வைகுந்த ஏகாதசி பகல் பத்து 10-ஆம் திருநாளான் வியாழக்கிழமை மோகினி அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள். ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் வைகுந்த ஏகாதசி பெருவிழாவின் பகல்பத்து 10 ஆம் நாளான வியாழக்கிழமை காலை நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். விலங்கு தோஷங்கள் நீங்க… விழாவையொட்டி காலை 6 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் புறப்பட்டு காலை 7 மணிக்கு பகல்பத்து மண்டபமான அா்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினாா். அங்கு அலங்காரம், அமுது செய்யத் திரையிடப்பட்டு காலை 8 மணி முதல் பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று முகக் கவசம், சமூக இடைவெளியுடன் நம்பெருமாளைத் தரிசித்து வருகின்றனர். இரவு 8 மணிக்கு மேல் பக்தா்களுக்கு அனுமதியில்லை. வைகுந்த ஏகாதசி பகல்பத்து 10-ஆம் நாளான வியாழக்கிழமை முத்துக்குறி அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள். நன்றி Hindu இந்த ராசிக்காரர்களுக்கு தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் வரும்: புரட்டாசி மாத பலன்கள்
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 8 கீழ்வானம் வெள்ளென் றெருமை சிறுவீடு மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும் போவான்போ கின்றாரைப் போகாமல் காத்துன்னைக் கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால் ஆவாவென் றாராய்ந்து அருளேலோர் எம்பாவாய்! பாடியவர் பவ்யா ஹரி விளக்கம்: இப்பொழுது எழுப்பப்படுபவள், கண்ணனுக்கு மிகவும் பிடித்தமானவள்; எப்போதும் உற்சாகமாக இருப்பவள். “கீழ்த்திசை வானம் வெளுத்துவிட்டது. பால் கறப்பதற்கு முன்னர், எருமை மாடுகளை ஆயர்கள் அவிழ்த்து விட்டுள்ளனர். அம் மாடுகள், ஆங்காங்கே உள்ள சிறு புல்லை மேய்கின்றன. நோன்புக்குப் புறப்பட்டுவிட்ட பிற பெண்கள், நோன்புக்களம் நோக்கிச் செல்கின்றனர். அவர்களைத் தடுத்து உன்னையும் அழைத்துப் போவதற்காக வந்தோம். பதுமை போன்றவளே, எழுந்திரு. நோன்பியற்றி, குதிரையின் வாயைப் பிளந்தவனை, மல்லர்களோடு போரிட்டு வென்ற தேவாதி தேவனை நாம் வழிபட்டால், நமக்கு என்னவேண்டும் என்பதை ஆராய்ந்து அவன் அருள்வான்’ என்று அழைக்கிறார்கள். பாசுரச் சிறப்பு: பொழுது விடிவதற்கான அடையாளங்களாகப் பறவைகளின் ஒலி, திருக்கோயில் சங்கநாதம், முனிவர்களும் யோகிகளும் இறைவன் திருநாமம் கூறும் மிடற்றொலி, இல்லங்களில் பெண்கள் நடமாடும் ஒலி ஆகியவற்றைக் காட்டிய ஆண்டாள், இப்பாசுரத்தில் எருமைகளின் நுனிப்புல் மேய்தலைக் காட்டுகிறாள். இடையர்கள், அதிகாலை நுனிப்புல் மேய்வதற்காக மாடுகளை விடுவார்கள். அருகிலிருக்கும் புல்வெளியில் சிறிது பொழுதே கிடைக்கும் அவகாசம் இது. நாள் முழுதும் மேய்ச்சல் காட்டில் கிடைப்பது பெருவிடுதலை என்றால், இதைச் சிறு விடுதலை (வீடு=விடுதலை) என்று மாடுகள் நினைக்குமாம். உள்ளுறைப் பொருளில், எம்பெருமானாலேயே “நம்முடையவர்’ என்று பிரியம் காட்டப்பட்டவரும் கலிக்கு விடியலாகத் தோன்றியவருமானநம்மாழ்வாரை இப்பாசுரம் சுட்டுகிறது. அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – பாடல் 8 கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்கர்மாவின் ஆபத்தான முகங்களும் ஜாதகம் காட்டும் அறிகுறிகளும்! ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும் கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ? வாழியீ தென்ன உறக்கமோ வாய்திறவாய்! ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ? ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை ஏழைபங் காளனையே பாடேலோ ரெம்பாவாய். பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன் பாடியவர் – மயிலை சற்குருநாதன் பாடியவர் – சுந்தர் ஓதுவார் விளக்கம்: சிவபெருமான் பெருமையைப் பாடிக்கொண்டு வந்து புறத்தே நிற்கும் பெண்கள், இப்பொழுது, விடியலின் அடையாளங்களைக் கூறத் தொடங்குகிறார்கள். “வீட்டில் வளர்க்கும் கோழிகள் கூவுகின்றன. குருகுகள் (நாரைகள்) உள்ளிட்ட பிற பறவைகளும் ஒலி எழுப்புகின்றன. மக்களும் விழித்தெழுந்து, திருக்கோயில்களை அடைந்து மங்கலக் கருவியாம் நாகஸ்வரத்தையும் வெண்சங்குகளையும் இசைக்கிறார்கள். ஒப்பற்ற பேரொளியே, ஒப்பற்ற பெருங்கருணையே, ஒப்பற்ற விழுப்பொருளே என்றெல்லாம் வாயார இறைவன் பெருமையைப் பாடுகிறோம். எந்த ஓசைக்கும் நீ எழவில்லையென்றால், இதென்ன பேருறக்கமோ புரியவில்லையே! ஊழிக்காலத்தில் முழு முதல்வனாகவும் மாதொருபாதியனாகவும் திகழ்கிற பெருமானை நாங்கள் பாடுகிறோம். ஒருவேளை இவ்வாறு கிடப்பதுதான் இறைவன் மீது நீ வைத்திருக்கும் அன்போ?’ என்று வினா…
ஒரு மனிதன் என்றும் இளமையாக, திடமாக, ஆரோக்கியமாக இருக்க உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், புரதம், கார்போஹைட்ரேட்கள், தாது உப்புகள், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கொழுப்பு, சர்க்கரை சரியான விகிதாச்சாரத்தில் இருக்க வேண்டும். முக்கியமாக இவற்றில் கெட்ட கொழுப்பை அதிக்கப்படுத்தும் கார்போஹைட்ரேட் உணவுகள் உண்ணுவதால் உடல் பருமன் கூடும். உடல் எடை கூடுவதால் மனம் மற்றும் உடலில் சுலபமாக நோயின் தாக்கம் ஏற்படுத்தும். இதனால் ஒருவர் எந்த செயலையும் சீராக செய்ய முடியாது. ஆண்களை விட பெண்களுக்குகே இந்த பிரச்னை அதிகம் ஏற்படுத்தும். உடலில் முக்கியமாகப் பெருத்த வயிறு என்பது நோயின் தாக்கம் அதிகமாகும். ஜோதிட ஆராய்ச்சியில் ஒருவரின் உடல் பருமனாக இருக்க கிரகங்களோடு பாவங்களையும் பார்ப்போம். உடல்வாகு, நிறம், குணம் அனைத்தும் லக்கினாதிபதி மற்றும் அங்குள்ள கிரகங்களைக் கொண்டு சொல்லப்படும். அவற்றில் உடல் என்று கூறப்படும் சந்திரன் அதி முக்கியமாகும். இந்த பிரபஞ்சத்தில் சந்திரன், சுக்கிரன் ராகுவின் கலியாட்டத்தில் ஒருவருக்கு பேராசை, பணம் மற்றும் ஆடம்பர மோகத்தில் உடலின் ஆரோக்கியத்தைத் தவற விட்டுவிடுகிறோம். இலை போட்டு நிதானமாக வீட்டுச் சாப்பாட்டைச் சாப்பிடும் காலம் போய், நின்றபடியே பரோட்டா, பர்கர், பக்கெட் பிரியாணி, பானிபூரி என்று காலம் தவறி சாப்பிடுவது என்பது வழக்கமாகிவிட்டது. படிக்க: ஜோதிட ரீதியான பரிகாரங்களை எப்போது செய்ய வேண்டும்? இந்த கலிகாலத்தில் சிலசமயம் ஜாதகரின் கிரகங்களின் செயலையே திணற வைக்கிறது. ஒருசிலரே தங்கள் உடல் சீராக இருக்க BMI (உடல் நிறை குறியீட்டெண்), சரியான முறையில் வைத்திருப்பார்கள். ஜாதகத்தில் கட்டுக்கோப்பாக இருந்தாலும் இடத்திற்கு ஏற்ப உணவு பழக்கவழக்கத்தில், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தங்கள் உடல் பருமனாக மாறுபடும். முக்கியமாக திருமணம் ஆன பெண்கள், குழந்தை பெற்ற பெண்கள் எளிதில் உடல் பருமனை நோக்கிச் சென்றுவிடுகிறார்கள். இது அவரவர் தசை புத்திக்கு ஏற்ப மாறுபடும். குரு எங்கு தொடர்பு கொள்ளுகிறாரோ அங்கு உள்ள பாவ அடிப்படையில் அந்த பாகம் மட்டும் பெருத்துக் காணப்படும். ஓபிசிட்டி எதனால் என்று ஆராயும்பொழுது ஒரே நாற்காலியில் ஸ்திரமாக அமர்ந்து வேலை செய்வது, உணவுப் பழக்கம், சரியான தூக்கமின்மை, மரபணு முறைப்படி, திருமணத்திற்குப் பிறகு ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மை என்று பல்வேறு வகையில் பிரிக்கப்படுகிறது. நீர் கிரகங்களான சந்திரன் சுக்கிரன் மற்றும், குரு (கொழுப்பு கிரகம்) அவற்றோடு ராகு சேரும்பொழுது அதிகப்படியான உடல் வளர்ச்சியை ஏற்படுத்தும். பஞ்ச பூதத்தில் உள்ளடங்கிய நீர் மற்றும் ஆகாய தத்துவ கிரகங்களின் காரகத்துவத்தை கட்டுப்படுத்தினால் உடலின் அளவு குறைக்கப்படும். உடலுக்கு ஏற்ப வெப்ப கிரகங்களான சூரியன் செவ்வாயின் உஷ்ணத்தால் நீர் வெளியேறும்பொழுது உடல் எடை குறைக்கப்படலாம். அதாவது சூட்டு தன்மை கொண்ட உணவு வகைகளுடன், பச்சைக் காய்கறிகள், நல்ல கொழுப்பு கொண்ட உணவுகள், இயற்கை சர்க்கரை கொண்ட காய்கறிகளை உட்கொள்ளலாம். உடல் கட்டுக்கோப்பாக இருக்க சனி மற்றும் கேது கிரக செயல்களும் உதவியாக இருப்பார்கள். அதாவது இரும்பு பொருள்களை கொண்டு உடற்பயிற்சி, தியானம்/யோகா, சமபங்கு தூக்கம் என்று அனைத்து…
