நிர்மலா கான்வென்ட் என்றொரு தெலுங்குத் திரைப்படம், அதில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்யும் போது அவசரமாக ‘O’ குரூப் ரத்தம் தேவைப்படும். ஆனால் மருத்துவமனையில் அந்த நேரத்தில் ‘B’ குரூப் ரத்தமே ஸ்டாக் இருக்கும். உடனே படத்தின் நாயகனான பள்ளிச்சிறுவன் மருத்துவரிடம் சென்று மேலும் தேவையான அளவுக்கு B குரூப் ரத்தம் சேகரியுங்கள் டாக்டர் என்று சொல்லி விட்டு வெளியில் காட்டுக்குள் ஓடிச் சென்று பச்சை காப்பிக் கொட்டைகளைப் பறித்து வந்து சேகரிக்கப்பட்டிருக்கும் அந்த ரத்தக் குப்பிகளில் குறிப்பிட்ட அளவுக்கு சேர்ப்பான். கைகளில் கிளவுஸ் மாட்டிக் கொண்டு தான். அவனது இந்த முந்திரிக் கொட்டத்தனமான செயலுக்காக டாக்டர் அவனைத் திட்டுவார், அவனோ, டாக்டரிடம் தயவு செய்து இப்போது அந்த ரத்தத்தைச் சோதித்துப் பாருங்கள் குரூப் மாறி இருக்கும் என்பான். டாக்டர் திட்டிக் கொண்டே அந்த ரத்தக் குப்பிகளை சோதனைக்கு எடுத்துச் செல்வார். என்னே ஆசர்யம்! நிஜமாகவே சில வினாடிகளில் பச்சை காப்பிக் கொட்டை சேர்க்கப்பட்ட B குரூப் ரத்தம் O குரூப் ரத்தமாக மாறி இருக்கும். அடிப்படையில் இப்படி ஒரு கண்டுபிடிப்பு இருப்பது நிஜம் தான். ஆனால் அதை அவர்கள் படமாக்கிய விதம் சற்று விபரீதமாக இருந்தது. இது குறித்த சோதனைகள் இன்னும் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. முற்றிலுமாக ஒரு பள்ளிச்சிறுவனால் இத்தகைய சாகஸங்களை நிகழ்த்தி விட முடியுமா எனத் தெரியவில்லை. ஆனால் இப்படி ஒரு ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்தியாவில் இந்த முறையில் ரத்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதற்குப் போதிய சான்றுகள் இல்லை. ஆனால் இதில் ஒரு விஷயம் மட்டும் உண்மை என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு பல்லாண்டுகளாகிறது. 1981 ஆம் ஆண்டு வாக்கில் பச்சை காப்பிக் கொட்டைகளைக் கொண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் B குரூப் ரத்தத்தில் உள்ள சர்க்கரை மூலக்கூறுகள் அதாவது ஆண்ட்டிஜென்கள் பச்சை காப்பிக் கொட்டையால் நீக்கப்படுவதன் வாயிலாக அது தானே O குரூப் ரத்தமாக மாற்றம் அடைவதை விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். அதற்கான காப்புரிமை கூட இந்திய விஞ்ஞானி ஒருவருக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அந்தப் படத்தில் ஒரு காட்சி வருகிறது. ஆனால் அந்த விஞ்ஞானி யார்? இந்த ஆய்வின் அடிப்படையில் ரத்த குரூப்கள் மாற்றம் செய்யப்பட்டு இந்தியாவில் எவருக்கேனும் அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்பட்டுள்ளதா? என்பதைக் குறித்த தகவல்கள் எதையும் தேடிய வரையில் காணோம்.பிரசவத்திற்குப் பின்பு உண்டாகும் தொப்பை குறைந்து உடல் இளமையாக உதவும் ரசம் ரத்த குரூப்களைப் பொறுத்தவரை ஒருவருக்கு A, B, AB, A நெகட்டிவ், B நெகட்டிவ், O, O நெகடிவ் என்றெல்லாம் ரத்த குரூப்கள் பிரிக்கப்படுவது அவற்றில் உள்ள சர்க்கரை மூலக்கூறுகளின் அடிப்படையில் தான். ஒரு ரத்த குரூப்பில் எவ்விதமான சர்க்கரை மூலக்கூறுகளும் இல்லாவிட்டால் அந்த ரத்தம் O குரூப் என அறிவிக்கப்படுகிறது. இது தான் இந்த ஆராய்ச்சியின் அடிப்படை. இந்தக் கண்டுபிடிப்பால் ஒரு சின்ன ஆறுதல் என்னவென்றால், ஒருவேளை இந்த பச்சைக்…
