குரங்கு அம்மை என்றால் என்ன? குரங்கு அம்மை பரவும் முறையும் அதன் அறிகுறிகளும்

சமீபத்தில் ஐரோப்பாவில் குரங்கு அம்மை பரவுவதாக செய்திகள் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் அரிய வகை குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவைச் சேர்ந்த அந்த நபர் சமீபத்தில் கனடாவிற்கு சென்று திரும்பியுள்ளார். அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த புதிய குரங்கு அம்மை நோயினால் பொது மக்கள் யாரும் பயப்படத் தேவையில்லை என அமெரிக்காவின் நோய் தடுப்புக் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. குரங்கு அம்மை என்றால் என்ன? குரங்கு அம்மை எவ்வாறு பரவுகிறது மற்றும் அதற்கான அறிகுறிகள் என்ன என்பதைப் பார்க்கலாம். குரங்கு அம்மை:  குரங்கு அம்மை நோய் ஒரு அரிய வகை நோயாகும். இந்த நோய் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியது. இந்த நோய் கடந்த 1958 ஆம் ஆண்டு முதன் முதலில் ஆய்வகத்தில் உள்ள குரங்குகளிடமிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அதன் காரணத்தினாலேயே இந்த நோய் குரங்கு அம்மை என அழைக்கப்படுகிறது. அதன்பின் 1970 ஆம் ஆண்டு முதன் முதலில் குரங்கு அம்மை மனிதர்களில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குரங்கு அம்மை, சின்னம்மையுடன் தொடர்புடையது. இந்த நோயினால் பாதிக்கப்படுபவரின் முகத்தில் ஒவ்வாமையினால் சிகப்பு புள்ளிகள் தோன்றி அரிப்பு ஏற்படும். பரவும் விதம்: இந்த குரங்கு அம்மை, தொற்றினால் பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது. தொற்றினால் பாதிக்கப்பட்ட விலங்களை தொடுவதன் மூலமாகவும், அதன் உடல் திரவங்கள் மூலமாகவும் இந்த நோய் பெரிதும் மனிதர்களுக்குப் பரவுகிறது. இந்த நோய் எலிகள் மற்றும் அணில் போன்ற விலங்குகளிடமிருந்து பரவுவதாகக் கூறப்படுகிறது. இவற்றை உண்பதாலும் இந்த நோய் பரவுவதாகக் கூறப்படுகிறது. அதற்கு முக்கியக் காரணமாக சமைக்கும்போது இறைச்சியை சரியாக வேக வைக்காமல் இருப்பது பார்க்கப்படுகிறது. இந்த குரங்கு அம்மை மனிதர்களில் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவுவதில்லை. இருப்பினும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர் உபயோகப்படுத்திய ஆடைகள், துண்டு ஆகியவற்றை உபயோகிப்பதன் மூலம் மற்றவர்களுக்குப் பரவும் வாய்ப்பு உள்ளது. அதேபோல இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இருமும் போதும், தும்மும் போதும் வெளியாகும் நீர்த்துளிகள் மற்றவர்கள் மீது படுவதன் மூலமோ அல்லது அதை சுவாசிப்பதன் மூலமும் இந்த நோய் பரவும் அபாயம் உள்ளது.சுகாதார விழிப்புணர்வுகால அட்டவணை வெளியீடு குரங்கு அம்மையின் அறிகுறிகள்: குரங்கு அம்மையால் ஒருவர் பாதிக்கப்பட்டால் அவருக்கு 5-லிருந்து 21 நாள்களுக்குள்ளாக நோயின் முதல் அறிகுறி தென்படும். காய்ச்சல், தலைவலி, உடல்வலி, முதுகுவலி, உடல் நடுக்கம் மற்றும் சோர்வடைதல் போன்றன அறிகுறிகளாக தோன்றும். இந்த அறிகுறிகள் தோன்றிய 5 நாட்களுக்குள் உடலில் ஒவ்வாமை ஏற்பட்டு சிகப்பு நிற புள்ளிகள் தோன்றும். பின்பு அவை கொப்புளங்களாக மாறும். அடுத்த 2-4 வாரங்களில் இந்த கொப்புளங்கள் மறைந்து உதிர்ந்து விடும். குரங்கு அம்மை உயிரைக் கொல்லுமா? மத்திய ஆப்பிரிக்காவில் இந்த குரங்கு அம்மை உயிரைக் கொல்லுமா என உலக சுகாதார நிறுவனத்தினால் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அதில், தரமற்ற மருத்துவ சேவையை பெறும்…

