதால் "வைகுந்தன்’ என்கிறோம்; பற்பல பெயர்கள் கூறியும் அவள் எழவில்லையே’ என்று அங்கலாய்க்கிறார்கள். பாசுரச் சிறப்பு: "இதோ, இதோ’ என்று சொன்னாலும், சோம்பலிலும் சுய மயக்கத்திலும் ஆழ்ந்து செயல்படாமல் இருக்கும் தன்மையை இப்பாசுரம் காட்டுகிறது. "மாமான் மகள்’ என்றும் "மாமி’ என்றும் கூறுவது, ஒருவகையானஉறவுத் தொடர்பைக் காட்டுவதாகும்; எம்பெருமான் அடியார்கள் யாவரும் உறவினர்களே என்பதாம். ஸ்வாபதேசத்தில், திருமழிசையாழ்வாரை இப்பாசுரம் போற்றுகிறது. அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – பாடல் 9 முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே! பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும்அப் பெற்றியனே!திருமணத்தை மீறிய உறவை ஜாதகத்தில் அறிய முடியுமா? என்ன சொல்கிறார் ஜோதிடர்? உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம் உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம் அன்னவரே எங்கணவர் ஆவார் அவர்உகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம் இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல் என்ன குறையும் இலோமேலோ ரெம்பாவாய். பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன் பாடியவர் – மயிலை சற்குருநாதன் பாடியவர் – சுந்தர் ஓதுவார் விளக்கம்: உள்ளே இருப்பவர்களும் புறத்தே நிற்பவர்களும் ஒன்றிணைந்து இறைவனைப் போற்றுவதாக அமைகிற பாடல் இது. "முன்னருள்ள பழைய பொருட்களிலெல்லாம் மிகப் பழைமையான பொருளே! இனி வரவிருக்கும் புதுமைகளுக்கெல்லாம் புதியதான தன்மை கொண்டவனே! உன்னை ஆண்டவனாகப் பெற்ற உன்னுடைய ஆழ்ந்த அடியார்களாகிய நாங்கள், உன்னுடைய அடியார்களின் திருவடிகளை வணங்குவோம்; அவருக்கே பாங்காக அடிமை செய்வோம்; அப்படிப்பட்டவரே எங்களின் கணவர்களாக ஆகும்படி அருள்வாயாக. அவர்கள் இடும் கட்டளைகளை உகப்போடு செயல்படுத்துவோம். எங்கள் பெருமானே, இவ்வகையில் எமக்கு நீ அருள்வாயேயானால், எந்தக் குறையும் இல்லாதவர் ஆவோம்’ என்றே வழிபடுகிறார்கள். பாடல் சிறப்பு: பழைமையைக் குறிப்பிடும்போது "பொருள்’ என்கிறார்கள். சிந்தனையானது, செறிவடைந்து,…
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 23 மாரி மலைமுழஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப் போதருமா போலேநீ பூவைப்பூ வண்ணாஉன் கோயில் நின் றிங்ஙனே போந்தருளிக் கோப்புடைய சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த காரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய். பாடியவர் – பவ்யா ஹரி விளக்கம்: சிங்கமென எழுந்து சிம்மாசனத்தில் அமர்ந்து தங்களின் கோரிக்கையைச் செவிமடுக்க வேண்டுமென்று நோன்பியற்றும் பெண்கள் விண்ணப்பிக்கும் பாசுரம். "மழைக் காலத்தில் மலைக் குகைக்குள்உறங்குகிற சிங்கம், மழை முடிந்தவுடன் கண்களை உருட்டி விழித்து, பிடரி குலுங்கும்படிச் சிலிர்த்து, உதறி எழுந்து, முதுகை நீட்டி நிமிர்த்தி, குகையை விட்டு வெளியில் வரும். அந்தச் சிங்கம் போல் நீயும் புறப்பட்டு வா கண்ணா! காயாம்பூ வண்ணனே, சிங்கம் போன்றே நீயும் எழுந்தருளி, உன்னுடைய சிம்மாசனத்தில் அமர்ந்து, நாங்கள் எதற்காக உன்னைக் காண வந்திருக்கிறோம் என்பதை விசாரித்து அருள வேண்டும்’ என்று பிரார்த்திக்கிறார்கள். பாசுரச் சிறப்பு: எம்பெருமானுக்குச் சிங்கம் உவமையாகக் காட்டப்பெறுகிறது. மழைக் காலத்தில் குகைக்குள் அடைப்பட்டிருக்கும் காட்டு அரசனான சிங்கம், மழை முடிந்தவுடன் தன்னுடைய காட்டின் நிலையை அறிவதற்காக வேகமாக எழுந்து வருமாம். அதுபோல், உறக்க குகையிலிருந்து கண்ணன் எழுந்து வரவேண்டும் என்பது பிரார்த்தனை. சிங்கம் இரு பக்கமும் தலையைத் திருப்பித் திருப்பிப் பார்த்தவாறே நடக்கும். அதுபோல், "காத்திருக்கும் எங்களைப் பார்த்தவாறே வரவேணும்’ என்னும் ஆதங்கம். பூவைப்பூ என்பது காயாம்பூ; கருநீல மலர். "யாம் வந்த காரியம் ஆராய்ந்து’ } அதிகாலைப் பொழுதில், ஒருவரையொருவர் எழுப்பி, தூயவர்களாய் வந்து, கோயில்}வாயில் காப்பவரைப் பணிந்து, நந்தகோபன், யசோதை, பலராமன், நப்பின்னை என்று பெரியோர் பலரின் துணைகொண்டு வந்திருக்கிறோமே, எங்களின் இத்தனை முயற்சிகளையும் மனத்தில் கொண்டு அருள வேண்டும். முதல் பாசுரத்தில் "யசோதை இளஞ்சிங்கம்’ என்பது, இப்பாசுரத்தில் "சீரிய சிங்கம்’ஆனதை எண்ணி மகிழலாம். ஸ்ரீமாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி – பாடல் 3 கூவின பூங்குயில் கூவின கோழிமார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 13) குருகுகள் இயம்பின இயம்பின சங்கம் ஓவின தாரகை ஒளியொளி உதயத் தொருப்படு கின்றது விருப்பொடு நமக்குத் தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய் திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே! யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே! பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன் பாடியவர்கள் – ஆலவாய் அண்ணல் தேவாரப் பாடசாலை மாணவர்கள் விளக்கம்: உதயத்தின் அடையாளங்கள் காட்டப் பெறுகின்றன. "குயில்கள் கூவிவிட்டன; கோழிகளும் நாரைகளும் இன்னும் பல பறவைகளும் ஒலி எழுப்பத் தொடங்கிவிட்டன. திருக்கோயில்களில் சங்கநாதம் ஒலிக்கிறது. நட்சத்திரங்கள் ஒளி மழுங்கிவிட்டன. கதிரவனுடைய ஒளி ஒருங்கிணைந்து நிகரின்றித் தோன்றுகிறது. எவ்வளவு அறிவாளியாக இருந்தாலும், அத்தகைய பேரறிவுக்கும் அரிதானவனே, அன்பினால் எங்களுக்கு எளிதாகக் கிட்டுபவனே, பெருங்கருணையோடு உன்னுடைய திருவடிகளை எமக்குக் காட்டி அருள வேண்டும்’ என்னும் விண்ணப்பம் உரைக்கப்படுகிறது. …
ஒவ்வொரு நடுத்தர மக்களுக்கும் வீடு வாங்குவது மற்றும் வீடு கட்டுவது என்பது ஒரு கனவாகவே உள்ளது. வீடு வாங்கும் முன் தாய் பத்திரங்கள் மற்றும் ஆவணங்கள் சரியாக உள்ளதா, எவ்வளவு கடன் வாங்க நேரிடும், வாஸ்து முறைப்படி வீடு உள்ளதா என்று பல்வேறு குழப்பநிலை மனதில் இருக்கும். அதுதவிர வீடு கட்டும் பில்டர்கள், மேஸ்திரிகளுடன் ஏதாவது ஒரு பிரச்னை தொடர்ச்சியாக இருந்து கொண்டே இருக்கும். கடைசியாக வீடு கட்டி முடித்த பிறகும், கிரகப்பிரவேசம் செய்வதற்கு உகந்த மாதமில்லாமல் அங்கும் தடை எழும். புதிதாக வீடு கட்டி குடிபுகும்போது நாம் ஒருசில விஷயங்களை கட்டாயம் கவனத்தில் வைத்துக்கொள்வது அவசியம். அதில் ஒன்றுதான் கிரகப்பிரவேசம். புதுமனைக்குச் செல்ல உகந்த நாளை தேர்ந்தெடுக்க வேண்டும். கட்டிய வீட்டைப் பல நாள்கள் பூட்டி வைக்கவும் கூடாது. வீடு வாங்குவதற்குக் கொடுக்கும் முன்னுரிமை போலவே பூமி பூஜை, வாசக்கால் பூஜை, புதுமனை புகுவிழா சரியான முறையில் அவரவர் முன்னோர்களின் வழிகாட்டுதல்படி செய்வது நன்று. வீட்டில் வாஸ்து பூஜை, ஹோமங்கள் குறிப்பிட்ட முகூர்த்த நாள்களில் செய்வது வீட்டின் சுபிட்சத்தைக் காட்டும். சூரிய பகவான் 12 கட்டத்தில் நகரும் மாதங்களே தமிழ் மாதங்கள் ஆகும். பன்னிரண்டு மாதங்களில் திருமணம், வீடு குடிபுகுவதற்கு, வீடு கிரகப்பிரவேசம் செய்வதற்கு என்று பல்வேறு சுப நிகழ்ச்சிகளுக்கு ஒரு சில மாதங்கள் சிறந்தது. முக்கியமாக ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி என்கிற நான்கு மாதங்கள் அழித்தல் கூறிய