இன்றைய தலைமுறை சிறுவர் சிறுமியருக்கு திருவிழா காசு ஒரு பெரிய மகிழ்ச்சியை தர வாய்ப்பில்லை. ஏனென்றால் அவர்களுக்கு வேண்டிய பொருள்களை, விளையாட்டு சாமான்களை திருவிழா காசு கொண்டு தான் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர்களின் பெற்றோர் அவர்கள் கேட்பதற்கு முன்பே விரும்பிய பொருளை வாங்கித் தரும் வழக்கத்தை கொண்டிருக்கின்றனர். திருவிழா காசின் அருமையை 90களின் குழந்தைகளான நாங்கள் தான் நன்கு அறிவோம். ஆண்டிற்கு ஒருமுறை வரும் திருவிழாக்கள் தான் எங்களை எங்களின் பெற்றோர் சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல வைத்தது. ஐயா, அப்பத்தா, சித்தப்பா,சித்தி அத்தை,மாமா,அக்கா,தங்கை தம்பி போன்ற உறவுகளை நேரில் பார்க்க மட்டுமல்ல அன்றைய காலகட்டங்களில் இன்றுபோல் தொலைத் தொடர்பு இல்லாததால் அவர்களுடன் பேசுவதும் கூட அன்றைய தினங்களில் தான். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கூடிவாழ்ந்தான்குடி கிராமம்தான் எங்கள் ஊர். எங்கள் வீட்டில் அண்ணனும், நானும்.முதல் சித்தப்பாவிற்கு ஒரே ஒரு பெண்பிள்ளை என்னை விட ஆறுமாதம் மூத்தவள். இரண்டாவது சித்தப்பாவிற்கு ஆண் ஒன்று பெண் ஒன்று. அத்தைக்கு திருமணம் ஆகி ஐந்து வருடங்கள் ஆகியும் இன்னும் குழந்தை பேறு இல்லை. ஒரு திருவிழா நாளில் சித்தப்பாவும் அப்பாவும் வீட்டின் வாசலிலேயே நாற்காலிகளைப் போட்டு அமர்ந்து அப்போதைய அரசியல் நிகழ்வுகளைப் பற்றி காரசாரமாக பேசிக் கொண்டிருக்கையில், ஐயா எங்களுக்கெல்லாம் தின்பண்டங்கள் வாங்கி வர கடைத்தெருவிற்கு நடக்கலானார். ஆனால் அவருக்கு தெரியாமலேயே நாங்கள் வருவதற்கு சில நாட்களுக்கு முன்னரே அப்பத்தா எங்களுக்காக பலகாரங்கள் செய்து பரணியிலே மறைத்து வைத்திருந்தார். சித்திகளும், அம்மாவும், அத்தையோடு அவரவர் பக்கத்துவீட்டு கதைகளை சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்தார்கள். அக்காவும் தங்கையும் பக்கத்து வீட்டு தோழிகளுடன் எங்கள் வீட்டை ஒட்டி இருக்கும் அந்தோனியார் தேவாலயத்திற்குள் ஏறி குதித்து உள்ளே சென்று ஒளிந்து பிடிக்கும் விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். எங்கள் வீட்டிற்கு எதிரே இருந்த பொது பாதையின் வடதிசையில் தான் காஜா மாமாவின் வீடு. என் அப்பாவின் பால்ய நண்பர். நாங்கள் திருவிழாவிற்கு வந்திருப்பதை அறிந்து எங்களைப் பார்ப்பதற்காக வேகவேகமாக எங்கள் வீட்டை நோக்கி விரைந்து வந்து கொண்டிருந்தார். நாங்கள் திருவிழாவிற்கு வரும்போதெல்லாம் இரண்டு நாட்கள் எங்கள் கூடவே தான் இருப்பார். வருடத்திற்கு ஒரு முறை தான் வருகிறோம் என்பதாலும் மிகவும் பழைய காலத்து வீடு என்ற காரணத்தாலும் எங்கள் வீட்டில் அய்யா கழிவறை கட்டயிருக்கவில்லை. எனவே திருவிழா சமயங்களில் நாங்கள் வருகின்ற போது எங்கள் வீட்டுப் பெண்கள் அனைவரும் அவரது வீட்டிற்கு வெளியே இருக்கும் அவர்களது கழிப்பறையை பயன்படுத்திக் கொள்ள சொல்லி இருந்தார். “வாங்க மாப்பிள்ளைகளா ” என்று கூப்பாடு போட்டுக் கொண்டே வந்தார் காஜா மாமா . சித்தப்பாக்கள் இருவருடனும் கைகுலுக்கிக் கொண்டவர், அப்பாவை கட்டி தழுவிக்கொண்டார். “என்ன மாப்ள, தங்கச்சிக்கு இப்ப உடம்பு எப்படி இருக்கு?” “இப்ப மாத்திரை அதிகம் இல்லை மச்சான் உடம்பும் பழைய மாதிரி இருக்காப்ல தான் தெரியுது” என்று பதிலளித்தார் சித்தப்பா. “சரி மாப்ள வா…