குழந்தை பாக்கியத்தைப் பற்றி ஒவ்வொன்றாகப் பார்ப்போம்… முதலில் ஒருவர் திருமணம் ஆன பின்னர், திருமணம் செய்து வைத்த பெற்றோர், ஜோதிடரிடம் முதலில் கேட்பது.. எனது மகன் / மகளுக்கு எத்தனை குழந்தைகள்? குழந்தை எப்போது பிறக்கும்? இதுபோன்று நிறையக் கேள்விகள் கேட்பார்கள். அதேபோல் தான் காதல் திருமண தம்பதியினரும், தமது விருப்பம் திருமணத்தில் நிறைவேறினாலும் அடுத்து குழந்தையைப் பற்றிய கவலை சூழ்ந்துகொள்ளும். “எப்படிப்பட்ட” என்பதில் இருவேறு கேள்விகள் உள்ளது. முதலில் இயற்கை முறையில் குழந்தை பிறப்பா? அல்லது செயற்கை முறையில் குழந்தை பிறப்பா? என்பது அடுத்தது, அப்படிப் பிறக்கும் குழந்தை அதன் குண நலன்களில் எப்படிப்பட்டதாக இருக்கும்? என்பது. ஜாதகருக்கு எத்தனை குழந்தைகள்? ஒருவரின், ராசி சக்கரத்தில், லக்கினத்திற்கு 5ஆம் அதிபதி யாரோ, அவர் நவாம்சத்தில் எந்த வீட்டில் இருக்கிறார் எனக் குறிப்பெடுத்துக் கொள்ளவும். அந்த வீட்டை முதலாவதாக, ராசி சக்கரத்தில் கொண்டு, லக்கினம் வரும் வரை எண்ண, எத்தனை கிரகங்கள் வருகிறதோ, அத்தனை குழந்தைகள் எனக் கொள்ளலாம். அதில் ஆண் கிரகங்களான செவ்வாய், குரு, சூரியன் மற்றும் ராகு இருப்பின் அத்தனை ஆண் குழந்தைகள் என்றும், பெண் / அலி கிரகங்களான சந்திரன், புதன், சுக்கிரன், சனி, கேது இருப்பின் அத்தனை பெண் குழந்தைகள் என்றும் அறியலாம். இதில் மாந்தி இருப்பின், அது ஒரு கருச் சிதைவையோ அல்லது பிறந்து இறத்தலையோ உணர்த்தும். இன்னும் துல்லியமாகக் கூறப்போனால், மேற்சொன்ன கிரகங்கள் பெற்ற சாரம், பிறக்கும் குழந்தைகளின், ஆண் / பெண் வாரிசைப் பற்றி நன்கு உணர்த்தும். இதில் தம்பதிகள் இருவருக்கும் ஒன்றாக வந்தால், நிச்சயமாக நமது கணிப்பு தப்பாது. ஆனால், ஒருவருக்கு வரும் கிரகங்கள் 3 என்றும் மற்றவருக்கு இரண்டும் என்றும் வந்தால், நிச்சயம் 2 குழந்தைகள் உண்டு எனலாம். ஆனால், அதற்கடுத்து பிறக்கும் குழந்தையோ அல்லது முதல் குழந்தைக்கும் அடுத்துப் பிறக்கும் குழந்தைக்கும் இடையிலோ, கருவிலேயே சிதைவு ஏற்படவோ அல்லது பிறந்து உடனே இறக்கவோ நேரிடும். ஆக மொத்தம் இரண்டு குழந்தைகள் நிச்சயம் உண்டு எனலாம். இப்படிப்பட்ட குறைந்த எண்ணிக்கையில் (ஒன்று அல்லது இரண்டு மட்டும் தான்) வருகிறபோது, அந்த தம்பதியினருக்கு, ஒரு ஜோதிடர், குழந்தை பிறப்பைத் தள்ளியோ அல்லது வேண்டாம் என்றோ செய்துவிடாதீர்கள் என எச்சரிக்கை செய்வார். ஏனெனில் ஒரு சிலருக்கு ஒரு குழந்தை தான் என இருக்கும் போது, அதனை உதாசீனப்படுத்துவார்களானால், அவர்களுக்கு அடுத்து குழந்தை பாக்கியம் பெறுவது மிகவும் கேள்விக்குறியாகிவிடும். இதில் எச்சரிக்கை அதிகம் தேவை. இது ஒரு ஜோதிடம் மூலம் பெறும் அனுமானமே.. ஏனெனில் பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை. ஜோதிடம் ஒரு முன்னெச்சரிக்கை / வழிகாட்டி தானே தவிர, முற்றும் உணர்த்தும் நிலை இல்லை. அதோடு, ஜோதிடர் ஒரு படைக்கும் தொழில் செய்யும் பிரம்மாவும் இல்லை. சிலருக்கு, ஜோதிட ரீதியாகப் பிள்ளைகள் இல்லை என அறிந்து சொன்ன ஜாதகருக்கு, தகுந்த பரிகாரங்கள் மற்றும் இறை…
தம்பதியருக்குள் ஏற்படும் பிரிவினையை, திருமணப் பொருத்தம் கூறுமா? என்றால் நிச்சயமாகத் தெரிய வரும் என்றுதான் கூற முடியும். தம்பதியருக்குள் ஏற்படும் பிரிவினையை, திருமணப் பொருத்தம் கூறுமா? என்றால் ஆம்! நிச்சயமாகத் தெரிய வரும் என்றுதான் கூற முடியும். அதற்கு பல விதிகள் ஜோதிடத்தில் இருந்தாலும், தோஷ சாம்யம் எனும் தோஷ அளவீடுகளை அறிந்து, முன்னரே அறிந்துகொள்ள முடியும். இதனை நமது ஜோதிட பிதாமகர்கள், மஹா கவி காளிதாசரும் அற்புதமாக தெளிவுபடுத்தியுள்ளனர். பிரிவினைக்கான காரணங்கள்: – 1. விஷ கன்னிகா தோஷம் இது பலவிதம்… அதாவது, செவ்வாய்- சனி சேர்க்கை, செவ்வாய்-சனிக்கு இடையில் எந்த கிரகமும் இல்லாதிருப்பது. திருமண யோகத்தைத் தடுத்து நிறுத்தும் ஒரு கிரக அமைப்பாகும். இதனால் குழந்தை பிறப்பு பாதிக்கப்படுகிறது. குழந்தை பிறந்ததும் நிம்மதி பாதிக்கும். மறுமணம் ஏற்படும் சூழல் உருவாகும். இந்த சூழலில் மற்றவர்கள், இவர்களின் வாழ்வில் இணைந்து விடுகிறார்கள். 2. தம்பதியருள் ஏற்படும் அகந்தை பொதுவாக லக்கினாதிபதி தான் ஒருவருக்கு அகந்தையைத் தருபவர். இப்படிப்பட்ட நிலையில் அகந்தை அதிகமாகும்போது தம்பதியருள் பிரிவினை ஏற்படுகிறது. ஒருவரின் லக்கின அதிபதி மற்றவர் ஜாதகத்தில் பலவீனமானால், அவரை இவர் மதிக்க மாட்டார். அதேபோல் ஒருவரின் ஏழாம் அதிபதி அடுத்தவர் ஜாதகத்தில் பலவீனமானால், இவர் அவரை மதிக்கமாட்டார். இதனை, சர்வாஷ்டக வர்க்க பரல்களும் எடுத்துரைக்கும். அதாவது லக்கினத்தில் பெற்ற பரல்களின் எண்ணிக்கை 7 ஆம் இடத்தின் பரல்களை விட அதிகமாக இருப்பின் ஜாதகர் தமது வாழ்க்கை துணைவரை அடக்கி ஆள நினைப்பார். அதே சமயம் ஒருவரின் ஜாதகத்தில் 7 ஆம் இடத்து பரல்கள் லக்கின பரல்களைவிட அதிகமாக இருப்பின், வாழ்க்கை துணைவரின் கட்டுப்பாட்டில் ஜாதகர் இருப்பார். இது ஆண் – பெண் இருபாலருக்கும் அதாவது கணவன், மனைவி ஜாதகத்திற்கும் பொருந்தும். இதனை இன்னமும் விரிவாக காணும் போது, மனைவியின் ஜாதகத்தின் லக்கின அதிபதி கணவரின் ஜாதகத்தில் நீசமாக இருப்பின், மனைவி கணவரின் மீது உயிரையே வைத்திருந்தாலும், கணவர் மனைவியைத் துளியும் மதிப்பதில்லை என்பதை காண முடிகிறது. அதேபோல் கணவரின் லக்கினாதிபதி மனைவியின் ஜாதகத்தில், நீச்சமாகும் போது கணவர் மனைவியின் மீது உயிரையே வைத்திருந்தாலும், மனைவி, கணவரை எவ்வளவு தரக்குறைவாக நடத்த வேண்டுமோ அவ்வளவு தரக்குறைவாக நடத்துகிறார். உதாரணத்திற்கு, பொருத்தம் பார்க்கும் இருவரும் (ஆண் மற்றும் பெண் ஜாதகத்தில்) தேவ கணம் என்று தெரிகிறது. அருமையாக தானே பொருந்துகிறது என சேர்த்துவைத்தால், பின்னர் இருவருக்கும் பிரிவினை ஏற்படுகிறது. காரணம் பெண்ணின் ஜாதகத்திலோ அல்லது ஆணின் ஜாதகத்திலோ அல்லது இருவரின் ஜாதகத்திலோ செவ்வாய் , ராகு இணைவு உள்ளது. ஆணாக இருப்பின் கர்வம் மிகுந்தும், முரட்டு குணமும் இருக்க வாய்ப்பு அதே சமயம் பெண்ணிற்கு பிடிவாத குணம் நிறைய இருக்கும். இது இந்த தம்பதியரைப் பிரித்துவைக்கும். அதனால் தான் வெறும் நட்சத்திர பொருத்தம் தவிர கிரக பொருத்தமும் காண்பது சிறந்தது. 3. தம்பதியரில் ஏற்படும் பொறுமை இழப்புவரலட்சுமி விரதம்: பூஜை செய்யும்…
மேஷ ராசி (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய) ஜோதிடர் கே.சி.எஸ். ஐயர், தினமணி மேஷ ராசிக்கான ராகு – கேது பெயர்ச்சி பலன்களை கணித்து வழங்கியுள்ளார். 17.03.2022 முதல் 11.07.2022 வரை உள்ள காலகட்டத்தில் மனதிலிருந்த பயங்கள் அனைத்தும் படிப்படியாக மறையத் தொடங்கும். புத்துணர்ச்சியுடன் காரியமாற்றத் தொடங்குவீர்கள். செய்தொழிலை புதிய இடங்களுக்குச் சென்று விரிவுபடுத்துவீர்கள். பரந்த மனதுடன் செயல்பட்டு மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள். இதனால் தன்னம்பிக்கையும், வளைந்து கொடுக்கும் தன்மையும் அதிகரிக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கூடுதல் பணவரவும் கிடைக்கும். எதிர்மறை எண்ணங்களுக்கு அடிமையாக மாட்டீர்கள். உற்றார் உறவினர்களுடன் விட்டுக் கொடுத்து நடந்துகொண்டு உறவுகளைப் புதுப்பித்துக் கொள்வீர்கள். தாய்வழி உறவினர்கள் மூலம் ஆதரவான சூழல் அமையும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் மூலம் உங்கள் திறமைகள் வெளிப்படும். பயணங்கள் மூலம் முன்னேற்றகரமான வாய்ப்புகள் ஏற்படும் காலகட்டமிது என்றால் மிகையாகாது. 12.07.2022 முதல் 06.02.2023 வரை உள்ள காலகட்டத்தில் எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்குவீர்கள். குடும்பத்தில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். சமூகத்தில் உயர்ந்தவர்களின் நட்பைப் பெற்று அவர்கள் உதவியுடன் செயற்கரிய விஷயங்களையும் சுலபமாக செய்து முடித்து விடுவீர்கள். நண்பர்களிடமும் நிதானமாகப் பழகுவீர்கள். பொருளாதாரம் படிப்படியாக உயரும். புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். பழைய நண்பர்களைக் கண்டு மகிழ்வீர்கள். 07.02.2023 முதல் 28.11.2023 வரை உள்ள காலகட்டத்தில் அரசு சம்பந்தமான செயல்பாடுகளில் இருந்த தடைகள் அகலும். வங்கிகளிடமிருந்து எதிர்பார்த்த கடன் கிடைத்து தொழிலை விரிவுபடுத்துவீர்கள். ஆராய்ச்சி, தத்துவ விஷயங்களில் தேடல் அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகள் தானாகவே மறைந்துவிடும். உடன் பிறந்தோரின் தேவைகளை அவர்கள் கேட்காமலேயே பூர்த்தி செய்வீர்கள். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். சிலர் அசையும், அசையாச் சொத்துகளை வாங்குவார்கள். அனைத்துச் செயல்களையும் நன்கு சிந்தித்து திட்டமிட்டு செயல்படுத்தி வெற்றி பெறுவீர்கள். நீண்ட நாள்களாக சந்திக்க விரும்பிய நண்பர்களைச் சந்திப்பதற்கான சூழ்நிலைகள் உருவாகி உங்கள் பெயர், புகழ், அந்தஸ்து, கெüரவம் உயரும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 11) உத்தியோகஸ்தர்களுக்கு இந்த ராகு, கேது பெயர்ச்சியில் பணவரவுக்குத் தடைகள் இராது. அலுவலக வேலைகளை முன்கூட்டியே செய்து முடித்து மேலதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பீர்கள். சில நேரங்களில் சக ஊழியர்களால் சில இடையூறுகளைச் சந்திக்க நேரிடும். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் நீங்கும். மனதில் உற்சாகம் பெருகும். போட்டிகள் குறையும். வாடிக்கையாளர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். விவசாயிகள் கால்நடைகளின் மூலம் விரும்பிய பலனை அடைவீர்கள். நீர்வரத்து நன்றாக இருக்கும். தகுந்த நேரத்தில் விதைத்து, மகசூல் பெருகி, சந்தையில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். அரசியல்வாதிகள் மக்கள் நலப்பணிகளில் அதிகம் கவனம் செலுத்துவீர்கள். கட்சி மேலிடத்தில் ஆதரவு பெருகும். எதிரிகளிடம் பழகும் போது ஜாக்கிரதையாக இருக்கவும். கலைத்துறையினருக்கு அதிகமான முயற்சிகளுக்குப் பிறகு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். விருதுகளும் பாராட்டுகளும் பெற கடினமாக உழைப்பீர்கள்….