மாதங்களாகச் சொல்லப்படுகிறது. இந்த மாதங்கள் வீடு கட்ட, வீடு குடிபுக சிறப்பான மாதங்கள் அல்ல. ஆனி மாதத்தில் கடவுளுக்குச் செய்ய வேண்டிய பூஜைகள் மற்றும் குடமுழுக்கு செய்யலாம். கூனி ஆனி புரட்டாசி மார்கழி “ஊனமான ஒரு நான்கு மாதமும் மானியாமன மனைகுடி தான் புகில் ஈனமாகி இடர் செயும் நோய்களே” இவற்றின்படி ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி மாதங்களில் வாஸ்து புருஷனாகிய பூமி காரகன் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பார். எனவே இந்த மாதத்தில் கட்டடப் பணிகளைத் துவங்கக் கூடாது, குடி புகவும் கூடாது. அவ்வாறு செய்தால் குடும்பத் தலைவனுக்குத் தீராத உடல் நலம் குன்றும். வீடு சுபிட்சம் செய்யும் வாஸ்து அதிபதி தூக்கத்தில் இருக்கும் பொழுது நமக்குப் பரிபூரணமான ஆசீர்வாதம் கிடைக்காது. எனவே நம் முன்னோர்கள் இந்த மாதங்களைத் தவிர்த்தனர். ஒரு சிலர் வீடு கட்ட முடியாத நிலையில் இருக்கும் பொழுது வாஸ்து பகவான் கண் விழிக்கும் நாழிகையில் வாஸ்து பூஜை செய்வதால் தடைகள் விலகும். ”ஆனி அடி போட்டாலும் மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 11) கூனிக் குடியேறாதே!” – என்பது பழமொழி. ஆனி மாதத்தில் வீட்டில் அடி வைப்பதும், பங்குனி மாதத்தில் வீடு குடியேறுவதும் கூடாது என்பது இதன் பொருள். சூரிய பகவான் வடக்கு திசை நோக்கி, ரிஷபத்திலிருந்து மிதுனத்தில் சென்றடையும் கடைசி உத்ராயன புண்ணிய காலமே ஆனி மாதம். அறிவியல் ரீதியாகப் பார்க்கும் பொழுது இந்த காலகட்டத்தில் வீட்டில்…
நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ ப்லவ வருஷம் – தக்ஷிணாயனம் – சரத் ரிது – கார்த்திகை மாதம் 03ம் நாள் – வெள்ளிக்கிழமை – பௌர்ணமி திதி – க்ருத்திகை நக்ஷத்ரத்தில் – சந்திர கிரகணம் நிகழ்கிறது. பௌர்ணமி தினமான நவம்பர் 19ஆம் தேதியன்று இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் நிகழப்போகிறது. பகுதி கிரகணமாக 3 மணி நேரம், 28 நிமிடங்கள் மற்றும் 24 வினாடிகள் நீடிக்கும். முழு கிரகணமாக 6 மணி நேரம் 1 நிமிடம் நீடிக்கும். சுமார் 580 ஆண்டுகளில் இது போன்ற நீண்ட கிரகணம் வந்ததில்லை என்று அறிவியலாளர்கள் தெரிவிக்கிறார்கள். சந்திர கிரகணம் பௌர்ணமி நாளிலும் சூரிய கிரகணம் அமாவாசை நாளிலும் நிகழும். பொதுவாக ஆண்டுக்கு இரண்டு சந்திர கிரகணமும் இரண்டு சூரிய கிரகணமும் நிகழும். பொதுவாக இரவு நேரத்தில் வரும் சந்திர கிரகணமும் – பகல் நேரத்தில் வரும் சூரிய கிரகணமும்தான் இந்தியாவில் தெரியும். வெள்ளிக்கிழமையன்று நிகழவிருக்கும் சந்திர கிரகணம் தமிழ் பஞ்சாங்கப்படி பகல் நேரத்தில் இந்திய நேரப்படி பகல் 11.30 மணிக்கு தொடங்கி மாலை 5.32 மணி வரை நீடிக்கிறது. 6 மணி நேரம் மிகநீண்ட சந்திர கிரகணம் நிகழப்போகிறது. கிரகணம் ஏன் ஏற்படுகிறது?வானவியலில் சூரியன் அல்லது சந்திரன் மீது ஏற்படும் நிழலை கிரகணம் என கூறுகிறது. சூரிய கிரகணம், அமாவாசை நாளிலும், சந்திர கிரகணம் பௌர்ணமி நாளிலும் உண்டாகிறது. எல்லா அமாவாசை நாளிலும் சூரிய கிரகணம் ஏற்படாது. எல்லா பௌர்ணமி நாளிலும் சந்திர கிரகணம் உண்டாவது இல்லை. சூரியன், பூமி, சந்திரன் அனைத்தும் ஒரே நேர் கோட்டில் வரும்போது சந்திர கிரகணம் ஏற்படும். நவம்பர் 19ஆம் தேதி சந்திர கிரகணம் நிகழ உள்ளது. பூமியின் நிழல் சந்திரனில் விழுவதால், சந்திரன் பிரகாசம் குறைந்து கருஞ்சிவப்பாக காட்சியளிக்கும். ஜோதிட ரீதியாக கிரகணம் ஏன் ஏற்படுகிறது?சந்திர கிரகணம் சூர்யனுக்கு நேர் எதிராக 180 டிகிரியில் சந்திரன் ராகுவுடனோ அல்லது கேதுவுடனோ சேரும் போது ஏற்படும். இந்த வருடம் நிகழும் சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியாததால் யாருக்கும் கிரகண தோஷம் இல்லை. எனவே கிரகண பரிகாரம் தேவையில்லை. இருப்பினும் ரிஷபம் – வ்ருச்சிக ராசிக்காரர்கள் தங்களால் முடிந்த தானங்கள் செய்யலாம்.மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 29) கிரகண உச்சம் எப்போது?இந்த வருடம் நிகழும் சந்திர கிரகணம் மிக நீண்டதாக உள்ளது. சந்திர கிரகணம் வெள்ளிக்கிழமை 19ம் தேதி இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு தொடங்கும் சந்திர கிரகணம் மாலை 5.32 மணி வரை மிகவும் நீண்டு நிகழ்கிறது. அதாவது 6 மணி நேரம் 2 நிமிடங்கள் என நீடிக்கின்றது. இந்த கிரகணத்தின் உச்சம் மதியம் 2மணி 32 நிமிடத்தில் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திர கிரகணம் எந்த நாட்டில் தெரியும்? இந்த சந்திர கிரகணத்தை அலாஸ்கா மற்றும் ஹவாய் போன்ற பகுதிகளில் நவம்பர் 18ம் தேதி வியாழக்கிழமை (இந்திய…
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 11 கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும் குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே! புற்றர வல்குல் புனமயிலே போதராய் சுற்றத்துத் தோழிமா ரெல்லாரும் வந்துநின் முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட சிற்றாதே பேசாதே செல்வப்பெண் டாட்டி! நீ எற்றுக் குறங்கும் பொருளேலோர் எம்பாவாய். பாடியவர் – பவ்யா ஹரி விளக்கம்: துயிலெடைப் பாசுரங்கள் ஒவ்வொன்றிலும், உள்ளே உறங்குகிற பெண்ணுடைய தன்மைகளைக் கூறி எழுப்பிக்கொண்டு வருகிறார்கள் என்பது வெளிப்படை. இவ்வகையில், இந்தப் பாசுரத்திலும், உள்ளே இருப்பவளின் பெருமைகள் கூறப்படுகின்றன. இவளுடைய இல்லத்தில் நிறைய மாடுகள்; இவளுடைய வீட்டின் கோபாலர்கள் (இவளின் தந்தையாகவோ சகோதரர்களாகவோ இருக்கக்கூடும்), பகைவர்களோடு திறம்படப் போரிடக் கூடியவர்கள். இவை மட்டுமின்றி, எவ்விதக் குற்றமும் இல்லாதவர்கள். இப்படிப்பட்ட செல்வம் நிறை குடும்பத்தைச் சேர்ந்தவள், பொற்கொடி போலும் அழகானவள், புற்றிலிருக்கும் பாம்பின் படம் போன்ற இடைப்பகுதியைக் கொண்டவள், மயிலின் சாயலாள். "செல்வமிக்க பெண் பிள்ளாய், எழுந்து வா’ என்றழைக்கிறார்கள். "அண்டை அசலில் இருக்கும் தோழிப் பெண்கள் அனைவரும் வந்துவிட்டோம். உன் இல்லத்தின் முற்றத்தில் வந்து நின்று மேக நிறத்தவனான கண்ணனின் பெருமைகளைப் பாடுகிறோம். இவ்வளவிருந்தும் நீ அசையாமலும் விடை பகராமலும் உறங்குகிறாயே, இது நியாயமா?’ என்று வினவுகிறார்கள். பாசுரச் சிறப்பு: நயமிக்க சொற்கள் சில, இப்பாசுரத்தில் கையாளப்பட்டுள்ளன. "கோவலர்’ என்பது கோபாலர் என்பதன் திரிபு. ஆயர்பாடியின் ஆயர்களே, கோபாலர்கள்; பசுக்களைப் பராமரிப்பவர்கள் (கோ=பசு). கண்ணன் மீது நிரம்பப் பிரியம் வைத்தவர்கள்; எவ்வகையிலும் அந்த அன்பில் குறையாதவர்கள். இப்படிப்பட்டவர்களின் வழியில் வந்தவள், கண்ணனைவழிபடுவதை மறந்துவிட்டு உறங்கலாமா? கோபாலன் என்பதைக் கண்ணனைக் குறிக்கும் சொல்லாகக் கொண்டால், கோவலர் பொற்கொடி என்பது அந்த தெய்வத்தையே ஆதாரமாகக்கொண்டு படருகிற கொடி என்றாகும். ஆதாரமில்லாமல் கொடி துவண்டுவிடும்; அதுபோல், பக்தி குன்றினால், அடியார்கள் வாடிவிடுவர். பெண்டாட்டி = பெண் பிள்ளாய். கண்ணனை முகில்வண்ணன் என்று கூறிவிட்டு, நோன்பு நோற்கும் பெண்ணைப் புனமயில் என்பது சிறப்பான நயம். முகிலைக் கண்டால் மயில் ஆடும்; கண்ணனைக் கண்டால், இப்பெண் மகிழ்ச்சியில் ஆடுவாள். ஸ்வாபதேச முறைப்படி, இப்பாசுரமானது, முதலாழ்வார்களில் ஒருவரானபூதத்தாழ்வாரைக் குறிப்பது. அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – பாடல் 11 மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 5) கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி ஐயா! வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற் செய்யாவெண் ணீறாடி! செல்வா! சிறுமருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா! ஐயா!நீ ஆட்கொண் டருளும் விளையாட்டின் உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம் எய்யாமற் காப்பாய் எமையேலோ ரெம்பாவாய். பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன் பாடியவர் – மயிலை சற்குருநாதன் பாடியவர் – மயிலாடுதுறை சிவகுமார் விளக்கம்: பொய்கைக் கரையில் நிற்பவர்கள், இறைவனை மேலும் வழிபடுகின்றனர். "மலர்கள் நிறைந்து, அதனால் வண்டுகள் நிறைந்ததாகக் காணப்படும் குளத்தில் புகுந்து நீராடி உன்னுடைய புகழைப் பாடுகிறோம். வழிவழியாக நாங்கள்…
