போதுமான தண்ணீர் உடலில் இல்லாவிட்டால் என்ன ஆகும்?

உடலுக்குத் தேவையான தண்ணீரை நாம் குடிக்க வேண்டும். போதுமான தண்ணீர் குடிக்காவிட்டால், பல உடல் நடப் பிரச்னைகள் தலைதூக்கும். மனித மூளையில் 80 சதவிகிதம் நீர் இருக்கிறது. போதுமான தண்ணீர் குடிக்காவிட்டால், எதிலும் கவனம் செலுத்த முடியாது. நினைவாற்றல் குறைந்துவிடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். போதுமான தண்ணீர் உடலில் இல்லாவிட்டால் கை, கால்களில், மூட்டுகளில் வீக்கம் ஏற்படும். உடலுக்குத் தேவையான நீரைக் குடிக்காவிட்டால், குமட்டல், வயிற்றுவலி போன்ற பிரச்னைகள் ஏற்படும்.தக்காளி காய்ச்சல் என்றால் என்ன? பரவும் விதம் மற்றும் அறிகுறிகள் இதயம் சரியாக, முறையாக துடிக்க வேண்டும் என்றால் போதுமான நீர் அருந்துவது அவசியம். உடலின் மூட்டுகள், சதைகள் எளிதாக இயங்கத் தேவையான எண்ணெய்ப் பசை தேவையான அளவு தண்ணீர் குடிப்பதால் கிடைக்கிறதாம். – என்.ஜே நன்றி Hindu அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!

இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை 2030-ம் ஆண்டிற்குள் இருமடங்காக அதிகரிக்கும் அபாயம்!

  உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி உலக நாடுகளிலேயே இந்தியாவிலேயே அதிகமான நீரிழிவு நோயாளிகள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. ஆரம்பத்தில் வயதானவர்களுக்கு மட்டும் மரபணு முதிர்ச்சியினால் வந்த இந்த நோய் இன்றைய நிலையில் சர்வ சாதாரணமாகச் சிறியவர், பெரியவர் என எந்த வேறுபாடும் இல்லாமல் அனைவரையும் தாக்கும் ஒரு முதன்மை நோயாக உருவெடுத்துள்ளது.  அந்த அறிக்கையின்படி பட்டியலில் முதலிடத்தில் இந்தியாவும், அதைத் தொடர்ந்து வரிசையாகச் சீனா, அமெரிக்கா, இந்தோனேசியா, ஜப்பான், பாக்கிஸ்தான், ரஷ்யா, பிரேசில், இத்தாலி மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் உள்ளன. 2000-ம் ஆண்டில் இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் 31.7 மில்லியன் ஆகும், இந்த எண்ணிக்கை 2030-ம் ஆண்டிற்குள் அப்படியே இரட்டிப்பாகும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது 79.4 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் 2030-ம் ஆண்டில் பாதிக்கப்பட்டிருப்போம்.  இயற்கையாகவே உடலில் சுரக்க வேண்டிய இன்சுலின் உற்பத்தியாகாமல் போவதால் ரத்தில் இருக்க வேண்டிய சர்க்கரை அளவு குறைகிறது, இதுவே நீரிழிவு நோயாளியாக ஒருவரை மாற்றுகிறது. இந்த நிலை வெகு நாட்களுக்கு நீடித்தால் அது இதய நோயை உண்டாக்குகிறது. அடிக்கடி விக்கல் வருதா? தண்ணீர் அருந்தியும் நிற்கவில்லையா? அப்போ இதைப் படிங்க! தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் கூறியுள்ளதாவது, சமமான உணவு பழக்கத்தின் மூலமே இதைக் கட்டுப்படுத்த முடியும், மேலும் இதனால் ஏற்படும் அபாயத்தில் இருந்து தப்பிக்க சரியான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதிகமான எடை நீரிழிவு நோய் வருவதற்கான ஒரு முக்கிய காரணமாகும். எனவே ஆரோக்கியமான உணவு பழக்கத்துடன் உடற்பயிற்சி செய்தால் உடல் பருமனை தவிர்க்கலாம்.  நவம்பர் 14-ம் தேதியான இன்று உலகம் முழுவதிலும் உலக நீரிழிவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் முக்கிய நோக்கமானது மக்களிடையே நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதை எப்படிக் கையாள வேண்டும் என்பதைக் கூறுவதே. இந்தத் தினத்திலாவது நீரிழிவு நோய் பாதிப்பை விளையாட்டாகக் கருதாமல் அதே சமயம் உயிரைப் பரிக்கும் கொடிய நோயாகவும் கண்டு அஞ்சாமல் அதிலிருந்து நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பதைக் கண்டறியுங்கள். நீரிழிவு நோய் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம். நன்றி Hindu பிறந்த குழந்தைக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் ?

கர்ப்பிணிகளே! தயவு செய்து கருவில் இருக்கும் உங்கள் குழந்தையுடன் பேசுங்கள்….

  குழந்தை கருவாக, தாயின் கருவறையில் இருக்கும் போதே… தாய் அதனுடன் பேசத் தொடங்கி விட வேண்டும் என்று பல்லாண்டுகளாக மகப்பேறு மருத்துவர்கள் கூறி வருகிறார்கள். குழந்தை கருவறையில் உதிரக் கட்டியாக உதிக்கும் போதே அதற்கு தன் தாயின் குரலை தனித்து அடையாளம் காணத் தெரியும் என்பார்கள் வயதான பாட்டிகள். இது எத்தனை தூரம் நிஜமோ?! ஆனால் குழந்தை கருவில் இருக்கும் மூன்றாம் மாதத்தில் இருந்து தாயின் குரல் அதற்குக் கேட்கத் தொடங்கி விடும் என்கிறது அறிவியல். இதனால் தான், கருவுற்ற தாய்மார்கள் அக்காலங்களில் எவ்வித கவலைகளும் இன்றி கருவில் இருக்கும் குழந்தைக்காகவேனும் தங்களது மனதை அமைதியாகவும், நிர்மலமாகவும் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமென்கிறார்கள் மருத்துவர்கள். மனம் அமைதியாக இருந்தால் மட்டும் போதாது… கருவில் இருக்கும் குழந்தையோடு அடிக்கடி பேசும் வழக்கத்தையும் அதன் தாய் பின்பற்றி வந்தால் பிறக்கப்போகும் குழந்தையின் எதிர்காலக் கற்றல் திறன் அதிகரிக்கும் என்கிறது இத்துறையில் சமீபத்தில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை ஒன்று. குழந்தையின் கற்றல் திறன் என்றதும், உடனே கருவிலிருக்கும் குழந்தையைக் கூட விட்டு வைக்க மாட்டீர்களா? அது பிறந்து பூமி தொடும் முன்பே அதற்கும் ஏ,பி,சி,டி கற்றுக் கொடுக்கச் சொல்கிறதா இந்த அவசர உலகம் என்று கேள்வி எழும்பலாம். இல்லை கற்றல் திறன் என்றால் பாடப்புத்தகங்களை மட்டுமே கற்பதல்ல, இந்த உலகத்தை, உறவுகளை, ஏனைய மனிதர்களைக் கற்கும் திறன் நமது குழந்தைகளுக்கு அவசியம். அதற்குப் பெயரும் கற்றல் தான்.  குழந்தை கருவில் இருக்கையில் அதன் தாய் அதனுடன் பாஸிட்டிவ்வான முறையில் இந்த உலக விஷயங்கள் அனைத்தைப் பற்றியும் பேசத் தொடங்கி விடலாம். ஆனால், ஞாபகமிருக்கட்டும், அத்தனையும் பாஸிட்டிவ்வாகவே இருக்க வேண்டும். நெகட்டிவ்வாகப் பேசி பிறப்பதற்கு முன்பே குழந்தையை தன்னம்பிக்கை இழந்த ஜீவனாகச் செய்து விடத் தேவையில்லை. பாஸிட்டிவ்வாகப் பேசுவதென்றால் என்ன?  கருவிலிருக்கும் குழந்தையின் அசைவுகள் ஒரு தாய்க்கு எத்தனை இன்பத்தைத் தர முடியுமோ…அதற்கு ஈடான அதே அளவு இன்பத்தை ஒரு தாய், கருவிலிருக்கும் தன் குழந்தையுடனான தொடர் உரையாடலின் மூலமாக குழந்தைக்கும் தரமுடியும். அந்தக் குழந்தைக்கு என்ன தெரியும் என்று நினைத்து விடாதீர்கள்… குழந்தைக்கு தாயின் மொழி புரியும் என்கிறது மருத்துவம். இதற்கு புராண உதாரணமொன்றைச் சுட்டிக்காட்டினால் உங்களுக்கு எளிதாகப் புரியலாம்…உடலில் வியர்வை வெளியேறுவது போன்று ரத்தம் வெளியேறும் அதிசயம்! தீர்வு காண முடியாது தவிக்கும் மருத்துவர்கள்! அபிமன்யூ தன் தாய் சுபத்ரையின் கருவில் இருக்கையில், கர்ப்பிணியான சுபத்ரைக்கு பத்ம வியூகம் பற்றி கேட்டுக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. எப்படியெனில் அண்ணன் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா மூலமாக… (பத்ம வியூகம் என்பது போர் வியூகங்களில் ஒன்று… பத்மம் என்றால் தாமரை… தாமரைப்பூவின் இதழ்களைப் போல போர் வியூகம் அமைத்து எதிரிகளைச் சுற்றி வளைப்பது). அப்படி அண்ணன் ஸ்ரீகிருஷ்ணன் மூலமாக பத்மவியூகத்தைப் பற்றி சுபத்ரை மட்டும் அறிந்து கொள்ளவில்லை, அவளது வயிற்றில் இருக்கும் குழந்தையான அபிமன்யூவும் அறிந்து கொள்கிறான். ஆனால், எதுவரை எனில் வியூகத்தின்…

