ஷேன் டிரென்ச் என்னும் இந்த நபர் தினமும் 40 கேன் அதாவது 13 லிட்டர் கோகோ-கோலா–வை குடித்து வந்துள்ளார். 21-வயதே ஆன இவர் இதன் சுவைக்கு அடிமையாகி நாள் ஒன்றிற்கு இவ்வளவு சர்க்கரை கலவையைக் குடித்த காரணத்தால் இவரது உடல் எடை 203 கிலோவைத் தொட்டது. மீன் சாப்பிடுவதாக இருந்தால் கூட அந்த மீனை கோகோ-கோலாவை ஊற்றித் தான் இவர் கழுவி சமைப்பாராம். காலை, மதியம், இரவு என எப்போது உணவு உண்டாலும் தண்ணீருக்கு பதிலாக இதைத் தான் குடிப்பாராம். இவருடைய இந்த கோகோ-கோலா வெறி நாளொன்றிற்கு 5,250 கெலோரிகளை தந்தது. இதனால் இவரது உடல் அதிக பருமனடைந்ததோடு, கோக்கில் இருக்கும் அதிக சர்க்கரை இவருக்குப் பல ஆரோக்கிய சீர்கேட்டையும் தந்தது. இந்த அதீத உடல் எடையால் நடக்க, நீண்ட நேரம் நிற்க, படிக்கட்டுகள் ஏறி, இறங்க என அனைத்து வேலைகளும் இவருக்குக் கடினமானது. சில சமயங்களில் தன்னுடைய வேலைகளைக் கூட இவரால் செய்து கொள்ள முடியவில்லை. இதற்காக மருத்துவர்களை ஆலோசித்த போது தான் இவருக்கான அதிர்ச்சி காத்திருந்தது. இவரது உடலை முழுமையாகப் பரிசோதித்த மருத்துவர்கள் இவர் இந்தப் பழக்கத்தை இப்படியே தொடர்ந்தால் இன்னும் சில நாட்களில் இவர் இறந்து விடுவார் என்று தெரிவித்துள்ளனர். உயிர் மீது வந்த பயத்தால் எப்படியாவது இந்தப் பழக்கத்தில் இருந்து மீள வேண்டும் என்று முடிவெடுத்த ஷேனுக்கு அப்போது தான் உண்மையான சவால் ஒன்று வந்தது. இதன் சுவைக்கு அடிமையாகிப் போனதால் இவரால் இந்தப் பழக்கத்தை கை விட முடியாமல் தவித்தார்.உடல் பருமன் குறைய வேண்டுமா? இது ஒரு சிறந்த வழி! தன்னுடைய சுவை அரும்புகளை ஏமாற்ற இவர் ஷான் ஒரு முடிவெடுத்து, சாதாரண கோகோ-கோலாவுக்கு பதிலாக சர்க்கரை சேர்க்கப்பட்டாக கோகோ-கோலா ஸீரோ-வை குடிக்கத் துவங்கினார். இதனால் இவர் உடலின் சர்க்கரை அளவு மிகவும் குறைந்ததால் மிகவும் சோர்வடைந்து செயலிழந்து போனார். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் போராடி 69 கிலோ எடையைக் குறைத்தார். பின்னர் மெல்ல மெல்ல மொத்தமாக கோக் குடிப்பதையே நிறுத்தினார். முன்னர் இருந்த உடல் எடையைச் சரி பாதியாகக் குறைத்ததால் இவருடைய ஆரோக்கியம் சற்று தேரியது. 2016-ம் ஆண்டு இரைப்பையில் பைப்பாஸ் அறுவை சிகிச்சையை இவர் செய்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர், ஆனால் இந்தத் தீய பழக்கத்தை விடுத்து சில உடற் பயிற்சிகளின் மூலமே எந்தவொரு அறுவை சிகிச்சையும் செய்யாமல் இவர் குணம் அடைந்ததைக் கண்டு மருத்துவர்களே வியந்து போனார்கள். இவருடைய இப்போதைய உடல் எடை 127 கிலோ, இதையும் குறைத்து 100 கிலோவிற்கு வரவே தான் முயற்சி செய்து கொண்டிருப்பதாக இவர் கூறியுள்ளார். கட்டுக்கோப்பே இல்லாத உணவு பழக்கம் நமக்கு எமனாய் வந்து அமையும் என்பதற்கு இவருடைய வாழ்க்கை ஒரு நல்ல உதாரணம். நன்றி Hindu பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் 30 கிலோ தங்கம் கொள்ளை
23 G பாகம் 6: ‘மாற்றுப் பாதை’ மனப்போக்கு: மாற்றமில்லாததா? மாற்றக் கூடியவையா? இந்தத் தொடரில் இது வரை பார்த்ததில் ஒன்று தெளிவாக தெரிகிறது. நம் ஆற்றல், சிந்தனைகள், நோக்கங்கள் இவற்றின் விளைவுகள் தான் நம் செயல்களை நிர்ணயிக்கின்றது. இந்த அமைப்பே நம் மனப்போக்காகும். மனப்போக்கு: மாற்றமில்லாததா? மாற்றக் கூடியவையா? என்ற கேள்விக்கு நம் மனப்பான்மையை நம்மால் மாற்றி அமைக்க முடியும் என்பது தான் நிச்சயம். மாற்றி அமைப்பதற்கு முதலில் இந்த அமைப்பு உருவாகும் வகைகளை அறிந்து கொள்வது அவசியம். மற்றவர்களின் சொல்லுக்கு அஞ்சி செயல்பட்டு வருகையில், அல்ல நமக்கே சந்தேகங்கள் சூழ்ந்து கொண்ட சூழலில் அவற்றை நீக்க மற்றவரிடம் உதவி கேட்பதற்கு பயம் கவ்விக் கொண்டு விடும் தருணத்தில், அல்ல முன்னால் நிகழ்த்த முயற்சித்துத் தோல்வி பெற்ற அனுபவங்கள் நம் தன்னம்பிக்கையை பாதிக்கையில், இவை நம் மனப்பான்மையைக் குறுக்கி, செயல்களை முன்னேற்றத்தின் பாதையிலிருந்து விலக்கி, நிலை மாறாமல் காத்துக் கொள்ளும் பாதையில் தள்ளி விட்டு விடுகின்றன என்று சென்ற வாரங்களில் பார்த்தோம். இந்த மூன்றினால் நம் மனப்போக்கு மாறாமல், முன்னேறாமல் சலித்துப் போய் விடுகிறது. இப்பொழுது, நம் மனப்பான்மை எவ்வாறு அமைந்துள்ளது, அது நம் செயல்களை எப்படி நிர்ணயிக்கின்றது என்று நாம் தானாகவே எப்படிக் கண்டு கொள்ள முடியும், எப்படி மாற்ற முடியும் என்பதைப் பார்ப்போம். மைன்ட் வாய்ஸ்! நம்முடைய சிந்தனையும், உணர்வும் ஒன்றுக்கு ஒன்று இணைந்து செயல்படும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் நம் உள்மனது (மைன்ட் வாய்ஸ்) எதைச் சொல்கின்றது என்பதைக் கவனிக்க வேண்டும். நம் மைன்ட் வாய்ஸ், திரும்பத் திரும்ப ‘உன்னால் முடியும்?’ என்று சொன்னால் தான் தைரியத்துடன் செயலை எடுத்துச் செய்வோம். அதுவே, ‘தோல்வி பெற்றால், உன் பெயர் கெட்டு விடாதா?’ என்று நம் மைன்ட் வாய்ஸ் எழுப்பினால், அது சஞ்சலத்துடன் சந்தேகத்தை எழுப்பிவிடும். சந்தேகம் பிறந்ததும் பயம் ஒட்டிக் கொள்ளும். உடனடியாக, எதிர்மறை எண்ணங்கள் ஏற்படும். ஏதாவது புதியதாக, இல்லை சற்று கடுமையான செயலாக இருந்தால், செய்ய முடியுமா என்ற கேள்வி கேட்டுக் கொள்வோம். அதே சமயம், வாய்ப்பு நல்லதாக இருந்தாலும் உறுதி இல்லை என்றால், ஒரு வேளைத் தோல்வி பெற்று விட்டால் அது நம் சுயமதிப்பீட்டை பாதிக்குமோ என்று அஞ்சி நாம் முயற்சிக்கத் தயங்குவோம். இவ்வாறு அணுகுவதைத் தான் மாற்றமில்லாத மனப்பான்மை எனக் கூறப்படுகிறது. தன்னால் முடிந்ததையே செய்து, பெரிய வெற்றி முன்னேற்றம் எதுவும் பெறாமல் தற்காப்பு நிலைமையிலேயே தங்கி விடுவோம். இதற்குக் காரணி, நம் மைன்ட் வாய்ஸ் எழுப்பும் சந்தேகத்திற்கு தலை வணங்கி விடுவதே. அதன் விளைவாகச் செயலற்று விடுகிறோம். செய்வதற்கு முன் ‘முடியுமா?’ என்ற ஒரே ஒரு கேள்வி மட்டும் எழும். இதைச் சுதாரிக்க, ‘எவ்வாறு செய்தால் முடியும்?’ என்ற கேள்வி கேட்டுத் தெளிவு பெறுவது நல்லது. மாறாக, தெளிவு கொள்ளாமல், முடியுமோ முடியாதோ என ஆரம்பித்து, எந்தவிதமான வழிகளையும்…
கோபத்தை வாங்கினால் இரத்தக் கொதிப்பு இலவசம்! பொறாமையை வாங்கினால் தலைவலி இலவசம்! வெறுப்பை வாங்கினால், பகை இலவசம்! கவலையை வாங்கினால், கண்ணீர்சாக்லேட் முதல் காஃபி வரை இந்த 10 உணவுப் பொருட்களை கண்ட நேரத்தில் சாப்பிட்டால் உங்கள் உயிருக்கே ஆபத்து!!இலவசம்!. மாறாக நம்பிக்கையை வாங்கினால், நண்பர்கள் இலவசம்! உடற்பயிற்சியை வாங்கினால், ஆரோக்கியம் இலவசம்! அமைதியை வாங்கினால், ஆனந்தம் இலவசம்! நேர்மையை வாங்கினால், நித்திரை இலவசம்! அன்பை வாங்கினால் அனைத்து நன்மைகளும் இலவசம். இலவசமாக எது வேண்டுமென்று இன்றேனும் முடிவு செய்யுங்கள். டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்!
