கற்பூரவல்லி இலையின் மருத்துவ குணங்கள்!

கற்பூரவல்லி மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு இயற்கையான செடி. இலைகள் மிகவும் மென்மையாக பச்சை நிறத்தில் இருக்கும்.  காரத்தன்மையுடன் நீர்ச்சத்து கொண்டது. இதனை பச்சையாகவே சாப்பிடுவது நல்லது என்றாலும் சிலருக்கு காரத்தன்மை ஒப்புக்கொள்வது தேநீரில் போட்டு அருந்தலாம் அல்லது கஷாயம் செய்து குடிக்கலாம். கிராமங்களில்கூட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மார்புச்சளி, இருமல் மற்றும் காய்ச்சல் வரும்போது இதனைப் பயன்படுத்துவர். ♦ சளி மற்றும் இருமலைப் போக்க பெரிதும் உதவுகிறது. ♦ நுரையீரல் தொடர்பான பிரச்னைகளுக்கும் ஆஸ்துமாவுக்கும் இயற்கையான சிகிச்சைப் பொருளாக பயன்படுகிறது. ♦ செரிமானத்திற்கு உதவுகிறது. சிலர் உணவுகளில் கூட பயன்படுத்துகின்றனர். ♦ எந்தவொரு சூழ்நிலையிலும் எளிதாக வளரக்கூடிய தாவரம் என்பதால் வீட்டில் வளர்க்கலாம். குறிப்பாக மழைக்காலங்களில் வேகமாக படர்ந்து வளரும்.பழத்தின் மருத்துவப் பயன்கள் ♦ விஷக் கிருமிகளை முறிக்கும் தன்மை கொண்டதாலேயே முன்னோர்கள் வீட்டில் முன் துளசி, கற்பூரவல்லி செடியை வளர்ப்பதுண்டு. கற்பூரவல்லி இலைகளை காயவைத்துப் பொடி செய்தும் பயன்படுத்தலாம். ♦ கற்பூரவல்லியில் சோடியம், பொட்டாசியம், வைட்டமின் ஏ, கால்சியம், வைட்டமின் சி, இரும்புச்சத்து, வைட்டமின் பி6, மெக்னீசியம் ஆகிய சத்துகள் இருக்கின்றன. நன்றி Dinamani உடல்நலத்துக்கும் அழகுக்கும் 'பொன்னாங்கண்ணி கீரை'

சிவப்பின் சிறப்புக்கள்.

சிவப்பு நிறம் பொதுவாக ஆற்றல்,வலிமை,எச்சரிக்கை ஆகியவற்றை இடத்திற்கு ஏற்றார்போல் குறிக்கும்.  பொதுவாக சிவப்பு நிறத்தின் மீது மனிதனுக்கு மிகப் பெரிய ஈர்ப்பு உள்ளது, இன்னும் சொல்லப்போனால் சிவப்பு நிறத்தை பார்த்தால் உடல் பலவீனத்தால் இரத்த ஓட்டம் குறைந்த ஒரு மனிதனால் தனது இரத்த ஓட்டத்தை கூட சீர்செய்து கொள்ள முடியும் என்பது ஆச்சரியத்திற்குரிய உண்மை.ஒரு சராசரி மனிதன் சுறுசுறுப்பாக விரைந்து வேலை செய்ய சிவப்பு நிற உடை அணிவது நல்லது.  சிவப்பு நிறத்திற்கும் மனிதனின் வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது மனிதன் உயிரோடு இருக்க இரத்தம் மிக முக்கியம் என்பது கல்வியறிவில்லாதவருக்கும் தெரிந்ததே. இரத்தத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் சிவப்பணுக்களின் அளவு எவ்வளவு என்பதை தீர்மானிப்பதில் நாம் உண்ணக்கூடிய உணவு கூட சிவப்பு நிறத்தினால் ஆன காய்கறிகளோ அல்லது கனிகளோதான். இந்தப்பதிவில் நாம் உணவில் அவ்வப்போது சேர்த்து கொள்ள வேண்டிய சிவப்பு நிற காய்கறிகள் மற்றும் கனிகள் குறித்தும் அவை நமக்கு ஏற்படும் நன்மைகள் நம்மை எந்தெந்த நோய்களில் இருந்து காக்க வல்லது என்றும் பார்க்கலாம்.  சிவப்பு நிற காய்கறிகள்: பீட்ரூட் கேரட் தக்காளி சிவப்பு மிளகாய் சிவப்பு முட்டைகோஸ் சிவப்பு வெங்காயம் சிவப்பு முள்ளங்கி சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை  பழங்கள்:மாரடைப்பு வராமல் தடுக்க கடைப்பிடிக்க வேண்டியவை! ஆப்பிள் மாதுளை சிவப்பு கொய்யா ஸ்ட்ராபெர்ரி தர்ப்பூசணி, செர்ரி பழம் செவ்வாழைப்பழம்  சத்துக்கள் : விட்டமின்கள் புரதம் பொட்டாசியம் சோடியம் மெக்னீசியம் பைட்டோ கெமிக்கல் ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் லைகோபின்  நன்மைகள் : ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நம் உடலில் உள்ள மாசுக்களை வெளியேற்றி உடலை பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது. பொட்டாசியம் நம் உடலுக்கு ஆற்றல் அளிப்பது, இதயநோய் உண்டாகாமல் தடுப்பது, மேலும் சரும பொலிவு மற்றும் பாதுகாப்பிற்கு உகந்தது. சோடியம் மற்றும் மெக்னீசியம் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. இதில் இயற்கையாய் அமைந்துள்ள லைகோபின் நம் ரத்தத்தில் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது. விட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி கண் குறைபாடுகள் வராமலும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்துகிறது. சிவப்பு வெங்காயத்தில் அதிகம் உள்ள பைட்டோ கெமிக்கல் கல்லீரலை பாதிக்கும் மஞ்சள் காமாலை நோய் வராமல் தடுக்க வல்லது. இவ்வளவு நன்மைகளை நமக்கு அள்ளித் தருகின்ற சிவப்புநிற காய்கறிகளை நம் அன்றாட உணவில் தவறாமல் எடுத்துக்கொள்வது பல்வேறு நோய்களில் இருந்து நம்மை காத்து ஆரோக்கியமாக வாழ்வதற்கு வழி வகுக்கும். கற்பூரவல்லி இலையின் மருத்துவ குணங்கள்!