Continue Reading

தொடையின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் உண்டாகும் வலியிலிருந்து விடுபட

வைட்டமின் விடியோ கேம் அடிக்‌ஷன், மிக மோசமான ‘மனநலச் சீர்கேட்டு நோய்’ என உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு!B2, C, B6, தையமின், நியசின், மெக்னீசியம், பாஸ்பரஸ், காப்பர், பொட்டாசியம், மங்கனீசு, கால்சியம், இரும்புச் சத்து, போலிக் ஆசிட், நார்ச் சத்து நன்றி Hindu குரங்கு அம்மை என்றால் என்ன? குரங்கு அம்மை பரவும் முறையும் அதன் அறிகுறிகளும்

TamilNadu Budget for school education

தமிழக பட்ஜெட்டில் அனைத்துத் துறைகளுடனும் ஒப்பிடும்போது இந்த முறை பள்ளிக்கல்வித் துறைக்கு அதிகபட்சமாக 34,181.73 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தரமான கல்வியைத் தொடர்ந்து அளித்து வருவதாகக் கூறும் தமிழக அரசு, தொடக்கக் கல்வியில் மாணவர் நிகர சேர்க்கை விகிதம் 99.88 சதவீதத்தை எட்டியுள்ளதாகவும் இடைநிற்றல் விகிதம் 0.8 சதவீதமாகக் குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 2019-20 ஆம் ஆண்டில் பள்ளி செல்லாக் குழந்தைகளின் எண்ணிக்கை 30,104 ஆகக் குறைந்து, அவர்களில் 29,740 குழந்தைகள் தற்போது பள்ளியில் சேர்க்கப்பட்டுவிட்டதாகவும் பட்ஜெட் உரையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கவலை தரும் சூழலில் இருக்க, பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள பட்ஜெட் எதைக் காட்டுகிறது? என்று கல்வியாளர்களிடம் பேசினோம். பிரின்ஸ் கஜேந்திர பாபு, கல்வியாளர்: இது ஒரு வழக்கமான பட்ஜெட்டாகத்தான் உள்ளது. செலவுகள் அதிகரித்ததால், நிதி ஒதுக்கீடும் அதிகரித்துள்ளது. மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பட்ஜெட்டில் எந்தத் தீர்வும் சொல்லப்படவில்லை. பட்ஜெட் அறிவிப்பு, சமமான கற்றல் வாய்ப்பை மாணவர்களுக்கு ஏற்படுத்துகிறதா, அருகமைப் பள்ளிகளை அதிகப்படுத்துகிறதா, தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கியுள்ளதா, கற்றல் திறனை அதிகரிக்கிறதா, தாய்மொழி வழிக்கல்வியை ஊக்குவிக்கிறதா என்றால் இல்லை என்றே பதில் கிடைக்கிறது. பள்ளிக் கல்வித்துறைக்கு ஆலோசனை வழங்க சிறந்த கல்வியாளர்களைக் கொண்டு உயர்மட்டக் குழு உருவாக்கப்பட்டது. ஆனால் அவர்களிடம் அரசு ஆலோசனை பெற்றதா? அரசின் கொள்கையில் இடம்பெறாத சமமான கற்றல் வாய்ப்பு, பட்ஜெட்டிலும் அறிவிக்கப்படவில்லை. அதற்கான தேவை குறித்து எந்த விவாதமும் இங்கு எழுப்பப்படவில்லை. மாணவர்களுக்குத் தேர்வில் ஒரே கேள்வித்தாளை வழங்கும் அதே நேரத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே அளவிலான ஆசிரியர்கள் இருக்கிறார்களா? புதிதாக ஒன்றுமில்லாத பட்ஜெட் அறிவிப்பால் பள்ளிக் கல்வித்துறையில் பெரிய மாற்றங்கள் ஏற்படாது என்றே நினைக்கிறேன். அரசுப் பள்ளிகளுக்கு புத்தகப் பைகள், சீருடைகள், காலணிகள், குறிப்பேடுகள், பாடப் புத்தகங்கள் உள்ளிட்ட படிப்புக்குத் தேவையான பொருட்களை விலையின்றி வழங்குவதன் மூலம், குழந்தைகளை பள்ளியில் தக்கவைப்பதை அரசு உறுதி செய்வதாகவும் இதற்காக 1,018.39 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இலவசங்களுக்கான கோடிக்கணக்கில் நிதி செலவிடப்படுவதை எப்படி அணுகுவது? தியாகராஜன், ஜாக்டோ ஜியோ நிர்வாகி பட்ஜெட்டில் ஆசிரியர்கள் பணியிடங்கள் பற்றி எதுவும் அறிவிக்கப்படவில்லை. பழைய ஓய்வுதியத் திட்டம் குறித்த ஸ்ரீதர் கமிட்டி, ஊதிய முரண்பாடு குறித்த சித்திக் கமிட்டி ஆகியவை பற்றி எதுவும் பேசப்படவில்லை. பள்ளிக் கல்வித்துறைக்கு இந்த முறை கடந்த ஆண்டைவிட ரூ.5,424 கோடி அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவை பள்ளிகளைத் தரம் உயர்த்தவோ, ஆசிரியர் நியமனங்களுக்காகவோ வழங்கப்படவில்லை. இந்த ஆண்டு மட்டும் தனியார் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்காக சுமார் ரூ.304 கோடியை அரசு வழங்கியுள்ளது. இந்தத் தொகையை அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை வலுப்படுத்தச் செலவிட்டிருக்கலாமே. ஆசிரியர் – மாணவர் விகிதத்தைப் பேசும் நாம், வகுப்புக்கு ஓர் ஆசிரியர் என்ற நிலைப்பாட்டைக் கொண்டு வரவேண்டும். இதைவிட்டு இலவசங்களைக் கொடுத்தால் மட்டுமே மாணவர்களைத் தக்க வைக்கலாம் என்ற…

Continue Reading

பிறந்த குழந்தைக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் ?