வயது ஆக ஆக முடி நரைப்பது என்பது இயற்கையான ஒரு விஷயம் தான் என்றாலும் இன்று இருக்கும் பிரச்னை இளநரை. பள்ளி செல்லும் குழந்தைகளின் தலையில் கூட இன்றைய சூழலில் வெள்ள முடியைப் பார்க்க முடிகிறது. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி முடி கருமையாக இருப்பதற்கான காரணம் நமது உடலில் இருக்கும் மெலனின் நிறமி தான். வயது முதிர்ச்சி காரணமாக இந்த மெலனின் உற்பத்தி குறையும் போது நமக்கு வெள்ள முடி வருகிறது. அதே போல் இந்த மெலனின் உற்பத்தி குறைபாடு காரணமாகவே இளநரையும் ஏற்படுகிறது. இதைச் சரி செய்ய சில எளிய வீட்டு வைத்தியமே போதுமானது. ஹார்மோன் மாற்றங்கள், மன அழுத்தம், சுற்றுச்சூழல் மாசு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற விஷயங்கள் நமது தலைமுடியை கடுமையாகச் சேதப்படுத்துகின்றன. இவை அனைத்திற்கும் மேலாகப் பல ரசாயனங்கள் கலந்த எண்ணெய்யைத் தலையில் தேய்ப்பதால் எந்தப் பயனும் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தவாறே தூய்மையான தேங்காய் எண்ணெய் தயார் செய்ய முடியும் என்றால் இனி என்ன பிரச்னை? இந்தத் தேங்காய் எண்ணெய்யை வெள்ளை முடி உள்ளவர்கள் மட்டுமில்லாமல், அனைவரும் பயன்படுத்துவதன் மூலம் வேறு பல தலை முடி தொடர்பான பிரச்சினைகளும் சரியாகும். தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி? எவ்வளவு தேங்காய் எண்ணெய் தேவையோ அதற்கேற்ப நல்ல தேங்காய்களை தேர்வு செய்து எடுத்துக் கொள்ளுங்கள். 1. தேங்காய்களை உடைத்து அதை முழுவதுமாக துருவி எடுத்துக் கொள்ளவும். 2. தேங்காய்த் துருவல்களை தண்ணீர் ஊற்றாமல் நன்கு மசிய அரைத்து ஒரு துணியில் போடவும்.மாதவிடாய் சார்ந்த பிரச்சனை நீங்க 3. இப்போது அந்தத் துணியை மூட்டைக்கட்டி நன்கு பிழிந்து தேங்காய்ப் பாலை சேகரிக்கவும். மீந்த சக்கைகளில் சிறிது வெந்நீர் ஊற்றி முழுத் தேங்காய் பாலையும் பிழியவும். 4. தேங்காய்ப் பாலை ஒரு அகண்ட பாத்திரத்தில் ஊற்றிக் குறைந்த சூட்டில் கொதிக்க வைக்கவும். சுமார் 2 முதல் 3 மணி நேரம் வரை. 5. பாலின் நிறம் வெள்ளை நிறத்தில் இருந்து பழுப்பு நிறமாக மாறும் வரை கொதிக்க வைக்கவும். அடி பிடிக்கும் வாய்ப்பு உள்ளதால் பொறுமையாக களரிக் கொண்டே இருக்கவும். 6. பின்னர் தீயை அனைத்துவிட்டு இந்தக் கலவையை அசைக்காமல் சூடாற செய்யவும். கடைசியாக ஒரு சுத்தமான துணியில் வெடிகட்டி சேமித்து வைக்கவும். இந்த எண்ணெய்யைத் தலையில் தேய்த்து வந்தால் நிச்சயம் உங்கள் முடி வளர்ச்சியிலும், ஆரோக்கியத்திலும் நல்ல மாற்றத்தைப் பார்க்க முடியும். வெள்ளை முடி பிரச்னை தீர இதில் இன்னும் சில எண்ணெய்களைச் சேர்த்து அந்தக் கலவையை உபயோகிக்கவும். வெள்ளை முடி வருவதைத் தடுக்க: நீங்கள் வீட்டில் தயாரித்த இந்தத் தேங்காய் எண்ணெய்யில் கற்றாழை பசை ஒரு அரை மூடிச் சேர்க்கவும், மேலும் 2 மூடி நெல்லிக்காய் எண்ணெய்யை ஊற்றவும். இந்தக் கலவையை 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்த பிறகு அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து 8 நாட்கள் சூரிய ஒளியில் காய…
வாழ்க்கை முழுவதற்குமான ஒரே ஒரு எளிமையான ஆரோக்ய மந்திரம் எதுவென்றால் அது இதுவொன்றாக மட்டுமே இருக்க முடியும். இதைச் சொல்வது நான் அல்ல! ஒரு திறமை மிகுந்த மருத்துவர். அவர் சொல்வதை ஒருமுறை உங்களது வாழ்வில் பின்பற்றிப் பார்த்தீர்கள் என்றால் பிறகு நீங்களும் ஒப்புக் கொள்வீர்கள் அது நிஜம் தான் என்று. மனித உடலில் 70 % தண்ணீரால் ஆக்கப்பட்டது. மனிதர்கள் தங்களது உடலைக் கச்சிதமாகவும், கட்டுக்கோப்பாகவும் வைத்துக் கொள்ள விரும்பினால் தங்களது உடலில் அதிகளவில் ஆதிக்கம் செலுத்தும் நீர்சக்தியைப் பற்றித் தெளிவாக அறிந்து கொள்ள முயலவேண்டும். மனிதனின் ஆரோக்ய வாழ்வில் நீரின் முக்கியமான பங்கு என்ன என்பதை அவர்கள் உணர்ந்திருக்க வேண்டியது அவசியம். அதற்கு முதற்படியாக காலையில் நீங்கள் எப்போது எழுந்தாலும் சரி, எழுந்ததுமே 1 லிட்டர் தண்ணீரை சிறுகச் சிறுக தொடர்ந்து அருந்தப் பழக வேண்டும். அந்த நேரத்தில் நீங்கள் பல் துலக்கா விட்டாலும் பரவாயில்லை. உங்களது வாயில் உள்ள காரத்தன்மை கொண்ட மினரல்கள் அனைத்தும் இந்தத் தண்ணீர் அருந்தும் பழக்கத்தால் கரைந்து நீர்த்துப் போக வேண்டும் என்பதே இந்த முயற்சியின் நோக்கம். வாயிலிருப்பவை மட்டுமல்ல இப்படித் தண்ணீர் அருந்தும் பழக்கத்தால் வயிற்றுள் எஞ்சியிருக்கும் ஒரு சில காரத்தன்மை கொண்ட மினரல்களும் கூட நீர்த்துப் போகும் என்பதால் இதை ஒவ்வொரு நாளும் காலையில் தூங்கி எழுந்ததும் செய்தாக வேண்டும். (காபி, டீ, ஹெல்த் ட்ரிங்குகள் அருந்துவதைத் தவிர்த்து விட்டு முதலில் 1 லிட்டர் தண்ணீர் அருந்தும் பழக்கத்தை நாம் தான் வலியப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.) உங்கள் இதயத்தை இளமையாக வைத்திருக்க விரும்புகிறீர்களா? இதோ சிறந்த வழி! அது மட்டுமல்ல, காலை உணவு, மதிய உணவு அல்லது இரவு உணவு என எந்த நேர உணவாக இருக்கட்டும் ஒவ்வொரு முறையும் நீங்கள் உணவுண்டு முடித்து 40 நிமிடங்களுக்குப் பிறகு 1 டம்ளர் வெந்நீர் அருந்த மறக்கக் கூடாது. இன்று சர்வதேச அளவில் நடைபெற்று வரும் பலப்பல ஆரோக்யக் கருத்தரங்கங்களில் மீண்டும் மீண்டும் சொல்லப்படும் அல்லது வலியுறுத்தப்படும் விஷயங்களில் ஒன்று இது. வெந்நீருக்கு நமது உடலில் படியக் கூடிய கொழுப்பையும் கரைக்கக் கூடிய தன்மை உண்டாம். கொழுப்புகள் சென்று படியக் கூடிய அடிப்போஸ் திசுக்களைக் கரைக்கும் வல்லமை கொண்டது வெந்நீர் என்கிறார்கள் மருத்துவர்கள். அது மட்டுமல்ல, குடலில் படியக் கூடிய கொழுப்பையும் கரைக்கும் திறன் கொண்டது வெந்நீர். மேலே சொல்லப்பட்ட எல்லாவற்றையும் விட மிக முக்கியமான மற்றொரு விஷயம். எப்போதும் நீர் அருந்தும் போது நின்று கொண்டு அருந்தக் கூடாது. உட்கார்ந்து கொண்டே அருந்த வேண்டும் என்பது தான். ஏனெனில், இந்தியாவின் பாரம்பரிய மருத்துவங்களில் ஒன்றான ஆயுர்வேதம் சொல்லும் குறிப்புகளின் படி நின்று கொண்டு நீர் அருந்தினால் வாதத்தினால் பாதிப்பு உண்டாகும் என்பதால் எப்போது நீர் அருந்துவதாக இருந்தாலும் சரி உட்கார்ந்து கொண்டே அருந்த வேண்டும். இல்லாவிட்டால் கை, கால் இணைப்புகளில் வலி ஏற்பட்டு வாத…
நீண்ட நாட்கள் எந்த நோய் நொடியும் இல்லாமல் சந்தோஷமா வாழணுமா? அப்போ ஆரோக்கியமான உணவுப் பொருட்களை சாப்பிடுங்கள் அப்படினு பலரும் சொல்லி கேட்டிருப்போம், அது உண்மையும் தான். ஆனால், அதே சமயம் எவ்வளவு ஆரோக்கியமான உணவாக இருந்தாலும் அதைச் சாப்பிடுவதற்கும் ஒரு நேரம் காலம் உள்ளது. நமக்கு உடம்பு சரியில்லாமல் போனால் அதைக் குணப்படுத்த எடுத்துக் கொள்ளும் மருந்து மாத்திரையைச் சாப்பிடுவதற்கு கூட ஒரு குறிப்பிட்ட நேரம் சொல்லப் படுகிறது. அப்படியிருக்கையில் கண்ட நேரத்தில் அதாவது தவறான நேரத்தில் இந்த 10 உணவுப் பொருட்களை சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தைக் கெடுத்து உங்கள் உயிருக்கே ஆபத்தாகவும் அமையலாம் என்கிறது ஆராய்ச்சி முடிவுகள். இந்த 10 உணவு வகைகள் கிடைப்பதற்கே அரிதான பொருட்கள் அல்ல நம் அன்றாட வாழ்வில் சாப்பிடும், தவிர்க்கவே முடியாத இடத்தைப் பிடித்த உணவுகள் தான் அவை. வாருங்கள் அந்த 10 என்னவென்று தெரிந்துகொள்வோம். 