Continue Reading

TamilNadu Budget for school education

தமிழக பட்ஜெட்டில் அனைத்துத் துறைகளுடனும் ஒப்பிடும்போது இந்த முறை பள்ளிக்கல்வித் துறைக்கு அதிகபட்சமாக 34,181.73 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தரமான கல்வியைத் தொடர்ந்து அளித்து வருவதாகக் கூறும் தமிழக அரசு, தொடக்கக் கல்வியில் மாணவர் நிகர சேர்க்கை விகிதம் 99.88 சதவீதத்தை எட்டியுள்ளதாகவும் இடைநிற்றல் விகிதம் 0.8 சதவீதமாகக் குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 2019-20 ஆம் ஆண்டில் பள்ளி செல்லாக் குழந்தைகளின் எண்ணிக்கை 30,104 ஆகக் குறைந்து, அவர்களில் 29,740 குழந்தைகள் தற்போது பள்ளியில் சேர்க்கப்பட்டுவிட்டதாகவும் பட்ஜெட் உரையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கவலை தரும் சூழலில் இருக்க, பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள பட்ஜெட் எதைக் காட்டுகிறது? என்று கல்வியாளர்களிடம் பேசினோம். பிரின்ஸ் கஜேந்திர பாபு, கல்வியாளர்: இது ஒரு வழக்கமான பட்ஜெட்டாகத்தான் உள்ளது. செலவுகள் அதிகரித்ததால், நிதி ஒதுக்கீடும் அதிகரித்துள்ளது. மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பட்ஜெட்டில் எந்தத் தீர்வும் சொல்லப்படவில்லை. பட்ஜெட் அறிவிப்பு, சமமான கற்றல் வாய்ப்பை மாணவர்களுக்கு ஏற்படுத்துகிறதா, அருகமைப் பள்ளிகளை அதிகப்படுத்துகிறதா, தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கியுள்ளதா, கற்றல் திறனை அதிகரிக்கிறதா, தாய்மொழி வழிக்கல்வியை ஊக்குவிக்கிறதா என்றால் இல்லை என்றே பதில் கிடைக்கிறது. பள்ளிக் கல்வித்துறைக்கு ஆலோசனை வழங்க சிறந்த கல்வியாளர்களைக் கொண்டு உயர்மட்டக் குழு உருவாக்கப்பட்டது. ஆனால் அவர்களிடம் அரசு ஆலோசனை பெற்றதா? அரசின் கொள்கையில் இடம்பெறாத சமமான கற்றல் வாய்ப்பு, பட்ஜெட்டிலும் அறிவிக்கப்படவில்லை. அதற்கான தேவை குறித்து எந்த விவாதமும் இங்கு எழுப்பப்படவில்லை. மாணவர்களுக்குத் தேர்வில் ஒரே கேள்வித்தாளை வழங்கும் அதே நேரத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே அளவிலான ஆசிரியர்கள் இருக்கிறார்களா? புதிதாக ஒன்றுமில்லாத பட்ஜெட் அறிவிப்பால் பள்ளிக் கல்வித்துறையில் பெரிய மாற்றங்கள் ஏற்படாது என்றே நினைக்கிறேன். அரசுப் பள்ளிகளுக்கு புத்தகப் பைகள், சீருடைகள், காலணிகள், குறிப்பேடுகள், பாடப் புத்தகங்கள் உள்ளிட்ட படிப்புக்குத் தேவையான பொருட்களை விலையின்றி வழங்குவதன் மூலம், குழந்தைகளை பள்ளியில் தக்கவைப்பதை அரசு உறுதி செய்வதாகவும் இதற்காக 1,018.39 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இலவசங்களுக்கான கோடிக்கணக்கில் நிதி செலவிடப்படுவதை எப்படி அணுகுவது? தியாகராஜன், ஜாக்டோ ஜியோ நிர்வாகி பட்ஜெட்டில் ஆசிரியர்கள் பணியிடங்கள் பற்றி எதுவும் அறிவிக்கப்படவில்லை. பழைய ஓய்வுதியத் திட்டம் குறித்த ஸ்ரீதர் கமிட்டி, ஊதிய முரண்பாடு குறித்த சித்திக் கமிட்டி ஆகியவை பற்றி எதுவும் பேசப்படவில்லை. பள்ளிக் கல்வித்துறைக்கு இந்த முறை கடந்த ஆண்டைவிட ரூ.5,424 கோடி அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவை பள்ளிகளைத் தரம் உயர்த்தவோ, ஆசிரியர் நியமனங்களுக்காகவோ வழங்கப்படவில்லை. இந்த ஆண்டு மட்டும் தனியார் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்காக சுமார் ரூ.304 கோடியை அரசு வழங்கியுள்ளது. இந்தத் தொகையை அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை வலுப்படுத்தச் செலவிட்டிருக்கலாமே. ஆசிரியர் – மாணவர் விகிதத்தைப் பேசும் நாம், வகுப்புக்கு ஓர் ஆசிரியர் என்ற நிலைப்பாட்டைக் கொண்டு வரவேண்டும். இதைவிட்டு இலவசங்களைக் கொடுத்தால் மட்டுமே மாணவர்களைத் தக்க வைக்கலாம் என்ற…

Continue Reading

இந்த 4 உணவுப் பொருட்களையும் கழுவாமல் தான் சமைக்க வேண்டும்! ஏன் தெரியுமா?

  உணவுப் பொருட்களை பயன்படுத்துவதற்கு முன்பு கழுவி பயன்படுத்துவதே ஆரோக்கியமான பழக்கம் என்றாலும் அதில் சில விதிவிலக்குகள் இருக்கின்றன. சமைப்பதற்கு முன்பு இந்த 4 பொருட்களையும் மறந்து கூட தண்ணீரில் கழுவி விடாதீர்கள். ஏன் என்று தானே யோசிக்கிறீர்கள் வாருங்கள் பார்ப்போம். 1. முட்டை: நாம் கடையில் வாங்கும் அனைத்து முட்டைகளிலும் அதைப் பாக்டீரியா கிருமிகளில் இருந்து பாதுகாக்க ஒரு விசேஷ ரசாயனம் (உடலுக்குத் தீங்கு விளைவிக்காத) அதன் மேற் பரப்பில் தடவப் பட்டிருக்கும். ஆனால் நீங்கள் முட்டையைத் தண்ணீரில் கழுவி விட்டால் இந்த பாதுகாப்பு அடுக்கு தண்ணீரில் கரைந்து, பாக்டீரியா வளர்வதோடு சமைக்கும் போது பிற உணவுப் பொருட்களிலும் அது பரவும் அபாயம் உள்ளது. 2. காளான்: காளான் தண்ணீரை மிக விரைவாக உறியும் தன்மை உடையது, ஆகையால் நீங்கள் அதைக் கழுவும் போது வேகமாகத் தண்ணீரை தன்னுள் இழுத்துக் கொள்ளும், இதனால் அதனுள் இருக்கும் வைட்டமின் சத்துக்களை அது இழக்க நேரிடும். ஒருவேலை மண்ணாக இருக்கிறது நிச்சயம் கழுவித்தான் ஆக வேண்டும் என்றால் ஓடும் தண்ணீரில் கழுவுவதை விட சில விநாடிகள் மட்டும் தண்ணீரில் முக்கி எடுப்பது அதன் சத்துக்கள் கரையாமல் இருக்க உதவும்.இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை 2030-ம் ஆண்டிற்குள் இருமடங்காக அதிகரிக்கும் அபாயம்! 3. பாஸ்தா: பாஸ்தா தயாரிப்பு நிறுவனம் அதன் மேற்பரப்பில் ருசிக்காக சில பொருட்களையும், ஸ்டார்ச் (மாவு) போன்றவற்றையும் சேர்த்திருக்கும். அதனால் தண்ணீரில் பாஸ்தாவை நீங்கள் கழுவினால் இந்தப் பொருட்கள் தண்ணீரில் கரைந்து அதன் சுவையை குறைத்துவிடும். 4. கறி: நாம் பலரும் கறியில் உள்ள பாக்டீரியாக்களை நீக்க அதைத் தண்ணீரில் நன்கு அலச வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம், ஆனால் அது மிகவும் தவறு. பாக்டீரியாக்களை  நீக்கக் கறியை குறைந்த சூட்டில் தண்ணீரில் வேக வைப்பதே சிறந்த வழியாகும். மேலும் தண்ணீரில் நீங்கள் கறியை கழுவுவதால் அது மேலும் பாக்டீரியா உற்பத்தியை அதிகரிக்கும் என்பதே உண்மை. சாப்பிடுவதற்கு முன்பும் சமைப்பதற்கு முன்பும் உணவுப் பொருட்களை கழுவுவது ஒரு நல்ல பழக்கம் என்றாலும் இந்த 4 பொருட்களையும் கழுவாமல் உபயோகிப்பதே சிறந்த மற்றும் ஆரோக்கியமான பழக்கம் ஆகும். நன்றி Hindu ஆபத்தினை விளைவிக்கும் தேயிலை பைகள் 