பிறந்த குழந்தைகள் கரோனாவினால் பாதிக்கப்படும் போது அதன் பெற்றோர் என்ன செய்ய வேண்டும் மற்றும் என்ன செய்யக்கூடாது என்பது குறித்து மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். பெற்றோர் தங்களது குழந்தைக்கு கரோனா தொற்று உறுதியானல் என்ன செய்வது என்பது குறித்து பொதுவாக கவலைப்படுவார்கள். அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு மற்றும் அவர்களுக்கு தடுப்பூசியும் தற்போது கிடையாது போன்ற விஷயங்கள் பெற்றோருக்கு கலக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், அவர்களுக்கான நல்ல செய்தி என்னவென்றால் குழந்தைகளுக்கான கரோனாவின் பாதிப்பு மிகக் குறைவு என்பதுதான்.  பிறந்த குழந்தைக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்வது என்பது குறித்த பெற்றோர்களின் கேள்விகளும் மற்றும் அதற்கான பதில்களும் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது. எனக்கு கரோனா தொற்று இருக்கும் போது என் குழந்தையை தொற்றிலிருந்து பாதுகாக்க முடியுமா? நீங்கள் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவராக இருக்கும் பொழுதும் உங்களது குழந்தையை நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்க முடியும். அதற்கு நீங்கள் சில பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். குழந்தையினை தொடுவதற்கு முன்பு கைகளை சோப்பு போட்டு நன்கு சுத்தமாக கழுவ வேண்டும். குழந்தைகளுக்கு பாலூட்டும் போதும் அவர்களுடன் நெருங்கி இருக்கும் போதும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். தற்போது வரை தாய்ப்பாலின் மூலம் குழந்தைகளுக்கு கரோனா தொற்று ஏதும் பரவுவதாக நிரூபணமாகவில்லை. கரோனா தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் தாய்ப்பால் கொடுக்காமல் இருக்கலாம் என நினைக்காமல் தொடர்ந்து குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்திட வேண்டும். பிறந்த  குழந்தையின் உடன் பிறந்தவர்கள் மூலம் கரோனா பரவுவதை தடுப்பூசி செலுத்துவதன் மூலம் தடுக்கலாம். குழந்தைக்கு சளி மற்றும் காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் என்ன செய்ய வேண்டும்? பெரியவர்களுக்கு எப்படி கரோனா பரிசோதனை செய்கிறோமோ அதே போல குழந்தைகளுக்கும் பரிசோதனை மேற்கொள்ளலாம். குழந்தைகளுக்கு ரேபிட் ஆண்டிஜன் சோதனை செய்யலாம். ஆனால், இந்த சோதனையை மேற்கொள்வதற்கு குழந்தையின் வயது மிகவும் முக்கியம். அதனால் குழந்தைக்கு சோதனை செய்யும் முன்பு மருத்துவரிடம் ஆலோசனை மேற்கொள்ளலாம்.  குழந்தைகளுக்கு குறைவான தாக்கத்தை ஏற்படுத்தும் கரோனா: கரோனா பரவத் தொடங்கிய நாள் முதலே அனைத்து வயது குழந்தைகளின் மீதும் அதன் தாக்கம் குறைவாக இருந்துள்ளது. பெரியவர்களில் ஏற்படுவதுபோல் எந்தவொரு பாதிப்பும் குழந்தைகளுக்கு ஏற்படவில்லை. கரோனாவினால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு அவசர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவம் வழங்கப்பட வேண்டும் என்ற தேவையும் உருவாகவில்லை. கரோனாவினால் குழந்தைகளின் இறப்பு என்பதும் மிக அரிது. விஷக் கிருமிகளுடன் வேலை செய்வது எப்படி? பிறந்த குழந்தைகளுக்கு தடுப்பூசி இல்லாத போதிலும் குழந்தையின் தாய் தடுப்பூசி செலுத்தியிருந்தால் அவரிடமிருந்து குழந்தைக்கு எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. இதன் மூலம் குழந்தைகள் கரோனாவிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள். குழந்தைகளுக்கு பொதுவாக என்ன மாதிரியான அறிகுறிகள் தோன்றும்? குழந்தைகள் கரோனாவினால் பாதிக்கப்படும்போது  அவர்களுக்கு பலவிதமான அறிகுறிகள் தென்படும். ஆனால், 25 சதவிகித குழந்தைகளுக்கு எந்த ஒரு அறிகுறியும் இல்லாமலே கரோனா தொற்று ஏற்படுகிறது. குழந்தைகளுக்குப் பொதுவாக காய்ச்சல், மூக்கடைப்பு, இருமல் மற்றும் உணவு உட்கொள்வதில் சிரமம் போன்றவை அறிகுறிகளாக தோன்றுகின்றன.  தொற்றின்…

Continue Reading

மீன் சாப்பிட்டால் நன்றாகத் தூக்கம் வருமா! ஆய்வு முடிவுகள் என்ன சொல்கின்றன?

நீங்கள் மீன்உடல் வறட்சி! இது ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!உணவுகளை விரும்பி சாப்பிடும் வழக்கம் உள்ளவரா? நன்றி Hindu சையது முஷ்டாக் டி20: , தமிழகம், மகாராஷ்டிரம் வெற்றி

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக் கூடிய திடீர் சிக்கல் என்ன?