கரோனாவிலிருந்து மீண்டு எத்தனை நாள்களுக்குப் பின் தாய்மையடையலாம்?

கரோனாவிலிருந்து மீண்டுHealthy Soupஎத்தனை நாள்களுக்குப் பின் தாய்மையடையலாம் என்று ஏராளமான இளம்பெண்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இது தொடர்பாக ஆன்லைனில் தேடுதலும் அதிகரித்துள்ளது. நன்றி Dinamani காளான் நன்மைகள்

உடல் எடையைக் குறைக்கும் உலர் திராட்சை! இதர பயன்கள்?

உலர் திராட்சை பெரும்பாலாக கருப்பு, மஞ்சள் நிறங்களில் கிடைக்கிறது. இவற்றில் வைட்டமின் பி, சி, போலிக் அமிலம், இரும்புச் சத்து, பொட்டாசியம், கால்சியம் உள்ளிட்ட எண்ணற்ற சத்துகள் உள்ளன.  உலர் திராட்சையை தினமும் நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. பொதுவாக அனைத்து வகையான நட்ஸ்களையும் நீரில் ஊறவைத்து சாப்பிடலாம் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.  மாறாக, உலர் திராட்சையை அப்படியேவும் சாப்பிடலாம்.  உலர் திராட்சையை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:  ♦ கருப்பு திராட்சையில் கொலஸ்ட்ரால் இல்லை என்பதால் அதனை யார் வேண்டுமானாலும் தொடர்ந்து சாப்பிடலாம். மேலும் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளும் குறையும்.  ♦ மலச்சிக்கல் இருப்பவர்கள் உலர் திராட்சையை நீரில் போட்டு கொதிக்க வைத்து பின்னர் திராட்சையை மசித்து சிறிது தேன் கலந்து சாப்பிடலாம்.  ♦ ரத்த சோகை உள்ளவர்கள் தினமும் இதனை சாப்பிடும்பட்சத்தில் ரத்த அணுக்களின் அளவு அதிகரிக்கும்.  ♦ உடல் சூடாகவே இருப்பதாக உணர்பவர்கள் அல்லது உடல் சூட்டைத் தணிக்க உலர் திராட்சையை நீரில் ஊற வைத்து சாப்பிடலாம். உடல் எடையை அதிகரிக்க ♦ சிறுநீரகப் பாதையில் ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால் காலையில் வெறும் வயிற்றில் நீரில் ஊற வைத்த உலர் திராட்சையுடன் தண்ணீர் அருந்த வேண்டும்.  ♦ மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி உள்ளிட்டப் பிரச்னைகளை சரிசெய்ய இது உதவும்.  ♦ எலும்பு தொடர்பான பிரச்னைகளை சரிசெய்யவும் எலும்புகளின் வலிமை மற்றும் வளர்ச்சிக்கு உலர் திராட்சை சாப்பிடுங்கள். நரம்புத் தளர்ச்சிக்கு ஒரு தீர்வாக இருக்கும்.  ♦ இதில் கால்சியம் சத்து அதிகம் இருப்பதால் பற்களின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும்.  ♦ மஞ்சள் காமாலை நோயுள்ளவர்கள் தினமும் உலர் திராட்சை சாப்பிட்டுவர காமாலை நோய் குணமாகும்.  இதையும் படிக்க | மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதற்கான 12 அறிகுறிகள்! தீர்வு என்ன? நன்றி Dinamani பொரித்த உணவுகளைத் தவிர்த்துவிடுங்கள்!

கீரைகளும் அதில் உள்ள சத்துகளும்

ஆரோக்கியமான உடல்நலத்துக்கும் உடல் வளர்ச்சிக்கும் உணவில் சேர்த்துகொள்ள வேண்டியவை கீரைகள். வெறுமனே கீரைகளில் அதிகளவிலான சத்துகள் உள்ளன என்று கூறாமல் எந்தெந்த கீரைகளில் என்னென்ன சத்துகள் உள்ளன என்பதை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.  வைட்டமின் “பி’ உள்ள கீரைகள்: பசலைக் கீரை, வெந்தயக் கீரை, கறிவேப்பிலை, புதினாக்கீரை, கொத்துமல்லிக் கீரை வைட்டமின் “ஏ’ உள்ள கீரைகள்: முருங்கைக் கீரை, அகத்திக் கீரை, கொத்துமல்லிக் கீரை, பசலைக் கீரை, கறிவேப்பிலை, முளைக் கீரை, வெந்தயக் கீரை மருத்துவ குணங்கள் நிறைந்த நாவல் பழம்! இரும்புச் சத்து அதிகம் உள்ள கீரைகள்: பொன்னாங்கண்ணிக் கீரை, மணத்தக்காளிக் கீரை, முளைக் கீரை, புதினாக் கீரை, முருங்கைக்கீரை. சுண்ணாம்புச் சத்து அதிகமாக உள்ள கீரைகள்: முருங்கைக் கீரை, கறிவேப்பிலை, பொன்னாங்கண்ணிக் கீரை, வெந்தயக் கீரை, புதினாக் கீரை, முளைக் கீரை, மணத்தக்காளிக் கீரை, அகத்திக் கீரை இவற்றில் சுண்ணாம்புச் சத்து அதிகமாக உள்ளது. நன்றி Dinamani கர்ப்ப காலத்திற்கான சித்த மருத்துவம்