பற்களில் உள்ள கறைகள் நீங்க வேண்டுமா?

பொதுவாக சிலருக்குபௌத்திரம் (மூலக் கட்டி) குணமாக உடல் தோற்றம் அழகாக இருக்கும். ஆனால், அவர்களுடைய பற்களில் கறையாக இருக்கும். நன்றி Hindu இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை 2030-ம் ஆண்டிற்குள் இருமடங்காக அதிகரிக்கும் அபாயம்!

தூக்கம் ஒரு சுகானுபவம்! நிம்மதியாக ஆழ்ந்து சுகமாக தூங்கினால் என்ன நடக்கும்?

  எந்தத் தகவல் உங்களுக்குத் தேவைப்பட்டாலும், அது உங்களிடமே இருந்து யோசித்து நினைவுப் படுத்திக் கொள்ளும்படியாக உங்கள் அறிவாற்றல் திறன்களை வலுப்படுத்த விரும்புகிறீர்களா? அது சாத்தியம்தான். உறக்கச் சுழற்றியின் மூலம் நீங்கள் புதிதாக கற்றுக் கொண்ட எந்த விஷயத்தையும் நினைவில் ஆழமாகப் பதித்துக் கொள்ள முடியும். தேவைப்படும் சமயத்தில் அந்த தகவல் உங்கள் நினைவின் மேற்பரப்புக்கு வந்து உங்களுக்குக் கைக் கொடுக்கும் என்கிறனர் ஆராய்ச்சியாளர்கள். இதை யோக முறைப்படி யோகநித்ரா என்பார்கள். மனிதர்களுக்கு சராசரியாக எட்டு மணி நேரத் தூக்கம் தேவை என்கிறார்கள். ஆனால் எவ்வளவு நேரம் தூங்கினோம் என்பது முக்கியமில்லை. எத்தகைய ஆழ்நிலையில் உறங்கினோம் என்பதுதான் முக்கியம். உடலில் உள்ள உள் உறுப்புகள் யாவும் தம்மைத் தாமே புதுப்பித்துக் கொண்டு புத்துணர்ச்சியுடன் விளங்க நல்ல உறக்கம் தேவை. நன்றாக உறங்கும்போது ப்ரோலேக்ட்டின் எனும் ஹார்மோன் சுரப்பி வெளிப்படும். அதுவே மன அழுத்தங்களை குறைக்கவல்ல ஹார்மோன் ஆகும். எட்டு மணி நேரம் தூங்க முடியாமல் போனாலும் பரவாயில்லை. அன்றாடம் உங்களுடைய வேலைகளை எப்படி பிரித்து செய்கிறீர்களோ, அது போல தூக்கத்தையும் பிரித்து உறங்க வேண்டும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். கனவுகளில்லா உறக்கம் என்பது சாத்தியமில்லை என்பது எந்தளவுக்கு உண்மையோ, போலவே ஒருவராலும் எட்டு மணி நேரம் தொடர்ந்து தூங்கவும் முடியாது. உறக்கத்தின் இடையே பல சுழற்சிகள் உண்டு என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் இதனை இனி தூக்கி எறியாதீர்கள்! உறக்கம், விழிப்பு,  மீண்டும் உறக்கம் என்னும் சுழற்சி முறையில்தான் உறக்கம் வரும். மேலும் மாதத்தில் ஒரு வாரம் ஆழ்ந்த உறக்கம் அடுத்த வாரம் மிதமான உறக்கம் மீண்டும் அடுத்த வாரம் ஆழ்ந்த உறக்கம் என்றும் சிலருக்கு ஏற்படும். இத்தகைய உறக்க சுழற்சியில் தாக்கம் ஏற்பட்டால் உடல்நல பிரச்னைகள் வரலாம். எனவே இயற்கையான முறையில் நல்ல உறக்கம் ஒவ்வொருவருக்கும் அத்தியாவசியமானது. இதற்கு முன்னால் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் உறக்கச் சுழற்சியின் எண்ணிக்கையைப் பொருத்துதான் ஒருவரது அன்றைய தினத்தின் நினைவுத் திறன் அமைகிறது என்பதும் கண்டறியப்பட்டது. இதற்காக ஆய்வொன்று நடத்தப்பட்டது. ஒரு பரீட்சைக்கு முன்னால் 90 நிமிடங்கள் சிலரை உறங்கச் சொன்னார்கள். மற்றவர்கள் உறங்காமல் நேரடியாக அந்த பரீட்சையை எதிர்கொண்டனர், நன்றாக உறங்கி விழித்த பின் பரீட்சையை வெகு துல்லியமான தரவுகளுடன் அவர்கள் விடைகள் அமைந்திருந்தன. உறங்காமல் நேரடியாக பரீட்சை எழுதியவர்கள் அவர்களை விட சற்று குறைவான மதிப்பெண்களே பெற்றிருந்தனர். இதிலிருந்து உறக்கச் சுழற்சி முறையினால் மூளைக்குள் சில மின்னணு மாற்றங்கள் ஏற்பட்டு நினைவுத் திறன் மேம்படுகிறது என்ற முடிவுக்கு வந்தனர் ஆய்வாளர்கள். உறக்க சுழற்சி முறையினால் ஆழ்ந்த உறக்கம் ஏற்படுவது மட்டுமல்லாமல், உடல் மற்றும் மன நலம் மேம்படுகிறது, நினைவுத் திறன் அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும், இது உங்கள் மன அழுத்தங்களை குறைத்து அறிவாற்றல் திறனை அதிகரிக்கவும் செய்கிறது.  நன்றி Hindu அதிகப்படியான கொழுப்பு கரையவும், நுரையீரல் சார்ந்த பிரச்னைகள் நீங்கவும் சிறந்த வழி!