பொதுவாகவே விளக்கெண்ணெய் என்றால் ஒரு மட்டமான வஸ்து என்றுதான் எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் ஒருவர் வழவழா கொழகொழா என்று தெளிவு இல்லாமல் பேசினால், ‘போடா விளக்கெண்ணெய்’ என்று கூறுவார்கள். மேலும் ஒருவர் முகத்தை இறுக்கமாக வைத்திருந்தால், ‘ஏண்டா விளக்கெண்ணையை குடிச்ச மூஞ்சியா இருக்கே? ‘என்று கிண்டல் செய்வார்கள். ஆனால், விளக்கெண்ணெய் ஒரு மாமருந்து. பல குறைகளையும், ரோகங்களையும் களையும் அற்புத சக்தி அதற்கு உண்டு என்று எத்தனை பேர் அறிவார்கள்? முந்திய தலைமுறையில், மாதத்திற்கு ஒரு முறை விளக்கெண்ணெய் குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. பாட்டிமார்கள்/தாய்மார்கள், குழந்தைகளுக்கு காலை வேளையில், வெறும் வயிற்றில், விளக்கெண்ணையை பாலுடன் கலந்து கொடுப்பார்கள். அப்பொழுது ஒரு பெரிய போராட்டமே வீட்டில் நடக்கும். குழந்தைகளை விரட்டிப் பிடித்து, மடியில் கிடத்தி அமுக்கி, வாயில் விளக்கெண்ணையை புகட்டி விடுவார்கள். குடித்தவர்கள், சொம்பும் கையுமாக அலைந்து வயிறு சுத்தமான பின்தான், வீட்டார், அவர்களுக்கு பத்திய சாப்பாட்டினை கண்ணிலே காட்டுவார்கள். வயிற்றினுள் மஷ்டு இல்லாமல் இருந்ததால், வியாதியும் குறைவாக இருந்தது. இப்பொழுது விளக்கெண்ணெய்க்கு குட் பை சொல்லி விட்டு, வியாதிகளை வரவேற்க வெல்கம் போர்டை கழுத்தில் மாட்டிக் கொண்டு அலைகிறோம் .இப்பொழுதும் ஒன்றும் குடி முழுகிப் போய்விடவில்லை. விளக்கெண்ணையால் எத்தனையோ உபயோகங்கள் உள்ளன. அவைகளை பார்ப்போம். இதில் வைட்டமின் E, ப்ரோடீன், மினரல்கள் அடங்கியுள்ளன. ஆர்த்தரைடீஸ் பிரச்சனையா? கொஞ்சம் எண்ணையுடன், சிறிது மஞ்சள் பொடியைச் சேர்த்து, பேஸ்ட் போல குழைத்து, மூட்டு வலி இருக்கும் இடத்தில் நன்றாகத் தடவவும். உருவிவிட வேண்டும்.காய்ந்தபின், மிதமான வெந்நீரில் கழுவவும். தலையில் சிறிய அளவில் சொட்டை போல் வழுக்கை இருந்தால், விரல் நுனியில் சிறிது எண்ணையை எடுத்துக் கொண்டு வழுக்கை இருக்கும் இடத்தில் ஒரு நாளைக்கு ஐந்து நிமிடங்கள் தடவி வந்தால் வழுக்கையில் கறுப்போடுவதை கண்கூடாகக் காணலாம்.அதே போல் கண் புருவங்கள் அடர்த்தியாக இருக்க எண்ணையை புருவங்களின் மேல் ஒரு நாளைக்கு இரண்டு நிமிடங்கள் தடவி வந்தால், கரிய அடர்ந்த புருவங்கள் உண்டாகும். ஒவ்வொரு நாள் காலையிலும், ஒரு தம்பளர் ஆரஞ்சு ஜூஸ் உடன் ஒரு ஸ்பூன் எண்ணையைக் கலந்து குடித்து வர மலச்சிக்கலே இருக்காது. மலச்சிக்கலினால் உண்டாகும் ரோகமும் அண்டாது. பாலுண்ணி, மரு, பரு வந்த இடங்களில் அந்தத் தழும்பு நீங்க, எண்ணையை தழும்பு உள்ள இடத்தில் சில வாரங்கள் தடவி வர நல்ல குணம் தெரியும். தாவரங்கள் பசுமை இழந்து சாம்பல் பூத்தாற்போல இருக்கிறதா? கவலையை விடுங்கள். நான்கு கப் வெதுவெதுப்பான நீரை எடுத்துக்கொள்ளுங்கள். அத்துடன் ஒரு தேக்கரண்டி எண்ணெய் , ஒரு தேக்கரண்டி பேபி ஷாம்பு கலந்து செடியை சுற்றி விட்டுவிட்டு, பிறகு நீர் பாய்ச்சுங்கள். சில நாட்களில், பச்சக் கலரு ஜிங்கு ஜா என நீங்களே பாடுவீர்கள். வெற்றியின் சிகரங்களை அடைய இது உதவும்! சிலருக்கு, முழங்கை முழங்கால் போன்ற இடங்களில் காய்ப்பு இருக்கும்…
பெரியவர்களின் வேலைப்பளுமறந்துடாதீங்க… வயசானவங்களோட மூளை சுறுசுறுப்பா செயல்படனும்னா நிறையத் தண்ணீர் குடிக்கனும்.எப்போதும் அதிகம், அலுவல் வேலையாக இருந்தாலும் சரி வீட்டு வேலைகளாக இருந்தாலும் சரி எப்போதும் ஏதாவது வேலை செய்து கொண்டே இருப்பார்கள். நன்றி Hindu விடியோ கேம் அடிக்ஷன், மிக மோசமான ‘மனநலச் சீர்கேட்டு நோய்’ என உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு!