  ‘என்ன இப்படி இளச்சிட்டீங்க? ஷுகர் இருக்கா?’ முப்பது வயசுதான் ஆகுது… அதுக்குள்ளயே தலமுடியெல்லாம் நரச்சி வயசான ஆளு மாதிரி இருக்குறான்.. ஷுகர் ஏதாச்சும் வந்துடுச்சா? சாப்பாடு கொஞ்சமாதான் சாப்பிட்டீங்க? போதுமா? என்ன ஏதாச்சும் டயட் கன்ட்ரோல்ல இருக்கீங்களா? இல்ல, சக்கர நோயா?’ எங்கே சென்றாலும், இப்படி அன்றாட வேலைகள், உணவுப்பழக்கம் போன்றவற்றில் பல சந்தேகங்களைப் புகுத்திப் பாடாய்படுத்தும் சர்க்கரை நோயைக் கண்டும், தனக்கும் வந்து விடுமோ என்று பயத்துடனும்தான் பலர் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.  சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோயைப் பற்றிய பல தகவல்களை பல்வேறு வகையான ஊடகங்களின் வாயிலாகவும், ஏற்கெனவே நீரிழிவு நோயாளிகளாக இருப்பவர்கள், நண்பர்கள்; மூலமாகவும் தினம் தினம் அனைவரும் கேட்டுக் கொண்டிருப்பதால், முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை நீரிழிவு பற்றிய புரிதல் சற்று அதிகமாகவே இருக்கிறது.  ஆனால், கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு ஏற்படும் திடீர் சிக்கலான கர்ப்பகால நீரிழிவு பற்றியும், அதற்கான உணவுமுறை பற்றியும் முழுமையான தெளிவு பெண்களுக்கு போதுமான அளவில் இல்லை என்றே எண்ணவைக்கிறது அதிகரித்து வரும் தற்போதைய புள்ளிவிவரங்கள்.  இந்தியாவில் வெவ்வேறு இடங்களில், புவியமைப்பைச் சார்ந்து 3.8 % முதல் 21% வரை கர்ப்பகால நீரிழிவு நோய் பரவியுள்ளதாக சமீபத்திய புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.  சென்னையில் 16.2 சதவிகிதமும், ஈரோட்டில் 18.8 சதவிகிதமாகவும் இருக்கிறது. இந்தியர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட வாழ்க்கை முறையையும், உணவுப் பழக்கத்தையும் பின்பற்றும் அமெரிக்காவில், வருடத்திற்கு 1,00,000 பெண்கள் கர்ப்பகால நீரிழிவால் அவதிப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.   நீரிழிவு நோய் எப்படி வருகிறது? கணையம் எனப்படுகின்ற உறுப்பானது, பீட்டா செல்களின் மூலம் இன்சுலின் என்ற ஹார்மோனை சுரக்கிறது. இந்த இன்சுலின் சுரப்பானது, ஒருவரின் உடலிலுள்ள சர்க்கரையை ஆற்றலாக மாற்றி உடலுக்கும் அன்றாட வேலைகளுக்கும் தேவையான சக்தியை உருவாக்கித்தருகிறது. இதனால் சர்க்கரையின் அளவு இரத்தத்தில் அதிகரிப்பது தவிர்க்கப்பட்டு ஒரு சராசரி நிலையில் வைக்கப்படுகிறது.  இவ்வாறு சுரக்கப்படுகிற இன்சுலின் அளவு குறைவதாலோ அல்லது சுரக்கப்பட்ட இன்சுலின் வீரியம் இல்லாமலும் மற்றும் சரியாக பயன்படுத்த முடியாத ஒரு நிலை உடலுக்கு வருவதாலோ, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டிற்குள் இல்லாமல் அதிகமாகி விடுகிறது. இதனால், புரதம் மற்றும் கொழுப்பு போன்ற பிற சத்துக்களின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டு பல்வேறு விதமான உடல் நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. இந்த நிலையே சர்க்கரை வியாதி அல்லது நீரிழிவு நோய் அல்லது மதுமேகம் என்றழைக்கப்படுகிறது.  கர்ப்பகால நீரிழிவு  கர்ப்பகாலம் என்பது, அதிகளவு இன்சுலினை வெளியிடுவதாகவும் அதே சமயம் எதிர் இன்சுலின் ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜன், புரோஜஸ்ட்ரான், பிளாசன்ட்டாவின் லாக்டோஜன், கார்டிசோன் மற்றும் வளர்ச்சியைத் தூண்டும் ஹார்மோன் போன்றவைகளின் செயல்பாட்டால், குறைந்த அளவு இன்சுலின் தாங்குதிறன் அல்லது செயல்திறன் கொண்ட நிலையாகவும் இருக்கிறது. கர்ப்பகாலத்தில் நீரிழிவு ஏற்படுவதற்கு, அப்பெண்ணின் முன்கர்ப்பகால ஆரோக்கியம், பணிச்சூழல், உணவுமுறை, சமூக மற்றும் பொருளாதார நிலை ஆகியவையும் காரணங்களாகின்றன. கர்ப்பகால நீரிழிவு நோய் உள்ள பெண்கள், பிரசவத்திற்குப் பிறகு இன்சுலின் சுரப்பு சீரடைந்து, இரத்தத்தில் சர்க்கரை அளவு…

Continue Reading

உங்கள் சமையல் அறையில் இருக்கும் உயிர்க்கொல்லி வில்லன் இது தான்! ஜாக்கிரதை ரிப்போர்ட்!

உங்கள் சமையல்மீன் சாப்பிட்டால் நன்றாகத் தூக்கம் வருமா! ஆய்வு முடிவுகள் என்ன சொல்கின்றன?அறையில் சிறிய டவல்களை (கைப்பிடித் துணி / கரித்துணி) பயன்படுத்துகிறீர்களா? நன்றி Hindu தினமும் பீர் சாப்பிட்டா கிட்னி ஸ்டோன் வராதுன்னு யார் சொன்னது?

உடல் பருமன் குறைய வேண்டுமா? இது ஒரு சிறந்த வழி!

  காய் : கொத்தவரங்காய் + எலுமிச்சம் பழத்தோல்  + கோவக்காய் சத்துக்கள் : இரும்புச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி, சி நிறைந்துள்ளது. தீர்வு : காலை எழுந்தவுடன்  மற்றும் மாலையில் குடிக்கவும். கொத்தவரங்காய்யுடன் (5), கோவக்காய் (5), ஒரு அரை எலுமிச்சம்பழம் (தோலோடு), உப்பு (கொஞ்சம்), தக்காளி (1), புதினா (சிறிதளவு), வெற்றிலை (2) இவை அனைத்தையும் பொடியாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அதனுடன் சிறிது இஞ்சி (1 துண்டு), மிளகு (2) சேர்த்து அரைத்து ஜூஸாக்கி தினந்தோறும் காலை எழுந்தவுடன் மற்றும் மாலை வேளையில் வெறும் வயிற்றில் குடித்து வரவும். காலை  இரவு வேளை உணவாகசிறுநீரக பாதிப்பு குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை: ஸ்வீடன் மருத்துவ நிபுணர் கேரட் துருவல். 50 கிராம் புடலங்காய் அரிந்தது. – 50 கிராம் கோவைக்காய் அரிந்தது – 50 கிராம் நறுக்கிய தக்காளி. – 2 நறுக்கிய வெங்காயம். – 50 கிராம் தேங்காய் துருவல் – 50 கிராம்சீரகத் தூள். – 5 கிராம்மிளகுத் தூள். – 5 கிராம் எலுமிச்சைச் சாறு தோலோடு  – 50 மி.லி புளிக்காத கெட்டித் தயிர் – 100 கிராம் மேற்கண்ட அனைத்தையும் ஒன்றாக கலந்து, சிறிது உப்பு சேர்த்து அதனுடன் நறுக்கிய கறிவைப்பில்லை, கொத்தமல்லி, புதினா ஆகியவற்றைச் சேர்த்துச் சாப்பிடவும். இதை காலை மற்றும் இரவு வேளை உணவாகச் சாப்பிட்டு வரவும். பின்பு பசித்தால் வழக்கமான உணவு எடுத்துக் கொள்ளலாம். வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் இரவு படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும். குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும். கோவை பாலாஇயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்96557 58609 / Covaibala15@gmail.com நன்றி Hindu தினமும் பீர் சாப்பிட்டா கிட்னி ஸ்டோன் வராதுன்னு யார் சொன்னது?

கீமோதெரபி கேன்சர் நோயாளிகளின் வரமல்ல, சாபம்! என்கிறாரே இந்த அமெரிக்க மருத்துவர் அது நிஜமா?