விஷக் கிருமிகளுடன் வேலை செய்வது எப்படி?

நச்சு சகாக்களை நீங்கள் சமாளிக்க வேண்டுமா? எந்த புத்தில் எந்த பாம்பு இருக்கிறது என்று தெரியாமல் வேலை செய்கிறீர்களா? அப்போது இதை அவசியம் படித்துவிடுங்கள். ஒரு காதல் உறவைப் போலவே, பணியிடத்தில் கெடுமதி உடைய நபர்களுடன் (Toxic people) பழகுவது என்பது உங்களுக்கு தொடர்ச்சியாக மன அழுத்தத்தை தரக்கூடும். குறிப்பாக, நீங்கள் ஒரு நாளின் பெரும்பகுதியை அத்தகைய சகாக்களுடன் செலவிட வேண்டியிருக்கும் போது சங்கடமாக இருக்கும். குறிப்பிட்ட சக ஊழியர் உங்களிடம் அனுசரணையாக இருப்பது போல நடித்து, தனது நச்சுத்தன்மையான நடத்தையால் சுற்றியுள்ள மற்றவர்களின் மன ஆரோக்கியத்தையும் வேலைத்திறனையும் பாதித்துவிடுவார்கள். எனவே நீங்கள் வெகு ஜாக்கிரதையாக பழகுங்கள். நிபுணர்களின் கூற்றுப்படி, மற்றவர்களின் நடத்தை மீது நமக்கு எந்த கட்டுப்பாடும் இருக்க முடியாது, ஆனால் சக ஊழியரின் கெடுதல் விளைவிக்கும் நடத்தைக்கு நாம் எவ்வகையில் பிரதிபலிக்கிறோம் என்பதை மாற்றுவது அல்லது அத்தகைய நபர்களைக் கையாள்வதற்கு உளவியல் தந்திரங்களைப் பயன்படுத்துவது உங்களுக்குக் கணிசமாக உதவும். எனவே, இதுபோன்ற சக ஊழியர்களைக் கையாள்வதற்கான சில வழிகளைப் பார்ப்போம். சொந்த வாழ்க்கை விவரங்களை ஒருபோதும் பகிர வேண்டாம் விஷமிகள் பெரும்பாலும் மற்றவர்களுடைய சொந்த விஷயங்களை தெரிந்து வைத்துக் கொள்ளும் ஆர்வமுடையவர்கள். அத்தகைய நபர்களுடன் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்வது உங்களை அழிக்க அவர்களுக்கு ஒரு ஆயுதத்தை நீங்களே மனம் உவந்து ஒப்படைப்பது போன்றதாகும். எனவே அத்தகைய சகாக்களுடன் பேசிப் பழகும் போது மிகவும் எச்சரிக்கையாக இருங்கள், ஏனென்றால் அவர் உங்களுக்கு எதிராக என்னென்ன தகவல்களைப் பயன்படுத்தலாம் என்று உங்களுக்குத் தெரியாது. கூடுமானவரையில் தொழில்ரீதியாக மட்டும்  அவர்களுடனான பழக்கத்தை வைத்திருங்கள். பற்றற்று இருங்கள் இம்சையை ஏற்படுத்தும் சக ஊழியரிடமிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சிறந்த வழிகளில் ஒன்று பற்று இல்லாமல் இருப்பதுதான். நச்சுத்தன்மையுள்ள நபர் உங்களை முதலில் உணர்ச்சிவசப்படுத்தி அதன்பின் தங்களின் தந்திரங்களை பயன்படுத்துவார்கள், நீங்கள் அந்த வலையில் விழும்போது, ​​அது நிலைமையை மோசமாக்கும். உதாரணமாக, நீங்கள் அவருடன் இருக்கும்போது அந்த நபர் மிகவும் ஆதரவாக இருப்பது போல பேசி பழகிவிட்டு, உங்கள் முதலாளியின் முன்னால் உங்களைப் பற்றி இல்லாததும் பொல்லாததையும் சொல்லி, குறை கூறுவார். சுருக்கமாக சொல்லப்போனால் போட்டுக் கொடுக்கும் வேலையை சிறப்பாக செய்வார்.  உங்களுக்கு அது தெரிய வரும்போது, ​​கோபம் அடைவீர்கள் அல்லவா? கோபம் அல்லது சோகம் போன்ற உணர்ச்சிகளுக்கு நீங்கள் இடம் கொடுத்தால் அது உங்களை பலவீனராக்கிவிடும். எனவே, எதற்கு ஒருவரிடம் தேவையில்லாமல் பழகி அவரிடம் மிகுந்த ஈடுபாடு வைத்து அதன்பின் அவர் சுயரூபம் வெளிப்படும்வரை காத்திருக்க வேண்டும். ஆரம்பத்திலிருந்து ஒரு அடி தள்ளி இருந்துவிட்டால் உங்கள் மனம் உணர்ச்சிக் கொந்தளிப்பிலிருந்து தப்பித்திருக்கும் அல்லவா? அலுவலகத்தைப் பொருத்தவரையில் உங்களுடன் வேலை செய்பவர்கள் சக ஊழியர்கள்தான் அன்றி, நண்பர்கள் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  அவர்கள் தவறானவர்கள் என்று நிரூபிக்க முயற்சிக்காதீர்கள்திருவிழா காசு விஷமிகளைக் கையாள்வதற்கான சிறந்த வழி அவர்களுக்கு மேலே நீங்கள் உயர்ந்து செல்வதுதான். மாறாக அவர்களுடன் போராடிக் கொண்டிருந்தால் அதற்கே…

Continue Reading

இரைப்பை புற்றுநோய் யாருக்கு வரும்? இந்த அறிகுறிகள் உள்ளதா என்று பரிசோதித்துப் பாருங்கள்!

