அரைமுடி தேங்காயும்,அகேவ் இனிப்புத் திரவம் பற்றி தெரியுமா?5 பேரிச்சைகளையும் காலை உணவாககலந்து எடுத்துக் கொள்ளுங்கள் மூட்டு வலி, எலும்பு தேய்மானம், எலும்பு முறிவு, நரம்பு பலவீனம்,உடல் பருமன், இளைப்பும், இருதய பலவீனம், மனசஞ்சலம் என அனைத்தும் போக்கும் மாமருந்தான உணவுகள்தான் தேங்காயும்,பேரிச்சையுமாகும் தினமும் காலையில் லெமன் வாட்டர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
உடல் இயக்கமின்மை, உணவு பழக்கவழக்கம் உள்ளிட்ட காரணங்களால் உடல் பருமன் பிரச்னையால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உடல் எடையைக் குறைக்க பலரும் பல வழிகளில் முயற்சி செய்து வருகின்றனர். என்னதான் உணவுக் கட்டுப்பாட்டில் இருந்தாலும் உடல் எடையைக் குறைக்க முடியவில்லை என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது. குறைந்த கலோரி கொண்ட உணவுகள் குறித்து பலரும் அறிவதில்லை. அதாவது உடல் இயக்கத்தில் இருந்தால் அதாவது உடற்பயிற்சி செய்யும்போது உடலில் கொழுப்புகள் எரிக்கப்படுகிறது. அதேநேரத்தில் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் உள்ள கார்போஹைட்ரேட், புரதம் உள்ளிட்டவை உடலில் கலோரிகளாக ஏற்றப்படுகிறது. கலோரி குறைவாகக் கொண்ட உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உடல் எடையைக் குறைக்க முடியும். இதற்காக சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வதில்லை என்று அர்த்தமில்லை. குறைந்த கலோரி உணவுகளும் அதில் உள்ள கலோரிகளின்(100 கிராமுக்கு) அளவுகளும்(தோராயமாக) ► வெள்ளரிக்காய் – 16 கிராம் கலோரி ► ப்ரோக்கோலி – 34 கிராம் ► கேரட் ஒரு கப் – 50 கிராம் ► செலரி – 16 கிராம் ► ஆப்பிள் – 57 கிராம் (125 கிராமுக்கு) ► பீட்ரூட் – 43 கிராம் ► தக்காளி ஒரு கப் – 22 கிராம் ► முட்டைகோஸ் – 22 கிராம் ► காலிபிளவர் – 25 கிராம் ► முள்ளங்கி – 18 கிராம் ► சுரைக்காய் – 19 கிராம் ► காளான் – 15 கிராம் ► கேப்ஸிகம் – 46 கிராம்மாம்பூ சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? ► கீரை ஒரு கப் – 7 கிராம் உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் கீழ்க்குறிப்பிட்டுள்ள உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. ♦ கொழுப்பு மிகுந்த இறைச்சி ♦ வெண்ணெய், நெய் ♦ முட்டையின் மஞ்சள் கரு (அளவாக சாப்பிடலாம்) ♦ பால், வெள்ளைச் சக்கரை ♦ குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் ♦ குக்கீஸ், கேக், சிப்ஸ் வகைகள் ♦ கிழங்கு வகைகள் குறிப்பாக உருளைக்கிழங்கு ♦ பாதாம், முந்திரி பருப்புகள் ♦ பீட்சா, பர்கர் உள்ளிட்ட துரித உணவுகள் ♦ எண்ணெய்யில் பொரித்த உணவுகள் ♦ மாம்பழம், வாழைப்பழம், திராட்சை ♦ சாஸ் குறிப்பாக சோயா சாஸ் நன்றி Dinamani உடல் எடையை குறைப்பது எப்படி (உணவின் மூலமாகவே)
உடற்பயிற்சி செய்வது புற்றுநோய் இறப்பைக் குறைக்கும் வாய்ப்புள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. உடலில் தற்போது பல்வேறு நோய்களுக்கும் காரணமாக இருப்பது உடல் பருமன்தான் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதனால் ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி என வாழ்க்கை முறையைப் பின்பற்ற பரிந்துரைக்கின்றனர். அந்த வகையில் நோய்களில் புற்றுநோய் தற்போது அதிகரித்து வரும் நிலையில் நோயின் காரணம் பெரிதாகக் கண்டறியப்படாவிட்டாலும் அதனைத் தடுக்கும் வழிமுறைகள், ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் முறையான சிகிச்சை மேற்கொண்டு மீள்வதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. இந்நிலையில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு புதிய ஆய்வில், உடற்பயிற்சி செய்வது பெருங்குடல் புற்றுநோய் இறப்புகளை 37 சதவீதம் குறைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், உடற்பயிற்சி செய்தவர்களின் வாழ்நாள் காலம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருங்குடல் அல்லது மலக்குடலைப் பாதிக்கும் குடல் புற்றுநோய் உலகளவில் மூன்றாவது அதிகம் பாதிக்கப்பட்ட புற்றுநோயாகவும் இறப்பில் இரண்டாவது இடத்திலும் உள்ளது.4 மாதங்களில் 25 கிலோ எடை குறைத்த பெண்ணின் 10 டிப்ஸ் இதோ…! ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து உள்பட 6 நாடுகளில் 889 பெருங்குடல் புற்றுநோய் நோயாளிகளிடம் 17 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் அவர்களுக்கு நீச்சல் முதல் நடனம் வரை ஏதாவது ஒரு உடற்பயிற்சி செய்ய அறிவுறுத்தப்பட்டது. அறுவை சிகிச்சை, கீமோதெரபி மூலம் முன்னதாக சிகிச்சை பெற்றவர்கள், 3 ஆண்டுகள் உடற்பயிற்சி செய்த பின்னர் அவர்களது உடல் செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு ஆரோக்கியமான உணவுகளும் வழங்கப்பட்டன. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உடற்பயிற்சி செய்தவர்களுக்கு 8 ஆண்டுகளுக்குப் பிறகு 90 சதவீதம் உயிர் வாழும் வாய்ப்பு இருந்தது. ஆனால் உடற்பயிற்சி செய்யாதவர்களுக்கு 83 சதவீதமாக குறைந்து காணப்பட்டது. அதாவது புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடற்பயிற்சி செய்யும்போது அவர்களது ஆயுள்காலம் ஓரளவு நீட்டிக்கப்படுகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பலரும் அதிலிருந்து மீளவும் தங்கள் வாழ்நாளை நீட்டிக்கவும் முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் இந்த ஆய்வின் முடிவுகள் அவர்களுக்கு உதவும் என்றும் இந்த ஆய்வினை மேற்கொண்ட ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இதுபற்றிய தொடர்ச்சியான ஆய்வுகளும் மேற்கொள்ளவிருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இதையும் படிக்க | குழந்தைகள் ஏன் சாப்பிட மறுக்கிறார்கள்? உடல் பருமன் ஏன்? காரணமும் தீர்வும்! நன்றி Dinamani அகேவ் இனிப்புத் திரவம் பற்றி தெரியுமா?
இரவில் நீண்ட நேரம் பணி செய்பவர்கள் காலையில் வாக்கிங், ஜாக்கிங் போகக் கூடாது. தடுமாற்றம் நிச்சயம். தீப்புண்களுக்கு தேன் நல்ல மருந்தாகும். காளான் தாய்ப்பாலை வற்ற வைக்கும் தன்மையுடையது. எனவே, பாலூட்டும் பெண்கள் காளான் சாப்பிடக் கூடாது.மூல நோய் சரியாக…. மூல நோய் உடையவர்கள் கொள்ளு சாப்பிடக் கூடாது. ஆறிப் போன உணவுகளைத் தொடர்ந்துச் சாப்பிட்டால், மூட்டு வலி உண்டாகும். நன்றி Dinamani மூளை நரம்புகளை பலப்படுத்த
100ஆயில் மசாஜ் ஏன் செய்ய வேண்டும்?கிராம் உலர்திராட்சையில் 299 கலோரிகள் உள்ளன. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் அளவு திராட்சையைவிட அதிகம். 100 கிராம் உலர்திராட்சையில் 23 சதவிகிதம் இரும்புச்சத்து உள்ளது. இரும்புச்சத்து இதில் அதிகம் உள்ளதால், உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் தாராளமாக இதைச் சாப்பிடலாம். தினமும் உலர்திராட்சையை சிறிதளவு சாப்பிடுபவர்களின் உடல் எடை வெகு விரைவில் அதிகரிக்கும். உலர்திராட்சையில் பொட்டாசியம் சத்தும் அதிகமாக இருக்கிறது. கீரைகளும் அதில் உள்ள சத்துகளும்
முருங்கை இலை உருவிப் போட்டுக் காய்ச்சி வைத்தால், எண்ணெய் காராமல் இருக்கும். கத்தரிக்காய் பசியைத் தூண்டும். ரத்தத்தைத் தூய்மையாக்கும். பாட்டி வைத்தியம்… பிஞ்சு அவரைக்காய் சமைத்து உண்டால் கண் நோய்கள் குணமாகும். நன்றி Dinamani பாலூட்டும் பெண்கள் காளான் சாப்பிடலாமா?