நீண்ட நாட்கள் எந்த நோய் நொடியும் இல்லாமல் சந்தோஷமா வாழணுமா? அப்போ ஆரோக்கியமான உணவுப் பொருட்களை சாப்பிடுங்கள் அப்படினு பலரும் சொல்லி கேட்டிருப்போம், அது உண்மையும் தான். ஆனால், அதே சமயம் எவ்வளவு ஆரோக்கியமான உணவாக இருந்தாலும் அதைச் சாப்பிடுவதற்கும் ஒரு நேரம் காலம் உள்ளது. நமக்கு உடம்பு சரியில்லாமல் போனால் அதைக் குணப்படுத்த எடுத்துக் கொள்ளும் மருந்து மாத்திரையைச் சாப்பிடுவதற்கு கூட ஒரு குறிப்பிட்ட நேரம் சொல்லப் படுகிறது. அப்படியிருக்கையில் கண்ட நேரத்தில் அதாவது தவறான நேரத்தில் இந்த 10 உணவுப் பொருட்களை சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தைக் கெடுத்து உங்கள் உயிருக்கே ஆபத்தாகவும் அமையலாம் என்கிறது ஆராய்ச்சி முடிவுகள். இந்த 10 உணவு வகைகள் கிடைப்பதற்கே அரிதான பொருட்கள் அல்ல நம் அன்றாட வாழ்வில் சாப்பிடும், தவிர்க்கவே முடியாத இடத்தைப் பிடித்த உணவுகள் தான் அவை. வாருங்கள் அந்த 10 என்னவென்று தெரிந்துகொள்வோம். 1. வாழைப்பழம்: எல்லாப் பருவங்களிலும் எல்லா இடத்திலும் மிகவும் எளிமையாக கிடைக்கக் கூடிய ஒரு பழம் வாழை. நமது ஜீரண சக்தியை அதிகரிப்பது முதல் வயிற்று பிரச்னைகளில் இருந்து நம்மைப் பாதுகாப்பது வரை வாழைப்பழத்திற்குப் பல மருத்துவ குணங்கள் உண்டு. அதிக பொட்டாஷியமும், நார் சத்தும் நிறைந்த வாழைப்பழத்தைக் காலை உணவாகவே பலரும் வெறும் வயிற்றில் சாப்பிடுகிறோம், அதன் ஆபத்து தெரியாமல். வாழைப்பழம் அமிலத் தன்மை கொண்டது, இதை வெறும் வயிற்றில் உட்கொண்டால் குடல் பிரச்னைகளை இது உண்டாக்கும். அதே போல் வாழைப்பழத்தில் சர்க்கரை அளவும் அதிகமாக இருப்பதால் சில மணி நேரத்திலேயே உங்கள் உடலின் எனர்ஜி குறைந்து உங்களைப் பலவீனமாக்குவதோடு, சோர்வான உணர்வைத் தரும். பின் நாட்களில் குடல் புண், அல்சர் போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்க வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிருங்கள். 2. தயிர்: வெயில் காலம் வந்துவிட்டாலே வெப்ப சலனத்தில் இருந்து நமது உடலைப் பாதுகாக்க நாம் நாடும் உணவு வகைகளில் மிகவும் முக்கியமானது தயிர். ஒரு சிலருக்கு தயிர் இல்லாமல் சாப்பாடே இறங்காது. ஆனால், என்னதான் ஆரோக்கியமானதாக இருந்தாலும் தயிரை இரவு நேரத்தில் சாப்பிடுவது உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும். இரவு உறங்கச் செல்வதற்கு முன்பு தயிர் சாப்பிட்டால் தயிரில் இருக்கும் லாக்டிக் ஆசிட் செரிமான பிரச்னையை உண்டாக்கி, மூச்சுக் குழாயில் அடைப்பு, இரும்பல் ஆகிய சிக்கல்களை ஏற்படுத்தும். 3. கிரீன் டீ: உடல் எடை குறைய வேண்டுமா? ‘என்னுடைய அழகான உடல் அமைப்பிற்குக் காரணம் கிரீன் டீ!’ என்று பல சினிமா பிரபலங்கள் சொல்லக் கேட்டு பிடித்தும் பிடிக்காமலும் அந்த கிரீன் டீ குடிப்பவர்கள் பலர். ஆனால் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் கிரீன் டீ குடிப்பது மிகவும் ஆபத்து என ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன. அதில் இருக்கும் கஃபைன் உடலில் உள்ள நீர் சத்தை குறைத்து தலை சுற்றல், வாந்தி போன்ற பிரச்னைகளை உண்டாக்கும். அது மட்டுமின்றி 3 அல்லது 4…
வெள்ளை நிற உணவுகள் மனிதனுக்குப் பகை, எனவே பச்சை நிற உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். வெள்ளை நிற உணவில் முதல் பகையாக இருப்பது சர்க்கரை. அது இனித்தாலும், மனிதனுக்கு பல கசப்பான விளைவுகளையே ஏற்படுத்துகிறது. சர்க்கரையை நேரடியாகவோ மறைமுகமாகவோ மனிதர்கள் உட்கொண்டுதான் வருகிறார்கள். சர்க்கரை நேரடியாக ஏற்படுத்தும் பெரும் தொந்தரவு என்றால் அது நீரிழிவு. மறைமுகமாக எத்தனையோ. சரி இவ்வளவு துயரத்தைக் கொடுக்கும் சர்க்கரையை உணவிலிருந்து எவ்வாறு குறைப்பது? இதற்கு சில வழிகாட்டுதல்களை உணவுப் பாதுகாப்பு தரக் கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ளது. வாருங்கள் பார்ப்போம்1. குளிர்பானங்களை அறவே தவிர்க்க வேண்டும். அதற்கு மாறாக இளநீர், மோர், சர்க்கரை இல்லாமல் பழச்சாறுகளை அருந்தலாம். 2. தினமும் தேநீர், காபி குடிப்பதற்கு பதிலாக, உப்பு கலந்த கஞ்சி, எலுமிச்சை சாறு, சூப் போன்றவற்றை தேர்வு செய்யலாம். 