இவர நல்லாத் தெரியும், ஆனா பெயர் மறந்துவிட்டதே? கண்டுபிடிக்க.. ஒரு தலையணை போதும்

ஒருவரை பார்த்ததுமே அவரை யார் என்று நமக்கு எடுத்துச் சொல்லும் மூளையானது, சில சமயங்களில், அவரது பெயரை நினைவில் வைத்துக் கொள்ள மறந்துவிடும். இப்படியான சூழல்கள் பலவகைப்படும். ஒருவர் நம்மிடம் வந்து என்னைத் தெரியவில்லையா? என்று ஆரம்பித்தாலே நமது மூளை நிலைதடுமாறிவிடும்.  அய்யய்யோ எனக்குத் தெரியாது என்று நமது மூளையானது இரண்டு கைகளையும் வானை நோக்கித் தூக்கிவிட்டு தலைதெறிக்க ஓடிவிடுவதும் உண்டு. அப்போதுதான் நாம் அசடுவழிய.. தலையை சொரிந்தபடி தெரியாது என்று சொல்லலாமா? தெரியும் என்று சொல்லி சமாளிக்கலாமா? என ஆழ்ந்த யோசனையில் இருப்போம். அதற்குள் நம்மைப் பார்த்து உற்சாகம் கொப்பளிக்க ஓடி வந்தவர் ஏற்கனவே ஃபியூஸ் போன பல்பாகியிருப்பார். இதையும் படிக்க.. கரோனா பேரிடரால் பல சாதனைகளை முறியடித்த டோலோ-650 விற்பனை சரி.. ஒருவரைப் பார்த்ததும் இவர் நமக்கு நன்றாக தெரிந்தவராயிற்றே என்று சொல்லும் மூளையானது.. ஆவர் யார்? எப்படித் தெரியும் என்பதை சொல்ல மறுத்துவிடும். அவ்வளவுதான் அவரைப் பற்றி நாம் யோசிப்பதற்குள் அந்த இடம் காலியாகிவிடும். இப்படி யார், என்ன பெயர், எப்படித் தெரியும் என்று குழம்பும் சூழ்நிலைகள் பலவிதம். ஆனால், அவற்றைக் கண்டுபிடிக்கும் விதம்மட்டும்தான் புதுவிதம். அதாவது, நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய புதிய ஆராய்ச்சியில், இதுபோல ஒருவரின் பெயர் உள்ளிட்ட அடையாளங்களை நினைவில் கொண்டு வருவதற்கு சிறந்த வழி உறக்கம் என்று தெள்ளத்தெளிவாகக் கூறியுள்ளார்கள்.புகைப் பழக்கத்திற்கு தீர்வாகும் ஏலக்காய்! இதர மருத்துவக் குணங்கள்? நமது நினைவாற்றலை புதுப்பித்து, முகம் – பெயரை கண்டறிய, எந்த இடையூறும் அற்ற மிக மெல்லிய உறக்க அலையே போதுமானது என்கிறது அந்த ஆய்வு முடிவு. நேச்சர் பார்ட்டனர் அறிவியல் இதழில் இந்த ஆய்வுக் கட்டுரை வெளியாகியுள்ளது.  ஏற்கனவே இருக்கும் ஆய்வுகளும், இந்த புதிய ஆய்வும் கூறுவது என்னவென்றால், மிக ஆழ்ந்த உறக்கம் மூலமாக, நமது நினைவாற்றலின் திறன் அதிகரித்து, அது புதுப்பிக்கப்படுகிறது. இதன் மூலம் நாம் மறந்த பல விஷயங்களை மீண்டும் நினைவுகூற முடியும் என்கிறார் பிஎச்டி மாணவரான நாதன் வொய்ட்மோர். அதேவேளையில், ஆழ்ந்தஉறக்கமற்ற தன்மை, நிச்சயம் நினைவாற்றலுக்கு உதவாது, ஏற்கனவே இருக்கும் சிக்கலை பெரிதாக்கும் என்றும் கூறுகிறார்கள். எனவே, யாரையாவது பார்த்ததும் பெயர் நினைவில் வரவில்லையா? வெகு நாளாகத் தேடிக் கொண்டிருக்கும் நண்பரின் முகம் மறந்துவிட்டதா? எங்கும் தேடி அலைய வேண்டாம். ஒரு தலையணை இருந்தால் எல்லாவற்றையும் மறந்துவிட்டு (ஏற்கனவே மறந்ததுதான் பிரச்னையே என்கிறீர்களா?) நன்கு ஆழ்ந்து உறங்குங்கள். பிறகு அமைதியாக உங்கள் நண்பரின் முகத்தை அல்லது பெயரை நினைவுகூருங்கள். நிச்சயம் நினைவில் வரும். அப்படியும் வரவில்லை.. வேறு என்ன மீண்டும் உறங்குங்கள்..  நன்றி Dinamani தினமும் ஓட்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

உடல்நலத்துக்கும் அழகுக்கும் 'பொன்னாங்கண்ணி கீரை'

