முகத்தில் சுருக்கம் விழாமல் தடுக்க என்ன செய்வது என யோசிக்கிறீர்களா? இதைச் சாப்பிடுங்கள் போதும்!

  நமது உடல் ஒரு இயந்திரம் போன்றது அதற்கு நாம் உண்ணும் உணவுகளே எரிபொருட்களாகி இந்த இயந்திரத்தை இயக்குகிறது. அப்படி இருக்கையில் நமது உடலில் ஏற்படும் சில மாற்றங்களைத் தடுப்பதற்கான ஆற்றலும் இந்த உணவுப் பொருட்களிலேயே இருக்கிறது. அந்த வகையில் பல மருத்துவ குணங்களை கொண்ட தேன் மற்றும் பாலினால் நமக்குக் கிடைக்கும் உடல்நல நன்மைகளைப் பற்றி அறிவீர்களா? தினமும் வெது வெதுப்பான பாலில் சிறிது தேன் கலந்து குடிப்பதினால் எந்தெந்த பிரச்னைகளில் இருந்து நீங்கள் விடுபடுவீர்கள் என்று பார்ப்போம். 1. ஆற்றலை அதிகரிக்கும்: ஒரு பெரிய கிளாஸ் பாலில் இருக்கும் கால்சியம் சத்துடன், நமது உடலின் ஆற்றல் சக்தியை அதிகரிக்கத் தேவையான கார்போஹைட்ரேட் சத்து நிறைந்திருக்கும் தேனை கலந்து குடிப்பதால் அது உடல் வலிமையை அதிகரிக்கும். 2. எலும்புகளை வலிமையாக்கும்: எலும்புகளின் வலிமைக்குத் தேவையானது கால்சியம் என நாம் அனைவருக்கும் தெரியும், அந்தச் சத்து மிகவும் அதிகமாகக் கிடைக்கும் ஒரு உணவுப் பொருள் போல். ஆனால் நமது உடல் இந்த கால்சியம் சத்தை சரியாக உறிந்து எடுப்பதில்லை, அதனால் பாலில் தேனைக் கலப்பதன் மூலம் இந்த கால்சியம் சத்து ரத்தத்தின் வழியாக எலும்புகளைச் சென்றடைகிறது. கால்சியம் எலும்புகள் மட்டும் இல்லாமல் பல் வலிமை மற்றும் முடி வளர்ச்சிக்கும் தேவையான ஒன்று. 3. செரிமானத்தை அதிகரிக்கும்: அடேங்கப்பா! எலுமிச்சைப் பழத்தில் இவ்வளவு நன்மைகளா? தேனில் இருக்கும் புரோபயாடிகள், பாலில் இருக்கும் புரோபயாடிக் கலவைகளையும் மேம்படுத்தி செரிமானத்திற்கு உதவுகிறது.  4. மலச்சிக்கலைச் சரி செய்யும்: இரவு தூங்க செல்வதற்கு முன்பு பாலில் தேனைக் கலந்து குடிப்பது மறுநாள் காலையில் ஏற்படும் மலச்சிக்கல் பிரச்னையை குணப்படுத்திவிடும். 5. தோல் சுருங்காமல் தடுக்கும்: பால் மற்றும் தேன் கலவையில் இருக்கும் ஆண்டிஆக்ஸிடண்ட்ஸ் வயதாவதால் நமது சருமத்தில் ஏற்படும் மாற்றங்களைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது. இதனால் வயதின் காரணமாகவோ அல்லது இளம் வயதிலேயே தோல் சுருக்கம் ஏற்படுவதைத் தடுத்து சருமத்திற்கு ஊட்டச்சத்தைத் தந்து முகத்தின் பொலிவை அதிகரிக்கும். 6. தூக்கமின்மையைச் சரி செய்யும்: தேன் ஒரு இனிப்பான உணவு என்றாலும் அது உடலின் இன்சுலின் சுரப்பைக் கட்டுப்படுத்தி இரவில் தூக்கமின்மை பிரச்னையை சரி செய்யும். பால் மற்றும் தேன் கலவையைக் குடிப்பதன் மூலம் இதைப் போன்ற பல அடிப்படை பிரச்னைகளில் இருந்து நாம் விடுபட முடியும். அனைத்துச் சிக்கலுக்கும் மருத்துவரைத் தேடி ஓடுவதைத் தவிர்த்து உணவையே மருந்தாக்கித் தீர்வு காணுங்கள். நன்றி Hindu இது டயாபட்டிஸ் நோயாளிகளுக்கு உதவக் கூடும்! முயற்சி செய்து பாருங்கள்!

இரைப்பை புற்றுநோய் யாருக்கு வரும்? இந்த அறிகுறிகள் உள்ளதா என்று பரிசோதித்துப் பாருங்கள்!

  நோயைக் காட்டிலும் அது ஏற்படுத்தும் பயமும் பதற்றமும் கொடுமையானது. நவீன காலத்தில் வித விதமான நோய்களும், அது குறித்த சந்தேகங்களும், தயக்கங்களும் பலருக்கு உள்ளன. இதெல்லாம் எனக்கு வராது என்று நாம் ஒருபோதும் அலட்சியமாக இருந்துவிட முடியாது. போலவே எனக்கு இது வந்துடுமோ என்று பயந்தபடியும் வாழ முடியாது. இதற்கு என்னதான் தீர்வு? நோய்களைப் பற்றியும் நவீன வாழ்வியல் பற்றியும் சரியான புரிதலும் விழிப்புணர்வும் ஒவ்வொருவருக்கும் தேவை. ஆரோக்கியமான வாழ்க்கையே நோயைத் தவிர்ப்பதற்கான முதல்படி என்பதை உணர்ந்து கொண்டு அதற்கேற்றபடி நம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். இரைப்பை புற்றுநோய் யாருக்கு வரும்? அதன் அறிகுறிகள் என்ன? இந்தப் புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்திவிடமுடியுமா என்று சென்னையில் நடந்த மருத்துவ நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட மருத்துவர் சந்திரமோகன் பேசினார். டாக்டர் சந்திரமோகன் சென்னை அரசு பொது மருத்துவமனையின் இரைப்பைக் குடலியல் அறுவை சிகிச்சை மையத்தின் முன்னாள் இயக்குனர் ஆவார். தற்போது ஈசோ இந்தியா எனும் அமைப்பிற்குத் தலைவராக உள்ளார். இரைப்பைப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியை ஈசோ இந்தியா செயல்பட்டு வருகிறது.  இரைப்பை புற்றுநோய் பற்றி அண்மையில் சென்னையில் நடந்த விழிப்புணர்வு நிகழ்வொன்றில் டாக்டர் சந்திரமோகன் கூறியது, ‘பசிக்கவில்லை, உணவை விழுங்குவதில் சிரமம் உள்ளது என்றால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லுங்கள். ஐந்தே நிமிடங்களில் எடுக்கக் கூடிய எண்டோஸ்கோப்பி எனும் பரிசோதனையின் மூலம் ஒருவரது இரைப்பையைச் சோதித்து, புற்றுநோயின் அறிகுறிகளைக் கண்டறிந்துவிடலாம். அந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவத்தைத் தொடங்கி, பாதிப்பு எந்த அளவில் உள்ளதோ அதற்குரிய முறிஅயில் சிகிச்சையைத் தொடங்கிவிடலாம். இந்நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் முற்றிலும் குணப்படுத்திவிடலாம்’ என்றார்.இலவச தையல் பயிற்சி இரைப்பை புற்றுநோய் குறித்த கட்டுரைகளை ஈசோ இந்தியா அனுப்பலாம். ஜனவரி 20-க்குள் கட்டுரைகளை அனுப்ப வேண்டும். இது குறித்து அமைப்பின் தலைவரும் இரைப்பை-குடல் சிகிச்சை நிபுணருமான சந்திரமோகன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:- ‘வயிறு-உணவுக் குழாய் புற்றுநோயைத் தடுக்க முடியும்-குணப்படுத்த முடியும்-இதை உலகம் உணரட்டும்’ எனும் தலைப்பில் ஒரு பக்க அளவில், தமிழ் அல்லது ஆங்கில மொழியில் 1,500 வார்த்தைகளுக்கு மிகாமல் ஜனவரி 20-க்கு முன்னதாக அனுப்பி வைக்க வேண்டும்.    info@esoindia.org என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது ‘டாக்டர் எஸ்.எம்.சந்திரமோகன், 103, பூந்தமல்லி நெடுஞ்சாலை, சென்னை-84’ என்ற முகவரிக்கு தபாலிலோ கூரியரிலோ அனுப்பலாம். கூடுதல் தகவல்களுக்கு  www.esoindia.org   என வலைதள முகவரியைப் பார்க்கலாம் என்று கூறியுள்ளார் நன்றி Hindu சையது முஷ்டாக் டி20: , தமிழகம், மகாராஷ்டிரம் வெற்றி

நாய் கடித்தவுடன் செய்ய வேண்டியது என்ன?