வீட்டில் மீன் எண்ணெய் இருந்தால், ஒரு சுத்தமான துணியை அதில் நனைத்து தீக்காயத்தின் மீது போட்டால் புண் குணம் அடைந்துவிடும். ஓமத்தை கஷாயம் வைத்து, பாலில் கலந்து அருந்தினால் சில நாள்களில் சிறுநீரகத்தில் உள்ள கற்கள் கரைந்து சிறுநீரோடு வெளியேறிவிடும். முக்கிமலை நஞ்சன்தினமும் பேரிச்சம் பழம் ஐந்து, ஆறு மிளகை எடுத்து, எலுமிச்சைப் பழச்சாறுவிட்டு மை போன்று அரைத்து எடுத்து, நெற்றியில் பற்று போட்டால், தலைவலி குணமாகும். ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர். நன்றி Dinamani பொன்னாங்கண்ணி
விமலா சடையப்பன் கடுமையான இருமலாக இருந்தால், 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் குடித்தால் உடனடி தீர்வு உண்டு.உணவருந்தும் முறை தொட்டாசிணுங்கி இலையை அரைத்து பசும்பாலில் கலந்து சாப்பிட்டால், வயிற்றுக் கடுப்பு உடனே சரியாகிவிடும். நன்றி Dinamani காளான் நன்மைகள்
வைட்டமின் ஏ சத்து, சுண்ணாம்புச் சத்துகள் அதிக அளவில் கொண்ட வெந்தயக் கீரையை அவ்வப்போது சமைத்துச் சாப்பிட்டு வர உடலுக்கு நல்ல வலிமை உண்டாகும். ரத்தத்தை உண்டாக்கும் எலும்புகளையும் நன்கு கெட்டிப்படுத்தும். குங்குமப் பூவைத் தண்ணீரோடு சேர்த்துக் குடிநீராக்கிக் குடித்துவந்தால், பசியானது நீங்கும். சோம்பு இலையை புளியிட்டுக் கடைந்து உண்டால், மூல நோய்கள் நீங்கும்.நீங்கள் 5 மணி நேரத்திற்கும் குறைவாகத் தூங்குகிறீர்களா? தண்டுக் கீரையை அடிக்கடி கறி சமைத்துச் சாப்பிட்டு வந்தால், நரம்புத் தளர்ச்சி நோய் குணம் அடையும். நன்றி Dinamani காய்கறிகளின் நன்மைகள் பற்றி தெரியுமா?
ஒற்றைத் தலைவலியைப் போக்க.. துளசி இலை சிறிதளவு எடுத்துக்கொண்டு அத்துடன் சுக்கு, லவங்கம் சேர்த்து அரைத்து நெற்றியில் பற்று போட்டால் சிறிது நேரத்தில் தலைவலி குணமாகி விடும். தொண்டைக் கரகரப்புக்கு.. சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றை வறுத்துப் பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டைக் கரகரப்பு குணமாகும். நெஞ்சுச் சளி சரியாக.. தேங்காய் எண்ணெயில் சிறிது கற்பூரம் சேர்த்து சுட வைக்க வேண்டும். இப்போது அந்த எண்ணெயை நெஞ்சில் தடவ சளி குறையும். இரவு நேரத்தில் பாலுடன் மிளகுத் தூள் சேர்த்து சாப்பிட நெஞ்சுச் சளி குறையும். இவர நல்லாத் தெரியும், ஆனா பெயர் மறந்துவிட்டதே? கண்டுபிடிக்க.. ஒரு தலையணை போதும் மூக்கடைப்புக்கு.. நீரில் சுக்கை போட்டு சிறிது நேரம் கொத்தித்த பின்னர் அத்துடன் பால், சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வர மூக்கடைப்பு சரியாகிவிடும். நெல்லிக்காய்ச் சாறில் மிளகுத் தூள் மற்றும் தேன் கலந்து குடித்துவர மூக்கடைப்பு குறையும். வறட்டு இருமல் சரியாக.. எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து குடிக்க வறட்டு இருமல் சரியாகும். பொதுவாக மிளகு, மஞ்சள், தேன் ஆகியவற்றை ஏதேனும் ஒருவகையில் எடுத்துவர சளி, இருமல், மூக்கடைப்பு வராது. நன்றி Dinamani இந்த பழங்களைப் பற்றி தெரியுமா?
