ஜீரண மண்டலத்தில் ஏதாவது பிரச்னை இருந்தால் அதற்கான எளிய அறிகுறி தான் விக்கல். இந்த விக்கல் எப்போதெல்லாம் வருகிறது என்று யோசித்துப் பாருங்கள். வயிற்றுக்கும், மார்புப் பகுதிக்கும் இடையில் உதரவிதானம் என்றொரு தடுப்புச் சுவர் போன்ற பகுதி உண்டு. இது தான் வயிற்றையும், நுரையீரலையும் தனித்தனியே பிரிக்கிறது. நாம் மூச்சை இழுக்கும் போது நுரையீரலுக்குள் ஆக்ஸிஜன் சரளமாகச் செல்வதற்கு வசதியாக இந்த உதரவிதானம் மேலும், கீழுமாக இயங்கக் கூடியது. இது நமது உடலுக்குள் சாதாரணமாக நடக்கும் ஒரு செயல்பாடு. சிற்சில சமயங்களில் மூச்சு விடும் போது உதரவிதானம் மேலும் கீழுமாக இயங்கும் சமயத்தில் நமது குரல்வளை மூடியிருந்தால் உடனே விக்கல் வந்து விடுகிறது. விக்கல் வரக் காரணங்கள்… நெடுநேரமாகப் பசியுடன் இருந்து விட்டு திடீரென உணவு கிடைத்ததும். அது காரமான உணவாக இருந்தபோதும் அள்ளியள்ளி வாயில் திணித்துக் கொண்டோமெனில் அப்போது திடீரென விக்கல் வரும். சிலருக்கு வயிறு முட்டச் சாப்பிட்டால் விக்கல் வரும். சிலருக்கு வயிறு முட்டத் தண்ணீர் குடித்தால் கூட விக்கல் வரும். சிலருக்கோ கண்களில் நீர் வரும் அளவுக்கு விழுந்து, விழுந்து சிரித்தால் கூட விக்கல் வரும். சிலருக்கு உளவியல் ரீதியிலான பிரச்னைகளோ அல்லது மன அழுத்தமோ இருந்தாலும் கூட விக்கல் வரும். பொதுவாக சாதாரண விக்கல் என்றால் தொடர்ச்சியாக சிறிது தண்ணீரை மொண்டு விழுங்கினாலே விக்கல் நின்று விடும். ஆனால், என்ன முயன்றும் விக்கல் நின்றபாடில்லை என்றால் நாம் நிச்சயம் மருத்துவரை அணுகித்தான் ஆகவேண்டும்.உடல் வறட்சி! இது ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்! தண்ணீர் அருந்தியும் விக்கல் நிற்கவில்லை என்றால்…. விக்கல் வந்த சில நிமிடங்களில் அது நின்று விட்டால் பிரச்னையில்லை. அது சாதாரண விக்கலாகத்தான் இருக்கும். ஆனால், ஒருமுறை விக்கல் வந்து அது 2 மூன்று நாட்கள் வரை நீடித்தால் நிச்சயம் உடலுக்குள் பிரச்னை இருக்கிறது என்று தான் அர்த்தம்.அது காசநோய், கேன்சர், நுரையீரலில் நெறி கட்டுதல், உதரவிதானம் செல்லும் பெரினிக் நரம்பு பாதிப்பு என ஏதாவது தீவிரமான ஆரோக்யக் கோளாறின் அறிகுறியாகவும் இருக்கலாம். எனவே விக்கல் ஓரிரு முறைகளுக்கு மேல் நீடித்தால் உடனே மருத்துவரைக் கலந்தாலோசித்து விடுவதே நல்லது. விக்கலுக்கு ஒரு எளிய பாட்டி வைத்திய முறை… சாதாரண விக்கல் என்றால் இரண்டு டம்ளர் தண்ணீர் அருந்தினாலே நின்று விடும். இதை கிராமப் புறங்களில் 7 மடக்கு தண்ணீர், 9 மடக்குத் தண்ணீர் என்பார்கள். விக்கல் வந்ததும் ஒரு பெரிய டம்ளரில் தண்ணீரை எடுத்துக் கொண்டு மூச்சு விடாது 7 மடக்கோ 9 மடக்கோ விழுங்கினீர்கள் என்றால் விக்கல் நின்று விடும். சிலருக்கு விக்கல் வந்ததும் ஒரு ஸ்பூன் நிறைய சர்க்கரையை அள்ளி வாயில் திணித்துக் கொண்டு அப்படியே சுவைத்து விழுங்கி நீரருந்தினால் விக்கல் நிற்கும். கைக்குழந்தைகளுக்கு விக்கல் வந்தால் உச்சந்தலையில் சிறு துரும்பைக் கிள்ளி வைக்கச் சொல்வார்கள். பச்சிளம் சிசுக்களின் உச்சந்தலை மிக மிக மென்மையானது அந்தப்பகுதியில் துரும்பு…
நமது உடல் ஒரு இயந்திரம் போன்றது அதற்கு நாம் உண்ணும் உணவுகளே எரிபொருட்களாகி இந்த இயந்திரத்தை இயக்குகிறது. அப்படி இருக்கையில் நமது உடலில் ஏற்படும் சில மாற்றங்களைத் தடுப்பதற்கான ஆற்றலும் இந்த உணவுப் பொருட்களிலேயே இருக்கிறது. அந்த வகையில் பல மருத்துவ குணங்களை கொண்ட தேன் மற்றும் பாலினால் நமக்குக் கிடைக்கும் உடல்நல நன்மைகளைப் பற்றி அறிவீர்களா? தினமும் வெது வெதுப்பான பாலில் சிறிது தேன் கலந்து குடிப்பதினால் எந்தெந்த பிரச்னைகளில் இருந்து நீங்கள் விடுபடுவீர்கள் என்று பார்ப்போம். 1. ஆற்றலை அதிகரிக்கும்: ஒரு பெரிய கிளாஸ் பாலில் இருக்கும் கால்சியம் சத்துடன், நமது உடலின் ஆற்றல் சக்தியை அதிகரிக்கத் தேவையான கார்போஹைட்ரேட் சத்து நிறைந்திருக்கும் தேனை கலந்து குடிப்பதால் அது உடல் வலிமையை அதிகரிக்கும். 2. எலும்புகளை வலிமையாக்கும்: எலும்புகளின் வலிமைக்குத் தேவையானது கால்சியம் என நாம் அனைவருக்கும் தெரியும், அந்தச் சத்து மிகவும் அதிகமாகக் கிடைக்கும் ஒரு உணவுப் பொருள் போல். ஆனால் நமது உடல் இந்த கால்சியம் சத்தை சரியாக உறிந்து எடுப்பதில்லை, அதனால் பாலில் தேனைக் கலப்பதன் மூலம் இந்த கால்சியம் சத்து ரத்தத்தின் வழியாக எலும்புகளைச் சென்றடைகிறது. கால்சியம் எலும்புகள் மட்டும் இல்லாமல் பல் வலிமை மற்றும் முடி வளர்ச்சிக்கும் தேவையான ஒன்று. 3. செரிமானத்தை அதிகரிக்கும்: இதய நோய் உள்ளவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள்! தேனில் இருக்கும் புரோபயாடிகள், பாலில் இருக்கும் புரோபயாடிக் கலவைகளையும் மேம்படுத்தி செரிமானத்திற்கு உதவுகிறது. 4. மலச்சிக்கலைச் சரி செய்யும்: இரவு தூங்க செல்வதற்கு முன்பு பாலில் தேனைக் கலந்து குடிப்பது மறுநாள் காலையில் ஏற்படும் மலச்சிக்கல் பிரச்னையை குணப்படுத்திவிடும். 5. தோல் சுருங்காமல் தடுக்கும்: பால் மற்றும் தேன் கலவையில் இருக்கும் ஆண்டிஆக்ஸிடண்ட்ஸ் வயதாவதால் நமது சருமத்தில் ஏற்படும் மாற்றங்களைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது. இதனால் வயதின் காரணமாகவோ அல்லது இளம் வயதிலேயே தோல் சுருக்கம் ஏற்படுவதைத் தடுத்து சருமத்திற்கு ஊட்டச்சத்தைத் தந்து முகத்தின் பொலிவை அதிகரிக்கும். 6. தூக்கமின்மையைச் சரி செய்யும்: தேன் ஒரு இனிப்பான உணவு என்றாலும் அது உடலின் இன்சுலின் சுரப்பைக் கட்டுப்படுத்தி இரவில் தூக்கமின்மை பிரச்னையை சரி செய்யும். பால் மற்றும் தேன் கலவையைக் குடிப்பதன் மூலம் இதைப் போன்ற பல அடிப்படை பிரச்னைகளில் இருந்து நாம் விடுபட முடியும். அனைத்துச் சிக்கலுக்கும் மருத்துவரைத் தேடி ஓடுவதைத் தவிர்த்து உணவையே மருந்தாக்கித் தீர்வு காணுங்கள். நன்றி Hindu பச்சை காப்பிக் கொட்டை 'B' குரூப் ரத்தத்தை 'O' குரூப்பாக மாற்றுமா?