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 23 மாரி மலைமுழஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப் போதருமா போலேநீ பூவைப்பூ வண்ணாஉன் கோயில் நின் றிங்ஙனே போந்தருளிக் கோப்புடைய சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த காரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய். பாடியவர் – பவ்யா ஹரி விளக்கம்: சிங்கமென எழுந்து சிம்மாசனத்தில் அமர்ந்து தங்களின் கோரிக்கையைச் செவிமடுக்க வேண்டுமென்று நோன்பியற்றும் பெண்கள் விண்ணப்பிக்கும் பாசுரம். "மழைக் காலத்தில் மலைக் குகைக்குள்உறங்குகிற சிங்கம், மழை முடிந்தவுடன் கண்களை உருட்டி விழித்து, பிடரி குலுங்கும்படிச் சிலிர்த்து, உதறி எழுந்து, முதுகை நீட்டி நிமிர்த்தி, குகையை விட்டு வெளியில் வரும். அந்தச் சிங்கம் போல் நீயும் புறப்பட்டு வா கண்ணா! காயாம்பூ வண்ணனே, சிங்கம் போன்றே நீயும் எழுந்தருளி, உன்னுடைய சிம்மாசனத்தில் அமர்ந்து, நாங்கள் எதற்காக உன்னைக் காண வந்திருக்கிறோம் என்பதை விசாரித்து அருள வேண்டும்’ என்று பிரார்த்திக்கிறார்கள். பாசுரச் சிறப்பு: எம்பெருமானுக்குச் சிங்கம் உவமையாகக் காட்டப்பெறுகிறது. மழைக் காலத்தில் குகைக்குள் அடைப்பட்டிருக்கும் காட்டு அரசனான சிங்கம், மழை முடிந்தவுடன் தன்னுடைய காட்டின் நிலையை அறிவதற்காக வேகமாக எழுந்து வருமாம். அதுபோல், உறக்க குகையிலிருந்து கண்ணன் எழுந்து வரவேண்டும் என்பது பிரார்த்தனை. சிங்கம் இரு பக்கமும் தலையைத் திருப்பித் திருப்பிப் பார்த்தவாறே நடக்கும். அதுபோல், "காத்திருக்கும் எங்களைப் பார்த்தவாறே வரவேணும்’ என்னும் ஆதங்கம். பூவைப்பூ என்பது காயாம்பூ; கருநீல மலர். "யாம் வந்த காரியம் ஆராய்ந்து’ } அதிகாலைப் பொழுதில், ஒருவரையொருவர் எழுப்பி, தூயவர்களாய் வந்து, கோயில்}வாயில் காப்பவரைப் பணிந்து, நந்தகோபன், யசோதை, பலராமன், நப்பின்னை என்று பெரியோர் பலரின் துணைகொண்டு வந்திருக்கிறோமே, எங்களின் இத்தனை முயற்சிகளையும் மனத்தில் கொண்டு அருள வேண்டும். முதல் பாசுரத்தில் "யசோதை இளஞ்சிங்கம்’ என்பது, இப்பாசுரத்தில் "சீரிய சிங்கம்’ஆனதை எண்ணி மகிழலாம். ஸ்ரீமாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி – பாடல் 3 கூவின பூங்குயில் கூவின கோழிதிருஇடையாறு மருந்தீசர் ! குருகுகள் இயம்பின இயம்பின சங்கம் ஓவின தாரகை ஒளியொளி உதயத் தொருப்படு கின்றது விருப்பொடு நமக்குத் தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய் திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே! யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே! பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன் பாடியவர்கள் – ஆலவாய் அண்ணல் தேவாரப் பாடசாலை மாணவர்கள் விளக்கம்: உதயத்தின் அடையாளங்கள் காட்டப் பெறுகின்றன. "குயில்கள் கூவிவிட்டன; கோழிகளும் நாரைகளும் இன்னும் பல பறவைகளும் ஒலி எழுப்பத் தொடங்கிவிட்டன. திருக்கோயில்களில் சங்கநாதம் ஒலிக்கிறது. நட்சத்திரங்கள் ஒளி மழுங்கிவிட்டன. கதிரவனுடைய ஒளி ஒருங்கிணைந்து நிகரின்றித் தோன்றுகிறது. எவ்வளவு அறிவாளியாக இருந்தாலும், அத்தகைய பேரறிவுக்கும் அரிதானவனே, அன்பினால் எங்களுக்கு எளிதாகக் கிட்டுபவனே, பெருங்கருணையோடு உன்னுடைய திருவடிகளை எமக்குக் காட்டி அருள வேண்டும்’ என்னும் விண்ணப்பம் உரைக்கப்படுகிறது. பாடல் சிறப்பு: காலைப்பொழுதில்,…
தீர்க்க சுமங்கலியாக வாழப் பெண்கள் வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கின்றனர். செல்வங்களுக்கும் அதிபதியான மகாலட்சுமியின் அருள் வேண்டி செய்யப்படும் விரதம். ஒவ்வொரு ஆண்டும் ஆடி அல்லது ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமை வரலட்சுமி பூஜை நோன்பு நாளாகும். மகாலட்சுமியை தனலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தானலட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என அஷ்டலட்சுமிகளாகப் பிரித்துள்ளனர். எட்டு வகை செல்வங்களை வாரி வழங்குபவள். திருமாலின் மார்பில் குடியிருப்பவள். பெண்களுக்கே உரித்தான கருணை உள்ளம், அழகு, வெட்கம், அன்பு, புத்தி ஆகியவற்றிற்கு அதிபதியும் அவளே. வரலட்சுமி விரதம் இருப்பதால் பல நன்மைகள் கிடைக்கும். புராணக் கதைகள் சித்திரநேமி என்ற தேவகுலப் பெண் நீதிபதியாக இருந்தாள். அவள் தேவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு நடுவராக இருந்து தீர்ப்பு வழங்குவாள். ஒருமுறை அவள் பாரபட்சமாக நடந்துகொண்டதால் அன்னை பார்வதி அவளை குஷ்டரோகியாகும்படி சாபம் கொடுத்தாள். சித்திரநேமி சாபவிமோசனம் கேட்டு பார்வதியில் காலில் விழுந்தாள். வரலட்சுமி விரதத்தை கடைப்பிடித்தால் நோய் நீங்கும் என பார்வதி அருள் செய்தாள். அவள் பூலோகம் வந்து, ஒரு குளக்கரையில் அமர்ந்து வரலட்சுமி பூஜை செய்து சாபம் நீங்கப் பெற்றாள். மகத நாட்டில் வசித்த ராணி சுசந்திரா, செல்வ வளத்தின் மமதையால், மகாலட்சுமியை அவமதித்தாள். அதனால், அனைத்து செல்வங்களையும் இழந்து வருந்தினாள். சுசந்திராவின் மகள் சாருமதி, தெய்வ அனுகூலத்தால் வரலட்சுமி விரதம் பற்றி அறிந்து, அதைக் கடைப்பிடித்தாள். அதனால் மகிழ்ந்த மகாலட்சுமித் தாய், அவளுக்கு சகல நலன்களையும் அருளினாள். சுசந்திராவும் தன் மகளைப் பார்த்து வரலட்சுமி விரதம் கடைப்பிடித்து, இழந்த செல்வத்தை மீண்டும் பெற்று வளமோடு வாழ்ந்தாள். எப்படி பூஜை செய்வது? அவரவர் குடும்ப வழக்கப்படி பூஜை செய்யலாம். பூஜைக்குத் தேவையானவற்றை அருகில் வைத்துக்கொண்டு பூஜையைத் தொடங்கவும். தேவையான பொருட்கள் மஞ்சள் பொடி (பிள்ளையார் பிடிக்க), நுனிவாழை இலை, அரிசி, தேங்காய், எலுமிச்சம்பழம், குங்குமம், சந்தனம், புஷ்ப வகைகள், வெற்றிலை, பாக்கு, பழம், கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, அட்சதை, வஸ்திரம், மஞ்சள் சரடுகள், பஞ்சாமிர்தம், குத்துவிளக்கு, திரிநூல், நல்லெண்ணெய், தீப்பெட்டி, தாம்பாளம், பஞ்சபாத்ரம், கிண்ணம், கற்பூரத் தட்டு, தூபக்கால், தீபக்கால், மணி ஆகியவை. நிவேதனப் பொருள்கள் வசதிக்கேற்ப அப்பம், வடை, பொங்கல், கேசரி போன்ற நைவேத்யங்கள் படைத்து கும்பத்தில் மஞ்சள் நோன்பு கயிறுகள் வைத்து பூஜை செய்ய வேண்டும். பழ வகைகளில் ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், வாழை, திராட்சை பூஜைக்கான முன்னேற்பாடுகள்நவம்பர் மாதம் இந்த ராசிக்காரருக்கு பல நன்மைகள் உண்டாகும்: மாதப் பலன் வீட்டின் கிழக்கு திசையில் ஈசான்ய மூலையில், பூஜைக்கான இடத்தை அமைத்து, நன்றாக மெழுகி, கோலமிட்டு, மண்டபம் அமைத்து, அலங்கரிக்கவும். மண்டபத்தின் கீழ் நுனி வாழை இலையில் நெல்லைப் பரப்பி, அதன் மீது ஒரு தட்டில் அரிசியை வைக்க வேண்டும். அதன் மேல் கலச கும்பத்தை வைக்க வேண்டும். அரிசி, தங்கம், ரத்தினம் ஆகியவற்றை கும்பத்தில் நிரப்பவும் (தீர்த்தத்தையும் நிரப்பலாம்). மேலே மாவிலைக் கொத்தும் தேங்காயும்…
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 16 நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய கோயில் காப்பானே கொடித்தோன்றும் தோரண வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய் ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னனலே வாய்நேர்ந்தான் தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான் வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா நீ நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய். பாடியவர் – பவ்யா ஹரி விளக்கம்: துயிலெடை நிறைவுற்று, நோன்பின் நோக்கம் தொடங்குகிறது. நோன்பியற்றும் பெண்கள் கண்ணனுடைய இல்லத்தை அடைந்து விட்டார்கள். இது நந்தகோபனுடைய இல்லம் அல்லவா? அதையே கூறுகிறார்கள். வாயிலில் வந்து நின்று, இல்லத்திற்குள் தங்களை அனுமதிக்கும்படி வேண்டுகிறார்கள். "நந்தகோபனுடைய அரண்மனையின் காவலனே, வாயிலின் காவலனே, கதவைத் திறந்து எங்களை உள்ளே அனுமதித்துவிடு. ஆயர் சிறுமிகளான எங்களுக்குப் பரிசு தருவதாக நேற்றே கண்ணன் எங்களிடம் தெரிவித்துவிட்டான். மாயனும் மணிவண்ணனுமான அவனைத் துயிலெழுப்புவதற்காக நாங்கள் தூய்மையானவர்களாக வந்திருக்கிறோம். இல்லை இல்லை என்று உன்னுடைய வாயால் மறுக்காதே. கதவைத் திறந்துவிடு’ என்று விண்ணப்பிக்கிறார்கள். பாசுரச் சிறப்பு: முறை தெரிந்தவர்களின் துணைகொண்டு கடவுளை அணுக வேண்டும் என்பதைத் தெரிவிக்கும் பாசுரம். கண்ணனுடைய இல்லம் என்று குறிப்பிடாமல், நந்தகோபன் இல்லம் என்று குறிப்பிடுவதற்குக் காரணம் உண்டு. நந்தகோபன் மகன் என்று அறிமுகம் செய்து கொள்வதுதான் கண்ணனுக்குப் பிடிக்கும். காண்பதற்கு அழகான (மணிக்கதவம்) கதவுகள், நேயக் கதவுகளாகவும் இருக்கின்றன. கண்ணன் தோன்றிய பின்னர், ஆயர்பாடியின் அஃறிணைப் பொருள்களும்கூட அன்பு கொண்டவையாக மாறிவிட்டன. உள்ளுறைப் பொருளில், "தூயோமாய் வந்தோம்’ என்பது கடவுள் திருத்தொண்டைத் தவிர வேறெதிலும் இவர்களுக்கு விருப்பம் இல்லை