  தெருநாய் என்பவை இல்லாத தெருக்கள் இல்லையெனலாம். ஒவ்வொரு தெருவிலும் இந்த நாய்களின் ராஜ்ஜியம் நடக்கும். சில தெருக்களில் இவை சிங்கங்கள் போல கர்ஜித்துக் கொண்டிருக்கும். வெறி நாய் எது சாதாரண நாய் எதுவென்று கணிக்க முடியாதபடியும் இருக்கும். நாம் அதை சீண்டாதவரை நம்மை ஒன்றும் செய்யாது என்று தான் நினைப்போம். ஆனால் நாய்க்கடி செய்திகளைப் படிக்கும் போதோ, கேள்விப்படும் போது பீதியடைவதை தவிர்க்க முடியாது. நாய் கடிக்கு மருந்து உள்ளது என்றாலும், தீவிரமாக ஒரு வெறி நாய் கடித்து குதறிவிட்டால் அந்த மனிதர் பிழைப்பது கடினம் தான்.  ஒவ்வோர் ஆண்டும் உலகெங்கும் 60 ஆயிரம் பேர் வெறி நாய்க்கடியால் இறந்து போகிறார்கள். இதில் இந்தியாவில் மட்டும் 20 ஆயிரம் பேர். இதில் 50 சதவிகிதத்தினர் 15 வயதுக்கு கீழுள்ள குழந்தைகள். 5 முதல் 10 வயதுக்கு உட்பட்டவர்கள் என ஆய்வுகள் கூறுகின்றன என்றார் டாக்டர் ம.ராஜா. நாய்க்கடிக்கு என்ன சிகிச்சை உள்ளிட்ட பல முக்கியமான விஷயங்களை கூறினார். கடுமையான விஷம் நாய்க்கடிக்கு அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படும் சிகிச்சைகளை முறையாக, தொடர்ந்து எடுத்துக் கொண்டால், உயிர் இழப்புகளைத் தவிர்க்கலாம். நாய்க்கடி கடுமையான விஷமாகும். நாய்க்கடியால் ஏற்படும் ரேபீஸ் வைரஸ் கிருமிகளின் தாக்கம், அதற்கான சிகிச்சை குறித்து விரிவாகப் பார்க்கலாம் :- மூளையை நோக்கி நகரும் வைரஸ் ரேபிஸ் வைரஸ் என்பது மூளையைத் தாக்கும் ஒரு நோயாகும். Lyssavirus எனப்படும் ரேபிஸ் வைரஸ், பாதிக்கப்பட்ட விலங்குகளின் எச்சிலில் இருக்கும். அவை வாய், மூக்கு, கண்களிலோ, காயங்களிலோ, காயங்கள் மூலமாக ரத்தத்தில் படும்போது மனிதர்களுக்கும் மற்ற விலங்குகளுக்கும் பரவும். காயங்களிலிருந்து நரம்புகள் மூலமாக ஒரு நாளைக்கு 0.3 மில்லிமீட்டர் நகர்ந்து மூளையை நோக்கி பயணம் செய்யும். அதனால் முகத்தில், தலையில் கடித்தால் வேகமாக மூளையை வந்தடையும். கால், கைகளில் கடித்தால் மூளையை வந்தடைய மாதங்கள், வருடங்கள் கூட ஆகலாம். தசை செல்களில் தொடங்கி முதலில் தசை செல்களில் பல்கிப் பெருகும் கிருமிகள், பிறகு நரம்பு செல்களை வேகமாகத் தொற்றிக் கொள்ளும். நரம்பு செல்களில் மிக வேகமாக நகரும். 2 முதல் 12 வாரங்களுக்குள் நோயினால் தாக்கப்பட்ட விலங்குகள் கடித்தவுடன் நோய் வெளிப்படலாம். காயத்தின் தன்மையை பொருத்து காயத்தின் ஆழம், கடித்த இடம், நோய்க் கிருமியின் அளவு போன்ற பல காரணங்களினால் சிலருக்கு 6 ஆண்டுகள் தாமதமாக கூட நோய் வரலாம். நோயின் அறிகுறி ஆரம்பித்த 2 முதல் 10 நாள்களுக்குள் மரணம் நிச்சயம். உலக புலிகள் தின போட்டி நாய் கடித்தவுடன் செய்ய வேண்டியது வெறி நாயோ தெரு நாயோ வீட்டில் வளர்க்கும் நாயோ, பூனையோ, எலியோ, கடித்த இடத்தை ஓடும் தண்ணீரில் 10 முறை சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். விலங்குகளைத் தாக்கும் ரேபீஸ் கிருமி, அதன் எச்சில் மூலமாகத் தான் பரவும். உடலில் தோல் கிழியாத பட்சத்தில் எந்தக் காயத்திலும் நோய்க் கிருமி பரவாது. பயப்படத் தேவையில்லை….

Continue Reading

இலவச தையல் பயிற்சி

பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள புதுப்புதுாரில் கனரா வங்கியின் சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் சார்பில், இலவச தையல் பயிற்சி அளிக்கப்படுகிறது. மையம், மத்திய, மாநில அரசுகளின், ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படி செயல்படுகிறது. இங்கு தையல் பயிற்சி உட்பட பல்வேறு விதமான சுயதொழில் பயிற்சிகள் மதிய உணவோடு, முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. 17ம் தேதி முதல் தொடர்ந்து, 30 நாட்கள் மகளிர் ஆடை தையல் பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன. பயிற்சியில் சேர வயது வரம்பு, 18 முதல், 45க்குள் இருக்க வேண்டும். கல்வித் தகுதி எட்டாம் வகுப்புக்கு மேல். விளக்கெண்ணெய் சமாசாரமுங்கோ  பயிற்சி முடிவில் அரசு சான்றுகளுடன், அரசு திட்டங்களின் வாயிலாக வங்கி கடன் பெற ஆலோசனைகள், தொழில்முனைவோர் திட்டங்களும் எடுத்துரைக்கப்படும். கிராமப்புற மகளிருக்கு முன்னுரிமை உண்டு. பயிற்சி வகுப்புகளில் சேர விரும்புவோர், 0422 2692080 மற்றும் 94890 43926 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் இதனை இனி தூக்கி எறியாதீர்கள்!

home remedies for personal health |காம உணர்வை அதிகரிக்க உதவும் சூப்

couple   அரைக்கீரை சூப் தேவையான பொருட்கள் அரைக் கீரை –  ஒரு கட்டுஇஞ்சி (தோல் நீக்கியது)  –  10 கிராம்மிளகு –  ஒரு ஸ்பூன்சீரகம் – ஒரு ஸ்பூன்பூண்டு – 2 பல்சோம்பு – ஒரு ஸ்பூன்லவங்கப் பட்டை.  –  5 கிராம்தக்காளி – 3தேங்காய்த் துருவல்  – 2 கைப்பிடிசின்ன வெங்காயம் – 5எண்ணெய் – தேவையான அளவுஉப்பு –  தேவையான அளவு செய்முறைகாரமான நெடியுடன் கூடிய சிறுநீர் வெளியேறுவதை தடுக்க  முதலில் அரைக்கீரையை கழுவி ஆய்ந்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளி, இஞ்சி மற்றும் தேங்காய்த் துருவல் ஆகியவற்றை சேர்த்து இரண்டு குவளை தண்ணீர் ஊற்றி  அரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும். வடிகட்டி வைத்துள்ள சாற்றை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் மேலும் ஐந்து குவளை நீர் சேர்த்து அதில் வெங்காயம் , பூண்டு, மிளகு, சீரகம் , சோம்பு ஆகியவற்றையும் மற்றும்  ஆய்ந்து வைத்துள்ள கீரையையும் சேர்த்து நன்கு வேக வைக்கவும். கீரை நன்றாக வெந்தவுடன்  இறக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் லவங்கப் பட்டையைச் போட்டு எண்ணெய் ஊற்றி வதக்கி பின்பு இறக்கி வைத்துள்ள அரைக்கீரையைச் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கி வைத்துக் கொண்டு குடிக்கவும். பயன்கள் இந்தக் கீரை சூப்பை தொடர்ந்து குடித்து வந்தால், காம உணர்வை அதிகப்படுத்தி இனிய தாம்பத்தியம் நடைபெற உறுதுணையாக இருக்கும். படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப் போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும். குறிப்பு அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேக வைத்து   உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும். கோவை பாலாஇயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.Cell : 96557 58609, 73737 10080Covaibala15@gmail.com நன்றி Hindu ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம்

உங்களுக்கு எஸ்கலேட்டர்ல ஏறப் பயமா? அப்போ இது உங்களுக்காகத்தான்!