  அதிகளவில் சத்துகளை கொண்டுள்ள கீரைகளை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என முன்னோர்கள் காலத்தில் இருந்து கூறப்பட்டு வருகிறது. கீரைகளில் சுண்ணாம்பு சத்து, இரும்புச் சத்து, பீட்டா கரோடின், வைட்டமின் ஏ, பி, சி என சத்துகள் அதிகம் உள்ளன.  ரத்த சோகையினை குறைக்க, கண்பார்வையை அதிகரிக்க, ஒட்டுமொத்த உடல்நலனை மேம்படுத்த கீரைகள் பயன்படுகின்றன. கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தினமும் உணவில் கீரை சேர்த்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.  அந்தவகையில், கீரைகளின் ராணி என்று சொல்லக்கூடிய பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்க்கலாம். ► பொன்னாங்கண்ணி கீரையில் நீர்ச்சத்து, கொழுப்புச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், சுண்ணாம்பு, வைட்டமின் ஏ, சி போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. ► ‘கண்பார்வைக்கு’ என்று சொன்னாலே நினைவுக்கு வருவது பொன்னாங்கண்ணி கீரை. கண்பார்வை மட்டுமின்றி, கண்கள் சிவந்துபோதல், கண் எரிச்சல் உள்ளிட்ட கண் சம்மந்தப்பட்ட அனைத்து கோளாறுகளுக்கும்  இந்த வகை கீரை ஒரு நல்ல தீர்வாக இருக்கும். மூளை நரம்புகளை பலப்படுத்த ► மேலும் ரத்தத்தை சுத்திகரிக்கிறது. மூல நோய், மண்ணீரல் நோய்களை குணப்படுத்தும்.  ► இதயம் மற்றும் மூளையின் சிறந்த செயல்பாடுகளுக்கு உதவும். வாய் துர்நாற்றம் நீங்கும்.  ► குறிப்பாக பெண்கள் சருமம் பளபளப்பாக பொன்னாங்கண்ணி கீரையை வாரத்திற்கு இருமுறையாவது எடுத்துக்கொள்ளுங்கள்.  ► மேலும், தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயுடன் பொன்னாங்கண்ணி கீரையை காய்ச்சி தலைக்கு தேய்த்து குளிக்கலாம். இதனால் உடல் குளிர்ச்சியடையும். ► பொன்னாங்கண்ணி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.  நன்றி Dinamani Healthy Soup

நாள் ஒன்றுக்கு குறைந்தது 5 பேரீச்சைகளை சாப்பிடுங்கள்!

பேரீச்சம்பழம் மிகச்சிறந்த ஆன்டி-ஆக்சிடன்ட். அந்தவகையில், உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உலர் பழங்களில் அனைத்து வகை சத்துகளையும் கொண்டது பேரீச்சம்பழம்.  இதில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, புரோட்டின், பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர், மாங்கனீசு, இரும்புச்சத்து, வைட்டமின் பி6 உள்ளிட்ட சத்துகள் இருக்கின்றன.  நாள் ஒன்றுக்கு குறைந்தது 5 பேரீச்சைகளை(அல்லது 100 கிராம்) சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.  ► பேரீச்சம்பழம்  மிகச்சிறந்த ஆன்டி-ஆக்சிடன்ட். அந்தவகையில், உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.  ► குடல் பகுதியில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் குறைக்கிறது.  ► உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.  ► பேரீச்சையில் வைட்டமின் ஏ அதிக அளவில் இருப்பதால் இது கண் பார்வைக்கும் அவசியமானது.  ► ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைத்து சரியான அளவில் இருக்க வழிவகை செய்யும். வீட்டில் குழந்தைகள் இருந்தால் இந்த மூச்சுப் பயிற்சி டிப்ஸ் உங்களுக்குத்தான் ► கர்ப்பிணி பெண்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து உணவு. கருப்பையில் ஏற்படும் கோளாறுகளை சரிசெய்கிறது.  ► குடல், தொண்டை, மார்பகம், நுரையீரல், இரைப்பை பகுதிகளில் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க வழி செய்கிறது. ► எலும்புகளையும் பற்களையும் பலப்படுத்துகிறது. ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்கிறது. ► சருமம் பொலிவடைய உதவுகிறது.  ► உடல் எடை குறைய டயட்டில் இருப்பவர்கள் உலர் பழங்களில் கண்டிப்பாக பேரீச்சையை சேர்த்துக்கொள்ள வேண்டும்.  இதையும் படிக்க | 11 வயதுக்குள்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது சரியா? நன்றி Dinamani கடைசி பெஞ்ச் மாணவர்களே இருக்க மாட்டார்களோ?

மருத்துவ குணங்கள் நிறைந்த நாவல் பழம்!

நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்தாகக் கருதப்படும் நாவல் பழம் பல்வேறு மருத்துவ குணங்களை உள்ளடக்கியது.  நாவல் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பி1, பி2, பி5 ஆகிய வைட்டமின்களும் உள்ளன.  அடர் ஊதா அல்லது நீல கறுப்பு நிறத்தில் இருக்கும் இவற்றை சாப்பிடுவதால் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சர்க்கரை கட்டுப்பாட்டுக்குள் வரும். இதன் விதைப் பகுதியை அரைத்துச் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு நின்று விடும். பழச்சாறும் சாப்பிடலாம்.  இதன் இலையை காலை வேளையில் சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் குறையும். இதனால் மாரடைப்பு வருவது குறையும். பெண்கள் இதன் இலைச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட மலட்டுத்தன்மை அகலும்.  இதன் காரணமாகவே இதன் விதை, பழம், இலை, பட்டை என அனைத்தும் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. தொண்டை உறுத்தலா? மலச்சிக்கல், செரிமானப் பிரச்னைகளை சரிசெய்யும்.  நாவல் பழத்தில் இருந்து தயாரிக்கப்படும் வினிகர் பசியைத் தூண்டும். சிறுநீரகம் மற்றும் மண்ணீரல் கோளாறுகளை நீக்கும் வல்லமை உண்டு. உடலுக்கு குளிர்ச்சி அளிக்கக்கூடியது. செரிமானங்களைத் தூண்டும்.  விதைகளில் அதிக அளவில் புரதம், மாவுச்சத்து மற்றும் கால்சியம் உள்ளது.    நன்றி Dinamani இவர நல்லாத் தெரியும், ஆனா பெயர் மறந்துவிட்டதே? கண்டுபிடிக்க.. ஒரு தலையணை போதும்

காளான் நன்மைகள்

காளான் ரத்தத்தில்நெஞ்சு சளிக்கு நிவாரணம்கலந்து அதிலிருக்கும் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்துகிறது.மேலும், நுண்ணுயிரிகளை எதிர்த்து அவற்றை அழித்து உடலை தொற்று நோய்கள் வராமல் காக்கிறது. புற்று நோய் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து காளான் சாப்பிட்டு வந்தபோது சிறந்த பலன் தந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன. தினமும் ஒருமுறை சிறிதளவு காளான் உணவை சாப்பிடுவது நீரிழிவு உள்ளவர்களுக்கு நல்லஉடல் பலத்தை அளிக்கும். பழத்தின் மருத்துவப் பயன்கள்

உடல் எடையைக் குறைக்கும் காளான்! இதர மருத்துவப் பயன்கள் என்னென்ன?