என்பதைக் காட்டுகிறது. ஆண்டவனை அணுகும் நெறியில், அடியார்களையும் ஆசானையும் அணுகி, அவர்கள் வழியாகக் கடவுளை நெருங்கும் வழிமுறையைக் குறிப்பாகச் சுட்டுகிற பாசுரம். அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – பாடல் 16 முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள் என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின் மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்அம்மன் கோயில்களில் ஆடித்திருவிழா பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம் என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள் தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு முன்னி அவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே என்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய். பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன் பாடியவர்கள் : ஆலவாய் அண்ணல் பாடசாலை மாணவர்கள் பாடியவர் – மயிலை சற்குருநாதன் பாடியவர் – பொன் முத்துக்குமரன் விளக்கம்: பாவை நோன்பின் பொதுப் பயனாக மழையை வேண்டுகிற பாடல். திருப்பாவையின் நான்காவது பாடலான "ஆழி மழைக்கண்ணா’ என்னும் பாசுரத்தை ஈண்டு நினைவுகூரலாம். மழை மேகத்தைக் காண்கிறபோது, இப்பெண்களின் சிந்தனையில் அம்மையின் தோற்றம் எழுகிறது. கருநீலமாகப் புலப்படுகிற பெருங்கடலை, அப்படியே சுருக்கி வற்றச் செய்ததுபோல், வானிலுள்ள கருமேகமும் காட்சி தருகிறது. கருமேகத்தைக் கண்டால், கரிய திருமேனி கொண்டவளான அம்பிகை போன்றே தோன்றுகிறது. "எம்மை ஆட்கொள்கிற உடையாளான அம்பிகையின் நுண்ணிடை இருப்பதும் இல்லாததுமாகத் தோன்றுவதுபோல், மேகத்தின் மின்னலும் மிளிர்ந்து மறைகிறது. அடுத்து இடிக்கிற இடியோ, எங்கள் அம்மையின் திருக்கால்களில்…
சனி பகவான் நல்லவரா கெட்டவரா, அவரால் உயிருக்கு ஆபத்தா என்ற அனைத்து கேள்விகளும் மனதில் ஒருவித பயத்தை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும். முதலில் சனி பகவானை பார்த்து அச்சம் கொள்ள வேண்டாம். கர்மகாரகன் எனப்படும் சனி பகவானுக்கு பரிகாரம் என்று எடுத்துக்கொண்டால், ஒவ்வொருவரும் அவர் வழிகளான நீதி, நியாயம், கடின உழைப்பு, மற்றும் செயலில் நிதானம் என்று அவருக்கு பிடித்த செயல்களை செய்தால் ஏழரை சனி, அஷ்டம சனி, கண்டக சனி காலத்தில் பாதிப்பு அவ்வளவாக இருக்காது. அவர் ஒரு ராசிக்குச் செல்லும் முன்பு 2.5 வருடமும், ராசியில் 2.5 வருடம் அடுத்த ராசியில் 2.5 வருடம் என மொத்தம் 7.5 வருடங்கள் சனியின் பிடியில் இருக்கும் (12,1,2 பாவங்கள்). ஒரு ராசிகட்டத்தில் சுற்றிவர 30 வருடங்கள் ஆகும். ஒவ்வொரு சுற்றும் நம்மைக் கொஞ்சம் உஷராக இருக்கச் சொல்லும் காலகட்டம். சனிப் பெயர்ச்சி காலம் தங்கத்தை நெருப்பில் இட்டு, தட்டி, அழுக்கை நீக்கி, புடம்போட்டு அழகிய ஆபரணமாக மாற்றும் தன்மை பொற்கொல்லன் வேலை. பொற்கொல்லன் போல சனி பகவான் நம்மையும் புடம்போட்டு பத்தரைமாற்றுத் தங்க ஆபரணமாக மாற்றுபவன். நம் உடலில் இருக்கும் கெட்ட குணங்களை, சோம்பேறித்தனத்தையும் அறவே துவைத்து எடுத்து சலவை செய்பவர் சனி. உளியைக் கொண்டு அழகான சிற்பமாக மாற்றும் தன்மை சனி என்ற சிற்பியால்தான் முடியும். சனி என்கிற சிற்பி தன்னுடைய அழகான சிற்பம் முடிவு பெறும்வரை ஜாதகரை விடமாட்டார். சனியின் சேர்க்கை மற்றும் பார்வையானது நாம் முக்தி அடையும் வரை பின்தொடரும். இவர் என் அனுபவத்தில் சரியான ஆசிரியர் மற்றும் தகப்பன் என்று கூறலாம். முக்கியமாக சனி தசையில், ஏழரை சனி காலங்களில் வெற்றியை நோக்கி செல்லும் வழிகாட்டுவார். நாம் போகும் பாதை கடினம் தான். விதிகள் மற்றும் ஒழுங்குமுறை (Rules and regulation) வரைபடம் போட்டு அதன்படி நடக்கச் செய்வார். ஒரு மனிதனுள் குருவின் தன்மையைக் கொண்டு வரச் செய்வார். அதனால் தான் சனி தசையின் கடைசி புத்தி குரு புத்தி. ஜாதகரின் ஒரு ராசி கட்டத்தைக் கடக்கும் முதல் இரண்டு சுற்றுகள் சனி பகவான் நிலையை பார்க்க வேண்டும். அது குழந்தைப் பருவமா அல்லது மாணவ பருவமா அல்லது உழைக்கும் வாலிப பருவமா என்று பிரித்துப் பார்க்க வேண்டும். இவற்றில் குழந்தைப்பருவ காலத்தில் சனி அவ்வளவு பிரச்னையை ஏற்படுத்தமாட்டார். அதுவே மாணவர் பருவம் என்றால் படிப்பிலும் ஒழுக்கத்திலும் கவனம் தேவை. முன்னேறும் நிலை என்பது 2,3 சுற்றுகளில் வந்தால், அவர்கள் தொழிலில் கவனம், மற்றும் கடின உழைக்கும் நிலையைக் குறிக்கும். ஒருவருக்கு மூன்று மற்றும் நான்காவது சுற்று அதனோடு அஷ்டமாதிபதி தசை அல்லது மாரகத்தை தரும் தசா வந்தால் ஆயுள் பிரச்னை ஏற்படுத்தும். “சனி கொடுத்தால் அதை யார் தடுப்பார்” என்ற ஜோதிட சொற்றொடர்களுக்கு ஏற்ப உண்மையாக உழைப்பவருக்கு சனி கொடுப்பதை எந்த கிரகமும் தடுக்க முடியாது. கோச்சார சனி வரும்…
பிப்ரவரி 18 முதல் 24ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்துக்கு ஜோதிடர் கே.சி.எஸ். ஐயர் கணித்துக் கொடுத்திருக்கும் வாரப்பலன்கள். மேஷம்(அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய) புதிய வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளும் நேரமிது. எதிரிகளின் மறைமுக எதிர்ப்புகளை தைரியத்துடன் சமாளிப்பீர்கள். பூர்வீகச் சொத்துகளில் இருந்துவந்த வில்லங்கங்கள் அகலும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளைப் பகைத்துக் கொள்ளாமல் அவர்களின் அறிவுரையைக் கேட்டு நடக்கவும். வியாபாரிகள் புதிய முதலீட்டுக்கான முயற்சிகளை மறு பரிசீலனை செய்வீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சற்று சிரமத்துக்கு உரியதாக இருக்கும். விவசாயிகளுக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால் விளைச்சல் அதிகரிக்கும். சந்தையில் தானிய விற்பனையில் லாபம் சற்று சுமாராகவே இருக்கும். அரசியல்வாதிகள் நெருங்கிய நண்பர்களின் மூலம் சில இடையூறுகளைச் சந்திப்பீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வதால் மனதில் திருப்தி ஏற்படும். சக கலைஞர்களின் விருப்பத்தை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பப் பிரச்னைகளைச் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். வருமானம் பெருகும். மாணவமணிகள் சக மாணவர்களுடன் ஜாக்கிரதையாகப் பழகவும். பெற்றோர் சொல் கேட்டு நடக்கவும். பரிகாரம்: பரிக்கல் ஸ்ரீநரசிம்மரை வழிபடவும். அனுகூலமான தினங்கள்: 18, 19. சந்திராஷ்டமம்: 23, 24. *** ரிஷபம்(கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)பயணங்களால் புதிய அனுபவங்கள் கிடைக்கும் நேரமிது. உற்சாகமான மனநிலையில் இருப்பீர்கள். உழைப்பிற்குத் தகுந்த முழுமையான பலன் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். எதிலும் திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்வரும் இடையூறுகளைச் சாதுர்யமாக சமாளிக்கப் பழகிக் கொள்வீர்கள். உங்கள் முயற்சிகள் அனைத்தும் சாத்தியமாகும். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சுமுகமாக முடியும். அவசியமான செலவுகளுக்கு கடன் வாங்க நேரிடும். விவசாயிகளுக்கு திருப்திகரமான மகசூல் லாபம் கிடைக்கும். சந்தையில் போட்டிக்குத் தகுந்தவாறு விற்பனை செய்வீர்கள். கால்நடைகளால் நன்மை உண்டாகும். அரசியல்வாதிகள் செய்யும் மக்கள் நலத்திட்டங்களுக்கு மாற்றுக் கட்சியினரும் ஒத்துழைப்பு தருவார்கள். அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். பெயரும் புகழும் அதிகரிப்பதற்கான சாதனைகளைச் செய்வீர்கள். பெண்மணிகள் குடும்பத்தினருடன் வீண் வாக்கு வாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். கணவருடன் ஒற்றுமை ஓங்கும். மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்தி அதிக மதிப்பெண்களைப் பெறுவீர்கள். பரிகாரம்: நந்தீஸ்வரரை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 18, 20. சந்திராஷ்டமம்: இல்லை.***மிதுனம்(மிருகசீரிஷம் 3}ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய) மந்தமாக நடந்த காரியங்கள் சுறுசுறுப்பாக நிறைவேறும் நேரமிது. பொருளாதார நிலையில் சீரான வளர்ச்சியைக் காண்பீர்கள். உறவினர்களிடம் இருந்து வந்த மனக்குழப்பங்கள் அகல சற்று தாமதமாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகம் இருக்கும். சக ஊழியர்கள் உங்களுக்கு உதவுவார்கள். ரகசியங்களை எவரிடமும் வெளியிடாதீர்கள். வியாபாரிகள் விற்பனைப் பிரதிநிதிகளைப் பல இடங்களுக்கு அனுப்பி வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். எதிர்பார்த்த வகையில் லாபம் காண்பீர்கள். விவசாயிகள் புதிய உபகரணங்களை வாங்கி விளைச்சலைப் பெருக்கப் பாடுபடுவீர்கள். கால்நடைகளின் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகள் கட்சி மேலிடம் இட்ட பணிகளை நிறைவேற்ற நேரம் ஒதுக்குவீர்கள். கடந்த கால உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும்….
