மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 15)
திருவெம்பாவையின் நான்காவது பாடலில், எல்லோரும் வந்துவிட்டார்களா என்று வினவும் தன்மையை, இங்கு இப்பாசுரத்தில் காணலாம். பாவை பாடல்கள் உரையாடல்களாக அமையும் என்னும் இலக்கணமும் இலங்கக் காணலாம். குவலயாபீடம் என்னும் யானையை மதம் கொள்ளச் செய்து கண்ணனுக்கு ஆபத்து விளைவிக்க நினைத்தான் கம்சன்…