  சென்னையில் 15 வருடங்களுக்கு முன்பு ஸ்பென்சர் பிளாஸா மாதிரி சில இடங்களில் மாத்திரமே எஸ்கலேட்டர் இருந்தது. ஒருமுறை நாங்கள் அங்கே சென்றிருந்த போது எனக்கு எஸ்கலேட்டர் குறித்த பயம் இருந்தாலும் அப்போது எப்படியோ அந்தப் பயத்தைப் பற்றி பொருட்படுத்தாது என் 70 வயதுப் பாட்டியுடன் அதில் ஏறிச் சென்றேன். எஸ்கலேட்டரில் ஏற எனக்குத்தான் பயமே தவிர பாட்டி ரொம்ப ஜாலியாக அதில் ஏறி வந்தார். இறங்கியதும் இதென்னடா? அவ்வளவு தானா? நாம கீழ இறங்கும் போதும் இதிலேயே இறங்கலாம் என்றவாறு அப்புசாமியின் மாடர்ன் சீதாப்பாட்டி ஸ்டைலில் புன்னகை பூத்தார். ஒரே ஒரு முறை… அது தான் முதல் முறையும் கூட…  அப்படி ஒரே ஒரு எஸ்கலேட்டர் பயணத்திலேயே எனக்கு நெஞ்சுக்குள் ஐஸ் கத்தியை இறக்கியதைப் போல மனமெல்லாம் எப்போதடா பத்திரமாக அதிலிருந்து கீழே இறங்குவோ என்று பரபரப்பாக இருந்தது. அதாகப் பட்டது அப்போது நான் நன்கு உணர்ந்து கொண்டேன், எனக்கு எஸ்கலேட்டரில் பயணிப்பது என்றால் ரொம்பப் பயம் என்று! அதற்குப் பின் இப்போதெல்லாம் சென்னையில் பல இடங்களில் எஸ்கலேட்டர் வந்து விட்டது. இன்னும் சில வருடங்களில் தடுக்கி விழுந்தால் ஏதாவதொரு எஸ்கலேட்டரில் தான் விழுந்து எழுவோமோ என்னவோ! அப்படியான நாட்கள் வந்து விட்டன. ஆனால், எனக்கு எஸ்கலேட்டர் பீதி மட்டும் இன்னும் தீரவே இல்லை. எங்கு சென்றாலும் எஸ்கலேட்டர் இருந்தால் உடனே அங்கே மாடிப்படிகளோ அல்லது மின் தூக்கியோ( லிஃப்டோ) இருக்கிறதா? எனத் தேடத்துவங்கி விடுகிறேன். அவை இரண்டும் இல்லாமல் வெறும் எஸ்கலேட்டரில் தான் மாடிகளைக் கடக்கவேண்டுமெனில் அங்கே ஷாப்பிங் செய்யவே தேவையில்லை எனப் புறக்கணிக்கக் கூட தயாராக இருக்கிறேன் நான். காரணம் எனக்கிருக்கும் எஸ்கலேட்டர் பயம் தான். உலகில் நான் மட்டும் அல்ல. இன்னும் பலருக்கும் கூட இந்த பயம் இருக்கிறதெனச் சொல்கின்றன கூகுளும், யூ டியூபும் இன்னபிற அறிவியல் சஞ்சிகைகளும். இதை மருத்துவப் பெயரில் சொல்வதென்றால் ‘எஸ்கலோஃபோபியா’ என்கிறார்கள். எஸ்கலோஃபோபியா இருப்பவர்களுக்கு எஸ்கலேட்டரில் பயணிக்க பயம் இருக்கும். அந்தப் பயம் சாதாரணமானது தான் எனில் உரிய துணை இருப்பின் அதாவது எஸ்கலேட்டர் பயன்படுத்த உங்களை ஊக்குவிக்கக் கூடிய அளவில் கணவரோ / மனைவியோ, நெருங்கிய நண்பர்களோ, உறவினர்களோ, உங்களது குழந்தைகளோ இருந்து அவர்களது துணையுடன் நீங்கள் எஸ்கலேட்டர் பயத்தைக் கடந்து விட்டீர்கள் எனில் உங்களது எஸ்கலோஃபோபியா குறித்து நீங்கள் அஞ்ச வேண்டியதே இல்லை. உங்களால் அந்த பயத்தை எளிதில் கடக்க முடியும். மாறாக எந்தவிதத்திலும் உங்களது எஸ்கலேட்டர் பயம் மறையவே இல்லை… நாளுக்கு நாள் கூடிக் கொண்டே தான் போகிறது. எஸ்கலேட்டரைக் கண்ட மாத்திரத்தில் தலைசுற்றி மயக்கம் வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள், அப்படியான சமயங்களில் நீங்கள் நிச்சயம் உங்களது பயத்தை எதிர்கொண்டு போராடி வெல்லத்தான் வேண்டும். ஏனெனில், இனி வரும் உலகில் எஸ்கலேட்டர்கள் எனும் நகரும் படிக்கட்டுகளின்றி உங்களால் சில இடங்களுக்குச் செல்லவே முடியாமல் ஆகலாம். ஒவ்வொருமுறையும் படிகளையும், லிஃப்டையும் தேடி…

Continue Reading

பற்களின் பளீர் புன்னகையைக் காக்க சாப்பிட வேண்டிய ஐந்து எளிய உணவுப் பொருட்கள்…

 1. செலரி…  இதைப் பொடியாக நறுக்கி பிரியாணி மற்றும் நான்-வெஜ் கிரேவிகளின் மீது தூவி இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இந்த செலரி விலையும் அப்படி ஒன்றும் பிரமாதமானதில்லை. மலிவான விலையில் சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் காய்கறி மொத்தவிலைக் கடைகளில் கிடைக்கும்.  செலரியை வாயிலிட்டு மெல்லும் போது அரிசிச் சாதம் போலவோ, மைசூர் பாகு போலவோ வாயிலிட்டதும் உடனே கரைந்து விடாது. நன்றாக மென்று விழுங்க வேண்டிய உணவு இது. அப்படி மெல்லும் போது சுரக்கும் அதிகப்படி உமிழ்நீர் பற்குழியை உருவாக்கக் கூடிய ஸ்ட்ரெப்ட்டோகாக்கஸ் மியூட்டன்ஸ் எனும் பாக்ட்டீரியாவின் செயல்களை நியூட்ரலாக்கி கட்டுப்படுத்துகிறது. இதனால் செலரியை உணவில் எந்தவகையில் சேர்த்துக் கொண்டாலும் அவை பற்குழியை கட்டுப்படுத்த உதவுகின்றன. பற்குழி இல்லா வாழ்வைப் பெற செலரி சாப்பிடலாம். தினமும் நமது பல் துலக்கும் நேரங்களை சந்தோசமாக்கிக்  கொள்ளலாம் . 2. க்ரீன் டீ…  நாம் வீடுகளிலும் டீக்கடைகளிலும் வழக்கமாக சாப்பிடும் ரெட் டீயைக் காட்டிலும் க்ரீன் டீ பல வகைகளில் உடல் நலனுக்கு ஆரோக்கியமானது. பற்களின் நலனைப் பொறுத்தவரை க்ரீன் டீ ஒரு வரப்பிரசாதம். க்ரீன் டீயில் இருக்கும் “கேட்டசின்கள்” எனப்படும் மூலக்கூறுகள் பல்வேறு வகையான உணவுப் பொருட்களை உண்பதனால் வாயில் உருவாகும் பாக்டீரியாக்களை அழிப்பதுடன் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய பாக்டீரியாக்களையும் முற்றிலுமாக ஒழித்துக் கட்டுகிறது என்பதால் ரெட் டீக்குப் பதிலாக எல்லோரும் தினம் ஒரு முறை க்ரீன் டீ சாப்பிட்டுப் பழகலாம். 3. கிவி பழங்கள்…  எச்சரிக்கை! வைட்டமின் டி இல்லையென்றால் இந்த ஆபத்துகள் ஏற்படும்! கிவி பழம் ஆரஞ்சு, லெமன் போல விட்டமின் ‘சி’ சத்துக்கள் நிரம்பிய பழ வகையைச் சேர்ந்தது, நாளொன்றுக்கு நமது உடலின் ஆரோக்கியப் பயன்பாட்டுக்குத் தேவைப்படும் விட்டமின் ‘சி’ யைக் காட்டிலும் 100  மடங்கு அதிகமான விட்டமின் ‘சி’ இந்தக் கிவி  பழத்தில் அபிரிமிதமாக தேங்கியுள்ளது. பல் ஈறுகளில் ரத்தக் கசிவு ஏற்பட முக்கியக் காரணமாக இருப்பது இந்த விட்டமின் சி குறைபாடு தான். அத்தகைய விட்டமின் ‘சி’ சத்துக்கள் இந்தப் பழத்தில் நிறைந்திருப்பதால் கிவி பழங்களை வாரத்திற்கு மூன்று நாட்கள் பிற பழங்களோடு சேர்த்து உண்ண ஆரம்பிக்கலாம், ஏனெனில் பல் ஈறுகளின் பொலிவையும் பலத்தையும் தகர்க்கக் கூடிய பெரியோடென்டல்(periodontal ) நோய்களில் இருந்து பற்களைக் காக்கின்றன இந்த கிவி பழங்கள் . விட்டமின் ‘சி’ சத்துக்கள் நிரம்பிய பிற கனி வகைகள் – ஆம்லா(நெல்லிக்கனி) கோவா(கொய்யாப் பழம்) 4. சீஸ்…  குழந்தைகளுக்கு தினசரி உணவில் ப்ரெட் அல்லது சப்பாத்தி மற்றும் நான் வகைகளில் சீஸ் தடவி சாப்பிடத் தரலாம். சீஸ்க்கு வாயின் அமிலகாரத் தன்மையை (PH) சமநிலைப் படுத்தும் தன்மை உண்டு என்பதால் வாய்ப்புண்கள் வராமல் தடுக்கும் என்பதோடு சீஸ் சாப்பிடுவதால் பற்களின் எனாமல் பாதுகாக்கப் படுவதோடு சீஸ்  சுவையானது வாயில் உமிழ் நீர் சுரப்பையும்  அதிகரிக்கும். இதனால் உணவை மென்று விழுங்குவது எளிதாகும். 5. தண்ணீர்…  நாளொன்றுக்கு குறைந்த பட்சம் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது உடலின் மொத்த…