  கேன்சர் நோயாளிகளை நோயின் பிடியிலிருந்து காக்கும் வரமாகக் கருதப்படும் கீமோதெரபி சிகிச்சைக்கு அமெரிக்க மருத்துவர் ஒருவர் வன்மையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் மட்டும் 14 மில்லியன் கேன்சர் நோயாளிகள் இருக்கிறார்கள். அவர்களில் பலர் நோயால் இறப்பதைக் காட்டிலும் கீமோதெரபி சிகிச்சைமுறையால் கடும் அவதிக்குட்பட்டு விரைவில் மரணமடைகிறார்கள் என்கிறார் டாக்டர் ஹார்டின். பி.ஜோன்ஸ். கீமோதெரபி  என்பது நச்சு ரசாயணங்களை உடலில் செலுத்தும் முறைதானே தவிர அதன் மூலமாக நோயாளிகளுக்கு கடுமையான வலியாலும், பீதியாலும் துடித்து இறப்பதைத் தவிர எந்தவிதமான பலனும் இல்லை. கீமோதெரபி பரிசளிப்பது வலியையும் மரணத்தையும் என்கிறார் டாக்டர் ஹார்டின். இதை இவர் போகிற போக்கில் சும்மா சொல்லி விட்டுப் போகவில்லை. தனது நீண்ட நெடிய மருத்துவ ஆராய்ச்சியின் முடிவாக கீமோதெரபி சிகிச்சை முறையின் பாதங்கள் என ஒரு ஆய்வுக்கட்டுரையாக முன் வைத்திருக்கிறார். கேன்சர் மருத்துவ சிகிச்சை என்பது தற்போது உலகிலுள்ள லாபம் கொழிக்கும் மற்ற வியாபாரத் துறைகளைப் போலவே லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு நிறுவனமாக வளர்ந்து வருகிறது. மருத்துவர்கள், மருத்துவமனைகள், மருந்து நிறுவனங்கள் மற்றும் அவற்றின் பங்குதாரர்கள் ஆகியோரே இதன் மூலம் பெருத்த லாபம் சம்பாதிப்பவர்கள். இவர்களுக்கு லாபம் மட்டுமே முக்கியம். நோயாளிகளின் நோய் குணமாவதைப் பற்றியெல்லாம் அக்கறை இல்லை. ஒவ்வொரு முறையும் ஒரு நோயாளி வழக்கமான கீமோதெரபி சிகிச்சைமுறைக்கு ஒப்புக் கொண்டு கைழுத்திடும் போதும் அது ஒரு லாபக் குறியீடாகவே கருதப்படுகிறது. பெரும்பாலான சிகிச்சைமுறைகளில் கீமோதெரபி ரசாயணங்கள் உடலுக்குள் இஞ்சக்சன் மூலமாக செலுத்தப்படுகிறது. அல்லது கதிர்வீச்சு முறையில் உடலில் உள்ள கேன்சர் செல்கள் ஊடுருவி அழிக்கப்படுகின்றன. அல்லது கேன்சர் செல்கள் பரவிய உடலுறுப்புகள், உள்ளுறுப்புகள் வெட்டி எடுக்கப்படுகின்றன. சில நோயாளிகளுக்கு சிலசமயங்களில் இந்த மூன்று விதமான சிகிச்சைமுறைகளும் பின்பற்றப்படுகின்றன. அப்போதெல்லாம் மருத்துவர்கள் தங்களிடம் சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் பொய் சொல்கிறார்கள், ‘நீங்கள் நோயை எதிர்த்துப் போராடிக்கொண்டு இருக்கிறீர்கள் என!’ ஆனால், உண்மை என்னவென்றால் நீங்கள் உங்களது நேரத்தை, வாழ்நாளை கடன்வாங்கி நீட்டித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது தான். சிகிச்சையின் தாக்கம் முடிந்த பின் மீண்டும் அதே பழைய கடுமையான நோய்த்தாக்குதல் தொடங்குகிறது. முடிவில் மரணமே எஞ்சுகிறது. இதில் சோகத்துக்குரிய விஷயம் நீங்கள் நோயால் இறப்பதைக் காட்டிலும் நோய்க்கான சிகிச்சையால் மிகுந்த வலியுடனும், மோசமான முறையிலும் இறக்க நேரிடுகிறது என்பது தான். இப்படி ஒரு ஆராய்ச்சி முடிவை வெளியிட்டுள்ள டாக்டர் ஹார்டின் ஜோன்ஸ் அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் மெடிக்கல் ஃபிசிக்ஸ் மற்றும் ஃபிசியாலஜி துறைப்பேராசிரியர் என்பதோடு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக கேன்சர் நோயாளிகளின் வாழ்நாள் நீட்டிப்பு குறித்த ஆராய்ச்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமது ஆராய்ச்சியின் முடிவாக அவர் தமது ஆய்வுக் கட்டுரையில் முன் வைப்பது மக்களின் நெடுங்கால நம்பிக்கையான கீமோதெரபி சிகிச்சைமுறை கேன்சர் நோயாளிகளின் நோய்த்தீவிரத்தையோ அல்லது மரணத்தையோ எந்தவிதத்திலும் ஒத்திப் போடாது. மொத்தத்தில் அது கதைக்கு ஆகாத சிகிச்சை. அதனால் பலனேதும் இல்லை என்பதே. அவர் தனது தொடர் ஆராய்ச்சியில் கண்டறிந்ததாகக் கூறுவது கீமோதெரபிக்கு உள்ளாகும் நோயாளிகள் அனைவரும்…

Continue Reading

மனம் சக்தி பெற

போனது போச்சு, இனி ஆக வேண்டியதை யோசிப்போம். நல்ல வேளை. இதோடு போச்சு. உடைஞ்சா என்ன? வேற வாங்கிட்டா போச்சு பஸ்ஸு போயிடுச்சா, அதனால என்ன? அடுத்தமாதவிடாய் சார்ந்த பிரச்சனை நீங்கபஸ் இருக்குல்ல பணம் தான போச்சு. கை கால் இருக்குல்ல. மனசுல தெம்பு இருக்குல்ல. சொல்றவங்க ஆயிரம் சொல்வாங்க எல்லாமே சரின்னு எடுத்துக்க முடியுமா? இதெல்லாம் சப்ப மேட்டரு. இதுக்குப் போயா கவலைப்படறது. கஷ்டம் தான் … ஆனா முடியும். நஷ்டம் தான் … ஆனா மீண்டு வந்திடலாம். விழுந்தா என்ன? எழுந்திருக்க மாட்டனா? இவன் இல்லேன்னா வேற ஆளே இல்லியா? இந்த வழி இல்லேன்னா வேற வழி இல்லியா? இப்பவும் முடியலியா? சரி. இன்னொரு வாட்டி ட்ரை பண்ணு. இது கஷ்டமே இல்லையே. கொஞ்சம் யோசிச்சா வழி தெரியுமே. முடியுமா…ன்னு நினைக்காதே. முடியணும்…னு நினை. முருங்கைக் காய் மந்திரம்!

நிபா வைரஸிலிருந்து பொதுமக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வது எப்படி? அரசு பொது சுகாதாரத் துறை எச்சரிக்கை!

  கடந்த சில நாட்களாக கேரளாவை அச்சுறுத்தி வரும் நிபா வைரஸ் குறித்து அண்டை மாநிலமான தமிழகத்திலும் கடும் பீதி நிலவுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நிபா வைரஸ் தாக்குதல் குறித்த பீதியைப் போக்கும் விதத்தில் தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பரிந்துரைத்துள்ளது. அவை முறையே; நிபா வைரஸ் தொற்று இருக்கும் என சந்தேகிக்கும் இடங்களில் வாழும் பன்றிகளிடமிருந்து மனிதர்கள் விலகியிருத்தல் நல்லது. பன்றிக்கறி உண்பவர்கள் எனில் நிபா வைரஸ் தொற்று பீதி நீங்கும் வரை பன்றிக்கறியுண்ணும் ஆசைக்கு முற்றும் போடுவது நல்லது. பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்பதற்கு முன் நன்றாக நீரில் கழுவிய பின்னரே உண்ண வேண்டும், அணில் மற்றும் வெளவால் கடித்த பழங்களை உண்ணக் கூடாது. மூளைக்காய்ச்சல் & இன்ஃபுளூயன்ஸா வைரஸ் தொற்று இருப்பவர்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து போதிய சிகிச்சை அளித்துக் காக்க வேண்டும். ஏனெனில் இத்தகைய நோய்த்தொற்று உள்ளவர்களைத் தான் நிபா வைரஸ் எளிதில் டார்கெட் செய்கிறது. எனவே நோய் நாடி நோய் முதல் நாடி தீர்ப்பது பாதுகாப்பானது. நிபா வைரஸ் தொற்றைத் தவிர்க்க வனத்துறை, கால்நடை வளர்ப்புத் துறை, வனவிலங்குப் பாதுகாப்புத்துறை என மூன்று துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும், காரணம் வனங்களில் வாழும் வெளவால்களிடமிருந்து பன்றிகளுக்கும் பிறகு பன்றிகளிடமிருந்து மனிதர்களுக்குமென இந்த வைரஸ் பரவுகிறது. கேரளாவில் இந்த வைரஸ் தொற்றால் 10 பேர் இதுவரை உயிரிழந்திருக்கிறார்கள். எனவே நிபா வைரஸ் குறித்த விழிப்புணர்வை அண்டை மாநிலத்தவர்களான நம் தமிழக மக்களுக்கும் தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். நம்பகத்தன்மை வாய்ந்த தரமான ஆய்வகங்களில் மட்டுமே நிபா வைரஸ் தாக்கம் குறித்த சந்தேக ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். வீடுகளில் கால்நடைகள் மற்றும் வளர்ப்பு மிருகங்கள் வளர்ப்பவர்கள் தங்களது விலங்களிடம் நிபா வைரஸ் தொற்று அறிகுறி இருக்கிறதா என கால்நடை மருத்துவர்களை அணுகி சோதித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் வீட்டு விலங்குகள் வாயிலாகவே இந்த நோய் எளிதில் பரவுகிறது. நோய்த்தாக்கம் ஏற்பட்ட நபரை உடனடியாகத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பது நல்லது. நோயின் துவக்க கட்டத்திலேயே சிகிச்சை வழங்கத் தொடங்குவது உயிரிழப்பைத் தடுக்கும்.   நிபா வைரஸ் தொற்று அறிகுறிகள்…வேர்க்கடலையை ஏன் குளிர்காலத்தில் சாப்பிட வேண்டும் தெரியுமா? நிபா வைரஸ் மனித உடலைத் தாக்கிய மாத்திரத்தில் 3 முதல் 14 நாட்களுக்குள் மனித உடலில் முழு வீச்சில் பரவி விடுகிறது. நோய்த்தொற்று ஏற்பட்ட மூன்றாவது நாளில் இருந்தே காய்ச்சலும், தலைவலியும் தோன்றி விடும். பாதிக்கப்பட்டவர்கள் சதா அரைத்தூக்க நிலையில் இருக்க நேரிடும். நோய்த்தொற்று வீரியமானதாக இருந்தால் நோயாளி 28 மணி நேரத்தில் இருந்து 48 மணி நேரத்திற்குள் கோமா நிலைக்குச் சென்று விடுவார். சிலருக்கு ஆரம்ப நிலையில் சுவாசக் கோளாறுகளும் பிறகு நேரமாக, ஆக நோயின் வீரியம் கூடி அதிதீவிரமான நரம்பியல் பாதிப்புகளும் ஏற்படும். சிலருக்கு வலிப்பு வரும். கோமா நிலைக்குச் செல்லும் நோயாளிகள் பலர் உயிரிழக்க நேரிடும்….

