மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 14)
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 14 உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய்நெகிழ்ந் தாம்பல்வாய் கூம்பினகாண் செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார் எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் நங்காய் எழுந்திராய் நாணாதாய்…