தற்போது மாம்பூ சீசன். அதன் அடுத்த நிலையான மாவடு,மாங்காய், மாம்பழங்களும் வர ஆரம்பித்துவிட்டன. மாவடு வடுமாவடாக போடப்பட்டு வீடுகளில் பயன்படுத்துகின்றனர். மாங்காயை பச்சடி,பொடிப் பொடியாக நறுக்கி உப்பு அல்லது காரம் சேர்த்து உப்பு, உரப்பு மாங்காய் என குழம்பு ,தயிர் சாதங்களுக்கு சைட் டிஷ்ஷாக மயன்படுத்துகின்றனர். மாம்பழம் பழமாக சாப்பிடப்படுகிறது. ஆனால் மாமரத்தில் முதலில் அழகுற தோன்றும் மாம்பூவை மறந்துவிடுகிறோம். இந்த மாம்பூவும் மனிதர்களின் உடலுக்கு பல விதங்களில் நன்மை பயக்கும். மாம்பூவில் அமினோ ஆசிட்,ஆன்டி ஆக்சிடெண்ட், மான்கிஃபெரின் என்ற சத்தும் உள்ளது. இவற்றில் முதல் இரண்டும் நோய் எதிர்ப்புச் சக்தியை தூண்டுபவை. மூன்றாவதோ இன்சுலின் செயல்பாட்டை கூட்டுகிறது.ஜங்க் உணவுகள் சாப்பிடுவதை நிறுத்த ஏழு எளிய வழிகள் நல்ல நீரில் இரவே மாம்பூவை ஊற வைத்து விடியற்காலையில் வடிகட்டி தண்ணீர் சேர்த்து சாப்பிடலாம். இல்லையெனில், காலையில் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அதில் மாம்பூவை போட்டு வைக்கவும்.நன்கு கலந்தவுடன் வடி கட்டி சர்க்கரை அல்லது வெல்லம் கலந்து சாப்பிடுவது நல்லது. வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது. தோல் சார்ந்த தொல்லைகள் உள்ளவர்கள் தவிர்க்கவும். நன்றி Dinamani உடல் எடையைக் குறைக்க முடிவு செய்துவிட்டீர்களா? அப்போ இதை மட்டும் செய்யாதீங்க
காளான்கள் 'நான் இப்படி இல்லையே' என்று நினைப்பவரா?ரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. நன்றி Dinamani உடல் எடையைக் குறைக்க முடிவு செய்துவிட்டீர்களா? அப்போ இதை மட்டும் செய்யாதீங்க
இருமல், ஜலதோஷத்துக்கு ஓமவல்லி ஒரு முக்கிய மருந்தாகும். ஓமவல்லி இலையைசாறு எடுத்து லேசாக சூடுபடுத்தி தேன் கலந்து குடித்தால் இருமல், மார்புச் சளி சரியாகும். காலையில் வெறும் வயிற்றில் ஓமவல்லி நிலையில் சிறிது கருப்பட்டி வைத்துசாப்பிட்டால் வயிறு உபாதைகள் நீங்கும். பொரித்த உணவுகளைத் தவிர்த்துவிடுங்கள்! மழை, குளிர் காலத்தில் மாலை நேரச் சிற்றுண்டியாக ஓமவல்லி இலையை பஜ்ஜியாக செய்து சாப்பிடலாம். தினமும் காலையில் லெமன் வாட்டர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
சுத்தமான நல்லெண்ணெய் 10 மிலி அளவு எடுத்து, வாயில் ஊற்றி, வாய் முழுவதும் படும்படி ஊற்ற வேண்டும். இப்போது பற்களின் இடையில் படும்படி நன்கு கொப்பளிக்க வேண்டும். எண்ணெய் நுரைத்து உங்களுக்கு அசௌகரியமாக இருக்கும்போது கொப்பளித்துவிட வேண்டும். பின்னர் சுத்தமான வெதுவெதுப்பான நீரால் வாயை நன்றாக கழுவிக்கொள்ளுங்கள். ஆயில் புல்லிங் பொதுவாக 10 முதல் 15 நிமிடங்கள் வரை செய்யலாம். காலை எழுந்தவுடன் இதனைச் செய்வது நலம். ‘ஆயில் புல்லிங்’ செய்வதனால் ஏற்படும் பலன்கள்: ஆயில் புல்லிங் செய்வதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். பற்கள், ஈறுகள் உறுதியாகும். பல் வலி, பல் கூச்சம் உள்ளிட்ட பிரச்னைகளும் சரியாகிவிடும். நன்றாக பசி எடுக்கும். செரிமான பிரச்னைகள் வராதுகரோனாவிலிருந்து மீண்டு எத்தனை நாள்களுக்குப் பின் தாய்மையடையலாம்? அமைதியான நல்ல உறக்கம் கிடைக்கும். உடல் சுறுசுறுப்பாக இருக்கும். வாயில் உள்ள கிருமிகள் அனைத்தும் வெளியேற்றப்படும். வாய் துர்நாற்றம் இருக்காது. உடல் சூடு தணியும். ஒற்றை தலைவலி, சைனஸ், தைராய்டு, தோல் வியாதிகள், சிறுநீரகக் கோளாறுகள் உள்ளிட்ட பிரச்னைகள் நீங்கும். சருமம் பொலிவு பெற்று முக அழகைக் கூட்டும். நன்றி Dinamani 4 மாதங்களில் 25 கிலோ எடை குறைத்த பெண்ணின் 10 டிப்ஸ் இதோ…!