‘நாம் ஓடி ஓடி உழைப்பது எதற்கு எல்லாம் இந்த வயித்துக்கு தானே?’ வாய்க்கு ருசியாக முதலில் நன்றாகச் சாப்பிட்டுவிட்டு சற்று ஓய்வெடுக்க அமரும் போது தான் நம் கண்ணில் படும் வளர்ந்து நிற்கும் தொப்பை. அதற்காகச் சாப்பிடுவதை நிறுத்தி பட்டினி கிடக்கக் கூடாது, அதனால் தொப்பை குறையப் போவதும் கிடையாது. தொப்பையை வைத்து பலரும் படாத பாடு படுகிறோம், பிடித்த ஆடையைப் போட முடியாது, குனிந்து நிமிர்ந்து வேலை செய்ய முடியாது மற்றும் ஆரோக்கிய குறைபாடுகளும் ஏற்படும். இந்தத் தொப்பையை குறைக்கப் பல வழிகளில் நீங்கள் முயற்சித்து இருப்பீர்கள், ஆனால் பலன் எதுவும் கிடைத்திருக்காது. கவலையை விடுங்கள் உங்களது தொப்பை குறைந்து தட்டையான வயிற்றை ஒரே வாரத்தில் பெற இந்த 5 விஷயங்களைச் செய்தால் போதும். 1. நிறையத் தண்ணீர் குடியுங்கள்: தட்டையான வயிற்றைப் பெற வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்துவிட்டாலே அதற்கு முதலில் நீங்கள் செய்ய வேண்டியது நிறையத் தண்ணீர் குடிப்பது தான். பொதுவாகவே நிறையத் தண்ணீர் குடிப்பது உடலுக்கு நன்மை தரக்கூடிய ஒன்று, அதிலும் குறிப்பாக உடலில் நீர் சத்து அதிகமாக இருந்தால் அது உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்கும், இதனால் தொப்பையின் அளவும் குறையும். சில சமயங்களில் உடலுக்குத் தேவையான நீர் பற்றாக்குறையே வயிறு வீக்கத்தை ஏற்படுத்துகிறது. சுவைக்கு வேண்டும் என்றால் தண்ணீரில் எலுமிச்சை, ஆரெஞ்சு, வெள்ளரிக் காய்களை நருக்கி பொட்டு குடிக்கலாம். 2. கிரீன் டீ: இது நம்மில் பலருக்கும் தெரிந்த ஒரு வழி தான், இன்னும் சொல்லப் போனால் நம்மில் பலர் இதை முயற்சி செய்துவிட்டு இதைக் குடிப்பதற்கு தொப்பையுடனே வாழ்ந்து விடலாம் என்ற முடிவை எடுத்திருப்போம். ஆனால் உண்மையில் கிரீன் டீ உடலுக்கு அவ்வளவு நன்மை தரக்கூடிய ஒன்றாகும். இதில் இருக்கும் ஆண்டிஆக்ஸிடண்ட் தொப்பையைக் குறைத்து உடலின் மெட்டபாலிஸத்தை அதிகரிக்கும். ஆகையால் தினமும் ஒரு கப் கிரீன் டீ கட்டாயம் குடிக்க வேண்டும். 3. நார் சத்து நிறைந்த உணவுகளை கம்மியாக உண்ணுங்கள்:அடித்து துவைக்கற வெயில் காலத்தில் இதையெல்லாம் செய்யாதீங்க! நார் சத்து உடலுக்குத் தேவையான ஒன்று என்றாலும் அதை அதிகமான சாப்பிடுவது வயிற்றை வீக்கம் அடையைச் செய்யும். உதாரணத்திற்கு பீன்ஸ், கேரட், தேங்காய், காலிஃப்லவர் போன்றவை நார் சத்து அதிகமாக இருக்கும் உணவுப் பொருட்கள், அதற்காக முற்றிலும் அவற்றைத் தவிர்த்து விடாதீர்கள், நார் சத்தும் உடலுக்கு மிகவும் முக்கியமான ஒன்று. அதற்குப் பதிலாக பொட்டாசியம் சத்து அதிகம் இருக்கும் வாழைப்பழம், பப்பாளி, மாம்பழம் மற்றும் தயிர் ஆகியவற்றைச் சாப்பிடுவது மெட்டபாலிஸம் அளவைச் சரி செய்யும். 4. ஏரோபிக் உடற்பயிற்சி: ஏரொபிக்கை போல் வேறு எந்த உடற்பயிற்சியும் தொப்பையை வேகமாகக் குறைக்காது. இது பெரும்பாலும் 67% வயிற்று கொழுப்பை கரைத்துவிடும். ஒரு வாரத்திற்குக் குறைந்தது 150 நிமிடங்கள் இதைச் செய்தால் போதும், அதாவது நீச்சல் அடிப்பது, நடைப்பயிற்சி செய்வது இல்லையேல் வேகமாக ஓடுவது போன்றவற்றை…
சென்னை: இரவு வானத்தில் எப்போதாவது ஒரு முறை அதிசயங்கள் நடக்கும். அந்த வகையில், நேற்று வெள்ளி, நிலவு மற்றும் சனி ஆகிய கிரகங்ள் ஒரே நேர்க்கோட்டில் தெரிந்திருக்கின்றன. வாய்ப்பிருந்தால் இன்றும் இதனை நம்மால் சென்னையில் இருந்து பார்க்க முடியும். வானியல் அதிசயம்: பூமியிலிருந்து சுமார் 10.6 கோடி கி.மீ தூரத்தில் வெள்ளி கிரகம் இருக்கிறது. சூரிய குடும்பத்தின் மிகவும் பிரகாசமாக இருக்கும் இந்த கிரகமும், பூமியிலிருந்து ஏறத்தாழ 3.8 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள நிலவும், 151 கோடி கி.மீ தொலைவில் உள்ள சனி கிரகமும் நேற்று ஒரே நேர்க்கோட்டில் வந்திருக்கிறது. 2.2 டிகிரிதான் மூன்று கோள்களுக்கும் இடைவெளி இருந்திருக்கிறது. இது ஒரு வானியல் அதிசயமாகும். சில ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இதுபோன்று நிகழும்.கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக் கூடிய திடீர் சிக்கல் என்ன? வாருங்கள் உப்பின் அற்புதங்களை தெரிந்து கொள்வோம்
நார்ச்சத்து, புரதச்பிரசவத்திற்குப் பின்பு உண்டாகும் தொப்பை குறைந்து உடல் இளமையாக உதவும் ரசம்சத்து, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் வைட்டமின்களும் மிக அதிக அளவில் உள்ளன. நன்றி Hindu பிறந்த குழந்தைக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் ?
நீங்கள் நாய் பிரியரா அப்படியென்றால் இதோ நீங்கள் நாய்களை மேலும் விரும்புவதற்கு ஒரு காரணம், சமீபத்தில் சுவீடனில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் நாய் வளர்ப்பவர்களின் ஆயுள் அதிகரிக்கும் எனத் தெரிய வந்துள்ளது. செல்லப்பிராணி வளர்ப்பவர்களுக்கு இதய நோய் வருவதற்கான அபாயம் குறைவதாக அந்த ஆய்வில் கூறப்படுகிறது. சுவீடன் நாட்டைச் சேர்ந்த 40 முதல் 80 வயதினர்கள் சுமார் 3.4 மில்லியன் மக்கள் இந்த ஆய்வில் கணக்கிடப்பட்டுள்ளனர். நாய் வளர்ப்பவர்களின் ஆயுள் காலம் 20% உயர்ந்திருப்பதைக் கண்டு விஞ்ஞானிகள் வியந்துள்ளனர். உப்ஸ்பலா பல்கலைக்கழகத்தின் மூத்த தொற்று நோய் ஆசிரியரான டோவ் ஃபீல் கூறுகையில் “இந்த ஆய்வின் அடிப்படையில் நாய்களின் வகைகளுக்கு ஏற்ப உரிமையாளர்களின் ஆயுள் காலம் வேறுபடுகிறது, அதிலும் குறிப்பாக சில நாய் இனங்களை வைத்திருப்பது வாழ்நாட்களைப் பல நாட்கள் அதிகரிக்கிறது.”இந்த 7 காரணங்களைத் தெரிந்து கொண்டால் தினமும் வாழை இலையில்தான் சாப்பிடுவீர்கள்! நீங்கள் நாய் ஒன்று வைத்திருக்கிறீர்கள் என்றால் அதைக் காலை மாலை என இரு வேலையும் நடைப் பயணம் கூட்டிச் செல்வது உங்களுக்கு ஒரு நல்ல உடற் பயிற்சி, வேலை செய்யும் இடத்தில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அந்த மன அழுத்தத்துடன் வீட்டிற்கு வரும் உங்களுடன் அது குதித்து விளையாடும் போது அந்தக் கவலையெல்லாம் அப்படியே குறைந்துவிடும். சரியான உடற்பயிற்சி மற்றும் கவலைகள் இல்லாத வாழ்க்கை இது போதாதா நீண்ட நாட்கள் உயிர் வாழ? நன்றி Hindu பற்களில் உள்ள கறைகள் நீங்க வேண்டுமா?