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 8 கீழ்வானம் வெள்ளென் றெருமை சிறுவீடு மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும் போவான்போ கின்றாரைப் போகாமல் காத்துன்னைக் கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால் ஆவாவென் றாராய்ந்து அருளேலோர் எம்பாவாய்! பாடியவர் பவ்யா ஹரி விளக்கம்: இப்பொழுது எழுப்பப்படுபவள், கண்ணனுக்கு மிகவும் பிடித்தமானவள்; எப்போதும் உற்சாகமாக இருப்பவள். "கீழ்த்திசை வானம் வெளுத்துவிட்டது. பால் கறப்பதற்கு முன்னர், எருமை மாடுகளை ஆயர்கள் அவிழ்த்து விட்டுள்ளனர். அம் மாடுகள், ஆங்காங்கே உள்ள சிறு புல்லை மேய்கின்றன. நோன்புக்குப் புறப்பட்டுவிட்ட பிற பெண்கள், நோன்புக்களம் நோக்கிச் செல்கின்றனர். அவர்களைத் தடுத்து உன்னையும் அழைத்துப் போவதற்காக வந்தோம். பதுமை போன்றவளே, எழுந்திரு. நோன்பியற்றி, குதிரையின் வாயைப் பிளந்தவனை, மல்லர்களோடு போரிட்டு வென்ற தேவாதி தேவனை நாம் வழிபட்டால், நமக்கு என்னவேண்டும் என்பதை ஆராய்ந்து அவன் அருள்வான்’ என்று அழைக்கிறார்கள். பாசுரச் சிறப்பு: பொழுது விடிவதற்கான அடையாளங்களாகப் பறவைகளின் ஒலி, திருக்கோயில் சங்கநாதம், முனிவர்களும் யோகிகளும் இறைவன் திருநாமம் கூறும் மிடற்றொலி, இல்லங்களில் பெண்கள் நடமாடும் ஒலி ஆகியவற்றைக் காட்டிய ஆண்டாள், இப்பாசுரத்தில் எருமைகளின் நுனிப்புல் மேய்தலைக் காட்டுகிறாள். இடையர்கள், அதிகாலை நுனிப்புல் மேய்வதற்காக மாடுகளை விடுவார்கள். அருகிலிருக்கும் புல்வெளியில் சிறிது பொழுதே கிடைக்கும் அவகாசம் இது. நாள் முழுதும் மேய்ச்சல் காட்டில் கிடைப்பது பெருவிடுதலை என்றால், இதைச் சிறு விடுதலை (வீடு=விடுதலை) என்று மாடுகள் நினைக்குமாம். உள்ளுறைப் பொருளில், எம்பெருமானாலேயே "நம்முடையவர்’ என்று பிரியம் காட்டப்பட்டவரும் கலிக்கு விடியலாகத் தோன்றியவருமானநம்மாழ்வாரை இப்பாசுரம் சுட்டுகிறது. அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – பாடல் 8 கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும் ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்12 மாதங்களிலும் திருவிழாக் காணும் அலங்காரப்பிரியன் அரங்கன் கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ? வாழியீ தென்ன உறக்கமோ வாய்திறவாய்! ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ? ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை ஏழைபங் காளனையே பாடேலோ ரெம்பாவாய். பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன் பாடியவர் – மயிலை சற்குருநாதன் பாடியவர் – சுந்தர் ஓதுவார் விளக்கம்: சிவபெருமான் பெருமையைப் பாடிக்கொண்டு வந்து புறத்தே நிற்கும் பெண்கள், இப்பொழுது, விடியலின் அடையாளங்களைக் கூறத் தொடங்குகிறார்கள். "வீட்டில் வளர்க்கும் கோழிகள் கூவுகின்றன. குருகுகள் (நாரைகள்) உள்ளிட்ட பிற பறவைகளும் ஒலி எழுப்புகின்றன. மக்களும் விழித்தெழுந்து, திருக்கோயில்களை அடைந்து மங்கலக் கருவியாம் நாகஸ்வரத்தையும் வெண்சங்குகளையும் இசைக்கிறார்கள். ஒப்பற்ற பேரொளியே, ஒப்பற்ற பெருங்கருணையே, ஒப்பற்ற விழுப்பொருளே என்றெல்லாம் வாயார இறைவன் பெருமையைப் பாடுகிறோம். எந்த ஓசைக்கும் நீ எழவில்லையென்றால், இதென்ன பேருறக்கமோ புரியவில்லையே! ஊழிக்காலத்தில் முழு முதல்வனாகவும் மாதொருபாதியனாகவும் திகழ்கிற பெருமானை நாங்கள் பாடுகிறோம். ஒருவேளை இவ்வாறு கிடப்பதுதான் இறைவன் மீது நீ வைத்திருக்கும் அன்போ?’ என்று வினா எழுப்புகிறார்கள். …
வரலட்சுமி விரதம் இந்தாண்டு ஆகஸ்ட் 08-ம் தேதி (வெள்ளிக்கிழமை) கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தாண்டு வெள்ளிக்கிழமை, வரலட்சுமி விரதம், பௌர்ணமி, திருவோண நட்சத்திரம் அனைத்தும் ஒன்றாக வருவது மிகவும் விசேஷமானது. தீர்க்க சுமங்கலியாக வாழப் பெண்கள் வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கின்றனர். செல்வங்களுக்கும் அதிபதியான மகாலட்சுமியின் அருள் வேண்டி செய்யப்படும் விரதம். ஒவ்வொரு ஆண்டும் ஆடி அல்லது ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமை வரலட்சுமி பூஜை நோன்பு நாளாகும். வரலட்சுமி விரதத்தின் புராணக் கதை சௌராஷ்டிர நாட்டின் ராணி சுசந்திரா. செல்வ வளத்தின் மமதையால் மகாலட்சுமியை அவமதித்தாள். அதனால், அனைத்து செல்வங்களையும் இழந்து வருந்தினாள். சுசந்திராவின் மகள் சாருமதி, தெய்வ அனுகூலத்தால் வரலட்சுமி விரதம் பற்றி அறிந்து, அதைக் கடைப்பிடித்தாள். அதனால் மகிழ்ந்த மகாலட்சுமித் தாய், அவளுக்கு சகல நலன்களையும் அருளினாள். சுசந்திராவும் தன் மகளைப் பார்த்து வரலட்சுமி விரதம் கடைப்பிடித்து, இழந்த செல்வத்தை மீண்டும் பெற்று வளமோடு வாழ்ந்தாள். வரலட்சுமி விரதம் வரலட்சுமி விரதத்தை யார் வேண்டுமானாலும் அனுஷ்டிக்கலாம். குறிப்பாக அந்தந்த வீட்டில் இருக்கும் சுமங்கலி பெண்கள் இதைக் கடைப்பிடிக்கலாம். திருமணமான பெண்கள், தங்கள் திருமணத்தை அடுத்துவரும் வரலட்சுமி பூஜையிலிருந்து இதை ஒவ்வொரு வருடமும் செய்ய வேண்டும். வரலட்சுமி விரதத்தின்போது வீட்டுக்கு விலக்காக இருந்தால் அடுத்துவரும் வெள்ளிக்கிழமை இந்த பூஜையைச் செய்யலாம். இதைச் செய்யும்போது, சிறு பெண்களும் உடனிருந்து சரடைக் கட்டிக் கொள்ளலாம். பூஜை முடிந்ததும் அன்றைய நாள் இரவு அம்மனுக்கு ஆலம் (குங்கும நீரில் வெற்றிலை வைத்து கற்பூரம் ஏற்றுதல்) கரைப்பது முக்கியம். கண்திருஷ்டி நீங்குவதாக ஐதீகம். எல்லோராலும் மிக விரிவாகச் செய்ய இயலாவிட்டாலும், ஈடுபாட்டோடு தெரிந்த பாடல்களைப் பாடி, மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி, பூக்களால் அர்ச்சனை செய்து, நிவேதனம் செய்து, நோன்பு சரடை கையில் கட்டி நிவேதனத்தை எல்லோருக்கும் கொடுத்து, வயதான சுமங்கலிப் பெண்களை வணங்கி தானங்கள் செய்து இந்த விரத பூஜையை நிறைவு செய்யலாம். சாஸ்திர முறைப்படி விரதமிருந்து பூஜையைச் செய்ய விரும்பினால், விக்னேஸ்வர பூஜை தொடங்கி, சங்கல்பம், கலச பூஜை, பிராணப்ரதிஷ்டை, தியானம், அங்க பூஜை, லட்சுமி அஷ்டோத்திரம், தோரக்ரந்தி பூஜை, பிரார்த்தனை, ஆரத்தி என்று விரிவாகச் செய்யலாம். பூஜைக்குத் தேவையானவை மஞ்சள் பொடி (பிள்ளையார் பிடிக்க), நுனிவாழை இலை, அரிசி, தேங்காய், எலுமிச்சம்பழம், குங்குமம், சந்தனம், புஷ்ப வகைகள், வெற்றிலை, பாக்கு, பழம், கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, அட்சதை, வஸ்திரம், மஞ்சள் சரடுகள், பஞ்சாமிர்தம், குத்துவிளக்கு, திரிநூல், நல்லெண்ணெய், தீப்பெட்டி, தாம்பாளம், பஞ்சபாத்திரம், கிண்ணம், கற்பூரத் தட்டு, தூபக்கால், தீபக்கால், மணி ஆகியவை. நிவேதனப் பொருள்கள் பொங்கல், பாயசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு. பழ வகைகள் ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், வாழை, திராட்சைராகு – கேது பெயர்ச்சி பலன்கள்: மேஷம் பூஜைக்கான முன்னேற்பாடுகள் வீட்டின் கிழக்கு திசையில் ஈசான்ய மூலையில், பூஜைக்கான இடத்தை அமைத்து, நன்றாக மெழுகி, கோலமிட்டு, மண்டபம்…