தொண்டை உறுத்தலா? சளியா? சிறு வெங்காயம் சாறு, தேன், இஞ்சி சாறு மூன்றையும் சம அளவாக கலந்து தினமும் ஒரு வேளை சாப்பிட வேண்டும். இரு தினங்களில் சளி நீங்கும். என்ன இவையெல்லாம் விட்டமின் டி குறைபாட்டின் அறிகுறிகளா? தொண்டைவலி வந்துவிட்டால், உடனே வெதுவெதுப்பான உப்புநீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. தொண்டையில் ஏற்பட்ட வீக்கத்தைக் குறைக்கும். தொண்டை உறுத்தலை நீக்கும்.சளியையும் குறைக்கும். சிறுநீரகத்தில் கல் பிரச்சனையா?
உடலுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்கம் இன்று பெரும்பாலானோரிடம் மறைந்துவிட்டது. வாரத்திற்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பது அவசியமாகும். உடல் அழகுக்கும் சரும அழகுக்கும் ஆயில் மசாஜ் செய்வது அத்தியாவசியமாகிறது. எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யும்போது மன அழுத்தமும் வெகுவாகக் குறைவது ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. சருமத்தின் பொலிவை அதிகரிக்கச் செய்ய ஆயில் மசாஜ் வாரத்திற்கு இருமுறை செய்யலாம். முகத்திற்கு தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய் என இவற்றில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தலாம். எண்ணெய்யை லேசாக சூடேற்றி பின்னர் ஆறவைத்து இளஞ்சூடு பதத்தில் இருக்கும்போது மசாஜ் செய்ய வேண்டும். இது ஈரப்பதமாக்குவதோடு மட்டுமல்லாமல், பளபளப்பான சருமத்தைத் தருகிறது. உடல் சூட்டைக் குறைத்து உடல் உறுப்புகளை சீராக இயங்க வைக்கிறது. உடலில் உள்ள திரவக் கழிவுகளை வெளியேற்றுகிறது. தொடர்ந்து செய்யும்போது, அது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. உடலில் பல்வேறு கோளாறுகளை சரிசெய்து உடலை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது. இளமை மற்றும் ஆரோக்கியமான ஒளிரும் சருமத்தைப் பெற வேண்டுமெனில் அடிக்கடி ஆயில் மசாஜ் செய்யுங்கள்.பொரித்த உணவுகளைத் தவிர்த்துவிடுங்கள்! உங்கள் சருமத்திற்கு ஏற்றவாறு எண்ணெய்களை தேர்வு செய்வது பயன்படுத்துவது நல்லது. காலை வேளையில் இளம் வெயில் நேரத்தில் எண்ணெய் மசாஜ் செய்து இளஞ்சூடான நீரில் குளிக்க வேண்டும். படுக்கைக்குமுன் இரண்டு நிமிட மசாஜ்கூட உங்கள் சருமத்தில் பல அற்புதங்களைச் செய்யும். நன்றி Dinamani சுவாசமண்டலப் பிரச்சனையா
மருத்துவக் குணங்கள் அதிகம் நிறைந்த ஒரு பொருள் ஏலக்காய். இன்றைய காலகட்டத்தில் நகரங்களில் பெரும்பாலும் பிரியாணியில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது எனலாம். அதுவும் வாசனைக்காக பயன்படுத்துவதாகக் கூறுகிறார்கள். ஆனால், அஜீரணம், வாயுத் தொல்லையைப் போக்கவே பிரியாணியில் ஏலக்காய் போடுகிறோம் என்று பலருக்கும் தெரிவதில்லை. ஆயுர்வேத மருத்துவத்தில் ஏலக்காய் அதிகம் பயன்படுத்தப்படுகிறது இங்கு குறிப்பிடத்தக்கது. ♦ஏலக்காயில் புரதச் சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து உள்ளிட்டவை இருக்கின்றன. ♦உணவை எளிதாக செரிமானம் செய்து பசியைத் தூண்டும். அதிக கொழுப்புள்ள உணவுகளை சாப்பிடும்போது அதில் ஏலக்காய் சேர்த்துக்கொள்ளுங்கள். ♦ வாய் துர்நாற்றம் போக்கவும் ஏலக்காயைப் பயன்படுத்தலாம். ♦உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுகிறது. உடலில் இருக்கும் அதிகப்படியான உப்பு மற்றும் கிருமிகளை வெளியேற்றும். சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் ஆற்றல் உண்டு. ♦தொடர் இருமல் இருப்பவர்கள் ஏலக்காயை வாயில் போட்டு மென்றாலே போதும். ♦ஜலதோஷம், மூக்கடைப்பு இருந்தால் ஏலக்காயினை நெருப்பில் போட்டு அந்த புகையை சுவாசித்தாலே சரியாகிவிடும்.