சமீபத்தில் ஐரோப்பாவில் குரங்கு அம்மை பரவுவதாக செய்திகள் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் அரிய வகை குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவைச் சேர்ந்த அந்த நபர் சமீபத்தில் கனடாவிற்கு சென்று திரும்பியுள்ளார். அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த புதிய குரங்கு அம்மை நோயினால் பொது மக்கள் யாரும் பயப்படத் தேவையில்லை என அமெரிக்காவின் நோய் தடுப்புக் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. குரங்கு அம்மை என்றால் என்ன? குரங்கு அம்மை எவ்வாறு பரவுகிறது மற்றும் அதற்கான அறிகுறிகள் என்ன என்பதைப் பார்க்கலாம். குரங்கு அம்மை: குரங்கு அம்மை நோய் ஒரு அரிய வகை நோயாகும். இந்த நோய் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியது. இந்த நோய் கடந்த 1958 ஆம் ஆண்டு முதன் முதலில் ஆய்வகத்தில் உள்ள குரங்குகளிடமிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அதன் காரணத்தினாலேயே இந்த நோய் குரங்கு அம்மை என அழைக்கப்படுகிறது. அதன்பின் 1970 ஆம் ஆண்டு முதன் முதலில் குரங்கு அம்மை மனிதர்களில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குரங்கு அம்மை, சின்னம்மையுடன் தொடர்புடையது. இந்த நோயினால் பாதிக்கப்படுபவரின் முகத்தில் ஒவ்வாமையினால் சிகப்பு புள்ளிகள் தோன்றி அரிப்பு ஏற்படும். பரவும் விதம்: இந்த குரங்கு அம்மை, தொற்றினால் பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது. தொற்றினால் பாதிக்கப்பட்ட விலங்களை தொடுவதன் மூலமாகவும், அதன் உடல் திரவங்கள் மூலமாகவும் இந்த நோய் பெரிதும் மனிதர்களுக்குப் பரவுகிறது. இந்த நோய் எலிகள் மற்றும் அணில் போன்ற விலங்குகளிடமிருந்து பரவுவதாகக் கூறப்படுகிறது. இவற்றை உண்பதாலும் இந்த நோய் பரவுவதாகக் கூறப்படுகிறது. அதற்கு முக்கியக் காரணமாக சமைக்கும்போது இறைச்சியை சரியாக வேக வைக்காமல் இருப்பது பார்க்கப்படுகிறது. இந்த குரங்கு அம்மை மனிதர்களில் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவுவதில்லை. இருப்பினும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர் உபயோகப்படுத்திய ஆடைகள், துண்டு ஆகியவற்றை உபயோகிப்பதன் மூலம் மற்றவர்களுக்குப் பரவும் வாய்ப்பு உள்ளது. அதேபோல இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இருமும் போதும், தும்மும் போதும் வெளியாகும் நீர்த்துளிகள் மற்றவர்கள் மீது படுவதன் மூலமோ அல்லது அதை சுவாசிப்பதன் மூலமும் இந்த நோய் பரவும் அபாயம் உள்ளது.மாதவிலக்கின் போது ஏற்படும் அதீத வலி! நிவாரணம் தருமா பெயின் கில்லர் மாத்திரைகள்? குரங்கு அம்மையின் அறிகுறிகள்: குரங்கு அம்மையால் ஒருவர் பாதிக்கப்பட்டால் அவருக்கு 5-லிருந்து 21 நாள்களுக்குள்ளாக நோயின் முதல் அறிகுறி தென்படும். காய்ச்சல், தலைவலி, உடல்வலி, முதுகுவலி, உடல் நடுக்கம் மற்றும் சோர்வடைதல் போன்றன அறிகுறிகளாக தோன்றும். இந்த அறிகுறிகள் தோன்றிய 5 நாட்களுக்குள் உடலில் ஒவ்வாமை ஏற்பட்டு சிகப்பு நிற புள்ளிகள் தோன்றும். பின்பு அவை கொப்புளங்களாக மாறும். அடுத்த 2-4 வாரங்களில் இந்த கொப்புளங்கள் மறைந்து உதிர்ந்து விடும். குரங்கு அம்மை உயிரைக் கொல்லுமா? மத்திய ஆப்பிரிக்காவில் இந்த குரங்கு அம்மை உயிரைக் கொல்லுமா என உலக சுகாதார நிறுவனத்தினால் ஆராய்ச்சி…
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் வெளியிட்ட அறிக்கையில், “வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில், ஐந்து நாட்கள் வேளாண் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பயிற்சி, உழவர்கள், பெண்கள், இறுதி ஆண்டு பட்டதாரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு அளிக்கப்படுகிறது. வேளாண் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பற்றிய அனைத்து தகவல்களும் ஒருங்கிணைத்து வழங்கப்படுகிறது. ஏழே நாட்களில் அழகான கையெழுத்து இப்பயிற்சி வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில் வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை அளிக்கப்படுகிறது. பயிற்சிக் கட்டணமாக, நபர் ஒன்றுக்கு ரூ.11,800 வசூலிக்கப்படுகிறது. பதிவுக்கு குறைந்த எண்ணிக்கையிலான இடங்களே உள்ளன. மேலும் விவரங்களுக்கு 0422-6611310, 95004-76626 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்,” எனக் கூறப்பட்டுள்ளது. குறுகிய கால மருத்துவ துணை பிரிவு பயிற்சி
தலை வாழை இலையில் நமக்குப் பிடித்தமான சைவம் அல்லது அசைவ உணவுகளைச் சாப்பிடுவதே ஒரு அலாதி சுகம். வாழை இலை உணவின் ருசியை அதிகரிக்கச் செய்யும். மனத்துக்கு திருப்தியும் தரும். சிறுநீரகக் கல்லுக்கு வாழைத்தண்டு சாறு உகந்தது என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் வாழை இலையும் சிறுநீரகம் மற்றும் விதைப்பை தொடர்புடைய பிரச்னைகளிலிருந்து விடுவிக்கிறது என்பதை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. வாழை இலையில் உள்ள பச்சையம் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது. ஆனால் சமீப காலங்களில் பண்டிகை நாட்களைத் தவிர மற்ற நாட்களில் வாழை இலைகளைப் பயன்படுத்துவதில்லை. வாழை இலையில் சாப்பிடுவதால் உள்ள 7 நன்மைகள் இவை. இன்னும் பல நன்மைகள் இருந்தாலும் மிக முக்கிய நன்மைகளை மட்டும் பட்டியில இட்டுள்ளோம். 1.வாழை இலை மகத்துவம் நமது கலாச்சாரத்தில் வாழை இல்லை பயன்படுத்தாத விருந்தே இல்லை என கூறலாம். வீட்டுப் பூஜையில், இறைவனுக்குப் படைக்கவிருக்கும் பிரசாதம் மற்றும் பழங்களை வாழை இலையில்தான் வைப்போம். காரணம் வாழை இலைகள் தூய்மையானவை. தென்னிந்தியாவில் வீட்டுக்கு வரும் விருந்தினருக்கு வாழை இலைகளில்தான் வடை பாயசத்துடன் விருந்தளிப்போம். கோவில் திருவிழா ஆகட்டும், திருமண நிகழ்ச்சி, வீட்டில் நடக்கும் பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைகள் ஆகட்டும் அனைத்திலிலும், வாழை இலை போட்டுத்தான் உணவு பரிமாறப்படும். இவற்றை பயன்படுத்தினால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கும். 2. ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்தது வாழை இலை நம் உடலில் சேரும் நச்சுத்தன்மையை அழிக்க வல்லது. இதில் ஆன்டி ஆக்சிடன்ட் அதிகளவில் இருப்பதால் நம் உடல் செல்களில் சிதைவு ஏற்படாமல் இளமையுடன் அதிக நாட்கள் இருக்க முடியும். தொடர்ந்து வாழை இலையில் சாப்பிட்டுவந்தால் வயிற்றுப் புண் விரைவில் குணமாகும். வாழை இலையில் உள்ள கிளோரோபில் பலவிதமான நச்சு கிருமிகளை அழிக்கக் கூடியது. உணவு எளிதில் ஜீரணம் ஆகும். தோல் சம்மந்தப்பட்ட நோய்கள் அகன்று, சருமம் பளபளப்பாகும். இளநரை ஏற்படாது. மன அழுத்தம், புற்றுநோய் மற்றும் இதய நோய்களும் தடுக்கப்படுகின்றன. 3. ரசாயனக் கலப்பு இல்லாதது வாழை இலையின் சிறப்பம்சமே அது இயற்கைத் தந்த கொடை. பாத்திரம் தேய்க்கப் பயன்படுத்தும் ரசாயனம் உங்கள் பாத்திரங்களின் மீது சிறிதளவேனும் படிந்திருக்கும். ஆனால் வாழை இலை மரத்திலிருந்து அறுத்தெடுக்கப்பட்டு அல்லது மார்கெட்டில் ப்ரெஷ்ஷாக வாங்கியதாக இருக்கும். மருத்துவக் கல்லூரி முதல்வர் செல்வி தகவல் 4. உயிராற்றல் பெறுகும் வாழை இலை மரத்திலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட பின்பும் கூட அது ஆக்சிஜன் வெளியிட்டுக் கொண்டிருக்குமாம். வாழை இலை குளிர்ச்சியானதாக இருக்கும், அதிலுள்ள பாலிஃபெனால் நமது செல்களில் உள்ள டிஎன்ஏவை கதிர்வீச்சுகளிலிருந்து பாதுகாக்கிறது. 5. உணவின் ருசி வாழை இலையில் பரிமாறப்பட்ட உணவின் ருசி பன்மடங்கு அதிகரிக்கும் என்பது உண்மை. சூடான சாதம் மற்றும் பதார்த்தங்களை வாழை இலையில் பரிமாறும்போது, அந்த இளம் சூட்டில் வாழை இலை லேசாக வெந்து இலையின் பச்சையத்தில் உள்ள பாலிஃபெனால் நாம் சாப்பிடும் உணவில் கலந்துவிடும். அதன்மூலம் வாழை இலையிலுள்ள வைட்டமின் ஏ, சிட்ரிக் அமிலம், கால்ஷியம்…
குளிர்காலத்தில் அதிகம் விலையும் பயிர் வேர்க்கடலை, இதை நம் முன்னோர்கள் தங்களது உணவில் குளிர்காலத்தில் அதிகம் சேர்த்து கொள்வதற்கான காரணம் இது குளிர்கால பயிர் என்பது மட்டுமல்ல இந்தக் காலத்தில் வேர்க்கடலை சாப்பிடுவதினால் பல நன்மைகள் நமக்குக் கிடைக்கும் என்பதும் தான். உடலை உஷ்ணமாக வைத்திருக்கும்: வேர்க்கடலை இயற்கையாகவே நமது உடலின் வெப்ப அளவை அதிகரிக்கக் கூடிய ஒன்று. இதனால் குளிர்காலத்தில் தேவையான வெது வெதுப்புடன் நமது உடல் இருக்கும். பொதுவாகக் குளிர்காலத்தில் நமது கல்லீரல் நல்ல ஆரோக்கியத்துடன் செயற்படும் என்பதால் எண்ணெய் நிறைந்த உணவுகளையும் அதனால் எளிதாக செரிமானம் செய்ய முடியும். கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தும்: வேர்க்கடலை எண்ணெய் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பைக் கரைத்து நல்ல கொழுப்பை தரக்கூடும் என்று ஆராய்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள், இதனால் பித்தக்கட்டிகள் உருவாவதற்கான அபாயம் குறைகிறது.முகத்தில் சுருக்கம் விழாமல் தடுக்க என்ன செய்வது என யோசிக்கிறீர்களா? இதைச் சாப்பிடுங்கள் போதும்! சர்க்கரை அளவைச் சரி செய்யும்: வேர்க்கடலையில் இருக்கும் சத்துக்கள் ரத்தத்தின் சர்க்கரை அளவைச் சீர் படுத்தக் கூடியது. சமீபத்திய ஆய்வுகளின் அடிப்படையில் வேர்க்கடலை சாப்பிடுவதன் மூலம் நீரிழிவு நோய் வருவதற்கான அபாயம் 21% வரை குறையும் என்று தெரியவந்துள்ளது. சரும ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்: வேர்க்கடலையில் இருக்கும் நல்ல கொழுப்பு சருமத்தில் எண்ணெய் பதத்தை பாதுகாக்கும் இதனால் குளிர்காலத்தில் நமது சருமம் வறண்டு போவதை தடுக்கலாம். மேலும் வேர்க்கடலையில் இருக்கும் வைட்டமின் இ மற்றும் சி சத்துக்கள் சருமத்தின் பொலிவை அதிகரிப்பதுடன், தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் தவிர்க்கும். வேர்க்கடலையில் இருக்கும் ஆண்டிஆக்ஸிடண்ட்ஸ் அப்பழுக்கற்ற சருமத்தை தரக்கூடியது. ஆகையால் குளிர்காலத்தில் வேர்க்கடலை சாப்பிடுவதன் மூலம் பல நன்மைகளை நாம் பெறலாம். வேர்க்கடலையை அதிகம் சாப்பிடுவதும் செரிமான கோளாறை ஏற்படுத்தி வயிற்று வலி ஏற்படச் செய்யும். ஒருவேளை உங்களுக்கு வேர்க்கடலை சாப்பிடுவது ஒவ்வாது என்றால் அதைச் சாப்பிட முயற்சிக்காதீர்கள். குளிர்காலத்தில் உங்களது கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதால் வேர்க்கடலை சாப்பிடுவதற்கான சரியான காலம் இதுதான் என்பதை மறந்து விடாதீர்கள். நன்றி Hindu நீண்ட நாட்கள் உயிர் வாழ வேண்டுமா? உடனே சென்று நாய்க் குட்டி ஒன்றை வாங்குங்கள்!
பெண்ணாய் பிறந்த அனைவரும் தாய்மை அடையத் தயாராவதற்கான முதல் படி இந்த மாதவிடாய். இதை வைத்து ஒரு பெண்ணின் உடல் ஆரோக்கியம் மற்றும் அவளது கர்ப்பப்பையின் நிலை போன்றவற்றையும் அறிந்து கொள்ள முடியும். பெரும்பாலான பெண்கள் இதை ஒரு தொல்லையாகவே பார்க்கிறார்கள், அதிலும் குறிப்பாக இந்தியாவில் இதற்குச் சம்பிரதாயம் என்கிற பெயரில் நிறையக் கட்டுப்பாடுகள் விதிப்பதால், பல பெண்களுக்கு இது மன ரீதியான உளைச்சலையும் தருகிறது. மேலும் வயிற்று வலி, இடுப்பு வலி, கை, கால் மற்றும் மார் வலிகளை இது தருவதால் அந்த 3 முதல் 6 நாட்கள் வரை பெண்கள் ஒரு வழியாகி விடுவார்கள். குறைந்தது 3 நாட்களுக்கு எப்போதும் உங்களது உடலில் இருந்து ரத்தம் வடிந்து கொண்டே இருக்கிறது என்பது என்ன சாதாரண விஷயமா? இந்த மாதவிடாய் காலத்தில் நிலமையை இன்னமும் மோசமாக்காமல் இருக்க இந்த 3 விஷயங்களைச் செய்யாதீர்கள். 1. உடலை வருத்தி வேலை செய்யாதீர்கள்: இந்தக் காலத்தில் பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சற்று தொய்வு அடைந்து இருப்பீர்கள், அதனால் உங்களது உடலை வருத்தி எந்தவொரு கடின வேலையைச் செய்தாலும் அது ரத்த போக்கை அதிகரித்து உங்களை மேலும் பலவீனமடைய செய்யும். அதனால் வேலையே செய்யாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருக்க வேண்டும் என்று இல்லை, அதிக சிரமத்துடன் எந்த ஒரு வேலையையும் செய்யாமல் இருப்பது நல்லது. வெள்ளை முடி பிரச்னையா? எளிய முறையில் வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரித்து தீர்வு காணுங்கள்! 