1. வாழைப்பழம்: எல்லாப் பருவங்களிலும் எல்லா இடத்திலும் மிகவும் எளிமையாக கிடைக்கக் கூடிய ஒரு பழம் வாழை. நமது ஜீரண சக்தியை அதிகரிப்பது முதல் வயிற்று பிரச்னைகளில் இருந்து நம்மைப் பாதுகாப்பது வரை வாழைப்பழத்திற்குப் பல மருத்துவ குணங்கள் உண்டு. அதிக பொட்டாஷியமும், நார் சத்தும் நிறைந்த வாழைப்பழத்தைக் காலை உணவாகவே பலரும் வெறும் வயிற்றில் சாப்பிடுகிறோம், அதன் ஆபத்து தெரியாமல். வாழைப்பழம் அமிலத் தன்மை கொண்டது, இதை வெறும் வயிற்றில் உட்கொண்டால் குடல் பிரச்னைகளை இது உண்டாக்கும். அதே போல் வாழைப்பழத்தில் சர்க்கரை அளவும் அதிகமாக இருப்பதால் சில மணி நேரத்திலேயே உங்கள் உடலின் எனர்ஜி குறைந்து உங்களைப் பலவீனமாக்குவதோடு, சோர்வான உணர்வைத் தரும். பின் நாட்களில் குடல் புண், அல்சர் போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்க வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிருங்கள். 2. தயிர்: வெயில் காலம் வந்துவிட்டாலே வெப்ப சலனத்தில் இருந்து நமது உடலைப் பாதுகாக்க நாம் நாடும் உணவு வகைகளில் மிகவும் முக்கியமானது தயிர். ஒரு சிலருக்கு தயிர் இல்லாமல் சாப்பாடே இறங்காது. ஆனால், என்னதான் ஆரோக்கியமானதாக இருந்தாலும் தயிரை இரவு நேரத்தில் சாப்பிடுவது உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும். இரவு உறங்கச் செல்வதற்கு முன்பு தயிர் சாப்பிட்டால் தயிரில் இருக்கும் லாக்டிக் ஆசிட் செரிமான பிரச்னையை உண்டாக்கி, மூச்சுக் குழாயில் அடைப்பு, இரும்பல் ஆகிய சிக்கல்களை ஏற்படுத்தும். 3. கிரீன் டீ: உடல் எடை குறைய வேண்டுமா? ‘என்னுடைய அழகான உடல் அமைப்பிற்குக் காரணம் கிரீன் டீ!’ என்று பல சினிமா பிரபலங்கள் சொல்லக் கேட்டு பிடித்தும் பிடிக்காமலும் அந்த கிரீன் டீ குடிப்பவர்கள் பலர். ஆனால் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் கிரீன் டீ குடிப்பது மிகவும் ஆபத்து என ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன. அதில் இருக்கும் கஃபைன் உடலில் உள்ள நீர் சத்தை குறைத்து தலை சுற்றல், வாந்தி போன்ற பிரச்னைகளை உண்டாக்கும். அது மட்டுமின்றி 3 அல்லது 4…
கரோனா தொற்றுக்குள்ளான காச நோயாளிகளுக்கு தீவிர தாக்கங்களோ, அறிகுறிகளோ இயல்புக்கு மாறாக தென்படவில்லை என்பது பொது சுகாதாரத் துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. தொற்றுக்குள்ளான காசநோயாளிகளின் சளி மாதிரிகளை பகுப்பாய்வு செய்ததில் இது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறித்த பல்வேறு ஆய்வுகளை பொது சுகாதாரத் துறை அவ்வப்போது மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் காசநோயாளிகளுக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் உயிரிழப்பு விகிதம் அதிகரிக்கிா என்பது குறித்த ஆய்வு கடந்த சில மாதங்களுக்கு முன்பு முன்னெடுக்கப்பட்டது. அதன்படி, 384 பேரின் சளி மாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. அவா்களில் 88 போ் பெண்கள். 296 போ் ஆண்களாவா். அதில் 22 பேருக்கு காசநோயுடன் கரோனா பாதிப்பும் உள்ளது கண்டறியப்பட்டது. கீமோதெரபி கேன்சர் நோயாளிகளின் வரமல்ல, சாபம்! என்கிறாரே இந்த அமெரிக்க மருத்துவர் அது நிஜமா? காசநோயாளிகள் மற்றும் அதனுடன் கரோனாவுக்கு உள்ளானவா்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகள், அறிகுறிகள், தாக்கங்கள் வகைப்படுத்தப்பட்டு அவை ஆய்வு செய்யப்பட்டன. அதில், இரு தரப்பினருக்கும் இடையே பெரிய அளவிலான வித்தியாசம் எதுவும் இல்லை என்பது கண்டறியப்பட்டது. இரு வகையான தொற்றுகளுமே சுவாசப் பாதையில் ஊடுருவி நோய்த் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை. எனவே, நுரையீரலில் கரோனா தொற்று அதிக வீரியத்தை ஏற்படுத்தி உயிரிழப்பை ஏற்படுத்தியிருக்கிா எனவும் ஆய்வு செய்யப்பட்டது. ஆனால், அவ்வாறு ஏற்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. கூடுதல் எண்ணிக்கையிலான மாதிரிகளைக் கொண்டு ஆய்வு நடத்தினால் மேலும் சில தகவல்களைக் கண்டறிய முடியும் என்று சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா். நன்றி Hindu மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை!
சமீபத்தில் ஐரோப்பாவில் குரங்கு அம்மை பரவுவதாக செய்திகள் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் அரிய வகை குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவைச் சேர்ந்த அந்த நபர் சமீபத்தில் கனடாவிற்கு சென்று திரும்பியுள்ளார். அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த புதிய குரங்கு அம்மை நோயினால் பொது மக்கள் யாரும் பயப்படத் தேவையில்லை என அமெரிக்காவின் நோய் தடுப்புக் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. குரங்கு அம்மை என்றால் என்ன? குரங்கு அம்மை எவ்வாறு பரவுகிறது மற்றும் அதற்கான அறிகுறிகள் என்ன என்பதைப் பார்க்கலாம். குரங்கு அம்மை: குரங்கு அம்மை நோய் ஒரு அரிய வகை நோயாகும். இந்த நோய் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியது. இந்த நோய் கடந்த 1958 ஆம் ஆண்டு முதன் முதலில் ஆய்வகத்தில் உள்ள குரங்குகளிடமிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அதன் காரணத்தினாலேயே இந்த நோய் குரங்கு அம்மை என அழைக்கப்படுகிறது. அதன்பின் 1970 ஆம் ஆண்டு முதன் முதலில் குரங்கு அம்மை மனிதர்களில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குரங்கு அம்மை, சின்னம்மையுடன் தொடர்புடையது. இந்த நோயினால் பாதிக்கப்படுபவரின் முகத்தில் ஒவ்வாமையினால் சிகப்பு புள்ளிகள் தோன்றி அரிப்பு ஏற்படும். பரவும் விதம்: இந்த குரங்கு அம்மை, தொற்றினால் பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது. தொற்றினால் பாதிக்கப்பட்ட விலங்களை தொடுவதன் மூலமாகவும், அதன் உடல் திரவங்கள் மூலமாகவும் இந்த நோய் பெரிதும் மனிதர்களுக்குப் பரவுகிறது. இந்த நோய் எலிகள் மற்றும் அணில் போன்ற விலங்குகளிடமிருந்து பரவுவதாகக் கூறப்படுகிறது. இவற்றை உண்பதாலும் இந்த நோய் பரவுவதாகக் கூறப்படுகிறது. அதற்கு முக்கியக் காரணமாக சமைக்கும்போது இறைச்சியை சரியாக வேக வைக்காமல் இருப்பது பார்க்கப்படுகிறது. இந்த குரங்கு அம்மை மனிதர்களில் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவுவதில்லை. இருப்பினும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர் உபயோகப்படுத்திய ஆடைகள், துண்டு ஆகியவற்றை உபயோகிப்பதன் மூலம் மற்றவர்களுக்குப் பரவும் வாய்ப்பு உள்ளது. அதேபோல இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இருமும் போதும், தும்மும் போதும் வெளியாகும் நீர்த்துளிகள் மற்றவர்கள் மீது படுவதன் மூலமோ அல்லது அதை சுவாசிப்பதன் மூலமும் இந்த நோய் பரவும் அபாயம் உள்ளது.உங்கள் மூளையின் நலனுக்கான 10 திறவுகோல்கள்! ராக்ஃபோா்ட் நரம்பியல் மையம் தகவல் குரங்கு அம்மையின் அறிகுறிகள்: குரங்கு அம்மையால் ஒருவர் பாதிக்கப்பட்டால் அவருக்கு 5-லிருந்து 21 நாள்களுக்குள்ளாக நோயின் முதல் அறிகுறி தென்படும். காய்ச்சல், தலைவலி, உடல்வலி, முதுகுவலி, உடல் நடுக்கம் மற்றும் சோர்வடைதல் போன்றன அறிகுறிகளாக தோன்றும். இந்த அறிகுறிகள் தோன்றிய 5 நாட்களுக்குள் உடலில் ஒவ்வாமை ஏற்பட்டு சிகப்பு நிற புள்ளிகள் தோன்றும். பின்பு அவை கொப்புளங்களாக மாறும். அடுத்த 2-4 வாரங்களில் இந்த கொப்புளங்கள் மறைந்து உதிர்ந்து விடும். குரங்கு அம்மை உயிரைக் கொல்லுமா? மத்திய ஆப்பிரிக்காவில் இந்த குரங்கு அம்மை உயிரைக் கொல்லுமா என உலக சுகாதார நிறுவனத்தினால் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது….