Continue Reading

வாழ்க்கையில் வெற்றி பெற…

வாழ்க்கையில் பெரிதாக சாதிக்க முடியாதவர்களிடம், அவர்கள் மனம் விட்டுப் பேசும் தருணத்தில், அவர்களின் இலட்சியங்களை ஏன் அவர்களால் அடைய முடியவில்லை என்று கேட்டால்,அவர்களில் பெரும்பாலானோர் கூறும் பதிலில் ஒரு ஒற்றுமையைக் காண முடியும். வாழ்க்கையில் தாங்கள் சாதிக்க துடித்த போது தங்களை ஊக்குவிக்க யாரும் இல்லை அதனால் தான் வெற்றி இலக்கை தங்களால் அடைய முடியவில்லை என்பர்.  அப்படியானால் நாம் வாழ்வில் முன்னேறிட நமது இலட்சியங்களை அடைய நிச்சயமாக வெளியிலிருந்து நமக்கு உந்து சக்தி வேண்டும் என்று கூறலாகுமா?  நம் வாழ்வில் நாம் சாதிக்க பல நேரங்களில் பிறரின் நேரடியான ஊக்குவிப்பு கிடைத்தல் சாத்தியமாகாது. எனவே நாம் சாதிக்க உத்வேக உந்துசக்தியாக நம் கண்முன்னால் வாழ்க்கையில் வெற்றி பெற்று வாழும் எடுத்துக்காட்டுகளாக இருக்கும் மனிதர்களை கண்டறிந்து, அவர்களை உற்று நோக்க வேண்டும். அவர்கள் வாழ்வில் கடைப்பிடிக்கும் நல்ல பண்புகளை முடிந்தவரை நாமும் பின்பற்றலாம். அவர்களுடன் முடிந்தால் ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம். அதேபோல வாழ்வில் உங்களைப்போலவே வெற்றி பெறத் துடிக்கும் இலட்சிய மனிதர்களின் நட்பு கிடைத்தால் அவர்களுடன் எப்போதும் தொடர்பிலேயே இருங்கள். நீங்கள் முன்னேற துடிப்புடன் இருக்கும் காலம்வரை அந்த பண்புகளால் ஈர்க்கப்படுவார்கள் உங்களுக்கு அயர்வு ஏற்படும் சமயங்களில் அவர்களின் சுறுசுறுப்பு உங்களையும் உசுப்பி விடும்.  கடினமாக உழைத்து செய்து முடிக்கும் செயலை விட, விரும்பி ஆர்வத்துடன் செய்து முடிக்கும் செயலே சிறந்த முடிவுகளைத் தரும். ஏனென்றால் சாதனையாளர்கள் ஒருபோதும் சிறப்பான செயல்களைச் செய்வதில்லை அவர்கள் தாங்கள் செய்யும் சிறிய செயல்களை கூட சிறப்பாக செய்பவர்கள். எனவே நீங்களும் உங்கள் துறை சார்ந்த செயல்களை செய்யும்போது ஆர்வத்துடனும், அர்ப்பணிப்புடனும் செய்தால் உங்களின் சிறிய செயல் கூட பிறர் அடையாளம் காணும் அளவிற்கு தனித்தன்மை வாய்ந்ததாக அமையும்.விடியோ கேம் அடிக்‌ஷன், மிக மோசமான ‘மனநலச் சீர்கேட்டு நோய்’ என உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு!  நம்மை வாழ்வில் சாதனையாளராக மாற்றுவது நாம் செய்யும் செயலின் மீது நாம் கொண்ட ஆர்வமும் நமது உழைப்பும் என்றால், நமது வெற்றியை தக்க வைத்துக் கொள்ள நமக்கு வாழ்வில் உதவுபவர்கள் நம்முடைய போட்டியாளர்கள். எனவே போட்டியாளர்கள் இல்லை என்றால் நாமே அவர்களை உருவாக்கிக் கொள்ளுதல் அவசியம். காரணம் என்னவென்றால் போட்டியாளர்களே நம்மை தொடர்ந்து சாதிக்க தூண்டுபவர்கள் நம்மை ஓய்வெடுத்து விடாமல் இயங்க வைப்பவர்கள்.  வாழ்க்கையில் நாம் சாதிக்க நேரிடையாக இல்லையானாலும் மறைமுகமாக நம்மை சாதிக்கத் தூண்டும் வெற்றியாளர்களை கண்டறிந்து, வெற்றிக்கான அவர்களின் சிறந்த பழக்கங்களை நாமும் கடைப்பிடித்து, செய்யும் செயல்களை அர்ப்பணிப்போடும் ஆர்வத்தோடும் செய்தால்  அந்த வானமும் வசப்படும். கிடைத்த வெற்றியை தக்கவைத்து கொள்ள நம்முடைய போட்டியாளர்களை கண்டறிந்து அவர்களைத் தாண்டி ஓடுவதற்கான வழிமுறைகளைக் கண்டறிதல் அவசியம். நாய் கடித்தவுடன் செய்ய வேண்டியது என்ன?

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக் கூடிய திடீர் சிக்கல் என்ன?

  ‘என்ன இப்படி இளச்சிட்டீங்க? ஷுகர் இருக்கா?’ முப்பது வயசுதான் ஆகுது… அதுக்குள்ளயே தலமுடியெல்லாம் நரச்சி வயசான ஆளு மாதிரி இருக்குறான்.. ஷுகர் ஏதாச்சும் வந்துடுச்சா? சாப்பாடு கொஞ்சமாதான் சாப்பிட்டீங்க? போதுமா? என்ன ஏதாச்சும் டயட் கன்ட்ரோல்ல இருக்கீங்களா? இல்ல, சக்கர நோயா?’ எங்கே சென்றாலும், இப்படி அன்றாட வேலைகள், உணவுப்பழக்கம் போன்றவற்றில் பல சந்தேகங்களைப் புகுத்திப் பாடாய்படுத்தும் சர்க்கரை நோயைக் கண்டும், தனக்கும் வந்து விடுமோ என்று பயத்துடனும்தான் பலர் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.  சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோயைப் பற்றிய பல தகவல்களை பல்வேறு வகையான ஊடகங்களின் வாயிலாகவும், ஏற்கெனவே நீரிழிவு நோயாளிகளாக இருப்பவர்கள், நண்பர்கள்; மூலமாகவும் தினம் தினம் அனைவரும் கேட்டுக் கொண்டிருப்பதால், முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை நீரிழிவு பற்றிய புரிதல் சற்று அதிகமாகவே இருக்கிறது.  ஆனால், கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு ஏற்படும் திடீர் சிக்கலான கர்ப்பகால நீரிழிவு பற்றியும், அதற்கான உணவுமுறை பற்றியும் முழுமையான தெளிவு பெண்களுக்கு போதுமான அளவில் இல்லை என்றே எண்ணவைக்கிறது அதிகரித்து வரும் தற்போதைய புள்ளிவிவரங்கள்.  இந்தியாவில் வெவ்வேறு இடங்களில், புவியமைப்பைச் சார்ந்து 3.8 % முதல் 21% வரை கர்ப்பகால நீரிழிவு நோய் பரவியுள்ளதாக சமீபத்திய புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.  சென்னையில் 16.2 சதவிகிதமும், ஈரோட்டில் 18.8 சதவிகிதமாகவும் இருக்கிறது. இந்தியர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட வாழ்க்கை முறையையும், உணவுப் பழக்கத்தையும் பின்பற்றும் அமெரிக்காவில், வருடத்திற்கு 1,00,000 பெண்கள் கர்ப்பகால நீரிழிவால் அவதிப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.   நீரிழிவு நோய் எப்படி வருகிறது? கணையம் எனப்படுகின்ற உறுப்பானது, பீட்டா செல்களின் மூலம் இன்சுலின் என்ற ஹார்மோனை சுரக்கிறது. இந்த இன்சுலின் சுரப்பானது, ஒருவரின் உடலிலுள்ள சர்க்கரையை ஆற்றலாக மாற்றி உடலுக்கும் அன்றாட வேலைகளுக்கும் தேவையான சக்தியை உருவாக்கித்தருகிறது. இதனால் சர்க்கரையின் அளவு இரத்தத்தில் அதிகரிப்பது தவிர்க்கப்பட்டு ஒரு சராசரி நிலையில் வைக்கப்படுகிறது.  இவ்வாறு சுரக்கப்படுகிற இன்சுலின் அளவு குறைவதாலோ அல்லது சுரக்கப்பட்ட இன்சுலின் வீரியம் இல்லாமலும் மற்றும் சரியாக பயன்படுத்த முடியாத ஒரு நிலை உடலுக்கு வருவதாலோ, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டிற்குள் இல்லாமல் அதிகமாகி விடுகிறது. இதனால், புரதம் மற்றும் கொழுப்பு போன்ற பிற சத்துக்களின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டு பல்வேறு விதமான உடல் நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. இந்த நிலையே சர்க்கரை வியாதி அல்லது நீரிழிவு நோய் அல்லது மதுமேகம் என்றழைக்கப்படுகிறது.  கர்ப்பகால நீரிழிவு  கர்ப்பகாலம் என்பது, அதிகளவு இன்சுலினை வெளியிடுவதாகவும் அதே சமயம் எதிர் இன்சுலின் ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜன், புரோஜஸ்ட்ரான், பிளாசன்ட்டாவின் லாக்டோஜன், கார்டிசோன் மற்றும் வளர்ச்சியைத் தூண்டும் ஹார்மோன் போன்றவைகளின் செயல்பாட்டால், குறைந்த அளவு இன்சுலின் தாங்குதிறன் அல்லது செயல்திறன் கொண்ட நிலையாகவும் இருக்கிறது. கர்ப்பகாலத்தில் நீரிழிவு ஏற்படுவதற்கு, அப்பெண்ணின் முன்கர்ப்பகால ஆரோக்கியம், பணிச்சூழல், உணவுமுறை, சமூக மற்றும் பொருளாதார நிலை ஆகியவையும் காரணங்களாகின்றன. கர்ப்பகால நீரிழிவு நோய் உள்ள பெண்கள், பிரசவத்திற்குப் பிறகு இன்சுலின் சுரப்பு சீரடைந்து, இரத்தத்தில் சர்க்கரை அளவு…