Continue Reading

இழந்த பணத்தை மீட்கணுமா?

‘வங்கியில் இருந்து பேசுகிறோம். உடனடியாக உங்கள் வங்கி கணக்கில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். பான் கார்டு எண்ணை பதிவு செய்ய வேண்டும். நெட்பேங்கிங் முறையை அப்டேட் செய்ய வேண்டும்’ என, மர்ம கும்பல்கள், ‘ஆன்லைன்’ வாயிலாக பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றன. யீட்டு எண்களை தெரிவித்தோ அல்லது ஓ.டி.பி., இக்கும்பலிடம் ஏ.டி.எம்., கார்டின் ரகசிய குறிஎண்ணை தெரிவித்தோ பணத்தை பறிகொடுக்க வேண்டாம். அப்படி பணத்தை இழக்க நேரிட்டாலும் பதற வேண்டாம். நிதானம் தவறாமல், ‘ஸ்மார்ட் போன் வாயிலாக, வீட்டிலோ அல்லது வேறு இடத்தில்இருந்தபடியோ கட்டணமில்லா, 155260 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.இந்த எண்ணிற்கு, 24 மணி நேரத்திற்குள் புகார் அளித்தால், உங்கள் வங்கி கணக்கில்இருந்து திருடி, மர்ம கும்பலின் வங்கி கணக்கிற்கு மாற்றிய பணத்தை, அவர்களால் எடுக்க முடியாமல் செய்து விடலாம். காலதாமதமாக புகார் செய்தால், பணத்தை திரும்ப பெறுவது எளிதல்ல. தொப்பையைக் குறைக்க முடியாமல் கஷ்டப்படுகிறீர்களா? இதோ 7 நாட்களில் தொப்பை குறைய 5 எளிய வழிகள்! இதுபோன்ற சைபர் குற்றங்கள் தொடர்பாக விளக்கம் பெறவோ அல்லது புகார் அளிக்கவோ, காவல் நிலையத்திற்கு நேரில் வர வேண்டியஅவசியம் இல்லை. www.cybercrime.gov.in என்ற, ‘இ- மெயில்’ வாயிலாகவும் புகார் அளிக்கலாம். செருப்பை கழற்றி விட்டு வீட்டுக்குள் நுழைந்தால் உடல் எடை குறையும், புதிய ஆய்வு முடிவு வெளியீடு!

தீராத மலச்சிக்கல்  தீர

  தீர்வு : முற்றின முருங்கை விதை (10), வெண் பூசணிக்காய் (100 கிராம்), புடலங்காய் (100 கிராம்) இவைகளை நன்றாக கழுவி நறுக்கி மூன்றையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் அல்லது மோர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி காலை மற்றும் இரவு வேளை உணவாக குடிக்கவும். பின்பு பசித்தால் வழக்கமான உணவு எடுத்துக் கொள்ளலாம். முருங்கைக் கீரை சிறிதளவும், மணத்தக்காளிக் கீரை காயுடன் சிறிதளவும் எடுத்து இரண்டையும் நீராவியில் ஒன்றாக வேக வைத்து பொரியலாக காலை மற்றும் மதியம்  வேளை உணவில் அதிகம் எடுத்துக் கொள்ளலாம். பீட்ரூட் சாறு (அரை டம்ளர்), தண்ணீர் (அரை தம்ளர்) இவை இரண்டையும் கலந்து இரவு உறங்க போவதற்கு முன்பாக குடித்து வந்தால் பல மாதங்களாக உள்ள மலச் சிக்கலும், குணமாகும். சத்துக்கள் : நார்ச் சத்து, புரதச் சத்து, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து  மற்றும் வைட்டமின்களும் மிக அதிக அளவில் உள்ளன.பிரசவத்திற்குப் பின்பு உண்டாகும் தொப்பை குறைந்து உடல் இளமையாக உதவும் ரசம் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும். குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும். கோவை பாலாஇயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்96557 58609 / Covaibala15@gmail.com நன்றி Hindu சிறுநீரக பாதிப்பு குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை: ஸ்வீடன் மருத்துவ நிபுணர்

ஆசனக் குழாய் சுருக்கம், ஆசனவாய் எரிச்சல், உடல் சூடு, முதுகு வலி அனைத்தும் சரியாக

வைட்டமின்கள் (ஏ,சளி, சீழ், ரத்தத்துடன் கூடிய வயிற்றுப்போக்கு நிற்கபி, சி, ஈ மற்றும் கே), கனிமங்கள், கால்சியம், இரும்புச் சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் ஜிங்க் வளமையாக உள்ளது. நன்றி Hindu பற்களில் உள்ள கறைகள் நீங்க வேண்டுமா?

உங்களுக்கு எஸ்கலேட்டர்ல ஏறப் பயமா? அப்போ இது உங்களுக்காகத்தான்!