திருப்பாவையில் முப்பது பாசுரங்கள் இருப்பது போலன்றி, திருவெம்பாவையில் இருபது பாடல்களே உள்ளன. மீதமுள்ள நாள்களுக்குத் திருப்பள்ளியெழுச்சியின் பத்துப் பாடல்களை ஓதுவது வழக்கம். இது மட்டுமல்லாது, மார்கழிப் பெüர்ணமி, அதாவது திருவாதிரைத் திருநாளுக்கு அடுத்த நாளிலே இருந்து, சிவன் கோயில்களில் திருப்பள்ளியெழுச்சியே ஓதப்பெறும். சந்திர நகர்வுகளின் அடிப்படையில், பூர்ணிமைக்கு அடுத்த நாள், புதிய மாதம் பிறந்து விடுவதாகக் கணக்கு. ஆக, இரவு (பிரம்ம முகூர்த்தக் கருக்கல்) முடிந்து, பகல் (தை விடியல்) தொடங்கிவிடுகிறது. எனவே, திருப்பள்ளியெழுச்சி. இறைவன் உறங்குவதில்லை. அது அறிதுயில். ஆகவே, பள்ளியெழுச்சி என்பதை இருவிதமாகக் காணலாம். இந்த ராசிக்காரருக்கு எதிர்பாராத நல்ல திருப்பம் ஏற்படும்: ஆகஸ்ட் மாத பலன்கள் நன்றி Hindu மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 27)
பீத மாதமும் பாவை நோன்பும் மார்கழி மாதம்தான், சாந்தீபனியின் ஆச்ரமத்தில் கிருஷ்ணர் பாடம் கேட்டார் என்னும் நம்பிக்கையும் உண்டு. மார்கழி மாதத்தை தேவர்களின் பிரம்ம முகூர்த்தம் என்று விவரிப்பது வழக்கம். ஒவ்வொரு நாளும், சூரியோதயத்திற்கு முன்னதாக இருக்கும் 96 நிமிடங்கள், பிரம்ம முகூர்த்தமாகும். பொழுது புலர்ந்து நாள் தொடங்குவதற்கு முன்னர், கடவுளை வணங்கி வழிபட வேண்டிய நேரம் அது. நம்முடைய ஓராண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள்; தை முதல் ஆனி வரையிலான உத்தராயண ஆறு மாதங்கள் அவர்களுக்குப் பகல்; ஆடி முதல் மார்கழி வரையிலான தட்சிணாயண ஆறு மாதங்கள் அவர்களுக்கு இரவு. இந்தக் கணக்கில், தேவ பகல் தொடங்கும் தை மாதத்திற்கு முன்னதான மார்கழி, தேவர்களின் பிரம்ம முகூர்த்தமாகும். இந்த வேளையில், தேவர்களும் முனிவர்களும் இறைவனை வழிபடுகிறார்கள். மார்கழி மாதத்தில் இறைவனைத் துதித்துப் பலவாறாக நம்முடைய முன்னோர்கள் வழிபட்டார்கள் என்பது புராணங்கள் வழியாகவும் இலக்கியங்கள் வழியாகவும் புலனாகிறது. ஆயர்பாடிப் பெண்கள், ஆற்று மணலில் பாவை (அம்பிகை போன்ற பொம்மை) பிடித்து வைத்து வழிபட்ட தகவல், ஸ்ரீமத் பாகவதத்தின் தசம ஸ்கந்தத்தில் (பத்தாவது தொகுப்பு) காணப்படுகிறது. ஹேமந்தே ப்ரதமே மாஸி நந்த வ்ரஜகுமாரிகா: சேருர்ஹவிஷ்யம் புஞ்சானா: காத்யாயன்யர்ச்சனவ்ரதம்ஆப்லுத்யாம்பஸி காலிந்த்யா ஜலாந்தே சோதிதே அருணேக்ருத்வா ப்ரதிக்ருதிம் தேவீமானர்சுர் – – – காத்யாயனி மஹாமாயே மஹாயோகின்யதீச்வரீ நந்த கோப ஸூதம் தேவி பதிம் மே குரு தே நம: ஹேமந்த பருவத்தின் முதல் மாதத்தில் (மார்கழி), நந்த விரஜையின் கோபிகைகள், விரதமிருந்து, காத்யாயனி வழிபாடு செய்தார்கள். காளிந்தி நதியின் (யமுனை) கரையில் மணல் பாவை பிடித்து அம்பாளாக வழிபட்டார்கள். காத்யாயனி, மகாமாயீ, மகா யோகீச்வரி என்றெல்லாம் அழைத்து, “நந்தகோபர் மகனாக கண்ணன் என் கணவனாக ஆகும்படி அருள்வாயாக’ என்று வேண்டினார்கள். சங்கத் தமிழ் நூலான பரிபாடல், அம்பா ஆடலைக் குறிப்பிடுகிறது. ஞாயிறு காயா நளிமாரிப் பிற்குளத்து மாயிரும் திங்கள் மறுநிறை ஆதிரை விரிநூல் அந்தணர் விழவு தொடங்கப் புரிநூல் அந்தணர் பொலங்கலம் ஏற்பஆசைகளைப் பூர்த்தி செய்யுமா பதினோராம் பாவம்? ஜோதிட சூட்சுமங்கள்! வெம்பாதாக, வியன் நில வரைப்பென அம்பா ஆடலின் ஆய்தொடிக் கன்னியர் முனித்துறை முதல்வியர் முறைமை காட்டப் பனிப்புலர் பாடி… ஆதிரையோடு நிலவு சேர்கிற நன்னாளில், விரிநூல் அந்தணர்களின் விழா தொடங்கியபோது, கன்னியர் அம்பா ஆடல் ஆடினர். மிருகசீர்ஷத்திற்கு அடுத்த நட்சத்திரம் திருவாதிரை. ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி நிலவானது 2 நட்சத்திரத்தோடு இணையும் (27 நட்சத்திரங்கள் – 12 மாதங்கள், ஆக ஒவ்வொரு மாதத்திற்கும் 2 நட்சத்திரங்கள்). மார்கழிப் பெளர்ணமியில் (அது மிருகசீர்ஷம் அல்லது ஆதிரை என்று எதுவானாலும்) அந்தணர்கள் தங்களுடைய அத்யயனத்தைத் தொடங்கினார்கள். அதே நாளில், கன்னிப் பெண்களும் ஆற்றங்கரையில் மணலால் அம்பிகை வடிவம் செய்து நோன்பு நோற்றார்கள். நூற்றாண்டுகள் பலவற்றுக்கு முன்னர் அம்பா ஆடலாக இருந்த நோன்பு முறை, பின்னர், தைந்நீராடல் என்றும் வழங்கப்பட்டிருக்கிறது. எவ்வாறு? சந்திர- சூரிய அசைவுகளைக் கொண்டு நாள்களைக் கணிக்கும்போது, நட்சத்திரக் கணக்கு…
தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டம், புலவர்நத்தம் சிவன்கோயில் பல சிறப்புக்கள் கொண்ட ஆலங்குடியினை சுற்றி எட்டு திக்கிலும் சிறப்பான கோயில்கள் உள்ளன, அவையே அஷ்ட திக்கு பாலகர்கள் வழிபட்டவை. இவர்கள் இறைவனை வழிபட்டு தம் பெயரால் தீர்த்தமும், சிவலிங்கமும் நிறுவி பூஜித்து தங்களுக்கு ஏற்பட்ட இடர்பாடுகள் நீங்கியும் பல நற்பேறுகளும் பெற்றார்கள். ஆலங்குடிக்கு கிழக்கில் இந்திர தேவனால் இந்திர தீர்த்தமும் தென்கிழக்கில் பூனாயிருப்பு கிராமத்தில் அக்கினி தேவனால் அக்கினி தீர்த்தமும் தெற்கில் நரிக்குடி கிராமத்தில் யம தர்மரால் யம தீர்த்தமும் மேற்கில் பூந்தோட்டம் கிராமத்தில் வருண தேவனால் வருண தீர்த்தமும் வடமேற்கில் மருதூர் கிராமத்தில் வாயு தேவனால் வாயு தீர்த்தமும் வடக்கில் கீழ அமராவதி கிராமத்தில் குபேர தேவனால் குபேர தீர்த்தமும் வடகிழக்கில் சித்தன்வாழூர் கிராமத்தில் ஈசான்ய தேவனால் ஈசான்ய தீர்த்தமும் நிறுவி அஷ்டதிக் பாலகர்களே சிவலிங்க பிரதிஷ்டையும் செய்தார்கள். அதன் அடிப்படையில் நிருதி பாகமான, ஆதி காலத்தில் பூளை வளநத்தம் என்று அழைக்கப்பட்ட புலவர்நத்தம் கிராமத்தில் நிருதி தேவனால் நிருதி தீர்த்தமும் நிருதீஸ்வரர் என்ற திருநாமத்தோடு லிங்க பிரதிஷ்டையும் செய்து பூஜித்து, அதுவரை கைவிட்டிருந்த தன் தொழிலை மீண்டும் பெற்றார், இந்த தலத்தை சங்க புலவர்கள், மகான்கள், பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள் ஆகியோர் வழிபட்டு பரவசம் அடைந்துள்ளார்கள். ஆதலால் தன்னிகரில்லாத இத் திருத்தலத்தில் உள்ள நிருதி தீர்த்தத்தில் நீராடி சிவபெருமானையும் அன்னை தர்ம சம்வர்த்தினியையும் வணங்குவோர் வாழ்வில் எல்லா வளமும் நிறைந்து வளம் பெற்று வாழ்வர். நிருதி பூமிக்கு அதிபதி என்பதால் இவரை வழிபட்டால் நிலம், மனை