Continue Reading

தொப்புளைச் சுற்றி எண்ணெய் தேய்த்தால் அழகோடு ஆரோக்கியமும் சேர்ந்து மேம்படும்! எப்படித் தெரியுமா?

  ஒரு உயிரின் தொடக்க புள்ளியாகக் கருதப்படுவது தொப்புள். அனைத்துப் பாலூட்டி உயிரினங்களுக்கும் தொப்புள் இருந்தாலும் மனிதர்களுக்கு மட்டுமே இது தெளிவாக தெரியும்படி அமைந்திருக்கிறது. தாயின் வயிற்றில் சேய் இருக்கும் போது அவர்கள் இருவரையும் இணைக்கும் பந்தமாகவும் இது விளங்குகிறது.  அப்படிப் பார்த்தால் நம் அனைவரது வாழ்வும் ஆரம்பமாகும் இடம் அது தான். அந்த ஆரம்ப புள்ளியில் நாம் எதைச் செய்தாலும் அதன் பாதிப்பு நமது உடல் முழுவதும் ஏற்படும் என்பது உண்மைதானே. அதனால் தான் ஒவ்வொரு வாரமும் உச்சந்தலை மற்றும் தொப்புளில் எண்ணெய் தேய்த்து தலைக்குக் குளிக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.  அதே சமயம் தொப்புளில் ஒவ்வொரு வகையான எண்ணெய் தேய்ப்பதன் மூலம் வெவ்வேறு விதமான பலன்களை நாம் பெற முடியும். எந்தெந்த எண்ணெய்க்கு எதன் மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போமா? வேப்ப எண்ணெய்: தினமும் 3 அல்லது 4 முறை தொப்புளை சுற்றித் தேய்க்க வேண்டும். பொதுவாகவே நமது அழகிற்கும் சரி ஆரோக்கியத்திற்கும் சரி வேப்ப இலையால் பல நன்மைகளைத் தர முடியும். பொலிவான சருமம் பெற, கண் தொடர்பான பிரச்னைகள் தீர, வயிற்றுக் கிருமிகள் மற்றும் புழுக்களை கொல்ல என வெப்ப மரத்தின் பயன்களை சொல்லிக் கொண்டே போகலாம்.  வேப்ப மரத்தில் இருந்து தயாரிக்கப்படும் வேப்ப எண்ணெய்யைத் தொப்புளை சுற்றித் தடவுவதன் மூலம் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், முகப்பருக்கள், தேம்பல்கள் ஆகியன நீங்கும்.  மேலும் முடி உதிர்வு போன்ற பிரச்னைகளுக்கும் ஒரு நல்ல தீர்வாகும்.  பாதாம் எண்ணெய்: தினமும் 2 அல்லது 3 முறை  தொப்புளை சுற்றி மசாஜ் செய்ய வேண்டும். நமது உடலுக்கு மிகவும் தேவையான சரும ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் ஊட்டச்சத்தான ‘வைட்டமின் ஈ’ பாதம் கொட்டையில் அதிகம் நிறைந்துள்ளது. இந்த எண்ணெய்யைத் தினமும் தொப்புளைச் சுற்றி தேய்ப்பதன் மூலம் முகத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாத்து சரும பொலிவும் அதிகரிக்கும். முகம் பளிச்சிட மற்றும் கூந்தல் மிருதுவாக பாதாம் எண்ணெய் பயன் படுத்துவது நல்ல பலனை தரக் கூடியது. தேங்காய் எண்ணெய்:வேளாண் ஏற்றுமதி, இறக்குமதி குறித்து பயிற்சி வாரம் 3 முறை தொப்புளை சுற்றித் தேய்த்தால் போதும். தேங்காய் எண்ணெய்யைத் தேய்ப்பதன் மூலம் கர்ப்பப் பை வலுப்பெற்று குழந்தை பேறு பிரச்சினைகள் நீங்கும். சரியாக மாதவிலக்கு இல்லாதவர்கள் தங்களது தொப்புளைச் சுற்றி சுத்தமான தேங்காய் எண்ணெய் தடவுவதால் 28 நாட்கள் சுழற்சியும் சீராக இயங்கும். கடுகு எண்ணெய்: தினமும் 2 அல்லது 3 முறை தொப்புளில் தடவவும். கடுகு எண்ணெய் தேய்ப்பதன் மூலம் குடல் அடைப்பு போன்ற பிரச்னைகள் தீர்ந்து செரிமானத்தை அதிகரிக்கும். மேலும் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி நோய் எதிர்ப்பு சக்தியையும் பெருக்கும். வெண்ணெய்: ஒரு நாளைக்கு ஒரு முறை தொப்புளை சுற்றித் தேய்த்தால் போதும். சுத்தமான பசும் பாலில் இருந்து எடுத்த வெண்ணெய்யைத் தொப்புளில் தடவுவதன் மூலம் சருமம் ஊட்டச்சத்து அடைந்து மிருதுவாக…

Continue Reading

பௌத்திரம் (மூலக் கட்டி) குணமாக 

  சத்துக்கள் : புரதம், மாவு, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்துவகை `பி’ காம்ப்ளக்ஸ் சத்துகள், நார்ச்சத்துகள் உள்ளிட்ட உடல் இயக்கத்துக்குத் தேவையான அனைத்து சத்துகளும் தேங்காயில் இருக்கின்றன . தீர்வு : தேங்காயை அரைத்து பால் (100 மில்லி) அளவு எடுத்து  அதனுடன் வெங்காயத் தாள் , பொடுதலைக் கீரை , வெந்தயம் இவை மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து தேங்காய் பாலுடன் கலந்து காலை மாலை என இருவேளையும் குடித்து வரவும். தினமும் இருவேளை தேங்காய் பால் தலா (100 மி.லி) அல்லது கொப்பரைத் தேங்காய் எவ்வளவு சாப்பிட முடியுமோ  சாப்பிட்டு வரவும். இதனோடு  ஆகாயத் தாமரை இலையை அரைத்து வெளிமூலம், மூலக்கட்டி (பெளத்திரம்) ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த இடத்தில் வைத்துக் கட்டி வந்தால் அவை விரைவில் குணமாகும்.விளக்கெண்ணெய் சமாசாரமுங்கோ  குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும். கோவை பாலாஇயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்96557 58609 / Covaibala15@gmail.com நன்றி Hindu உங்கள் பற்களை பளிச்சென்று பராமரிக்க 15 பயனுள்ள டிப்ஸ்!

உடல் பருமன் குறைய வேண்டுமா? இது ஒரு சிறந்த வழி!