காளான்கள் மூளை நரம்புகளை பலப்படுத்தரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. நன்றி Dinamani சாரப்பருப்பின் பயன்கள்

தினமும் காலையில் லெமன் வாட்டர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

காலையில் எழுந்தவுடன்முட்டை சாப்பிட்டால் கண்டிப்பாக பால் அருந்தியே ஆக வேண்டுமா?அன்றைய நாள் மிகவும் புத்துணர்ச்சியுடன் தொடங்க வேண்டும் என்பது ஒவ்வொருவரும் நினைக்கக்கூடியதுதான். நன்றி Dinamani கர்ப்ப காலத்திற்கான சித்த மருத்துவம்

சர்க்கரை நோய்க்கு…

*கர்ப்பிணிகள் சில நேரம் சிறுநீர் பிரியாமல் அவதிப்படுவார்கள். வெந்நீருடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்தால் சீக்கிரம் சிறுநீர் வெளியேறும். * பாலுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடிப்பதால் சின்னம்மை, பெரியம்மை. வெப்பத்தால் வரும் நோய்கள் குணமாகும். தலைவலி, சளி, இருமலைப் போக்க… *சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். சர்க்கரை நோயால் வரும் கைகால் நடுக்கம், மயக்கம், சோர்வு விலகும். உடல் சோர்வைப் போக்கும் ‘பன்னீர் திராட்சை’

சூடான நீரில் குளிப்பதால் இத்தனை பிரச்னைகளா?

குளிர்காலமோ, வெயில் காலமோ எப்போதுமே சுடுநீரில் மட்டும்தான் குளிப்போம் என்று சொல்பவர்கள் ஏராளம். சுடு நீரில் குளிப்பதுதான் உடலுக்கு நல்லது என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களும் ஏராளமானோர். சளி, காய்ச்சலா, ஒரு சில சொட்டு யூகலிப்டஸ் எண்ணெய்யை சுடுநீரில் விட்டுக் குளித்தால், சளி பறந்து போகும் என்று சிகிச்சைகள்கூட சொல்வார்கள். ஆனால், நல்ல சூடான தண்ணீரில் குளிப்பது, உடலுக்குக் கெடுபயனையே விளைவிக்கும் என்று பல்வேறு ஆராய்ச்சிகள் கூறுகின்றன. சரி.. சுடு தண்ணீரில் குளிப்பது, உடலுக்கு எவ்வாறெல்லாம் தீங்கிழைக்கும் என்பது குறித்து வெளியான சில ஆய்வுகள் உங்களுக்காக.. இதையும் படிக்க.. மீண்டும் முதலிலிருந்தா? கரோனா அபாயப் பகுதியாக மாறும் மண்டலம் 1. குழந்தைப் பேறு சுமார் 30 நிமிடங்கள், தொடர்ந்து மிகச் சூடான தண்ணீரில் குளிப்பவர்களுக்கு குழந்தைப் பேறு தொடர்பான பிரச்னைகள் உருவாகும் அபாயம் இருப்பதாக ஆய்வாளர்கள் அண்மையில் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருப்பதாக மருத்துவ இதழில் கட்டுரை வெளியாகியுள்ளது. எனவே, குழந்தைப் பேறு பிரச்னையை எதிர்கொண்டிருப்பவர்கள், மிகச் சூடான தண்ணீரில் குளித்துக் கொண்டிருப்பதை வழக்கமாக்கியிருந்தால், அதனை கைவிட்டு, குளிர்ந்த நீரில் குளிக்கலாம்.  மிகச் சூடானா தண்ணீரை குளிக்கும் டப் முழுக்க நிரப்பிவிட்டு, அதில் பல மணி நேரம் செலவிடுவது நிச்சயம் உகந்ததல்ல என்கிறார்கள் நிபுணர்கள். 2. தோல் வறட்சிதொப்பையைக் குறைக்கும் சுரைக்காய்! இதர பயன்கள் என்னென்ன? பொதுவாக, குளிர்காலத்தில் நம்மை புத்துணர்ச்சிக்கு உள்ளாக்கும் என்று மிகவும் நம்பும் சூடான குளியல்தான், ஏற்கனவே பனியால் வறண்டு போன நமது தோலை மேலும் வறட்சிக்குள்ளாக்குகிறது. சூடான தண்ணீரை தோலின் மீது ஊற்றும்போது, அதிலிருக்கும் ஈரப்பதத்தையும் தண்ணீர் எடுத்துவிடுகிறது. ஒரு வேளை உங்கள் தோல், மிருதவானதாக இருந்தால், நிச்சயம் சுடுதண்ணீரில் குளிப்பதைத் தவிர்த்து விடலாம். இதனால் சில தோல் பிரச்னைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். 3. முடி கொட்டும் மிகச் சூடான தண்ணீரை தலையில் ஊற்றி குளிக்கும்போது, அதனால் தோல் பகுதி மிகவும் பாதிக்கப்பட்டு முடி உதிரும் பிரச்னை ஏற்படும். சிலருக்கு ஏற்கனவே அதிகமாக முடிகொட்டும் பிரச்னை இருக்கும். அதற்காக சில சிகிச்சைகளையும் செய்வார்கள். ஆனால், அப்போது தொடர்ந்து சுடு தண்ணீரில் குளித்துக் கொண்டே இருந்தால் முடி கொட்டும் பிரச்னை குறையாது. 4. பழக்கமாகிவிடலாம் தொடர்ந்து சுடு தண்ணீரில் குளிப்பதை ஒருவர் செய்து வரும்போது, அது அவர்களுக்கு பழக்கமாகி, விட்டால், எப்போதுமே சுடுநீரில்தான் குளிக்க விரும்புவார்கள். வேறு வழியில்லாத நிலையில் குளிர்ந்த நீரில் குளிக்கும் நிலை ஏற்பட்டால், அது ஒரு சங்கடத்தை அளிக்கலாம். எனவே, சுடு நீரில் குளிக்கும் பழக்கத்துக்கு சிலர் அடிமையாகிவிடக் கூடும். 5. வயதான தோற்றம்குளிர்ந்த நீரில் குளிப்பவர்களை விடவும், சூடான தண்ணீரில் குளிப்பவர்களின் தோல் மிக விரைவாகவே தளர்வடைந்துவிடும். பொதுவாக எல்லோருக்குமே நாம் மிக அழகாக இருக்க வேண்டும் என்றுதான் எண்ணுவார்கள். ஆனால், தொடர்ந்து அதுவும் மிகச் சூடான தண்ணீரில் குளிப்பவர்களின் தோல்வி மிக விரைவாக தளர்ந்து வயதான தோற்றத்தைக் கொடுக்கும் அபாயம் உள்ளது.  நன்றி Dinamani நெஞ்சு சளிக்கு நிவாரணம்