2. உணவை தவிர்க்கக் கூடாது: மாதவிடாயின் போதும் சரியான நேரத்தில் உணவு சாப்பிட வேண்டும், வயிறு வலிக்கிறது, உடல் சோர்வாக இருக்கிறது என்பதற்காகச் சாப்பிடாமல் இருந்தால் அது நிலமையை மேலும் மோசமடைய தான் செய்யும். தேவையான ஊட்டச்சத்து நிறைந்த உணவைச் சாப்பிடுவதன் மூலமே ரத்த போக்கினால் உங்கள் உடல் இழக்கும் சத்தினை உங்களால் திரும்பப் பெற முடியும். அதனால் உணவைப் புறக்கணிக்காதீர்கள். 3. நாப்கீன்களை குறிப்பிட்ட இடைவெளியில் கட்டாயம் மாற்ற வேண்டும்: மாதவிடாய் காலத்தின் போது நாப்கீன்களை உபயோகிப்பவர்கள் என்றால் நிச்சயம் 4 அல்லது 5 மணி நேரத்திற்கு ஒரு முறை நாப்கீன்களை மாற்றிவிட வேண்டும். வெளியேறும் ரத்தம் கிருமிகளை உருவாக்கும் என்பதால் நீண்ட நேரம் ஒரே நாப்கீனை வைத்திருப்பது நோய் தொற்றுகளை உருவாக்குவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. மாதவிடாய் என்பது ஒரு பெண் தாயாவதற்குத் தயாராக இருக்கிறாள் என்பதை உணர்த்தும் ஒரு புனிதமான நிகழ்வு, அதனால் அதை ஒரு சாபமாக கருதி வெறுக்காதீர்கள், சரியான பராமரிப்பு மற்றும் மனப் போக்குடன் இந்தக் காலகட்டத்தை மிகவும் எளிதாகக் கடந்து விடலாம். நன்றி Hindu குரங்கு அம்மை என்றால் என்ன? குரங்கு அம்மை பரவும் முறையும் அதன் அறிகுறிகளும்
பெண்கள் இருக்கும் வீடுகளில் நாப்கின் அவசியம் இருக்கும். மாதாந்திர மளிகை லிஸ்டில் அதுவும் இடம்பெறும். அத்தியாவசியப் பொருளான அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து இங்கு பார்க்கப் போகிறோம். 16 வருடங்களுக்கு முன் The United States of America, Hwaii யில் Honolulu என்னும் நகரத்தில் உள்ள Ala wai Golf Course Club house ல் 08.05.2002 அன்று The vegetarian society of Hwaii என்னும் NGO அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் Dr.Edward.K.Fujimoto,PH,MPH,CHES என்னும் மருத்துவ ஆராய்ச்சியாளர் பல வருடங்கள் ஆராய்ச்சி செய்து ஒரு ரசாயனத்தை பற்றி ஒரு மணி நேரம் விரிவாக பேசியுள்ளார். இவர் Castle Medical Centre ல் Wellness Manager & Clinical Preventive care & Lifestyle Medicine Specialist ஆக பணியாற்றி வருகிறார். அது என்ன ரசாயனம்? அவர் என்ன பேசினார்? என்பதை இப்பொழுது விரிவாக பார்க்கலாம் வாருங்கள். அவர் பேசிய ரசாயனத்தின் பெயர் Dioxin! Dioxin என்னும் ரசாயனம், Group of 75 Chlorinated Hydrocarbon Chemicals-ல் ஒரு வகையை சேர்ந்தது. ஒரு நாட்டில் ராணுவ சண்டை வரும் வரை எப்படி அந்நாட்டில் Terrorist இருப்பதே தெரியாதோ, அது போல் தான் இந்த Dioxin எனும் ரசாயனமும் உடலில் இருப்பது தெரியாது என்கிறார். இந்த Dioxin ரசாயனம் எங்கிருந்து வருகிறது? எதில் எல்லாம் கலந்துள்ளது என்பதை பார்ப்பதற்கு முன், இவை இப்பூவுலகிற்கு ஏற்படுத்திய பாதிப்புகளை பார்ப்போம் வாருங்கள். Dioxin என்னும் ரசாயனத்திற்கு Expose ஆன காட்டு விலங்குகளை பல வருடம் ஆராய்ச்சி செய்து பார்த்ததில் இவர் கண்டறிந்த பாதிப்புகள், சமச்சீரற்ற ஹார்மோன் அளவுகள். குறைந்த கருவுறுதல். மீன்களின் கரு முட்டை வளர்ச்சி குறைந்து இனப்பெருக்கம் குறைந்தது. பறவைகளின் இனப்பெருக்கம் குறைந்து. முட்டை ஓடுகள் லேசானது. மாறுபட்ட பாலுணர்வு செயல்கள். gulls என்னும் பெண் பறவை இன்னொரு பெண் பறவையுடன் பாலுணர்வுகொள்ள முயற்சி, இது California வில் நடந்தது. நோய் எதிர்ப்பு சக்தியில் மறுகட்டமைப்பு. பெண் மீன்களுக்கு, ஆண்தன்மை அதிகரித்து, இருபால் கலந்த மீன்கள் பெரிய ஏரிகளில் உள்ளது. ஆண் முதலைகளுக்கு, பெண்தன்மை அதிகரித்து, ஆண்குறி மற்றும் விதைப்பை அளவுகள் குறைந்து காணப்படுகிறது. முதலைகளளின் விதைப்பையில், வம்சாவளி வந்த விதைகள் மாறுபட்டுள்ளது. ஆண் பெண் இனப்பெருக்க உறுப்புகளில் புற்றுநோய். கரு முட்டை குழாய், கருப்பை, கருப்பை வாய் தவறான வடிவமைப்பில் உருவாகி உள்ளது. எலும்பின் அடர்த்தி மற்றும் வடிவமைப்பு மாறுபட்டுள்ளது. Florida வில் panther என்னும் கருஞ்சிறுத்தையின் ஹார்மோன் சோதித்து பார்த்ததில் அதிர்ச்சி காத்திருந்தது. ஆண் சிறுத்தையின் உடலில், ஆண் ஹார்மோனை விட பெண் ஹார்மோன் அதிகமாக இருந்தது. பெண் சிறுத்தையின் உடலில், பெண் ஹார்மோனை விட ஆண் ஹார்மோன் அதிகமாக இருந்தது. ஹார்மோன்கள் தலைகீழாக மாறி இருந்தததையும், அனைத்தும் ஹார்மோன் தொடர்புடைய பிரச்னைகளாகவே இருந்ததையும் கண்டு அதிர்ந்து போனார். மேலும் ஆராய்ந்ததில், Dioxin…
மேலை நாடுகளிலுல், இந்தியாவிலும் நாளுக்கு நாள் பெருகி வரும் விடியோ கேம் போதையை மனநலச் சீர்கேட்டு நோயாக வரையறை செய்து அறிவித்திருக்கிறது உலக சுகாதார நிறுவனம். விடியோ கேம் போதையால் சிறுவர், சிறுமிகள், இளைஞர்கள் மாத்திரமல்ல தற்போது கையில் இண்டர்நெட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் ஃபோன் வைத்திருப்பவர்கள் எவராயினும் கூட வயது வித்யாசமின்றி இந்த போதைக்கு நாளடைவில் அடிமையாகி விடுகிறார்கள். இதனால் பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படுவதோடு சம்மந்தப்பட்டவர்களின் மனநலனிலும் குறிப்பிடத்தக்க அளவில் நெகட்டிவ்வான விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது இந்த போதை. முறையற்ற உணவுப் பழக்கம், போதுமான தூக்கமின்மை, சதா தூண்டப்பட்ட விளையாட்டு ஆர்வத்துடனேயே இருப்பதால் வீட்டிலும், வெளியிலும் ஒரு சாதாரண மனிதன் அன்றாடக் கடமைகளைக் கூட மறந்து விடும் போக்கு, நடைமுறைக் கடமைகளைக் நிறைவேற்ற முடியாததால் உண்டாகும் சுய கழிவிரக்கம். கேமிங் அடிக்ஷனால் வேலைகள் தடைபடும் போது தேங்கிப் போகும் வேலைப்பளுவினால் உண்டாகும் மன அழுத்தம், குழப்பம், சதா சர்வ காலமும் கேம் ஆடுவதைத் தவிர வேறு எந்த ஒரு வேலையும் நிம்மதி தராதோ எனும் சஞ்சல உணர்வு. இவற்றால் உண்டாகும் சுய கட்டுப்பாடற்ற நிலை. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் கேமிங் அடிக்ஷனால் மனித வாழ்வில் நிகழக் கூடிய மாற்றங்களை. இந்த மாற்றங்கள் அனைத்தும் ஒரு கட்டத்தில் மனிதர்களை நட்பால் இணைப்பதற்குப் பதிலாக தனித்தனி தீவுகளாக்கி தனிமைப் புதைகுழிக்குள் தள்ளி விடுவதற்கான வாய்ப்புகளாக மாறி விடுகின்றன என்கிறார்கள் இது குறித்த ஆய்வுகளை முன்னெடுத்து நடத்திய மருத்துவக் குழுவினர். உலக மக்கள் தொகையில் 7% பேர் தற்போது இந்நோயின் தீவிர தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். மிக விரைவில் இந்த எண்ணிக்கை பன்மடங்காக வாய்ப்பிருக்கிறது என்கிறது அமெரிக்கன் சைக்கியாட்ரிக் அசோஸியேசன். அவர்கள் வெளியிட்டுள்ள டயக்னாஸ்டிக் & ஸ்டேட்டிக் மேனுவல் ஆஃப் மெண்டல் டிஸார்டர்ஸ் புத்தகத்தின் 4 வது தொகுதி உலகம் முழுவதும் இருக்கும் மனநல ஆலோகர்கள் மற்றும் மருத்துவர்களால் பைபிள் போன்ற விலைமதிக்க முடியாத தகவல் களஞ்சியமாகக் கருதப்படுகிறது. அந்தப் புத்தகம் WHO அறிவிப்பு வெளிவருவதற்கு வெகி காலத்துக்கு முன்பாகவே கேமிங் அடிக்ஷனை மிக மோசமான மனநலச்சீர்க்கேட்டு நோயாகக் குறிப்பிட்டு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வெளியிட்டிருந்தது. அதன் நீட்சி தான் இப்போதைய அறிவிப்பு என்கிறார் இண்டியன் சைக்ரியாட்டிக் சொஸைட்டியின் முன்னாள் தலைவரான பிரசாத் ராவ் G. மேலும் அவர் பேசுகையில், புளூ வேல் போன்ற உயிர் கொல்லி ஆன்லைன் விளையாட்டுக்கள் உலவும் இந்தக் காலத்தில் பெற்றோர் தத்தமது பிள்ளைகளின் இணைய நடவடிக்கைகளை குறைந்தபட்சம் அவர்களது 18 வயது வரையிலாவது தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். SHUT (Service for Healthy use of Technology) அமைப்பின் கூடுதல் இணைப் பேராசியரான மனோஜ் குமார் ஷர்மா, எங்களிடம்…. சைக்கலாஜிகல் மற்றும் நடத்தைக் கோளாறுகளுக்காக சிகிச்சைக்கு வரும் பெரும்பாலானவர்களின் தினசரி நடவடிக்கைகளில் உடல் நல ரீதியாக மட்டுமன்றி மனநல ரீதியாகவும் பெரும் பாதிப்புகளை உண்டாக்குவதில் மிகப்பெரும்…
நோயைக் காட்டிலும் அது ஏற்படுத்தும் பயமும் பதற்றமும் கொடுமையானது. நவீன காலத்தில் வித விதமான நோய்களும், அது குறித்த சந்தேகங்களும், தயக்கங்களும் பலருக்கு உள்ளன. இதெல்லாம் எனக்கு வராது என்று நாம் ஒருபோதும் அலட்சியமாக இருந்துவிட முடியாது. போலவே எனக்கு இது வந்துடுமோ என்று பயந்தபடியும் வாழ முடியாது. இதற்கு என்னதான் தீர்வு? நோய்களைப் பற்றியும் நவீன வாழ்வியல் பற்றியும் சரியான புரிதலும் விழிப்புணர்வும் ஒவ்வொருவருக்கும் தேவை. ஆரோக்கியமான வாழ்க்கையே நோயைத் தவிர்ப்பதற்கான முதல்படி என்பதை உணர்ந்து கொண்டு அதற்கேற்றபடி நம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். இரைப்பை புற்றுநோய் யாருக்கு வரும்? அதன் அறிகுறிகள் என்ன? இந்தப் புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்திவிடமுடியுமா என்று சென்னையில் நடந்த மருத்துவ நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட மருத்துவர் சந்திரமோகன் பேசினார். டாக்டர் சந்திரமோகன் சென்னை அரசு பொது மருத்துவமனையின் இரைப்பைக் குடலியல் அறுவை சிகிச்சை மையத்தின் முன்னாள் இயக்குனர் ஆவார். தற்போது ஈசோ இந்தியா எனும் அமைப்பிற்குத் தலைவராக உள்ளார். இரைப்பைப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியை ஈசோ இந்தியா செயல்பட்டு வருகிறது. இரைப்பை புற்றுநோய் பற்றி அண்மையில் சென்னையில் நடந்த விழிப்புணர்வு நிகழ்வொன்றில் டாக்டர் சந்திரமோகன் கூறியது, ‘பசிக்கவில்லை, உணவை விழுங்குவதில் சிரமம் உள்ளது என்றால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லுங்கள். ஐந்தே நிமிடங்களில் எடுக்கக் கூடிய எண்டோஸ்கோப்பி எனும் பரிசோதனையின் மூலம் ஒருவரது இரைப்பையைச் சோதித்து, புற்றுநோயின் அறிகுறிகளைக் கண்டறிந்துவிடலாம். அந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவத்தைத் தொடங்கி, பாதிப்பு எந்த அளவில் உள்ளதோ அதற்குரிய முறிஅயில் சிகிச்சையைத் தொடங்கிவிடலாம். இந்நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் முற்றிலும் குணப்படுத்திவிடலாம்’ என்றார்.மாதவிலக்கின் போது ஏற்படும் அதீத வலி! நிவாரணம் தருமா பெயின் கில்லர் மாத்திரைகள்? இரைப்பை புற்றுநோய் குறித்த கட்டுரைகளை ஈசோ இந்தியா அனுப்பலாம். ஜனவரி 20-க்குள் கட்டுரைகளை அனுப்ப வேண்டும். இது குறித்து அமைப்பின் தலைவரும் இரைப்பை-குடல் சிகிச்சை நிபுணருமான சந்திரமோகன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:- ‘வயிறு-உணவுக் குழாய் புற்றுநோயைத் தடுக்க முடியும்-குணப்படுத்த முடியும்-இதை உலகம் உணரட்டும்’ எனும் தலைப்பில் ஒரு பக்க அளவில், தமிழ் அல்லது ஆங்கில மொழியில் 1,500 வார்த்தைகளுக்கு மிகாமல் ஜனவரி 20-க்கு முன்னதாக அனுப்பி வைக்க வேண்டும். info@esoindia.org என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது ‘டாக்டர் எஸ்.எம்.சந்திரமோகன், 103, பூந்தமல்லி நெடுஞ்சாலை, சென்னை-84’ என்ற முகவரிக்கு தபாலிலோ கூரியரிலோ அனுப்பலாம். கூடுதல் தகவல்களுக்கு www.esoindia.org என வலைதள முகவரியைப் பார்க்கலாம் என்று கூறியுள்ளார் நன்றி Hindu உடல் வறட்சி! இது ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!
சத்துக்கள் : புடலங்காயில் வைட்டமின்கள் ஏ,பி,சி ஆகியவை காணப்படுகின்றன. மெக்னீசியம், மாங்கனீஸ், கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், அயோடின் முதலியவை உள்ளன. மேலும் இக்காய் அதிக அளவு நார்சத்து, புரதம், குறைந்த அளவு எரிசக்தி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. தீர்வு : புடலங்காய் (100 கிராம்), பீர்க்கங்காய் (100 கிராம் தோலுடன்), புதினா (சிறிதளவு), வெற்றிலை (1), தக்காளி (1), இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் அல்லது மோர் ஊற்றி அரைத்து ஜூஸாக்கி வடிகட்டி காலை மற்றும் மாலை என இருவேளையும் உணவிற்கு முன் வெறும் வயிற்றில் குடித்தபின்பு பசி எடுத்தால் வழக்கமான உணவு எடுத்துக் கொள்ளலாம். வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.மாதவிலக்கிற்கும் ஹார்மோன்களுக்கும் என்ன தொடர்பு? வெளியேறுவது நல்ல ரத்தமா? கெட்ட ரத்தமா? தெரிந்து கொள்ளுங்கள் குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும். கோவை பாலாஇயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்96557 58609 / Covaibala15@gmail.com நன்றி Hindu இரைப்பை புற்றுநோய் யாருக்கு வரும்? இந்த அறிகுறிகள் உள்ளதா என்று பரிசோதித்துப் பாருங்கள்!