“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ” . ஜோதிடம் ஒரு முன்னெச்சரிக்கையே தவிர, முடிவு அல்ல. மருத்துவ ஜோதிடம் மற்றும் பரிகாரங்களில் புற்றுநோய் பற்றிய அனைத்தும் இக்கட்டுரையில் அறியலாம். புற்றுநோய்க்கான காரணத்தை மருத்துவத்துறை இன்னும் கண்டறியவில்லை. இது ஆரம்பக் கட்டத்தில் கண்டறியப்படவில்லை என்றால் அது மரணத்தை நோக்கித் தான் செல்லும். கீமோதெரபி மூலம் இது சில அளவுக்கு சிகிச்சை அளிக்கப்படலாம், ஆனால் மீதம் கடவுளின் கைகளில் தான் உள்ளது. கடந்த காலங்களில் பல உயிர்க் கொல்லி நோய்களுக்கு நாம் முடிவு கொடுத்திருக்கிறோம். ஆனால் கேன்சர் நோய்க்கு மட்டும் இன்னும் தீர்வு காண முடியவில்லை. சிலரின் ஜாதகத்தில் இந்த உயிர்க் கொல்லி நோய் தாக்குவதற்கான வாய்ப்பு உள்ளதைப் பற்றி அறிவதனால் நோயின் பிடிக்குள் சிக்காமல் தவிர்க்க முன் எச்சரிக்கையாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. புற்றுநோய் என்பது ஒரு குறிப்பிட்ட நோயின் பெயர் அல்ல. கேன்சர் எனும் புற்றுநோய் நமது உடலின் கட்டுப்பாடற்ற உயிரணு வளர்ச்சியை உள்ளடக்கிய நோய்களின் குழுவைக் குறிக்கிறது. புற்றுநோயில், நமது உடலின் செல்கள் பல வடிவங்களாகப் பிரிந்து, பின்னர் முற்றிலும் ஒழுங்கற்ற முறையில் வளர்ந்து, சில சமயங்களில் வீரியம் மிக்க கட்டிகளை உருவாக்குகின்றன, அவை உடலின் குறிப்பிட்ட பாகங்களின் அருகிலுள்ள செல்களுக்கு தீங்கு விளைவிக்கும் அல்லது வேறு இடங்களுக்கும் படையெடுக்கின்றன. இது நீண்ட காலத்திற்கு சிகிச்சையாக்கப்படாவிட்டால், வீரியம் மிக்க கட்டியானது நமது இரத்த ஓட்டம் அல்லது நிணநீர் மண்டலத்தின் உதவியுடன் உடலின் மற்ற தொலைதூர பகுதிகளுக்கு பரவுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் உள்ளது. இந்த நோயை சரியான முறையில் கையாண்டு சிகிச்சையளிக்க வேண்டும், ஏனெனில் இது மரணத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு வீரியம் மிக்கது. புற்றுநோயாளிகளுக்கான ஜோதிட சேர்க்கைகள் – மருத்துவ ஜோதிடம் ஜோதிடத்தில் புற்று நோயைக் கணிப்பது எப்படி? ஒரு நபர் புற்றுநோயால் பாதிக்கப்படுவாரா இல்லையா என்பதை ஜோதிடத்தின் மூலம் தீர்மானிக்க முடியும். “குணப்படுத்துவதை விட தடுப்பு சிறந்தது” என்பது பழமொழி. நம் அன்புக்குரியவர்களுக்கு புற்றுநோயின் சாத்தியத்தை புரிந்துகொள்ள முடிந்தால், நோய் கையை விட்டு வெளியேறுவதற்கு முன்பு அதைத் தடுக்கலாம். இந்த விஷயத்தில் ஜோதிடம் எவ்வாறு நமக்கு உதவுகிறது என்று பார்ப்போம். ஒரு நபருக்கு புற்றுநோய் இருப்பதைக் குறிக்கும் சில ஜோதிட /கிரக சேர்க்கைகள் கீழே உள்ளன. 1. ஜோதிடத்தில் புற்றுநோய் நோயின் கிரக அறிகுறிகள் ஜோதிடத்தில் உள்ள அனைத்து கிரகங்களும் இந்த கொடிய நோய்க்கு ஒருவிதத்தில் காரணம், ஆனால் சில கிரகங்கள் நோயை அதிகம் பாதிக்கின்றன. அவை சனி, ராகு, கேது, செவ்வாய் ஜாதகத்தில் புற்று நோய்களுக்கான கிரக சேர்க்கைகள் (ராசிகள் / வீடுகள் மற்றும் கிரகங்கள் மருத்துவ ஜோதிடத்தில் புற்றுநோய் நோய்க்கு வழிவகுக்கிறது.) 1. லக்னம் அல்லது ஜாதகத்தின் முதல் வீடு அதன் பலம். 2. நமது உடலின் உயிர் சக்தியை சூரியன் ஆட்சி செய்கிறது. ஒரு ஜாதகத்தில் சூரியன் எங்குள்ளது போன்ற காரணி மற்றும் அதன் வலிமையின் நிலை பொறுத்து அமைகிறது….
டிசம்பர் மாதத்துக்கான ராசிப்பலன்களை தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராஹூ – களத்திர ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் – அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், புதன், செவ்வாய் – பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் – தொழில் ஸ்தானத்தில் சனி – லாப ஸ்தானத்தில் குரு என கிரகநிலை உள்ளது. கிரகமாற்றங்கள்: 04-12-2021 அன்று புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்க்கு மாறுகிறார். 05-12-2021 அன்று சுக்ர பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்க்கு மாறுகிறார். 06-12-2021 அன்று செவ்வாய் பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்க்கு மாறுகிறார். 28-12-2021 அன்று புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்க்கு மாறுகிறார். பலன்: எதையும் சமாளித்து குறுகிய காலத்தில் முன்னுக்கு வரும் திறன் உடைய மேஷ ராசியினரே நீங்கள் ரத்த சம்பந்தமான உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பவர். இந்த மாதம் எதையும் சமாளிக்கும் திறமை உண்டாகும். அடுத்தவர்களது செய்கை உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தலாம். எனவே நிதானமாக இருப்பது நல்லது. சொந்த காரியங்களில் தாமதம் ஏற்படலாம். சின்ன விஷயங்களால் மன நிறைவை அடைவீர்கள். எதிர்பாலினரிடம் பழகும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். மருந்து, ரசாயனம் போன்ற தொழில்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான காரியங்களில் ஈடுபடும் போது அவசரப்படாமல் நிதானமாக செயல்படுவது காரிய வெற்றியை உண்டாக்கும். எளிதில் மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்பட வாய்ப்பு உண்டு. குடும்பம் தொடர்பான கவலைகள் மறையும். குடும்ப செலவை சமாளிக்க பணவரத்து இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதில் ஆன்மீக எண்ணங்கள் ஏற்படும். வாழ்க்கை துணை மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும். பெண்களுக்கு அடுத்தவர்கள் செயல்கள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். எனவே நிதானமாக செயல்படுவது நன்மையை தரும். எந்த பிரச்சனையையும் சமாளிக்கும் திறமை கூடும். கலைத்துறையினருக்கு நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். தேவையான பொருள்களை வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக செய்ய நினைத்த ஒரு காரியத்தை செய்து முடிப்பீர்கள். மதிப்பும், மரியாதையும் வரும். அரசியல் துறையினருக்கு மனஸ்தாபம் நீங்கும். நண்பர்களிடையே சுமூக உறவு இருக்க விட்டு கொடுத்து செல்வது நல்லது. வாழ்வில் முன்னேற அக்கறை காட்டுவீர்கள். மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டி குறையும். எதையும் அவசரப்படாமல் நிதானமாக செய்வது நல்லது. அஸ்வினி: இந்த மாதம் குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். உங்களது கருத்துக்களுக்கு மாற்று கருத்துக்கள் இருக்காது. கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகளின் செயல்பாடுகள் மனதிருப்தியை தரும். வேடிக்கை வினோதங்களை கண்டு களிக்கும் சூழ்நிலை ஏற்படலாம். தொலைதூர தகவல்கள் மன மகிழ்ச்சியை தருவதாக இருக்கும். பயணங்களால் சாதகமான பலன் கிடைக்கும்….