அரசுப்பள்ளிகளில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநில திட்ட இயக்குநர் ஆர்.சுதன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: ‘தூய்மையான நிகழ்வுகள்-2021’ என்ற திட்டத்தின்கீழ் அனைத்துவித பள்ளிகளிலும் செப்டம்பர் 1 முதல் 15-ஆம் தேதி வரை சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டுதல்கள், காலஅட்டவணை தற்போது வழங்கப்பட்டுள்ளது. அதன்படி செப்.1-ஆம் தேதி தூய்மை உறுதிமொழி தினம், செப்.2-இல் தூய்மை விழிப்புணர்வு தினம், செப்.3-இல் சமூக விழிப்புணர்வு தினம்,செப்.4, 5-இல் பசுமைப் பள்ளி இயக்க நாள்கள், செப்.6, 7-இல் தூய்மை நிகழ்வுகளில் பங்கேற்றல், செப்.8-இல் கை கழுவுதல் தினம், செப்.9,10-இல் தன் சுத்தம் மற்றும் சுகாதாரம், செப்.11,12-இல் தூய்மை நிகழ்வு கண்காட்சிகள், செப்.15-ஆம் தேதி பரிசுகள் வழங்குதல் என்ற கால அட்டவணையின்படி செயல்பட வேண்டும். தக்காளி காய்ச்சல் என்றால் என்ன? பரவும் விதம் மற்றும் அறிகுறிகள் இந்த விவகாரம் சார்ந்து உரிய அறிவுறுத்தல்களை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் எடுத்துரைக்க வேண்டும். பாலிதீன் பைகள் மண்ணுக்கு எதிரி ..! மண் வளம் காப்போம்; மரம் வளர்ப்போம்; பற்களில் உள்ள கறைகள் நீங்க வேண்டுமா?
கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த மருந்து நிறுவனமான ஆஸ்ட்ராஸெனெகா நிறுவனம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. கரோனா தொற்றை உண்டாக்கும் சார்ஸ் கோவிட் வைரஸை கட்டுப்படுத்த, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆஸ்ட்ராஸெனெகா ஆராய்ச்சியாளர்களால் தயாரிக்கப்பட்ட ’கோவிஷீல்டு’ தடுப்பூசியை செலுத்திக் கொண்டதால் பல்வேறு தீவிர உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும், உயிரிழப்பும் ஏற்படுவதாகவும் குற்றஞ்சாற்றப்பட்டுள்ளது. பாதுகாப்புக் காரணங்களை மேற்கோள் காட்டி, வேக்ஸ்ஸேவ்ரியா என்ற பெயரிலும் அழைக்கப்படும் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு பிரிட்டனில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசிக்கு பிரிட்டனில் அனுமதி மறுக்கப்படும் முன், அங்கு இந்த தடுப்பூசியை செலுத்திக் கொண்ட ஜேமி ஸ்காட் என்ற நபருக்கு, ஆஸ்ட்ராஸெனெகா தயாரித்த தடுப்பூசியை செலுத்திக்கொண்டதால் மூளையில் தீவிர பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.கடந்த 2021 ஆம் ஆண்டு, ஏப்ரலில் ஜேமி ஸ்காட்க்கு முதன்முதலில் இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பின்னர் மூளையில் ரத்தம் உறைந்து நிரந்தர பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆஸ்ட்ராஸெனெகா நிறுவனம் மீது ஜேமி ஸ்காட்டால் பிரிட்டன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தக்காளி காய்ச்சல் என்றால் என்ன? பரவும் விதம் மற்றும் அறிகுறிகள் இந்த வழக்கின் விசாரணையில் ஆஸ்ட்ராஸெனெகா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில், அந்நிறுவனத்தின் தயாரிப்பான ’கோவிஷீல்டு’ தடுப்பூசியை செலுத்திக் கொண்டோரில், ஒரு சிலருக்கு ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் ‘த்ரோம்போஸைடோபேனியா சிண்ட்ரோம்’ பாதிப்புடன் கூடிய ’த்ரோம்போஸிஸ்’ காரணமாக, ரத்தத்தில் (பிளேட்லெட்ஸ்) ரத்த தட்டுக்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு குறித்த விரிவான தகவல் விரைவில் வெளியிடப்படுமென்று தெரிகிறது. இந்தியாவில், ’கோவிஷீல்டு’ தடுப்பூசியை தயாரிக்கும் உரிமையை செரம் நிறுவனம் பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது. நன்றி Hindu உணவில் சேர்த்துக் கொள்ளும் சர்க்கரை அளவை குறைப்பது எப்படி?
உலகில் புகையிலையின் பேராபத்திலிருந்து மக்களைக் காக்க வேண்டியது அரசின் கடமை. அந்தக் கடமையை அரசு, திரையரங்குகளில்… திரைப்படம் போடத் துவங்கும் முன் சில, பல புகையிலை ஒழிப்பு பிரச்சார விளம்பரங்கள் மூலமாக ஒழித்து விட முடியும் எனக் கருதுகிறது. ஆனால் அப்படி புகையிலையை ஒழிப்பதானால் புகையிலையை பல்வேறு வடிவங்களில் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைந்திருக்க வேண்டுமே?! அப்படியொன்றும் குறைந்ததாகத் தெரியவில்லை. சர்வதேச அளவில் நாளுக்கு நாள் புகைபிடிப்போரின், புகையிலை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறதே தவிர குறையவே இல்லை என்பதே நிஜம். அஸ்ஸாமில் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தற்போது ஆட்சியமைத்திருக்கும் அரசியல் கட்சியின் முக்கியமான வாக்குறுதியே புகையிலையை மாநிலம் முழுதும் முற்றிலுமாக இல்லாதொழிப்பதே தங்களது முதல் கடமை என்பதாக இருந்தது. தேர்தலில் அந்தக் கட்சியின் வெற்றிக்கு இந்த வாக்குறுதியும் ஒரு காரணமாக அமைந்திருந்ததை சுட்டிக் காட்டில் சமீபத்தில் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று மே 31 புகையிலையற்ற உலகை உருவாக்குவோம் எனும் சங்கல்ப தினத்தையொட்டி பொதுமக்களை போராட்டத்துக்கு அழைத்துள்ளது. வாலண்டரி ஹெல்த் அசோஸியேசன் ஆஃப் ஆஃப் அஸ்ஸாம் ( VHAA) என்ற பெயரில் இயங்கி வரும் அந்த தன்னார்வ தொண்டு அமைப்பு, அஸ்ஸாம் மாநிலத்தில், மத்திய புகையிலை எதிர்ப்பு நடவடிக்கையை உடனடியாக அமுல்படுத்துமாறு கோரிக்கை விடுத்திருக்கிறது. அதன் மூலமாக அஸ்ஸாம் மாநிலம் முழுவதும் புகையிலை சார்ந்த லாஹிரி வஸ்துக்களின் பயன்பாட்டை முற்றிலுமாகத் தடை செய்யக் கோரி மாநில அரசை நிர்பந்தித்து வருகிறது. VHAA அமைப்பின் கோரிக்கைகளில் தெளிவாகக் குறிப்பிடப்படும் விஷயங்கள் யாதெனில், அஸ்ஸாமில் பொது இடங்களில் புகைபிடித்தலை முற்றிலுமாகத் தடை செய்ய வேண்டும் என்பதோடு மைனர் சிறுவர்களுக்கு குறிப்பாக 18 வயதுக்கு குறைவாக உள்ள சிறுவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்வதும், புகையிலை சார்ந்த பொருட்களை உட்கொள்ள ஊக்குவிப்பதும் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம், அதோடு பள்ளி, கல்லூரிகள் போன்ற கல்வி நிறுவனங்கள் இருக்கும் எல்லைகளில் சுமார் 100 கெஜ சுற்றளவில் புகையிலை சார்ந்த பொருட்களின் விற்பனை தடை செய்யப்பட வேண்டும். அந்தத் தடையை சட்டப்பூர்வமாக நிலைநிறுத்த மாநில அரசு COTPA (CIGARETTE AND OTHER TOBACCO PRODUCT ACT) சட்டத்தின் 4 மற்றும் 6 பிரிவுகளைப் பயன்படுத்தி ஆவன செய்ய வேண்டும் என VHAA அமைப்பு அஸ்ஸாம் மாநில அரசை வலியுறுத்தியுள்ளது. மே 31 ஆம் தேதி சர்வ தேச அளவில், புகையிலை இல்லா உலகை உருவாக்கும் தினமாக உலக சுகாதார நிறுவனம் மற்றும் அதன் உறுப்பு நாடுகளால் அங்கீகரிக்கப் பட்டுள்ளது. அதன்படி மே 31 ஆம் தேதியன்று புகையிலை மற்றும் புகையிலை சார்ந்த பொருட்களினால் ஏற்படக் கூடிய கொடுமையான ஆரோக்யக் கோளாறுகளைப் பட்டியலிட்டு மக்களுக்கு வெளிப்படுத்தி புகையிலையின் தீமையை உலகம் முழுக்க கொண்டு சேர்க்க வேண்டிய வேலையை அரசும் பலவேறு தனியார் தொண்டு நிறுவனங்களும் செய்து வருகின்றன. புகையிலை என்பது அதைப் பயன்படுத்துகிறவர்களை மட்டுமல்ல, அவர்களைச் சார்ந்தவர்களையும் மிக பாதிக்கிறது. அதற்கு பேஸிவ்…