நிர்மலா கான்வென்ட் என்றொரு தெலுங்குத் திரைப்படம், அதில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்யும் போது அவசரமாக ‘O’ குரூப் ரத்தம் தேவைப்படும். ஆனால் மருத்துவமனையில் அந்த நேரத்தில் ‘B’ குரூப் ரத்தமே ஸ்டாக் இருக்கும். உடனே படத்தின் நாயகனான பள்ளிச்சிறுவன் மருத்துவரிடம் சென்று மேலும் தேவையான அளவுக்கு B குரூப் ரத்தம் சேகரியுங்கள் டாக்டர் என்று சொல்லி விட்டு வெளியில் காட்டுக்குள் ஓடிச் சென்று பச்சை காப்பிக் கொட்டைகளைப் பறித்து வந்து சேகரிக்கப்பட்டிருக்கும் அந்த ரத்தக் குப்பிகளில் குறிப்பிட்ட அளவுக்கு சேர்ப்பான். கைகளில் கிளவுஸ் மாட்டிக் கொண்டு தான். அவனது இந்த முந்திரிக் கொட்டத்தனமான செயலுக்காக டாக்டர் அவனைத் திட்டுவார், அவனோ, டாக்டரிடம் தயவு செய்து இப்போது அந்த ரத்தத்தைச் சோதித்துப் பாருங்கள் குரூப் மாறி இருக்கும் என்பான். டாக்டர் திட்டிக் கொண்டே அந்த ரத்தக் குப்பிகளை சோதனைக்கு எடுத்துச் செல்வார். என்னே ஆசர்யம்! நிஜமாகவே சில வினாடிகளில் பச்சை காப்பிக் கொட்டை சேர்க்கப்பட்ட B குரூப் ரத்தம் O குரூப் ரத்தமாக மாறி இருக்கும். அடிப்படையில் இப்படி ஒரு கண்டுபிடிப்பு இருப்பது நிஜம் தான். ஆனால் அதை அவர்கள் படமாக்கிய விதம் சற்று விபரீதமாக இருந்தது. இது குறித்த சோதனைகள் இன்னும் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. முற்றிலுமாக ஒரு பள்ளிச்சிறுவனால் இத்தகைய சாகஸங்களை நிகழ்த்தி விட முடியுமா எனத் தெரியவில்லை. ஆனால் இப்படி ஒரு ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்தியாவில் இந்த முறையில் ரத்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதற்குப் போதிய சான்றுகள் இல்லை. ஆனால் இதில் ஒரு விஷயம் மட்டும் உண்மை என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு பல்லாண்டுகளாகிறது. 1981 ஆம் ஆண்டு வாக்கில் பச்சை காப்பிக் கொட்டைகளைக் கொண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் B குரூப் ரத்தத்தில் உள்ள சர்க்கரை மூலக்கூறுகள் அதாவது ஆண்ட்டிஜென்கள் பச்சை காப்பிக் கொட்டையால் நீக்கப்படுவதன் வாயிலாக அது தானே O குரூப் ரத்தமாக மாற்றம் அடைவதை விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். அதற்கான காப்புரிமை கூட இந்திய விஞ்ஞானி ஒருவருக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அந்தப் படத்தில் ஒரு காட்சி வருகிறது. ஆனால் அந்த விஞ்ஞானி யார்? இந்த ஆய்வின் அடிப்படையில் ரத்த குரூப்கள் மாற்றம் செய்யப்பட்டு இந்தியாவில் எவருக்கேனும் அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்பட்டுள்ளதா? என்பதைக் குறித்த தகவல்கள் எதையும் தேடிய வரையில் காணோம்.நடுத்தர வயதில் நடுங்கச் செய்யும் மெனோபாஸ் பிரச்னையை எப்படி சமாளிக்கலாம்? ரத்த குரூப்களைப் பொறுத்தவரை ஒருவருக்கு A, B, AB, A நெகட்டிவ், B நெகட்டிவ், O, O நெகடிவ் என்றெல்லாம் ரத்த குரூப்கள் பிரிக்கப்படுவது அவற்றில் உள்ள சர்க்கரை மூலக்கூறுகளின் அடிப்படையில் தான். ஒரு ரத்த குரூப்பில் எவ்விதமான சர்க்கரை மூலக்கூறுகளும் இல்லாவிட்டால் அந்த ரத்தம் O குரூப் என அறிவிக்கப்படுகிறது. இது தான் இந்த ஆராய்ச்சியின் அடிப்படை. இந்தக் கண்டுபிடிப்பால் ஒரு சின்ன ஆறுதல் என்னவென்றால், ஒருவேளை இந்த பச்சைக் காப்பிக்…
சென்னை பழைய மகாபலிபுரம் சாலை. மிகவும் நேர்த்தியாக உடையணிந்து தனது இரண்டு சக்கர வாகனத்தில் விரைந்து கொண்டிருந்த அந்த இளைஞர் வண்டியை மெதுவாக்கி ஓரம் கட்டும் போதே வண்டியோடு சரிகிறார். பரபரப்பாக சீறிக் கொண்டிருந்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சியாகி அவரிடம் நெருங்க, சிக்னலில் ஒழுங்குபடுத்தி கொண்டிருந்த டிராபிக் காவலரும் விரைகிறார். கூடி நின்ற மக்கள் தண்ணீர் தெளிக்கிறது. எங்கிருந்தோ ஒரு ஆட்டோகாரர் வந்து நிற்கிறார் ‘வண்டியிலே ஏத்துங்க பக்கத்துல தான் ஆஸ்பத்திரி’ என்று பதற்றக் குரல் வீச ‘நல்ல வேளை ஸ்லோ பண்ணி விழுந்தாப்பலே வந்த வேகத்துல விழுந்திருந்தா சிதறி இருப்பாப்பலே!’ ‘வண்டியை ஓரங்கட்டுங்க!’ என்று போலிஸ் அந்த இளைஞனின் இருசக்கர வாகனத்தை ஓரம் கட்ட, ஐ.டி. கார்டு பார்த்து கம்பெனிக்கு போன் செய்ய இன்னொரு உதவிக்கரம் முயல. ஒரு வயதான பெண் அந்த இளைஞனை ஆட்டோவில் ஏற்றி கொண்டு ஆஸ்பத்திரிக்கு விரைகிறது. அவுட் பேஷண்ட் பிளாக்கில் சோதித்த டாக்டர் வந்தவர்களிடம் சொல்கிறார் ‘பதற்றப்படாதீங்க…..உடல் வறட்சியினாலே மயக்கம்… Dehydration… டிரிப் ஏத்தினா எல்லாம் நார்மலாகிவிடும்’ வந்தவர்கள் பெருமூச்சு விட …’டெய்லியும் ஒருத்தனாச்சும் மயக்கம் போடறதா பார்க்கிறேன்…!’ என்று புள்ளி விவரம் பேசினார் ஆட்டோக்காரர். இந்த சம்பவம் ஒரு சோறு பதம். சென்னையில் கொளுத்தும் வெயிலில் இந்த நிகழ்வுகள் சகஜமாகிவிட்டது. காலை பதினோரு மணி முதல் மாலை நான்கு மணி வரை யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது சென்னை வானிலை மையம். இந்த கட்டுரைய எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் சென்னை வெயிலின் அளவு 107 டிகிரி ஃபாரீன்ஹீட்டை தாண்டி கொளுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் உடல் வறட்சி பற்றிய விழிப்புணர்வும் பாதுகாத்தும் கொள்ளும் வழிமுறைகளும் அறிந்து கொள்வது அவசியமாகிறது. உடல் வறட்சி என்றால் என்ன ?இதயத்துக்கும் உடலின் இயக்கத்திற்கு நீர்ச்சத்து அவசியம் என்பதை அறிவோம். ரத்த ஓட்டமும் அதன் அடிப்படையான காற்றோட்டம் சீராக இயங்க செய்யும் நுரையீரல், இதய ஓட்டமும் ஒரு ஒழுங்கு முறையில் இயங்க உடலில் நீர்ச்சத்தானது போதுமான அளவில் இருக்க வேண்டும். இந்த நீர்ச்சத்து குறைவாக ஏற்படும் பாதிப்புதான் உடல் வறட்சி. கேட்பதற்கு ஏதோ ஒரு சாதரணமான பாதிப்பு போன்று தோன்றும் கொஞ்சம் அலட்சியமாக இருந்தால் உயிருக்கே உலை வைக்கும் அளவிற்கு ஆபத்தானது இந்த உடல் வறட்சி. பொதுவாக உடலுக்கு தேவையான அளவு நீரை நாம் அருந்தவில்லையெனில் இந்த நீர்ச் சத்து குறைப்பாடுகள் ஏற்படும். ஆனால் வெயில் காலங்களில் நமது உடலில் இருந்து வியர்வையாக அளவுக்கு அதிகமாக நீர் வெளியாவதின் மூலமாக வெயிலில் திரிவதின் காரணமாக ‘சன் ஸ்ட்ரோக்’ என்றழைக்கப்படும் பாதிப்பினால் இந்த உடல்வறட்சி அதிகம் ஏற்படுகிறது. உடல் வறட்சியின் அறிகுறிகள் எப்படி இருக்கும் ? மிக எளிதான அறிகுறிகள் என்றால் தாகம் எடுப்பதுதான். ஆனால் தாகம் எடுக்கும் போது எல்லாம் தண்ணீர் குடிப்பதை தள்ளி போடும் சோம்பேறித்தனம் நம்மிடம் அதிகம் இருக்கிறது. சிலர் தண்ணீர் குடித்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்க…
கோபத்தை வாங்கினால் இரத்தக் கொதிப்பு இலவசம்! பொறாமையை வாங்கினால் தலைவலி இலவசம்! வெறுப்பை வாங்கினால், பகை இலவசம்! கவலையை வாங்கினால், கண்ணீர்குரங்கு அம்மை என்றால் என்ன? குரங்கு அம்மை பரவும் முறையும் அதன் அறிகுறிகளும்இலவசம்!. மாறாக நம்பிக்கையை வாங்கினால், நண்பர்கள் இலவசம்! உடற்பயிற்சியை வாங்கினால், ஆரோக்கியம் இலவசம்! அமைதியை வாங்கினால், ஆனந்தம் இலவசம்! நேர்மையை வாங்கினால், நித்திரை இலவசம்! அன்பை வாங்கினால் அனைத்து நன்மைகளும் இலவசம். இலவசமாக எது வேண்டுமென்று இன்றேனும் முடிவு செய்யுங்கள். இரவில் நன்றாக தூக்கம் வர வேண்டுமா? இதோ ஒரு இயற்கை வழி!