3. பண்டிகைக் காலங்களில் இனிப்பு பலகாரங்களை செய்யும் போது, சரியான அளவில் சர்க்கரையை சேர்க்காமல், பாதி அல்லது முக்கால் பங்கு சர்க்கரையை பயன்படுத்துங்கள். 3. எப்போதாவது இனிப்பாக எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் உடனே வாழைப்பழம், ஆப்பிள், பப்பாளி, திராட்சைப் போன்ற பழங்களை நறுக்கி சாப்பிடுங்கள். அவையும் இனிப்பாகவே இருக்கும்.மாதவிலக்கிற்கும் ஹார்மோன்களுக்கும் என்ன தொடர்பு? வெளியேறுவது நல்ல ரத்தமா? கெட்ட ரத்தமா? தெரிந்து கொள்ளுங்கள் 4. உணவுகளுக்கு சாஸ் போன்றவற்றை தொட்டுக் கொள்வதற்கு பதிலாக சட்னியை தேர்வு செய்து கொள்ளுங்கள். 5. இனிப்புக்காக சர்க்கரையை சேர்த்து சாப்பிடும் உணவுகளில் பேரீட்சம் பழம் போன்ற இனிப்பான உலர் உணவுகளை சேர்த்துக் கொள்ளலாம் என்று சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதில்லாமல், நாம் நடைமுறையில் சில விஷயங்களை மாற்றலாம். 6. தேநீர் மற்றும் காபியில் சர்க்கரைக்கு பதிலாக நாட்டுச் சர்க்கரை அல்லது கருப்பட்டியை சேர்த்துப் பருகுங்கள். பழக்கம் இல்லாதவர்கள் வாரத்தில் சில நாள்களேனும் முயற்சிக்கலாம். 7. இட்லி, தோசை, உப்புமா, இடியாப்பத்துக்கு சிலர் சர்க்கரை சேர்த்து சாப்பிடுவார்கள். அதுபோன்ற பழக்கம் உடையவர்கள் நாட்டுச் சர்க்கரையை பயன்படுத்தலாம். 8. தேங்காய்பால் தயாரிக்கும் போதும், புட்டு தயாரிக்கும் போதும் சர்க்கரைக்கு பதிலான நாட்டுச் சர்க்கரையை பயன்படுத்தலாம். புட்டில் சர்க்கரை அளவை குறைத்துவிட்டு பழங்களுடன் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளலாம். 9. நீரிழிவு நோய் இல்லாதவர்களும் சரியான அளவில் சர்க்கரையை எடுத்துக் கொள்ளாமல் பாதி அளவுக்கு சர்க்கரையைப் உணவில் சேர்க்கலாம். 10. இனிப்புகளை சாப்பிடும் அளவுக்கு கசப்பு மற்றும் துவர்ப்பான உணவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள். நன்றி Hindu ஜீன்ஸ் அணியும் பெண்களே.. இது தெரியுமா?
நமது உடல் ஒரு இயந்திரம் போன்றது அதற்கு நாம் உண்ணும் உணவுகளே எரிபொருட்களாகி இந்த இயந்திரத்தை இயக்குகிறது. அப்படி இருக்கையில் நமது உடலில் ஏற்படும் சில மாற்றங்களைத் தடுப்பதற்கான ஆற்றலும் இந்த உணவுப் பொருட்களிலேயே இருக்கிறது. அந்த வகையில் பல மருத்துவ குணங்களை கொண்ட தேன் மற்றும் பாலினால் நமக்குக் கிடைக்கும் உடல்நல நன்மைகளைப் பற்றி அறிவீர்களா? தினமும் வெது வெதுப்பான பாலில் சிறிது தேன் கலந்து குடிப்பதினால் எந்தெந்த பிரச்னைகளில் இருந்து நீங்கள் விடுபடுவீர்கள் என்று பார்ப்போம். 1. ஆற்றலை அதிகரிக்கும்: ஒரு பெரிய கிளாஸ் பாலில் இருக்கும் கால்சியம் சத்துடன், நமது உடலின் ஆற்றல் சக்தியை அதிகரிக்கத் தேவையான கார்போஹைட்ரேட் சத்து நிறைந்திருக்கும் தேனை கலந்து குடிப்பதால் அது உடல் வலிமையை அதிகரிக்கும். 2. எலும்புகளை வலிமையாக்கும்: எலும்புகளின் வலிமைக்குத் தேவையானது கால்சியம் என நாம் அனைவருக்கும் தெரியும், அந்தச் சத்து மிகவும் அதிகமாகக் கிடைக்கும் ஒரு உணவுப் பொருள் போல். ஆனால் நமது உடல் இந்த கால்சியம் சத்தை சரியாக உறிந்து எடுப்பதில்லை, அதனால் பாலில் தேனைக் கலப்பதன் மூலம் இந்த கால்சியம் சத்து ரத்தத்தின் வழியாக எலும்புகளைச் சென்றடைகிறது. கால்சியம் எலும்புகள் மட்டும் இல்லாமல் பல் வலிமை மற்றும் முடி வளர்ச்சிக்கும் தேவையான ஒன்று. 3. செரிமானத்தை அதிகரிக்கும்: ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கி வரும் செயற்கை ரத்தம்! ரத்த தானத்துக்கு முடிவு கட்டுமா? தேனில் இருக்கும் புரோபயாடிகள், பாலில் இருக்கும் புரோபயாடிக் கலவைகளையும் மேம்படுத்தி செரிமானத்திற்கு உதவுகிறது. 4. மலச்சிக்கலைச் சரி செய்யும்: இரவு தூங்க செல்வதற்கு முன்பு பாலில் தேனைக் கலந்து குடிப்பது மறுநாள் காலையில் ஏற்படும் மலச்சிக்கல் பிரச்னையை குணப்படுத்திவிடும். 5. தோல் சுருங்காமல் தடுக்கும்: பால் மற்றும் தேன் கலவையில் இருக்கும் ஆண்டிஆக்ஸிடண்ட்ஸ் வயதாவதால் நமது சருமத்தில் ஏற்படும் மாற்றங்களைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது. இதனால் வயதின் காரணமாகவோ அல்லது இளம் வயதிலேயே தோல் சுருக்கம் ஏற்படுவதைத் தடுத்து சருமத்திற்கு ஊட்டச்சத்தைத் தந்து முகத்தின் பொலிவை அதிகரிக்கும். 6. தூக்கமின்மையைச் சரி செய்யும்: தேன் ஒரு இனிப்பான உணவு என்றாலும் அது உடலின் இன்சுலின் சுரப்பைக் கட்டுப்படுத்தி இரவில் தூக்கமின்மை பிரச்னையை சரி செய்யும். பால் மற்றும் தேன் கலவையைக் குடிப்பதன் மூலம் இதைப் போன்ற பல அடிப்படை பிரச்னைகளில் இருந்து நாம் விடுபட முடியும். அனைத்துச் சிக்கலுக்கும் மருத்துவரைத் தேடி ஓடுவதைத் தவிர்த்து உணவையே மருந்தாக்கித் தீர்வு காணுங்கள். நன்றி Hindu 'வாய், முகத்தாடை சீரமைப்பு அறுவை சிகிச்சை மருத்துவர்கள் அதிகரிக்க வேண்டும்'