  நோயைக் காட்டிலும் அது ஏற்படுத்தும் பயமும் பதற்றமும் கொடுமையானது. நவீன காலத்தில் வித விதமான நோய்களும், அது குறித்த சந்தேகங்களும், தயக்கங்களும் பலருக்கு உள்ளன. இதெல்லாம் எனக்கு வராது என்று நாம் ஒருபோதும் அலட்சியமாக இருந்துவிட முடியாது. போலவே எனக்கு இது வந்துடுமோ என்று பயந்தபடியும் வாழ முடியாது. இதற்கு என்னதான் தீர்வு? நோய்களைப் பற்றியும் நவீன வாழ்வியல் பற்றியும் சரியான புரிதலும் விழிப்புணர்வும் ஒவ்வொருவருக்கும் தேவை. ஆரோக்கியமான வாழ்க்கையே நோயைத் தவிர்ப்பதற்கான முதல்படி என்பதை உணர்ந்து கொண்டு அதற்கேற்றபடி நம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். இரைப்பை புற்றுநோய் யாருக்கு வரும்? அதன் அறிகுறிகள் என்ன? இந்தப் புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்திவிடமுடியுமா என்று சென்னையில் நடந்த மருத்துவ நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட மருத்துவர் சந்திரமோகன் பேசினார். டாக்டர் சந்திரமோகன் சென்னை அரசு பொது மருத்துவமனையின் இரைப்பைக் குடலியல் அறுவை சிகிச்சை மையத்தின் முன்னாள் இயக்குனர் ஆவார். தற்போது ஈசோ இந்தியா எனும் அமைப்பிற்குத் தலைவராக உள்ளார். இரைப்பைப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியை ஈசோ இந்தியா செயல்பட்டு வருகிறது.  இரைப்பை புற்றுநோய் பற்றி அண்மையில் சென்னையில் நடந்த விழிப்புணர்வு நிகழ்வொன்றில் டாக்டர் சந்திரமோகன் கூறியது, ‘பசிக்கவில்லை, உணவை விழுங்குவதில் சிரமம் உள்ளது என்றால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லுங்கள். ஐந்தே நிமிடங்களில் எடுக்கக் கூடிய எண்டோஸ்கோப்பி எனும் பரிசோதனையின் மூலம் ஒருவரது இரைப்பையைச் சோதித்து, புற்றுநோயின் அறிகுறிகளைக் கண்டறிந்துவிடலாம். அந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவத்தைத் தொடங்கி, பாதிப்பு எந்த அளவில் உள்ளதோ அதற்குரிய முறிஅயில் சிகிச்சையைத் தொடங்கிவிடலாம். இந்நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் முற்றிலும் குணப்படுத்திவிடலாம்’ என்றார்.உணவில் சேர்த்துக் கொள்ளும் சர்க்கரை அளவை குறைப்பது எப்படி? இரைப்பை புற்றுநோய் குறித்த கட்டுரைகளை ஈசோ இந்தியா அனுப்பலாம். ஜனவரி 20-க்குள் கட்டுரைகளை அனுப்ப வேண்டும். இது குறித்து அமைப்பின் தலைவரும் இரைப்பை-குடல் சிகிச்சை நிபுணருமான சந்திரமோகன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:- ‘வயிறு-உணவுக் குழாய் புற்றுநோயைத் தடுக்க முடியும்-குணப்படுத்த முடியும்-இதை உலகம் உணரட்டும்’ எனும் தலைப்பில் ஒரு பக்க அளவில், தமிழ் அல்லது ஆங்கில மொழியில் 1,500 வார்த்தைகளுக்கு மிகாமல் ஜனவரி 20-க்கு முன்னதாக அனுப்பி வைக்க வேண்டும்.    info@esoindia.org என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது ‘டாக்டர் எஸ்.எம்.சந்திரமோகன், 103, பூந்தமல்லி நெடுஞ்சாலை, சென்னை-84’ என்ற முகவரிக்கு தபாலிலோ கூரியரிலோ அனுப்பலாம். கூடுதல் தகவல்களுக்கு  www.esoindia.org   என வலைதள முகவரியைப் பார்க்கலாம் என்று கூறியுள்ளார் நன்றி Hindu வெள்ளை முடி பிரச்னையா? எளிய முறையில் வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரித்து தீர்வு காணுங்கள்!

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!