நம்மில் பலர் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது முடி கொட்டிவிடும் என்கிற பயத்தில் தலைக்கவசம் அணிவதையே தவிர்ப்போம், ஆனால் முடி அடர்த்தியாக வளர்ந்து, உதிர்வைத் தடுக்க இயற்கை வைத்தியத்திலேயே பல வழிகள் இருப்பது நமக்குத் தெரிவதில்லை. உங்கள் முடி உதிர்வு பிரச்னையை சில மாதங்களிலேயே நிருத்தி மேலும் அடர்த்தியான முடியைப் பெற ஒரு அர்ப்புதமான வழியைச் சொல்ல போகிறேன், அதனால் இனி எந்தவொரு பயமும் இல்லாமல் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது உங்களின் உயிர் காப்பான் ஆன தலைக்கவசத்தை கட்டாயம் அணிந்து செல்லுங்கள். ஆண், பெண் என யாராக இருந்தாலும் அடர்த்தியான முடி என்பது எப்போதும் ஒரு கூடுதல் அழகு தான். ஆனால் சுற்றுச்சுழல் மாசு, மன அழுத்தம், தினமும் தலையில் எண்ணெய் வைக்காமல் இருப்பது மற்றும் பல கெமிக்கல்களை தலையில் போடுவது போன்றவற்றால் பல பிரச்னைகள் வருகின்றன, உதாரணத்திற்கு முடி உதிர்வு, அடர்த்தி குறைவது, பொடுகு தொல்லை, இள நரை, வழுக்கை விழுவது என. இந்த அனைத்து பிரச்னைக்கும் ஒரே தீர்வாக உங்கள் சமையலறையில் எப்போதும் கிடைக்கும் வெங்காயத்தைப் பயன்படுத்தினால் போதும். 3 வகையான வெங்காய சாறு தயாரிக்கும் முறை: 1. முடி அடர்த்தியாக வளர: முதலில் 2 பெரிய வெங்காயத்தை நல்லா மசிய அரைத்து தண்ணீர் ஊற்றாமல் பிழிந்து சாற்றை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அந்தச் சாற்றில் இரண்டு தேக்கரண்டி தேனைச் சேர்த்து, நன்றாகக் கலக்கவும். ஒரு துணியோ அல்லது பஞ்சையோ அதில் நனைத்து வேர் கால்களில் அதைத் தடவவும், பின்னர் பொறுமையாக மசாஜ் செய்யுங்கள். 20 நிமிடங்களுக்குத் தலையில் இதை ஊற வைத்துவிட்டு பின்னர் தலைக்குக் குளிக்கவும் (ஷாம்பு பயன் படுத்தலாம்). 2. பொடுகு தொல்லை தீர:பௌத்திரம் (மூலக் கட்டி) குணமாக ஒரு முழு வெங்காயத்தை 200.மி.லி தண்ணீரில் வேக வைத்து அது மென்மையாகும் வரை காத்திருக்கவும். மென்மையான பிறகு அது முழுமையாக ஆறும் வரை காத்திருந்து அதில் சிறிதளவு தேனைச் சேர்க்கவும். இந்தக் கலவையை ஒரு நாள் இரவு முழுவதும் அப்படியே விட்டு அடுத்த நாள் காலை பிழிந்து சாற்றை எடுக்கவும். இந்தச் சாற்றை தலையில் மசாஜ் செய்து ஒரு 15 நிமிடங்களுக்குப் பிறகு தலைக்குக் குளிக்கவும். 3. முடி உதிர்வைத் தடுக்க: நாம் உபயோகிக்கும் ஷாம்புவில் இருக்கும் கெமிக்கல் கலவைகளாலேயே முடி உதிர்வு ஏற்படுகிறது, எனவே இந்த வெங்காய கலவையைத் தயாரித்து ஷாம்பு போட்டு குளித்த பின்னர் இதை வைத்து தலையை அலசவும். 4 அல்லது 5 வெங்கத்தை வெட்டி எடுத்துக் கொள்ளவும். 1 லிட்டர் தண்ணீரில் வெட்டிய வெங்காய துண்டுகளை கொதிக்கச் செய்யவும். 5 நிமிடம் கொதித்த பின்னர் சிறிது ஆற விட்டு சாற்றை பிழிந்து எடுக்கவும். குளித்து முடித்த பின்னர் இந்தச் சாற்றை வைத்து தலை முடியை அலசவும். டிப்ஸ்: உங்கள் தலையில் வெங்காய சாற்றின் வாடை வருவதைத் தவிர்க்க உங்களுக்குப் பிடித்த ரோஜா, லேவண்டர், ஆரெஞ்…
இன்றைய தலைமுறை சிறுவர் சிறுமியருக்கு திருவிழா காசு ஒரு பெரிய மகிழ்ச்சியை தர வாய்ப்பில்லை. ஏனென்றால் அவர்களுக்கு வேண்டிய பொருள்களை, விளையாட்டு சாமான்களை திருவிழா காசு கொண்டு தான் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர்களின் பெற்றோர் அவர்கள் கேட்பதற்கு முன்பே விரும்பிய பொருளை வாங்கித் தரும் வழக்கத்தை கொண்டிருக்கின்றனர். திருவிழா காசின் அருமையை 90களின் குழந்தைகளான நாங்கள் தான் நன்கு அறிவோம். ஆண்டிற்கு ஒருமுறை வரும் திருவிழாக்கள் தான் எங்களை எங்களின் பெற்றோர் சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல வைத்தது. ஐயா, அப்பத்தா, சித்தப்பா,சித்தி அத்தை,மாமா,அக்கா,தங்கை தம்பி போன்ற உறவுகளை நேரில் பார்க்க மட்டுமல்ல அன்றைய காலகட்டங்களில் இன்றுபோல் தொலைத் தொடர்பு இல்லாததால் அவர்களுடன் பேசுவதும் கூட அன்றைய தினங்களில் தான். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கூடிவாழ்ந்தான்குடி கிராமம்தான் எங்கள் ஊர். எங்கள் வீட்டில் அண்ணனும், நானும்.முதல் சித்தப்பாவிற்கு ஒரே ஒரு பெண்பிள்ளை என்னை விட ஆறுமாதம் மூத்தவள். இரண்டாவது சித்தப்பாவிற்கு ஆண் ஒன்று பெண் ஒன்று. அத்தைக்கு திருமணம் ஆகி ஐந்து வருடங்கள் ஆகியும் இன்னும் குழந்தை பேறு இல்லை. ஒரு திருவிழா நாளில் சித்தப்பாவும் அப்பாவும் வீட்டின் வாசலிலேயே நாற்காலிகளைப் போட்டு அமர்ந்து அப்போதைய அரசியல் நிகழ்வுகளைப் பற்றி காரசாரமாக பேசிக் கொண்டிருக்கையில், ஐயா எங்களுக்கெல்லாம் தின்பண்டங்கள் வாங்கி வர கடைத்தெருவிற்கு நடக்கலானார். ஆனால் அவருக்கு தெரியாமலேயே நாங்கள் வருவதற்கு சில நாட்களுக்கு முன்னரே அப்பத்தா எங்களுக்காக பலகாரங்கள் செய்து பரணியிலே மறைத்து வைத்திருந்தார். சித்திகளும், அம்மாவும், அத்தையோடு அவரவர் பக்கத்துவீட்டு கதைகளை சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்தார்கள். அக்காவும் தங்கையும் பக்கத்து வீட்டு தோழிகளுடன் எங்கள் வீட்டை ஒட்டி இருக்கும் அந்தோனியார் தேவாலயத்திற்குள் ஏறி குதித்து உள்ளே சென்று ஒளிந்து பிடிக்கும் விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். எங்கள் வீட்டிற்கு எதிரே இருந்த பொது பாதையின் வடதிசையில் தான் காஜா மாமாவின் வீடு. என் அப்பாவின் பால்ய நண்பர். நாங்கள் திருவிழாவிற்கு வந்திருப்பதை அறிந்து எங்களைப் பார்ப்பதற்காக வேகவேகமாக எங்கள் வீட்டை நோக்கி விரைந்து வந்து கொண்டிருந்தார். நாங்கள் திருவிழாவிற்கு வரும்போதெல்லாம் இரண்டு நாட்கள் எங்கள் கூடவே தான் இருப்பார். வருடத்திற்கு ஒரு முறை தான் வருகிறோம் என்பதாலும் மிகவும் பழைய காலத்து வீடு என்ற காரணத்தாலும் எங்கள் வீட்டில் அய்யா கழிவறை கட்டயிருக்கவில்லை. எனவே திருவிழா சமயங்களில் நாங்கள் வருகின்ற போது எங்கள் வீட்டுப் பெண்கள் அனைவரும் அவரது வீட்டிற்கு வெளியே இருக்கும் அவர்களது கழிப்பறையை பயன்படுத்திக் கொள்ள சொல்லி இருந்தார். “வாங்க மாப்பிள்ளைகளா ” என்று கூப்பாடு போட்டுக் கொண்டே வந்தார் காஜா மாமா . சித்தப்பாக்கள் இருவருடனும் கைகுலுக்கிக் கொண்டவர், அப்பாவை கட்டி தழுவிக்கொண்டார். “என்ன மாப்ள, தங்கச்சிக்கு இப்ப உடம்பு எப்படி இருக்கு?” “இப்ப மாத்திரை அதிகம் இல்லை மச்சான் உடம்பும் பழைய மாதிரி இருக்காப்ல தான் தெரியுது” என்று பதிலளித்தார் சித்தப்பா. “சரி மாப்ள வா…