நீங்கள் தினமும் காலை எழுந்து பல் துலக்கிய பின்னர் என்ன செய்வீர்கள்? இந்தக் கேள்விக்கு ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு பதில் இருக்கும். சிலர் ஒரு சொம்பு நிரைய தண்ணீர் குடிப்பீர்கள், சிலர் காஃபி குடித்தால் தான் அந்த நாள் வேலையே ஆகும் என்பார்கள், வேறு சிலர் நேராகக் காலை உணவைச் சாப்பிடுவார்கள். இதுவே உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களாக இருந்தால் காலை எழுந்தவுடன் ஒரு கிளாஸ் தண்ணீரில் தேன் கலந்து குடிப்பது, பாலில் தேன் கலப்பது, அருகம் புல் ஜூஸ், வாழத்தண்டு ஜூஸ் எனப் பல வீட்டு மருத்துவத்தைக் கடைப்பிடிப்பார்கள். ஏனென்றால் வெறும் வயிற்றில் நாம் சாப்பிடும் எந்தவொரு உணவும் நமது உடலில் பல மாற்றங்களை உண்டாக்கும் ஆற்றலைக் கொண்டது. பெரும்பாலும் யாரும் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் காரமான உணவுப் பொருட்கள் எதையும் சாப்பிட மாட்டோம், அதே போல் நெய் சாப்பிடுவதையும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டோம். ஆனால் சமீபத்திய பல ஆராய்ச்சி முடிவுகளும், நமது ஆயுர்வேதமும் நாம் எதிர் பாராத ஒரு விஷயத்தைத் தெரிவிக்கிறது. காலையில் வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பதில் பல நன்மைகள் கிடைக்கும் என்பதே அது. ஒரு ஸ்பூன் நிறைய நெய் சாப்பிட்டு ஒரு கிளாஸ் சுடு தண்ணீர் குடிக்க வேண்டும். இதைச் சாப்பிட்டு ஒரு 30 நிமிடங்கள் கழித்தே வேறு எந்த உணவையும் சாப்பிட வேண்டும். முதலில் இதனால் உங்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்று பார்ப்போம். செல்களின் செயல்பாட்டை அதிகரிக்கும்: நமது ஆயுர்வேதத்தில் கூறப்பட்டிருப்பதின் படி பார்த்தால் நெய்யில் இருக்கும் ‘ரசா’ என்னும் சத்து உடலில் இருக்கும் செல்களை புத்துயிர் அடையச் செய்கிறது. ஆகையால் காலையில் நெய் சாப்பிடுவதன் மூலம் நமக்குப் புத்துணர்ச்சி கிடைப்பதுடன் செல்களை பராமரித்து நம்மை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். சருமத்தை பொலிவடைய செய்யும்: செல்கள் இறந்து போவதால் நமது சருமம் பொலிவிழந்து வாடிப் போய் விடிகிறது. நெய் சாப்பிடுவதால் செல்கள் புத்துயிர் பெற்று சருமத்திற்கு இயற்கையான பொலிவை தருகிறது. மேலும் சருமம் ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்ள நெய் உதவுகிறது. சொரியாஸிஸ் போன்ற தோல் நோய்களையும் இது குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மூட்டு வலி மற்றும் வாத நோயில் இருந்து காப்பாற்றும்:டெங்கு காய்ச்சலுக்கு புதிய சிகிச்சை முறை – ‘ஜூஸ் ஃபாஸ்டிங்’ நெய் ஒரு இயற்கையான மசகு எண்ணெய் ஆகும், ஆதனால் இது முட்டி போன்ற எலும்புக் கூடும் பகுதிகளில் இருக்கும் தசைகள் வறட்சி அடையாமல் பாதுகாத்து வழுவழுப்பு தன்மையை தக்க வைக்கிறது. இதனால் மூட்டு வலி அல்லது வாதங்கள் ஏற்படாமல் நம்மைப் பாதுகாத்து கொள்ளலாம். நெய்யில் இருக்கும் ஒமேகா-3 கொழுப்பு சத்து எலும்புகளின் வலிமை அடையச் செய்யும். மூளை செல்களை சுறுசுறுப்படைய செய்யும்: காலை வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவது மூளையில் உள்ள அணுக்களைத் தூண்டிவிட்டு மூளையைச் சுறு சுறுப்படைய செய்யும்….
ஒரு நாளைக்கு ஏழு மணி நேரம் தூங்குவது உங்கள் இதயத்தின் வயதைக் குறைத்து இளமையுடன் வைத்திருக்கும், மேலும் இதய நோய்க்கான ஆபத்துக்களையும் குறைத்துவிடும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். எனவே தினமும் இரவில் 7 மணி முதல் 8 மணி நேரம் வரை கட்டாயம் தூங்க வேண்டும். ஏழு மணி நேரத்திற்கும் குறைவான அல்லது அதிகமான தூக்கம் ஒருவருக்கு இருந்தால் அது அவர்களின் இதயத்தில் கார்டியோ வாஸ்குலர் பிரச்னைகளை விளைவிக்கலாம். குறைவான தூக்கம் ஒருவரின் இதயத்தின் வயதை அதிகரித்துவிடும். எனவே இரவில் தூக்கம் நன்றாக இருந்தால்தான் கார்டியோ வாஸ்குலர் பிரச்னைகளைத் தவிர்க்க முடியும் என்கிறது அந்த ஆய்வு. ஜார்ஜியாவில் உள்ள எமரி பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர் ஜூலியா தர்மர் கூறுகையில், ‘இந்த ஆய்வு முடிவுகள் முக்கியமானவை. காரணம் ஒருவரின் தூக்கத்தின் அளவுகோலின் மூலம் கார்டியோ வாஸ்குலர் நோய் ஏற்படுவதற்குரிய அபாயத்தை கண்டுபிடிக்கும் ஒரு அளவீட்டு முறையாக இது விளங்குகிறது’ என்றார். ஸ்லீப் எனும் பத்திரிகையில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், 30-74 வயதுக்குட்பட்ட 12,775 வயதினரிடமிருந்து தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளது. தாங்கள் எவ்வளவு நேரம் தூங்கினோம் என்று அவர்களே கூறியதன் அடிப்படையில், இந்த முடிவுகள் ஐந்து பிரிவில் முதலில் வகைமைப்படுத்தப்பட்டது. 5 மணி நேரம் அல்லது அதற்கும் குறைவாகவும், 6, 7, 8, 9 அல்லது அதற்கும் மேற்பட்ட மணி நேரம் தூங்கியவர்கள் என இவ்வாறு ஐந்து வகைகளாக தூக்க நேரங்கள் வரையறுக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு நபரின் இதய வயதினையும் கணக்கிட, sex-specific Framingham heart age algorithm வழிமுறையைப் பயன்படுத்தி கணக்கிட்டனர் குழுவினர். இவ்வகையில் தூக்க காலத்திற்கும் இதய வயதுக்கும் இடையேயான தொடர்பை ஆய்வு செய்ய பலவகைப்பட்ட லீனியர் அல்லது லாஜிஸ்டிக் ரிக்ரஷனையும் பயன்படுத்தி முடிவுகளைக் கண்டறிந்தனர்.தொண்டை அடைப்பான் நோயால் இதயம் பாதிக்க வாய்ப்பு: மருத்துவக் கல்லூரி முதல்வர் செல்வி தகவல் இந்த ஆய்வின் முடிவில், 24 மணிநேரத்தில் 7 மணி நேரத்துக்கு குறைவான தூக்கத்தை உடையவர்கள் மிகவும் குறைவான இதய வயதைக் கொண்டிருந்தனர் என்பது உறுதியானது. அமெரிக்காவைச் சேர்ந்த கொண்ட National Sleep Foundation எனும் அமைப்பின் கருத்துப்படி, உடல் எடை, புகைபிடித்தல் மற்றும் உடற்பயிற்சி பழக்கங்கள் ஆகியவற்றையெல்லாம் மீறி, ஒருவருக்கு தூக்கம் சரியில்லாமல் போனால் கார்டியோ வாஸ்குலர் அபாயம் மற்றும் கரோனரி இதயப் பிரச்னைகள் ஏற்படுகிறது என்று கூறுகிறது. குறைந்த அளவிலான தூக்கம் ஆரோக்கியமான உடலைக் கூட சிதைத்துவிடும். குளுக்கோஸ், வளர்சிதைமாற்றம், ரத்த அழுத்தம் போன்றவற்றில் பாதிப்பினை ஏற்படுத்தும். மேலும் உயிரியல் செயல்முறைகளில் மாற்றங்கள் ஏற்படுத்த வல்லது தூக்கமின்மை. மாறாக நன்றாகத் தூங்கினால் இப்பிரச்னைகளை எதுவும் நெருங்காமல் தவிர்த்துவிடலாம். நன்றி Hindu குறுகிய கால மருத்துவ துணை பிரிவு பயிற்சி
கேன்சர் நோயாளிகளை நோயின் பிடியிலிருந்து காக்கும் வரமாகக் கருதப்படும் கீமோதெரபி சிகிச்சைக்கு அமெரிக்க மருத்துவர் ஒருவர் வன்மையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் மட்டும் 14 மில்லியன் கேன்சர் நோயாளிகள் இருக்கிறார்கள். அவர்களில் பலர் நோயால் இறப்பதைக் காட்டிலும் கீமோதெரபி சிகிச்சைமுறையால் கடும் அவதிக்குட்பட்டு விரைவில் மரணமடைகிறார்கள் என்கிறார் டாக்டர் ஹார்டின். பி.