புல்லட் காபி தெரியுமா? ♦தேநீரில் ஏலக்காய் போட்டு அருந்தலாம். வயிற்றை சுத்தம் செய்யும். மேலும், ஏலக்காயை தொடர்ந்து உணவில் சேர்ப்பது மனநலனுக்கு நல்லது. ♦தலைவலி, வாந்தி, குமட்டல் இருந்தால் ஏலக்காயை வாயில் போட்டு மென்றால் போதுமானது. ♦ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்த நீரைக் குடித்தால் விக்கல் நிற்கும். ♦புகைப் பழக்கத்தைக் கைவிட நினைப்பவர்கள் தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால் படிப்படியாக பலன் கிடைக்கும். நன்றி Dinamani இவர நல்லாத் தெரியும், ஆனா பெயர் மறந்துவிட்டதே? கண்டுபிடிக்க.. ஒரு தலையணை போதும்
உடல்நிலையைவிட தற்போது சருமத்திற்கு மெனக்கெடுபவர்கள்தான் இன்று அதிகம். அழகுக்காக பலரும் ஒரு மாதத்திற்கு ஆயிரக்கணக்கில் அழகு நிலையங்களுக்கு செலவிடுகின்றனர். ஆனால் அனைவராலும் அது முடியாத ஒன்று. அதனால் வீட்டிலேயே உள்ள பொருள்களைக் கொண்டு எளிதாக ஃபேஷியல் செய்ய முடியும். அழகு நிலையங்களில் ரசாயனங்கள் சேர்க்கப்பட்ட கலவைதான் முகத்தில் போடுவார்கள். இதனால் பின்நாள்களில் ஏதேனும் சருமத் தொந்தரவுகள் ஏற்படலாம். ஆனால் இயற்கையான பொருள்களைப் பயன்படுத்தும்போது பெரும்பாலும் எந்த சருமத் தொந்தரவுகளும் ஏற்படாது. கிளென்சிங் சருமத்தை சுத்தம் செய்வது. சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்க வேண்டும். பால் சிறிதளவு எடுத்து, ஒரு பஞ்சை அதில் நனைத்து சருமத்தை துடைத்தெடுக்க வேண்டும். ரோஸ் வாட்டர் கொண்டும் அல்லது கடைகளில் விற்கும் ஏதேனும் ஒரு கிளென்சரைப் பயன்படுத்தலாம். பேஷ் வாஷ் கொண்டும் முகத்தைக் கழுவலாம். ஸ்கிரப்பிங் சர்க்கரை, தேன், சில துளிகள் எலுமிச்சை சாறு ஆகியவற்றைக் கலந்து முகத்தில் நன்றாக மசாஜ் செய்வது போல சில நொடிகள் செய்யலாம். சர்க்கரை, தேன், காபித்தூள் கலந்தும் இவ்வாறு செய்யலாம். பின்னர் சில நிமிடங்கள் அப்படியே விட்டு முகத்தை கழுவிவிடலாம். ஸ்ட்ரீமிங் நீங்கள் 5 மணி நேரத்திற்கும் குறைவாகத் தூங்குகிறீர்களா? நீராவி பிடிப்பது. தண்ணீரை கொதிக்க வைத்து உங்களுக்கு தாங்கக்கூடிய சூட்டில் ஒரு போர்வையை போர்த்திக்கொண்டு ஆவி பிடிக்க வேண்டும். இதனால் சரும துவாரத்தில் உள்ள அழுக்குகள் எல்லாம் வெளியே வந்துவிடும். பேஸ் மாஸ்க் கடலை மாவு, மஞ்சள், தேன், தேங்காய் எண்ணெய், எலுமிச்சை சாறு, தயிர் ஆகியவற்றைக் கலந்து பேஸ் மாஸ்க் போடலாம். 