மாரடைப்பு வராமல் தடுக்க கடைப்பிடிக்க வேண்டியவை!

ஆண்களுக்கு மட்டுமின்றிஇவர நல்லாத் தெரியும், ஆனா பெயர் மறந்துவிட்டதே? கண்டுபிடிக்க.. ஒரு தலையணை போதும்தற்போது பெண்களுக்கும் அதிகமாக மாரடைப்பு ஏற்படுகிறது. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் அளவு அதிகரிப்பு இவற்றுக்கு முக்கியக் காரணிகளாக உள்ளன. நன்றி Dinamani தினமும் 'பிளாக் டீ' குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

ஜங்க் உணவுகள் சாப்பிடுவதை நிறுத்த ஏழு எளிய வழிகள்

உடலுக்கு ஊறு விளைவிக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் அவ்வப்போது எழுவதும் ஒரு கெட்டப் பழக்கம்தான். ஆனால் அதிலிருந்து எளிதாகவே விடுபடலாம். சிப்ஸ், பாக்கெட் உணவுகள், குளிர்பானங்கள் முதல் ஜங்க் உணவுகளின் பட்டியல் நீண்டு கொண்டேதானிருக்கும்.  அவற்றின் தோற்றமும், ருசியும் நம்மை அடிக்கடி சாப்பிட தூண்டும் வகையில் இருப்பதும் ஒரு காரணம். சரி அதிலிருந்து விடுபட எளிய வழிகள் இருக்கின்றன. 1. கைவசம் எப்போதும் ஆரோக்கியமான உணவுப் பொருள்களை பையில் வைத்திருங்கள். எதையாவது சாப்பிட வேண்டும் என்று நினைத்ததும் அதனை எடுத்து சாப்பிடுங்கள். உதாரணமாக, வேர்க்கடலை பர்ஃபி, வறுத்த வேர்க்கடலை, முந்திரி, உலர் திராட்சை, பாதாம் போன்றவற்றை எப்போதும் கைவசம் வைத்திருக்கலாம். 2. எங்குச் சென்றால் அதிகமாக ஜங்க் உணவுகளை சாப்பிடுகிறீர்களோ அங்குச் செல்வதை தவிர்த்து விடுங்கள். கட்டாயமாக செல்ல வேண்டும் என்று இருந்தால், உங்களுக்கு மிகவும் பிடித்த, ஆரோக்கியத்தை அதிகமாகக் கெடுக்காத ஏதேனும் ஒரு ஜங்க் உணவை வாங்கிச் சாப்பிடலாம். ஒட்டுமொத்தமாக ஜங்க் உணவுகளை ஓரம்கட்டிவிட முடியாது. அதனால் அடிக்கடி என்றில்லாமல் எப்போதாவது வாங்கிச் சாப்பிடலாம்.தினமும் ஓட்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்! 3. ஜங்க் உணவுகளை தயாரிக்கும் முறை மற்றும் அதில் கலந்திருக்கும் பொருள்களின் தீங்குகள் குறித்து அவ்வப்போது விடியோக்களில் பார்த்து அறிந்து கொள்ளுங்கள். அதன் விளைவுகள் தெரிந்து கொண்டால், அவ்வப்போது அதனை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் மட்டுப்படும். 4. நண்பர்கள்.. யாருடன் சென்றால் அதிகளவில் ஜங்க் உணவுகளை சாப்பிடுகிறீர்களோ, அவர்களிடம் தெளிவாகச் சொல்லிவிடுங்கள். உங்கள் முடிவை. அவர்கள் சாப்பிட்டாலும் உங்களை வற்புறுத்த வேண்டாம் என்று. அது சாத்தியமில்லாவிட்டால், அதுபோன்ற நண்பர்களை சந்திப்பதைத் தவிர்த்து, நட்பை மட்டும் வளர்த்துக் கொள்ளுங்கள். தொப்பையை அல்ல. 5. ஏமாற்றுதல் அவசியம்.. ஆம் ஒரேயடியாய் ஜங்க் உணவுகளை தவிர்த்து விடுவது அவ்வளவு எளிதல்ல. நல்லதும் அல்ல. இதனால், திடீரென இந்த முடிவிலிருந்து மாறி முழுக்க முழுக்க ஜங்க் உணவுகளின் பக்கம் நீங்கள் போய்விட முடியும். எனவே, நீங்களே உங்களுக்கு ஒரு நாளை ஒதுக்கி, அன்று ஜங்க் உணவுகளை சாப்பிட அனுமதி அளியுங்கள். இதனால் உங்கள் ஜங்க் உணவுப் பிரியரான அந்த அந்நியன் ஓரளவு திருப்தி அடைவார். 6. ஆரோக்கியமான உணவுகளில் அதிக வெரைட்டி இருக்கிறது. அவற்றை தேடி தேடி ருசிபாருங்கள். ஆர்டர் செய்தும் வாங்கி உண்ணுங்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்கள் திறமையை சமையலறையில் காட்டுங்கள். அதனை ஸ்டேட்டஸில் போட்டு பெருமை பீற்றிக் கொள்ளுங்கள்.  இது உங்கள் மீது ஒரு ஆரோக்கிய உணவுப் பிரியர் என்ற பிம்பத்தை ஏற்படுத்தும். அதனை அப்படியே பராமரிக்க நீங்கள் விரும்பினால் நல்லதுதானே. 7. உணவை அதிகமாக மென்று சாப்பிடுங்கள். அதிகமாக மென்று சாப்பிடும்போது குறைவான உணவுதான் சாப்பிட முடியும். உடலுக்கு நல்லதும் கூட. மென்று சாப்பிட நேரம் இல்லாத போதும் அதை வலுக்கட்டாயமாக கடைப்பிடியுங்கள். அப்படியில்லாவிட்டால் ஜங்க் உணவுகளை அதிகமாக மென்று சாப்பிடுங்கள். இதனால் குறைவான ஜங்க் உணவுகளை சாப்பிட முடியும். …