  சென்னையில் 15 வருடங்களுக்கு முன்பு ஸ்பென்சர் பிளாஸா மாதிரி சில இடங்களில் மாத்திரமே எஸ்கலேட்டர் இருந்தது. ஒருமுறை நாங்கள் அங்கே சென்றிருந்த போது எனக்கு எஸ்கலேட்டர் குறித்த பயம் இருந்தாலும் அப்போது எப்படியோ அந்தப் பயத்தைப் பற்றி பொருட்படுத்தாது என் 70 வயதுப் பாட்டியுடன் அதில் ஏறிச் சென்றேன். எஸ்கலேட்டரில் ஏற எனக்குத்தான் பயமே தவிர பாட்டி ரொம்ப ஜாலியாக அதில் ஏறி வந்தார். இறங்கியதும் இதென்னடா? அவ்வளவு தானா? நாம கீழ இறங்கும் போதும் இதிலேயே இறங்கலாம் என்றவாறு அப்புசாமியின் மாடர்ன் சீதாப்பாட்டி ஸ்டைலில் புன்னகை பூத்தார். ஒரே ஒரு முறை… அது தான் முதல் முறையும் கூட…  அப்படி ஒரே ஒரு எஸ்கலேட்டர் பயணத்திலேயே எனக்கு நெஞ்சுக்குள் ஐஸ் கத்தியை இறக்கியதைப் போல மனமெல்லாம் எப்போதடா பத்திரமாக அதிலிருந்து கீழே இறங்குவோ என்று பரபரப்பாக இருந்தது. அதாகப் பட்டது அப்போது நான் நன்கு உணர்ந்து கொண்டேன், எனக்கு எஸ்கலேட்டரில் பயணிப்பது என்றால் ரொம்பப் பயம் என்று! அதற்குப் பின் இப்போதெல்லாம் சென்னையில் பல இடங்களில் எஸ்கலேட்டர் வந்து விட்டது. இன்னும் சில வருடங்களில் தடுக்கி விழுந்தால் ஏதாவதொரு எஸ்கலேட்டரில் தான் விழுந்து எழுவோமோ என்னவோ! அப்படியான நாட்கள் வந்து விட்டன. ஆனால், எனக்கு எஸ்கலேட்டர் பீதி மட்டும் இன்னும் தீரவே இல்லை. எங்கு சென்றாலும் எஸ்கலேட்டர் இருந்தால் உடனே அங்கே மாடிப்படிகளோ அல்லது மின் தூக்கியோ( லிஃப்டோ) இருக்கிறதா? எனத் தேடத்துவங்கி விடுகிறேன். அவை இரண்டும் இல்லாமல் வெறும் எஸ்கலேட்டரில் தான் மாடிகளைக் கடக்கவேண்டுமெனில் அங்கே ஷாப்பிங் செய்யவே தேவையில்லை எனப் புறக்கணிக்கக் கூட தயாராக இருக்கிறேன் நான். காரணம் எனக்கிருக்கும் எஸ்கலேட்டர் பயம் தான். உலகில் நான் மட்டும் அல்ல. இன்னும் பலருக்கும் கூட இந்த பயம் இருக்கிறதெனச் சொல்கின்றன கூகுளும், யூ டியூபும் இன்னபிற அறிவியல் சஞ்சிகைகளும். இதை மருத்துவப் பெயரில் சொல்வதென்றால் ‘எஸ்கலோஃபோபியா’ என்கிறார்கள். எஸ்கலோஃபோபியா இருப்பவர்களுக்கு எஸ்கலேட்டரில் பயணிக்க பயம் இருக்கும். அந்தப் பயம் சாதாரணமானது தான் எனில் உரிய துணை இருப்பின் அதாவது எஸ்கலேட்டர் பயன்படுத்த உங்களை ஊக்குவிக்கக் கூடிய அளவில் கணவரோ / மனைவியோ, நெருங்கிய நண்பர்களோ, உறவினர்களோ, உங்களது குழந்தைகளோ இருந்து அவர்களது துணையுடன் நீங்கள் எஸ்கலேட்டர் பயத்தைக் கடந்து விட்டீர்கள் எனில் உங்களது எஸ்கலோஃபோபியா குறித்து நீங்கள் அஞ்ச வேண்டியதே இல்லை. உங்களால் அந்த பயத்தை எளிதில் கடக்க முடியும். மாறாக எந்தவிதத்திலும் உங்களது எஸ்கலேட்டர் பயம் மறையவே இல்லை… நாளுக்கு நாள் கூடிக் கொண்டே தான் போகிறது. எஸ்கலேட்டரைக் கண்ட மாத்திரத்தில் தலைசுற்றி மயக்கம் வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள், அப்படியான சமயங்களில் நீங்கள் நிச்சயம் உங்களது பயத்தை எதிர்கொண்டு போராடி வெல்லத்தான் வேண்டும். ஏனெனில், இனி வரும் உலகில் எஸ்கலேட்டர்கள் எனும் நகரும் படிக்கட்டுகளின்றி உங்களால் சில இடங்களுக்குச் செல்லவே முடியாமல் ஆகலாம். ஒவ்வொருமுறையும் படிகளையும், லிஃப்டையும் தேடி…

Continue Reading

அடேங்கப்பா! எலுமிச்சைப் பழத்தில் இவ்வளவு நன்மைகளா?

  சுப காரியங்களில் முதல் இடம் வகிக்கும் பழம் எலுமிச்சையாகும். விலை மலிவாகவும், எல்லா சத்துக்களும் உடைய பழங்களில் எலுமிச்சையும் ஒன்று. மனிதர்களுக்கு ஏற்படும் எல்லாவித நோய்களையும் குணமாக்கும் நிவாரணியாக எலுமிச்சை விளங்குகிறது. எலுமிச்சையில் அதிக கால்சியம், ஃபோலிக் அமிலம் மற்றும் சிட்ரிக் அமிலம் உள்ளது. இது தாகத்தைப் போக்க உதவும் பானமாகவும் மற்றும் பலவித மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ள பழமாகவும் உள்ளது. எலுமிச்சம் பழத்தைப் போல எலுமிச்சம் பழத்தின் தோலிலும் ஏராளமான நன்மைகள் உள்ளது. மருத்துவ குணங்கள் :ஏழே நாட்களில் அழகான கையெழுத்து தேள் கொட்டின இடத்தில் எலுமிச்சம் பழத்தை இரண்டு துண்டாக வெட்டி தேய்த்தால் விஷம் முறியும். எலுமிச்சம் பழத்திற்கு வாந்தி, குமட்டல், மயக்கம், நீர்வேட்கை, கண் நோய், காது வலி போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை உள்ளது. எலுமிச்சம் பழச்சாற்றை தலையில் தேய்த்து குளித்தால் பித்தம், உடல் உஷ்ணம் போன்றவை குறையும். விரலில் நகச்சுற்று ஏற்பட்டவுடன் எலுமிச்சம் பழத்தை துளையிட்டு, விரலை அதனுள் சொருகி வைத்தால் வலி குறையும். எலுமிச்சம் பழச்சாற்றுடன் தேன் கலந்து குடித்து வந்தால் வறட்டு இருமல் தீரும். மருதாணியை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றில் கலந்து பாதத்தில் தடவி வந்தால் எரிச்சல் ஏற்படுவது குறையும். எலுமிச்சம் பழத்தின் விதைகளை நீரில் போட்டு காய்ச்சி, அதில் இருந்து எழும் ஆவியை முகத்தில் படும்படி ஆவி பிடித்தால் முகம் பெலிவு பெறும். உயர்தர பொட்டாசியம், எலுமிச்சைச் சாற்றில் உள்ளதால் இதய நோயாளிகளின் இதயத்தை பலமாக்குகிறது. வெளியூர் பயணத்தின்போது சிறுநீரகத் தொற்று ஏற்படாமல் இருக்க, எலுமிச்சைச் சாற்றை கையோடு எடுத்துச் செல்லலாம். எலுமிச்சைச் சாறு, சிறுநீரை அதிகரித்து, தொற்றுக்கள், நச்சுக்களை வெளியேற்றுகிறது. எலுமிச்சை, ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்பட்டு, ரத்தத்தைச் சுத்திகரிக்கும். காலையில் வெந்நீரில் 5-10 மி.லி. எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது, உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவும். கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். எலுமிச்சைச் சாற்றை, மிதமான வெந்நீரில் கலந்து வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம், பல் வலி, ஈறுகளில் ரத்தம் போன்ற பாதிப்புகள் இருந்தால் சரியாகும். கபம் அதிகம் இருந்தால் 10 மி.லி. எலுமிச்சைச் சாற்றுடன் ஐந்து மி.லி. இஞ்சிச் சாறு, சிறிது தேன் சேர்த்து, சுடுநீரில் கலந்து குடிக்கலாம். வயிற்றில் காற்று அடைத்ததுபோல், அழுத்தமாக இருந்தால் சுடுநீரில் எலுமிச்சைச் சாறு, வறுத்துப் பொடித்த சீரகம் அரை டீஸ்பூன், சிறிது தேன் கலந்து அருந்தலாம். சட்டென காற்று வெளியேறி, வயிறு லேசாகும். மூல நோய் இருப்பவர்கள் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக வெட்டி, அதில் கறுப்பு உப்பு கலந்து, வாயில் அடக்கிக்கொள்ளலாம். வலி, வீரியம் குறையும். நன்றி Hindu காரமான நெடியுடன் கூடிய சிறுநீர் வெளியேறுவதை தடுக்க 

இரவில் நன்றாக தூக்கம் வர வேண்டுமா? இதோ ஒரு இயற்கை வழி!