    அறுவை சிகிச்சையில் மிக நூதனமாகச் செய்ய வேண்டிய ஒரு விஷயம் சிகிச்சையின் போது வெட்டப்பட்ட இடங்களை மீண்டும் பழையபடி இணைத்துப் பொருத்தி அதில் தையலிடுவது. இதில் சில அறுவை சிகிச்சை நிபுணர்கள் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் இட்ட அறுவை சிகிச்சைத் தையல்களால் நோயாளிகளுக்கு பின்னாட்களில் எந்த விதமான உபத்திரவமும் நேராத அளவுக்கு மிகத் திறமையாக தையலிட்டு அறுவை சிகிச்சைக் காயங்களை ஆறச் செய்து விடுவார்கள். ஆனால் சில சந்தர்பங்களில் மருத்துவருக்கு தையல் இடுவதில் போதிய பயிற்சியோ, முன் அனுபவமோ அல்லது திறனோ இல்லாத சமயங்களில் அவர்களிடம் அறுவை சிகிச்சை செய்து மாட்டிக் கொள்ளும் நோயாளிகளின் கதி அதோ கதி தான். விபத்துக்களின் போது மட்டும் தான் தையல் இடப்படுகிறது என்று சொல்வதற்கில்லை தற்போது பெருகி வரும் மகப்பேறு அறுவை சிகிச்சைகளின் போது கர்ப்பிணிகளுக்கு குழந்தைப் பேற்றின் பின் அடிவயிற்றில் தையலிடப்படுகிறது. இந்தத் தையல் உறுதியானதாகவும், திறன் வாய்ந்த மருத்துவரால் போடப்பட்டதாகவும் இருந்தால் அந்த இளம் தாய் தனது மகப்பேறு அறுவை சிகிச்சையைக் கூட சுகப்பிரசவம் போன்றே ஆனந்தமான அனுபவமாகத் தான் எண்ணிக் கொள்வார். ஆனால், சில தாய்மார்களுக்கு அந்தக் கொடுப்பினை அமைவதில்லை. கொடுமையான மருத்துவர்கள் கையில் சிக்கி, மகப்பேறு அறுவை சிகிச்சை முடிந்தபின் தையல் சரியாக இடப்படாததால் அறுவை சிகிச்சைக் காயம் ஆறாமல் ரத்தக் கசிவு, புண்கள், சீழ் வடிதல் என்று பிரசவத்துக்குப் பிறகு தான் அதிகம் துன்பப்படுவார்கள். நான் ஏதோ பயமுறுத்துவதற்காகச் சொல்கிறேன் என்று எண்ணி விட வேண்டாம். மகப்பேறு அறுவை சிகிச்சையின் பின் தையல் சரியாக இடப்படாததால் மேற்படி பிரச்னைக்கு உள்ளான பல பெண்களை நான் அறிவேன். இதற்கு மருத்துவர்களை மட்டுமே குற்றம் சொல்லி விட முடியாது. சில சந்தர்பங்களில் அறுவை சிகிச்சைக்கு உள்ளாகும் பெண்கள் தரப்பிலும் அறியாமையினால் உண்டாகும் தவறுகள் நிறைய இருக்கலாம். உதாரணமாக மருத்துவர் சுட்டிக் காட்டிய வழிமுறைகளைப் பின்பற்றாமலோ, அல்லது மருந்துகளை சரிவர உண்ணாமலோ, அறுவை சிகிச்சைக் காயங்களின் மீது தடவப்பட வேண்டிய மருந்துகளை சரிவர எடுத்துக் கொள்ளாத காரணத்தாலோ கூட அவர்கள் தங்களுடைய மகப்பேறு அறுவை சிகிச்சை அனுபவங்களை மரண பீதி தந்த அனுபவங்களாக எண்ணிக் கொள்ள நேர்ந்திருக்கலாம். எனவே தவறு இரண்டு தரப்பிலுமே நேர வாய்ப்பு உண்டு. இதை எதற்காக குறிப்பிடுகிறேன் எனில், இனிமேல் விபத்தென்றாலும் சரி, மகப்பேறு அறுவை சிகிச்சையோ அல்லது வேறு ஏதேனும் உயிர் காக்கும் அறுவை சிகிச்சையோ எதுவானாலும் சரி சிகிச்சைக் காயங்களை எண்ணியும், அதில் இடப்படும் தையல்களை எண்ணியும் நோயாளிகள் பயந்து கொள்ளத் தேவையில்லை. கிழிந்த காகிதத்தைப் பசையால் ஒட்ட முடிவதைப் போல இனி அறுவை சிகிச்சைக் காயங்களையும் சர்ஜிக்கல் குளூ என்று சொல்லப்படக் கூடிய அறுவை சிகிச்சைப் பிசின் கொண்டு எளிதில் ஒட்டி விட முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். அதற்கான காணொளி…  மனநலம் பாதித்தவரின் வயிற்றில் சிம் கார்டு, நாணயங்கள்: எண்டோஸ்கோபி மூலம் அகற்றம் ஆம்… அப்படி…

Continue Reading

ஒல்லிக் குச்சி உடம்புக்காரர்கள் உடல் எடையை அதிகரிக்க இந்த டிப்ஸ் உதவும்!

  பாதாம் பிசின் பாயாசம் தேவையான பொருட்கள் பாதாம் பிசின் – 100 கிராம் முந்திரிப் பருப்பு – 25 கிராம் சாரப்பருப்பு – 25 கிராம் பாதாம் பருப்பு – 25 கிராம் சாலாமிசிரி – 25 கிராம் ஏலக்காய் – 10 கிராம் நாட்டுச் சர்க்கரை –  100 கிராம்  செய்முறை : முதலில் பாதாம் பிசினை சுத்தம் செய்து அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி முதல் நாள் இரவிலேயே ஊற வைக்கவும். பின்பு காலையில் பாதாம் பிசின் உள்ள நீரை கீழே ஊற்றி விட்டு பிசினில் சிறிது சுடுதண்ணீர் விட்டு நன்கு கலக்கி அடுப்பில் வைக்கவும். மற்ற பொருட்கள் அனைத்தையும் சுத்தப்படுத்தி தூள் செய்து கொண்டு பிசினுடன் சேர்த்து கலக்கவும். பின்பு அதனுடன் நாட்டுச் சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறி பதத்தில் இறக்கி வைத்துக் கொள்ளவும்.கர்ப்பிணிகளே! தயவு செய்து கருவில் இருக்கும் உங்கள் குழந்தையுடன் பேசுங்கள்…. பயன்கள் இந்த பாதாம் பிசின் பாயாசம் குடல் புண்ணைக் குணப்படுத்துவதில் சிறந்தது . உடல் மெலிந்தவர்களுக்கு இந்த பாயசத்தை தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் தேவையான உடல் எடையை பெறலாம் . வெள்ளைப்படுதல் குறைபாடு உள்ள பெண்கள் கண்டிப்பாக இதனை சாப்பிட வேண்டும் . இது வெட்டைச்சூடு குணமாக்கும் அற்புதமான இயற்கை உணவு இந்த பாதாம் பிசின் பாயாசம். தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும். குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும். கோவை பாலாஇயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்96557 58609 / Covaibala15@gmail.com நன்றி Hindu பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை! 35 வயதுக்கு மேல் குழந்தை பெற்றால், பிறக்கும் குழந்தைகளுக்கு இதய நோய்கள் தாக்கும் அபாயம்!

மாதவிலக்கின் போது ஏற்படும் அதீத வலி! நிவாரணம் தருமா பெயின் கில்லர் மாத்திரைகள்?

  பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிலக்கின்போது உதிரப்போக்குடன் வலி வேதனைகளும் ஏற்படும், ஒரு சிலருக்கு இந்த வலியின் தாக்கம் மிக அதிகமாகவும் இருக்கும். பெண்களின் கர்ப்பப்பையில் இருக்கும் புரோஸ்டாக்லாண்டின் அளவு அதிகமாக இருப்பதே இது போன்ற மோசமான வலிக்குக் காரணம். இந்த வலியில் இருந்து நிவாரணம் பெற பெண்கள் பல்வேறு முறைகளைக் கையாளுகின்றனர். சிலர் வீட்டு இயற்கை வைத்தியம், வேறு சிலர் மருத்துவரை ஆலோசித்து தேவையான மாத்திரைகளை எடுத்துக்கொள்வது என எப்படியாவது இந்த வலிக்குத் தீர்வுகாண முயல்கிறார்கள். சமீபத்தில் மருத்துவ இதழ் ஒன்றில் இந்த வலியின் தாக்கத்தை குறைக்கச் சிறந்த வழியாக ஐபூபுரோஃபன் (Ibuprofen) என்கிற வலி நிவாரண மாத்திரையை நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர். இது கடுமையான வலியாக இருந்தாலும் அதற்கான சிறந்த தீர்வாக இது அமையும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாத்திரையில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய ஸ்டெராய்டின் (Steroid) அளவு குறைவாக இருப்பதோடு மாதவிடாயின் போது உடலில் உற்பத்தியாகும் ரசாயனத்தின் அளவைக் குறைக்க உதவுகிறது. இந்த 4 உணவுப் பொருட்களையும் கழுவாமல் தான் சமைக்க வேண்டும்! ஏன் தெரியுமா? இந்த மாத்திரையைக் கட்டாயம் உணவு உட்கொண்ட பிறகே எடுத்துக்கொள்ள வேண்டும். ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரை கலந்தாலோசித்த பிறகு இந்த மாத்திரியை எடுத்துக்கொள்வது நல்லது. நன்றி Hindu கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக் கூடிய திடீர் சிக்கல் என்ன?

தக்காளி காய்ச்சல் என்றால் என்ன? பரவும் விதம் மற்றும் அறிகுறிகள்

இந்தியாவில் 100க்கும் அதிகமானோர் தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஹரியாணா, ஒடிசா, கேரளம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.  இந்தியாவில் கரோனா, குரங்கு அம்மை போன்ற நோய்களின் வரிசையில் இந்த தக்காளி காய்ச்சல் புதிதாக இணைந்துள்ளது. கடந்த மே மாதம் 6ஆம் தேதி முதன் முதலாக கேரளத்தில் இந்த தக்காளி காய்ச்சல் கண்டறியப்பட்டது. தக்காளி காய்ச்சல் மற்றும் அந்த நோய் குறித்து முழுமையான விவரங்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.  தக்காளி காய்ச்சல் என்றால் என்ன? தக்காளி காய்ச்சல் முதன் முதலாக கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் கண்டறியப்பட்டது. தக்காளி காய்ச்சலின் அறிகுறிகள் கரோனா வைரஸின்   அறிகுறிகள் போன்று தென்பட்டன. இருப்பினும் தக்காளி காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் சார்ஸ் குடும்பத்தைச் சார்ந்தது அல்ல. தக்காளி காய்ச்சல் காக்சாக்கி A16 என்ற வைரஸின் மூலம் ஏற்படுகிறது. இது எண்டரோ வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது. இதனை வைரஸ் காய்ச்சல் எனக் கூறுவதைக் காட்டிலும், டெங்கு மற்றும் சிக்குன்குன்யாவிற்கு பிறகு ஏற்படும் பாதிப்புகளே எனக் கூறலாம்.  தக்காளி காய்ச்சல் எனப் பெயர் வரக் காரணம் என்ன? இந்தக் காய்ச்சல் தக்காளியுடன் தொடர்புடையது என தவறானக் கருத்து உள்ளது. ஆனால், இந்தக் காய்ச்சாலினால் பாதிக்கப்படுபவர்களின் உடலில் ஏற்படும் சிறிய சிகப்புக் கொப்புளங்கள் நாளடைவில் பெரிதாக தக்காளி போன்று மாறுவதே தக்காளிக் காய்ச்சல் எனப் பெயர் வரக் காரணம் ஆகும். பரவுவதற்கான காரணம் என்ன?இதுவரை தக்காளி காய்ச்சல் எவ்வாறு பரவுகிறது என்பது குறித்து சரியாகத் தெரியவில்லை. மருத்துவ வல்லுநர்கள் இந்த நோய் எவ்வாறு பரவுகிறது என்பது குறித்து ஆராய்ந்து வருகிறார்கள். தக்காளி காய்ச்சலுக்கும் கரோனாவிற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் 5-7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். ஆனால், கரோனாவினால் பாதிக்கப்பட்டால் தனிமைப்படுத்துதல் காலம் 2-14 நாட்கள் ஆகும்.கரோனா வைரஸ் வேகமாக தொற்றிக் கொள்ளும் தன்மையுடையது. ஆனால், தக்காளி காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸின் தொற்றிக் கொள்ளும் வேகம் குறைவு.டெங்கு மற்றும் சிக்குன்குன்யாவிற்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களை குணப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது. கரோனாவினால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆக்ஸிஜன் வழங்குவது முக்கியமாக பார்க்கப்படுகிறது.தக்காளி காய்ச்சலால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் தற்போது வரை உருவாகவில்லை. ஆனால், கரோனாவினால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. தக்காளி காய்ச்சலுக்கான அறிகுறிகள் என்ன?தோல் எரிச்சல் ஏற்படுவது இந்த நோயின் முக்கிய அறிகுறியாகும். கை மற்றும் கால்கள் வெளிரிய நிறமாக மாறுதல், உடல் சோர்வு ஏற்படுதல், வாந்தி வருவது போன்ற உணர்வு, இருமல், காய்ச்சல், எலும்பு மூட்டுகளில் வலி போன்றவை இதன் அறிகுறிகளாகும்.மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை! தக்காளி காய்ச்சல் வராமல் காத்துக் கொள்வது எப்படி?அதிக அளவில் தண்ணீர் மற்றும் நீராகாரங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். காய்ச்சிய நீரையேப் பருக வேண்டும். உடலில் ஏதேனும் கொப்புளங்கள் ஏற்பட்டால் அதனை தொடாமல் இருக்க வேண்டும். சுகாதாரமான பழக்க வழக்கங்களை கடைப்பிடித்தல். நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து விலகி இருத்தல். போதுமான அளவிற்கு ஓய்வு எடுக்க வேண்டும். நோய்த் தொற்றை கண்டறிவது எப்படி?மேற்கூறிய அறிகுறிகள் ஒருவருக்கு தென்படும் பட்சத்தில் அவர்கள் ஸிகா, டெங்கு…

Continue Reading

குழந்தைப் பருவ ஒபிஸிட்டிக்கு பால் காரணமில்லை: புதிய ஆய்வு முடிவு வெளியீடு!