வாங்கும் யோகமும் கிட்டும். மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 18) இறைவன்- நிருதீஸ்வரர் இறைவி- தர்மாம்பிகை தொழில் முன்னேற்றம், மன அமைதி, மன உறுதி பெறவும், குடும்பத்தில் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளாமல் பூசல் ஏற்ப்படுதலை தவிர்க்கவும் வில்வம் அல்லது பூளை பூவை சரமாக தொடுத்து சார்த்தி வழிபட்டால் நலம். கிழக்கு நோக்கிய இறைவன், அம்பிகை தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். முருகரின் மயில் வடக்கு நோக்கிய கொண்டுள்ளது சிறப்பு கரிய மாணிக்க பெருமாளும் உள்ளார். கும்பகோணம்-நீடாமங்கலம் சாலையில், குரு தலமான ஆலங்குடியை தாண்டியதும் ஒரு கிமி தூரத்தில் புலவர்நத்தம் பேருந்து நிறுத்தம் உள்ளது அதில் இருந்து மேற்கு நோக்கி சென்றால் கிராமத்தினை அடையலாம். ஊரின் முகப்பிலேயே உள்ளது நிருதீஸ்வரர் திருக்கோயில். கிழக்கு நோக்கிய இறைவன்- இறைவி தெற்கு நோக்கி உள்ளார், வாயில் தென்புறம் உள்ளது, கோயிலுக்கு வடக்கில் நிருதி ஏற்ப்படுத்திய பெரிய குளம் உள்ளது. கடம்பூர் விஜயன் நன்றி Hindu மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 6)
கார்த்திகை மாதம் வந்தாலே திருவிழாதான். கார்த்திகை முதல் தேதி ஐயப்ப பக்தர்கள் சபரிமலை ஐயப்பனுக்கு துளசி மணி மாலை அணிந்து விரதத்தைத் தொடங்குவார்கள். சபரிமலை ஐயப்பன் வீற்றிருக்கும், புண்ணியம் மிகுந்த 18 படிகளின் மகத்துவங்கள் குறித்துத் தெரிந்து கொள்வோம். சபரிமலையில் இருக்கும் ஐயப்பன் அவதாரத்தில் 12 வயது பாலகனாக ஐயப்பன் இருப்பதால், உயரமாக அமைந்திருக்கும் ஞான பீடத்தில் ஏறி உட்காருவதற்குச் சிரமப்படக்கூடாது என்ற எண்ணத்தில் 18 தேவதைகளும் தரையிலிருந்து பீடம் வரை படிக்கட்டுகள் போல வரிசைப்படுத்திக் கொண்டனர். ஐயப்பன் அவர்கள் மீது பாதம் வைத்து ஞான பீடத்தில் போய் உட்கார்ந்து அவர்களின் பூஜையை ஏற்றுக் கொண்டார். இப்படி எண்ணிக்கை முறையில் பதிக்கப்பட்ட18 படிகளானது மகா விஷ்ணுவின் மறு அவதாரமான பரசுராமனின் கரங்களால் பூஜிக்கப்பட்டு தெய்வாம்சம் பெற்றது. 18 என்ற கணக்கு வந்த விதம். இந்திரியங்கள் ஐந்து, புலன்கள் ஐந்து, கோசங்கள் ஐந்து மற்றும் குணங்கள் மூன்று என மொத்தம் 18 என்பார்கள். இந்திரிங்கள் என்பது கண், காது, மூக்கு, நாக்கு, கை மற்றும் கால்கள் ஆகும். புலன்கள் என்றால், பார்த்தல், கேட்டல், சுவாசித்தல், ருசித்தல் மற்றும் ஸ்பரிசித்தல் என்பதாகும். கோசங்கள் என்பது அன்னமய கோசம், பிராமணமய கோசம், மனோமய கோசம், ஞானமய கோசம் மற்றும் ஆனந்தமய கோசம் என்பதாகும். குணங்கள் என்பது சத்வ குணம், ரஜோ குணம், தமோ குணம் என்றும் சொல்லப்படுகிறது. மேலே சொல்லியுள்ள பதினெட்டையும் கட்டுப்படுத்தி ஜெயித்து இந்த 18 படிகளையும் கடப்பவர்கள் மட்டுமே ஐயப்பனின் முழு அருளையும் பெறுகிறார்கள். அதனால்தான், மகிமை வாய்ந்த படிகளின் தெய்வீகத் தன்மையைக் காப்பாற்றவும், முறையாக விரதம் இருந்து படியேறுபவர்கள் நற்பலன்களைப் பெறவும் சரியான விரதம் இல்லாமல் இப்படிகளை ஏறிக் கடப்பவர்களால் ஏற்படும் அபசாரத்திற்குப் பரிகாரமாகவும் படி பூஜைகள் செய்யப்படுகின்றன. இந்தப் படிகளில் வீற்றிருக்கும் ஒவ்வொரு தேவதைக்கும் தனித்தனியாக ஆவாஹனம் என்ற ஷோட சேமசார பூஜையையும் செய்து 18 படிகளின் புனிதத் தன்மையை இன்றளவும் காத்து வருகிறார்கள்.மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 9) ஹரிஹரப் புத்திரன் ஐய்யன் ஐயப்ப சுவாமி, மஹா விஷ்ணுவை தாயாகவும், மகேஷ்வரனை தந்தையாகவும் பெற்றவர். திருமாலின் அவதாரமான கிருஷ்ண பகவான் உலக மக்களுக்காக அருளிய ஸ்ரீமத் பகவத்கீதையின் 18 யோகங்களை 18 படிகளாகக் கொண்டு அமர்ந்துள்ள ஐயப்பனின் சத்தியப்படிகளைக் கடந்து தம்மை வந்தடையும் பக்தர்களுக்கு திருவருள் புரிகின்றார் என்பதைக் குறிப்பதாகும். பதினெட்டுப் படிகளிலும் 18 திருநாமங்களுடன் மணிகண்டன் எழுந்தருளியிருக்கிறார். அந்த 18 பெயர்களையும் தெரிந்துகொள்வோம். குளத்தூர் பாலன், ஆரியங்காவு ஆனந்த ரூபன், எரிமேலி ஏழைப் பங்காளன், ஐந்து மலைத்தவன், ஐங்காரச் சகோதரன், கலியுக வரதன், கருணாகரத் தேவன், சத்தியப் பரிபாலகர், சற்குணசீலன், சபரிமலை வாசன், வீரமணிகண்டன், விண்ணவர் தேவர், விஷ்ணு மோகினி பாலன், சாந்த சொரூபன், சற்குணநாதன், நற்குணக் கொழுந்தன், உள்ளத்தமர்வான் மற்றும் ஐயப்பன் என சபரிமலையில் 18 படிகளிலும் 18 யோகங்களையும் கொண்டுள்ளது. 18 படிகளுக்கு எப்போது பூஜைகள் நடைபெறுகின்றது…
எதனை இயலாமல் செய்யும், ஸ்ரீமன் நாராயணனின் நாமம்? சனி பகவான் எப்போது தீய விளைவுகளை அளிப்பார் / அளிக்க மாட்டார் என்று முதலில் தெரிந்துகொள்வோம். ஒரு ஜாதகரின் ஜாதகக் கட்டம் தான் அதனை தீர்மானிக்கும். சிலருக்கு, சனி மிகச் சிறப்பான நன்மைகளைச் செய்திருக்கிறார். ரிஷபத்திற்கும், துலாத்திற்கும் சனி தான் யோகாதிபதி ஆகிறார். ஆம், அவரே கேந்திராதிபதியாகவும், திரிகோணாதிபதியாகவும் வருவதால், யோகாதிபதி ஆகிறார். ரிஷபத்திற்கு, 9, 10க்கு அதிபதியாகவும், துலாத்திற்கு 4, 5 க்கு அதிபதியாகவும் வருவதே ஆகும். இதனால், ரிஷப, துலா லக்கினகாரர்களுக்கு பொதுவாக சனி யோகாதிபதியாகி, பல நன்மைகளைச் செய்கிறார். சனிக்கு பகை ராசிகள் – செவ்வாயின் வீடுகளான மேஷம், விருச்சிகம் மற்றும் சந்திரனின் வீடான கடகம், சூரியனின் வீடான சிம்மத்திலும் பகையாவார். இந்த வீட்டிற்கு இவர் நன்மையை பொதுவாக செய்யமாட்டார். இப்படி பொத்தாம் போக்காகவும் சொல்லிவிடமுடியாது. இந்த ராசிகளில் உள்ள சில நட்சத்திர பாதத்தில் நிற்கும்போது மட்டும் தான் அவர் பகையாவார். நன்மையைச் செய்யமாட்டார். பொதுவாக கூறவேண்டுமானால், சனி – மேஷத்தில் நீச்சம். ஒருவரின் ஜாதகத்தில், இங்கு சனி நிற்பதனால் நீச்சம் என்று எடுத்துக்கொள்ள முடியாது. உதாரணத்திற்கு, மேஷ ராசியில், அஸ்வினி நட்சத்திரம் அனைத்து பாதங்களிலும் சனி நிற்க பிறந்தவர்களுக்கு தீங்கு நேராது. அஸ்வினி -1 ஆம் பாதம் நீச்ச நவாம்சம் அடைவதால் அந்த பாதத்தில் சனி நின்றவர்களுக்கும், அஸ்வினி 4 ஆம் பாதத்தில் சனி நின்றவர்களுக்கு பகை நவாம்சம் பெறுவதால், இந்த இரு பாதங்களில் நின்ற சனி தான் தீமையான பலனை அளிப்பார். அஸ்வினி 2, 3 பாதத்தில் நிற்கும் சனியால் தீமை ஏற்படாது. இது போல் ஒவ்வொன்றாக பார்த்து தான் தீர்மானித்திடல் வேண்டும். பொதுவாக மேஷத்தில் சனி நீச்சம் என கொண்டு சனி மேஷத்தில் நிற்கும். அனைவருக்கும் தீய பலன்களே ஏற்படும் எனச் சொல்லிவிட முடியாது. சனி பகவான் ஒரு தோத்திர பிரியர். அவரை மனம் உருக தோத்தரித்தால், நிச்சயம் பல நன்மைகளை , நமது கர்ம வினைகளைக்கு ஏற்ப தக்கபடி பலன்களை அருள்வார். சனி பகவானை தோத்தரிக்கும் அகரவரிசையில் வரும் வரிகளை மனம் ஒன்றி படிக்கவும். ( ம் +அ = ம , ம் + ஆ = மா … இது போல் துவங்கும் வரிகள்.) 1. மந்தன், கரியவன், கதிர் மகன், சௌரி, நீலன் எனும் சனி கிரக சகாயா நம ஓம். 2. மானிடரின் ஆணவத்தை மாற்றி அருள் மயமாக்கும், சனி கிரக சகாயா நம ஓம். 3. மிகு உச்ச ஆட்சி பலம் இருந்திடில் நலம் சேர்க்கும், சனி கிரக சகாயா நம ஓம். 4. மீளாத வறுமைக்கு ஆளாகாமல் காக்கும் , சனி கிரக சகாயா நம ஓம். 5. முக ரோகி, கால் முடவன், முதுமகன் , காரியன் எனும் சனி கிரக சகாயா நம ஓம். 6….