Continue Reading

பல பெண்கள் கடைசி வரை இதைப் புரிந்துகொள்வதில்லை..

உடல்நலம்.. ஆரோக்கியம்.. குடும்ப நலம்.. பொருளாதார நிலை.. குடும்ப உறவுகள்.. என பல்வேறு பந்துகளை இரண்டு கைகளாலும் ஒன்றன் பின் ஒன்றாக வீசி –  பிடித்து ஒரு சுழற்சியை ஏற்படுத்திக் கொண்டே இருப்பது போன்றதுதான் வாழ்க்கை முறையும்.  இதில், சிலர் சில பந்துகளை தவறவிடலாம். ஒரு சிலர் பல பந்துகளை தவற விடலாம். இவர்களை வாழ்க்கையில் தோற்றவர்கள் என்கிறோம். சிலரோ மிக லாவகமாக, அனைத்துப் பந்துகளையும் மிகச் சீராக சுழல வைத்து வாழ்க்கையில் வெற்றியாளர்களாகவோ, சாதனையாளர்களாகவோ மாறுகிறார்கள். இவர்களைப் பற்றியதல்ல இப்போது நம்முடைய பேச்சு. இந்த வாழ்க்கை எனும் பந்துகளின் சுழற்சியில், பெரும்பாலான பெண்கள் தவறவிடுவது ஒரே ஒரு பந்தைத்தான். அது அவர்களது உடல்நலம். ஆனால், அந்த பந்தைத் தவற விட்டதைப் பற்றி அவர்கள் ஒரு போதும் கலக்கமோ மனக்கவலையோ அடைவதேயில்லை. அவ்வளவு ஏன் அந்த ஒரு பந்தை தவறவிட்டதைக் கூட அவர்கள் பொருள்படுத்துவதில்லை. அந்த ஒரு பந்தை தவறவிட்டதன் விளைவாக.. அடுத்தடுத்து மற்ற பந்துகள் கீழே விழ நேரிடும் வரை. ஆனால், அவர்கள் விழித்துக் கொள்ளும் காலம் மிகத் தாமதமாக அமைந்துவிடுவதால் அதற்குப் பெரும்பாலும் பலனேதும் கிடைக்காமலேயே போய்விடுகிறது. சிலரால் மீண்டும் அந்தப் பந்து விளையாட்டுக்குள் நுழைய முடியாமல் பார்வையாளர்களில் ஒருவராக மாறிப் போகிறார்கள். காரணம்.. அவர்கள் முதன்முதலில் கவனிக்காமல் தவறவிட்ட அந்த உடல்நலப் பந்துதான். எனவே பெண்களே.. குடும்பத்தாரை ஊட்டி ஊட்டி வளர்ப்பது மட்டும் ஒரு தாயின் கடமையல்ல. அதை விட பன்மடங்கு, தனது உடல் நலத்தையும் பேணிக் காக்க வேண்டும். அவர்களுக்கு எடுத்து வைக்கும் சத்தான உணவுகளில் சம பங்கில்லையென்றாலும், கால் பங்காவது உங்கள் வயிற்றுக்கும் இடப்பட வேண்டும். நீங்கள் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும்பட்சத்தில்தான், நீங்கள் ஊட்டி வளர்க்கும் குடும்பத்தாருக்கும் நீண்ட நாள்களுக்கு சத்தான உணவும், ஊக்கமும் உங்களால் கிடைக்கும்.சிவப்பின் சிறப்புக்கள். எனவே, உங்களுக்காக இல்லாவிட்டாலும், நீங்கள் போற்றிப் பேணும் குடும்பத்தாருக்காகவாவது உங்களையும் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால், பல பெண்கள் கடைசி வரை இதனைப் புரிந்து கொள்வதேயில்லை. இதுவரை புரிந்து கொள்ளாமலிருந்தாலும் கூட, இனியாவது விழித்துக் கொள்ளுங்கள். இது உங்களுக்கான நேரம். அது மட்டுமா? பெண்களுக்கு ஏற்படும் பல நோய்களும், அதன் ஆரம்பகட்டத்தில் கண்டறியப்படாமலேயே விடுபடுகிறது. அதற்குக் காரணமும் ஒன்றுதான். உடல்நலம் மீதான கவனக்குறைவு. இதை இப்படியே சொல்லிவிட முடியாது. காரணம், அவர்களது கவனம் முழுக்க பெரும்பாலும் குடும்பத்தின் மீதுதான் என்பது. எனவே, சிறு உடல் நலக் கோளாறுகளையும் முன்கூட்டியே கண்டறிந்து, அதற்கான சிகிச்சையைப் பெற முன் வர வேண்டும்.   நன்றி Dinamani கற்பூரவல்லி இலையின் மருத்துவ குணங்கள்!

கரோனாவிலிருந்து மீண்டு எத்தனை நாள்களுக்குப் பின் தாய்மையடையலாம்?