ஜோன்ஸ். கீமோதெரபி என்பது நச்சு ரசாயணங்களை உடலில் செலுத்தும் முறைதானே தவிர அதன் மூலமாக நோயாளிகளுக்கு கடுமையான வலியாலும், பீதியாலும் துடித்து இறப்பதைத் தவிர எந்தவிதமான பலனும் இல்லை. கீமோதெரபி பரிசளிப்பது வலியையும் மரணத்தையும் என்கிறார் டாக்டர் ஹார்டின். இதை இவர் போகிற போக்கில் சும்மா சொல்லி விட்டுப் போகவில்லை. தனது நீண்ட நெடிய மருத்துவ ஆராய்ச்சியின் முடிவாக கீமோதெரபி சிகிச்சை முறையின் பாதங்கள் என ஒரு ஆய்வுக்கட்டுரையாக முன் வைத்திருக்கிறார். கேன்சர் மருத்துவ சிகிச்சை என்பது தற்போது உலகிலுள்ள லாபம் கொழிக்கும் மற்ற வியாபாரத் துறைகளைப் போலவே லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு நிறுவனமாக வளர்ந்து வருகிறது. மருத்துவர்கள், மருத்துவமனைகள், மருந்து நிறுவனங்கள் மற்றும் அவற்றின் பங்குதாரர்கள் ஆகியோரே இதன் மூலம் பெருத்த லாபம் சம்பாதிப்பவர்கள். இவர்களுக்கு லாபம் மட்டுமே முக்கியம். நோயாளிகளின் நோய் குணமாவதைப் பற்றியெல்லாம் அக்கறை இல்லை. ஒவ்வொரு முறையும் ஒரு நோயாளி வழக்கமான கீமோதெரபி சிகிச்சைமுறைக்கு ஒப்புக் கொண்டு கைழுத்திடும் போதும் அது ஒரு லாபக் குறியீடாகவே கருதப்படுகிறது. பெரும்பாலான சிகிச்சைமுறைகளில் கீமோதெரபி ரசாயணங்கள் உடலுக்குள் இஞ்சக்சன் மூலமாக செலுத்தப்படுகிறது. அல்லது கதிர்வீச்சு முறையில் உடலில் உள்ள கேன்சர் செல்கள் ஊடுருவி அழிக்கப்படுகின்றன. அல்லது கேன்சர் செல்கள் பரவிய உடலுறுப்புகள், உள்ளுறுப்புகள் வெட்டி எடுக்கப்படுகின்றன. சில நோயாளிகளுக்கு சிலசமயங்களில் இந்த மூன்று விதமான சிகிச்சைமுறைகளும் பின்பற்றப்படுகின்றன. அப்போதெல்லாம் மருத்துவர்கள் தங்களிடம் சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் பொய் சொல்கிறார்கள், ‘நீங்கள் நோயை எதிர்த்துப் போராடிக்கொண்டு இருக்கிறீர்கள் என!’ ஆனால், உண்மை என்னவென்றால் நீங்கள் உங்களது நேரத்தை, வாழ்நாளை கடன்வாங்கி நீட்டித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது தான். சிகிச்சையின் தாக்கம் முடிந்த பின் மீண்டும் அதே பழைய கடுமையான நோய்த்தாக்குதல் தொடங்குகிறது. முடிவில் மரணமே எஞ்சுகிறது. இதில் சோகத்துக்குரிய விஷயம் நீங்கள் நோயால் இறப்பதைக் காட்டிலும் நோய்க்கான சிகிச்சையால் மிகுந்த வலியுடனும், மோசமான முறையிலும் இறக்க நேரிடுகிறது என்பது தான். இப்படி ஒரு ஆராய்ச்சி முடிவை வெளியிட்டுள்ள டாக்டர் ஹார்டின் ஜோன்ஸ் அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் மெடிக்கல் ஃபிசிக்ஸ் மற்றும் ஃபிசியாலஜி துறைப்பேராசிரியர் என்பதோடு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக கேன்சர் நோயாளிகளின் வாழ்நாள் நீட்டிப்பு குறித்த ஆராய்ச்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமது ஆராய்ச்சியின் முடிவாக அவர் தமது ஆய்வுக் கட்டுரையில் முன் வைப்பது மக்களின் நெடுங்கால நம்பிக்கையான கீமோதெரபி சிகிச்சைமுறை கேன்சர் நோயாளிகளின் நோய்த்தீவிரத்தையோ அல்லது மரணத்தையோ எந்தவிதத்திலும் ஒத்திப் போடாது. மொத்தத்தில் அது கதைக்கு ஆகாத சிகிச்சை. அதனால் பலனேதும் இல்லை என்பதே. அவர் தனது தொடர் ஆராய்ச்சியில் கண்டறிந்ததாகக் கூறுவது கீமோதெரபிக்கு உள்ளாகும் நோயாளிகள் அனைவரும்…
இன்றையக் காலக்கட்டத்தில் பெரும்பாலான மக்களுக்கு வைட்டமின் டி பற்றாக்குறை உள்ளது. இந்தியா சூரிய ஒளி அதிகம் கிடைக்கக் கூடிய வெப்ப மண்டல நாடு. சூரிய ஒளிக்கும் வைட்டமின் ‘டி’க்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்கிறீர்களா? சூரிய ஒளிதான் வைட்டமின் டி கிடைப்பதற்கு மிகப் பெரிய ஆதாரம். இதனால்தான் இதற்கு சன் ஷைன் வைட்டமின் என்று ஒரு பெயரும் உள்ளது. வைட்டமின் டி மட்டுமே தோலில் இருந்து உற்பத்தியாகும் ஒரே வைட்டமின். மற்ற வைட்டமின்கள் எல்லாம் பழங்கள், காய்கறிகள் மூலமே நமக்கு கிடைக்கின்றன. தோலில் இருந்து பெறப்பட்ட வைட்டமின் ரசாயன மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டு பின்னர் மூளை, நரம்பு, தசை என உடலில் ஒவ்வொரு திசுவுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் வைட்டமின் டி குறைபாடு என்பது தசை பிடிப்பு அல்லது வலி, நரம்பு மண்டலத்தில் எரிச்சல் போன்றவை ஏற்பட காரணமாக இருக்கிறது. உங்களுக்கு நீண்ட நாட்களாக காரணமே தெரியாமல் உடலில் வலி இருந்தால் அதற்கு வைட்டமின் டி குறைபாடு காரணமாக இருக்கலாம். கால்சியத்தை உறிஞ்சி எலும்பை பலப்படுத்த வைட்டமின் டி உதவுகிறது. வைட்டமின் டி குறையும் போது கால்சியம் கிரகிக்கப்படும் தன்மை குறைந்து எலும்புகள் பலவீனம் அடைகின்றன. இதனால் புற்றுநோய், ஆஸ்டியோபெராசிஸ் போன்ற பிரச்னை வருவதற்கு காரணமாகிவிடுகிறது. வைட்டமின் டி குறைபாட்டை எப்படி கண்டறிவது? எளிய ரத்தப் பரிசோதனை மூலம் வைட்டமின் டி குறைபாட்டை கண்டறிந்துவிடமுடியும். ஒருவேளை நீங்கள் வைட்டமின் டி குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தால் முதல்கட்டமாக உங்கள் மருத்துவரை ஆலோசித்து அவர் பரிந்துரையின் பேரில், வைட்டமின் டி சத்து மாத்திரையையை குறைந்தது மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். உங்கள் மருத்துவர்தான் நீங்கள் எவ்வளவு அளவு மாத்திரையை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறமுடியும். ஆறு மாதம் கழித்து வித்தியாசத்தை மீண்டும் ஒரு ரத்த பரிசோதனை மூலம் கண்டறியலாம். இதுதவிர, வைட்டமின் டி அதிக அளவில் நிறைந்துள்ள முட்டை, பால், மீன், மீன் எண்ணெய், காளான் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். தினமும் காலை நேரத்தில் ஒரு 10 நிமிடங்கள் சூரிய ஒளியில் நடைபயிற்சி மேற்கொள்ளலாம். ‘வைட்டமின் டி’யின் நன்மைகள்உஷார்! பற்களைச் சுத்தமாகப் பேணாவிட்டால் உணவுக்குழாய் கேன்சர் வர வாய்ப்பு! எலும்பு, பல், முடிக்கு பாதுகாப்பையும், இயங்க வழுவழுப்பையும் (லூப்ரிகன்ட்) அளிக்கிறது திசுக்கள் வளர்ச்சியை ஒழுங்குபடுத்துகிறது. எலும்பு சம்பந்தமான பிரச்னைகள் வருவதைத் தடுக்கிறது மெனோபாசுக்குப் பிறகு பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பபை குறைக்கிறது. – டாக்டர் விஸ்வநாதன், பிடி. கன்சல்டென்ட் தெரபிஸ்ட் (ஸ்போர்ட்ஸ் & மஸ்குலர் ஸ்கெலிடல்) பிசிசி பானல் பிஸியோ தெரபிஸ்ட் வைட்டமின் டி பற்றாகுறை பற்றி உணவுச் சத்து நிபுணர் திவ்யா புருஷோத்தமன் அண்மையில் தினமணி நிறுவனத்தில் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசியதின் காணொளியின் ஒரு பகுதி இது நன்றி Hindu இயற்கை உபாதையான சிறுநீரை அதிகம் அடக்குபவரா நீங்கள்? அப்போ வரப்போகும் ஆபத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்!
நினைவாற்றல் என்பது இப்போதெல்லாம் ஆயக் கலைகளில் ஒன்றாகி பலருக்கும் கிட்டாததாகிக் கொண்டிருக்கிறது. ஆனால், அதனை அப்படியே விட்டுவிட முடியாது. நினைவாற்றலை வளர்க்க ஞாபகமாக சில விஷயங்களை செய்தே ஆக வேண்டும். ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகமுள்ள உணவு வகைகளை சாப்பிட்டு வந்தால் அல்ஜீமர் நோய்க்கு நோ என்ட்ரி சொல்லிவிடலாம் என்கிறது ஒரு மருத்துவ ஆய்வு. காரணம் ஒமேகா 3 நினைவாற்றல் செல்களை அதிகரித்து மூளையை சுறுசுறுப்பாக்க உதவுகிறது, அதனால் அல்ஜீமர் நோய் பாதிப்புகளிலிருந்து தப்பலாம் என்பதே அந்த ஆராய்ச்சியின் முடிவு. அல்ஜீமர் என்றாலே அது கொஞ்சம் கொஞ்சமாக ஞாபக சக்தியை இழக்கச் செய்து ஒரு கட்டத்தில் நாம் யாரென்றே மறக்க செய்துவிடும் அளவுக்கு கொடுமையானது. நினைவாற்றல் மற்றும் மூளைத் திறனை முற்றிலும் பாதிப்படையச் செய்துவிடும் நோய் அது. இந்த நோயைத் தடுக்க ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மத்தி, நெத்திலி, கெளுத்தி மற்றும் சால்மன் வகை மீன்களில் உள்ளது. ஏழைகளுக்கான நோய் விரட்டி எருக்கு! சைவத்தில் என்றால், ப்ளக்ஸ் விதை, வால்நட், சோயா பீன்ஸ் மற்றும் புதினா ஆகியவற்றில் காணப்படுகின்றது. மூளையின் ஆரோக்கியத்துக்கு இந்த சத்து மிகவும் அவசியம். நன்றி Hindu சமூக வலைதளத்தைப் பார்க்காமல் இருக்க முடியவில்லையா? தீவிர நோய்!!