‘அட்சயம்’ என்னும் வடமொழிச் சொல்லுக்கு ‘அள்ள அள்ளக் குறையாது’ என்பது தான் பொருள். சித்திரை மாதம், அமாவாசையைத் தொடர்ந்து வரும் திரிதியை அன்று அட்சய த்ரிதியை அனுசரிக்கப்படுகிறது. இந்தப் புண்ணிய தினமான, திரிதியை நாள், நமக்குத் தெரிந்ததும், தெரியாததுமான அநேக விஷயங்களை நாம் அறிந்து கொள்ள உதவும் உன்னத நாளாகத் திகழ்கிறது. இன்றைய தினத்தில்தான்… ஸ்ரீ வேதவியாசர், மகாபாரதம் என்னும் அற்புதமான காவியத்தை எழுதத்தொடங்கினார். ஸ்ரீ மகாவிஷ்ணுவின், ஆறாவது அவதாரமான, ஸ்ரீ பரசுராமரின் அவதாரம் நிகழ்ந்தது. குபேரன், தான் இழந்த செல்வங்களைத் திரும்பப் பெற்றார். ஒரு பிடி அவலுடன், குசேலர், ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை சந்தித்த நாள். ஸ்ரீ கங்காமாதா, பூமியைத் தொட்ட நாள். ஸ்ரீ ஆதிசங்கரர், கனகதாரா ஸ்தோத்திரத்தை நமக்கு அருளிய நாள். இப்படி பல அம்சங்கள் இந்த நன்னாளில் அமைந்திருந்தாலும், முக்கியமான ஒரு தேவ நிகழ்வை, நாம் மறந்துவிடக்கூடாது. அதுதான், நம்முடைய அத்யாவசியத் தேவையான உணவை அதாவது அன்னத்தை, நமக்குக் குறைவில்லாமல் அன்றாடம் வழங்கி அருளும் ஸ்ரீ அன்னபூரணி மாதா அவதாரம் செய்த நாள்தான் அது. காரியம் என்று ஒன்று இருந்தால், அதற்குக் காரணம் இல்லாமல் இருக்காது அல்லவா? ஒருமுறை, கைலாயத்தில், ஸ்ரீ சிவபெருமானும், ஸ்ரீ பார்வதியும் சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்தார்கள். ஆடும்பொழுது, பந்தயத்தில், தன்னுடைய சூலாயுதம் முதற்கொண்டு அனைத்தையும், உமாதேவியிடம், மகேசன் இழந்தார். செய்வதறியாது, மகேசன், ஸ்ரீ விஷ்ணுவை, அணுகி, உபாயம் கேட்டார். மீண்டும் ஒரு முறை சொக்கட்டான் ஆடினால், இழந்ததைப் பெறலாம் என்று பரமாத்மா கூறினார். அதன்படி, கங்காதரன், அன்னையுடன், மீண்டும், விளையாடத் தொடங்கினார். ஸ்ரீ கேசவன் கூறியது போல், கேட்ட விருத்தம் விளையாட்டில் விழ, ஸ்ரீ சிவபெருமானும் இழந்ததை மீட்டுக் கொண்டார். ஸ்ரீ பார்வதி தேவி, கணவர் தப்பாட்டம் ஆடி, தன்னை ஏமாற்றி, வெற்றி கண்டார் என்று கோபப்பட்டார். அதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிறகு இல்லாத சிறகிலிநாதர்! அந்த சமயத்தில், அங்கு, ஸ்ரீ விஷ்ணு வருகை புரிந்தார். நடந்தது எல்லாமே மாயைதான் என்பதைக்கூறி இருவரையும் சமாதானப்படுத்தினார். ஆனால், எல்லாமே மாயை என்பதில் அன்னைக்கு உடன்பாடு இல்லாமல் இருந்தது. ‘பூலோகத்தில், ஒரு ஜீவனின் வாழ்வாதாரத்திற்கு ஆகாரம் என்பது அத்யாவசியமாகிறது. அது கூட மாயை ஆகுமா?’ என்று தன் பதியிடம் தன் சந்தேகத்தைக் கேட்டார், ஸ்ரீ பார்வதி. பதியின் ‘இதிலென்ன சந்தேகம்?’ என்னும் பதிலைக் கேட்டதும், ‘நான் மாயை இல்லை என்பதை நிரூபித்துக் காட்டுகிறேன்’ என்று கூறி, சட்டென்று மறைந்து போனார், உமை. அவ்வளவுதான். சக்தியின் தயை இல்லாமல், உணவு பொருட்களின் விளைச்சல், உற்பத்தி நின்றது. ஆகாரம் இன்றி ஜீவராசிகள் அவதிப்படுவதை, அன்னை, கண்ணுற்றார். லோகமாதாவிற்கு, தன் குழந்தைகள் பசியால்வாடுவதை காணப்பொறுக்கவில்லை. காசி என்னும் மகா புண்ணிய பூமியில், அட்சய திருதியை அன்று, ஸ்ரீ அன்னபூரணியாக, அவதாரம் செய்தார். அங்கு, தானே தன் கைப்பட அன்னம் தயார் செய்து, எல்லாருக்கும் வயிறு நிறைய ஆகாரம் அளித்தார். ஸ்ரீ சிவபெருமானும், கப்பரையைக் கையில்…
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 29 சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள்கேளாய்! பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய். பாடியவர் – பவ்யா ஹரி விளக்கம்: நோன்பு தொடங்கிய நாள் முதல், பறை என்று பரிசுகளைப்பற்றிக் கூறிக்கொண்டேயிருந்த பெண்கள், இப்பாசுரத்தில்தான், தாங்கள் நாடுகிற பரிசு என்ன என்பதைத் தெளிவாக உரைக்கிறார்கள். “அதிகாலைப் பொழுதில் வந்து உன்னை வணங்கி, உன்னுடைய திருவடிகளைப் போற்றி நாங்கள் நிற்பதற்கான காரணத்தைக் கேளாய். பசுக்கூட்டத்தை மேய்க்கும் ஆயர்குலத்தில் பிறந்துள்ள நீ, எங்களை உனக்கான தொண்டர்களாகக் கொள்ளாமல் விட்டுவிடாதே. ஏதோ இப்போதைக்குப் பரிசு பெறுவதற்காக வந்தோம் என்று எண்ணாதே. எந்தக் காலமானாலும், எத்தனைப் பிறவிகளானாலும் உன்னோடு உறவு கொண்டவர்களாக இருப்பதையே யாசிக்கிறோம். என்றென்றும் உனக்கு அடிமைகளாக இருப்போம். இவைதவிர வேறு ஏதேனும் விருப்பங்கள் எங்களுக்கு இருக்குமானால், அவற்றை மாற்றிவிடு’ என்று கோருகிறார்கள். பாசுரச் சிறப்பு: நோன்பைத் தலைக்கட்டுகிற (நிறைவேற்றுகிற) நிலையில் வைக்கப்படுகிற விண்ணப்பம் இது. குற்றேவல் என்பது சிறு சிறு ஏவல் கூவல் பணிகள். அந்தரங்கக் கைங்கர்யம் (தனித் தொண்டு) என்பார்கள். ஏழேழு என்பதனை 7, 7+7, 7+7 என்று எவ்விதமாகவேனும் கொள்ளலாம். என்றைக்காக இருந்தாலும் எம்பெருமானுக்கு அடிமைகளாகவும் எம்பெருமானின் உடைமைகளாகவும் இருக்க வேண்டும் என்பதே நிரந்தர விண்ணப்பம். செயல் பெரியதா சிறியதா என்பதைக் காட்டிலும், அது செய்யப்படுகிற நோக்கம் முக்கியமானது. எந்தச் செயலாக இருந்தாலும், அளவுக்கும் பார்வைக்கும் சிறியதாகவே இருப்பினும், அச்செயலுள் இருக்கும் அன்பும் பக்தியும் அறமும் ஆர்வமும் முக்கியமானவை. ஆங்கிலக் கவிஞர் மில்டனின் They also serve who stand and wait என்னும் வரியை நினைவூட்டுகிற பாசுரம் (இதே உணர்வைத் திருப்பள்ளியெழுச்சியின் 7ஆவது பாடலில், எது எமைப் பணி கொள்ளும் ஆறு என்னும் வரியில் காணலாம்). நோன்பை நிறைவேற்றிய நிலையில், நோன்பின் பலனை இப்பெண்கள் பெற விருக்கிறார்கள். ஒரு செயலின் பலனை அனுபவிக்கும்போது, அந்தச் செயலைச் செய்ததற்கான பெருமையும், செயல் பலனுக்கான ஆனந்தமும், ஒருவகையான மதர்ப்பைத் தரும். அந்த ஆனந்தமே சுயநலமாக மாறும்; ஆணவமாகத் தலைதூக்கும். இதற்குப் பிராப்ய விரோதம் என்று பெயர். இப்படிப்பட்ட சுயநலம் இல்லாமல், நோன்பென்னும் செயலையும், நோன்பின் நற்பலன்களையும்கூட இறைவனின் திருவடிகளில் அர்ப்பணிக்கிற பாசுரம் இது. ****** ஸ்ரீமாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி – பாடல் 9 விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டாவரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கும் முறையும், பலன்களும்! விழுப்பொரு ளேயுன தொழுப்படி யோங்கள் மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே! வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம் கண்ணகத் தேநின்று களிதரு தேனே! கடலமு தேகரும் பேவிரும் படியார் எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே. பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன் பாடியவர்கள்…
ஆகஸ்ட் 22 முதல் 28ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்துக்கு ஜோதிடர் கே.சி.எஸ். ஐயர் கணித்துக் கொடுத்திருக்கும் வாரப்பலன்கள். மேஷம் 22.10.2021 முதல் 28.10.2021 வரை (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய) திறமைக்குத் தகுந்த வேலைகளைச் செய்வீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உடலாரோக்கியம் சற்று கவனிக்க வேண்டியிருக்கும். தாமதம் செய்யாமல் மருத்துவரிடம் ஆலோசனை பெறவேண்டும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து நடந்து கொண்டால் மேலும் நன்மை அடையலாம். இட மாற்றமும், ஊதிய உயர்வும் கிடைக்கும். வியாபாரிகள் யாருக்கும் கடன் கொடுப்பதோ ஜாமீன் கையொப்பமிடுவதோ கூடாது. பண வரவு சீராக இருப்பினும் ஜாக்கிரதையாகக் கையாளவும். விவசாயிகள் சந்தையில் போட்டிகளைச் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். மகசூல் லாபம் அதிகமாகும். அரசியல்வாதிகள் பயணங்களால் நன்மை அடைவீர்கள். மேலிடத்திலிருந்து பாராட்டுகள் கிடைத்து மகிழ்ச்சியடைவீர்கள். கலைத்துறையினர் புதுப்புது ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். சக கலைஞர்கள் தாமாக முன் வந்து உதவுவார்கள். பெண்மணிகள் எவரிடமும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவமணிகளின் கோரிக்கைகளை ஆசிரியர்களும், பெற்றோர்களும் நிறைவேற்றுவார்கள். நீண்ட காலத் திட்டங்கள் தீட்ட இது உகந்த காலமாகும். பரிகாரம்: விநாயகரை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 22, 23. சந்திராஷ்டமம்: இல்லை. ••• ரிஷபம் 22.10.2021 முதல் 28.10.2021 வரை (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) இயந்திரப் பணிகள் லாபம் தரும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். உடல் நிலை மிகவும் பாதிப்புக்குள்ளாகி, பின்பு சரியாகி விடும். தகுந்த நேரத்தில் மருத்துவ வசதிகளைப் பெறுவீர்கள் உத்தியோகஸ்தர்களுக்கு நல்லதொரு வாய்ப்பு கூடி வரும். எதிர்பார்த்த அரசுப் பணிகள் நிறைவேறும். உடல் நலனில் கவனம் தேவை. வியாபாரிகளுக்கு தொலை தூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். தொழில் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்பட்டு விலகும். விவசாயிகளின் பொருளாதார நிலை உயரும். கூட்டுத் தொழிலில் அபிவிருத்தி காணலாம். அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவி வரும். பொருள் வரவு, வழக்கில் அனுகூலமான தீர்ப்பு கிடைக்கும். கலைத்துறையினருக்கு சுபிட்சம் ஏற்படும். பிறரிடம் சுமூகமாகப் பேசிப் பழகுவது அவசியமாகும். பெண்மணிகளுக்கு முன்னேற்றம் தடைபடும். உடல் நலனில் மிகுந்த அக்கறை தேவை. அலங்காரப் பொருள்களின் சேர்க்கை நிகழும். மாணவமணிகளின் திறமை பளிச்சிடும். சக மாணவர்களை நம்பி எந்த விஷயத்தையும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். அயல்நாட்டுத் தொடர்பு பயன் தரும். பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 22, 24. சந்திராஷ்டமம்: இல்லை. •••• மிதுனம் 22.10.2021 முதல் 28.10.2021 வரை (மிருகசீரிஷம் 3-ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய) விவேகத்துடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழ வாய்ப்பு கூடி வரும். வேலையில்லாதவர்களுக்கு, நல்லதொரு வாய்ப்பு கிட்டும். உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு முன்னேற்றமான சூழல் நிலவும். ஊதிய உயர்வு, விரும்பிய இடமாற்றம் போன்றவை கிடைத்து மகிழ்ச்சியில் திளைப்பீர்கள். வியாபாரிகள் தங்கள் நோக்கம் நிறைவேறப்…