கருத்தரங்கில் ஸ்வீடன் கரோலின்ஸ்கா பல்கலைக் கழகப் பேராசிரியர் எலின்டர் கர்ல்கஸ்டாப்புக்கு நினைவுப் பரிசு வழங்குகிறார் கருத்தரங்கத் தலைவர் கே.எஸ்.ரவிசங்கர். சிறுநீரக பாதிப்பு நோயைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து இந்தியர்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு அதிகரிக்கவில்லை என்று ஸ்வீடன் கரோல்னிஷ்கா பல்கலைக் கழக சிறுநீரகவியல் துறைத் தலைவர் எலின்டர் கரோல்கஸ்டாப் கூறினார்.குரோம்பேட்டை பாலாஜி மருத்துவக் கல்லூரி சிறுநீரகவியல் துறை சார்பில் அண்மையில் நடைபெற்ற சர்வதேசக் கருத்தரங்கில் அவர் பேசியது: சர்க்கரை நோயும், உணவில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் உப்பு மூலம் அதிகரிக்கும் உயர்ரத்த அழுத்தமும், சிறுநீரக கோளாறுக்கு முக்கிய காரணங்களாகும்.தற்போது உலக வெப்பமயமாவதலும், உடலில் நீர்ச்சத்துக் குறைபாடும் சிறுநீரக நோய்கள் அதிகரிக்கக் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. மனித உடலில் உள்ள நீர்ச்சத்து சமநிலையில் மாற்றம் நிகழும்போது உடல் சோர்வு, தலைச்சுற்றல், நாவறட்சி, மயக்கம், சுயநினைவு இழப்பு ஏற்பட்டு, சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும்.வெயிலில் கடின உழைப்பு மேற்கொள்ளும் விவசாயிகள், கட்டடத் தொழிலாளர்கள், உப்பள தொழிலாளர்கள் அதிக அளவில் குடிநீர் பருக வேண்டும். பெரும்பாலோர் பணி இடங்களில் கிடைக்கும் பாதுகாப்பற்ற தண்ணீரை பருகும் நிலை உள்ளது. இதனால் சிறுநீரக பாதிப்புக்குள்ளாகும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.தென்னிந்தியாவில் வேலைக்குச் செல்லும் பெண்கள், அடிக்கடி சிறுநீர் கழிக்கும் முதியோர், பள்ளி மாணவிகள் கழிப்பிடக் குறைபாடு காரணமாக போதிய அளவில் குடிநீர் அருந்துவது இல்லை என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.பாலாஜி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையும், ஸ்வீடன் கரோல்னிஷ்கா பல்கலைக் கழகச் சிறுநீரகவியல் துறையும் இணைந்து மேற்கொள்ளும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் பொதுமக்கள் மத்தியில் சிறுநீரக நோய் வரும் முன் காக்கும் நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என்றார். ஸ்வீடன் கரோல்னிஷ்கா பல்கலைக் கழக பேராசிரியை அன்னிகா ஓஸ்ட்மன் சிறுநீரக நோய்கள் குறித்தும், சிம்ஸ் மருத்துவமனை இயக்குநர் முத்து வீரமணி சிறுநீரக புற்றுநோய் சிகிச்சை குறித்தும், அப்பல்லோ மருத்துவமனை ரோபோட்டிக் அறுவை சிகிச்சை மருத்துவர் அனந்தகிருஷ்ணன் சிவராமன் புரோஸ்டேட் புற்றுநோய் நவீன அறுவை சிகிச்சை குறித்தும், சிறுநீரக கல் அகற்றும் சிகிச்சை முறை குறித்தும் விவரித்தனர்.பாலாஜி மருத்துவக் கல்லூரி முதல்வர் டி.ஆர். குணசேகரன், துணை முதல்வர் வில்லியம் ஜான்சன், ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி பேராசிரியர் வித்யா வேணுகோபால், கருத்தரங்குத் தலைவர் கே.எஸ்.ரவிசங்கர், செயலர் பி.சசிகுமார், பி.சுரேஷ்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். State Level Chess League நன்றி Hindu இலவச தையல் பயிற்சி