15 முதல் 20 நிமிடங்கள் வரை விட்டு பின்னர் முகத்தைக் கழுவலாம். டோனர்/ மாய்சரைசர் கற்றாழை ஜெல் அல்லது ரோஸ் வாட்டரை முகத்தில் தடவலாம். தேவையெனில் மாய்சரைசர் தடவலாம். இதில் உங்கள் சருமத்திற்கு ஏதேனும் ஒத்துக்கொள்ளாத பொருள்கள் இருந்தால் தவிர்த்துவிடவும். கண்களை குளிர்ச்சியாக வைத்திருக்க கருவளையத்தைப் போக்க வெள்ளரிக்காயைப் பயன்படுத்தலாம். வெள்ளரிக்காய் சாறை கண்களைச் சுற்றி தடவலாம் அல்லது வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கி கண்களில் சிறிது நேரம் வைக்கலாம். இயற்கையாக சருமம் பொலிவுபெற தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். காய்கறிகள், பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். முடிந்தவரை வெய்யிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க சன்ஸ்கிரீன் பயன்படுத்தலாம். [பொறுப்புத் துறப்பு: இந்தச் செய்திகள் / தகவல்கள் மருத்துவ நூல்கள், இணைய தளங்கள், அனுபவப் பகிர்வுகள் அடிப்படையில் தொகுத்துத் தரப்படுகிற பொதுவான ஆலோசனைகள் மட்டுமே. எந்தவொன்றையும் செயல்படுத்தும் முன் உரிய மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதே நல்லது. எந்த விதத்திலும் ‘தினமணி’ பொறுப்பாகாது.] cleansing, exfoliating, steaming, masking, toning and moisturizing.. How to do a facial at home? கரோனா தடுப்பூசியால்தான் மாரடைப்பு மரணங்கள் ஏற்படுகிறதா? – மருத்துவர் என்ன சொல்கிறார்? நன்றி Dinamani உடல் எடையைக் குறைக்கும் உலர் திராட்சை! இதர பயன்கள்?
கடந்த 2020-2022 காலகட்டத்திற்குப் பிறகு தற்போது இந்தியாவில் கரோனா தொற்று பரவி வருகிறது. கரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள சில வழிமுறைகளைப் பின்பற்ற நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். 1. முகக்கவசம் கூட்டம் அதிகமுள்ள இடங்கள், நெருக்கடியான இடங்களில் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். கண்டிப்பாக மூக்கு, வாய் மூடியிருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இதனால் கரோனா தொற்று பரவுவது குறையும். 2. கைகளைக் கழுவுதல் கைகளை அடிக்கடி சோப்பு கொண்டு கழுவ வேண்டும். அதுவும் ஒரு 20 நொடிகளாவது கைகளின் அனைத்துப் பகுதிகளில் சோப்பு படும்படி கழுவுவது அவசியம். சானிடைசர் திரவங்களையும் பயன்படுத்தலாம். 3. இடைவெளி தேவை குறைந்தது 6 அடி இடைவெளி தூரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இது கரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் இருமும்போது தும்மும்போது நீர்த்துளிகள் உங்களை அண்டாதவாறு பார்த்துக்கொள்ளும்.மூளை நரம்புகளை பலப்படுத்த 4. தொடுதல் கூடாது! முகத்தை அடிக்கடி தொடுவதைத் தவிர்க்க வேண்டும். கண்கள், மூக்கு, வாய் ஆகிய உறுப்புகளை கைகளால் தொடுவதைத் தவிர்க்கவும். இதனால் இந்த உறுப்புகளின் மூலமாக வைரஸ் உடலுக்குள் நுழைவது தடுக்கப்படும். 5. சுகாதாரம் அவசியம் கதவின் கைப்பிடிகள், மொபைல் திரைகள், மாத்திரைகள், மேசை, நாற்காலி என வீட்டில் அடிக்கடி பயன்படுத்தும் பொருள்களை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். 6. தனிமைப்படுத்துதல் உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலோ கரோனா அறிகுறிகள் இருந்தாலோ வீட்டிலேயே இருப்பது நல்லது. மருத்துவரையும் அணுகுவது அவசியம். இதனால் மற்றவருக்கு கரோனா பரவுவது தடுக்கப்படும். இதையும் படிக்க | ‘பட்டினிதான் மிகப்பெரிய நோய்’ – காஸாவில் தன் குழந்தைகளுக்காக குப்பைகளில் உணவு தேடும் பெண்! நன்றி Dinamani உடல் எடை குறைய சில மருத்துவ குறிப்புகள்