உத்தரமேரூர் வட்டம்,குரு பெயர்ச்சி – 2021 பொதுப் பலன்கள்திருப்புலிவனத்தில் முத்து மாரியம்மன் கோயில் 3-ஆம் ஆண்டு திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நன்றி Hindu செவ்வாய் தோஷம் என்ன செய்துவிடும்?
நவக்கிரகங்களில் முழு சுப கிரகம் வாழ்வில் அனைத்து விதமான செல்வங்களையும் அளிப்பவர் – சப்த ரிஷிகளில் ஆங்கிரஸ முனிவரின் மகன் குரு என்றும் பிரகஸ்பதி என்றும் வியாழ பகவான் அழைக்கப்படுகிறார். இவர் தேவர்களுக்கு எல்லாம் குரு. நம் வாழ்வில் 2 விஷயங்கள் மிக முக்கியம். அதாவது தனம் என்று சொல்லக்கூடிய பணம், 2-வது புத்திர சம்பத்து என்று சொல்லக்கூடிய குழந்தை செல்வம். இந்த இரண்டையும் அளிக்க கூடிய சர்வ வல்லமை பெற்ற கிரகம் குரு. குருவுக்கு மேலும் பல்வேறு விதமான ஆதிக்கங்கள் உள்ளன. ஞானம், கூர்ந்த மதிநுட்பம், மந்திரி யோகம், நிதித்துறை, நீதித்துறை, வங்கி, கல்வி, வேத உபதேசம் போன்றவை எல்லாம் குருவின் அதிகாரத்துக்கு உட்பட்டவை. அவரது அருள் இருந்தால் இந்த துறைகளில் பிரகாசிக்கலாம். குரு பார்வை அல்லது வியாழ அனுகூலம் நம் வாழ்வில் சுபநிகழ்ச்சிகள் உதாரணமாக திருமணம் அனைவரின் வாழ்க்கையிலும் முக்கியமானது. திருமணத்துக்கு மிக முக்கிய கிரகமாக குரு பகவான் திகழ்கிறார். குரு பார்வை என்று சொல்லப்படும் வியாழ அனுகூலம் திருமணத்துக்கு முக்கியமாக தேவைப்படுகிறது. வியாழ நோக்கம் வந்து விட்டதா என்று பார்த்த பிறகே திருமண விஷயங்களை ஆரம்பிக்க முடியும். குருவின் பலம் குரு எந்த ஸ்தானத்தை பார்க்கிறாரோ அந்த ஸ்தானம் பலமும், விருத்தியும் அடைகிறது. குரு பார்வை சர்வ தோஷ நிவர்த்தி. குருவுக்கு 5,7,9 ஆகிய பார்வைகள் உள்ளன. அதாவது குரு இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். ஐந்தாம் பார்வையும், ஒன்பதாம் பார்வையும் சிறப்பு பார்வைகளாகும். நிகழும் மங்களகராமன ஸ்வஸ்திஸ்ரீப்லவ வருஷம் – தக்ஷிணாயனம் – சரத் ரிது – ஐப்பசி மாதம் 27ம் தேதி (ஆங்கிலம் 13.11.2021) அன்றைய தினம் சுக்லப்க்ஷ தசமி – சதய நக்ஷத்ரம் – வ்யாகாத நாமயோகம் – பாலவ கரணம் – சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 3024க்கு (மாலை மணி 6.21க்கு) ரிஷப லக்னத்தில் குரு பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு மாறுகிறார். நன்மை பெறும் ராசிகள் மிதுனம் – சிம்மம் – துலாம் நன்மை தீமை இரண்டும் கலந்து பலன்கள் பெறும் ராசிகள் மேஷம் – ரிஷபம் – விருச்சிகம் – மகரம் – கும்பம் பரிகாரத்தின் மூலம் பயன்பெறும் ராசிகள் கடகம் – கன்னி – தனுசு – மீனம் தற்போது மாறக்கூடிய குருபகவான் கும்ப ராசியில் இருந்து தனது ஐந்தாம் பார்வையால் மிதுன ராசியையும் – ஏழாம் பார்வையால் சிம்ம ராசியையும் – ஒன்பதாம் பார்வையால் துலா ராசியையும் பார்க்கிறார். குரு பகவானுக்கு ஸ்தான பலத்தை விட த்ருக் பலமே அதிகம். அதாவது இருக்கும் இடத்தின் பலத்தினை விட பார்க்கும் பலமே அதிகம். எனமே குருவின் பார்வை பெறும் ராசிகள் பூரண பலன்கள் பெறும். குரு பயோடேட்டா சொந்த வீடு – தனுசு, மீனம் உச்சராசி – கடகம் நீச்சராசி – மகரம்…
இந்தக் கட்டுரையை முழுவதுமாகப் படித்த பின்னர், படிப்பவர்கள் நீங்களாகவே முடிவு செய்யுங்கள், “திருமணப் பொருத்தம் தேவையான ஒன்றா, இல்லையா” என்று காதலிப்பவர்களுக்கு, திருமணப் பொருத்தம் தேவையா ? காந்தர்வ திருமணம் எனும், காதல் திருமணத்திற்கு, ஜோதிடத்தில் திருமணப் பொருத்தம் தேவை இல்லை, மனப்பொருத்தம் மட்டுமே தேவை. அதே சமயம் அவர்களின் ஜாதகத்தில், ஷஷ்ட்டாஷ்டகமாக இருவரின் லக்கினம் மற்றும் ராசி உள்ளதா என காணுதல் அவசியம். அதாவது பெண்ணின் ஜாதகத்தின் லக்கினத்தில் இருந்து, ஆணின் ஜாதகத்தில் உள்ள லக்கினம், 6 ஆகவோ அல்லது 8 ஆகவோ வரக்கூடாது. அப்படி இருப்பின், ஒரு ஜோதிடர் அவர்களுக்கு எச்சரித்தல் அவசியம். அதாவது, காதலிக்கும் இருவரும் மனம்விட்டு பேசுங்கள், ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொள்ளுங்கள் என்று மட்டும் சொல்லிவிடுவது நல்லது இந்த ஷஷ்டாஷ்டகம் இல்லாதவர்களை, சேர்ப்பதில் தவறேதும் இல்லை என்பது, எனது கருத்து. காரணம், அவர்கள் இருவரையும் கடவுளே இணைத்திருப்பதாக கருதுதல் அவசியம் ஆகிறது. அதனால், திருமணப்பொருத்தம் காண வரும் ஜாதகங்களுக்கிடையே (ஒரு ஆண், ஒரு பெண் ஜாதகத்தில் ) அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ தனித்தனியாகவோ காதல் வயப்பட்டுள்ளனரா என காணுதல், ஒரு ஜோதிடரின் முதல் கடமை ஆகிறது. இதனை அறிந்து, பின்னரே, பொருத்தம் பார்த்தால் சரி ஆகும். இந்த காலகட்டத்தில், காதல் பல விபரீதங்களை உருவாக்குகிறது. ஒரு பெரிய அனுபவம் மிக்க ஜோதிடரால் கூட சரியான தீர்வை உடனடியாக கூறிவிட முடியாத விஷயம். என்னவென்றால், “திருமண பொருத்தம்” ஒன்று மட்டும் தான். கலாசார மாற்றம் அதிகரிக்க அதிகரிக்க, திருமணப் பொருத்தம் என்பது மிகவும் கடினமானதாக உள்ளது என்பது, ஒரு மறுக்க முடியாத உண்மை ஆகும். திருமணப் பொருத்தத்திற்கு முன்பாக ஒரு ஜோதிடர் காண வேண்டியது என்னவென்றால், 1. பொருத்தம் பார்க்க வந்த ஜாதகத்தில் இருவரும் (பையன் மற்றும் பெண் ) காதலிக்கிறார்களா அல்லது யாரேனும் ஒருவரோ அல்லது இருவருமோ காதல் வயப்பெற்றிருக்கிறாரா? என்பது 2. இவர்களுக்குள் திருமணம் நடக்குமா? 3. நிச்சயம் பண்ணிய பிறகு திருமணம் நின்று போகுமா? என முதலில் பார்க்கவேண்டும். ஏன் என்றால், திருமணம் என்பது இரு இதயங்களை, இரு உள்ளங்களை, இரு குடும்பத்தை இணைக்கிறது, என்பதனை யாரும் மறுக்க முடியாது. பொருத்தம் என்பது மூன்று வகையானது 1. ஜாதக ரீதியான ஆய்வு, கிரக பலம் மற்றும் பாவ பலம் ஆய்வு. 2. தற்போது நடைபெறுவது, திருமணத்தை நடத்தி வைக்கும் தசாபுத்தியா? அது இருவருக்கும் மகிழ்ச்சியை அளிக்குமா அல்லது கசப்பைத் தருமா ! 3. திருமணம் ஆன பிறகு, தம்பதியர் இருவருக்குள், பிரிவினை வருமா? என்பதனை, “தோஷ சாம்யம்” எனும் ஜோதிட ஆய்வு மூலம் அறிவதாகும். ஏன் என்றால், ஒருவர் திருமணத்திற்கு முன்பு பெரிய நிலையில் இருக்கிறார். திருமணத்திற்கு பின் மிகவும் தாழ்ந்த நிலைக்கு தள்ளப்படுகிறார். அதுவே வேறு ஒருவர், திருமணத்திற்கு முன்பு தாழ்ந்த நிலையில் இருக்கிறார். திருமணத்திற்கு பின்னர் மிக உன்னத நிலையை அடைகிறார்….