விநாயகப் பெருமானின் வாகனம் மூஷிகம் என்று சொல்லப்பட்டாலும் இவர், பல்வேறு யுகங்களில் வெவ்வேறு வாகனத்தில் அருள்புரிந்திருக்கிறார். கிருதயுகத்தில் இவரது வாகனம் சிங்கம். திரேதா யுகத்தில் மயில். துவாபர யுகத்தில் மூஷிகம். கலியுகத்தில் இவரது வாகனம் குதிரை என்று சொல்லப்பட்டாலும் அந்த வாகனத்துடன் இவரை தரிசிப்பது அரிதாகும். விநாயகருக்கு ரிஷபம், யானை ஆகியவையும் வாகனமாய் இருந்திருக்கின்றன. கப்பட்டினம் நீலாயதாட்சி அம்மன் ஆலயத்தில் பஞ்சமுகங்களுடன் காணப்படும் விநாயகர், சிம்ம வாகனத்தில் காட்சி அளிக்கிறார். திருவொற்றியூர் குருதட்சிணாமூர்த்தி ஆலயத்திலும் பஞ்சமுகங்களுடன் சிம்மத்தில் அருள்புரிகிறார். பாண்டிச்சேரி மணக்குள விநாயகர் ஆலய சுதைச் சிற்பத்திலும் அருப்புக்கோட்டை தாதன்குள விநாயகர் ஆலயத்திலும் திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி ஆலயத்தில் உள்ள ஓவியத்திலும் விநாயகர் மயில் வாகனத்துடன் காட்சி தருகிறார். கோயம்புத்தூர் குருபதேசக் கவுண்டர் ஆலயத்திலும் கடலூர் வட்டம் சென்னப்ப நாயக்கன் பாளையத்தில் உள்ள மலையாண்டவர் விநாயகர் ஆலயத்திலும் குதிரை வாகனத்தில் காட்சி தருகிறார். திருச்செந்தூர் ஆவுடையார் குளக்கரையில் உள்ள அரசாள்வார் விநாயகருக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்விளாகம் வைத்தியநாத சுவாமி ஆலயத்தில் உள்ள விநாயகருக்கும் யானை வாகனமாக உள்ளது. சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயத்திலுள்ள விநாயகர் முன்பும் நெல்லை காந்திமதியம்மன் கோயிலில் அருள்புரியும் விநாயகப்பெருமானின் முன்பும் காளை வாகனம் காட்சியளிக்கிறது. – டி.ஆர். பரிமளரங்கன் சாட்சி விநாயகர்நவகோளும் வணங்கும் விநாயகர் திருச்சானூரில் பெருமாளும் தாயாரும் திருமணம் செய்து கொள்ள சாட்சியாக இருந்த விநாயகர் “சாட்சி விநாயகர்’ என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். பெருமாள் தாயாருடன் சேர்ந்து இருக்கும் விநாயகரை இங்கு தான் தரிசிக்க முடியும். குழந்தைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்க இங்கு வந்து மணி கட்டி வழிபாடு செய்து வருகிறார்கள். ஆந்திர மாநிலம் சித்தூர் அருகில் உள்ளது காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில். இக்கோயிலின் பிரசாதம் அங்குள்ள கிணற்று நீர்தான். இந்த கிணற்றில் தான் சுயம்புவாக வரசித்தி விநாயகர் தோன்றினார். அதனால் அதே கிணற்றின் மேல் தான் அவர் காட்சி தருகிறார். விநாயகரைச் சுற்றிலும் எப்போதும் கிணற்றின் நீர் ஓடிக் கொண்டே இருக்கிறது. இந்தப் பிள்ளையாரை சாட்சியாக வைத்து ஒரு காலத்தில் வழக்குகளை முடித்துக் கொள்வார்களாம். அதனால் இன்றும் வழக்குகளில் வெற்றி பெற இந்த விநாயகரை வழிபட்டு வருகின்றனர். திருச்சானூரில் பெருமாளும் தாயாரும் திருமணம் செய்து கொள்ள சாட்சியாக இருந்த விநாயகர் “சாட்சி விநாயகர்’ என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். பெருமாள் தாயாருடன் சேர்ந்து இருக்கும் விநாயகரை இங்கு தான் தரிசிக்க முடியும். குழந்தைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்க இங்கு வந்து மணி கட்டி வழிபாடு செய்து வருகிறார்கள். ஆந்திர மாநிலம் சித்தூர் அருகில் உள்ளது காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில். இக்கோயிலின் பிரசாதம் அங்குள்ள கிணற்று நீர்தான். இந்த கிணற்றில் தான் சுயம்புவாக வரசித்தி விநாயகர் தோன்றினார். அதனால் அதே கிணற்றின் மேல் தான் அவர் காட்சி தருகிறார். விநாயகரைச் சுற்றிலும் எப்போதும் கிணற்றின் நீர் ஓடிக் கொண்டே இருக்கிறது. இந்தப் பிள்ளையாரை சாட்சியாக வைத்து ஒரு காலத்தில் வழக்குகளை முடித்துக் கொள்வார்களாம். அதனால் இன்றும் வழக்குகளில்…
உலகத்தின் தோற்றத்திற்கும், ஒடுக்கத்துக்கும் “ஓம்’ என்ற பிரணவ மந்திரமே காரணமாகும். அப்பேர்பட்ட பிரணவ மந்திர சொரூபமாகத் திகழ்பவர் விநாயகப்பெருமான். முழுமுதற் கடவுளான அவரை எண்ணிச் செய்யப்படும் எந்த செயலும் உலக நன்மையையும், ஆன்மீக பலத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கவல்லது. இந்த மகாகணபதியை மூலப்பரம் பொருளாகவே பாவித்து வழிபடுவது என்பது வேதகாலத்தில் இருந்தே தொடர்ந்து வரும் மரபு. ஆதிசங்கரர் வகுத்த ஷண்மத வழிபாட்டு முறைகளில் “காணாபத்தியம்’ எனப்படும் கணபதி வழிபாடே முதன்மை வகிக்கின்றது. விநாயகர் தோன்றிய வரலாற்றினையும், நரமுக கணபதியான அவர் கஜமுக கணபதியான வரலாற்றினையும் புராணங்கள் பல்வேறுவிதமாக விவரிக்கின்றன. சுருங்கக்கூறின், அற்புதங்கள் பல நிறைந்தது அவரது அவதாரம். ஆதியிலும் அந்தத்திலும் விளங்கியதால் ஆதியந்தமற்ற பரபிரம்ஹ ஸ்வரூபமாக இவரை, “ஜ்யேஷ்டராஜன்’ (மூத்தவர்) என்று வேதங்கள் அழைக்கின்றன. கணங்களுக்கெல்லாம் தலைவரானதால் கணபதி எனவும் மேலானதலைவர் என்பதால் விநாயகர் எனவும், தடைகளை நீக்குவதால் விக்னேஸ்வரர் எனவும் பல பெயர்கள் உடையவரானார். சிவபெருமானுடைய பிள்ளையானதால் மரியாதையாகப் பிள்ளையார் என்று கூறுகின்றோம். விநாயகரின் திரு உருவத்தில் பல தெய்வங்கள் உறைகின்றனர். அவரது நாபி பிரம்ம சொரூபத்தையும், முகம் விஷ்ணு சொரூபத்தையும், இடப்பாகம் சக்தி வடிவையும், வலப்பாகம் சூரியனையும், முக்கண்கள் சிவசொரூபத்தையும் குறிக்கின்றன. ஜீவனுக்கும், பிரம்மத்திற்கும் உள்ள ஒற்றுமையை உணர்த்தும் விதமாக மனித வடிவத்தில் ஜீவாத்மாவையும், கஜ வடிவத்தில் பிரம்ம சுவரூபத்தையும் இணைத்துக்கொண்டு அற்புதமாக அவர் காட்சி தருகின்றார். ஒளவைப்பிராட்டியார் தனது விநாயகர் அகவலில் “தத்துவ நிலையைத் தந்து எனையாண்ட வித்தக விநாயக விரைகழல் சரணே!’ என அருளிச்செய்ததை இத்தருணத்தில் நினைவிற் கொள்வது சாலச்சிறந்தது. கணபதியை சகலதேவதைகளும் ஆராதித்து தங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொண்டுள்ளனர் என இதிகாச புராணங்கள் கூறுகின்றன. முப்புரங்களைப் பொசுக்கப்புறப்பட்ட பரமேஸ்வரனுடைய தேரின் அச்சு முறிந்தபோது விநாயகர் துஷ்டி, புஷ்டி என்ற தேவதைகளை வைத்து தேர் சீர் குலைந்து போகாமல் செப்பனிட்டுக் கொடுத்தார். “அச்சது பொடிசெய்த அதிதீரா’ என்பார் அருணகிரியார். பண்டாசுரனுடைய கோட்டையைத் தகர்த்து எரித்து அவன் வதத்திற்கு ஸ்ரீலலிதாம்பிகைக்கு உதவி புரிந்தவர் விக்னேஸ்வரர். திருமால் கண்ணனாக அவதரித்த தருணத்தில், கிடைப்பதற்கரிய சியமந்தக மணியை சத்ராஜித் என்ற மன்னனைக் கொன்று அபகரித்தார் என்ற அவப்பெயர் அவருக்கு ஏற்பட்டது. நாரதர் அறிவுறுத்தியபடி கிருஷ்ணரும் விரதமிருந்து விநாயகப்பெருமானை சதுர்த்தி திதியில் பூஜித்து தனக்கு ஏற்பட்ட சங்கடம் நீங்கப்பெற்றார். முருகனுக்கு வள்ளியைத் திருமணம் புரிவதில் உறுதுணையாக இருந்ததும் விநாயகப் பெருமானே. சந்திரன் தனக்கு ஏற்பட்ட களங்கத்தை விநாயகர் அருளால் நீங்கப்பெற்றான். அகத்தியப்பெருமானின் கமண்டலத்தில் அடங்கியிருந்த காவிரியை காகத்தின் வடிவில் தென்னாட்டிற்கு அளித்தவர் கணநாதர். இதன் மூலம் அகத்தியருக்கும் அருள்புரிந்தார். தனக்கு அளிக்கப்பட்ட இட்சுவாகு குல தனமான ஸ்ரீரங்கநாதரை ரங்கவிமானத்துடன் விபீஷணன் இலங்கைக்கு எடுத்து செல்லுங்கால், தனது திருவிளையாடல் மூலம் ஸ்ரீரங்கத்தில் நிலைப்படுத்தி அருளியதும் விநாயகரே. பக்தி நெறியில் பிள்ளையாரின் அருளைப்பெற்ற மகான்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது. “அற்புதம் நின்ற கற்பகக் களிறே’ என்று பாடிய ஒளவையைத் தன் துதிக்கையால் கைலாயத்தில் சேர்த்தார். திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி, விநாயகரின் அருளால் தேவாரங்களை மீட்டெடுத்தார். வேதங்களை வகைப்படுத்தி…