வீட்டுக்குள் நுழையும் போது செருப்பு மற்றும் ஷூக்களை வெளியில் கழற்றி விட்டு நுழைந்தீர்கள் எனில் உங்களது உடல் எடை குறைய அதிகபட்ச வாய்ப்புகள் இருப்பதாக சமீபத்திய பிரிட்டிஷ் மருத்துவ ஆய்வொன்று தெரிவித்துள்ளது. ஏனெனில் சுற்றுப்புறத்தில் நிலவும் ரசாயனங்கள் வீட்டுக்குள் நுழைந்து கண்ட, கண்ட இடங்களிலும் தங்காதிருக்க இந்த அருமையான பழக்கம் உதவுவதாகக் கண்டறிந்துள்ளனர். (இதைத் தானே நாம் இந்தியாவில் தொன்று தொட்டு செய்து வருகிறோம்… வெள்ளைக்காரர்கள் எல்லாவற்றிலுமே அட்வான்ஸ் திங்கிங் என்கிறார்கள், ஆனால் பாருங்கள் இந்த சின்ன விஷயத்தைக் கூட அவர்கள் பலகோடி ரூபாய் செலவிட்டு செய்த ஆராய்ச்சியின் முடிவில் தான் கண்டுபிடித்திருக்கிறார்கள்) சமீபத்தில் பார்சிலோனாவில் செயல்பட்டு வரும் ஐரோப்பியன் சொஸைட்டி ஆஃப் என்டோகிரைனாலஜி மேற்கொண்ட ஒரு ஆய்வின் மூலம் இது நிரூபணம் ஆகியுள்ளது. அனைத்துப் பொருட்களிலும் தேங்கி இருக்கக் கூடிய உடல் எடையைக் கூட்டத்தக்க ஒபிஸொஜென்கள் மனித உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் செயல்பாடுகளில் தலையிட்டு உடலில் கொழுப்பு தேங்கும் படியான நிலையை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது. இந்த மகத்தான உண்மையை போர்ச்சுகலில் இருக்கும் அவியோரா மற்றும் பெய்ரா பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் தங்களது தொடர் ஆராய்ச்சி மற்றும் ஆய்வின் முடிவாகக் கண்டறிந்து வெளியிட்டுள்ளனர். நமது உணவுப்பழக்கம், வீட்டில் தேங்கும் தூசு தும்புகள், வீட்டைச் சுத்தப்படுத்த நாம் நாள்தோறும் பயன்படுத்தும் ரசாயனப் பொருட்கள், சமயலறையில் பயன்படுத்தும் உபகரணங்கள், அழகு சாதனப் பொருட்கள் உள்ளிட்ட அத்தனையிலுமே இந்த ஒபிஸோஜென்களின் தாக்கம் இருக்கிறதாம். இவற்றால் தான் மனிதர்கள் விரைவில் ஒபிஸிட்டிக்கு அடிமையாகிறார்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட மருத்துவக் குழுவினர், மனித உடலில் ஒபிசோஜென்களின் வளர்ச்சியைத் தவிர்க்க 7 விதமான வழிமுறைகளைப் பரிந்துரைக்கிறார்கள். அவற்றில் முதலாவது, இப்படி விரைவில் அசுத்தமடையக் கூடியனவும், உடல் எடையைக் கூட்டத்தக்க ஒபிஸோஜென்களை மனித உடலில் ஊடுருவ அனுமதிப்பதுமான பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை புறக்கணித்து விட்டு இனிமேல் சுத்தமான, ஃப்ரெஷ் ஆர்கானிக் காய்கறிகள் மற்றும் பழங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து உண்ணும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வது கூட ஒபிஸோஜென்களைத் தவிர்ப்பதற்கான ஒருவழிமுறை தான் என்கிறார்கள். இரண்டாவதாக வெளியில் இருந்து வீட்டுக்குள் நுழையும் போது நமது கால்களில் அணிந்திருக்கும் ஷூக்கள் மற்றும் செருப்புகளை சினிமாக்களிலும், மெகா சீரியல்களிலும் காட்டுவதைப் போல வீட்டின் உட்புறம் வரை அணிந்து கொண்டு புழங்கி ஃபிலிம் காட்டாமல் முறையாக வீட்டு முகப்பில் அதற்குரிய இடங்களில் கழற்றி வைத்து விட்டு வீட்டுக்குள் நுழைந்தாலும் போதும் அனாவசியமாக ஷூக்கள் மற்றும் செருப்புகளின் வாயிலாக வீட்டுக்குள் நுழையவிருக்கும் அசுத்தங்களை நம்மால் தவிர்த்து விடமுடியும் என்கிறார்கள். அதுமட்டுமல்ல மூன்றாவதாக அவர்கள் அளிக்கும் டிப்ஸ்… அது வீடாக இருக்கட்டும் அல்லது அலுவலகமாக இருக்கட்டும் எங்கே என்றாலும் சரி மனிதர்கள் புழங்கக் கூடிய இடங்கள் அனைத்தும் அடிக்கடி சுத்தப்படுத்தப் பட வேண்டும். அது வாக்குவம் கிளீனராலோ அல்லது மனிதக் கரங்களாலோ இருக்கலாம். ஆனால் சுத்தம் செய்யப்பட வேண்டும் என்கிறார்கள். மரத்தரை என்றால் அவற்றின் மீது போடப்பட்டுள்ள கார்பெட்டுகளை குறிப்பிட்ட இடைவெளியில் வாரம் ஒருமுறையாவது…
உடலுக்குத் தேவையான தண்ணீரை நாம் குடிக்க வேண்டும். போதுமான தண்ணீர் குடிக்காவிட்டால், பல உடல் நடப் பிரச்னைகள் தலைதூக்கும். மனித மூளையில் 80 சதவிகிதம் நீர் இருக்கிறது. போதுமான தண்ணீர் குடிக்காவிட்டால், எதிலும் கவனம் செலுத்த முடியாது. நினைவாற்றல் குறைந்துவிடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். போதுமான தண்ணீர் உடலில் இல்லாவிட்டால் கை, கால்களில், மூட்டுகளில் வீக்கம் ஏற்படும். உடலுக்குத் தேவையான நீரைக் குடிக்காவிட்டால், குமட்டல், வயிற்றுவலி போன்ற பிரச்னைகள் ஏற்படும்.தினமும் 40 கேன் கோகோ-கோலா குடித்தவரின் இன்றைய நிலை! சுவைக்கு அடிமையானதால் வந்த ஆபத்து!! இதயம் சரியாக, முறையாக துடிக்க வேண்டும் என்றால் போதுமான நீர் அருந்துவது அவசியம். உடலின் மூட்டுகள், சதைகள் எளிதாக இயங்கத் தேவையான எண்ணெய்ப் பசை தேவையான அளவு தண்ணீர் குடிப்பதால் கிடைக்கிறதாம். – என்.ஜே நன்றி Hindu எங்களுக்கும் ஒரு வாய்ப்புக் கொடுங்கள்!