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 14 உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய்நெகிழ்ந் தாம்பல்வாய் கூம்பினகாண் செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார் எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய் சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடலோர் எம்பாவாய். பாடியவர் – பவ்யா ஹரி விளக்கம்: வெளியில் நிற்கும் பெண்கள், பொழுது புலர்ந்ததற்கான மேலும் சில அடையாளங்களைச் சுட்டிக் காட்டுகின்றனர். "உன்னுடைய வீட்டுப் புழைக்கடையில் இருக்கிற குளத்தைப் பார் பெண்ணே. செங்கழுநீர் மலர்கள் மலர்ந்துவிட்டன. ஆம்பல் மலர்கள் கூம்பிவிட்டன. காவி வண்ண ஆடை அணிந்தவரும் வெண்மையான பற்கள் கொண்டவருமான தவசிகள், திருக்கோயில்களில் சங்கநாதம் முழக்குவதற்காகச் செல்கின்றனர். என்னமோ, எங்களை நீ வந்து எழுப்புவதாகக் கதை பேசினாயே. நாணமில்லையா உனக்கு? நாக்கு மட்டும் நீளமோ? சங்கும் சக்கரமும் திருக்கரங்களில் ஏந்தி, தாமரைக் கண்ணானாகக் காட்சி தரும் கண்ணனைப் பாடுகிறோம், எழுந்து வா’ என்று அழைக்கின்றனர். பாசுரச் சிறப்பு: விடியலின் இன்னும் சில அடையாளங்கள் காட்டப்பெறுகின்றன. வெகு தொலைவு சென்று இந்த அடையாளங்களைக் காண வேண்டியதில்லை. அவரவர் அணுக்கச் சூழல்களிலேயே காணலாம். வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் சிறிய குளத்தில் காட்சி தெரிகிறது. வெளிச்சம் கண்டு மலர்கிற செங்கழுநீர் (தாமரை வர்க்கம்) மலர்ந்துவிட்டது; வெளிச்சம் கண்டு கூம்புகிற ஆம்பல் (கருநெய்தல் வர்க்கம்) கூம்பிவிட்டது. ஆக, வெளிச்சம் வந்துவிட்டது கண்கூடு. அதிகாலைப் பொழுதில், விடியலின் வெளிச்சக்கீற்றுகள் முதலில் எட்டத்தில் தெரியும். பின்னர்தான், அணுக்கத்தில் தெரியும். அணுக்கத்தில் தெரிந்தால், பொழுது அதிகமாகவே புலர்ந்துவிட்டது என்று புரிந்து கொள்ளலாம். ஸ்வாபதேசத்தில்,திருப்பாணாழ்வாரைக் குறிக்கும் பாசுரம். அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – பாடல் 14 காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்செவ்வாய் தோஷம் என்ன செய்துவிடும்? கோதை குழலாட வண்டின் குழாமாடச் சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச் சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப் பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன் பாதத் திறம்பாடி ஆடேலோ ரெம்பாவாய்! பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன் பாடியவர் – மயிலை சற்குருநாதன் பாடியவர் மயிலாடுதுறை சிவகுமார் விளக்கம்: மனம், மொழி, மெய் ஆகிய மூன்றும் இறைவன்பால் ஈடுபட்டிருக்கும் நிலையைக் காட்டுகிற பாடல் இது. பெண்கள் பொய்கைக்குள் புகுந்து நீராடுகின்றனர். இதுபொழுது, உடலும் உறுப்புகளும் (உயிருள்ளவை), வேறு சில பொருள்களும் (உயிரற்றவை) ஆடுகின்றன. காதுகளில் அணிந்துள்ள குழைகள் ஆடுகின்றன; கழுத்திலும் தோளிலும் கைகளிலும் அணிந்திருக்கும் பிற அணிகளும் ஆடுகின்றன; கூந்தலில் சூடிய பூமாலைகள் ஆடுகின்றன; பூக்களிலிருந்து எழுந்த வண்டுகள் ஆடுகின்றன; குளிர்ந்த நீரில் ஆடி, சிற்றம்பலவனைப் பாடி,வேதப் பொருளாக விளங்கும் தன்மையைப் பாடி, பேரொளிப் பிரகாசமாகத் திகழும் பெருமையைப் பாடி, அதே இறைவன் பலவகை உருவங்களும் வடிவங்களும் கொண்டு அவதரித்து, கொன்றை மாலை சூடுகிற அருமையைப் பாடி, ஆதியும் அந்தமுமாக இருப்பதைப் பாடி, அறியாமையிலிருந்து நம்மை…
ஜோதிடத்தில் முக்கிய அங்கங்களான வாரம், திதி, கரணம், நட்சத்திரம், யோகம் கொண்டு பஞ்ச பூத தத்துவத்தில் இயக்கப்படுகிறது. இந்த ஐந்து அங்கங்களே பஞ்சாங்கம் ஆகும். இவற்றில் கரணம் திதியில் பாதி. ஒரு திதியின் 12 பாகையில், 6 பாகைக்கு ஒரு கரணமாக 12 பாகைக்கு இரண்டு கரணமாக வரும். அதாவது 30 திதிக்கும் 60 கரணங்களாக வரும். அதிலும் கரணம் அவற்றோடு தொடர்புடைய கரணநாதன் முக்கியமானவர். மொத்தமாக 11 கரணங்கள் ஆகும். அவற்றில் சர கரணங்களான பவ, பாலவ, கெளலவ, தைதுளை, கரசை கரணங்கள் பூரண சுபத்துவம் வாய்ந்தது. மற்ற கரணங்களான பத்திரை(விஷ்டி), சகுனி, நாகவம், கிம்ஸ்துக்ன கரணங்கள் அசுப தன்மை பெற்றது. இவற்றில் சர கரணத்தில் உள்ள வணிசை மற்றும் ஸ்திர கர்ணத்தில் சதுஷ்பாதமும் மத்திம சுப தன்மை கொண்டது. ஒரு உயிர் இயங்க காற்று அவசியம் மற்றும் ஒரு மனிதனின் ஏற்ற தாழ்வு செயலுக்கு கர்ம காரகன் சனி பகவான் நிலை தேவை. அதனால் தான் கரணத்தின் கிரகம் கர்மகாரகன் சனி என்றும், இது காற்று தத்துவம் கொண்டதாக கூறப்படுகிறது. ஒருவருக்கு கரணநாதன் பலம் பெற வேண்டும். கரணம் தப்பினால் மரணம் என்பதற்கு ஏற்ப கரணம் சூட்சுமம் தெரியவில்லை என்றால் மரணதிற்கு நிகரான கெட்ட சம்பவங்கள் நடைபெறும் என்பது சிறு கூற்று. ஒவ்வொரு ஜோதிட நூல்களில் உள்ள சூட்சுமங்களை அப்படியே ஜாதகத்தில் பொருத்தி நன்கு ஆராய வேண்டும். பதினோரு கரணத்தின் குணங்களையும் ஜாதக அலங்காரத்தில் விளக்கி உள்ளது. அது கரணாதிபதி நிலையை பொறுத்து குணம், செயல்கள் மாறுபடும். ஜோதிட சூட்சுமத்தில் ஜாதகருக்கு தெய்வ அருள் பெற, திதியின் பாதியாக உள்ள கரண நாதனை வணங்கினால் நன்று. முக்கியமாக கிரகங்கள், அதிதேவதை மற்றும் அவற்றின் தொடர்புள்ள அனைத்தையும் கொண்டு கரணநாதனை இயக்க வேண்டும். ஒருவருக்கு தோஷம் இருந்தால் அந்த தோஷம் பெற்ற வீட்டை கரண நாதன் சுப நிலையில் பார்த்தால் அவரவர் கர்மாவிற்கு ஏற்ப, அவருக்கு தோஷத்தைக் குறைக்கும் என்பது விதி. அது அசுப நிலையிலிருந்தால் பலன் பெற கொஞ்சம் கடினம். இன்னும் அடுத்த கட்டத்தில் ஆராய்ந்தால், கரணத்தை கொண்டு திருமண பொருத்தம் பார்க்க வேண்டும், கரசை கரணத்தில் வாழ்க்கை துவங்குது நன்று, இந்த கரண தம்பதியர்கள் ஒற்றுமை பலம் பெரும். அசுப கரணத்தில் வாழ்க்கையை துவங்கக்கூடாது, குழந்தைப் பாக்கியம் பெற, கரணாதிபதி மூலம் பரிகாரம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக ஒருவருக்கு குழந்தைப் பாக்கியம் இல்லை என்றாலும் சுப நிலையில் உள்ள கரணநாதன் பார்வை பெற்றால் புதிய மருத்துவச் சிகிச்சைகள் மற்றும் சோதனை குழாய் முறையில் குழந்தை பாக்கியம் உண்டாகும். ஒவ்வொருவருக்கும் எது சரியான தொழில், அது வெற்றியின் உச்சத்தை அடையமுடியுமா என்று பார்க்க இது ஒரு சூட்சும விதி. அதுவும் முக்கியமாக ஜாதகர் எந்த காரணத்தில் பிறந்தாரோ அந்த கரணத்துக்குரிய மிருகத்திற்கு துன்பம் கொடுக்கக்கூடாது. எடுத்துக்காட்டாக வன்னிசை கரணம்…