மன அழுத்தம்.. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் இந்த காலத்தில் இருக்கும் ஒரு பிரச்னை. மாறிவரும் வாழ்க்கைச் சூழல், நகரமயமாக்கல், தனிக் குடும்பச் சூழ்நிலை, உடல் பிரச்னைகள், உறவுகள் என மன அழுத்தத்திற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இந்த மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த நாம் சில வழிமுறைகளைக் கடைப்பிடிக்கலாம். மனதை அமைதிப்படுத்தவும் மன அழுத்தத்தைக் குறைக்கவும் ஒட்டுமொத்த மன நலனுக்காக தினமும் சில நிமிடங்கள் தியானப் பயிற்சி செய்யலாம். அடுத்து நடைப்பயிற்சி, யோகா போன்றவை உடலில் எண்டோர்பின் ஹார்மோன் அளவை அதிகரிக்கும். இது மனநிலையை மேம்படுத்தும். மன அழுத்தத்தைக் குறைக்கும். ஒட்டுமொத்த உடல் நலன் மற்றும் மன ஆரோக்கியத்தை அதிகரிக்கும். வாரத்திற்கு 150 நிமிட உடல் செயல்பாடுகள் அவசியம் என்கிறது உலக சுகாதார அமைப்பு. உடல் ஆரோக்கியத்திற்காகவும் மூளையின் ஆரோக்கியத்திற்காகவும் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் புரதங்கள் நிறைந்த சமச்சீரான உணவை உட்கொள்ளுங்கள். இரவில் 7 முதல் 9 மணி நேர ஆழ்ந்த தூக்கம் அவசியம். இது உடலையும் மனதையும் ஒருமுகப்படுத்தி உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கு வகிக்கும். குடும்பம், நண்பர்கள், சமூகத்துடன் இணைந்திருக்க வேண்டும். குடும்பத்தினர், நண்பர்களுடன் நேரம் செலவிடுவது, சமூக செயல்பாடுகளில் ஆர்வம் காட்டுவது உங்கள் வலிமையை மேம்படுத்துவதுடன் நல்ல மனநிலையைத் தரும்.Healthy Soup உங்கள் வாழ்க்கைக்கு என ஒரு குறிக்கோளை வைத்துக்கொள்ளுங்கள். ஏன், குறிப்பிட்ட நாள்களுக்கு என ஒரு குறிக்கோள் வைத்து அதை நோக்கி செயல்படும்போது உங்கள் உடலும் மனமும் வலிமை பெறும். வாழ்க்கையிலும் முன்னேற்றம் அடைய முடியும். வெற்றிகள், நம்பிக்கையை அளிக்கும். தினமும் நன்றி தெரிவிக்க வேண்டும். உங்கள் நன்றியுணர்வை நாட்குறிப்பில் எழுதுங்கள். நீங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கும் அல்லது நன்றி தெரிவிக்கும் விஷயங்களைப் பட்டியலிடுங்கள். இது உங்களிடையே நேர்மறையை அதிகரிக்கும். மகிழ்ச்சியாக இருக்க வழிவகுக்கும். ஸ்மார்ட்போன், கணினி ஆகியவற்றைப் பார்ப்பதை குறைத்துக்கொள்ளுங்கள். இது கண்களை பாதுகாப்பதுடன் நினைவாற்றலை அதிகரித்து வேலையில் அதிக கவனம் செலுத்த உதவும். உங்கள் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். அதிகமாக சோர்வு அடைவதைத் தவிர்க்க வேலைகளுக்கு நடுவே உங்களுக்குப் பிடித்த விஷயத்தில் கவனம் செலுத்துங்கள். பிடிக்காத சிலவற்றுக்கு ‘நோ’ சொல்லவும் கற்றுக்கொள்ளுங்கள். ஒருவேளை மன அழுத்தம் அதிகமாக இருந்தால் மன நல ஆலோசகரை அணுகுவதற்கு சற்றும் கூச்சப்பட வேண்டாம். உங்களுடைய உடல் மற்றும் மன நலம் உங்களுக்கு மட்டுமின்றி உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் முக்கியம் என்பதை நினைவில் வைத்துச் செயல்படுங்கள். 10 tips to boost your mental health இதையும் படிக்க | ஆன்லைன் ஷாப்பிங் அதிகம் செய்கிறீர்களா? என்னென்ன பாதிப்புகள் வரும்? நன்றி Dinamani இத ட்ரை பண்ணுங்க