  குழந்தைப் பருவத்தில் பிற உணவுகளோடு ஒப்பிடுகையில் பால் அதிகம் அருந்தினால் அதனால் பலனேதும் இல்லை. உடல் பருமன் தான் அதிகரிக்கும் என்பது மக்களிடையே உள்ள பொதுவான நம்பிக்கை. முன்னொரு காலத்தில் பிறந்த பச்சிளம் குழந்தைக்கு கூட பசுவின் சுத்தமான பால் இருந்தால் போதும், வேறு போஷாக்கான உணவு தேவையில்லை. பசும்பால் குடித்து பயில்வானாகலாம் என்றொரு நம்பிக்கை வயதானவர்களிடையே நிலவியது. பிறகு வந்த அயல்நாட்டு ஆராய்ச்சி முடிவுகள் குழந்தைகளுக்கு பாலே கொடுக்கத் தேவை இல்லை. பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் போதும். அதைத் தவிர எதுவும் தேவையில்லை, பசும்பால் அருந்தும் பழக்கம் தொடர்ந்து நீடித்தால் ஒரு கட்டத்தில் உடலில் எடையைக் கூட்டும் ஹார்மோன்களின் செயல்பாடு அதிகரித்து குழந்தைப் பருவ ஒபிஸிட்டிக்கும் அது வழிவகுக்கும் என்றன. இதைக் கண்டு குழந்தைகளுக்கு பால் அருந்தத் தராமல் சத்து மாவுக் கஞ்சியை பழக்கப் படுத்திய அம்மாக்கள் நிறைந்திருந்தனர் நமது சம காலத்தில். இது ஒரு வகை. பாலை அடிப்படையாக் வைத்து எதற்கு இத்தனை குழப்பங்களும், சஞ்சலங்களும்?! உண்மையில் பால் அருந்தினால் குழந்தைகள் குண்டாவார்களா?  கடந்த 27 ஆண்டுகளாக இப்படி ஒரு கேள்வியைத் தங்களது ஆராய்ச்சியின் அடிப்படையாகக் கொண்டு ஆய்வு நடத்தி வருகிறார்கள் அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவக் குழுவினர். இவர்களது சார்பாக ஊடகங்களிடம் பேசிய ஆய்வாளர் அனெஸ்டிஸ் டெளகஸ் தெரிவிப்பது என்னவென்றால், பால் மற்றும் பால் பொருட்களை தொடர்ந்து உட்கொள்வதால் குழந்தைப் பருவ ஒபிஸிட்டி வரும் என்பது கற்பனை. இது தொடர்பாக கடந்த 27 ஆண்டுகளாக நாங்கள் நிகழ்த்திய ஆய்வு முடிவுகளின் படி, பால் மற்றும் பால் பொருட்களில் இருந்து கிடைக்கும் மினரல்கள், நியூட்ரிஷன்கள் அனைத்துமே மனித வாழ்வின் பல்வேறு காலகட்டங்களில் அவர்களது உடல் ஆரோக்யத்துக்குத் தேவையான சத்துக்களை வழங்குவனவாக இருக்கின்றன. அப்படி இருக்கையில், பால் மற்றும் பால் பொருட்களைப் புறக்கணிப்பது நல்லதல்ல. என்கிறார் அவர். TamilNadu Budget for school education மனித ஆரோக்யத்தில் வாழ்நாள் முழுமைக்கும் தேவையான சத்துக்களைக் கொண்ட பாலை புறக்கணிக்க வைத்த இந்த கற்பனை நம்பிக்கை பரவியது எப்படி? என்பது குறித்து தெளிவாக ஆராய விரும்பி, 1990 முதல் 2017 வரையிலான ஆண்டுகளுக்கிடையில் பிறந்த குழந்தைகளை அடிப்படையாக வைத்து 32 விதமான நீள்வட்ட ஆய்வுகளையும் 43 விதமான குறுக்கு வெட்டு ஆய்வுகளையும் சேகரித்த தரவுகளின் அடிப்படையிலான 20 ரேண்டமைஸ்டு சோதனைகளின் வாயிலாக அதாவது இயற்கையாக மாடுகள் ஆடுகளில் இருந்து பெறப்பட்ட பால் மட்டுமல்லாது தாவரப் பொருட்களில் இருந்து செயற்கையாக உருவாக்கப்படும் பாலை அருந்தி வளர்ந்த குழந்தைகளுக்கிடையேயுமாக பால் அருந்துவதின் விளைவுகள் குறித்து தொடர்ச்சியாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த ஆய்வு முடிவுகளில் தெரிய வந்தது என்னவெனில், எக்காரணம் கொண்டும் பால் அருந்தும் வழக்கத்தால் குழந்தைகளிடையே ஒபிஸிட்டி வருவதில்லை என்பதே. எனவே இனியும் பால் அருந்துவதால் குழந்தைப் பருவ ஒபிஸிட்டி வரும் எனப் பயந்து பாலை புறக்கணிக்க வேண்டிய அவசியமில்லை என்கிறார்கள் இந்த மருத்துவக் குழுவினர். இது தொடர்பாக மேலும் ஆய்வுகள் நடந்த…

Continue Reading

சையது முஷ்டாக் டி20: , தமிழகம், மகாராஷ்டிரம் வெற்றி

சையது முஷ்டாக்இந்த 7 காரணங்களைத் தெரிந்து கொண்டால் தினமும் வாழை இலையில்தான் சாப்பிடுவீர்கள்!கோப்பை டி20 போட்டியின் ஒரு பகுதியாக எலைட் குரூப் ஏ பிரிவு ஆட்டத்தில் தமிழகம், மும்பை, கா்நாடக அணிகள் வெற்றி பெற்றன. நன்றி Hindu ஆரோக்யமாக வாழ்வதற்கான ‘தண்ணீர் மந்திரம்’ உங்களுக்குத் தெரியுமா?