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 12 கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி நினைத்து முலைவழியே நின்றுபால் சோர நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்! பனித்தலை வீழநின் வாசல் கடைபற்றி சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக் கினியானைப் பாடவும்நீவாய் திறவாய் இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம் அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய். பாடியவர் – பவ்யா ஹரி விளக்கம்: இதுவும் துயிலெடைப் பாசுரமாகும். இந்தப் பெண்ணின் வீடும் செழிப்பு மிக்கது. தன்னுடைய கன்றை நினைத்துக்கொண்டு (அது பாலருந்திய பின்னரும்), எருமை மாடானது தானே பாலைப் பொழிகிறது; இதனால், வீட்டின் முற்றமெல்லாம் சேறாகிறது. இப்படிப் பொங்கப் பொங்கப் பால் பொழியும் மாடுகள் நிறைய உடைய கோபாலரின் தங்கை இவள். "அதிகாலை நேரத்துப் பனி, எங்களின் தலையில் விழும்படியாக உன்னுடைய வீட்டிற்கு வந்து அழைக்கிறோம். சீதைக்கு நேர்ந்த துன்பத்தை எண்ணிச் சினம் கொண்டு, அத்துன்பத்திற்குக் காரணமான இலங்கேச்வரன் இராவணனை அழித்தவனான மனத்துக்கு இனியான் இராமன் பெயர்களைச் சொல்லிப் பாடுகிறோம். வாயைத் திறக்கமாட்டாயா? எங்கள் இசையொலி கேட்டு, பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லோரும் எட்டிப் பார்க்கிறார்கள். இன்னமும் உறங்குகிறாயே’ என்று கிண்டல் பேசுகிறார்கள். பாசுரச் சிறப்பு: கீழ்ப்பாசுரத்திலும் இப்பாசுரத்திலும் "செல்வம்’ குறித்த குறிப்புகள் உள்ளன. செல்வம் என்பது பணம், காசு போன்றவை அல்ல. இறைத்தொண்டே செல்வம். இவ்வகையில் ஆயர்பாடியர் யாவரும் நற்செல்வம் கொண்டவர் ஆவர். கோபியர் பலருடன் விளையாடும் கண்ணன், கண்ணுக்கினியான்; ஏக பத்தினி விரதனான இராமன் மனத்துக்கினியான் என்னும் விளக்கம் சுவை கூட்டும். கீழே பால் வெள்ளம் (முற்றத்துச் சேறு), மேலே பனி வெள்ளம் (பனித்தலைவீழ) நடுவே மால் வெள்ளம் (உள்ளத்தில் திருமால் எண்ணம்) என்பது இப்பாசுரத்தின் பெருமை. ஸ்வாபதேசத்தில், பொய்கை ஆழ்வாரை இப்பாசுரம் குறிக்கும். அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – பாடல் 12 ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும்மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 10) தீர்த்தன்நற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும் கூத்தன்இவ் வானும் குவலயமும் எல்லோமும் காத்தும் படைத்து கரந்தும் விளையாடி வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள் ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப் பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம் ஏத்தி இருஞ்சுனை நீராடேலோ ரெம்பாவாய். பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன் பாடியவர் – மயிலை சற்குருநாதன் பாடியவர் – மயிலாடுதுறை சிவகுமார் விளக்கம்: இறைவனைத் துதித்துப் பாடுவதே தங்களின் நோன்பு என்பதாக இப்பெண்கள் கூறுகிற பாடல். "கட்டப்பட்ட இப்பிறவியின் துன்பம் தீருவதற்காக, நாம் ஆர்ப்பரித்து ஆடுகிற தீர்த்தமாகத் திகழ்பவன்; தில்லைத் திருத்தலத்தின் சிற்றம்பலத்தில், தீயைக் கையிலேந்தி ஆடுகிற கூத்தன்; அண்டம், கோள்கள், உலகங்கள் என யாவற்றையும் படைத்து, காத்து, அழித்து விளையாடுபவன்; இத்தகைய இறைவனை வாயாரப் பாடி, வளைகளும் மேகலை போன்ற ஆபரணங்களும் ஆரவாரிக்க, கூந்தலின் மேல் வண்டுகள் ரீங்கரிக்க, மலர்களைக்கொண்ட பொய்கையில் மூழ்கி, இறைவன் திருவடிகளை வணங்குகிறோம்’ என்று விளக்குகிறார்கள். பாடல் சிறப்பு: பந்தம், பாசம் போன்றவற்றால் கட்டப்பட்ட பிறவி என்பதால் இது…
1688 முதல் 1772 வரை வாழ்ந்த இம்மானுவெல் ஸ்வீடன்போர்க் (Emanuel Swedenborg) ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவர். அவர் ஒரு விஞ்ஞானி, தத்துவஞானி, இறையியலாளர், மற்றும் மறைஞானி என்று போற்றப்பட்டவர். இயற்கணிதம் (Algebra), நுண்கணிதம் (Calculus), புவியமைப்பியல் (Geology), மருத்துவ இயல் (Medicine), வானியல் (Astronomy), பொருளாதாரம் (Economics), தொழில்நுட்பம் (Technology) மற்றும் பொறியியல் (Engineering) போன்ற துறைகளில் ஆய்வறிக்கைகளை வெளியிட்டவர் அவர். வெவ்வேறு விதமான மண்ணைப் பற்றியும், மண்ணின் மேற்பரப்பைப் (Soil) பற்றியும், ஊதுலைகளைப் (Blast Furnace) பற்றியும், காந்த சக்தியைப் (Magnetism) பற்றியும், நீர்ம நிலையியலைப் (Hydrostatics) பற்றியும் பல ஆய்வுகளை எழுதியுள்ளார் அவர். படிகவியல் (Crystallography)ஆராய்ச்சித்துறை இம்மானுவெல் ஸ்வீடன்போர்க்கால் நிறுவப்பட்டது. விண்மீன் படலக் கோட்பாட்டை (Nebular Hypothesis) அவரே முதலில் முன்மொழிந்தார் என்று கருதப்படுகிறது. (இப்போது இதுவே சூரியக் குடும்பத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சியை விளக்கும் மாதிரியுருவாகப் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.) மருத்துவ இயலில் அவரே நாளமில்லாச் சுரப்பிகளின் (ductless glands) செயல்பாட்டை முதலில் கண்டுபிடித்தார்.அவதாரம்! குறுந்தொடர்: 3 நன்றி Hindu வேண்டியது கிடைக்கும் விநாயகர் வழிபாடு
தம்பதியருக்குள் ஏற்படும் பிரிவினையை, திருமணப் பொருத்தம் கூறுமா? என்றால் நிச்சயமாகத் தெரிய வரும் என்றுதான் கூற முடியும். தம்பதியருக்குள் ஏற்படும் பிரிவினையை, திருமணப் பொருத்தம் கூறுமா? என்றால் ஆம்! நிச்சயமாகத் தெரிய வரும் என்றுதான் கூற முடியும். அதற்கு பல விதிகள் ஜோதிடத்தில் இருந்தாலும், தோஷ சாம்யம் எனும் தோஷ அளவீடுகளை அறிந்து, முன்னரே அறிந்துகொள்ள முடியும். இதனை நமது ஜோதிட பிதாமகர்கள், மஹா கவி காளிதாசரும் அற்புதமாக தெளிவுபடுத்தியுள்ளனர். பிரிவினைக்கான காரணங்கள்: – 1. விஷ கன்னிகா தோஷம் இது பலவிதம்… அதாவது, செவ்வாய்- சனி சேர்க்கை, செவ்வாய்-சனிக்கு இடையில் எந்த கிரகமும் இல்லாதிருப்பது. திருமண யோகத்தைத் தடுத்து நிறுத்தும் ஒரு கிரக அமைப்பாகும். இதனால் குழந்தை பிறப்பு பாதிக்கப்படுகிறது. குழந்தை பிறந்ததும் நிம்மதி பாதிக்கும். மறுமணம் ஏற்படும் சூழல் உருவாகும். இந்த சூழலில் மற்றவர்கள், இவர்களின் வாழ்வில் இணைந்து விடுகிறார்கள். 2. தம்பதியருள் ஏற்படும் அகந்தை பொதுவாக லக்கினாதிபதி தான் ஒருவருக்கு அகந்தையைத் தருபவர். இப்படிப்பட்ட நிலையில் அகந்தை அதிகமாகும்போது தம்பதியருள் பிரிவினை ஏற்படுகிறது. ஒருவரின் லக்கின அதிபதி மற்றவர் ஜாதகத்தில் பலவீனமானால், அவரை இவர் மதிக்க மாட்டார். அதேபோல் ஒருவரின் ஏழாம் அதிபதி அடுத்தவர் ஜாதகத்தில் பலவீனமானால், இவர் அவரை மதிக்கமாட்டார். இதனை, சர்வாஷ்டக வர்க்க பரல்களும் எடுத்துரைக்கும். அதாவது லக்கினத்தில் பெற்ற பரல்களின் எண்ணிக்கை 7 ஆம் இடத்தின் பரல்களை விட அதிகமாக இருப்பின் ஜாதகர் தமது வாழ்க்கை துணைவரை அடக்கி ஆள நினைப்பார். அதே சமயம் ஒருவரின் ஜாதகத்தில் 7 ஆம் இடத்து பரல்கள் லக்கின பரல்களைவிட அதிகமாக இருப்பின், வாழ்க்கை துணைவரின் கட்டுப்பாட்டில் ஜாதகர் இருப்பார். இது ஆண் – பெண் இருபாலருக்கும் அதாவது கணவன், மனைவி ஜாதகத்திற்கும் பொருந்தும். இதனை இன்னமும் விரிவாக காணும் போது, மனைவியின் ஜாதகத்தின் லக்கின அதிபதி கணவரின் ஜாதகத்தில் நீசமாக இருப்பின், மனைவி கணவரின் மீது உயிரையே வைத்திருந்தாலும், கணவர் மனைவியைத் துளியும் மதிப்பதில்லை என்பதை காண முடிகிறது. அதேபோல் கணவரின் லக்கினாதிபதி மனைவியின் ஜாதகத்தில், நீச்சமாகும் போது கணவர் மனைவியின் மீது உயிரையே வைத்திருந்தாலும், மனைவி, கணவரை எவ்வளவு தரக்குறைவாக நடத்த வேண்டுமோ அவ்வளவு தரக்குறைவாக நடத்துகிறார். உதாரணத்திற்கு, பொருத்தம் பார்க்கும் இருவரும் (ஆண் மற்றும் பெண் ஜாதகத்தில்) தேவ கணம் என்று தெரிகிறது. அருமையாக தானே பொருந்துகிறது என சேர்த்துவைத்தால், பின்னர் இருவருக்கும் பிரிவினை ஏற்படுகிறது. காரணம் பெண்ணின் ஜாதகத்திலோ அல்லது ஆணின் ஜாதகத்திலோ அல்லது இருவரின் ஜாதகத்திலோ செவ்வாய் , ராகு இணைவு உள்ளது. ஆணாக இருப்பின் கர்வம் மிகுந்தும், முரட்டு குணமும் இருக்க வாய்ப்பு அதே சமயம் பெண்ணிற்கு பிடிவாத குணம் நிறைய இருக்கும். இது இந்த தம்பதியரைப் பிரித்துவைக்கும். அதனால் தான் வெறும் நட்சத்திர பொருத்தம் தவிர கிரக பொருத்தமும் காண்பது சிறந்தது. 3. தம்பதியரில் ஏற்படும் பொறுமை இழப்புதொன்றுதொட்டு வரும் திருவாதிரைத் திருநாள்…