  காய் : கொத்தவரங்காய் + எலுமிச்சம் பழத்தோல்  + கோவக்காய் சத்துக்கள் : இரும்புச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி, சி நிறைந்துள்ளது. தீர்வு : காலை எழுந்தவுடன்  மற்றும் மாலையில் குடிக்கவும். கொத்தவரங்காய்யுடன் (5), கோவக்காய் (5), ஒரு அரை எலுமிச்சம்பழம் (தோலோடு), உப்பு (கொஞ்சம்), தக்காளி (1), புதினா (சிறிதளவு), வெற்றிலை (2) இவை அனைத்தையும் பொடியாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அதனுடன் சிறிது இஞ்சி (1 துண்டு), மிளகு (2) சேர்த்து அரைத்து ஜூஸாக்கி தினந்தோறும் காலை எழுந்தவுடன் மற்றும் மாலை வேளையில் வெறும் வயிற்றில் குடித்து வரவும். காலை  இரவு வேளை உணவாகமாதவிலக்கிற்கும் ஹார்மோன்களுக்கும் என்ன தொடர்பு? வெளியேறுவது நல்ல ரத்தமா? கெட்ட ரத்தமா? தெரிந்து கொள்ளுங்கள் கேரட் துருவல். 50 கிராம் புடலங்காய் அரிந்தது. – 50 கிராம் கோவைக்காய் அரிந்தது – 50 கிராம் நறுக்கிய தக்காளி. – 2 நறுக்கிய வெங்காயம். – 50 கிராம் தேங்காய் துருவல் – 50 கிராம்சீரகத் தூள். – 5 கிராம்மிளகுத் தூள். – 5 கிராம் எலுமிச்சைச் சாறு தோலோடு  – 50 மி.லி புளிக்காத கெட்டித் தயிர் – 100 கிராம் மேற்கண்ட அனைத்தையும் ஒன்றாக கலந்து, சிறிது உப்பு சேர்த்து அதனுடன் நறுக்கிய கறிவைப்பில்லை, கொத்தமல்லி, புதினா ஆகியவற்றைச் சேர்த்துச் சாப்பிடவும். இதை காலை மற்றும் இரவு வேளை உணவாகச் சாப்பிட்டு வரவும். பின்பு பசித்தால் வழக்கமான உணவு எடுத்துக் கொள்ளலாம். வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் இரவு படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும். குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும். கோவை பாலாஇயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்96557 58609 / Covaibala15@gmail.com நன்றி Hindu உங்கள் சமையல் அறையில் இருக்கும் உயிர்க்கொல்லி வில்லன் இது தான்! ஜாக்கிரதை ரிப்போர்ட்!

பச்சை காப்பிக் கொட்டை 'B' குரூப் ரத்தத்தை 'O' குரூப்பாக மாற்றுமா?

  நிர்மலா கான்வென்ட் என்றொரு தெலுங்குத் திரைப்படம், அதில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்யும் போது அவசரமாக ‘O’ குரூப் ரத்தம் தேவைப்படும். ஆனால் மருத்துவமனையில் அந்த நேரத்தில் ‘B’ குரூப் ரத்தமே ஸ்டாக் இருக்கும். உடனே படத்தின் நாயகனான பள்ளிச்சிறுவன் மருத்துவரிடம் சென்று மேலும் தேவையான அளவுக்கு B குரூப் ரத்தம் சேகரியுங்கள் டாக்டர் என்று சொல்லி விட்டு வெளியில் காட்டுக்குள் ஓடிச் சென்று பச்சை காப்பிக் கொட்டைகளைப் பறித்து வந்து சேகரிக்கப்பட்டிருக்கும் அந்த ரத்தக் குப்பிகளில் குறிப்பிட்ட அளவுக்கு சேர்ப்பான். கைகளில் கிளவுஸ் மாட்டிக் கொண்டு தான். அவனது இந்த முந்திரிக் கொட்டத்தனமான செயலுக்காக டாக்டர் அவனைத் திட்டுவார், அவனோ, டாக்டரிடம் தயவு செய்து இப்போது அந்த ரத்தத்தைச் சோதித்துப் பாருங்கள் குரூப் மாறி இருக்கும் என்பான். டாக்டர் திட்டிக் கொண்டே அந்த ரத்தக் குப்பிகளை சோதனைக்கு எடுத்துச் செல்வார். என்னே ஆசர்யம்! நிஜமாகவே சில வினாடிகளில் பச்சை காப்பிக் கொட்டை சேர்க்கப்பட்ட B குரூப் ரத்தம் O குரூப் ரத்தமாக மாறி இருக்கும்.  அடிப்படையில் இப்படி ஒரு கண்டுபிடிப்பு இருப்பது நிஜம் தான். ஆனால் அதை அவர்கள் படமாக்கிய விதம் சற்று விபரீதமாக இருந்தது. இது குறித்த சோதனைகள் இன்னும் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. முற்றிலுமாக ஒரு பள்ளிச்சிறுவனால் இத்தகைய சாகஸங்களை நிகழ்த்தி விட முடியுமா எனத் தெரியவில்லை. ஆனால் இப்படி ஒரு ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்தியாவில் இந்த முறையில் ரத்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதற்குப் போதிய சான்றுகள் இல்லை. ஆனால் இதில் ஒரு விஷயம் மட்டும் உண்மை என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு பல்லாண்டுகளாகிறது. 1981 ஆம் ஆண்டு வாக்கில் பச்சை காப்பிக் கொட்டைகளைக் கொண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் B குரூப் ரத்தத்தில் உள்ள சர்க்கரை மூலக்கூறுகள் அதாவது ஆண்ட்டிஜென்கள் பச்சை காப்பிக் கொட்டையால் நீக்கப்படுவதன் வாயிலாக அது தானே O  குரூப் ரத்தமாக மாற்றம் அடைவதை விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். அதற்கான காப்புரிமை கூட இந்திய விஞ்ஞானி ஒருவருக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அந்தப் படத்தில் ஒரு காட்சி வருகிறது. ஆனால் அந்த விஞ்ஞானி யார்? இந்த ஆய்வின் அடிப்படையில் ரத்த குரூப்கள் மாற்றம் செய்யப்பட்டு இந்தியாவில் எவருக்கேனும் அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்பட்டுள்ளதா? என்பதைக் குறித்த தகவல்கள் எதையும் தேடிய வரையில் காணோம்.நடுத்தர வயதில் நடுங்கச் செய்யும் மெனோபாஸ் பிரச்னையை எப்படி சமாளிக்கலாம்? ரத்த குரூப்களைப் பொறுத்தவரை ஒருவருக்கு A, B, AB, A நெகட்டிவ், B நெகட்டிவ், O, O நெகடிவ் என்றெல்லாம் ரத்த குரூப்கள் பிரிக்கப்படுவது அவற்றில் உள்ள சர்க்கரை மூலக்கூறுகளின் அடிப்படையில் தான். ஒரு ரத்த குரூப்பில் எவ்விதமான சர்க்கரை மூலக்கூறுகளும் இல்லாவிட்டால் அந்த ரத்தம் O குரூப் என அறிவிக்கப்படுகிறது. இது தான் இந்த ஆராய்ச்சியின் அடிப்படை. இந்தக் கண்டுபிடிப்பால் ஒரு சின்ன ஆறுதல் என்னவென்றால், ஒருவேளை இந்த பச்சைக் காப்பிக்…