அலுவலகத்தில் இருந்து அலுத்துக் கலைத்து போய் எப்போதடா வீட்டுக்குப் போய்ச் சேரலாம் என்று ஆவலோடு பேருந்து நிறுத்தம் வருகிறீர்கள், நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருக்கும் மழைக்கால ஈசல் போன்ற பெருங்கூட்டத்தை பார்த்ததும் வீட்டுக்குப் போகும் ஆவலையும் மீறிக் கொண்டு கால் மூட்டுகளும், பாதங்களும் ஐயோ! இத்தனை கூட்டமா உட்கார கொஞ்சம் இடம் கிடைத்தால் தேவலாம் என்று கெஞ்ச ஆரம்பித்து விடுகின்றன. எப்போதாவாது உடனே சீட் கிடைத்து உட்காரப் போனாலும் கூட பக்கத்திலேயே தள்ளாத வயதில் ஒரு பாட்டி நின்று கொண்டிருப்பதைப் பார்த்தால் இரக்க சுபாவிகள் நாம் மனிதாபிமானத்தைப் பற்றியெல்லாம் யோசித்து ஐயோ பாவம்! என்று அவர்களை உட்கார வைத்து விட்டு நின்று கொண்டே வீடு வந்து சேர வேண்டியதாகி விடுகிறது. எப்படியோ பாதங்களின் கெஞ்சல் ஓய்வதே இல்லை . ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்த பின்னும் கூட பெரும்பாலும் என்ன செய்கிறோம் ? அப்படியே கொஞ்ச நேரம் காலாற உட்காருவோம். பிறகு இருக்கவே இருக்கிறது டின்னர் தயாரித்தல், சாப்பிடுதல், பத்துப்பாத்திரம் தேய்த்துக் கழுவுதல், படுக்கைக்கு ஆயத்தமாகுதல் என்று அப்புறமும் நித்ய கடமைகள் காத்திருக்கின்றன. இதில் எங்கிருந்து பாதங்களின் கெஞ்சல் காதில் விழப் போகிறது. ஆனால் மனதிற்குத் தெரியும், அது அதன் பாட்டில் கால் வலிக்கிறது, கால் வலிக்கிறது கொஞ்சம் ஆயின்ட்மென்ட் தடவேன், கொஞ்சம் வெந்நீரில் காலை முக்கியெடுத்து மசாஜ் செய்து கொள்ளேன், என்று முணுமுணுத்துக் கொண்டே இருக்கும், நாம் அதை காதில் போட்டுக் கொள்ளாமல் நமது வேலைகளைத் தொடர்ந்து கொண்டிருப்போம். இதனால் என்னவாகிறது?! இந்நிலை நீடித்தால் ஒருநாள் ஆர்த்தரைட்டிஸில் கொண்டு போய் தள்ளும். இது தேவையா? அவ்வப்போது செய்ய வேண்டிய சின்ன சின்ன பயிற்சிகளை செய்தாலே போதும் கால் பாதங்கள் பெருமளவில் வலியிலிருந்து தப்பலாம். மூட்டு வலி மற்றும் பாதங்களின் சோர்வைப் போக்க வெறுமே காலாற நீட்டி நிமிர்ந்து படுத்து ஓய்வெடுத்தால் மட்டுமே போதாது. அதற்கென்று தனியான பிரத்யேக கவனிப்புகள் தேவைப்படுகின்றன. ஸ்பா போன்ற காஸ்ட்லியான மசாஜ் சென்ட்டர்களுக்குச் செல்லும் அவசியம் இன்றி எளிதாக அலுவலகம் போய் விட்டு வந்து வீட்டிலேயே நாம் செய்து கொள்ளக் கொள்ளக் கூடிய வகையில் மிக எளிமையான நிவாரணமுறைகள் மூன்றை இந்த இதழில் பார்ப்போம். 1 .பாதங்களுக்கு டிசென்டிங் (decending ) முறையில் மிதமான அழுத்தத்தில் மசாஜ்… இரண்டு பாதங்களையும் தொடர்ந்து வளைத்து நிமிர்த்தி வளைத்து நிமிர்த்தி இயங்க விடுங்கள், பிறகு மருத்துவர்கள் பரிந்துரைத்த தரமான பாத மசாஜ் கிரீம்களில் ஏதாவதொன்றை உபயோகித்து ஒவ்வொரு பாதமாக… பாத விளிம்புகளில் தொடங்கி பாதங்களின் கணுக்கால் வளைவுகள் வரை இதமாக கீழிருந்து மேலாக அழுத்தி அழுத்தி மசாஜ் செய்ய ஆரம்பியுங்கள், இந்த மசாஜ் பத்து நிமிடங்களுக்கு அழுத்தத்தை கூட்டி குறைத்து தொடரட்டும், பத்து நிமிடங்களின் முடிவில் மெதுவாக இதமாக எல்லா விரல்களையும் இழுத்து சொடக்கெடுத்து மசாஜின் இறுதிக் கட்டம் சுண்டு விரலில் வந்து முடியட்டும். இந்த மசாஜ் சோர்வான பாதங்களின் வலியைப் போக்கி நமது சுறு சுறுப்பை…
மனித உரிமைகளுக்கான பொதுப்பிரகடனம் 1948 தான் நோயாளிகளின் உரிமைகளுக்கு அடிப்படை. அதற்குப் பிறகு உலக அளவில் பல நாடுகளில், நோயாளிகளின் உரிமைகளைப் பாதுகாக்க அமைப்புகளையும் சட்டங்களையும் கொண்டுவந்தன. இந்தியாவில் 1995 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் மருத்துவ சேவையை, நுகா்வோா் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கொண்டுவந்தது. பாதிக்கப்பட்ட நோயாளிகள், இந்தச் சட்டத்தின் கீழ், சேவை குறைபாடு தொடா்பான வழக்குகளை, மருத்துவா் மீதும், மருத்துவமனைகள் மீதும் தொடுக்கலாம் என்கிறது உச்ச நீதிமன்றம். நோயாளியின் உரிமைகள் நோயாளிகள், தங்கள் நோய் பற்றியும், மருத்துவச் சோதனை முடிவுகள், மருந்து, மாத்திரைகளின் தன்மை குறித்தும் தெரிந்து கொள்ளலாம். நோயாளிக்கு சிகிச்சை அளிக்கப்படும் போது கண்ணியமாகவும் கனிவாகவும் நடத்த வேண்டும். எந்த வகையான துஷ்பிரயோகம், துன்புறுத்தல், புறக்கணிப்பு, சுரண்டல் போன்றவை இருக்கக் கூடாது. நோயாளி பற்றிய ரகசியம், தனித்தன்மை பாதுகாக்க வேண்டும். நோயாளிக்கான உரிமைகள் குறித்து அவருக்கு வாய்மொழியாகவும், எழுத்து மூலமாகவும் தெளிவுபடுத்த வேண்டும். சிகிச்சை குறித்தும் அதில் உள்ள அபாயங்கள், பாதிப்புகள் குறித்தும் தெரிவிக்க வேண்டும். மருத்துவரை, மருத்துவமனையைக் கேள்வி கேட்கவும், தகுந்த விளக்கங்கள் பெறவும் நோயாளிகளுக்கு உரிமை உள்ளது. சிகிச்சை தொடா்பாக இன்னொரு மருத்துவரிடம் இரண்டாவது கருத்துரை (ஒப்பீனியன்) பெறலாம். அறுவைச் சிகிச்சையின் பலன், பாதிப்புகள், செலவு உட்பட எல்லாவற்றையும் நோயாளியும், அவரது நெருங்கிய உறவினரும் முழுமையாகத் தெரிந்து கொள்ளலாம். அலட்சிய சிகிச்சையிலிருந்து பாதுகாக்கப்படுவதற்கும், சேவை குறைபாட்டுக்கும் இழப்பீடு பெற உரிமை உண்டு. தரமற்ற மருந்து, தவறான மருத்துவ சிகிச்சை, போலி மருத்துவா்களிடம் இருந்து பாதுகாப்பு, இழப்பீடு ஆகியவற்றுக்கான உரிமை. உடல்நிலையைப் பொறுத்து உள் நோயாளியாகவே, வெளி நோயாளியாகவோ சிகிச்சைப் பெற்றுக்கொள்ளும் உரிமை. ஒரு மருத்துவரின் சிகிச்சையை ஏற்றுக்கொள்ளவும் நிராகரிக்கவும் நோயாளிக்கு உரிமை உண்டு.இதயத்துக்கும் தன்னுடைய பிரச்னைக்கு வேறு ஒரு மருத்துவரிடம் சிகிச்சை பெற விரும்பினால், தற்போது பெறும் சிகிச்சையை நிறுத்திக் கொள்ள முழு உரிமையும் உள்ளது. யாரிடம் புகாா் செய்வது? கிரிமினல் குற்றமாக இருந்தால், காவல் துறையை அணுகலாம். கவனக் குறைவு, சேவை குறைபாடு போன்ற குற்றங்களாக இருந்தால் நுகா்வோா் நீதிமன்றத்தை அணுகலாம். சட்டத்துக்குப் புறம்பாக, ஒழுங்குநெறி தவறிய குற்றமாக இருந்தால், காவல் துறை மற்றும் இந்திய மருத்துவ சங்கத்தை (ஙங்க்ண்ஸ்ரீஹப் இா்ன்ய்ஸ்ரீண்ப் ா்ச் ஐய்க்ண்ஹ) அணுகலாம். நோயாளியின் கடமைகள் நோயாளிகளுக்கு எப்படி உரிமைகள் உள்ளதோ, அதேபோல சில கடமைகளும் உள்ளன. அதாவது, தன்னுடைய சிகிச்சை பற்றி தனக்குச் சொல்வாா்கள் என்று காத்திருக்காமல், கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டியது அவரது கடமை. மருத்துவா் கேட்கும் கேள்விகளுக்கு முழுமையான, தனக்குத் தெரிந்த பதிலைச் சொல்ல வேண்டும். மருத்துவா் பரிந்துரைத்தபடி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். 10 நாள் மாத்திரை எடுக்கச் சொன்னால், ஐந்தாவது நாளிலேயே நிறுத்திவிடுவது தவறு. தன்னைப் பற்றியும், தன்னுடைய பழக்கவழக்கம் பற்றியும், மருந்து ஒவ்வாமை ஏதேனும் இருந்தால் அதைப் பற்றியும் கட்டாயம் தெரிவிக்க வேண்டும். மருத்துவா் பரிந்துரைத்த மருந்துச் சீட்டு, பரிசோதனை முடிவுகள், பணம் கட்டிய…
கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரமே சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது. வயிற்றில் குழந்தை வளர, வளர, அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரம் பசியும் எடுக்காது. அதனால் சாப்பிடாமல் இருந்துவிடக் கூடாது, பதிலாக ஜூஸ், முளை கட்டிய தானியங்கள் போன்றவற்றை, அவ்வப்போது சாப்பிட வேண்டும். கர்ப்பிணிகள் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியை வாழைப்பழம் தருகிறது. உடல் சூடு மட்டுமல்ல உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப் பழம் நீக்குகிறது. மேலும், வாழைப் பழத்தில் இருக்கும் பொட்டாசியம் சத்து குழந்தைகளின் மூளைத் திறனைத் தூண்டுகிறது. கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்னை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். பிரசவ காலத்துக்குப் பின் வயிற்று தசைகள் வலுப் பெற சின்ன சின்ன உடற்பயிற்சிகள் செய்வது நல்லது. பிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டி விடுவார்கள். அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கும் இதுதான் காரணம். எனவே, பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்துதான் அதற்கான பட்டையை அணியலாம். கர்ப்பகாலத்தில் அனைத்து பழங்களையும் உண்பதால் உயிர்சத்துக்கள் போதுமான அளவு கிடைக்கும் என்றாலும், எளிதில் இரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்கும் பழங்களான ஆப்பிள், பப்பாளி, சப்போட்டா, அன்னாசி, திராட்சை, வாழைப்பழம், பேரீச்சை, உலர் திராட்சை ஆகியவற்றை அதிக அளவிலும், தினந்தோறும் சாப்பிடுவதைவிட வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் குறைந்த அளவில் எடுத்துக்கொள்ளலாம். இவற்றைத்தவிர, மாதுளம், கொய்யா, நெல்லிக்கனி, நாவல், ஆரஞ்சு, எலுமிச்சை ஆகிய பழங்களை தினமும் உண்ணலாம். 36 வாரத்துக்குள் பிரசவம் ஏற்பட்டால் அதை ப்ரீ டெர்ம் டெலிவரி என்றும் 40 வாரத்துக்கு மேலானால் அதைப் போஸ்ட் டெர்ம் டெலிவரி என்றும் கூறுகிறார்கள். எனவே, பிரசவக் காலத்தில் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருப்பது தாய் சேய் நலத்துக்கும், சுகப் பிரசவத்துக்குமான ஒரு முன்னேற்பாடு நடவடிக்கை. சுகப்பிரவசத்துக்கு அதுவும் முக்கியம்.மாதவிடாய் சார்ந்த பிரச்சனை நீங்க ஐ.டி. நிறுவனங்களில் 1% ஊதிய உயர்வு! தாய் சேய் இருவருக்கும் இரும்புச்சத்து மிக அவசியம். அதுதான் ரத்த சோகை வராமல் காக்கும். கர்ப்பத்திலுள்ள குழந்தையின் கல்லீரலில் இரும்புச்சத்து சேர்த்து வைக்கப்படுவதால் பிறந்த பிறகு முதல் மூன்று மாதங்களுக்கு இச்சத்தையே குழந்தை பயன்படுத்திக் கொள்கிறது. எனவே இரும்புச் சத்து மாத்திரையை கட்டாயம் கர்ப்பிணிகள் எடுத்துக்கொள்ள வேண்டும். மல்லாந்த நிலையில் கர்ப்பிணிகள் படுக்கக்கூடாது என்று சொல்வதுற்கக் காரணம், மல்லாந்த நிலையில் படுத்தால், கனமான கருப்பை இதயத்துக்கு ரத்தம் எடுத்துச் செல்லும் ரத்தக்குழாய்களை அழுத்தும். அப்போது இதயத்துக்குத் தேவையான ரத்தம் போய்ச் சேராமல் ஆகிவிடும். இது கர்ப்பிணிகளுக்கு நல்லதல்ல. இதனால் தலைச்சுற்றி மயக்கம் வரும். ஒரு பக்கமாக ஒருக்களித்துப் படுப்பதே நல்லது. ‘கர்ப்பிணிகளுக்கு ஈறு நோய்’ எனும் நோய் வரலாம். அதனால் பற்களை சுற்றி இருக்கும் ஈறு வலுவிழந்து காணப்படுகிறது….
இளம் பருவத்தில் உயரமாக இருக்கும் ஆண்களுக்கு முதுமையில் டிமென்ஷியா எனும் மறதி நோய் ஆபத்து குறைவாக இருக்கும் என்று புதிய ஆராய்ச்சிக் கூறுகிறது. முந்தைய ஆய்வுகள் டிமென்ஷியாவுக்கு உயரம் ஒரு ஆபத்து காரணியாக இருக்கலாம் என்று பரிந்துரைத்தன, ஆனால் இந்த ஆராய்ச்சியின் பெரும்பகுதி மரபணு, சுற்றுச்சூழல் அல்லது ஆரம்பகால வாழ்க்கை உள்ளிட்ட பிற காரணிகளை கணக்கில் எடுத்துக் கொள்ள முடியவில்லை, அவை உயரம் மற்றும் முதுமை ஆகியவற்றுடன் இணைக்கப்படலாம் என்கிறது இந்தப் புதிய ஆய்வு. "இளைஞர்களின் உடல் உயரம் டிமென்ஷியா நோயுடன் தொடர்புடையதா என்பதை நாங்கள் காண விரும்பினோம், அதே நேரத்தில் , கல்வி நிலை மற்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் பகிர்ந்து கொள்ளும் சுற்றுச்சூழல் மற்றும் மரபணு காரணிகள் ஆகியவையும் பகுப்பாய்வு செய்யப்பட்டன" என்று டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தின் முன்னணி ஆய்வாளர் டெரெஸ் சாரா ஹோஜ் ஜோர்கென்சன் கூறினார் லைஃப் இதழில் வெளியிடப்பட்ட இந்தக் கண்டுபிடிப்புக்காக, ஆராய்ச்சியாளர்கள் 1939 மற்றும் 1959 ஆண்டுகளுக்கு இடையில் பிறந்த 666,333 டேனிஷ் ஆண்கள், 70,608 சகோதரர்கள் மற்றும் 7,388 இரட்டையர்கள் உட்பட, டேனிஷ் தேசியப் பதிவுகளில் இருந்து தரவுகளை ஆய்வு செய்தனர். பிற்காலத்தில் டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்ட 10,599 ஆண்களை அவர்கள் கண்டுபிடித்தனர். வெவ்வேறு உயரங்களைக் கொண்ட சகோதரர்களைப் பார்க்கும்போது உயரத்திற்கும் டிமென்ஷியாவிற்கும் இடையிலான உறவும் இருப்பதைக் கண்டறிந்தனர். குள்ளமான ஆண்களுக்கு அதிகளவில் டிமென்ஷியா ஆபத்து இருப்பதை மரபியல் மற்றும் குடும்ப பண்புகள் மட்டும் காரணமில்லை என்று கூறுகின்றன.தொண்டை அடைப்பான் நோயால் இதயம் பாதிக்க வாய்ப்பு: மருத்துவக் கல்லூரி முதல்வர் செல்வி தகவல் "எங்கள் ஆய்வின் ஒரு முக்கிய பலம் என்னவென்றால், இது இளைஞர்களின் டிமென்ஷியா கல்வி மற்றும் அறிவுத்திறன் சார்ந்த பிரச்னைகளை சரி செய்தது. இவை இரண்டும் அறிவாற்றல் இருப்பைக் கட்டியெழுப்பக் கூடும், மேலும் இந்த குழு முதுமையில் மறதி நோயால் பாதிக்கக் கூடும்" என்று மூத்த ஆய்வாளர் மெரெட் ஒஸ்லர் கூறினார். . ‘அறிவாற்றல்’ என்பது அன்றாட வாழ்க்கையில் வரும் சிக்கல்களை மேம்படுத்துவதற்கும் தீர்ப்பதற்கும் மூளையின் திறனைக் குறிக்கிறது. உயரத்திற்கும் முதுமைக்கும் இடையிலான உறவு உண்மையில் அறிவாற்றல் இருப்பு மூலம் விளக்கப்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். "ஒன்றாக, எங்கள் முடிவுகள் இளைஞர்களில் உயரமான உடல் உயரத்திற்கும் பிற்கால வாழ்க்கையில் டிமென்ஷியா நோயறிதலுக்கான குறைந்த ஆபத்துக்கும் இடையிலான தொடர்பை சுட்டிக்காட்டுகின்றன, இது கல்வி நிலை மற்றும் பரிசோதனைகளால் சரி செய்யப்படும் போது கூடத் தொடர்கிறது" என்று ஒஸ்லர் கூறினார். "இரட்டையர்களைப் பகுப்பாய்வு செய்த தரவுகள் இந்த கண்டுபிடிப்புகளை உறுதிப்படுத்துகிறது, மேலும் சகோதரர்கள் பகிர்ந்து கொள்ளும் குடும்பக் காரணிகளுடன் தொடர்பில்லாத ஆரம்பகால சுற்றுச்சூழல் வெளிப்பாடுகளில் பொதுவான உர்காரணங்களாக இருக்கலாம் என்று தெரிகிறது," என்று அவர் மேலும் கூறினார். நன்றி Hindu எச்சரிக்கை! வைட்டமின் டி இல்லையென்றால் இந்த ஆபத்துகள் ஏற்படும்!