தமிழர்களுக்கு மாதந்தோறும் பண்டிகைகள்தான். பொங்கல், மாட்டுப் பொங்கல், கன்னிப் பொங்கல், திருவள்ளுவர் திருநாள், வைகாசி விசாகம், ஆனித் திருமஞ்சனம், ஆடிப்பெருக்கு, ஆவணி அவிட்டம், கிருஷ்ண ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜயதசமி, தீபாவளி, திருக்கார்த்திகை தீபம் உள்ளிட்ட ஏராளமான பண்டிகைகள் உள்ளது. அதில்,சில பண்டிகைகள் மிகவும் பிரசித்தி பெற்றது. அதில், மார்கழி மாதம் வரக்கூடிய திருவாதிரை திருநாள் முக்கியமானதாகும். மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரமும், பெளர்ணமியும் சேரும் திருநாள் திருவாதிரை திருநாள் ஆகும். திருவாதிரைப் பண்டிகை தென்னிந்திய சைவர்களால் கொண்டாடப்படுகின்றது. அனைத்து சிவாலயங்களிலும் உறையும் சிவபெருமானுக்கும், தியாகராஜர், நடராஜப் பெருமானுக்கும் திருவாதிரை அன்று விசேஷமாக ஆறு கால பூஜைகளும், அபிஷேகங்களும் செய்யப்படும். முடிவில், கூடியிருக்கும் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலிப்பார். இதை ஆரூத்ரா தரிசனம் என்பர். ஐம்பூதங்களில் ஆகாசத்தலமான சிதம்பரம் ஷேத்திரத்திலும், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியிலும் திருவாதிரை திருநாள் ஆண்டுதோறும் மிகப் பெரும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. (இந்த ஆண்டு கரோனா தொற்றால் நடத்தப்படவில்லை.) சிதம்பரத்தில் அஷ்ட மூர்த்திகள் காட்சியளிப்பது போலவே, மன்னார்குடி தேரடி, ராஜகோபால சுவாமி கோயில் முன்பு, அஷ்டமூர்த்திகளும் அலங்காரக் கோலத்தில் வரிசையாக நிறுத்தப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிப்பார்கள். திருவாதிரை நாளன்று வீடுகளில் பெண்கள் நோன்பிருந்து களியும், கூட்டும் சமைத்து கடவுளுக்கும் படைத்து வழிபடுவர். அன்று சிவபெருமான் களியும், கூட்டும் சாப்பிட்டு களியாட்டம் ஆடி, கூடி நின்ற பக்தர்களுக்கு தில்லை மூவாயிரவர் எனப்படும் சிவனடியார்க்கு தரிசனம் கொடுத்ததாக ஐதீகம். திருவாதிரை நாளன்று சிவபெருமானுக்கு படைத்த களியை பிரசாதமாக உண்ணுவதில் பெண்களுக்குத்தான் முன்னுரிமை. கடவுள் எதிரில் ஒரு வாழையிலையையும், வீட்டிலுள்ள கட்டுக் கிழத்தியாருக்கும், கன்னிப் பெண்களுக்கும் வாழையிலைகள் போடப்பட்டு, இலை நுனியில் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் வைப்பர். கடவுளுக்கு நிவேதனம் செய்து அப்படியே பெண்களும் தங்களது இலைகளுக்கு நீர் சுற்றி களி நிவேதனம் செய்து வணங்கி சாப்பிடுவர். சாப்பிட்டு முடித்த பின் தங்களின் கணவரை அழைத்து வணங்கி ஆசி பெறுதல் மரபு. பிறகு வீட்டில் உள்ள ஆண்களுக்கு பிரசாதம் பரிமாறப்படும். திருவாதிரைக் களி பிரசாதம் சாப்பிட்டால் மிகவும் விசேஷமாகும். திருவாதிரைக் களியை திருடியாவது தின்ன வேண்டும் என்று ஒரு வழக்கு (பழமொழி) இருக்கிறது. இந்த சிறப்பு மிகுந்த களியை எப்படி சமைப்பது என்று சிலருக்கு தெரிய வாய்ப்பில்லை. அதனால் களி செய்வதின் செயல்முறையைப் பார்ப்போம். களி செய்யத் தேவையான பொருட்கள் பச்சரிசி, வெல்லம் தூளாக்கியது. துவரம் பருப்பு, தேங்காய் துருவல், ஏலக்காய், முந்திரி, திராட்சை, கனிந்த பூவன் வாழைப்பழம், பச்சை கற்பூரம், நெய் ஆகியவைகளை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.மாா்கழி வழிபாடு-2: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 2) செய்முறை அரிசியை சிவக்க வறுத்து நொய் (குருணை)யாகப் பொடியாக்க வேண்டும். துவரம் பருப்பையும் சிவக்க வறுக்க வேண்டும். அடி கனமான பாத்திரத்தில் தேவையான அளவுக்கு தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றி, துவரம் பருப்பையும் அதில் போட்டு கொதிக்க விட வேண்டும். தண்ணீர் கொதித்ததும் தேவையான உப்பைப் போட்டு, அரிசி நொய்யை கொஞ்சம் கொஞ்சமாகத் தூவி…
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 23 மாரி மலைமுழஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப் போதருமா போலேநீ பூவைப்பூ வண்ணாஉன் கோயில் நின் றிங்ஙனே போந்தருளிக் கோப்புடைய சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த காரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய். பாடியவர் – பவ்யா ஹரி விளக்கம்: சிங்கமென எழுந்து சிம்மாசனத்தில் அமர்ந்து தங்களின் கோரிக்கையைச் செவிமடுக்க வேண்டுமென்று நோன்பியற்றும் பெண்கள் விண்ணப்பிக்கும் பாசுரம். “மழைக் காலத்தில் மலைக் குகைக்குள்உறங்குகிற சிங்கம், மழை முடிந்தவுடன் கண்களை உருட்டி விழித்து, பிடரி குலுங்கும்படிச் சிலிர்த்து, உதறி எழுந்து, முதுகை நீட்டி நிமிர்த்தி, குகையை விட்டு வெளியில் வரும். அந்தச் சிங்கம் போல் நீயும் புறப்பட்டு வா கண்ணா! காயாம்பூ வண்ணனே, சிங்கம் போன்றே நீயும் எழுந்தருளி, உன்னுடைய சிம்மாசனத்தில் அமர்ந்து, நாங்கள் எதற்காக உன்னைக் காண வந்திருக்கிறோம் என்பதை விசாரித்து அருள வேண்டும்’ என்று பிரார்த்திக்கிறார்கள். பாசுரச் சிறப்பு: எம்பெருமானுக்குச் சிங்கம் உவமையாகக் காட்டப்பெறுகிறது. மழைக் காலத்தில் குகைக்குள் அடைப்பட்டிருக்கும் காட்டு அரசனான சிங்கம், மழை முடிந்தவுடன் தன்னுடைய காட்டின் நிலையை அறிவதற்காக வேகமாக எழுந்து வருமாம். அதுபோல், உறக்க குகையிலிருந்து கண்ணன் எழுந்து வரவேண்டும் என்பது பிரார்த்தனை. சிங்கம் இரு பக்கமும் தலையைத் திருப்பித் திருப்பிப் பார்த்தவாறே நடக்கும். அதுபோல், “காத்திருக்கும் எங்களைப் பார்த்தவாறே வரவேணும்’ என்னும் ஆதங்கம். பூவைப்பூ என்பது காயாம்பூ; கருநீல மலர். “யாம் வந்த காரியம் ஆராய்ந்து’ } அதிகாலைப் பொழுதில், ஒருவரையொருவர் எழுப்பி, தூயவர்களாய் வந்து, கோயில்}வாயில் காப்பவரைப் பணிந்து, நந்தகோபன், யசோதை, பலராமன், நப்பின்னை என்று பெரியோர் பலரின் துணைகொண்டு வந்திருக்கிறோமே, எங்களின் இத்தனை முயற்சிகளையும் மனத்தில் கொண்டு அருள வேண்டும். முதல் பாசுரத்தில் “யசோதை இளஞ்சிங்கம்’ என்பது, இப்பாசுரத்தில் “சீரிய சிங்கம்’ஆனதை எண்ணி மகிழலாம். ஸ்ரீமாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி – பாடல் 3 கூவின பூங்குயில் கூவின கோழிஅதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் திரிகோண அதிபதிகள் குருகுகள் இயம்பின இயம்பின சங்கம் ஓவின தாரகை ஒளியொளி உதயத் தொருப்படு கின்றது விருப்பொடு நமக்குத் தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய் திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே! யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே! பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன் பாடியவர்கள் – ஆலவாய் அண்ணல் தேவாரப் பாடசாலை மாணவர்கள் விளக்கம்: உதயத்தின் அடையாளங்கள் காட்டப் பெறுகின்றன. “குயில்கள் கூவிவிட்டன; கோழிகளும் நாரைகளும் இன்னும் பல பறவைகளும் ஒலி எழுப்பத் தொடங்கிவிட்டன. திருக்கோயில்களில் சங்கநாதம் ஒலிக்கிறது. நட்சத்திரங்கள் ஒளி மழுங்கிவிட்டன. கதிரவனுடைய ஒளி ஒருங்கிணைந்து நிகரின்றித் தோன்றுகிறது. எவ்வளவு அறிவாளியாக இருந்தாலும், அத்தகைய பேரறிவுக்கும் அரிதானவனே, அன்பினால் எங்களுக்கு எளிதாகக் கிட்டுபவனே, பெருங்கருணையோடு உன்னுடைய திருவடிகளை எமக்குக் காட்டி அருள வேண்டும்’ என்னும் விண்ணப்பம் உரைக்கப்படுகிறது. பாடல்…