மருதோன்றி, ஐனா இலை, ஐவனம், அழவணம் ஆகிய பெயர்களும் மருதாணி தாவரத்திற்கு உண்டு. மருதாணி இலை, பூ, விதை, வேர் ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை.  மருதாணி இலை நல்ல கிருமி நாசினி; கை, கால்களில் தோன்றும் சேற்றுப்புண்கள், அழுக்குப்படை, கட்டி, பித்த வெடிப்புகள் ஆகியவற்றை மருதாணி சாந்து குணமாக்கும். மருதாணி வேர், நோய் நீக்கி உடலைத் தேற்றும். மருதாணி பூக்களைச் சேகரித்து உலர்த்தி தலையணையில் வைத்து படுத்து வர நல்ல தூக்கம் உண்டாவதுடன், தலைப் பேன்களும் குறையும். மருதோன்றி இலைகளை மைய அரைத்து அடை போன்று தட்டையாகத் தட்டி நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும். இதனை தேவையான அளவு தேங்காய் எண்ணெயில் போட்டு 21 நாள்கள் வெயிலில் வைத்து பின்னர் வடிகட்டி பத்திரப் படுத்த வேண்டும். இந்த எண்ணெயைத் தலையில் தடவி வரவேண்டும். இதனால் இளநரை மாறுவதுடன் கண்கள் குளிர்ச்சி அடையும். நல்ல தூக்கம் உண்டாகும். 6 தேக்கரண்டி அளவு புதிதாக சேகரித்த மருதாணி இலைச் சாற்றை வெறும் வயிற்றில் காலை வேளைகளில் குடிக்க வேண்டும். 10 நாள்கள் வரை இவ்வாறு செய்ய பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை படுதல் குணமாகும். மருதாணி இலைகளுடன் சிறிதளவு பாக்கு சேர்த்து அம்மியில் அரைத்து இரவில் கை, கால் நகங்களின் மீது வைத்து, காலையில் கழுவ வேண்டும். இவ்வாறு 15 நாள்களுக்கு ஒரு முறை செய்து வர நகம் சொத்தையாவது அழுக்குடன் பளபளப்பு இல்லாமல் இருப்பது ஆகிய பிரச்னைகள் தீரும். மேலும் நகம் தொடர்பாக ஏற்படும் எந்த நோயானாலும் தடுக்கப்படும். மருதாணி இலையை அரைத்து பசையாக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் பூச கொப்புளங்கள் தீக்காயங்கள் குணமாகும். தாங்க முடியாத முதுகு வலியால் அவஸ்தை படுகிறீர்களா? இதோ தீர்வு! மருதாணி இலைகளை அரைத்து பாதங்களில் வைத்துக் கட்டுவது சிறந்த முறையாக பாரம்பரிய மருத்துவத்தில் இன்றும் இருந்து வருகின்றது. மருதாணி விதை எண்ணெய்யை உடலில் தடவ உடல் எரிச்சல் குணமாகும். மருதாணி இலை மற்றும் மலர்கள் குஷ்ட நோய்க்கு மருந்தாகப் பயன்படுகின்றன. இந்த தகவல்கள் மருத்துவ ஆய்வுகள் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளன. – கவிதாபாலாஜி கணேஷ் நன்றி Hindu State Level Chess League

பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை! 35 வயதுக்கு மேல் குழந்தை பெற்றால், பிறக்கும் குழந்தைகளுக்கு இதய நோய்கள் தாக்கும் அபாயம்!

  35 வயதுக்கு மேல் குழந்தை பெற்றுக் கொள்ள நினைக்கும் பெண்களுக்கொரு ஒரு எச்சரிக்கை. குழந்தை பெற்றுக் கொள்ளும் வயது ஏற, ஏற பெண்களின் உடல்நிலையில் ஏற்படும் ஹார்மோனல் மாற்றங்களுக்கு ஏற்ப அவர்களது குழந்தை பெறும் திறனும் பாதிப்புக்கு உள்ளாகிறது எனப் பல்லாண்டுகளாகவே மருத்துவ ஆய்வுக் கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. 35 வயதுக்கு மேல் ஒரு குழந்தையை கருப்பையில் தாங்கி 10 மாதம் சுமந்து போஷாக்காக வளர்த்து பிரசவிக்கும் திறன் பெண்களுக்கு குறைந்து விடுகிறது. வயது ஏற, ஏற கருப்பை தனது ஆரோக்யத்தைப் படிப்படியாக இழந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாகவே மகப்பேறு மருத்துவர்கள் திருமணமான தம்பதிகளிடையே விரைவில் குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆவலை ஊக்குவிப்பதோடு, பணி மாறுதல், உயர் கல்வி, வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக காத்திருத்தல், உள்ளிட்ட காரணங்களுக்காக எல்லாம் குழந்தப்பேற்றை தள்ளிப்போட நினைக்கும் மனப்பான்மையையும் தொடர்ந்து கண்டித்து வருகிறார்கள். உடலியல் காரணங்களினாலோ அல்லது பொருளியல் காரணங்களினாலோ ஒரு பெண்ணுக்கு குழந்தைப்பேறு தள்ளிப் போய் காலதாமதாக குழந்தைப்பேறு நிலைக்கிறது எனில் குழந்தையைக் கருவில் தாங்கும் தாயின் வயதைப் பொறுத்து கருவிலிருக்கும் குழந்தையின் உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி மற்றும் உள்ளுறுப்பு வளர்ச்சிகள், இதய ஆரோக்யம் உள்ளிட்டவை அமைகின்றன என்கிறது சமீபத்தில் வெளிவந்துள்ள கனடா மருத்துவப் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று. சுயதொழில் தொடங்கரூ.15 லட்சம் வரை கடனுதவி அந்த ஆய்வின் அடிப்படையில் வயதான எலிகளிடையே இந்த சோதனை நடத்தப்பட்டதில் மேற்கண்ட ஆய்வு முடிவு நிரூபணமாகியுள்ளது. 35 வயதுடைய பெண்ணுக்கு சமமான கருப்பை திறன் கொண்ட வயதான பெண் எலிகளிடையே நடத்தப் பட்ட அந்த மருத்துவ ஆய்வில் வயதாக, ஆக பெண்களின் கருப்பை ஆரோக்யம் நிறைந்த, உடற்கோளாறுகள் அற்ற குழந்தைகளைப் பெற்றுத்தரும் திறனை படிப்படியாக இழந்து வருவது நிரூபணமாகியுள்ளதாக இந்த ஆய்வை நடத்திய மருத்துவக் குழுவின் தலைமை ஆய்வாளரான சாண்ட்ரா டாவிட்ஜ் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வின் மூலமாக நடுத்தர வயதுக்கு மேற்பட்டு வயதான பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வரக்கூடிய ஆரோக்ய குறைபாடுகள் குறித்து மேலும் விளக்கமாக ஆராய முடிவதாக அவர் தெரிவித்துள்ளார். நன்றி Hindu வாயில் துர்நாற்றம் வீசுகிறதா? இதை செய்யுங்கள் போதும்!