Continue Reading

TamilNadu Budget for school education

தமிழக பட்ஜெட்டில் அனைத்துத் துறைகளுடனும் ஒப்பிடும்போது இந்த முறை பள்ளிக்கல்வித் துறைக்கு அதிகபட்சமாக 34,181.73 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தரமான கல்வியைத் தொடர்ந்து அளித்து வருவதாகக் கூறும் தமிழக அரசு, தொடக்கக் கல்வியில் மாணவர் நிகர சேர்க்கை விகிதம் 99.88 சதவீதத்தை எட்டியுள்ளதாகவும் இடைநிற்றல் விகிதம் 0.8 சதவீதமாகக் குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 2019-20 ஆம் ஆண்டில் பள்ளி செல்லாக் குழந்தைகளின் எண்ணிக்கை 30,104 ஆகக் குறைந்து, அவர்களில் 29,740 குழந்தைகள் தற்போது பள்ளியில் சேர்க்கப்பட்டுவிட்டதாகவும் பட்ஜெட் உரையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கவலை தரும் சூழலில் இருக்க, பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள பட்ஜெட் எதைக் காட்டுகிறது? என்று கல்வியாளர்களிடம் பேசினோம். பிரின்ஸ் கஜேந்திர பாபு, கல்வியாளர்: இது ஒரு வழக்கமான பட்ஜெட்டாகத்தான் உள்ளது. செலவுகள் அதிகரித்ததால், நிதி ஒதுக்கீடும் அதிகரித்துள்ளது. மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பட்ஜெட்டில் எந்தத் தீர்வும் சொல்லப்படவில்லை. பட்ஜெட் அறிவிப்பு, சமமான கற்றல் வாய்ப்பை மாணவர்களுக்கு ஏற்படுத்துகிறதா, அருகமைப் பள்ளிகளை அதிகப்படுத்துகிறதா, தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கியுள்ளதா, கற்றல் திறனை அதிகரிக்கிறதா, தாய்மொழி வழிக்கல்வியை ஊக்குவிக்கிறதா என்றால் இல்லை என்றே பதில் கிடைக்கிறது. பள்ளிக் கல்வித்துறைக்கு ஆலோசனை வழங்க சிறந்த கல்வியாளர்களைக் கொண்டு உயர்மட்டக் குழு உருவாக்கப்பட்டது. ஆனால் அவர்களிடம் அரசு ஆலோசனை பெற்றதா? அரசின் கொள்கையில் இடம்பெறாத சமமான கற்றல் வாய்ப்பு, பட்ஜெட்டிலும் அறிவிக்கப்படவில்லை. அதற்கான தேவை குறித்து எந்த விவாதமும் இங்கு எழுப்பப்படவில்லை. மாணவர்களுக்குத் தேர்வில் ஒரே கேள்வித்தாளை வழங்கும் அதே நேரத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே அளவிலான ஆசிரியர்கள் இருக்கிறார்களா? புதிதாக ஒன்றுமில்லாத பட்ஜெட் அறிவிப்பால் பள்ளிக் கல்வித்துறையில் பெரிய மாற்றங்கள் ஏற்படாது என்றே நினைக்கிறேன். அரசுப் பள்ளிகளுக்கு புத்தகப் பைகள், சீருடைகள், காலணிகள், குறிப்பேடுகள், பாடப் புத்தகங்கள் உள்ளிட்ட படிப்புக்குத் தேவையான பொருட்களை விலையின்றி வழங்குவதன் மூலம், குழந்தைகளை பள்ளியில் தக்கவைப்பதை அரசு உறுதி செய்வதாகவும் இதற்காக 1,018.39 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இலவசங்களுக்கான கோடிக்கணக்கில் நிதி செலவிடப்படுவதை எப்படி அணுகுவது? தியாகராஜன், ஜாக்டோ ஜியோ நிர்வாகி பட்ஜெட்டில் ஆசிரியர்கள் பணியிடங்கள் பற்றி எதுவும் அறிவிக்கப்படவில்லை. பழைய ஓய்வுதியத் திட்டம் குறித்த ஸ்ரீதர் கமிட்டி, ஊதிய முரண்பாடு குறித்த சித்திக் கமிட்டி ஆகியவை பற்றி எதுவும் பேசப்படவில்லை. பள்ளிக் கல்வித்துறைக்கு இந்த முறை கடந்த ஆண்டைவிட ரூ.5,424 கோடி அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவை பள்ளிகளைத் தரம் உயர்த்தவோ, ஆசிரியர் நியமனங்களுக்காகவோ வழங்கப்படவில்லை. இந்த ஆண்டு மட்டும் தனியார் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்காக சுமார் ரூ.304 கோடியை அரசு வழங்கியுள்ளது. இந்தத் தொகையை அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை வலுப்படுத்தச் செலவிட்டிருக்கலாமே. ஆசிரியர் – மாணவர் விகிதத்தைப் பேசும் நாம், வகுப்புக்கு ஓர் ஆசிரியர் என்ற நிலைப்பாட்டைக் கொண்டு வரவேண்டும். இதைவிட்டு இலவசங்களைக் கொடுத்தால் மட்டுமே மாணவர்களைத் தக்க வைக்கலாம் என்ற…

Continue Reading

சுயதொழில் தொடங்கரூ.15 லட்சம் வரை கடனுதவி

‘படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும்திட்டம்’ மாவட்ட தொழில் மையங்கள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு ரூ.15 L வரையிலும், சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ரூ.5 லட்சம் வரையிலும் கடன் வழங்கப்படுகிறது. இதில் 25 சதவீதம் மானியமாகும். தகுதியுடைய நபர்கள் www.msmeonline. tn.gov.in/uyegp என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். கரோனா பாதிப்பு காரணமாக, நேர்முகத் தேர்வின்றி தகுதியான விண்ணப்பங்கள் வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்படும். State Level Chess League கூடுதல் விவரங்களுக்கு சென்னை கிண்டியில் உள்ள தொழில் வணிகத்துறை மண்டல இணை இயக்குநரை நேரடியாகவோ அல்லது 04422501621 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்புகொள்ளலாம். மனநலம் பாதித்தவரின் வயிற்றில் சிம் கார்டு, நாணயங்கள்: எண்டோஸ்கோபி மூலம் அகற்றம்

பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை! 35 வயதுக்கு மேல் குழந்தை பெற்றால், பிறக்கும் குழந்தைகளுக்கு இதய நோய்கள் தாக்கும் அபாயம்!

  35 வயதுக்கு மேல் குழந்தை பெற்றுக் கொள்ள நினைக்கும் பெண்களுக்கொரு ஒரு எச்சரிக்கை. குழந்தை பெற்றுக் கொள்ளும் வயது ஏற, ஏற பெண்களின் உடல்நிலையில் ஏற்படும் ஹார்மோனல் மாற்றங்களுக்கு ஏற்ப அவர்களது குழந்தை பெறும் திறனும் பாதிப்புக்கு உள்ளாகிறது எனப் பல்லாண்டுகளாகவே மருத்துவ ஆய்வுக் கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. 35 வயதுக்கு மேல் ஒரு குழந்தையை கருப்பையில் தாங்கி 10 மாதம் சுமந்து போஷாக்காக வளர்த்து பிரசவிக்கும் திறன் பெண்களுக்கு குறைந்து விடுகிறது. வயது ஏற, ஏற கருப்பை தனது ஆரோக்யத்தைப் படிப்படியாக இழந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாகவே மகப்பேறு மருத்துவர்கள் திருமணமான தம்பதிகளிடையே விரைவில் குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆவலை ஊக்குவிப்பதோடு, பணி மாறுதல், உயர் கல்வி, வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக காத்திருத்தல், உள்ளிட்ட காரணங்களுக்காக எல்லாம் குழந்தப்பேற்றை தள்ளிப்போட நினைக்கும் மனப்பான்மையையும் தொடர்ந்து கண்டித்து வருகிறார்கள். உடலியல் காரணங்களினாலோ அல்லது பொருளியல் காரணங்களினாலோ ஒரு பெண்ணுக்கு குழந்தைப்பேறு தள்ளிப் போய் காலதாமதாக குழந்தைப்பேறு நிலைக்கிறது எனில் குழந்தையைக் கருவில் தாங்கும் தாயின் வயதைப் பொறுத்து கருவிலிருக்கும் குழந்தையின் உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி மற்றும் உள்ளுறுப்பு வளர்ச்சிகள், இதய ஆரோக்யம் உள்ளிட்டவை அமைகின்றன என்கிறது சமீபத்தில் வெளிவந்துள்ள கனடா மருத்துவப் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று. குறட்டை விடுவதை நிறுத்த வேண்டுமா? இதைச் செய்தால் போதும் அந்த ஆய்வின் அடிப்படையில் வயதான எலிகளிடையே இந்த சோதனை நடத்தப்பட்டதில் மேற்கண்ட ஆய்வு முடிவு நிரூபணமாகியுள்ளது. 35 வயதுடைய பெண்ணுக்கு சமமான கருப்பை திறன் கொண்ட வயதான பெண் எலிகளிடையே நடத்தப் பட்ட அந்த மருத்துவ ஆய்வில் வயதாக, ஆக பெண்களின் கருப்பை ஆரோக்யம் நிறைந்த, உடற்கோளாறுகள் அற்ற குழந்தைகளைப் பெற்றுத்தரும் திறனை படிப்படியாக இழந்து வருவது நிரூபணமாகியுள்ளதாக இந்த ஆய்வை நடத்திய மருத்துவக் குழுவின் தலைமை ஆய்வாளரான சாண்ட்ரா டாவிட்ஜ் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வின் மூலமாக நடுத்தர வயதுக்கு மேற்பட்டு வயதான பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வரக்கூடிய ஆரோக்ய குறைபாடுகள் குறித்து மேலும் விளக்கமாக ஆராய முடிவதாக அவர் தெரிவித்துள்ளார். நன்றி Hindu குரங்கு அம்மை என்றால் என்ன? குரங்கு அம்மை பரவும் முறையும் அதன் அறிகுறிகளும்

நீண்ட நாட்கள் உயிர் வாழ வேண்டுமா? உடனே சென்று நாய்க் குட்டி ஒன்றை வாங்குங்கள்!