கரோனாவிலிருந்து மீண்டு எத்தனை நாள்களுக்குப் பின் தாய்மையடையலாம்? கரோனாவிலிருந்து மீண்டு எத்தனை நாள்களுக்குப் பின் தாய்மையடையலாம் என்று ஏராளமான இளம்பெண்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.  இது தொடர்பாக  ஆன்லைனில் தேடுதலும் அதிகரித்துள்ளது. சரி.. கரோனாவிலிருந்து மீண்டவர்கள் எத்தனை நாள்களுக்குப் பின் தாய்மையடையலாம்? நிச்சயமாக காத்திருக்க வேண்டுமா? என்பது போன்ற கேள்விகளுக்கு மருத்துவ நிபுணர்கள் அளித்துள்ள பதிலில்.. ஏன் காத்திருக்க வேண்டும்?தாய்மையடைதல் என்பது அவ்வளவு எளிதான வேலையல்ல. ஒன்பது மாதங்கள் கருவை சுமந்து ஏராளமான உடல் மாற்றங்கள், மன மாற்றங்கள், சுரப்பிகளின் மாற்றங்களை இந்தக் காலத்தில் ஒரு பெண் எதிர்கொள்ள வேண்டும். ஒன்பது மாதம் கருவைச் சுமந்து, ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க ஒரு தாய் நிச்சயமாக நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.  ஏற்கனவே கரோனா பாதித்து, உடல் நலப் பிரச்னைகளை சந்தித்த பெண் ஒருவர், உடனடியாக தாய்மையடைய நேரிட்டால், அவர்களுக்கு ஏராளமான சிக்கல்கள் ஏற்படும் அபாயமிருக்கிறது.நெஞ்சு சளிக்கு நிவாரணம் காத்திருப்பது அவசியம்தானா?கரோனாவிலிருந்து மீண்டதுமே தாய்மையடைவது தாய் – சேய் உடல்நலனில் பாதிப்பை ஏற்படுத்தலாம். கரோனா வைரஸ் என்பது ஏதோ நமது சுவாசப் பாதையை மட்டும் பாதிக்கும் விஷயமல்ல. அது பல உடல் உள்ளுறுப்புகளையும் தாக்கியிருக்கும். சிலருக்கு கரோனா தொற்றின் அறிகுறிகளே பல காலத்துக்கு நீடிக்கிறது. எனவே, கர்ப்பமடைதலை எதிர்கொள்ள உடல்நலம் பூரண குணமடையும் வரை காத்திருப்பது அவசியம்தான். தாய்மையடைதலும் ஒரு சவால்தான்ஏற்கனவே கரோனா என்ற பெருந்தொற்றுச் சவாலை எதிர்கொண்டு மீண்டு வந்திருக்கும் பெண், உடனடியாக மனதளவிலும் உடலளவிலும் மற்றொரு சவாலை எதிர்கொள்ளத் தயாராவது சற்று கடினமானது விஷயம்தான். எனவேதான் கரோனாவிலிருந்து மீண்டு சில காலம் காத்திருக்கச் சொல்கிறார்கள். எத்தனை காலம்?கடந்த காலத்தில் கரோனா பாதித்து அதிலிருந்து மீண்டுவிட்டீர்கள். உடடியான உங்களது குடும்பத்தை திட்டமிட எண்ணுகிறீர்களா? அதற்கென எந்தக் குறிப்பிட்ட கால அவகாசத்தையும் மருத்துவத் துறை நிர்ணயிக்கவில்லை. ஆனால், சில மாதங்கள் உங்கள் உடல்நலம் தேறுவதற்காகக் காத்திருக்கலாம். கரோனா அறிகுறிகள் உங்களிடமிருந்து முற்றிலும் விடைபெறும்வரை காத்திருக்கலாம்.  நீங்கள் முழு உற்சாகத்துடன் முழு உடல்நலனையும் பெற்றுவிட்டதாக உணரும்பட்சத்தில், குடும்பத்தை திட்டமிட ஆனந்தமாகத் தயாராகலாம்.  நன்றி Dinamani 'ஆயில் புல்லிங்' செய்வதால் ஏற்படும் நன்மைகள்!

இத ட்ரை பண்ணுங்க

மூலத்தை முடக்கிப்போட இத ட்ரை பண்ணுங்க… சேப்பங்கிழங்கை சிறிது புளிசேர்த்து சமைத்து சாப்பிட்டால் மூலம் நீங்கும். சர்க்கரை நோய்க்கு… பிரண்டையை நெய்விட்டு வதக்கி அரைத்து பாக்கு அளவு காலை, மாலை சாப்பிட்டு வரமூலத்தால் உண்டாகும் வலி, இரத்தப்போக்கு சரியாகும். தேங்காயைப் பாலெடுத்து அதனுடன் சிறிது கற்கண்டு சேர்த்து நெய்யில் வதக்கியபெருங்காயப்பொடி சேர்த்து பருகி வர மூலத்தினால் உண்டாகும் எரிச்சல் வலி குறையும். சூடான நீரில் குளிப்பதால் இத்தனை பிரச்னைகளா?

தினமும் பேரிச்சம் பழம்

தினமும் பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வந்தால் மூளையின் செயல்பாடு மேம்படும். அதாவது ஞாபக சக்தி, கூர்மையான புத்தி, எதையும் எளிதில் கற்றுக் கொள்ளும்திறன் போன்றவை அதிகரிக்கும். சூடான நீரில் குளிப்பதால் இத்தனை பிரச்னைகளா? பேரிச்சம் பழத்தில் உள்ள அதிகப்படியான இரும்புச்சத்து, உடலில் இரத்தணுக்களின் அளவை அதிகரித்து, இரத்தசோகை வரும் அபாயத்தைக் குறைக்கும். உங்கள் உடலில் இரத்தத்தின் அளவு சீராக இருக்க, தினமும் 3 பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வாருங்கள். தினமும் காலையில் லெமன் வாட்டர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?