உணவுப் பொருட்களை பயன்படுத்துவதற்கு முன்பு கழுவி பயன்படுத்துவதே ஆரோக்கியமான பழக்கம் என்றாலும் அதில் சில விதிவிலக்குகள் இருக்கின்றன. சமைப்பதற்கு முன்பு இந்த 4 பொருட்களையும் மறந்து கூட தண்ணீரில் கழுவி விடாதீர்கள். ஏன் என்று தானே யோசிக்கிறீர்கள் வாருங்கள் பார்ப்போம். 1. முட்டை: நாம் கடையில் வாங்கும் அனைத்து முட்டைகளிலும் அதைப் பாக்டீரியா கிருமிகளில் இருந்து பாதுகாக்க ஒரு விசேஷ ரசாயனம் (உடலுக்குத் தீங்கு விளைவிக்காத) அதன் மேற் பரப்பில் தடவப் பட்டிருக்கும். ஆனால் நீங்கள் முட்டையைத் தண்ணீரில் கழுவி விட்டால் இந்த பாதுகாப்பு அடுக்கு தண்ணீரில் கரைந்து, பாக்டீரியா வளர்வதோடு சமைக்கும் போது பிற உணவுப் பொருட்களிலும் அது பரவும் அபாயம் உள்ளது. 2. காளான்: காளான் தண்ணீரை மிக விரைவாக உறியும் தன்மை உடையது, ஆகையால் நீங்கள் அதைக் கழுவும் போது வேகமாகத் தண்ணீரை தன்னுள் இழுத்துக் கொள்ளும், இதனால் அதனுள் இருக்கும் வைட்டமின் சத்துக்களை அது இழக்க நேரிடும். ஒருவேலை மண்ணாக இருக்கிறது நிச்சயம் கழுவித்தான் ஆக வேண்டும் என்றால் ஓடும் தண்ணீரில் கழுவுவதை விட சில விநாடிகள் மட்டும் தண்ணீரில் முக்கி எடுப்பது அதன் சத்துக்கள் கரையாமல் இருக்க உதவும்.டெங்கு காய்ச்சலுக்கு புதிய சிகிச்சை முறை – ‘ஜூஸ் ஃபாஸ்டிங்’ 3. பாஸ்தா: பாஸ்தா தயாரிப்பு நிறுவனம் அதன் மேற்பரப்பில் ருசிக்காக சில பொருட்களையும், ஸ்டார்ச் (மாவு) போன்றவற்றையும் சேர்த்திருக்கும். அதனால் தண்ணீரில் பாஸ்தாவை நீங்கள் கழுவினால் இந்தப் பொருட்கள் தண்ணீரில் கரைந்து அதன் சுவையை குறைத்துவிடும். 4. கறி: நாம் பலரும் கறியில் உள்ள பாக்டீரியாக்களை நீக்க அதைத் தண்ணீரில் நன்கு அலச வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம், ஆனால் அது மிகவும் தவறு. பாக்டீரியாக்களை நீக்கக் கறியை குறைந்த சூட்டில் தண்ணீரில் வேக வைப்பதே சிறந்த வழியாகும். மேலும் தண்ணீரில் நீங்கள் கறியை கழுவுவதால் அது மேலும் பாக்டீரியா உற்பத்தியை அதிகரிக்கும் என்பதே உண்மை. சாப்பிடுவதற்கு முன்பும் சமைப்பதற்கு முன்பும் உணவுப் பொருட்களை கழுவுவது ஒரு நல்ல பழக்கம் என்றாலும் இந்த 4 பொருட்களையும் கழுவாமல் உபயோகிப்பதே சிறந்த மற்றும் ஆரோக்கியமான பழக்கம் ஆகும். நன்றி Hindu சாக்லேட் முதல் காஃபி வரை இந்த 10 உணவுப் பொருட்களை கண்ட நேரத்தில் சாப்பிட்டால் உங்கள் உயிருக்கே ஆபத்து!!
கோவைக்காய் (10),உடல் பருமன் குறைய வேண்டுமா? இது ஒரு சிறந்த வழி!முருங்கை விதை (5), புதினா (சிறிதளவு) இவை மூன்றையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து நன்றி Hindu 20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கியது ஆப்பிள் நிறுவனம்