  நீங்கள் நாய் பிரியரா அப்படியென்றால் இதோ நீங்கள் நாய்களை மேலும் விரும்புவதற்கு ஒரு காரணம், சமீபத்தில் சுவீடனில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் நாய் வளர்ப்பவர்களின் ஆயுள் அதிகரிக்கும் எனத் தெரிய வந்துள்ளது.  செல்லப்பிராணி வளர்ப்பவர்களுக்கு இதய நோய் வருவதற்கான அபாயம் குறைவதாக அந்த ஆய்வில் கூறப்படுகிறது. சுவீடன் நாட்டைச் சேர்ந்த 40 முதல் 80 வயதினர்கள் சுமார் 3.4 மில்லியன் மக்கள் இந்த ஆய்வில் கணக்கிடப்பட்டுள்ளனர். நாய் வளர்ப்பவர்களின் ஆயுள் காலம் 20% உயர்ந்திருப்பதைக் கண்டு விஞ்ஞானிகள் வியந்துள்ளனர். உப்ஸ்பலா பல்கலைக்கழகத்தின் மூத்த தொற்று நோய் ஆசிரியரான டோவ் ஃபீல் கூறுகையில் “இந்த ஆய்வின் அடிப்படையில் நாய்களின் வகைகளுக்கு ஏற்ப உரிமையாளர்களின் ஆயுள் காலம் வேறுபடுகிறது, அதிலும் குறிப்பாக சில நாய் இனங்களை வைத்திருப்பது வாழ்நாட்களைப் பல நாட்கள் அதிகரிக்கிறது.”முருங்கைக் காய் மந்திரம்! நீங்கள் நாய் ஒன்று வைத்திருக்கிறீர்கள் என்றால் அதைக் காலை மாலை என இரு வேலையும் நடைப் பயணம் கூட்டிச் செல்வது உங்களுக்கு ஒரு நல்ல உடற் பயிற்சி, வேலை செய்யும் இடத்தில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அந்த மன அழுத்தத்துடன் வீட்டிற்கு வரும் உங்களுடன் அது குதித்து விளையாடும் போது அந்தக் கவலையெல்லாம் அப்படியே குறைந்துவிடும். சரியான உடற்பயிற்சி மற்றும் கவலைகள் இல்லாத வாழ்க்கை இது போதாதா நீண்ட நாட்கள் உயிர் வாழ? நன்றி Hindu TamilNadu Budget for school education

சென்னையில் இன்று இரவு வானத்தில் நடக்கும் அதிசயம்! வெறும் கண்களால் பார்க்கலாம்.. மிஸ் பண்ணாதீங்க

சென்னை: இரவு வானத்தில் எப்போதாவது ஒரு முறை அதிசயங்கள் நடக்கும். அந்த வகையில், நேற்று வெள்ளி, நிலவு மற்றும் சனி ஆகிய கிரகங்ள் ஒரே நேர்க்கோட்டில் தெரிந்திருக்கின்றன. வாய்ப்பிருந்தால் இன்றும் இதனை நம்மால் சென்னையில் இருந்து பார்க்க முடியும். வானியல் அதிசயம்: பூமியிலிருந்து சுமார் 10.6 கோடி கி.மீ தூரத்தில் வெள்ளி கிரகம் இருக்கிறது. சூரிய குடும்பத்தின் மிகவும் பிரகாசமாக இருக்கும் இந்த கிரகமும், பூமியிலிருந்து ஏறத்தாழ 3.8 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள நிலவும், 151 கோடி கி.மீ தொலைவில் உள்ள சனி கிரகமும் நேற்று ஒரே நேர்க்கோட்டில் வந்திருக்கிறது. 2.2 டிகிரிதான் மூன்று கோள்களுக்கும் இடைவெளி இருந்திருக்கிறது. இது ஒரு வானியல் அதிசயமாகும். சில ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இதுபோன்று நிகழும்.செருப்பை கழற்றி விட்டு வீட்டுக்குள் நுழைந்தால் உடல் எடை குறையும், புதிய ஆய்வு முடிவு வெளியீடு! அடித்து துவைக்கற வெயில் காலத்தில் இதையெல்லாம் செய்யாதீங்க!

பற்களில் உள்ள கறைகள் நீங்க வேண்டுமா?

பொதுவாக சிலருக்குஉங்களுக்கே தெரியாமல் அடிக்கடி எலும்பு முறிவு ஏற்படுதா? ஆஸ்டியோபோராஸிஸ் நோயாக இருக்கலாம்!உடல் தோற்றம் அழகாக இருக்கும். ஆனால், அவர்களுடைய பற்களில் கறையாக இருக்கும். நன்றி Hindu தினமும் காலை வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டால் என்னவாகும்? ஆராய்ச்சியும், ஆயுர்வேதமும் சொல்லும் உண்மை!

தூக்கம் ஒரு சுகானுபவம்! நிம்மதியாக ஆழ்ந்து சுகமாக தூங்கினால் என்ன நடக்கும்?

  எந்தத் தகவல் உங்களுக்குத் தேவைப்பட்டாலும், அது உங்களிடமே இருந்து யோசித்து நினைவுப் படுத்திக் கொள்ளும்படியாக உங்கள் அறிவாற்றல் திறன்களை வலுப்படுத்த விரும்புகிறீர்களா? அது சாத்தியம்தான். உறக்கச் சுழற்றியின் மூலம் நீங்கள் புதிதாக கற்றுக் கொண்ட எந்த விஷயத்தையும் நினைவில் ஆழமாகப் பதித்துக் கொள்ள முடியும். தேவைப்படும் சமயத்தில் அந்த தகவல் உங்கள் நினைவின் மேற்பரப்புக்கு வந்து உங்களுக்குக் கைக் கொடுக்கும் என்கிறனர் ஆராய்ச்சியாளர்கள். இதை யோக முறைப்படி யோகநித்ரா என்பார்கள். மனிதர்களுக்கு சராசரியாக எட்டு மணி நேரத் தூக்கம் தேவை என்கிறார்கள். ஆனால் எவ்வளவு நேரம் தூங்கினோம் என்பது முக்கியமில்லை. எத்தகைய ஆழ்நிலையில் உறங்கினோம் என்பதுதான் முக்கியம். உடலில் உள்ள உள் உறுப்புகள் யாவும் தம்மைத் தாமே புதுப்பித்துக் கொண்டு புத்துணர்ச்சியுடன் விளங்க நல்ல உறக்கம் தேவை. நன்றாக உறங்கும்போது ப்ரோலேக்ட்டின் எனும் ஹார்மோன் சுரப்பி வெளிப்படும். அதுவே மன அழுத்தங்களை குறைக்கவல்ல ஹார்மோன் ஆகும். எட்டு மணி நேரம் தூங்க முடியாமல் போனாலும் பரவாயில்லை. அன்றாடம் உங்களுடைய வேலைகளை எப்படி பிரித்து செய்கிறீர்களோ, அது போல தூக்கத்தையும் பிரித்து உறங்க வேண்டும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். கனவுகளில்லா உறக்கம் என்பது சாத்தியமில்லை என்பது எந்தளவுக்கு உண்மையோ, போலவே ஒருவராலும் எட்டு மணி நேரம் தொடர்ந்து தூங்கவும் முடியாது. உறக்கத்தின் இடையே பல சுழற்சிகள் உண்டு என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். கர்ப்பிணிகளே! தயவு செய்து கருவில் இருக்கும் உங்கள் குழந்தையுடன் பேசுங்கள்…. உறக்கம், விழிப்பு,  மீண்டும் உறக்கம் என்னும் சுழற்சி முறையில்தான் உறக்கம் வரும். மேலும் மாதத்தில் ஒரு வாரம் ஆழ்ந்த உறக்கம் அடுத்த வாரம் மிதமான உறக்கம் மீண்டும் அடுத்த வாரம் ஆழ்ந்த உறக்கம் என்றும் சிலருக்கு ஏற்படும். இத்தகைய உறக்க சுழற்சியில் தாக்கம் ஏற்பட்டால் உடல்நல பிரச்னைகள் வரலாம். எனவே இயற்கையான முறையில் நல்ல உறக்கம் ஒவ்வொருவருக்கும் அத்தியாவசியமானது. இதற்கு முன்னால் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் உறக்கச் சுழற்சியின் எண்ணிக்கையைப் பொருத்துதான் ஒருவரது அன்றைய தினத்தின் நினைவுத் திறன் அமைகிறது என்பதும் கண்டறியப்பட்டது. இதற்காக ஆய்வொன்று நடத்தப்பட்டது. ஒரு பரீட்சைக்கு முன்னால் 90 நிமிடங்கள் சிலரை உறங்கச் சொன்னார்கள். மற்றவர்கள் உறங்காமல் நேரடியாக அந்த பரீட்சையை எதிர்கொண்டனர், நன்றாக உறங்கி விழித்த பின் பரீட்சையை வெகு துல்லியமான தரவுகளுடன் அவர்கள் விடைகள் அமைந்திருந்தன. உறங்காமல் நேரடியாக பரீட்சை எழுதியவர்கள் அவர்களை விட சற்று குறைவான மதிப்பெண்களே பெற்றிருந்தனர். இதிலிருந்து உறக்கச் சுழற்சி முறையினால் மூளைக்குள் சில மின்னணு மாற்றங்கள் ஏற்பட்டு நினைவுத் திறன் மேம்படுகிறது என்ற முடிவுக்கு வந்தனர் ஆய்வாளர்கள். உறக்க சுழற்சி முறையினால் ஆழ்ந்த உறக்கம் ஏற்படுவது மட்டுமல்லாமல், உடல் மற்றும் மன நலம் மேம்படுகிறது, நினைவுத் திறன் அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும், இது உங்கள் மன அழுத்தங்களை குறைத்து அறிவாற்றல் திறனை அதிகரிக்கவும் செய்கிறது.  நன்றி Hindu பெண்களே உஷார்! சானிடரி நாப்கினில் பெரிய ஆபத்து உள்ளது! (விடியோ)